Wednesday, 31 December 2014

புனர்பூ தோஷம் என்றால் என்ன ?

புனர்பூ என்றால் என்ன ? 
சந்திரன் , சனி - இரண்டுக்கும் சம்பந்தம் இருக்கிறதா ? என்று பாருங்கள். இரண்டும் ஒரே வீட்டில் சேர்ந்து இருந்தால் , அல்லது ஒருவருக்கொருவர் சம சப்தம பார்வை கொண்டு இருந்தால் ... ( அதாங்க -  சந்திரனில் இருந்து ஏழாம் வீட்டில் சனி இருந்தால் ) , அல்லது இரண்டும் பரிவர்த்தனை ஆகி இருந்தால்... அல்லது இரண்டு  கிரகமும் இருக்கும் நட்சத்திரங்கள் பரிவர்த்தனை ஆகி இருந்தால்...  ( அதாவது - பூசம் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்து , அனுஷம் நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது போலே... )

இந்த மாதிரி அமைப்பு இருப்பவர்கள் புனர்பூ தோஷத்தால் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள் என்பது பொருள். 


நீங்கள் பார்த்து இருக்கலாம் இருவீட்டிலும் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருப்பார்கள் நடத்திக்கொண்டு இருக்கும் போது திடிர் என்று திருமண பேச்சு முறிந்து விடும். சில பேருக்கு நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்திருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் நிச்சயதார்த்துடன் முடிந்துவிடும். சில பேருக்கு இந்த விசயத்தில் பெரிய பிரச்சினையை உருவாகி கோர்ட் கேஷ் என்று அழைந்துக்கொண்டுருப்பார்கள். இது எல்லாம் புனர்பூ தோஷத்தால் உருவாகிறது. சனியும் சந்திரனும் சேர்ந்து செய்கிற வேலை புனர்பூ தோஷம் உருவாகிறது. சனியும் சந்திரனும் ஒன்றாக சேர்ந்து இருந்தால் அல்லது சனியின் பார்வையில் சந்திரன் இருப்பது அல்லது இருவரும் ஒரு அதிபதி நட்சத்திரத்தில் பயணிப்பது இதனால் புனர்பூ தோஷம் உருவாகிறது. இதனால் பல பிரச்சினையை சந்திக்கிறார்கள் கடந்த வாரம் ஒரு வாடிக்கையாளரின் பையனுக்கு திருமண ஏற்பாட்டில் பிரச்சினை ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் சென்று வந்தார்கள் கடைசியில் இரண்டு லட்சம் அபராதம் கட்டிவிட்டு பிரச்சினையை முடித்து இருக்கிறார்கள். 
எதனால் இந்த தோஷம் ஏற்படுகிறது? 
என்ன வழக்கம் போல பூர்ம ஜென்மத்தில் பிரச்சினையால் வந்தது என்று சொல்லவேண்டியது  நமது வேலை. செல்போன் வந்த பிறகு இந்த தோஷம் நல்ல வேலை செய்கிறது நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு இருவரும் செல் நெம்பரை பரிமாறிக்கொண்டு பேசிக்கொள்வது. இந்த காலத்தில் இது சகசம் என்றாலும் இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை சண்டையாக மாற்றுவது இந்த புனர்பு தோஷத்தின் வேலை. இருவரும் சண்டையிட்டுக்கொண்டு நிச்சயதார்த்தவுடன் நின்றுவிடுகிறது. பரிகாரம் சோதிடத்தை பார்த்தாலே நாம் பரிகாரத்தை சொல்லிவிடவேண்டியது நமது கடமையாக இருப்பதால் நமது கடமையை சொல்லிவிடுவோம். குலதெய்வ வழிபாடு நல்லது செய்யும் அல்லது ராமேஸ்வரம் சென்று தரிசித்துவிட்டு வருவது நன்மை செய்யும். நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் செல்போனில் பேசும் போது கொஞ்சம் பொறுமையாக பேசவும் வாழ்க்கையில் நிறைய பேசவேண்டியிருப்பதால் திருமணத்திற்க்கு பிறகு பேசிக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்து குறைவாக பேசவும்.இதில் கூட பிரச்சினை எழுவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது பேசவே மாட்டேகிறார் என்னை பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன் அதனால் திருமணம் வேண்டாம் என்று சொல்வார்கள் அதனால் பேசுங்கள் பேசும்போது தவறியும் உண்மையை பேசிவிடாதீர்கள். உண்மையை பேசினால் எப்படி மாப்பு இப்படி திறந்த புத்தகமாக இருக்கிறீர்கள் என்று உங்களை விட்டுச்செல்ல உங்கள் வருங்கால துணைவர் முடிவு செய்வார். இந்த தோஷத்தை முடிந்தளவு தவிர்ப்பதற்க்கு இந்த வழி ஒன்று தான் உங்களுக்கு வழி செய்யும். புனர்பூ தோஷம் இருப்பவர்களுக்கு திருமண விஷயத்தில் என்ன நடக்கும் ? 

(1 ) திருமணம் காலதாமதமாவது 
(2 ) திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் தொடங்கி, நிச்சயத்திலும், திருமணத்திலுமே தடைகள் ஏற்படுவது,
(3 ) திருமண நிச்சயம் முறிந்து போவது,
(4 ) நிச்சயிக்கப்பட்ட திருமணத் தேதி தள்ளி வைக்கப்படுவது,
(5 ) மணப்பெண்ணோ மாப்பிள்ளையோ மாறிப் போவது,
(6 ) திருமணத்துக்கு போகும் வழியில் காலதாமதமாகிப் போவது
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 

பரிகாரம்  :

இந்த அமைப்பு இருப்பவர்கள் - திருமணஞ்சேரி  சென்று முறைப்படி பரிகார பூஜை செய்து கொள்வது நல்லது . வசதி இருப்பவர்கள் , யாராவது ஏழை , எளியவர்களுக்கு திருமணம் நடைபெற உதவி செய்யலாம்.

குலதெய்வத்திற்கு - முடிகாணிக்கை, படையல் செலுத்தி வழிபாடு செய்யலாம். 

தொடர்ச்சியாக மூன்று பௌர்ணமி தினங்களில் விரதம் இருந்து - திருவண்ணாமலை கிரிவலம் சென்று , மும்மூன்று முறையாக ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் , உடனடியாக பொருத்தமான வரன் அமையும். 

களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் வீடும் , குடும்ப ஸ்தானம் எனப்படும் இரண்டாம் வீடும் பாதிக்கப் பட்டிருந்தாலும், திருமணம் தள்ளிப் போகும். அவர்களுக்கும், மேற்கூறிய பரிகார முறை பொருந்தும்.

அனுபவத்தில், தெரிந்தோ தெரியாமலோ - யாருக்கேனும் திருமணம் நடைபெறும்போது குளறுபடி செய்தால் , விவாகரத்து செய்ய துணை நின்றால் - அவர்கள் சந்ததிக்கு , இந்த அமைப்பு ஏற்படுகிறது. ஒருவேளை, பூர்வ ஜென்ம தொடர்பாகவும் இருக்கலாம். 


