Saturday, 5 October 2024

கரிய பவளம்



நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்கும் இயற்கை ஹேர் டை.., எப்படி தயாரிப்பது?


முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கிறது.

இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.

அந்தவகையில், வீட்டிலேயே நரைமுடியை கருப்பாக்க உதவும் இயற்கை ஹேர் டை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.


முழங்கால் வரை முடி வளர இந்த ஒரு எண்ணெய் போதும்.., வீட்டிலேயே எப்படி தயாரிப்பது?
முழங்கால் வரை முடி வளர இந்த ஒரு எண்ணெய் போதும்.., வீட்டிலேயே எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்
கரிய பவளம் - 1 துண்டு
நெல்லிக்காய் சாறு - 200ml
தயாரிக்கும் முறை
கரிய பவளம் என்பது நல்ல கருமை நிறத்தில் கல் போன்று கெட்டியாக இருக்கும். இதனை நாட்டு மருந்து கடைகளில் வாங்கலாம்.


நெல்லிக்காயை விதையை நீக்கிவிட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்து சாறை எடுத்துக் கொள்ள வேண்டும்.


கரிய பவளத்தை இந்த நெல்லிக்காய் சாறில் போட்டு, ஒரு தட்டு போட்டு 3 மணி நேரம் அப்படியே மூடி விடுங்கள்.

நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்கும் இயற்கை ஹேர் டை.., எப்படி தயாரிப்பது? | Natural Hair Dye For Gray Hair In Tamil  

அதன்பிறகு நன்கு டை பதத்தில் ஊறி கெட்டியாக இருக்கும். பின் இந்த கலவையை முடியின் வேர்க்கால்களில் நன்கு படும்படி தடவுங்கள்.


பின்பு ஒரு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசி கொள்ளலாம்.

இதை வாரத்துக்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தினால் ஒரு மாதத்தில் முடி முழுதும் நிரந்தரமாக கருமையாக மாறும்.       


No comments:

Post a Comment