Thursday, 14 September 2017

உங்கள் குல தெய்வத்தை நீங்கள் வசிக்கும வீட்டிற்குள் அழைக்க எளிய வழி உண்டு

உங்கள் குல தெய்வத்தை நீங்கள் வசிக்கும வீட்டிற்குள் அழைக்க எளிய வழி உண்டு ;*
*மஞ்சள், மண், சந்தணம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி - இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து, ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் மையத்திற்கு மேல் சுவரில் ஆணி அடித்து அதில் முடிந்து வைத்த துணியை ஆணியில் மாட்டி பத்தி சூடம் காண்பித்து வந்தால் ஒரு வாரத்தில் நம்முடைய குலதெய்வம் வீட்டிற்குள் வரும்.
வெட்டிவேர் சிறிதளவு, பச்சை கற்பூரம் சிறிதளவு, ஏலக்காய் சிறிதளவு, பன்னீர் - இவை அனைத்தையும் ஒரு கலச செம்பில் போட்டு பன்னீர் எந்த அளவோ அதே அளவு தண்ணீர் ஊற்றி, கலச சொம்பை சுற்றி நூல் சுற்ற தெரிந்தவர்கள் சுற்றலாம். நூல் சுற்ற தெரியாதவர்கள் பட்டு துணியை சுற்றி விடலாம் (துணிக்கடையில் கலசத்திற்கு சுற்றும் பட்டு துணி என்று கேட்டால் கிடைக்கும்).
பூஜையறையில் ஒரு பலகையை வைத்து, அதில் வாழை இலை வைத்து அதில் பச்சரிசி பரப்பி அதன் மேல் கலச செம்பை வைத்து அதன்மேல் வாழைப்பூவை வைத்து (நுனி பகுதி மேல் நோக்கி இருக்க வேண்டும்.)
வாழைப்பூவுக்கும் கலசத்திற்கும் இடையில் மாவிலை அல்லது வெற்றிலை சுற்றி வைத்து அதன்மேல் வாழைப்பூவை வைக்கவும்.
வில்வ இலை அல்லது ஊமத்தம் பூ (கிராமங்களில் சிறுவர்கள் ரேடியோ பூ என்று சொல்வார்கள்) அர்ச்சனை செய்யவும். வாழைப்பூ மூன்று நாட்கள் வரை தாங்கும். பூஜை மூன்று நாட்களே போதும். மேலும் தொடர்ந்து செய்ய விரும்புவர்கள் வாழைப்பூவை மட்டும் மாற்றினால் போதுமானது. பூஜை முடிந்ததும் பச்சரிசியை சமையல் செய்தும், வாழைப்பூவை வடை செய்தும் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
கலசத்தில் உள்ளவற்றை வீட்டில் தெளித்துவிட்டும், குளிக்கும் தண்ணீரில் விட்டு குளித்துவிடவும்.

பீஷ்மர், இறப்பதற்குமுன் இறுதியாக‌ போதித்த‌ ராஜ தருமங்கள்.