Friday, 26 December 2014

பத்து முத்திரைகள்

பத்து முத்திரைகள்...
“முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும் முழு உடலை கொண்டும் முத்திரை காட்டப்படும். புத்தர் பல முத்திரைகளை கையாண்டிருப்பதை அவருடைய சிலைகளில் காணலாம்.
பரத நாட்டியத்தில் 200-க்கும் மேற்பட்ட முத்திரைகளும், மோகினி ஆட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட முத்திரைகளும் கையாளப்படுகிறது. தாந்தீரிகத்தில் 108 முத்திரைகள் உள்ளன. அன்றாட நம் உடல் ஆரோக்கியத்திற்கு கீழ்க்கண்ட 10 முத்திரைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன..
1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.
1. அறிவு முத்திரை:
ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம். அறிவை கூர்மையாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.
2. வாயு முத்திரை:
ஆள்காட்டி விரலை கட்டை விரல் அடியில் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை 24 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும்.
3. சூன்ய முத்திரை:
நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வை இது நிவர்த்தி செய்யும். தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் செய்ய வேண்டும். காது தொடர்புடைய நோய்களை இந்த முத்திரை கட்டுப்படுத்தும்.
4. பூமி முத்திரை:
மோதிர விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். சோர்வை இது குறைக்கும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். சோர்வான எடை குறைந்தவர்களுக்கு உடல் எடை கூடும். மேனி அழகை கூட்டி பளபளப்பாக்கும். உடலை சுறுசுறுப்பாக்கி ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும்.
நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும் – மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வின்மையை இது நிவர்த்தி செய்யும். தினமும் இப்படி 40 முதல் 60 நிமிடங்கள் செய்து வந்தால் நோய் குணமாகும். காது வலியை 4 அல்லது 5 நிமிடத்தில் குணமாக்கும். காது கேளாதோர் மற்றும் மூளை பாதிக்கப்பட்டோர்க்கு இந்த முத்திரை உதவும். பிறவி நோயாக இருந்தால் பயன் தராது.
5. வாழ்வு முத்திரை:
சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். சோர்வு நீங்கும். கண்பார்வை சிறப்பாகும்.
6. ஜீரண முத்திரை:
நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றை சீராக்கும்.
7. இதய முத்திரை:
நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். ஆள் காட்டி விரல் நுனி கட்டைவிரலின் அடியை தொட வேண்டும். சின்ன விரல் மட்டும் நேராக இருக்க வேண்டும். இது இதய நலத்துக்கு சிறந்தது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் இருமுறை தலா 15 நிமிடம் செய்தால் பலன் தெரியும்.
8. சூரிய முத்திரை:
மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி தரலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். நிம்மதியின்மை, ஜீரணமின்மை போன்ற குறைபாட்டை களைய வகை செய்யும்.
9. நீர் முத்திரை:
சின்ன விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். இதனை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஜீரண கோளாறு மற்றும் சதை பிடிப்புகள் வராது.
10. லிங்க சக்தி முத்திரை:
இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் நேராகவும் வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும். இது உடலில் உஷ்ணத்தை தரும். எனவே இதை பயிற்சி செய்யும்போது நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருகவும். இதை அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர் காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். கபம் மற்றும் சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது.
இந்த முத்திரைகளை செய்து உங்களில் மாற்றம் ஏற்படுகிறதா என்று பாருங்களேன்!

ராகு கேதுவினால் உண்டாகும் சுப அசுப யோகங்கள்:-

ராகு கேதுவினால் உண்டாகும் சுப அசுப யோகங்கள்:-
1). காலசர்ப்ப யோகம்:-
ராகு, கேதுக்களினால் ஏற்படும் தீய யோகங்களில் முதன்மையானதாக கருதப்படுவது இந்த யோகமாகும். ராகு, கேதுகளிற்கிடையில் லக்னமும் மற்றய ஏழு கிரகங்களும் அமையும் போது இந்த யோகம் ஏற்படுகிறது. ராகுவிற்கு இடஞ்சுழியாக அமையும் போது இது மிகவும் கொடிய தோசமாகிறது. 32 வயதிற்கு மேல் இந்த யோகம் எந்த பாதிப்பையும் தராது என ஜோதிட விதிகள் கூறுகின்றன. ஆனாலும் அனுபவத்தில் அது வாழ்நாள் பூராவும் பாதிப்பைத் தருகிறது எனக் கூறலாம்.
இந்த தோசமானது ஒருவரிற்கு எந்த விதமான முன்னேற்றமும் வாழ்க்கையில் கிடைக்கவிடாது. மற்றவர்களின் உதவி கிடைப்பது மிகவும் கடினம். எதிர்பார்த்தது எதிர்பார்த்தபடி நடக்காது. வாழ்க்கையின் பெரும் பகுதி ஏமாற்றமாகவே இருக்கும்.
2). பந்தன யோகம்:-
லக்னாதிபதியும் ஆறாமிடத்ததிபதியும் ராகு அல்லது கேதுவுடன் கூடி கேந்திரத்தில் அல்லது திரிகோணத்தில் உள்ள ஜாதகர் இந்த யோகத்திற்கு ஆளாகுகிறார்.
இந்த அமைப்புள்ள ஜாதகர் சிறைப்பட்டு சித்திரவதை அனுபவிப்பார் அல்லது வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்.
3). அகால மரண யோகம்:-
ராகு சந்திரனோடு கூடி கிரகண தோசத்தை ஏற்படுத்தி 6, 8, 12 ஆம் வீடுகளில் அமைந்து லக்னாதிபதியின் பார்வை பெற்றால் இந்த யோகம் அமையும்.
இந்த அமைப்புள்ள ஜாதகர் தற்கொலை செய்தோ, விபத்தினாலோ, துஸ்ட மிருகங்களின் தாக்குதலினாலோ, ஆயுதங்களினாலோ துர்மரணம் அடைவார்.
ஏழாம் இடத்தில் ராகு சூரியனுடன் கூடி கிரகண தோசத்தை ஏற்படுத்தி அங்கு சனியும் கூடியிருப்பின் ஜாதகர் வி~த்தினாலோ, விஷ ஜந்துக்களினாலோ மரணம் அடைவார்.
4). சர்ப கண்ட யோகம்:-
லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் ராகு மாந்தியுடன் கூடி இருத்தல் ஆகும்.
இந்த அமைப்புள்ள ஜாதகர் சர்ப்பம் தீண்டி மரணம் அடைவார். அல்லது விசத்தினாலோ, விசம் கலந்த உணவுப் பொருட்களினாலோ பாதிக்கப்படுவார்.
5). சர்ப சாப யோகம்:-
லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டில் ராகு அமைந்து செவ்வாயின் பார்வை பெறுவது சர்ப சாப யோகமாகும். ஐந்தாம் வீடு மேடம் அல்லது விருட்சிகம் ஆகி அங்கு ராகு இருப்பதும் சர்ப சாப யோகமாகும்.
இந்த அமைப்புடைய ஜாதகரிற்கு பிறக்கும் பிள்ளைகள் அகால மரணம் அடைவர்.
6). சய ரோக யோகம்:-
ஆறாம் வீட்டில் ராகு இருக்க லக்னாதிபதி எட்டாம் வீட்டில் அமைதல் சய ரோக யோகமாகும்.
இந்த அமைப்புடைய ஜாதகர் சய ரோகத்தினால் அவதிப்படுவர்.
7). பர்வத யோகம்:-
எந்த லக்னம், எந்த ராசி;யானாலும் மேடம், இடபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் ராகு இருக்க அமையப்பெற்ற ஜாதகம்.
இது ராஜயோகத்தைத் தரும் அமைப்பாகும். ராகு நின்ற ஸ்தானத்திற்கு 1-4-7-10 ஆகிய வீடுகளில் ஒரு கிரகமாவது அல்லது பல கிரகங்களாவது அமைந்தால் இது சிறப்பான ராஜயோகத்தைத் தரும்.
8). கோடீஸ்வர யோகம்:-
ஜென்ம லக்கினத்திற்கு 1-4-7-10 ராகு தனித்து நிற்க அதற்கு ஏழாம் வீட்டில் கேதுவுடன் குரு கூடியிருக்கும் அமைப்புள்ள ஜாதகம் கோடீஸ்வர யோகத்தைப் பெறுகிறது.
இப்படிப்பட்ட அமைப்புள்ள ஜாதகர் எல்லையில்லா நிதிக்கு அதிபதியாவார். இந்த ராகுவிற்கு ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன், புதன் கூடியிருப்பின் அப்படிப்பட்ட ஜாதகர் ஒரு அரசாங்கத்திற்கே கடன் கொடுக்கக் கூடிய அளவிற்கு மிகப் பெரிய கோடீஸ்வரராக இருப்பார்.
9). முத்தி யோகம்:-
ஜென்ம லக்னம் எதுவாயிருந்தாலும் பன்னிரண்டாம் வீட்டில் கேது இருந்தால் அது முத்தி யோகமாகும்.
இந்த அமைப்புள்ள ஜாதகரிற்கு இதுவே கடைசிப் பிறப்பாகும்.
10). ஆறாமிடத்து ராகு:-
ஜென்ம லக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் ராகு அமையப்பெற்ற ஜாதகம்.
இந்த அமைப்புள்ள ஜாதகரிற்கு கடன், நோய், பகை, வழக்கு போன்ற பிரச்சனைகள் அறவே இருக்காது. வுpஷ பயமும் இருக்காது. ஆனால் ராகு திசை, ராகு புத்திகளில் இவரின் சகோதரரிற்கு ஆயுட் கண்டம் இருக்கும்.
11). மாதுர் தோசம்:-
ஜென்ம லக்னம் எதுவானாலும் நாலாம் இடத்தில் ராகு அல்லது கேது அமையப்பெற்ற ஜாதகம்.
இந்த அமைப்புள்ள ஜாதகரின் தாயிற்கு ஆயுட் கண்டம், அங்கவீனம், தீராத நோய் இருக்கும்.
12). புத்திர தோசம்:-
ஜென்ம லக்னத்திற்கு 1-5-9 அகிய வீடுகளில் ஒன்றில் ராகு இருப்பது புத்திர தோசமாகும்.

