Friday, 27 January 2017

தவம் என்பது என்ன?

தவம் என்பது என்ன?
தன்னை அறியாது
தான் நல்லன் என்னாது இங்கு
இன்மை அறியாது 
இளையார் என்று ஓராது
வன்மையில் வந்திடும்
கூற்றம் வருமுன்னம்
தன்மையும் நல்ல தவம் செய்யும் நீரே!
திருமந்திரம்
தவம் என்பது தன் கடமையை ஒழுங்காகச்
செய்வது மட்டுமல்ல அவரவர் கடமையை ஒழுங்காகச் செய்வதுடன், வாக்காலும் பொருளாலும் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும். நான் நல்லவன், என்னால் தான் இப்படி கொடுக்க முடியும் செய்ய முடியும் என்ற எண்ணமில்லாமல் செய்ய வேண்டும். ம்ஹும்! என்கிட்ட கையில காசு இல்ல! என்கிட்ட மட்டும் இருந்துச்சுன்னா ஊருக்கே அள்ளிக் கொடுப்பேன் என்று வாய்ப்பந்தல் போடக்கூடாது. பொருள் இல்லா விட்டாலும் அடுத்தவர்களுக்கு உள்ளன்புடன் நம்பிக்கை ஊட்டும் பணியை செய்ய வேண்டும். இப்படிப் பட்ட நல்ல பழக்க வழக்கங்கள் எல்லாம் நமக்கு மட்டுமல்ல. சிறுவயதிலிருந்தே நமது குழந்தை களுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும் என்ற தகவலையும் இப்பாடலில் நம்மை உணர வைக்கிறார் திருமூலர்.

ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்

ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்
பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.
தீர்த்தமும் பலனும்:
1.மகாலட்சுமி தீர்த்தம்: (செல்வவளம்)
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
4. சரஸ்வதி தீர்த்தம்: (கல்வி அபிவிருத்தி)
5. சங்கு தீர்த்தம்: (வாழ்க்கை வசதி அதிகரிப்பு)
6. சக்கர தீர்த்தம்: (மனஉறுதி பெறுதல்)
7. சேது மாதவ தீர்த்தம்: (தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்).
8. நள தீர்த்தம்,
9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: (எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்).
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,(பாவங்கள் விலகுதல்)
14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: (எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்)
18. சிவ தீர்த்தம்: (சகல பீடைகளும் ஒழிதல்)
19. சத்யாமிர்த தீர்த்தம்: (ஆயுள் விருத்தி)
20. சந்திர தீர்த்தம்: (கலையார்வம் பெருகுதல்)
21. சூரிய தீர்த்தம்: (முதன்மை ஸ்தானம் அடைதல்)
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை.
ஓம் நமசிவாய நம

சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம்

சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் : --
“ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!
பொதுப் பொருள்:--
திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே,
துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்

ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?

ஓம் நமோ நாராயணாய
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஸ்ரீமத் பாகவதம் எனும் மகா புராணத்தில் 11 வது ஸ்கந்தத்தில் அவதூத - யது - ஸம்வாதம் என்ற 9 வது அத்தியாயத்தில் 24 வது சுலோகத்தில்
யதுவம்சோ அவதீர்ணஸ்ய பவக:
புருசோத்தம:
சரஸ்சதம் வ்யதீதாய பஞ்ச
விம்சாதிகம் ப்ரபோ:
பொருள்: “புருசோத்தமரே! பிரபுவே! யதுவம்சத்தில் அவதரித்த தங்களுக்கு 125 ஆண்டுகள் சென்று விட்டன.
இதில் கூறியிருப்பதன்படி ஸ்ரீ கிருஷ்ணன் பூலோக வாழ்க்கை 125 வருடங்கள்.
மகாபாரதம் ஆதிபர்வம் 115 வது அத்தியாயத்தில் பின் வரும் கால அட்டவணை இருக்கிறது.
திருதராஷ்டிரருடன் அஸ்தினாபுர வாசம் - 13 வருடங்கள்
அரக்கு மாளிகையில் - 1 வருடம்
பாஞ்சால மன்னன் வீட்டில் - 1 வருடம்
ஏகசக்ரபுரத்தில் - 1 வருடம்
மீண்டும் திருதராஷ்டிரனுடன் - 5 வருடங்கள்
இந்திரப்பிரஸ்தத்தில் தனி அரசு - 23 வருடங்கள்
வனவாசமும், அஞ்ஞாதவாசமும் - 13 வருடங்கள்
குருசேத்திர போருக்குப் பின்பு ஆட்சி - 36 வருடங்கள்
இதன் பிறகு பர்சித் மகா சக்கரவர்த்திக்கு பட்டாபிசேகம் செய்து விட்டு மகா பிரஸ்தானம்
இப்படி கணக்கெடுக்கும் போது, மொத்தம் 93 வருடங்கள்.
பாண்டவர்கள் அஸ்தினாபுரம் வந்த பொழுது;
யுதிஷ்டிரன் வயது - 16 வருடங்கள்
பீமன் வயது - 15 வருடங்கள்
அர்ச்சுணன் வயது - 14 வருடங்கள்
ஸ்ரீ கிருஷ்ணர் வயது அர்ச்சுணனை விட 3 மாதங்கள் அதிகம், தர்மரை விட பதின்மூன்றே கால் வருடம் குறைவு. இந்தக் கணக்குப்படி ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் வாழ்ந்தது 106 வருடங்கள் எனக் கணக்கிடப்படுகிறது.

Friday, 20 January 2017

குங்குமப்பூ டீ

தேவையான பொருட்கள்: குங்குமப்பூ - 1 கிராம் தண்ணீர் - 1 கப் 
தயாரிக்கும் முறை: 
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும், குங்குமப்பூவை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, குளிர வைத்து, தேன் கலந்தால், குங்குமப்பூ டீ தயார்! 
குடிக்கும் முறை:
 குங்குமப்பூ டீயை ஒருவர் தினமும் பகல் வேளையில் ஒரு கப் குடித்து வந்தால், பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் விலகும். இதர நன்மைகள்: குங்குமப்பூ டீ பார்வையை மேம்படுத்துவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும், ஆர்த்ரிடிஸ் வலியை சரிசெய்யும், ட்ரைகிளிசரைடு அளவை சீராக வைத்துக் கொள்ளும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். முக்கியமாக குங்குமப்பூ டீ ஒருவரின் ஒருமுகப்படுத்தும் திறனை மேம்படுத்தும்

நட்சத்திரங்களும் யோனி வகைகளும்!