பீஷ்மர், இறப்பதற்குமுன் இறுதியாக‌ போதித்த‌ ராஜ தருமங்கள்.
அர்ச்சுனனால் அம்பு படுக்கையில் வீழ்த்த‍ப்பட்ட‍ பீஷ்மர், தான் இறப்ப‍தற்கு முன்பு சொன்ன‍ தருமங் கள்
தருமர், கண்ணனையும் பீஷ்மரையும் வணங்கி விட்டுத் தம் சந்தேகங்களை, அம்பு படுக்கையில் வீழ்த்த‍ப்பட்ட‍ பீஷ்மரிடம் கேட்கத்தொடங்கினார்..
‘ராஜநீதியில் எல்லாத் தருமங்களும் அடங்கியுள் ளன. ராஜநீீதி தவறுமானால் உலகம் துன்புறும் ஆகவே இந்த ராஜ தருமங்களை எனக்கு விரிவா க எடுத்துரைக்க வேண்டும்’ என்றார்.
பீஷ்மர், அதன்படி ராஜதருமங்களைக் கூறத் தொ டங்கினார்..
‘நாடாளும் மன்னன் எப்போதும் முயற்சியுடன் இருக்க வேண்டும். முயற்சி இல்லாதவனுக்குத் தெய்வத்தின்
உதவி கிடைக்காது. வண்டிக்கு இரு சக்கரங்களைப் போல வாழ்க் கைக்கு இவ்விரண்டும் தேவை. இவ்விரண்டில் முயற்சியே மேலா னது. ஒருவேளை உன் முயற்சி வீணாய்ப்போனாலும் அது குறித்து வருந்தக்கூடாது. எப்போதும் விடாமுயற்சி என்பது அரசர்களின் மிகப் பெரிய நீதியாகும். “முயற்சியற்ற மன்னனையும்..வேதம் ஓத வெளியே செல்லாத வே தியனையும் பாம்பு எலிகளை விழுங்குவது போல இப்பூமி விழுங்கிவிடும்” என்று சுக்கிராச்சாரியார் கூறியிரு க்கிறார்.
ராஜ தருமத்தில் இரட்சண தருமம் என ஒன்றை அரசன் கவனிக்க வேண்டும்..இந்த இரட்சண தருமத்தை அரச தருமங்களுள் வெண் ணெய் போன்றது எனப் பிரகஸ்பதியும், சுக்கிரரு ம், விசாலாட்சாரும், பர த்வாஜரும், கௌரசிரசு ம், இந்திரனும் போற்றி யுள்ளனர். இந்த இரட்ச ண தருமம் நிறைவேறு ம் வகையைக் கூறுகி றேன்.
பொறாமையின்மை,யுக்தியால் வரி வசூலித்தல், உபாயமின்றி வரி வாங்காமை,நல்லவர்களை அணைத்துச் செல்வது ,சூரத்தனம், சுறு சுறுப்பு, உண்மை,குடிமக்களின் நன்மை, நேராகவும். கபடமாக வும் பகைவர் பலம் பெறாமல் பார்த்துக் கொள்வது, பழுதான கட்டிட ங்க ளைப் பழுது பார்ப்பது, காலத்திற்கேற்ப உடல் தண்டனை. பொருள் தண்டனை விதிப்பது, படைகளை மகிழ்விப்பது,செயலில் சோர் வின்மை, கருவூலத்தைப் பெருகச் செய்வது,நகரைப் பாதுகாப்பது, காவற்காரரிடம் நம்பிக்கை வைக்காமலிருத்தல், நண்பர் .பகைவர் நடுநிலையாளர் இவர்களைப் பகுத்தறிதல், வேலைக்காரரைப் ப கைவரிடம் சேராதிருக்குமாறு செய்தல், நகரை வலம் வந்து நேரா கப் பார்வையிடுவது, துன்புற்றோர்க்கு ஆறுதல் கூறுவது, பகைவ ரை அலட்சியப் படுத்தாமை, இழிந்த செயல்களை விலக்குதல், நியாயத்துடன் பொருந்திய விடாமுயற்சி ஆகிய இக்குணங்கள் இரட்சண தருமங்களாகும்.
இந்திரன் விடாமுயற்சியால் தான் அமுதத்தைப் பெற்று அசுர ர்களைக்கொன்று இவ்வுலகிலு ம் தேவர் உலகிலும் பெரும்புகழ் பெற்றான். முயற்சியால் சிறந்த வன் கல்வியில் சிறந்த பண்டித னை விட மேலானவன்.அரசன் அறிவுடையவனாக இருந்தாலு ம் அவனிடம் முயற்சியில்லை எ னில் அவன் பகைவரால் வெல் லப்படுவான். அர சன் மிக்க பலமுடையவனாக இருந்தாலும்..பகை சிறிதென்று அல ட்சியமாக இருக்கக் கூடாது.நெருப்புச் சிறிதாயினு ம் சுடும்..நஞ்சு கொஞ்சமாக இருந்தாலும் கொல்லும் இவற்றை யெ ல்லாம் கவன த்தில் கொண்டு ஆளும் அரசன் இறந்த பிறகும் புகழப்படுவான்.
உன் செயல் அனைத்தும் சத்திய த்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். தவத்தோர்க்கு எப்ப டிச் சத்தியம் முதற்பொருளாக இருக்கிறதோ அப்படி அதுவே அரசர்க்கும் முதற்பொருளாகு ம். நற்குணமும், நல்லொழுக்க மும், புலனடக்கமும், தெளிவு ம், தானமும் உள்ள அரசனை விட்டு ராஜ்யலட்சுமி விலக மாட்டாள்..
தருமரே! வெளியிடத்தகாத அரசாங்க ரகசியங்களைத் தவிர மற்ற வற்றில் உண்மை பேச வேண்டும்..எப்போதும் அரசன் சாந்த குணம் கொண்டவனாக இருக்கக் கூடாது.எப்போதும் சாந்த குணம் கொ ண்ட அரசனை உலகம் மதிக்காது மீறி நடக்கும்..யானையின் தலை யில் மாவுத்தன் ஏறுவது போலத் தாழ்ந்த மனிதனும் பொறுமை உள்ள அரசனை அவமதிக்கும் செயலில் ஈடுபடுவான்.அதற்காக அர சன் எப்போதும் கடுமையாகவும் நடந்து கொள்ளக் கூடாது. கடுமை யான அரசனிடம் மக்கள் அன்பு பாராட்ட மாட்டார்கள்.ஆதலால் அர சன் எந்தெந்த நேரத்தில் எப்படி எப்படி நடக்க வேண்டுமோ அந்த ந்த நேரத்தில் அப்படி அப்படி நடந்து கொள்ள வேண்டும்.அதாவது அதி கத் தட்பமும் அதிக வெப்பமும் இல்லா வசந்த காலத்துச் சூரியனிப் போல இருக்க வேண்டும்.
மேலோரிடம் பணிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.இது பொது விதி. ஆயினும் மேலோர் தவறிழைத்தால் அவர்களையும் தண்டிக் கத் தயங்கக் கூடாது.மகரிஷி சுக்கிராச்சாரியார் இது சம்மந்தமாகச் சொன்னதை நினைவில் கொள்ள வேண்டும்..போர்க்களத்தில் தன து தருமத்தை மீறி அந்தணன் ஆயுதம் ஏந்திப் போர் புரிவானாயின் அரசன் அந்த அந்தணனை ஆயுதத்தால் தண்டிக்க வேண்டும்.. அரச தருமம் அனைத்துத் தருமத்தை விடச் சிறந்தது. அரசாங்கத்திற்குத் தீங்கு இழைப்போர் நண்பராக இருந்தாலும்..குருவாக இருந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும்.
அரசன் பதினெட்டுக் குற்றங்களை விலக்க வேண்டும்..இவற்றில் வேட்டை, சொக்கட்டான், பகல் உறக்கம், பிறரை நிந்தித்தல், பெண் மயக்கம்,மதம், வீண் பாட்டு,கூத்து, வாத்தியங்கள்,குடி ஆகிய இப்பத்து ம் காமத்தால் உண்டாவன .தெரியா த குற்றத்தை வெளிப்படுத்துவது, குற்றமற்றவனைத் தண்டிப்பது, வ ஞ்சனையாக ஒருவனைக்கொலை செய்வது,பிறர் புகழ்கண்டு பொறா மை கொள்வது,பிறர் குணங்களை க் குற்றமாகக் கூறுவது,பிறர் பொ ருளைக் கவர்ந்துகொள்வது ,கடுஞ் சொல் கூறுவது,கடுமையான தண் டனை வழங்கு வது. ஆகிய எட்டும் சினத்தால் வருவன.அரசன் இவற்றை அறவே விலக்க வேண்டும்.
அரசன் எப்போதும் கர்ப்பிணியின் தருமத்தில் இருக்க வேண்டும். கர்ப்பிணி தன் மனதிற்கும், நாவிற்கும் சுவையான உணவு உண்ணா மல்..கர்ப்பத்தை வளர்க்கத் தக்க வழியில் இருப்பதுபோல , அரசனு ம் தனக்கு வேண்டும் என்ற செயலைத் தள்ளிவிட்டு உலகுக்கு நன் மை பயக்கும் தரும வழியில் செல்ல வேண்டும்..தைரியமாக நியா யமான தண்ட நீதியைச் செலுத்த வேண்டும்..அப்படி நடந்துக் கொ ண்டால் யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.
அரசன் வேலைக்காரருடன் பரிகாசமான வார்த்தைகள் பேசக்கூடா து. பரிகாசமாகப் பேசும் மன்னனை ஏவலர்கள் அவமதிப்பார்கள். அரசனின் உத்தரவை மீறி நடப்பார்கள்..ரகசியத்தைக் கேட்பார்கள். அத்துடன் நில்லாது அதனைப் பறை சாற்றுவார்கள்.லஞ்சம் வாங்கி அரச காரியத்தைக் கெடுத்து விடு வார்கள். அரசன் உத்தரவு எனப் பொ ய்ச் செய்திகளை பரப்புவர்.அரசன் எ திரில் அநாகரிகமாக நடந்துக் கொ ள்வர்.நான் சொன்னால் சொன்னபடி அரசன் நடப்பான் என ஆணவத்துட ன் உரைப்பர். ஆகவே வேலைக்கார ர்களிடம் விழிப்பாக இருக்க வேண் டும்.
அரசன் எப்போதும் அமைச்சர்களுட ன் செய்யும் ஆலோசனைகளைப் பிறர் அறியாவண்ணம் மறைவாகச் செய்யவேண்டும். காலையில் அறத்திலும்..மாலையில் பொருளிலு ம், முன்னிரவில் இன்பத்தி லும், பின்னிரவில் தெய்வ சிந்தனையி லும் ஈடுபட வேண்டும். அரச ன் நான்கு வருணத்தாரின் தர்மங்களை யும் காக்க வேண்டும். எல் லோரையும் நம்பி விடக் கூடாது.நம்பத் தக்கவர்களை மட்டுமே நம் ப வேண்டும்.அவர்களிடமும் அளவு கடந்த நம்பிக்கை கூடாது.
ஓதுவிக்காத ஆசிரியன், ஓதாத ரித்விக், பாதுகாவாத மன்னன், விரு ப்பம் இல்லாதவற்றைக் கூறு ம் மனைவி, கிராமத்திலேயே இருக்க விரும்பும் இடையன், காட்டிலேயே இருக்க விரும் பும் நாவிதன் ஆகிய இந்த அறுவரையும் கடலில் உடை ந்த கப்பலைப்போல தள்ளிவி ட வேண்டும் என பிராசேதச மனு கூறியுள்ளார்.
நாட்டை நன்கு பாதுகாப்பதை விட மேலான ராஜ தர்மம் வேறேதும் இல்லை.’ எனக் கூறி முடித்தார் பீஷ்மர்.அவர் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த வியாசர்,கண்ணன்,சாத்யகி ஆகியோர் மகிழ்ந்தனர்.