குரு பார்வை கோடி நன்மை

    குரு பார்வை கோடி நன்மை
    ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக வேண்டி சந்திரன் சென்றான். கற்றுத் தேர்ந்தவுடன் எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தான். சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க விரும்பிய குரு பகவான், பூமியில் அப்போது ஜனித்த ஒரு சிசுவின் ஜாதகத்தைக் கணிக்குமாறு சந்திரனைப் பணித்தார்.
    சந்திரனும் அந்தச் சிசுவின் ஜாதகத்தை கணித்தான். அந்தக் குழந்தை ஒரு வயது பூர்த்தியாகும் சமயம் பாம்பு கடித்து மரணம் சம்பவிக்கும் என்றும் சொன்னான். குழந்தைக்கு ஓராண்டு முடிவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே இருந்தன. சந்திரனும், குருவும் வானவெளியில் சஞ்சரித்தபடியே குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
    தொட்டில் சங்கிலி வழியே பாம்பு ஒன்று மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. குழந்தைக்கும் பாம்புக்குமிடையே ஒரு அடி தூரமே இடைவெளி இருந்தது. தன்னுடைய கணிப்பு சரிதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் பலிக்கப் போகிறது என எண்ணி மகிழ்ந்த சந்திரன், குருவை இறுமாந்து நோக்க, குரு தன் புன்னகை மாறாமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்.
    அப்போதுதான் அந்த எதிர்பாராத அதிசயம் நடந்தது. திடீரென கண்விழித்த குழந்தை வழவழவென்று மின்னிக் கொண்டு இறங்கி வரும் பாம்பை ஏதோ புதுமாதிரி விளையாட்டுச் சாமான் என்று கருதி, மகிழ்ச்சியால் கையையும் காலையும் உதைத்துக் கொண்டு துள்ள, தொட்டில் மேலே கீழே பக்கவாட்டில் என்று திசைமாறிக் குலுங்க, பாம்பின் தலை சங்கிலியின் ஒரு வளையத்திற்குள் எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொண்டது.
    தன் தலையை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் பாம்பு தன் உடலால் சங்கிலியைச் சுழற்றிக் கொண்டு நெளிய, குழந்தை மேலும் துள்ள, இப்போது பாம்பின் வாலும் வேறொரு வளையத்தினிடையே சிக்கிக் கொண்டது. குழந்தை மேலும் மேலும் துள்ளி விளையாட எவ்வளவு நேரம்தான் பாம்பு தாங்கும் ஓரிரு வினாடிகளில் பாம்பு இறந்து விட்டது.
    அடுத்த வினாடி குழந்தை தன்னுடைய இரண்டாவது வயதில் அடி எடுத்து வைத்தும் விட்டது. சந்திரன் தன் ஓலைச் சுவடிகளில் இருந்த குழந்தையின் ஜாதகக் கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தான். தன் கணக்கு சரியாகவே இருந்ததுபோலப் பட்டது. பின்னர் குருவைப் பார்த்துக் கேட்டான்.
    ஜாதகத்தில் இப்போது குருபார்வை கூட இல்லையே இது எப்படி நடந்தது? குழந்தை எப்படிப் பிழைத்தது? - தோற்றுவிட்ட ஆத்திரம் அவன் குரலில் பீறிட்டது. புன்னகை மாறாத குரு, அப்போதுதான் வாயைத் திறந்தார் ஜாதகத்தில் குரு பார்க்காவிட்டால் என்ன? அதுதான் இப்போது நேரிலேயே பார்த்துக் கொண்டிருந்தேனே அப்புறம் எப்படி மரணம் சம்பவிக்கும்?
    சந்திரன் தன் கர்வம் அழிந்து, குருவை வணங்கி விடைபெற்றான். ஜாதகத்தில் கிரக நிலை எப்படி இருந்தபோதும், கிரகங்களின் கோசார நிலைகளையும் ஆராய்ந்த பின்னரே உறுதியாகப் பலன்களை உணர முடியும். குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம். அதனால்தான் குரு பார்வை கோடி நன்மை என்கிறார்கள்