நட்சத்திரங்களும் யோனி வகைகளும்!
 அஸ்வினி - தேவ ஆண் குதிரை! 
பரணி - மானுஷ ஆண் யானை 
கிருத்திகை - ராஷஸ பெண் ஆடு 
ரோகிணி - மானுஷ ஆண் நாகம்
 மிருகசீரிஷம் - தேவம் பெண் சாரை 
திருவாதிரை - மானுஷ ஆண் நாய் 
பனர்பூசம் - தேவம் பெண் பூனை 
பூசம் - தேவம் ஆண் ஆடு 
ஆயில்யம் - ராஷஸ ஆண் பூனை 
மகம் - ராஷஸ ஆண் எலி 
பூரம் - மானுஷ பெண் எலி 
உத்திரம் - மானுஷ பெண் எருது
 அஸ்தம் - தேவம் பெண் எருமை
 விசாகம் - ராஷஸ ஆண் புலி 
அனுஷம் - தேவம் பெண் மான் 
கேட்டை - ராஷஸ ஆண் மான் 
மூலம் - ராஷஸ பெண் நாய் 
பூராடம் - மானுஷ ஆண் குரங்கு
 உத்திராடம் - மானுஷ பெண் மலட்டு பசு 
திருவோணம் - தேவம் பெண் குரங்கு 
அவிட்டம் - ராஷஸ பெண் சிங்கம் 
சதயம் - ராஷஸ பெண் குதிரை 
பூரட்டாதி - மானுஷ ஆண் சிங்கம்
 உத்திரட்டாதி - மானுஷ பெண் பசு 
ரேவதி - தேவம் பெண் யானை

யோனி பகை

யோனி பகை நட்சத்திரங்கள்! குரங்கு - ஆடு : பூராடம், திருவோணம் - பூசம், கிருத்திகை சிங்கம் - யானை : அவிட்டம், பூரட்டாதி - பரணி, ரேவதி குதிரை - எருமை : அஸ்வினி, சதயம்- சுவாதி, அஸ்தம் பசு -புலி : உத்திரம், உத்திராடம், விசாகம்- சித்திரை, உத்திரட்டாதி எலி - பூனை : மகம், பூரம் - ஆயில்யம், புனர்பூசம் பாம்பு - எலி : ரோகிணி, மிருகசீரிஷம்- மகம், பூரம் கீரி- பாம்பு : உத்திராடம்- ரோகினி, மிருகசீரிஷம், மான் - நாய் : கேட்டை, அனுஷம்- மூலம், திருவாதிரை

Thursday, 19 January 2017

அழுகிய_தேங்காய் அபசகுனமா?

அழுகிய_தேங்காய் அபசகுனமா?
பகவானால் படைக்கப்பட்ட முக்கியப் பொருள் தேங்காய். ஒரு கண், இரண்டு கண், மூன்று கண் என தேங்காய் உண்டு. கண் நரம்பு இல்லாத தேங்காய் கிடைக்காததால் கன்னியாகுமரி பகவதி அம்மன் திருமணம் ஆகாமல் நிற்பதாக சாஸ்திரம் கூறுகிறது. ஆகவே
ஒரு கண் தேங்காய் பிரம்மனாகவும்,
இரண்டு கண் தேங்காய் லஷ்மியாகவும்,
மூன்று கண் தேங்காய் சிவனாகவும் போற்றப்படுகிறது.
இறைவனுக்கு நம் உள்ளத்தின் சுத்தத்தைக் காண்பிக்க தேங்காயில் சில சகுனங்கள் உண்டு.
தேங்காய் உடைக்கும் பொழுது அழுகி இருந்தால் தேவையில்லாத பயம், குழப்பம், கலக்கம் & ஏமாற்றம் அடைந்ததாக எண்ணிக்கொள்வாா்கள்
ஒரு சிலா் நடக்கக்கூடாதது நடந்துவிட்டதை போல தானும் பயந்து மற்றவா்களையும் பயமுறுத்துவாா்கள்
ஆனால் அழுகிய தேங்காய் ஆனந்தத்தின் அறிகுறி. அழுகிய அனைத்து தேங்காயும் காரிய சித்தி ஆவதன் அறிகுறி. ஒரு துணி எடுத்து நீரில் நனைத்து அழுக்கை துடைத்து பிழிந்தால் அழுக்கு நீர் தான் வரும் அதே போல தான் உங்கள் பீடை, சரீர பீடை, துா்சொப்னங்கள், கண்திருஷ்டி, ரோகம், ஆகியவை அனைத்தும் பிராா்த்தனை செய்து உடைக்கும் தேங்காயில் விலகியதன் அறிகுறியை காட்டுகிறது.
முழு கொப்பரையாக இருந்தால்
சுபகாரியம் உண்டாகும்
புத்திர பாக்யம் உண்டாகும்
பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்
பூ இருந்தால்
ரோக நாஸ்தி
எதிர்பாராத வரவு
சொர்ண லாபம்.
நீங்கள் உங்களையோ அல்லது இறைவனையோ முழுமையாக நம்பினால் போதும் மற்றவை அனைத்தும் நல்லபடி சுபமாகவே நடக்கும்.

Saturday, 14 January 2017

கன்னிகாதானம் என்றால் என்ன?

கன்னிகாதானம் என்றால் என்ன?
வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள். நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு. ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!
திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!
இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி. 'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,
மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..' என்று அந்த மந்திரம் நீள்கிறது.
அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனயும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.
உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.
ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும். ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!
ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம் உணர்த்துகிறது

திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?

திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?
சம்ஸ்கிருதத்தில் இதை'சப்தபதி'
என்று கூறுவார்கள்.
அதாவது
ஏழுஅடிகள்மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும்.
அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன்உனக்குதுணையிருப்பான்என்றுகீழ்கண்டவாறுத‌னதுபிரார்த்தனையைச்சொல்கிறான்!
"முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்"
"இரண்டாம் அடியில்: ஆரொக்கியமாக வாழ வேண்டும்"
"மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்"
"நான்காவது அடியில்: சுகத்தையும் , செல்வத்தையும் அளிக்க வேண்டும்"
"ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்"
"ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள்நிலையாக தொடர வேண்டும்"
"ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்"
என்றுபிராப்திப்பதாகசொல்லப்படுகிறது.
இந்தசம்பிரதாயத்தில்மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூக்ஷமமான மனோவியல்விசயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.
இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சினேகிதம்உண்டாகும் என்பது சாஸ்திரம்.
உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள்.
ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களைவேகமாகதாண்டிவிடுவோம் அல்லது அவர்களைமுன்னே போகவிட்டுவிடுவோம்.
முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம்.
இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குளாக நடந்து விடும் என்பது ஒரு சூக்ஷமமான விஷயம்.
இதை மிகவும் நுணுக்கமாக ஆரய்ந்து நம் "இந்து தர்மத்தில்" அதை ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும்.
இந்து தர்மத்தில் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. பல நுணுக்கமான அறிவியல் மற்றும்மனோவியல்விஷயங்கள் நிறைந்தது இந்து தர்மம்