அர்ச்சுனனால் அம்பு படுக்கையில் வீழ்த்த‍ப்பட்ட‍ பீஷ்மர், தான் இறப்ப‍தற்கு முன்பு சொன்ன‍ தருமங்கள்
தருமர், கண்ணனையும், பீஷ்மரையும் வணங்கிவிட்டுத் தம் சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினார்..
‘ராஜநீதியில் எல்லாத் தருமங்களும் அடங்கியுள்ளன.ராஜநீீதி தவறுமானால் உலகம் துன்புறும். ஆகவே இந்த
ராஜ தருமங்களை எனக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும்’ என்றார்.
பீஷ்மர்..அதன்படி ராஜதருமங்களைக் கூறத் தொடங்கினார்..
‘நாடாளும் மன்னன் எப்போதும் முயற்சியுடன் இருக்க வேண்டும். முயற்சி இல்லாதவனுக்குத் தெய்வத்தின் உதவி கிடைக்காது. வண் டிக்கு இரு சக்கரங்களைப் போல வாழ்க்கைக்கு இவ்விரண்டும் தே வை. இவ்விரண்டில் முயற்சியே மேலானது.ஒருவேளை உன் முய ற்சி வீணாய்ப்போனாலும் அது குறித்து வருந்தக்கூடாது.எப்போதும் விடாமுயற்சி என்பது அரசர்களின் மிகப் பெரிய நீதியாகும். “முயற் சியற்ற மன்னனையும்..வேதம் ஓத வெளியே செல்லாத வேதியனை யும் பாம்பு எலிகளை விழுங்குவது போல இப்பூமி விழுங்கிவிடும்” என்று சுக்கிராச்சாரியார் கூறியிருக்கிறார்.
ராஜ தருமத்தில் இரட்சண தருமம் என ஒன்றை அரசன் கவனிக்க வேண்டும். இந்த இரட்சண தருமத்தை அரச தருமங்களுள் வெண்ணெய் போன்றது எனப் பிரகஸ்ப தியும், சுக்கிரரும், விசாலாட்சா ரும், பரத்வாஜரும், கௌரசிரசும், இந்திரனும் போற்றியுள்ளனர். இந்த இரட் சண தருமம் நிறைவேறும் வகையைக் கூறுகிறேன்…
பொறாமையின்மை,யுக்தியால் வரி வசூலித்தல், உபாய மின்றி வரி வாங்காமை,நல்லவர்களை அணைத்துச் செல்வது, சூர த்தனம், சுறுசுறுப்பு, உண்மை,குடிமக்களின் நன்மை, நேராகவும். கபடமாக வும் பகைவர் பலம் பெறாமல் பார்த்துக் கொள்வது, பழு தான கட்டி டங்களைப் பழுது பார்ப்பது, காலத்திற்கேற்ப உடல் தண் டனை. பொருள் தண்டனை விதிப்பது, படைகளை மகிழ்விப்பது, செயலில் சோர்வின்மை,கருவூலத்தைப் பெருகச் செய்வது,நகரைப் பாதுகாப்பது, காவற்காரரிடம் நம்பிக்கை வைக்காமலிருத்தல், நண்பர். பகைவர். நடுநிலையாளர் இவர்களைப் பகுத்தறிதல், வே லைக்காரரைப் பகைவரிடம் சேராதிருக்குமாறு செய்தல்,நகரை வலம் வந்து நேராகப் பார்வையிடுவது, துன்புற்றோர்க்கு ஆறுதல் கூறு வது, பகைவரை அலட்சியப் படுத்தாமை, இழிந்த செயல்களை விலக்குதல், நியாயத்துடன் பொரு ந்திய விடாமுயற்சி ஆகிய இக்கு ணங்கள் இரட்சண தருமங்களாகு ம்.
இந்திரன் விடாமுயற்சியால்தான் அமுதத்தைப் பெற்று அசுரர்களை க் கொன்று இவ்வுலகிலும். தேவர் உலகிலும் பெரும் புகழ் பெற்றான். முயற்சியால் சிறந்தவன் கல்வியி ல் சிறந்த பண்டிதனைவிட மேலா னவன். அரசன் அறிவுடையவனாக இருந்தாலும். அவனிடம் முயற்சி யில்லை எனில் அவன் பகைவரால் வெல்லப்படுவான். அரசன் மிக்க பலமுடையவனாக இருந்தாலும்..பகை சிறிதென்று அலட்சியமாக இருக்கக் கூடாது.நெருப்புச் சிறிதாயினும் சுடும். நஞ்சு கொஞ்சமாக இருந்தாலும் கொல்லும்..இவற்றையெல்லாம் கவனத்தில் கொண் டு ஆளும் அரசன் இறந்த பிறகும் புகழப்ப டுவான்.
உன் செயல் அனைத்தும் சத்தியத்தின் அடிப்படையில் இருக்க வே ண்டும். தவத்தோர்க்கு எப்படிச் சத்தியம் முதற் பொருளாக இருக்கி றதோ அப்படி அதுவே அரசர்க்கும் முதற் பொருளாகும். நற்குணமு ம், நல்லொழுக்கமும், புலனடக்கமும், தெளிவும், தானமும் உள்ள அரசனை விட்டு ராஜ்யலட்சுமி விலக மாட்டாள்..
தருமரே! வெளியிடத்தகாத அரசாங்க ரகசியங்களைத் தவிர மற்ற வற்றில் உண்மை பேச வேண்டும்..எப்போதும் அரசன் சாந்த குணம் கொண்டவனாக இருக்கக் கூடாது.எப்போதும் சாந்த குணம் கொ ண்ட அரசனை உலகம் மதிக் காது மீறி நடக்கும்.யானையின் தலை யில் மாவுத்தன் ஏறுவது போலத் தாழ்ந்த மனிதனும் பொ றுமை உள்ள அரசனை அவமதி க்கும் செயலில் ஈடுபடுவான். அதற்காக அரசன் எப்போதும் கடுமையாகவும் நடந்து கொள் ளக் கூடாது. கடுமையான அரச னிடம் மக்கள் அன்பு பாராட்ட மாட்டார் கள்.ஆதலால் அரசன் எந் தெந்த நேரத்தில் எப்படி எப்படி நடக்க வேண்டுமோ. அந்தந்த நேரத் தில் அப்படி அப்படி நடந்து கொள்ள வேண்டும். அதாவது அதிகத் தட்பமும் அதிக வெப்பமும் இல்லா வசந்த காலத்துச் சூரியனிப் போல இருக்க வேண்டும்.
மேலோரிடம் பணிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.இது பொது விதி. ஆயினும் மேலோர் தவறிழை த்தால் அவர்களையும் தண்டிக் கத் தயங்கக் கூடாது. மகரிஷி சுக்கிராச் சாரியார் இது சம்மந்தமா கச் சொன்ன தை நினைவில் கொள்ள வேண்டும் . போர்க்களத்தில் தனது தருமத்தை மீறி அந்தணன் ஆயுதம் ஏந்திப்போர் புரிவானாயி ன் அரசன் அந்த அந்தண னை ஆயுதத்தால் தண்டிக்க வேண்டு ம். அரச தருமம் அனைத்துத் தருமத் தை விடச் சிறந்தது. அரசாங்கத்தி ற்கு த் தீங்கு இழைப்போர் நண்பராக இரு ந்தாலும்..குருவாக இருந்தாலும் அவ ர்களைக் கொல்ல வேண்டும்.
அரசன் பதினெட்டுக் குற்றங்களை விலக்க வேண்டும்..இவற்றில் வேட் டை, சொக்கட்டான்,பகல் உறக்கம், பிறரை நிந்தித்தல்,பெண் மயக்கம், மதம், வீண் பாட்டு,கூத்து, வாத்தியங் கள், குடி ஆகிய இப் பத்தும் காமத்தால் உண்டாவன .தெரியாத குற்றத்தை வெளிப்படுத்துவது, குற்றமற்றவனை த் தண்டிப்பது,வஞ்சனையாக ஒருவ னைக் கொலை செய்வது,பிறர் புகழ் கண்டு பொறாமை கொள்வது,பிறர் குணங்களைக் குற்றமாகக் கூறுவது, பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வது ,கடுஞ்சொல் கூறுவது,கடுமையான தண்டனை வழங்கு வது .ஆ கிய எட்டும் சினத்தால் வருவன.அரசன் இவற்றை அறவே விலக்க வேண்டும்.
அரசன் எப்போதும் கர்ப்பிணியின் தருமத்தில் இருக்க வேண்டும். கர்ப்பிணி தன் மனதிற்கும், நாவிற்கும் சுவையான உணவு உண்ணா மல்..கர்ப்பத்தை வளர்க்கத் தக்க வழியில் இருப்பதுபோல, அரசனு ம் தனக்கு வேண்டும் என்ற செயலைத் தள்ளிவிட்டு உலகுக் கு நன்மை பயக்கும் தரும வழியில் செல்ல வேண்டும்..தைரியமாக நியாயமான தண்ட நீதியைச் செலுத்த வேண்டும்..அப்படி நடந்துக் கொண்டால் யாரும் குறை சொல்ல மாட்டார் கள்.
அரசன் வேலைக்காரருடன் பரிகாசமான வார் த்தைகள் பேசக் கூடாது. பரிகாசமாகப் பேசும் மன்னனை ஏவலர்கள் அவமதிப்பார் கள். அரசனின் உத்தரவை மீறி நடப்பார்கள்..ரகசியத்தைக் கேட்பா ர்கள். அத்துடன் நில்லாது அதனைப் பறை சாற்றுவார்கள்.லஞ்சம் வாங்கி அரச காரியத்தைக் கெடுத்து விடுவார்கள்.அரசன் உத்தரவு எனப் பொய்ச் செய்திகளை பரப்புவர்.அரசன் எதிரில் அநாகரிகமாக நடந்துக் கொள்வர்.நான் சொன்னால் சொன்னபடி அரசன் நடப்பான் என ஆணவத்துடன் உரைப்பர்..ஆகவே வேலைக்காரர்களிடம் விழி ப்பாக இருக்க வேண்டும்.
அரசன் எப்போதும் அமைச்சர்களுடன் செய்யும் ஆலோசனைகளை ப் பிறர் அறியாவண்ணம் மறைவாகச் செய்ய வேண்டும். காலையி ல் அறத்திலும்..மாலையில் பொருளிலும், முன்னிரவில் இன்பத்தி லும், பின்னிரவில் தெய்வ சிந்தனையிலும் ஈடுபட வேண்டும். அரச ன் நான்கு வருணத்தாரின் தர்மங்களையும் காக்க வேண்டும். எல் லோரையும் நம்பி விடக் கூடாது.நம்பத் தக்கவர்களை மட்டுமே நம்ப வேண்டும்.அவர்களிடமும் அளவு கடந்த நம்பிக்கை கூடாது.
ஓதுவிக்காத ஆசிரியன், ஓதாத ரித்விக், பாதுகாவாத மன்னன், விருப்பம் இல்லாதவற்றைக் கூறும் மனைவி, கிராமத்திலேயே இருக்க விரும்பும் இடையன்,காட்டிலேயே இருக்க விரும்பும் நாவி தன் ஆகிய இந்த அறுவரையும் கடலில் உடைந் த கப்பலைப் போல தள்ளிவிட வே ண்டும் என பிராசேதச மனு கூறியு ள்ளார்.
நாட்டை நன்கு பாதுகாப்பதை விட மேலான ராஜ தர்மம் வேறேதும் இல்லை.’ எனக் கூறி முடித்தார் பீஷ்மர்.அவர் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த வியாசர்,கண்ணன்,சாத்யகி ஆகியோர் மகிழ்ந்தனர்