    News Fee

அர்த்தமுள்ள தத்துவ பழமொழிகள்:-

அர்த்தமுள்ள தத்துவ பழமொழிகள்:-
1. அதிக உணவு அற்ப ஆயுள். குறைந்த உணவு அதிக ஆயுள்.
2. எந்த இடத்திலிருந்தும் சொர்க்கம் தூரத்தில் இருக்கிறது.
3. உங்களால் கீழ்ப்படிய முடியாதா? அப்படி என்றால் உங்களால் தலைமை தாங்கவும் முடியாது.
4. கடவுள் கதவை அடைத்தால் ஜன்னலைத் திறந்து விடுகிறார்.
5 கெட்ட புத்தகம் ஒரு திருடனைவிட மிகவும் மோசமானதாகும்.
6. தாயின் இதயம் என்றும் வாடாத, மலர்ந்த மலர்.
7. தூங்கும்போது சிரிக்கும் குழந்தை, தேவர்களுடன் விளையாடுகிறது.
8. பெண் குழந்தை இல்லாதவன் அன்பைப் பற்றி அறிய முடியாது.
9. நாக்கு கத்தியைக் காட்டிலும் ஆழமாகப் பாயும்.
10. சத்தியத்தை வளைக்கலாம்; முறிக்க முடியாது.
11. பண்புக்குப் பெரும் பகை செல்வம்
12. மரியாதையைப்போல் மலிவான பொருள் வேறில்லை.
13. அச்சம், எதையும் நம்பும்படி செய்துவிடும்.
14. எவருக்கு அளிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்கவும்.
15. பறந்து செல்லும் நாட்களைப் பிடிக்க லகான் இல்லை.
16. காலத்தைப்போல் பழிவாங்குவது வேறெதுவும் இல்லை.
17. சிக்கனம் இருந்தால் மற்ற பண்புகள் யாவும் வந்துவிடும்.
18. செல்வங்களை வணங்குவதால் ஒழுக்க விதிகள் பாழாகின்றன.
19. செயல் மறக்கப்படுகிறது. ஆனால் அதன் பயன்கள் நிலைத்திருக்கின்றன.
20. அதிர்ஷ்டக்காரன் என்பதைவிட நல்லவன் என்று பெயரெடு.
21. மனிதர்கள் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள்; அவர்கள் சிந்திக்கும்போது விழிப்படைகிறார்கள்.

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள் .

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள் . . .
உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.
இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது.
இவை அனைத்திற்கும் காரணம், இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது தான். இவ்வாறு இளம் வயதில் சாப்பிட்ட கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால் உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர்.
ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் ரத்தக் குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.
அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும். இப்போது அப்படி, உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து, ஆரோக்கியமாக வாழுங்கள்.
பார்லி :
தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.
கத்திரிக்காய் :
கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.
மீன் :
மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.
ஆப்பிள் :
ஆப்பிள்களில் வைட்டமின் `சி' மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.
நட்ஸ் :
நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
டீ :
அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
வெங்காயம் :
வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஓட்ஸ் :
ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.
முழு தானியங்கள் :
முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
சிட்ரஸ் பழங்கள் :
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
பசலைக் கீரை :
பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்

தமிழ்ப் பழமொழிகள்

தமிழ்ப் பழமொழிகள்
கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி
கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
கல்லாதவரே கண்ணில்லாதவர்.
கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
கல்வி அழகே அழகு.
கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
கள்ள மனம் துள்ளும்.
கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
கனிந்த பழம் தானே விழும்.
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
காணி ஆசை கோடி கேடு.
காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
காற்றில்லாமல் தூசி பறக்குமா?
கிட்டாதாயின் வெட்டென மற
கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
கீர்த்தியால் பசி தீருமா?
குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
.
குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
கெடுவான் கேடு நினைப்பான்
கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?
கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
.
கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?

ஜோதிட ரீதியாக விபத்துக்களை ஏற்படுத்தும் கிரக அமைப்பு

ஜோதிட ரீதியாக விபத்துக்களை ஏற்படுத்தும் கிரக அமைப்பு
இதற்கெல்லாம் காரணம் என்ன எனப் பார்க்கின்ற போது ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் 8ம் பாவம் பாதிக்கப்பட்டிருப்பதே ஆகும். 8ம் பாவத்தில் பாவ கிரகங்கள் அமைந்திருந்தாலோ, 8ம் வீட்டதிபதி பாவ கிரக சேர்க்கை பெற்று பகை வீட்டில் அமையப் பெற்றாலோ, எதிர் பாராத விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது-.
ஆயுள் காரகன் என வர்ணிக்கப்படக் கூடிய சனி பகவான் உடல் உறுப்புகளுக்கும், உடல் ஊனங்களுக்கும் காரகனாக விளங்குகிறார். அது போல ரத்தக்காரகன் என வர்ணிக்கப்படக் கூடிய செவ்வாய் ரத்த காயங்கள், வெட்டுக்காயங்கள் மற்றும் ரத்த சம்மந்தப்பட்டவற்றிற்குக் காரகனாக விளங்குகிறார்.
பொதுவாகவே சனி, செவ்வாய் 8ல் சேர்க்கை பெற்றிருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் 8ம் வீட்டதிபதியுடன் சேர்ந்திருந்தாலும் எதிர்பாராத விபத்துக்கள் ஏற்பட்டு உடல் உறுப்புகளில் பாதிப்பு உண்டாகிறது. குறிப்பாக இம்மாதிரி கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு சனி திசை செவ்வாய் புக்தி காலங்களில் செவ்வாய் திசை சனி புக்தி காலங்களில் அதிகமான பாதிப்புகளை உண்டாகுகிறது.
ஜென்ம லக்னத்தையோ, சந்திரனையோ 8ம் வீட்டையோ, பாவ கிரகங்கள் சூழ்ந்திருந்தால் எதிர்பாராத கண்டங்கள் உண்டாகும். லக்னாதிபதி பலம் இழந்து 8ல் பாவிகள் பலம் பெற்றால் விபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும்.
ஜல காரகன் சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்று 8ல் இருந்தால் ஜலத்தால் கண்டம் நீச்சல் குளம் மற்றும் கடல் பகுதிகளில் கண்டம் ஏற்படக் கூடிய சூழ்நிலை உண்டாகும்.
வாகன காரகன் என்று சொல்லக் கூடிய சுக்கிரன் சனி செவ்வாய் ராகு போன்ற பாவ கிரகங்கள் சேர்க்கை பெற்று 8ல் இருந்தால் வாகனங்கள் மூலம் விபத்துக்கள் ஏற்படும்.
கால புருஷ தத்துவப்படி எட்டாம் இடம் என வர்ணிக்கப்படக் கூடிய விருச்சிகத்தில் சனி செவ்வாய் ராகு சேர்க்கை பெற்றிருந்தால் அதன் தசா புக்தி காலங்களில் விபத்துகளை சந்திக்க நேரிடும்.
வாகன ஸ்தானமான 4ம் வீட்டின் அதிபதி சனி சேர்க்கை பெற்று 8ல் இருந்தால் வண்டி வாகனங்கள் மூலம் விபத்துக்கள் ஏற்பட்டு மரணம் உண்டாகும்.
சூரியன் செவ்வாய் 8ல் இருந்தால் இடி, மின்னல், அதிக வெயில், நெருப்பு மற்றும் உஷ்ணத்தால் மரணம் உண்டாகும்.
சனி ராகு சேர்க்கை பெற்றிருந்தால் செவ்வாய், ராகு சேர்க்கை பெற்று 8ல் இருந்தாலும் ராகு, சனி, செவ்வாய் சேர்க்கை பெற்று 8ல் இருந்தாலும் விபத்துக்கள் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 8ல் பாவிகள் இருந்தால் விபத்துக்களை சந்திக்க நேரிடும் என்றாலும் சுபர் பார்வை இருந்தால் பாதிப்புகள் குறையும். இவை பொது பலன் தான்.

பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்ற ஏன் கூறினார்கள் தெரியுமா?

பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்ற ஏன் கூறினார்கள் தெரியுமா?
பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த
பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில
போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது.
அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க­ சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள்,
வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.
ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள்
பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள்
வந்த திசையை மாற்றி வேறு திசையில்
செல்வார்களாம்.
மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்க
பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.
பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என
உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.
அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக
செல்லக்கூடாது என்றார்கள்.
நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல
விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்,
.
பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும்
திரிக்கப்பட்டுவிட்டது. பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை. இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?
பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...!