Wednesday, 4 January 2017

பெண்களை வாடி போடி

பெண்களை வாடி போடி என்றும்..
வாமா போமா என்றும்
வாடா போடா என்றும்
பா என்றும்
செல்லம் குட்டி என்றும் அழைப்பது அனைத்து
ஆண்களின் வழக்கமாக இருக்கிறது.இதையெல்லாம் என்ன அர்த்தத்தில் அவர்களை அப்படி அழைக்கிறோம் என்று அநேகம் பேருக்கு தெரிவதில்லை.
(மா..டி..பா..டா..குட்டி..செல்லம்)
இதற்க்கு எல்லாம் ஒவ்வொரு அர்த்தம்இருக்கிறது.
மா என்று அழைப்பது அவர்களை ஒரு தாயாக நினைத்து,
பா என்று அழைப்பது அவர்களை தந்தைக்கு நிகராக நினைத்து,
டா என்று அழைப்பது அவர்களை தன் தோழனுக்கு நிகராக நினைத்து (தனக்கு நிகராகவும் நினைத்து தான்) அதாவது ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில்,
குட்டி என்றுஅழைப்பது குழந்தைக்கு நிகராகவும்
செல்லம் என்று அழைப்பது தன்னுடைய அன்புக்கு நிகராகவும அழைக்கிறார்கள்.
ஆனால் டி என்ற வார்த்தை தன்னுடைய மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் .
அதனால் தான் நான் பெண்களை வாடி போடி என்று அழைப்பதில்லை.
அந்த எழுத்து என் மனைவிக்கானது..
அதைநான் மற்ற பெண்களிடம் பயன்படுத்த விரும்பவில்லை.✿
பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

குட்டி கதை

"குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
"வருத்தப்படாதே,
என்ன பிரச்சனை?" என்று கேட்டார் குரு.
"என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்றான் வந்தவன்.
வந்தவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது.
அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
"அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.
பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை.
இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் இன்னொரு கார் ஒன்று குறுக்கே வந்துவிட்டது.
இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின. தவறு எதிரில் வந்தவனுடையதுதான்.
இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்சி ஓட்டுநரைத் திட்டினான்.
ஆனால் ஆச்சர்யம்!
பதிலுக்கு டாக்ஸி ஓட்டுனர் அவனை திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார்.
இதே போல் இன்னொரு சம்பவம்.
அதிலும் டாக்ஸி ஓட்டுனர்,
பொறுமை இழக்கவில்லை.
ஆத்திரப்படவில்லை. நிதானமாக இருந்தார்.
இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு.
இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுனரிடம் கேட்டார்.
"எப்படி இவ்வளவு பொறுமையாய்,
யாருடைய திட்டுக்கும் பொருட்படுத்தாமல் வண்டி ஒட்டுகிறீர்கள்?"
அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுனர்,
"என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது.
வீதியில் போவோர் அள்ளிக் கொட்டும்
குப்பைகளையெல்லாம் என் மனதில்
சேர்த்துக்கொள்ளவில்லை.
அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டு
பதில் சொல்லிக்கொண்டிருந்தால்
நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய முடியாது."
இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய
வேண்டியது என்ன என்பது வந்தவனுக்கு புரிந்தது.
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும்,கொஞ்ச நஞ்ச இடைஞ்சல்கள் அல்ல.

மார்கழி மாதம் பற்றிய தவறான எண்ணங்கள்!..

மார்கழி மாதம் பற்றிய தவறான எண்ணங்கள்!...
❇ மார்கழி மாதம் பீடை மாதம் என்பதெல்லாம் கிடையாது. அது தனுர் மாதம். பீடை என்று சொல்லக்கூடாது. நமது உடலை நல்ல விதமாக ஆக்கிக்கொள்வதற்கு உரிய மாதம் மார்கழி மாதம்.
❇ தட்சணாயணம் அந்த மாதத்துடன் முடிகிறது. அதாவது சூரியனுடைய தென் பகுதி இயக்கம் அந்த மாதத்துடன் முடிகிறது. அந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்குவதால், நாடி நரம்புகள் வலுவடைகிறது. நீண்ட ஆயுள் கிடைக்கிறது. அதனால்தான் அந்த மாதத்தை அப்படி ஒதுக்கி வைத்தார்கள்.
❇ மார்கழி மாதத்தை ஆன்மீக நிகழ்வுகளுக்காக என்று ஒதுக்கி வைத்தார்கள். தட்சணாயண மாதத்தில் அது முடியக்கூடிய மாதம். சூரியனுடைய தெற்கு இயக்கம் முடியக்கூடியது. அந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு சில பிரச்சனைகளைத் தரக்கூடியது.
❇ அதனால் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மீகம் என்று இருந்தால் சாதகமான வைப்ரேஷனைக் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்களே தவிர கெடுதலான மாதம் கிடையாது....

தீயசக்தியை விறட்ட

தீயசக்தியை விறட்ட
==================
வீட்டில் பேய்அல்லது செய்வினை இரிக்கிறது என்று தெறிந்து அதைசரியாக விலக்கமுடியாமல் இருப்பார்கள் அவர்கள் பேய்மிரட்டி என்கிரமூலிகையின் இலையைபறித்து வந்து கால்உப்பைகொஞ்சம் எடுத்து இரன்டையும் சேர்த்து அறைத்து தன்னியில் கறைத்து
வீடுமுலுவதும் தெலித்துவிட்டு அன்றுஇரவு
இலுப்பை என்னையில் விளக்குஏத்தவேண்டும் மருநாள் காலையில் வீட்டைசுத்தியும் கல்லுப்பை தெளிக்க வேண்டும் இவ்வறு மூன்று நாள்தொடர்ந்து செய்தால்
எப்பேர்பட்ட தீயசக்திகளும் விலகிவிடும்
இதர்க்கு நாள்கிழமை தேவையில்லை மந்திரம் ஒன்றுசொல்லவேண்டியதில்லை
விளக்கு கிழக்குமுகமாக வைக்க வேண்டும்
தீப தூபம்போடலாம் நல்லது
நன்றி
சிவமயம்ஆன்மீக களஞ்சியம்