சனிபகவானுக்கு எள்ளுப்பொட்டலம் எதற்கு?

சனிபகவானுக்கு எள்ளுப்பொட்டலம் எதற்கு?
ஒருவர் சனிதிசை நடக்கும் பொழுது நியாயம் தீர்க்கப்படுகின்றார்..அந்த திசையில் ஒருவரிடம் மிக அதிகமாக தீயவை போராடும்.. அதில் முக்கியமானது நாக்கு.. வார்த்தைகளினால் சங்கடங்கள் நிறைய ஏற்படும்..இதிலிருந்து விடுபட என்ன செய்யலாம்.. நிறைய பாவம் செய்துவிட்ட ஒருவர் எள்ளு பொட்டலத்தை வாங்கி தலையை சுற்றி அக்னியில் போட்டு விட்டால்.. சனீச்வரன் மகிழ்ந்து உங்கள் பாவங்களை விலக்கிவிடுவாரா?பாவங்கள் அதிகரிப்பது முக்கியமாக 5 தீய குணங்கள் மூலம்தான் காமம்.. கோபம்..பேராசை..பற்று.. அகங்காரம்.. இவையினுடைய போராட்டம் சனிதிசையில் அதிகமாக வரும் காரணம் பாவ கணக்கு ஏற்பட்டால்தான் அதைசீக்கிரம் அனுபவிக்கவும் வேண்டிய நிலை ஏற்படும்.. சனி என்றால் இந்த 5 தீய குணங்களின் மொத்த உருவம்.ஈஸ்வரன் என்றால் பாதுகாக்க கூடியவர் என்று அர்த்தம்.. சனி ஈஸ்வரன் என்றால் தீய குணங்களில் இருந்து பாதுகாப்பளிப்பவர் என்று அர்த்தம்.. இந்த நேரத்தில் ஈஸ்வரனை நினைத்து மனதில் அவரை..ஒரு ஜோதியாக நினைக்க அந்த ஜோதியில் அணைத்து தீய குணங்களும் சாம்பலாகிவிடும்..இந்த தீய குணங்கள் ஒற்றுமையை குலைக்ககூடியது..எனவே மனதில்ஒற்றுமையில்லாமல் சமாதானம் இல்லாமல் செய்பவை இந்த 5 பெரும் தீய குணங்கள்.. நம்மிடம் இருக்கும் இந்த 5 தீயவற்றையும்..5 எழுத்து நமசிவாயத்திடம் மனதில் உறுதி ஏற்றுக்கொண்டு ஒப்படைத்து விடவேண்டும்.சிவஜோதியில் இவை அனைத்தும் பஸ்பமாகிவிடும்.பிறகு மனதால் கூட இந்த தீய குணங்களை தொடமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துகொள்ளவேண்டும் இதனால் ஈஸ்வரன் மகிழ்ந்து சனியை உங்கள் வாழ்கையிலிருந்து சதா காலத்திற்கும் விலக்கிவிடுவார்..இந்த தீயகுணங்கள் முதலில் ஒற்றுமையை மனதில் குலைக்கும்.. அடுத்து உறவுகளிடம்..அடுத்து நட்பு மேலும் சம்பந்தத்தில் வருபவர்களிடம் ஒட்டு மொத்தமாக ஒற்றுமையை குலைத்து நிம்மதி இழக்க செய்துவிடும்..எனவே ஒற்றுமையை வலியுறுத்தி சனியை விலக்கும் ஈஸ்வர பகவான் அவருடைய வாகனமாக காக்கை போல் ஒற்றுமையாய் இருங்கள் அப்பொழுது தீயகுணங்கள் உங்களை ஒன்றும் செய்யாது என்று தன்னுடைய வாகனமாக காகத்தை காண்பித்து அறிவுறுத்துகின்றார்.ஒற்றுமையே பலம்..ஓன்று கூடினால் உண்டு நன்மை.. நீங்களும் ஈஸ்வரனுக்கு இந்த 5 தீய குணங்களையும் அர்ப்பணித்து சனியின் பிடியிலிருந்து விடுபட விரும்புகின்றீர்களா அருகில் உள்ள பிரம்மாகுமாரிகள் நிலையத்தை அணுகி பயன் பெறுங்கள்.. வாழ்த்துக்கள்.. ஓம்சாந்தி...