இராகு கால பூசைகள் ஏன்?

இராகு கால பூசைகள் ஏன்?
செவ்வாய், வெள்ளி ராகுகாலம் இரண்டும் ஏன் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது?
நவகிரங்களுக்குள் புதன் கிரகம் வலிமையானது. புதனைவிடச் செவ்வாயும், செவ்வாயைவிட சனியும், அதைவிட குருவும், குருவைவிட சுக்கிரனும், சுக்கிரனைவிட சூரியனும் பலம் பெற்றது. சூரியனைவிட ராகுவும் ராகுவைவிட கேதுவும் அதிக பலமுள்ள கிரகங்கள் என்கிறது ஜோதிஷ சாஸ்திரம். ஆகவே, ராகு கிரகமும் அதனால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும் மற்ற கிரகங்களைக் காட்டிலும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
பன்னிரண்டு ராசிகளில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்தமாக வீடு என்று உண்டு. ராகு கேதுகளுக்கு தனியாக வீடு என்பது இல்லை (இதில் கருத்து வேறுபாடு உண்டு). இதேபோல் கிழமை விஷயமும். ஒவ்வொரு கிரகத்துக்கும் தலா ஒவ்வொரு கிழமை வீதம், மொத்தம் ஏழு கிழமைகள்தான். ராகு கேதுவுக்கு தனியே கிழமைகள் இல்லை. என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்.
அதாவது ஒவ்வொரு நாளும் முப்பது நாழிகையுடைய பகலின் (12 மணி நேரத்தின்) எட்டில் ஒரு பகுதியான மூன்றே முக்கால் நாழிகை (1.30 மணி நேரம்) ராகு காலம் என்று அழைக்கப்படுகிறது. இது பகல் பொழுதின் அளவான 12 மணி நேரத்துக்கு கணக்கிடப்பட்டுள்ளது. பகல் பொழுதின் அளவில் நிகழும் ஏற்ற இறக்கங்களையொட்டி, ராகு காலத்தில் சிற்சில நிமிடங்கள் வேறுபடலாம்.
ராகு கிரகத்துக்கு அதிதேவதையாக துர்கை கூறப்பட்டுள்ளாள். மேலும் குஜவத் ராகு: சனிவத் கேது: (இதை மாற்றிச் சொல்வோரும் உண்டு) என்னும் வசனப்படி, செவ்வாயைப் போலவே ராகுவுக்கு பலனைச் சொல்ல வேண்டும் என்றும், சனியைப் போலவே கேதுவின் பலன் அமையும் என்றும் கூறுகிறது ஜோதிஷம். இதை கவனிக்கும்போது செவ்வாய் கிரகத்துக்கும் ராகு கிரகத்துக்கும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு இருப்பது நன்கு புலப்படும், ஆகவேதான் செவ்வாய்க்கிழமையன்று ராகு கிரகத்துக்கான ப்ரீதிகள் (துர்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றுதல், நாகத்துக்கு (பாம்பு புற்றுக்கு) பால் வார்த்தல், அம்மனுக்கு நெய்தீபம் போடுதல் போன்றவை நடத்தப்படுகின்றன.
ஸ்வர் பானு என்னும் அசுரன்தான் ராகு என்று பெயர்மாற்றமடைந்துள்ளான் என்கிறது புராணம். அனைத்து அசுரர்களுக்கும் தலைவராக குருவாக இருந்து அசுரர்களை வழி நடத்தியவர் சுக்கிரன் என்னும் கிரகம். ஆகவே, ராகுவும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் நட்புடன் கூடியவர்கள். தனது நண்பரான - குருவான - சுக்கிரனின் ஆதிக்கத்துக்குட்பட்ட வெள்ளிக்கிழமையில் தனக்கான பரிகாரத்தை செய்தால், ராகு அதிகமான மகிழ்ச்சியடைகிறார். ஆகவே தான், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் ராகு காலம், மற்ற நாட்களை விட அதிகமான பலம் வாய்ந்தவை.
----௦---------------------------௦--------------------------------------௦----------------------------------------------
ராகு பகவான் - கருமையானவர்; தென்மேற்கு திசைக்கு அதிபதி; கிரகங்களில் பெண் கிரகம்; இனத்தில் சங்கிரமன்; வடிவில் உயரம்; தொடை, பாதம் மற்றும் கணுக்காலுக்கு உரியவர். பஞ்ச பூதத்தில் ஆகாயமான இவர்... சரக்கிரகமும்கூட (மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சரராசிகள் என்பர்). இவரின் அதிதேவதைகள்- ஸ்ரீகாளி, ஸ்ரீதுர்கை மற்றும் ஸ்ரீகருமாரி! இவரது நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி மற்றும் சதயம். இவரது திசை, 18 வருடங்கள்.
'ராகுவைப் போல் கொடுப்பார் இல்லை' என்பர். சாயாகிரகமான ராகு லக்னத்தில் இருக்க... அந்த ஜாதகர் பலவானாகவும் பிடிவாத குணம் கொண்டவராகவும் இருப்பார். மர்மமான மனதுக்குச் சொந்தக்காரராக விளங்குவர். ராகு பகவான் 2-ஆம் இடத்தில் இருக்கும் ஜாதகர்கள், முன்கோபியாக, செலவாளிகளாக, மனம் போல் வாழ்பவராக இருப்பர். ராகு 3-ல் இருந்தால், அடிக்கடி பயணம் மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டு. 4-ல் இருந்தால் வேளை தவறிய உணவு, தாயாருக்கு உடல் நலக்குறைபாடு ஆகிய பலன்கள் கிடைக்கும். 5-ல் ராகு இருந்தால் திருமணம் மற்றும் புத்திரத் தடைகள் உண்டாகும். பூர்வ ஜன்ம புண்ணியம் பாதிக்கும்; கடும் நாக தோஷம் விளையும்!
6-ல் இருந்தால் திருமண பாக்கியம், நீண்ட ஆயுள், திடீர் பணவரவு மற்றும் சொத்து சேர்க்கை உண்டு. ஸ்ரீஅஷ்டலட்சுமியின் அருள் கிட்டும். 7-ல் இருக்க திருமணம் தடைபடும். அல்லது கலப்பு மணம் புரிவர். 8-ல் இருந்தால் இரக்கம் அற்றவராகவும், பாலாரிஷ்ட தோஷம் உள்ளவராகவும் திகழ்வர். 9-ஆம் இடத்தில் ராகு இருந்தால் தந்தைக்கு நஷ்டம்; மூதாதையரது சொத்துகளில் வில்லங்கம் ஏற்படும். பூமியும் பொருளும் சேரும்.
10-ஆம் இடத்தில் இருந்தால், விதவையால் ஆதாயம் கிடைக்கும்; நவரத்தினங்கள் சேரும்; யோக வாழ்வு வாழ்வர். ராகு 12- இல் இருந்தால் பிதுர் அரிஷ்டமும் திடீர் யோகமும் உண்டு. 12-ல் இருந்தால், சிந்தனாவாதி; சயன சுகமற்றவர்; சர்ப்ப தோஷம் இருக்கும். கன்னியில் ஆட்சியும் விருச்சிகத்தில் உச்சமும் பெறும் ராகு பகவான் எப்போதுமே சந்தோஷங்களைத் தருவார்!
zczczczzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzczczczczczczczczcz
ஞானயோகம் தரும் கேது!
கேது பகவான்- செந்நிறம் கொண்டவர். வடமேற்கு திசைக்கு அதிபதி; அலி கிரகம்; இனத்தில் சங்கிரமன்; மர்ம உறுப்புக்கு அதிபதி. பல வண்ணங்கள் கொண்ட வஸ்திரம் இவருக்குப் பிடிக்கும். பஞ்சபூதங்களில் ஆகாயம் இவர்; நாடியில் பித்தநாடி. ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீசண்டிகேஸ்வரரும் கேதுவின் அதிதேவதைகள்.
வாழ்வின் பிற்பகுதியில் பலன் தரும் கிரகம் இவர். வேத- வேதாந்த அறிவு; மோட்சம், விஞ்ஞான- மெய் ஞானத் தேடல் ஆகியவற்றின் காரகனும் இவர்தான்! சிவப் பிரியரான இவர், தவம் செய்யும் வலிமையையும் தருவார். எளிமைக்கும் கடுமைக்கும் நடுவே இருக்கும் கேது, சகல சௌபாக்கியங்களை அருள்வதுடன், வியாதிகளில் இருந்து நிவாரணமும் தர வல்லவர். அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களின் அதிபதியான கேதுவின் திசை- 7 வருடங்கள்!
சாயா கிரகமான கேது, அவரவர் லக்னப்படி... சில இடங்களில் அதிகமாகவும் சில இடங்களில் சாதாரணமா கவும் பலன் தருவார். ஜாதகத்தில் கேது லக்னத்தில் இருந்தால், குணவானாகவும் பலசாலியாகவும் திகழலாம். 2-ல் இருந்தால் வாக்கு, ஸித்தி, யோகம், சத்ரு ஜெயம், தான-தர்மம், சாஸ்திர ஞானம் மற்றும் புண்ணிய பலன்கள் கிடைக்கும். 3-ல் இருந்தால் சத்ருக்கள் அழிவர்.
4-ல் இருந்தால் கலைஞானம் தருவார். 5-ல் இருந்தால் புண்ணிய பலன்கள் கிடைக்கும். 6-ல் இருந்தால் யோகம் கிடைக்கும்; பகை ஒழியும். 7-ல் இருந்தால் களத்திர அரிஷ்டம்; பெண்பித்தராக இருப்பர். 8-ல் இருந்தால் மனைவிக்கு தோஷம். 9-ல் இருந்தால், தந்தை பாக்கியக் குறைவு; தரித்திரம், புண்ணியத்தில் தடை உண்டு. 10-ல் இருந்தால் விவேகி; ராஜாங்க சேவை; தான-தர்மத்தில் ஈடுபாடு உண்டாகும். 11-ல் இருந்தால் புண்ணியவானாக திகழலாம். 12-ல் இருந்தால் செல்வ போகமும் மோட்சமும் கிடைக்கும். அந்தஸ்து- அதிகாரத்துடன் வாழ்வர்!
ராகு-கேதுவின் அருள் பெற விரும்புவோர், திருநாகேஸ் வரம், கீழப்பெரும்பள்ளம் போன்ற தலங்களுக்குச் சென்று முறையே ராகு- கேதுவை வழிபட்டு வரலாம்.
இயலாதவர்கள் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமை களில்- ராகு காலத்தில், துர்கை அம்மன் கோயிலுக்குச் சென்று மனமுருகி அம்பாளை வழிபடுவதால் ராகுவின் அனுக்கிரகத்தைப் பெறலாம். கேதுவின் அருள்பெற வேண்டுமெனில், எமகண்ட வேளையில் சித்ரகுப்தரை தியானிப்பது நல்லது. தவிர, அருகில் இருக்கும் ஆலயங்களில் அருளும் நவக்கிரகங்களை வலம் வந்து வழிபட்டும் பலன் பெறலாம்.