உங்களது பிறந்த நட்சத்திரத்தன்று செய்ய வேண்டிய இறை வழிபாடு

உங்களது பிறந்த நட்சத்திரத்தன்று செய்ய வேண்டிய இறை வழிபாடு
அசுவினியில் பிறந்தவர்கள் அவர்களது ஜன்ம நட்சத்திரத்தன்று கூத்தனூர் சென்று சரஸ்வதியை வணங்கினால் வித்தை விருத்தி அடையும்.
பரணியில் பிறந்தவர்கள் பூராடம் நட்சத்திரத்தன்று கதிராமங்கலம் சென்று ராகு காலத்தில் ஸ்ரீதுர்கையை வழிபட்டால் சுகம் பெருகும்.
கார்த்திகையில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் திரு அண்ணாமலை கிரிவலம் வந்தால் அக்னி பகவான் அருள் பெற்று பொருளாதார மேன்மை அடைவர்.
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் அமாவாசையன்று கும்பகோணம் சென்று ஸ்ரீபிரம்மாவை வழிபட தடைகள் பல விலகிவிடும்.
மிருக சீரிடம் நட்சத்திரத்தில் உதயமானவர்கள் திங்கட் கிழமை மற்றும் பவுர்ணமி நாட்களில் திங்களூர் சென்று சந்திர பகவானை வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.
திருவாதிரையில் பிறந்தவர்கள் சதுர்த்தசி திதி அல்லது மாத சிவராத்திரி வரும் நாளில் சிதம்பரம் சென்று ஸ்ரீநடராஜரை வணங்கினால் அபூர்வ ராஜயோகம் உண்டாகும்.
புனர்பூசத்தில் பிறந்தவர்கள் நவமி நாட்களில் கும்பகோணம் சென்று ஸ்ரீஇராமசாமியை தரிசனம் செய்தால் இனிய வாழ்க்கை உண்டாகும்.
ஒளி மிகுந்த பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பவுர்ணமி நாட்களில் தென்குடி திட்டைசென்று ராஜகுருவை வணங்கினால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் காளஹஸ்தி சென்று ராகு காலத்தில் ராகு மற்றும் கேதுக்களை வணங்கினால் மணவாழ்க்கையில் நல்ல உயர்வு கிடைக்கும்.
மகம் நட்சத்திரக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரபகவானின் ஸ்தலமான கஞ்சனூர் சென்று வழிபட்டால் செல்வச்செழிப்பு உண்டாகும்.
பூர நட்சத்திரக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் சமயபுரம் சென்று மாரியம்மாளை வழிபட்டால் நினைத்தது கைகூடும்.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் சூரியனார் கோவில் சென்று சூரிய பகவானை வணங்கினால் நல்ல தொழில் வளம் உண்டாகும்.
அஸ்த நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை மாதந்தோறும் சபரிமலை சென்று ஸ்ரீசாஸ்தாவை வணங்கினால் நலம் உண்டாகும்.
சித்திரை நட்சத்திரக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று ஸ்ரீ அங்காரகனை வழிபட்டு வர ஏற்றம் பல உண்டாகும்.
சுவாதியில் பிறந்தவர்கள் வாயுஸ்தலமான ஸ்ரீகாளஹஸ்தி சென்று ராகு காலத்தில் இறை வழிபாடு செய்தால் இன்னல்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமையும்.
விசாக நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை நாட்களில் பழனிக்குச் சென்று முருகனை வழிபட்டால் உயர்வுகள் பல உண்டாகும்.
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரெங்க நாதரையும் தாயாரையும் தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
கேட்டை நட்சத்திரக்காரர்கள் அவர்களது ஜன்ம நட்சத்திரத்தன்று திரு அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செய்தால் சகல சவுபாக்கியமும் உண்டாகும்.
முல நட்சத்திரக்காரர்கள் திருப்பாம்புரம் சென்று ராகு காலத்தில் ராகு கேதுக்களை வழிபட்டால் இனிய இல்லறம் அமையும்.
பூராடம் நட்ச்த்திரக்காரர்கள் கார் காலங்களில் வருணன் வணங்கிய திரு அண்ணாமலையாரை வணங்கினால் செல்வ வளம் உருவாகும்.
உத்திராடம் நட்சத்திரக் காரர்கள் சங்கடஹர சதுர்த்தி நாட்களில் பிள்ளையார்பட்டி சென்று விநாயக்கடவுளை வழிபட்டால் நலம் தரும் முன்னேற்றம் உண்டாகும்.
திரு ஓண நட்சத்திரக்காரர்கள் அவரது ஜன்ம நட்சத்திரத்தன்று திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டால் ஐசுவரியங்கள் கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமைகளில் திரு நள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டால் தனம் பெருகும்.
சதயம் நட்சத்திரக் காரர்கள் அமாவாசை நாட்களில் ஸ்ரீவாஞ்சியம் சென்று யமதர்மனை வணங்கினால் நல்வழி கிடைக்கும்.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வியாழக்கிழமைகளில் திருச்சி திரு வானைக்கா சென்று குபேர லிங்கத்தை தரிசனம் செய்தால் நல்ல தன விருத்தி உண்டாகும்.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று திருவாடுதுறை சென்று ஸ்ரீகோமுக்தீஸ்வரரை வணங்கினால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
ரேவதி நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமைகளில் திருக்கொள்ளிக்காடு சென்று சனிபகவானை வணங்கினால் சிறப்புகள் பல உண்டாகும்

சொர்க்க வாசல் திறக்க காரணம் என்ன?

சொர்க்க வாசல் திறக்க காரணம் என்ன?
அவதார புருஷரான எம்பெருமானுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர், பெருமாளை நோக்கி தங்களின் மிகப்பெரிய பலனை உலகமக்களின் நலன் கருதி அவர்களுக்கும் அருள வேண்டும் என விரும்பினார்கள்.
அதாவது அரக்கர்கள் இருவரும் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி
பெருமானிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களும் அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக் கொண்டார். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஸ்வாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது.
அது அன்று தொடங்கி இன்று வரையும் குறைவின்றி நடைபெற்று வருகின்றது.

கஜேந்திர மோக்ஷம் என்னும் சரணாகதி தத்துவம்...!!!