பரிகாரம் என்றால் உண்மையில் என்னவென்று தெரியாதவர்களுக்காக இந்த கதை!

பரிகாரம் என்றால் உண்மையில் என்னவென்று தெரியாதவர்களுக்காக இந்த கதை!
ஜோதிடர் சொன்ன
"எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை.
எதுவும் நடக்கலே..
இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே…” –
பல நேரங்களில் ஜோதிட ஆலோசனை களின் பேரிலும் அல்லது தோஷங்களுக் காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது.
பரிகாரம் தொடர்பான குட்டி கதை.
ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார்.
நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது.
அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது.
மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி,
வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பாணத்தை செலுத்தினான்.
அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து
“ஐயோ… அம்மா”
என்ற குரல் கேட்டது.
ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே…
யாரையோ தவறுதலாக கொன்று விட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான்.
அங்கு சென்று பார்த்தால் பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான்.
“இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்து விட்டதே”என்று பதைபதைத்த அரசன், உடனே காவலாளிகளை கூப்பிட்டு, “இவன் பெற்றோர் அருகே தான் எங்காவது இருக்க வேண்டும்.
உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.
வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர்.
கடைசியில் ஒரு விறகுவெட்டி தம்பதியினரை அழைத்து வந்தனர்.
“இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்” என்று மன்னனிடம் கூறினார்கள்.
மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி, “என்னை மன்னித்து விடுங்கள்.
நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்லவில்லை.
அறியாமல் நடந்த தவறு இது.
போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணி விட்டேன்….”
தான் சொன்னதைக் கேட்டு அவர்கள் சமாதானாக வில்லை என்று யூகித்துக் கொண்டான்.
அடுத்த நொடி கைதட்டி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.
அருகே நின்று கொண்டிருந்த அமைச்சரிடம், இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான்.
தட்டுக்கள் வைக்கப்பட்ட பிறகு அதில் ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான்.
பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி, அதை மற்றொரு தட்டில் வைத்தான்.
“மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகி விட்டேன்.
நான் தண்டிக்கப் படவேண்டியவன்.
பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டு விடுகிறேன்.
நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் இது தான்.
இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன.
அவற்றை எடுத்துக் கொண்டு என்னை மன்னியுங்கள்.
அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக் கொள்ளுங்கள்..”
என்று தனது கிரீடத்தை கழற்றி மந்திரியிடம் கொடுத்து இந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்.
உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி பிரதானிகளும் நடப்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றனர்.
அந்த விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது?
மக்களுக்கும் மகாராணியாருக்கும் என்ன பதில் சொல்வது…
செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.
சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விறகு வெட்டி பேச ஆரம்பித்தான்….
“ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற்காசுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது மன்னரை கொல்ல வேண்டும்… அப்படித்தானே…?
நான் எதைச் செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர் கள் சரி தானே?
நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல… என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்..?
“ஐய்யய்யோ
அப்படியென்றால் இவன் மன்னரை கொல்லப் போகிறான் போலிருக்கிறதே
எல்லாரும் வெடவெடத்து போனார்கள்.
விறகுவெட்டி தொடர்ந்தான்…
“நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை.
அவர் அளிக்கும் பொன் பொருளையும் விரும்பவில்லை.
நான் விரும்பியது எதுவோ அது கிடைத்துவிட்டது.
தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம் வருந்தவேண்டும் என்று விரும்பினேன்.
அவரோ வருந்திக் கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மை யாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்ய துணிந்துவிட்டார்.
அது ஒன்றே எனக்கு போதும்.
மன்னரை தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப் போவதில்லை.
ஆனால், இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும்.
நான் அப்படி செய்தால் என் மகனின் ஆன்மாவே என்னை மன்னிக்காது.
அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டால் என் மகனின் உயிருக்கு நான் விலைபேசியது போலாகிவிடும்.
மன்னர் தான் செய்த தவறுக்கு உளப்பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது…
எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று கூறி தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் வழியே போய்விட்டான் விறகுவெட்டி.
ஒரு விறகுவெட்டிக்கு இப்படி ஒரு பெருந் தன்மையா?
இப்படி ஒரு ஞானமா என்று வியந்து போனார்கள் அனைவரும்.
இந்த கதை கூறும் நீதி.
அந்த மன்னன் தான் நாம்.
நாம் செய்யும் பாவங்கள் தான் அந்த கொலை.
அந்த விறகுவெட்டி தான் இறைவன்.
இப்போது புரிகிறதா எப்படிப்பட்ட மனதுடன் பரிகாரம் செய்யவேண்டும் என்று.
பெரும் பாவத்தை செய்து பரிகாரம் செய்தால் போச்சு என்று ஆணவத்தால் பணத்தாலோ, ஆடம்பர யாகங்களாலோ, ஆண்டவனுக்கு வெள்ளி தங்க ஆபரணங்களை செலுத்தினாலும் சரி, அர்ச்சகரையோ, அல்லது அந்த ஆலயத்தை சார்ந்தவரை வேண்டுமானால் திருப்தி படுத்தலாம்,
ஆண்டவனை ஒரு நொடி கூட திரும்பி பார்க்க கூட வைக்க முடியாது.
ஆனால்,
இந்த கதையில் வரும் மன்னன் நிலையில் நின்று,
ஆண்டவா,
மனதுக்குள் வேறு எந்த சிந்தனையு மின்றி நீங்கள் செய்த தவறை, நினைத்து,
அறியாமல் நடந்த தவறை எண்ணி வருந்தி மனமுறுகி, இனி எக்காலத்திலும் இது போல் நிகழாவண்ணம் நான் பார்த்துக் கொள்கிறேன்.
இந்த ஒரு முறை மன்னித்து விடு !
என உளமுருகி மன்றாடி கேளுங்கள்.
ஆண்டவன் முன் நீங்கள் கண்
மூடி மனம் வருந்தி வேண்டும் போது ஆண்டவன் உங்களை கண்திறந்து பார்ப்பான்.
கருணை புரிவான். நீங்கள் இதை உணர்வு பூர்வமாக பெற்று விடுவீர்கள்.
இப்படி செய்யும் பரிகாரங்கள் தான் பலனளிக்கும்.
ஒரு பரிகாரத்தை எதற்கு செய்கிறோம் என்றே தெரியாமல் அதை இன்று பலர் செய்வது தான் வேடிக்கை.
ஆனால், நாம் என்ன நினைத்து பாவமன்னிப்பு கேட்கிறோம்,
அதற்கு ஈடாக என்ன பிராயச்சித்தம் செய்கிறோம்
என்பது இங்கே மிகவும் முக்கியம்.
நீங்கள் எந்திரத்தனமாக செய்யும் எந்த பரிகாரமும் பலன் தரவே தராது.
நீங்கள் எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் சரி…
எத்தனை லட்சங்களுக்கு திருப்பணிகள் செய்தாலும் சரி
செய்த பாவத்திற்கு மனம் திருந்தி கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டாலொழிய உங்களுக்கு பாவமன்னிப்பு பரிகாரம் என்பது கிடையாது.
" ஒரு சாதுவிடம் அந்த ஊர் முக்கியஸ்தர்கள் சிலர், நாங்கள் வட இந்திய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளில் நீராடி எங்கள் பாவங்களை போக்க வேண்டி செல்ல உள்ளோம்.
தாங்களும் எங்களுடன் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என கூற,
சாதுவோ நீங்கள் சென்று வாருங்கள் என கூறி,
ஒரு பாகற்காயை அவர்களிடம் கொடுத்து நீங்கள் எந்தெந்த புண்ணிய நதிகளில் நீராடுகிறீர்களோ, அப்போது இந்த பாகற்காயையும் நனைத்து எடுத்து வாருங்கள் என்றார்.
வந்தவர்களுக்கோ வாழ்த்தி அனுப்புவார் என எண்ணி வந்தோம், இவரோ பாகற்காயை தருகிறார். ஏதோ காரணம் இருக்கும் என எண்ணி வாங்கிக் கொண்டு சென்றனர்.
புண்ணிய நீராடி சில நாட்கள் கழித்து சாதுவிடம் வந்து தாங்கள் கொடுத்த பாகற்காயை எல்லா புண்ணிய நதிகளில் நனைத்து எடுத்து வந்துள்ளோம்,
எங்களை போன்றே இந்த பாகற்காயும் மிகவும் புண்ணியம் படைத்தது என கூறினர்
சாதுவோ தனது சீடரை அழைத்து இந்த காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வா என கூற,
அந்த பாகற்காய் துண்டுகளில் ஒன்றை சாது எடுத்துக் கொள்ள மீதியை மற்றவர்களிடம் நீட்ட அவர்களும் எடுத்து வாயில் போட்ட வேகத்தில் ஒரே கசப்பு என தரையில் துப்பினர்.

