Thursday, 26 September 2024

ஆமை மோதிரம் அணியணுமா? யார் யாரெல்லாம் ஆமை மோதிரத்தை போடலாம் தெரியுமா?...


நடு விரலில் ஆமை மோதிரம் அணியணுமா? யார் யாரெல்லாம் ஆமை மோதிரத்தை போடலாம் தெரியுமா? சூப்பர் பலன்கள்
ஆமை மோதிரங்களை அணியலாமா? யார் யார் அணியலாம்? யாரெல்லாம் இந்த ஆமை மோதிரத்தை அணிய கூடாது.. இதுகுறித்து ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

ஆமை புகுந்த வீடு விளங்காது என்று சொல்லி சொல்லியே, ஆமைகளை ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.. உண்மையை சொல்லப்போனால் ஆமைகள் தரும் நன்மைகள் ஏராளம் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

tortoise spirituality
ஆமை மோதிரம்: ஆமைகள் மகாவிஷ்ணுவின் அவதாரமாகவும் போற்றப்படுகின்றன.. மகாவிஷ்ணுவின் கூர்ம அவதாரமாக கருதப்படுவதால், இறைவனின் அம்சமாகவும், அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுக்கக்கூடியதாகவும் ஆமைகள் திகழ்கின்றன. எனினும், உயிருள்ள ஆமையை வீட்டில் வளர்க்கக்கூடாது.

சிலர் மீன்களை போல நீர்த்தொட்டிகளில் ஆமைகளை வளர்ப்பார்கள். இது குடும்பத்துக்கே தீங்கை தந்துவிடுமாம். ஆமை சிலைகளை அதாவது உலோகத்தால் ஆன சிலைகளை வீட்டில் வாஸ்துப்படி வைத்திருப்பதால், பொருளாதார நிலை மேம்படும்.. எதிரிகளை வீழ்த்தும் வல்லமை கிடைக்கும்.. பணத்தை ஈர்க்கும் சக்தி ஆமை சிலைக்கு உள்ளதாம்.

நேர்மறை தாக்கம்: சிலர் ஆமை மோதிரங்களை விரல்களில் அணிந்து கொள்வார்கள். இது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஒருவரின் தொழில் அல்லது வியாபாரத்தில் முன்னேற்றம் சிறப்புடன் விளங்க ஆமை மோதிரங்களை அணிந்து கொள்வார்கள்.. காரணம், காந்தம் போன்ற செல்வத்தை இந்த ஆமை மோதிரங்கள் ஈர்த்துவிடுமாம்.


மேலும், இந்த மோதிரம் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்துடன் தொடர்புடையது.. மகாலட்சுமி தேவியின் உருவ சின்னமாகவும் கருதப்படுகிறது.. எனவே, இந்த மோதிரத்தை விரல்களில் அணியும்போது வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.

எப்படி அணிய வேண்டும்: எப்போதுமே இடது கை விரலில் அணிய கூடாது.. ஆமை மோதிரத்தை வலது கையின் ஆள்காட்டி மற்றும் நடுவிரலில் அணிய வேண்டும்... அப்படி மோதிரத்தை அணியும்போது ஆமையின் தலை உங்களை எதிர்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.. மாறாக, ஆமையின் தலை வெளியில் தெரியும்படி மோதிரம் அணிந்து கொண்டால், உங்களுக்கு செலவுகள் சேர்ந்துவிடுமாம்.


ஆமை வடிவ மோதிரம் வெள்ளி உலோகத்தால் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாம்.. எப்போதுமே வெள்ளிக்கிழமைகளில் இந்த ஆமை மோதிரத்தை வாங்க வேண்டும். அப்படியே வெள்ளிக்கிழமைகளில் வாங்கினாலும் சிலமணி நேரம் பால் மற்றும் கங்கை நீரில் போட்டு வைக்க வேண்டும். பிறகு லட்சுமி தேவிக்கும், லட்சுமி நாராயணருக்கும் சமர்ப்பித்து வழிபட வேண்டும். பின்னர் சுத்தம் செய்துவிட்டு போட வேண்டும்.

யார் அணிய கூடாது: ஆனால், இந்த மோதிரத்தை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ள கூடாது.. அதிலும், மேஷம், கன்னி, விருச்சிகம், கடகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள், இந்த ஆமை மோதிரம் அணியவே கூடாது.. காரணம், பணக்கஷ்டத்தை இரட்டிப்பு மடங்கு தந்துவிடுமாம்.


ரிஷபம் அல்லது மகர ராசிக்காரர்களுக்கு ஆமை மோதிரம் சாதகமான பலனை தரும்.. வீட்டில் சாதகமான சூழல் நிலவும்.. நிதி நிலைமை சீராகும்.. எனினும், இந்த மோதிரத்தை அணியும்முன்பு, ஜோதிடரிடம் கலந்தாலோசித்துவிட்டு, ஜாதகப்படி அணிந்து கொள்வதே நல்லது..!!


No comments:

Post a Comment