கஜேந்திர மோக்ஷம் என்னும் சரணாகதி தத்துவம்...!!!
விசிஷ்டாதவைத்தின் மைய கருத்தே, பூரண சரணாகதிதான்.அந்த சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சிதான் கஜேந்திர மோக்ஷம்.
ஜீவாதமாவாகிய கஜேந்திரன் தன் பலத்தின் மேல் ஆணவம் கொண்டு,சம்சாரமாகிய குளத்தில் உள்ள
துன்பம் மற்றும் இறப்பாகிய முதலையுடன் ஆயிரம் வருடங்கள் போராடியும்,அதனால் முதலையின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. அது தன் ஆணவத்தை விட்டு பூரண சரணாகதியுடன்
"ஆதி மூலமே" என்று அலறிய அடுத்த கணமே,
வேத சொரூபியான கருடன் மேல் ஆரோகணித்து, கையில் சுதர்சன சக்கரத்துடன் வந்து, யானையின்
துயர் தீர்த்த பக்தவத்சலன் ஸ்ரீ மந் நாராயணன்.ஆகவே பூரண சரணாகதியை விளக்குவதே இந்த கஜேந்திர மோக்ஷம்.
எல்லா வைணவத்தலங்களிலும் சித்திரைப் பௌர்ணமியன்று கருட சேவையுடன் கஜேந்திர மோக்ஷம் சிறப்பாக நடைபெறுகின்றது. திருவரங்கத்தில் சித்ரா பௌர்ணமியன்றும் பல் வேறு தலங்களில் ஆனி கருடன், ஆடி கருடன் என்று அந்தந்த மாதங்களில் பௌர்ணமி தினங்களிலும் கருட சேவையுடன் கஜேந்திர மோட்சம் சிறப்பாக நடைபெறுகின்றது. .
இனி பாகவதத்தில் கஜேந்திர மோக்ஷம் எவ்வ்வாறு கூறப்பட்டுள்ளது என்று பார்ப்போம்.கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன், தன் பிடிகளுடனும் குட்டிகளுடனும் காட்டில் மரங்களை உடைத்தும் மூங்கிலை உண்டும் உலாவி கொண்டிருந்தது அதன் அந்த சப்தத்தை கேட்டதுமே சிங்கம் புலி முதலிய பலம் மிகுந்த மிருகங்கள் பயந்து ஓட மற்ற சிறிய மிருகங்களான மான்,முயல் முதலியவை பயமில்லாமல் அதனுடன் ஒட்டி வந்து கொண்டிருந்தன.
அப்போது எங்கிருந்தோ தாமரை மலரின் நறுமணம் அவனது துதிக்கையை எட்டியது.உடனே தனது பரிவாரங்கள் சூழ அந்த பொய்கையை நோக்கி ஓடத்தொடங்கினான். வழியில் உள்ளவற்றையெல்லாம் துவம்சம் செய்து கொண்டு,பொய்கையை அடைந்த கஜராஜன் தன் துதிக்கையால் தாமரைப் பூ. அல்லி ஆகியவற்றின் மகரந்தங்கள் நிறைந்த அந்த இனிய பொய்கை நீரை உறிஞ்சி உளம் குளிர பருகி, அந்த நீரை தன் பரிவாரங்களுக்கும் வழங்கினான்.
பின் ஒரு தாமரை மலரை, தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்பிக்க பறிக்க பொய்கைக்குள் காலை வைத்த போது,அந்த பொய்கையிலிருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டு,கஜேந்திரனை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது.
பின்னிருந்து மற்ற பெண் யானைகளும், குட்டிகளும் சேர்ந்து இழுத்தன.ஆனால் முதலைக்கு தண்ணீரில் பலம் அதிகமல்லவா? இந்த இழுபறி நீடித்தது. ஆயிரம் வருடங்கள் இந்த இழுபறி நீடித்தது. தேவர்கள் எல்லாரும் கூடி நின்று இந்த போராட்டத்தை கண்ணுற்றனர். மெள்ள மெள்ள கஜேந்திரன் தன் சக்தி குறைந்து வருவதை உணர்ந்தான்.
கஜேந்திரன் தன் துர்கதியான நிலையை உணர்ந்தான், மரணத்தின் வாயிலில் நின்ற அந்த வேளையில், அந்த பரம் பொருளைத் தவிர தனக்கு எந்த பற்றுக் கோடும் இல்லை என்று உணர்ந்தான். முன் ஜென்மத்தில் தான் அந்த ஆதி மூலத்தை துதித்த துதிகள் அவனுக்கு ஞாபகம் வந்தன.அவன் அவற்றை பாராயணம் செய்தான்.
அந்த ஸ்தோத்திரத்தின் சாரம்"பரம புருஷனே உனக்கு நமஸ்காரம்", "உன்னிடமிருந்துதான் சகலமும் தோன்றியது","அனைத்துக்கும் ஆதாரம் நீயே", "அனைத்தும் உன்னுள்ளே அடக்கம்""உன்னுடைய மாயையினாலே அண்ட சராசரங்களும் இயங்குகின்றன, சில ஒளிர்கின்றன, சில அழிகின்றன. பிரளய முடிவில் அனைத்து உயிர்களும் அழிய, ஆலிலை மேல் துயில் கொள்ளும் மாயனும் நீயே. உன்னை விட்டால் எனக்கு வேறு பற்றுக் கோடு யாருமில்லை, உன் சரணமே சரணம். ஆதி மூலமே! என்று தாமரைப் பூவை தனது தும்பிக்கையில் வைத்துக் கொண்டு அலறியது கஜேந்திரன்.
கஜேந்திரனின் அந்த அபயக்குரல் கேட்டவுடனே, பெருமாள் வேத சொருபனான ஓடும் புள்ளேறி
( கருட வாகனமேறி), கையில் சுதர்சன சக்கரத்துடன் விரைந்து வந்து சக்கராயுத்தால்,முதலையை வதைத்து கஜேந்திரனைக் காப்பாற்றி,அவனுக்கு மோக்ஷமும் அளித்தான் அந்த பக்த வத்சலன். முதலையும் திவ்ய சரீரம் பெற்று பகவானை வணங்கித் துதி செய்தது. கஜேந்திரனும் பகவத் சொரூபத்தைப் பெற்று விஷ்ணு பார்ஷதனாயிற்று.
உங்களுக்கு சில சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம் அதற்கான விடைகள் இதோ
.
முதலாவது அத்தனை யானை கூட்டத்தில் கஜேந்திரனை மட்டும் முதலை இழுக்க காரணம் என்ன?
முற்பிறவியில் யானை, பாண்டிய மன்னன் இந்திரதும்யனாக பிறந்து, மஹா விஷ்ணு மீது மிகவும் அதீத பக்தி கொண்டு வாழ்ந்து வந்தான். ஒரு சமயம் அவன் பூஜை செய்து கொண்டிருந்த போது,
துர்வாச முனிவர் அவனைக் காண வந்தார்.
பூஜையில் ஈடுபட்ட மன்னன்,முனிவரை வெகு நேரம் காக்க வைத்து விட்டான். அதனால் கோபமடைந்த துர்வாசர்,என்னை மதிக்க்காமல், மதம் கொண்டு நடந்த நீ , மதம் கொண்ட யானையாக மாறக்கடவது என்று சாபம் கொடுத்தார். மன்னன் முனிவர் தாள் படிந்து வேண்டி, அடுத்த பிறவியிலும் தான் பெருமாள் மீது கொண்ட பக்தி தொடரவேண்டும் என்று வேண்ட, முனிவரும் அவ்வாறே வரம் கொடுத்து,அந்த மஹா விஷ்ணுவாலேயே உனக்கு மோக்ஷம் கிட்டும் என்று சாப விமோசனமும் அளித்தார்.
முதலையும், முற்பிறவியில் ஹூஹூ என்னும் கந்தர்வனாக இருந்தான். பொய்கைக்கு கால் கழுவ வருபவர்களின் காலை பற்றி இழுத்து விளையாடும் வழக்கத்தை கொண்டிருந்தான். ஒரு சமயம் தேவலர் முனிவரின் காலை இழுத்த போது, முனிவர் அவனுக்கு தண்ணீரில் கிடந்து தவிக்கும் முதலையாக ஆகும் சாபம் அளித்தார். அவன் தன் தவறை உணர்ந்து சாப விமோசனம் வேண்ட, மஹா விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் பட்டு உன்க்கு சாப விமோசனம் ஏற்படும் என்று சாப விமோசனம் அளித்தார்.
கஜேந்திரன் ஏன் ஆயிரம் வருடங்கள் காத்திருந்தான்?
ஏன் முதலிலேயே சரணாகதி அடைந்திருக்கக் கூடாது? மனித மனம் இவ்வாறு தான் உள்ளது. சம்சார மாயையில் மயங்கி, ஏதோ நாம் தான் நமது உறவினர்களைத் தாங்குவது போல் மாயையில் உழல்கின்றோம். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பதை உணர்ந்து, எப்போது நாம் பூரண சரணாகதி அடைகின்றோமோ அப்போது தான் அவன் அருள் நமக்கு கிட்டும்.
பெருமாள் ஏன் ஆயிரம் வருடம் காத்திருக்க வேண்தும் உடனே வந்து காத்திருக்கக் கூடாதா? அது வரை கஜேந்திரன் தனது வலிமையின் மேலும், தனது பிடிகள் தன்னை காப்பாற்றும் என்ற நம்பிக்கையிலும், இருந்ததால்தான் பகவான் தனது பஞ்சாயுதங்களுடன் எப்போதும் தன் பக்தர்களைக் காப்பாற்ற தயாராக இருந்தாலும்,அவன் உண்மையை உணரும் வரை காத்திருந்தார்.
ஏன் தானே வந்திருக்க வேண்டும்? சுதர்சன சக்கரத்தை அனுப்பியிருந்தாலும் பணி முடிந்திருக்குமே,அவரது சௌலப்யத்தையும்,பகத வத்சல குணத்தையும் காட்டவே தானே நேரில் வந்தான்.பாகவதத்தில் அந்த அருமையான ஸ்தோத்திரங்கள் உள்ளன அவற்றை காலையில் ஒதுபவர்களுக்கு சகல வித நன்மைகளும் கிடைக்கும்.
பூரண சரணாகதி அடைந்த கஜேந்திரனை பெருமாள் காப்பாற்றியதைப் போல் "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்று அவர் கூறியபடி அவர் அடி சரணடையும் தன் பக்தர்கள் அனைவரையும், அவர் காப்பாற்றுவார் என்பதே, இந்த கஜேந்திர மோக்ஷம் நமக்கு உணர்த்தும் பாடம்.

காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம் (GYM)

காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம் (GYM)
காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது., "மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892—1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் "நதிகளில் நான் கங்கையாகவும., மலைகளில் நான் விந்திய மலையாகவும்., மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி இராமகிருஷ்ண பரமஹமஸர் கூறுகையில் "பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும்., காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் "காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் (Atom Bomb) சமம்" எனக் குறிப் பிட்டுள்ளார்.
ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823—1900) அவர்கள் "ஒளியினை தவம் செய்து நம் மூளை., மனதினை உயர்த்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி (1869—1948) அவர்கள் "யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் "உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்" என்பதாகும்.
இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.
காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி., மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.
தத் — வெற்றி
ச — வீரம்
வி — பராமரிப்பு
து — நன்மை
வ — ஒற்றுமை
ரி — அன்பு
நி — பணம்
யம் — அறிவு
ஃபர் — பாதுகாப்பு
க்கோ — ஞானம்
த்தி — அழுத்தம்
வா — பக்தி
ஸ்யா — நினைவாற்றல்
ஃத்தி — மூச்சு
மா — சுய ஒழுக்கம்
யோ — விழிப்புணர்வு
யோ — உருவாக்குதல்
நஹ — இனிமை
பரா — நல்லது
சோ — தைரியம்
த்தா — ஞானம்
யட் — சேவை
காயத்ரி மந்திரம் என்றால் என்ன..?
வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.
ஓம் — தெய்வீக சக்தி, ஒலி சின்னம்
ப்பூ — உடல் விமானம்
புவஹா — நிழலிடா விமானம்
ஸ்வ — வான விமானம்
தத் — அந்த தலை தெய்வத்தின்
ஸவித்து — பிரபஞ்சம் தயையும் சக்தி
வரேன்யம் — வணங்க வேண்டும்
பர்கோ — பிரபல
தேவஸ்ய — பிரகாசமிக்க
தீமஹி — நம் த்யானம்
தியோ — அறிவினை
யா — யார்
நஹ — எங்கள்
ப்ரசோதயாத் — தெளிவுப்படுத்துங்கள்
"ஓம் பூர் : புவ : ஸீவ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ : யோந: ப்ரசோதயாத்"
நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.
இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி., சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.
காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக., உண்மையான சிந்தனை., சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை., மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். ஹிருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள்., கவலைகள் நீங்கும். குறிப்பாக., பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.
காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்
★ கம்பீரத் தோற்றம்.
★ தரமான பேச்சு.
★ வறுமை., குறை நீங்குதல்.,
★ பாதுகாப்பு வட்டம்.
★ கண்ணில் அறிவு தெரிதல்.
★ அபாயம்., தேவையற்ற சூழ்நிலை நீங்கும்.
★ நரம்புகளும்., சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும்.
மேலும்.,
★ அமைதியாய் இருப்பர்.
★ நற்செயல்களில் ஈடுபடுவர்.
★ காந்த சக்தி ஆகியவை உருவாகும்.
மேலும்.,
★ வாழ்க்கையில் தடைகளை நீக்கும்.
★ மூளையை பிரகாசிக்கச் செய்யும்.
★ உள்ளுணர்வினை தெளிவாக்கும்.
★ உயர் உண்மைகள் தெரிய வரும்.
— என்றும் கூறப்படுகின்றது.
டாக்டர் ஹெவார்ட் ஸ்டியன் கெரில் என்ற அமெரிக்க விஞ்ஞானி காயத்ரி மந்திர பலன்களாக பல செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆனால்., இதற்கு மேலும் ஆதாரப்பூர்வம் தேவைப்படுகின்றது....
கடந்த சில ஆண்டுகளில் சில வெளிநாடுகளில் காலை 7 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தினை ஒலிபரப்புவதாக 

வாழை மரத்தின் பரிகாரங்கள்!!!