அப்போது சாது, புண்ணிய நதிகளில் நீராடிய பாகற்காயின் தன்மை எப்படி
மாறவில்லையோ
அது போன்றது தான் உங்கள் புனித நீராடலும் "
மனம் வருந்தாமல், சிறு நெருடல், உறுத்தல் கூட இல்லாமல் செய்யும் எந்த பரிகாரமும் பாகற்காயை போன்றே தன்மை
மாறாது.
அடுத்த முறை என்ன பரிகாரம் செய்தாலும், நாம் செய்த குற்றத்திற்கு பாவத்திற்கு பிராயச்சித்த மாகத் தான் இதை செய்கிறோம் என்று உணர்ந்து கடந்த கால முன்ஜென்ம தவறுக்கு வருந்தி கண்ணீர் விட்டு பாவமன்னிப்பு கேட்கும் ஒருவர் எந்த மனநிலையில் இருப்பாரோ அதே மனநிலையில் தான் ஒருவர் பரிகாரம் செய்யவேண்டும்.
மேற்கூறிய மன்னன் அந்த விறகுவெட்டி முன்பு தன்னை ஒப்படைத்த மனநிலையில் இருந்து பரிகாரம் செய்து பாருங்கள்…
உடனடி பலன் நிச்சயம்

Comments

காகமும், ஆன்மீகமும்

காகமும், ஆன்மீகமும் ...........
காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.!
1.அதிகாலையில் எழுந்துகரைதல்.
2.உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல்.
3.உணவு உண்ணும் போதே சுற்றும் முற்றும் பார்த்தல்.
4.பிறர் காணாமல் ஜோடி சேர்ந்து இணைதல்.
5.மாலையிலும் குளித்தல்,
பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாகக்கொண்டவை.
6. தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காக்கைகளும் ஒன்று கூடி கரையும் தன்மையையும் காணலாம்.
இது அஞ்சலி செய்வதற்குச்சமமாக கருதப்படுகிறது….
மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள்தான்..
ஆனால் மெல்ல,
மெல்ல இதை நாமே பெரிது
படுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது… !!
காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..
இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….தெரியவில்லை!.. ஆனால்,
உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள்,
வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..
செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.
தீராத கடன் தொல்லைகள், புத்திர
சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான
பலன்களையும், உங்கள் நியாயமான
அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்
– மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்
வழிபாடுதான். உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள்
உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான
சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான
ஜீவ ராசி – காக்கை இனம்.
குடும்ப ஒற்றுமைவேண்டும் என்று நினைக்கும்சுமங்கலிப்பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.
தன்உடன்பிறந்தவர்கள்ஆரோக்கியமாகவும்மகிழ்ச்சியாகவும்இருக்க,
தங்களிடம்பாசம்உள்ளவர்களாகத்திகழஇந்தக்காணுப்பிடிபூஜையைச்செய்கிறார்கள்.
திறந்தவெளியில்தரையைத்தூய்மையாகமெழுகிக்கோலமிடுவார்கள்.
அங்கேவாழைஇலையைப்பரப்பிஅதில்வண்ணவண்ணசித்ரான்னங்களைஐந்து,
ஏழு,
ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடிஅளவுஎடுத்துவைத்து,
காக்கைகளை “கா…கா…’
என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.
அவர்களின்அழைப்பினைஏற்றுகாக்கைகளும்பறந்துவரும்.
அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.
வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.
அப்படிச்சுவைக்கும்போதுஅந்தக்காக்கைகள் “கா…
கா…’
என்றுகூவிதன்கூட்டத்தினரைஅடிக்கடிஅழைக்கும்.
அந்தக்காக்கைகள்உணவினைச்சாப்பிட்டுச்சென்றதும்,
அந்தவாழை இலையில் பொரி,
பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,
வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.
இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.
மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)
காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.
இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திப்படுத்தியதாவும் கருதுகிறார்கள்.
காக்கை சனிபகவானின்வாகனம்.
காக்கைக்குஉணவுஅளிப்பதுசனிக்குமகிழ்ச்சிதருமாம்.
காக்கைகளில் நூபூரம்,
பரிமளம், மணிக்காக்கை,
அண்டங்காக்கை எனசிலவகைகள்உண்டு.
காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப்பறவைகளிடமும் காணமுடியாது.
எமதர்மராஜன் காக்கைவடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.
அதனால்காக்கைக்கு உணவு அளித்தால் எமன்மகிழ்வாராம்.
எமனும்சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால்,
காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.தந்திரமான குணம் கொண்ட காகம்
யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்லசெய்திகள் வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே காகம் நம்வீட்டின் முன் உள்ள “கா…கா…’
என்று பலமுறை குரல் கொடுக்கும்.
இந்தப்பழக்கம் இன்றும் உண்டு.
காலையில் நாம் எழுவதற்கு முன்,
காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.
நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்லபலன் உண்டு. வீடு தேடிகாகங்கள் வந்துகரைந்தால் அதற்கு உடனே உணவிடவேண்டும்.
காக்கைவழிபாடுசெய்வதால்சனிபகவான்,
எமன்மற்றும்முன்னோர்களின்ஆசீர்வாதத்தினைப்பெற்றுமகிழ்வுடன் வாழலாம் என்று ஆன்மீகம் கூறினாலும் மனிதனை அண்டி பிழைக்கும் ஒர் உயிரினம் நாகரீக வளர்ச்சியில் நாம் கவனிக்க தவறி அந்த இனம் அழியாமல் பாதுகாக்கபட வேண்டும