லக்கினம், ஏழாம் இடம் சில பொதுவான விதிகள்



லக்கினம், ஏழாம் இடம் சில பொதுவான விதிகள்
சனி ஏழாம் வீட்டில்...............
* ஒருவர் ஜாதகத்தில் சனி ஏழாம் வீட்டில் இருந்து அந்த ஏழாம் வீடு மகரமாகவோ அல்லது கும்பமாகவோ அல்லது துலாமாகவோ இல்லாமல் இருந்து , ஏழாம் வீட்டுக்கு சுப கிரகத்தின் பார்வை இல்லாமல் இருந்தால் அந்த மனிதன் விகாரமாக தோற்றம் அளிப்பான். மேலும் அருவருக்க தக்க காரியம் செய்வான். அந்த மனிதனுக்கு திருமணமே தாமதமாக தான் ஆகும். சிலருக்கு வயோதிக பெண்ணுடன் தொடர்பு ஏற்படும். ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!
*எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!
*ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத் திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர் உண்டு.
அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்
*சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.
*ஏழில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் மனைவி அழகானவள், கவர்சிகுனம் இருக்கும், ஆடை அலங்கார விருப்பம் உள்ளவள், கலை ஆர்வம் இருக்கும், இன்பத்தை அதிகம் விரும்புவாள்,ஜாதகனுக்கு கட்டிடம், வாகனம் மூலம் பணம் கிட்டும், ஆடம்பர
தொழில் மூலம் செல்வம் கிட்டும்
* ஏழில் குரு நல்ல நிலையில் இருந்தால் மனைவி நல்ல குணம் கொண்டவள், தெய்வ நம்பிக்க உள்ளவள், பொறுப்புடன் நடப்பாள், போதனை குணம் இருக்கும்,மனைவியிடம் நிதி நிர்வாகம் இருக்கும் ஏழில் சந்திரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள்.ஏழில் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் மனைவி அழகான முகம் கொண்டவள், சஞ்சல மனம் உடையவள், தாய்மை குணம் கொண்டவள். ஜாதகருக்கு தூர வணிகம் ஏற்படலாம், நீர்வழி லாபம்
கிட்டலாம், கொஞ்சம் காமத்தை, சபலத்தை சந்திரன் கொடுப்பார்இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான்.
* ஏழில் புதன் இருந்தால் மனைவி புத்திசாலி, தந்திரசாலி, இளமையான தோற்றம், கலகலப்பானவள், நகைசுவை குணம் கொண்டவள், வியாபார விருத்தி, எழுத்துத்துறை
மூலம் செல்வ சுகம் ஏற்படலாம்
*ஏழில் செவ்வாய் இருந்தால் மனைவி கலகம் செய்பவள், முன்கோபம் இருக்கும், ஆணவம்,நல்ல உடல், அகங்காரம் குணம் இருக்கும்,மனபினக்கு ஏற்படலாம், மனைவி
உடலில் வசியம் இருக்காது
*ஒரு ஆணின் ஜாதகத்தில் செவ்வாய் ஏழில் இருந்தால் வரும் மனைவிக்கு கவர்சிகரமான மார்பு இருக்கும், குரு எடுப்பான மார்பை கொடுக்கும், சுக்கிரன் பெரிதான மார்பை கொடுக்கும் ,சனி நலிவடைந்த மார்பை கொடுக்கும்
*ஏழில் சூரியன் இருந்தால் மனைவி நிர்வாகம் திறமை,அதிகாரம்,கோபம்,குணம் கொண்டவள், புகழ் உடையவள்,இரக்ககுணம் கொண்டவள், தியாக மனப்பான்மை உள்ளவள்,
ஆனால் மன முறிவு, மறுமணம், வியாபார முடக்கம் ஆகலாம்,
*ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும். ஆனால் ஏழாம் அதிபது சுபக் கிரகமாகவோ
அல்லது சுபக்கிரகத்தின் பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனக இருப்பான்.
*ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7வது வீடு 8 வது வீடு இவற்றில் ஒன்றில் சூரியன் இருந்தால் அந்த ஜாதகிக்கு சூரியன் களத்திர தோஷத்தைத் தருகிறது.
*செவ்வாய் ,சனி ஏழில் இருந்தால் ,மனைவி பிற ஆடவரை விருப்பம் கொள்வாள், நற்கோள் பார்த்தல் அது நடக்காது .
*7ல்ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்ந்து இருந்தால் – திருமணப்பிரிவு வழக்கு விவாகரத்து நடக்கிறது.
*திருமண வாழ்க்கையில் ராகு-கேதுவின்பங்கு மிக முக்கியமானதாகும்.
............................................................................................................................
ஜாதகத்தில் லக்னத்தில் ராகுஇருந்தால் ஏழில் கேது இருக்கும். இரண்டாம் வீட்டில் ராகு இருந்தால், எட்டில் கேது இருக்கும். இந்த அமைப்பு ராகு-கேது
தோஷம் அல்லது சர்ப்ப தோஷம்என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு உள்ள
ஜாதகங்களை அதேபோன்ற அமைப்புஉள்ள ஜாதகத்துடன்தான் சேர்க்க வேண்டும். ஏழில் ராகு இருந்தால் மனைவி பொய் பேசுவாள், வஞ்சக குணம் இருக்கும், ரகசிய நடவடிக்கை இருக்கும், புதிரான திருமணமாக நடக்கும், வினோத காமம். ஏழில் ராகு அல்லது கேது இருந்தால் மனதில் தீய எண்ணம் ஏற்பட்டு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அதனால் பிரிவும் ஏற்படுகிறது. இது திருமணத்திற்க்கு முன்பு தான் பல தடைகளை ஏற்படுத்துகிறது.
*ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால்
மனைவிக்கு நோய் உண்டாகும்
**அடுத்தபடியாக லக்கினத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். லக்கினத்தில் கிரகங்கள் அமர்ந்துக்கொண்டு ஏழாம் வீட்டை பார்க்கும் கிரகங்கள் வைக்கும் ஆப்பு இருக்கிறதே இது எல்லாத்தையும் விட கொடுமை இந்த மனிதனை திருமண வாழ்க்கையில் ஏன் தான் கடவுள் இந்த அடி அடிக்கிறாறோ தெரியவில்லை.பொதுவாக லக்கினத்தில் தீயகிரகங்கள் அமர்ந்தால் தான் திருமண வாழ்க்கையில் பிரச்சினை அதிகம் ஏற்படுகின்றது.
*லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள் யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள
*லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து இருப்பதும், பாபக்
கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருப்பதும் கூடாது.
*அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம் அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந்தால் திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.