வாழை மரத்தின் பரிகாரங்கள்!!!
1. தரித்திர பிணிகள் விலக
அமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து சூரியன் மறையும் வேளையில் இரண்டு மணிக்கு மேற்பட்டு கடலில் குளித்து விட்டு, தம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படும்படி தடவிவிட்டு, தாம் அணிந்திருக்கும் சட்டை அல்லது பனியன், பெண்ணாக இருப்பின் ஜாக்கெட், புடவை போன்ற துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில் வீசிவட வேண்டும். இப்படி செய்தால் நம்மை பிடித்த தரித்திர பிணிகள் விலகிவிடும்.
2. திருமணம் தடை விலக
திருமணம் தடைப்பட்ட பெண்கள் வாழைப்பூ இதழில் மூன்று குண்டு மஞ்சளை வைத்து முடித்து, வாழை நாரினால் கட்டி முடியிட்டு, வாழை மரத்தின் இலை, குலை தள்ளும் இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். இது போன்று மூன்று சஷ்டி திதி அன்று செய்துவர, விரைவில் திருமணம் நடைபெறும், அதைப்போல் ஆண்கள், குண்டுமஞ்சளுக்கு பதில் கொட்டைப்பாக்கு வைத்து கட்ட வேண்டும்.
3. சர்வ தரித்திரங்கள் விலக
ஞாயிற்றுக்கிழமைகளில் பிரம்ம முகுர்த்த வேலையில் வாழை மரத்தின் வேர் பகுதியில் இருந்து (1/2 ) அறை அடிக்கு மேலே ஒரு மூங்கில் குச்சியில் குத்தினால் வாழை நீர் ( கங்கை நீர்) வழியும் அந்த நீரை மண் பாத்திரத்தில் பிடித்து கடல் நீருடன் கலந்து வீடுகளில், தொழில்கூடங்களில், நம்மீதும் தெளித்துக் கொண்டு வந்தால் சர்வ தரித்திரங்களும் விலகும். ( வாழை மரத்தை வெட்டினலோ அல்லது குத்தினாலோ அதிலிருந்து வடியும் நீர் கங்கை நதி நீருக்கு சமமானது, கைலாய கங்கை நீரில் மிதந்து கொண்டு தான் விஸ்வகர்மாவை நோக்கி தவம் புரிந்ததே இதற்கு காரணம்.)
4. குழந்தை பாக்கியம் பெற
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கடவுளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வித்து, வாழைமரக்கன்றை தானமாகக் கொடுக்கலாம். பின்பு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வாழைப்பழங்களை தானமாகக் கொடுக்கலாம். ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் இரட்டை வாழைப்பழத்தை கோவிலில் உள்ள ஏதாவது தெய்வத்திற்கு படைத்து, பின்பு வீட்டிற்கு எடுத்து வந்து அந்த பழத்தின் தோலில் உள்ள சதயை நகம் படாமல் சுரண்டி எடுத்து காய்ச்சிய பாலில் போட்டு சுத்தமான தேன் கலந்து கணவன், மனைவி இருவரும் பருகிய பின் ஒன்று சேர்ந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
5. பித்ரு தோஷம் விலக
100 கிராம் கருப்பு எள்ளை வாங்கி அதை வெல்லத்துடன் கலந்து ஐந்து பாகங்களாக பிரிந்து, ஐந்து வெள்ளை துணியில் மூட்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஐந்து வாழைக்காய் எடுத்து, ஒவ்வொரு வாழைக்காயில் உள்ள காம்பில் ஒவ்வொரு எள் மூட்டையை மஞ்சள் நூலினால் கட்டி பித்ருக்களை வேண்டி அமாவாசை திதியில் கடலில் விட்டால் பித்ரு தோஷம் விலகும்.
6. செல்லவம் மேலும் பெருக
சம்பள பணத்தையோ அல்லது சுப காரியய்த்திற்கு பயன்படுத்தப்பட இருக்கும் பணத்தையோ, வாழைப்பூ இதழில் வைத்து, வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்து பின் பயன்படுத்தினால் வீண் விரையம் மற்றும் செலவுகள் வராது.
அதேபோல் புதிய தங்க நகை அல்லது வெள்ளி பொருட்களை வாங்கி வந்து, அதையும் வாழைப்பூ இதழில் வைத்து பூஜித்து எடுத்து கொண்டால் செல்லவம் மேலும் பெருகும்.
7. அன்ன தரித்திரம் விலக
அட்சய சக்தி மிகுந்த இந்த வாழை மரத்திற்கு மற்றொரு மகத்தான பெருமையும் உண்டு. அட்சயதிதி அன்று புதிய தங்கம் வாங்க செய்து, மஞ்சள் கலர் துணியில் முடிந்து, கிழக்கு முகமாக நின்று, ஆபரண மூட்டையை வாழை மரத்தில் கட்டி தீபம் காட்டி, சாம்பிராணி புகையிட்டு, பூஜை முடிந்த பின்பு எடுத்து அணிந்து கொண்டால் ஆபரணங்கள் பெருகும். அதைப்போல் நெல்மணிக்களை கட்டி பூஜித்து அரிசி மூட்டையில் போட்டு வைத்தால் அன்ன தரித்திரம் விலகும்.
8. வியாபார விருத்தி பெருக
இதைப்போல் பெளர்ணமி நிலவு ஒளியில், சுக்கிர ஓரை வேளையில், வடக்கு பக்கமாக உள்ள வாழை மரத்தின் வேரை நகமும். இரும்பு கத்தியும் படாமல் எடுத்து கஸ்தூரி மஞ்சளில் சேர்த்து, சிகப்பு நூல் கட்டி கருப்பு வெற்றிலையில் மடித்து, தொழில் நடக்கும் இடத்தில், பணம் வைக்கும் பெட்டியில் வைத்து சாம்பிராணி புகையிட்டுவந்தால் வியாபார விருத்தி பெருகும்.
9. வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெற
வாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து முகுர்த்த நாளில் சுபவேலையில் அதன் வேர்ப் பகுதியில் சிறு குழி எடுத்து வலம் புரி சங்கை கிழக்கு முகமாக புதைத்துவிட வேண்டும். பின்பு வாழை மரத்தின் வேர்பகுதியில் சங்கு இருக்கும் இடத்தில் தினம் சிறிது பாலை ஊற்றி நாற்பத்தியைந்து (45) நாட்கள் வாழைமரத்திற்கு இஷ்ட தெய்வத்தை நினைத்து தூப தீபம் காட்டி பூஜித்து வரவேண்டும், பின்பு ஒரு முகுர்த்த நாளில் சுப வேலையில் சங்கை எடுத்து மூன்று வித அபிஷேகங்கள் செய்து தூப தீபம் காட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தோமானால். நாம் வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறும், குடும்பம் சுபிக்ஷ்ம் பெருகும், பணம் வீன் விரையம் ஆகாது, தெய்வகுறைகள் விலகும், குள விருத்தி அடையும்.
10. பிள்ளைவரம் பெற
வாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து அந்த மரம் வாழை குலை தள்ளுவதற்க்காக முளைவிடும் வேலையில் ஒரு சுபனாளில் சுபவேலையில் வாழை மரத்தின் வடக்கு திசை உள்ள வேர்பகுதியில் சிறு குழி எடுத்து மூன்று அங்குளம் உள்ள ஒரு வலம்புரி சங்கை வடக்கு திசை நோக்கினார் போல் குழியினுல் வைத்து பசும்பல் ஊற்றி குழியை மூடிவிட வேண்டும்...