இந்துமதத்தின் அதி அற்புதம் வாய்ந்த நான்கு வேதங்களின் சாராம்சங்கள்

இந்துமதத்தின் அதி அற்புதம் வாய்ந்த நான்கு வேதங்களின் சாராம்சங்கள்
1. ரிக் வேதம்
ரிக்’ என்றால் போற்றுதல் எனப் பொருள்படும். ரிக்வேதத்தை அடிப்படையாகக் கொண்டே மற்ற மூன்று வேதங்களும், இந்துதர்ம நூல்களும் அமைக்கப்பட்டுள்ளன. வேதங்களுக்கெல்லாம் வேதமாக ரிக்வேதம், அழிவற்ற பேரறிவு பெட்டகமாக அமைந்துள்ளது.
2. சாம வேதம்
சாம வேதத்தை (The Veda of Song) என ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர். அதாவது பாடல் வேதம். ரிக்வேத மந்திரங்களை எல்லாம் பாடல் வடிவில் வடிவமைத்துக் காட்டும் வேதம் இது.சாமவேதத்தின் மறைபொருள் அதன் இனிமையான இசைவடிவில் ஒளிந்துள்ளது
”ரிக்வேதம் சொல் என்றால், சாமவேதம் பாடல். ரிக்வேதம் மெய்ஞானம் என்றால், சாமவேதம் மெய்யுணர்வு. ரிக்வேதம் மனைவி என்றால், சாமவேதம் கணவன்.” என உபநிடதம் குறிக்கின்றது. சாமவேதம் ஆன்மீக அறிவையும் பக்தியின் வலிமையும் பற்றி கூறுகின்றது.
3. யஜுர் வேதம்
யஜுர் வேதம் சடங்குகளின் வேதம் என கூறப்படுகின்றது. பல்வேறு சடங்குகளைப் பற்றிய அறிவுரைகளை இந்த வேதம் நமக்கு அளிக்கின்றது. உள்ளுணர்வுகளை தட்டியெழுப்பவும், மனத்தை பரிசுத்தமாக்கவும் தேவையான வழிகளை இந்த வேதம் மிக துல்லியமாக வரையறுத்துக் காட்டுகின்றது.
யஜுர்வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்கள் ரிக்வேத தெய்வங்கள் ஆவர். பல்வேறு வகையான வேள்விகளையும் அதன் செயல்முறைகளையும் யஜுர்வேதம் விளக்குகின்றது.
4 .அதர்வண வேதம்
இதுவே நான்காவது வேதமாகும். ரிக்வேத மந்திரங்களில் பலவற்றை அதர்வண வேதம் கொண்டுள்ளது. மேலும், சில தாந்திரீக மந்திரங்களையும், தடையிற்குட்பட்ட சடங்காராய்ச்சிகளையும் உடைய வேதம் இது.
அதர்வண வேதத்தில் அடங்கியிருக்கும் தந்திரங்களை முந்தைய முனிவர்கள் பின்பற்றி பல நன்மைகளைச் செய்துள்ளனர்.
இராவணன் நான்குவேதங்களையும் கரைத்துக் குடித்தவான் . அவன் அதர்வண வேத ஞானத்தை தவறான நோக்கத்தில் உபயோகித்தான். அதனால் அவனுக்கு அவனே அழிவைத் தேடிக் கொண்டான்.

ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 உண்மைகள்

ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 உண்மைகள்
முன்னோர்கள் சொல்லியிருக்கும் ஆன்மிக அறிவுரை ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஆயிரம் ஆண்டுக் கால அனுபவம் மட்டுமல்ல; அறிவியலும் கலந்திருக்கிறது.
அவற்றை ஆராய்ந்து பார்த்தால், நம் முன்னோர்களின் மதிநுட்பம் உங்களை வியக்க வைக்கும். ஒரு சோற்றுப் பதமாக கீழே சில உதாரணங்கள்...
1. விசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும்.
மங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் -டை- ஆக்ஸைடு மற்றும் வியர்வை நெடி அதிகமாக இருக்கும்.
இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு.
மாசுபட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான் வாழை மரமும், மாவிலையும்.
அதனால்தான், இவற்றை விசேஷ நாட்களில் கட்டச் சொன்னார்கள் முன்னோர்கள்.
2. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ,விரதம் முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும்!
பொதுவாக, மாதத்துக்கு ஒருமுறையாவது, மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து, இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
அதே நேரம், திட உணவை உட்கொள்ளாமல் இருப்பதால், சிலருக்கு வயிற்றில் இருக்கும் அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு, புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
அதனைத் தடுக்க அகத்திக்கீரை அருமருந்து.
எனவேதான், ஏகாதசி விரதம் முடிக்கையில் அகத்திக்கீரையைச் சாப்பிடச் சொன்னார்கள்.
தவிர, அகத்திக்கீரையில் இரும்புச் சத்து அதிகம்.
விரதம் இருந்து களைத்துப் போன உடலுக்கு அது எனர்ஜி கொடுக்கும்.
3. வெள்ளி, செவ்வாய் வீடு முழுக்கச் சாம்பிராணிப் புகை போடவேண்டும்.
பொதுவாக வீட்டில் உற்பத்தியாகும் பூச்சித்தொல்லை, கொசுத் தொல்லை நீங்க நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே இது.
சாம்பிராணி மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும், கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது.
4. வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ வேண்டும்.
மஞ்சள் மிக நல்ல கிருமிநாசினி.
வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும் நம் கால்கள் முதலில் மிதிப்பது, நம் வாசல் நிலைப்படியைத்தான்.
அங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால், அது கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து, நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க வழிவகுக்கும்.
5. இடி இடிக்கும்போது, அர்ஜுனா…அர்ஜுனா என்று சத்தமாகச் சொல்லுங்கள்.
இடிச் சத்தம் பலமாக ஒலிக்கும்போது அது செவிப்பறையைத் தாக்கிக் கிழிக்கும் அபாயம் உண்டு.
அர்ஜுனா என்று கத்தும்போது வாய் அகலமாகத் திறப்பதால், ஒலியானது இரண்டு பக்கமாகவும் சென்று, செவிப்பறை கிழிவது, காது அடைத்துக்கொள்வது போன்ற பிரச்னைகளிலிருந்து நம்மைக் காக்கிறது.
6. நகத்தைக் கடித்தால் தரித்திரம்!
நகத்தைக் கடிக்கும்போது, நகத்தின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் வயிற்றுக்குச் சென்று நோய்த்தொற்றை உருவாக்கும்.
நகத் துணுக்குகளை விழுங்கி, அதனால் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
அதனால்தான், நகம் கடிப்பதைத் தரித்திரம் என்றார்கள் பெரியோர்.
7. உச்சி வெயில்ல கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.
உச்சிவெயில் படும் நேரங்களில், சூரியஒளி நேரடியாக கிணற்றில் விழுகிறது.
இதனால், திடீரென வேதிவினை நடைபெற்று, கிணற்றுக்குள் விஷவாயு உண்டாகலாம்.
அத்தருணம்,கிணற்றில் எட்டிப் பார்ப்பதால், மயக்கம் உண்டாகவோ, அதன் காரணமாக கிணற்றுக்குள் தவறி விழவோ வாய்ப்புண்டு.
8. வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.
நம் புவியின் மையப்பகுதியில் இருக்கும் காந்தவிசையானது வடக்கு – தெற்காகத்தான் இயங்குகிறது.
எனவே, வடதிசையில் தலை வைத்துப் படுக்கும்போது , காந்தவிசையால் நமது மூளையின் செயல்திறன் திறன் குறைய வாய்ப்புள்ளது.
9. கோயிலை விட, உயரமாக வீடு கட்டக் கூடாது.
பலத்த இடி இடிக்கும் கோயில் கோபுரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கலசங்கள், அந்த மின் அதிர்ச்சியை உள்வாங்கி, தரைக்குக் கடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், அந்தக் கோபுரத்துக்கோ சுற்றிலும் உள்ள வீடுகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.
எனவேதான், இன்றைய இடிதாங்கி அறிவியல் வசதி இல்லாத அக்காலத்தில், கோயிலை விட உயரமாகக் கட்டடம் கட்டவேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.
10. வீட்டு வாசலில் முருங்கை மரம் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.
மரங்களில் மிகவும் அடர்த்தியில்லாத மென்மையான கிளைகளைக் கொண்ட மரம் முருங்கை.
அதனால், வீட்டில் இருக்கும் குழந்தைகள் விளையாட்டாக அதில் ஏறி விளையாடினால், கிளை முறிந்து குழந்தைகள் கீழே விழுந்து காயம் பட்டுக்கொள்ள வாய்ப்புண்டு.
மேலும், கம்பளிப்பூச்சிகளின் புகலிடம் முருங்கை என்பதால், வீட்டுக்குள்ளும் கம்பளிப்பூச்சிகள் அதிகம் பரவும். திருச்சிற்றம்பலம்