Thursday, 25 December 2014

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன். இந்தப் பழமொழியைச் சொல்லாதவர்களும் திரைப்படங்களும் மிகக் குறைவே. ஆனால் ஒரு குறை, யாரும் பொருள் தெரிந்து - அறிந்து சொல்லுகிறார்களா என்பது கேள்விக்குறியே.
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்பதில் என்ன புரிய வேண்டும், எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில்தானே பழமொழியே இருக்கிறது என்று கேட்கக்கூடும். இதோ உண்மையான பழமொழி.
கல்லன் (கல்லாதவன்) ஆனாலும் கணவன் புல்லன் (இழிந்தவன்) ஆனாலும் புருசன். இதை கல்லனானாலும் கணவன் புல்லனானாலும் புருசன் என்று சேர்த்துக் கூறப்பட்டதானது நாளடைவில் தொடக்கத்தில் உள்ளது போல திரிந்துவிட்டது.
இனியேனும் பழமொழிகளைப் பொருளறிந்து, பிழை களைந்து உரிய முறையில் பயன்படுத்துவோம்.

லக்னமும் ஏழாமிடமும்

லகனமும் ஏழாமிடமும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்ற பாடலைப் பழைய திரைப்படத்தில் கேட்டிருக்கலாம். இது மனைவிக்கு மட்டுமல்ல கணவனுக்கும் பொருந்தும்.
கணவனும் மனைவியும் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் அன்றே அழகாகக் கூறியுள்ளார்.
கணவனைப் பற்றிக் கூற வரும் அவர், இல்லறத்தான் என்பவன் தனது பெற்றோர், மனைவி, மக்கள் ஆகியோருக்கும் அவர்களின் நல்
வாழ்க்கைக்கும் என்றும் துணையாக இருப்பவனாக இருக்க
வேண்டும் என்கிறார்.
" இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை"
மனைவியானவள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கும் நல்லதோர் இலக்கணம் கூறுகிறார் அவர்.
கற்பு நெறி தவறாமல் தன்னைக் காத்துக்கொண்டு தன்னைக் கரம் பிடித்து மனைவியாக ஏற்றுக் கொண்ட கணவனைக் கண் போல் காத்து மதித்து நடக்கும் குற்றமற்றவளே பெண் என்கிறார்.
"தற்காத்துத் தற்கொண்டாள் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்"
கற்பு என்பதற்கு இக்காலத்தில் பலரும் பல விதமான கருத்து, விளக்கங்களை அளிக்கின்றனர். ஆனால் அன்றே அழகான விளக்கத்தை அளித்துள்ளார் தொல்காப்பியர்.
"மறை வெளிப்படுதலும் தமரில் பெறுதலும்
இவை முதலாகிய இயல்நெடி பிழையாது
மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே"
தொல்காப்பியத்தில் கற்பு
எனக் கூறப்படுவதெல்லாம்
இல்லறத்தையே குறிக்கும் என்பார் சுப்பு ரெட்டியார்.
இல்லறம் என்பது மணம் புரிந்த ஆணும் பெண்ணும் கூடியும் ஊடியும் இன்புற்று பொருள், நன் மக்கட் செல்வம் பெற்று சிறக்கும் இன்ப நிலை, பொருள் ஈட்டி அறம் செய்து உயரும் நிலை, பற்றுகளிலிருந்து இருவரும் விடுபட்டு உயிர்களுக்குத் தொண்டு செய்யும் அறநிலை ஆகிய மூன்று நிலைகளிலும் சிறக்கும் மாண்புடையது.
சங்க இலக்கியங்களில் இல்லறம் எனும் சொல்லாட்சி காணப்படவில்லை. மனை போன்ற சொற்களே காணப்படுகின்றன. வள்ளுவர், இல்வாழ்க்கை எனக் குறிப்பிடுகிறார்.அதற்குப் பின் எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் மனையறம் எனக் குறிப்பிடுகின்றன.
பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்சமூலம்தான் இல்லறம் என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்துகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க இல்லறத்தில் சேர்ந்து ஈடுபடக்கூடிய இருவரின் தன்மை குறித்து ஆதி காலத்தில் எழுந்த வருஷாதி சோதிட நூல் கூறுவதைக் காணலாம்.
ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும் லக்னத்துக்கு ஏழாமிடம் களத்திர ஸ்தானத்தைக் குறிக்கும். லக்னம் என்பது ஜாதகரின் பலம், குணத்தைக் கூறும். ஏழாம் இடம் அவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணையைப் பற்றி எடுத்துரைக்கும்.
இந்த இரு ஸ்தானங்களும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு உடையவை ஆகும்.
நீள் வட்ட வடிவில் பன்னிரெண்டு ராசிகளும் அமைந்துள்ளதால் லக்னமும் களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் இடமும் 180 டிகிரி
தூரத்தில் ஒரே நேர் கோட்டில் உள்ளன. இவ்விரு ஸ்தானங்களும் இருக்கும் நிலையை ஒரு வான வில்லுக்கு ஒப்பிடலாம். இது எவ்வாறு உண்டாகிறது என்பது எல்லோரும் அறிந்ததே.
இருப்பினும் அறியாத சிலருக்காக
மீண்டும் காணலாம்.
கதிரவனின் ஒளியானது முப்பட்டகம் போன்று மழைத் துளியின் உட்சென்று திரும்புகின்றபோது வானவில் தோன்றுகிறது. இது காலை அல்லது மாலையில்தான் தோன்றும்.
வேறு விதமாகச் சொல்வதென்றால காலையில் கிழக்கில் உதய லக்னத்தில் ஆதவன் இருக்கும்போது அதற்கு ஏழாமிடமான மேற்குத் திக்கில் அத்தமன லக்னத்தில் வானவில் உண்டாகும்.
இதேபோல் மேற்குத் திக்கில் உள்ள அத்தமன லக்னத்தில் ஆதவன் இருக்கும்போது அதற்கு நேரெதிர் ஸ்தானமான உதய லக்னத்தில் வானவில் உண்டாகும்.
சற்று விளக்கமாகக் கூறுவதென்றால் ஆதவனிடம் இருந்து வருகின்ற பிரகாசமான ஒளியைப் பெறுவதினாலேயே அதற்கு ஏழாம் இடம் பல வண்ணங்கள் கொண்ட வான வில்லாகத் திகழ்கிறது.
லக்னம் என்பது ஒருவரைக் குறித்தும் ஏழாம் இடம் என்பது அவரது வாழ்க்கைத் துணை குறித்தும் கூறும் இடமல்லவா. பாசம் பரிவு, இரக்கம் இணக்கம் ஆகியவை அந்த ஒருவரிடமிருந்து கிடைத்தால்தான் அவரது வாழ்க்கைத் துணை இன்பமாக இருக்க முடியும்.
அது போல அவரது வாழ்க்கைத் துணையிடமிருந்து இது அவருக்கு கிடைத்தால்தான் அவரும் மகிழ்ச்சியைப் பெற முடியும்
இந்த வான வில்லில் உள்ள ஏழு நிறங்களும் நிழல் கிரகங்களான ராகு, கேது இரண்டும் நீங்கலாக மற்றை ஏழு கிரகங்களைக் குறிக்கின்றன.
இந்த பிரபஞ்சத்தில் பரவியிருக்கும் ஏழு விதமான சக்திகளை, சலனங்களை இந்த ஏழு கிரகங்களும் குறிக்கின்றன.
களத்திர ஸ்தானம் எனக் கூறப்படும் ஏழாம் இடத்தில் அல்லது லக்னத்தில் பாபக் கிரகங்களான மங்களன், மந்தன், ராகு, கேது இல்லாமல் இருந்தால் மட்டுமே வாழ்க்கை இன்பமாக அமையும்.