மஞ்சளின் மகிமையும் முக்கியத்துவமும்:

மஞ்சளின் மகிமையும் முக்கியத்துவமும்:
மனிதனின் குடும்ப வாழ்க்கைக்கு உப்பும் மஞ்சளும் மிக அவசியமான ஒன்றாகும். ஆண்களுக்கு உப்பும்,பெண்களுக்கு மஞ்சளும் பலம் தரும்.பெண்களின் அடக்க சக்திக்கும் மனவலிமைக்கும் மஞ்சள்தான் காரணம்.
மஞ்சளில்கறிமஞ்சள்,பொன்
குறட்டுமஞ்சள்,கடுக்காய் மஞ்சள், பழுக்காய் மஞ்சள், குட மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மர மஞ்சள், காட்டு மஞ்சள், குரங்கு மஞ்சள், பலா மஞ்சள், காஞ்சிரத்தின் மஞ்சள், நாக மஞ்சள் என பல வகைகள் உண்டு.
சுத்தமில்லாத பெண்களின் தொப்புள் வழியாக கெட்ட ஆவிகள் உடலுக்குள் நுழைந்துவிடும்.பிறகு அந்த பெண்ணுடன் சூட்சுமமாக உடலுறவில் ஈடுபடும். கணவனுடன் எதற்கெடுத்தாலும் சண்டை போட வைக்கும்.இது பல்லாயிரக் கணக்கான வருடங்களாக நிகழ்ந்துவரும் ஒரு நிகழ்வு ஆகும்.
தீய ஆவிகள் சாந்தி முகூர்த்தத்தின்போது படுக்கை அறைக்குள் வராமலிருக்க மணமகனுக்கும் மணமகளுக்கும் மஞ்சள்காப்புகட்டுகின்றனர் மணமேடைகளில் இருக்கும்போது மஞ்சள் தோய்த்த ஆடைகளை உடுத்துகின்றனர். திருமாங்கல்யக்கயிறும் மஞ்சள்தான்.
மஞ்சள் குங்குமம் என்பது மஞ்சள்பொடி, எலுமிச்சைசாறு, குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம், பசுநெய்போட்டுத் தயார்செய்வது. இது நெற்றியில் வடு ஏற்படுத்தாது.
எவ்வளவு உயர்ந்த படிப்பு படித்திருந்தாலும் வளமான செல்வங்கள் இருந்தாலும் கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாட்டுக்குக் காரணம் பெண்கள் மஞ்சள் தேய்த்துக்குளிக்காததும்,அசைவ உணவு சாப்பிடுவதாலும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.மேற்கூறிய காரணங்களால் பெண்களின் உடலில் எதிர்ப்புக்கதிர்வீச்சுகள் கூடுதலாகி பெண்களுக்கே உண்டான வசீகரசக்தி மற்றும் ஆகர்ஷணசக்தி குறைகிறது.(தமிழ்நாட்டில் தெருவுக்கு சில முத்தழகுகள் இருப்பதன் காரணம்புரிகிறதா? தோற்றத்தில் பெண்ணாகவும், நடவடிக்கைகளில் ஆணாகவும் இருப்பதற்கு முக்கிய காரணம் இதுதான்)
மஞ்சள் பூசி குளிக்காத பெண்களின் கணவன்மார்களுக்கு நரம்பு தளர்ச்சியும், ஆண்மைக் குறைவும் உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. காரணம், பெண்களுக்கு மூன்று மடங்கு உஷ்ணம் அவர்கள் உடலில் இயற்கையாக உள்ளது தான்.
ஒன்று... உணவு சீரணமாவதற்கும், இரண்டு ... மாதவிலக்கு ஆவதற்கும், மூன்று ... கருத்தரிப்பதற்கும் என்று இந்த உஷ்ணத்தை இயற்கையே பெண்களின் உடலில் உருவாக்கி வைத்துள்ளது.
கணவனும், மனைவியும் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது, மனைவி உடலில் உள்ள அதிகப்படியான உஷ்ணம் கணவனின் உடலுக்கு கடத்தப்படுகிறது. இதனால், அந்த கணவனுக்கு நரம்பு தளர்ச்சியும், ஆண்மைக் குறைவும் உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
பெண்கள் மஞ்சள் பூசி குளிக்கும்போது அவர்களது உடலில் உள்ள அதிகப்படியான உஷ்ணம் கட்டுப்படுத்தப்படுகிறது.
அவர்கள், கணவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும்போது, அவர்களது உடல் வெப்பம் கணவனது உடலுக்கு அதிகம் கடத்தப்படாது.
அதனால், கணவனுக்கு ஆண்மைக் குறைவு, நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள் ஏற்படுவது தவிர்க்க படுகிறது.
இயற்கையான மஞ்சள்பட்டுத்துணியில் மின்சார சக்தி உள்ளது.இரண்டு கைகளுக்கிடையில் ஒரு சிறிய மஞ்சள் பட்டுக் கைக்குட்டையை வைத்து என்ன மந்திரம் ஜபித்தாலும் அம்மந்திரத்தை ஈர்த்துக்கொள்ளும் சக்தி அக்கைக்குட்டைக்கு உண்டு.மேலும் மேலும் உள்ளங்கைக்கிடையில் வைத்து மந்திரங்களை ஜெபித்து சக்தியூட்டிப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் நமக்குப் பாதுகாப்பு.மேற்படி மந்திரங்கள் உருவேற்றியமஞ்சள்பட்டு
கைக்குட்டையை நீரில் நனைக்ககூடாது.துவைக்ககூடாது.
வேறு எந்த வகையிலும் சலவை செய்யக்கூடாது.செய்தால் மந்திரசக்தி போய்விடும்.
பெண்கள் மஞ்சள் அரைத்து உடலெங்கும் பூசி நீராடுவது நல்லது.இதனால், அவர்களுக்கு உடலில் காணும் காந்தல்,தூக்கமின்மை போய்விடும்.மேலும் உடல் சுத்தமடையும்.முகத்தில் களை வரும்.
குழந்தைகள் கறுப்பாக இருந்தாலும்மஞ்சள் பூசிக்குளிக்க வைத்தால் அவர்களின் மேனி பொன்னிறமாக பளபளப்படையும்.