Wednesday, 24 December 2014

100 Keyboard Shortcuts

More than 100 Keyboard Shortcuts must read & Share
Keyboard Shortcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
... 3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
15. CTRL+A (Select all)
16. F3 key (Search for a file or a folder)
17. ALT+ENTER (View the properties for the selected item)
18. ALT+F4 (Close the active item, or quit the active program)
19. ALT+ENTER (Display the properties of the selected object)
20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents opensimultaneously)
22. ALT+TAB (Switch between the open items)
23. ALT+ESC (Cycle through items in the order that they had been opened)
24. F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)
25. F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)
26. SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)
27. ALT+SPACEBAR (Display the System menu for the active window)
28. CTRL+ESC (Display the Start menu)
29. ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)
30. F10 key (Activate the menu bar in the active program)
31. RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)
32. LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)
33. F5 key (Update the active window)
34. BACKSPACE (View the folder onelevel up in My Computer or Windows Explorer)
35. ESC (Cancel the current task)
36. SHIFT when you insert a CD-ROMinto the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)
Dialog Box - Keyboard Shortcuts
1. CTRL+TAB (Move forward through the tabs)
2. CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)
3. TAB (Move forward through the options)
4. SHIFT+TAB (Move backward through the options)
5. ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)
6. ENTER (Perform the command for the active option or button)
7. SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)
8. Arrow keys (Select a button if the active option is a group of option buttons)
9. F1 key (Display Help)
10. F4 key (Display the items in the active list)
11. BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)
Microsoft Natural Keyboard Shortcuts
1. Windows Logo (Display or hide the Start menu)
2. Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
3. Windows Logo+D (Display the desktop)
4. Windows Logo+M (Minimize all of the windows)
5. Windows Logo+SHIFT+M (Restorethe minimized windows)
6. Windows Logo+E (Open My Computer)
7. Windows Logo+F (Search for a file or a folder)
8. CTRL+Windows Logo+F (Search for computers)
9. Windows Logo+F1 (Display Windows Help)
10. Windows Logo+ L (Lock the keyboard)
11. Windows Logo+R (Open the Run dialog box)
12. Windows Logo+U (Open Utility Manager)
13. Accessibility Keyboard Shortcuts
14. Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off)
15. Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off)
16. Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off)
17. SHIFT five times (Switch the StickyKeys either on or off)
18. NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off)
19. Windows Logo +U (Open Utility Manager)
20. Windows Explorer Keyboard Shortcuts
21. END (Display the bottom of the active window)
22. HOME (Display the top of the active window)
23. NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)
24. NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder)
MMC Console keyboard shortcuts
1. SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)
2. F1 key (Open the Help topic, if any, for the selected item)
3. F5 key (Update the content of all console windows)
4. CTRL+F10 (Maximize the active console window)
5. CTRL+F5 (Restore the active console window)
6. ALT+ENTER (Display the Properties dialog box, if any, for theselected item)
7. F2 key (Rename the selected item)
8. CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console)
Remote Desktop Connection Navigation
1. CTRL+ALT+END (Open the Microsoft Windows NT Security dialog box)
2. ALT+PAGE UP (Switch between programs from left to right)
3. ALT+PAGE DOWN (Switch between programs from right to left)
4. ALT+INSERT (Cycle through the programs in most recently used order)
5. ALT+HOME (Display the Start menu)
6. CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen)
7. ALT+DELETE (Display the Windows menu)
8. CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)
9. CTRL+ALT+Plus sign (+) (Place asnapshot of the entire client window area on the Terminal server clipboardand provide the same functionality aspressing ALT+PRINT SCREEN on a local computer.)
Microsoft Internet Explorer Keyboard Shortcuts
1. CTRL+B (Open the Organize Favorites dialog box)
2. CTRL+E (Open the Search bar)
3. CTRL+F (Start the Find utility)
4. CTRL+H (Open the History bar)
5. CTRL+I (Open the Favorites bar)
6. CTRL+L (Open the Open dialog box)
7. CTRL+N (Start another instance of the browser with the same Web address)
8. CTRL+O (Open the Open dialog box,the same as CTRL+L)
9. CTRL+P (Open the Print dialog box)
10. CTRL+R (Update the current Web page)
11. CTRL+W (Close the current window)