*ஆன்மீக முதிர்ச்சி என்றால் என்ன?*

*ஆன்மீக முதிர்ச்சி என்றால் என்ன?*
1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது
2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது
3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்
4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.
7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.
8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.
9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
10. மன அமைதியை அடைதல்.
11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.

Saturday, 19 August 2017

ஆண்டியும் ஒன்று. அரசனும் ஒன்று

!!**ஸ்ரீ கிருஷ்ணர்**!!
"என் பக்தனுக்கு கிடைக்காத தரிசனம் உங்களுக்கு எதற்கு?” திரும்பி நின்ற கண்ணன்!!!
உடுப்பியில் பாலகிருஷ்ணனாய், நித்ய இளைஞனாய், நாம் எப்படி பார்க்கிறோமோ, அப்படியெல்லாம் காட்சியளிக்கும் ஸ்ரீகிருஷ்ணனை தரிசனம் செய்யலாம்.
உருவத்தை பார்ப்பவன் மனிதன். ஆனால் உள்ளத்தைப் பார்ப்பவன் இறைவன். அதனால்தான் ஆண்டவன் முன் அரசனும் ஆண்டியும் சமம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏழை பணக்காரன் என்கிற பேதமெல்லாம் பார்ப்பது மனிதன் தானே தவிர இறைவன் அல்ல என்பதை உலகிற்கு உணர்த்திய நிகழ்வு இது.
மற்ற கோவிலில் நேரே கர்ப்பகிரஹம் தெரிவது போல இங்கே தெரியாது. பிறைகளால் ஆன ஜன்னல் வழியே தான் கிருஷ்ணனைக் காணமுடியும்.
காரணம்: அங்கு மிகவும் பக்திமானான செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவன் இருக்கிறான். அவன் தினமும் வேளை தவறாமல் கிருஷ்ணனைச் சேவிப்பதில் மிகுந்த பிரியம் உள்ளவன். ஆனால் ஆசார சீலர்களோ செருப்பு தைக்கும் தொழிலாளி கோவிலுக்குள் வரக்கூடாது, கண்ணனை தரிசிக்கக் கூடாது என்று தடைவிதித்து விட்டனர். அவன் சற்று தொலைவில் நின்றபடியே கோவிலைப் பார்த்து அழுது கொண்டிருந்தானாம். ஒரு நாள் இரவு எல்லாரும் தரிசனம் தருகிற வாசல் இறுக்கமாக மூடப்பட -செருப்பு தைக்கும் தொழிலாளி நிற்கும் பக்கமாய் திரும்பி நின்ற கண்ணன் தன்னைச் சுற்றி சாளரத்தை அடைத்துக் கொண்டானாம்.
அதாவது “என் பக்தனுக்கு இல்லாத தரிசனம் உங்களுக்கும் கிடையாது. அவனைப் போலவே நீங்களும் ஜன்னல் வழியாய் என்னைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்பதைப் போல.
இன்றைக்கும் கூட அர்ச்சகர், ஆராதனை செய்பவர் மட்டுமே உள்ளே போய்வர வழி இருக்கிறது. மற்றவர்கள் எல்லாரும் வெளியில் இருந்துதான் தரிசனம் செய்யவேண்டும்.
இந்தச் செருப்பு தைக்கும் பக்தனுக்கு அவன் தரிசனம் செய்த இடத்திலேயே சிலை நிறுவியிருக்கிறார்கள்.
விஜயதசமி போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே மூலஸ்தானத்தின் கதவு திறக்கப்படுகிறது. இதன் அருகே உள்ள மற்றொரு வாசல் வழியாகத்தான் பூஜைசெய்யும் மடாதிபதிகள் செல்கின்றனர். கிருஷ்ணரை 9 துவாரங்கள் உள்ள பலகணி (ஜன்னல் போன்ற அமைப்பு) வழியாகத்தான் தரிசிக்க முடியும்.
வெள்ளியால் ஆன இந்த துவாரத்தை “நவக்கிரக துவாரம்’ என்கின்றனர். இதில் கிருஷ்ணரின் 24 வகையான உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆண்டியும் ஒன்று. அரசனும் ஒன்று.
இங்கே அணையாத அடுப்பு உண்டு. எப்பொழுதும் குறையாத அன்னம் உண்டு.
"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"

நீங்கள் என்று அழைக்கப்பட வேண்டியவர். அவரை ஒருமையில் நீ என்று அழைத்தால் கொன்றதற்குச் சமம் , தற்புகழ்ச்சி என்பது தற்கொலைசமம்

!! **ஹரே கிருஷ்ணா**!!
பாரதப் போரில் கர்ணனை கொல்வேன் என்று சபதம் பூண்ட அர்ருச்சுனன் கர்ணனை கொல்லாமல் பாசறைக்குத் திரும்பினான்.
உண்மை அறிந்ததும் அருச்சுனனைக் கோபமாகத் திட்டினார் தருமர். இவனை நம்பி போரை இழுத்துக் கொண்டோமே என்று நொந்து அருச்சுனன் வில்லைப் பழித்துக் கேலி பேசினார்.
"தன்வில்லை யார்பழித்தாலும் கொல்லுவேன்"
என்று சபதம் செய்திருந்த அருச்சுனன் வில்லை எடுத்துக் கொண்டு தருமரைக் கொலை செய்யத் துணிந்தான். ஆனால் பாசம் தடுத்தது.
"கண்ணா என் சபதப்படி தரும்ரைக் கொல்ல வேண்டும். ஆனால் அண்ணனைக் கொல்ல மனம் வரவில்லையே கொல்லவும் வேண்டும், ஆனால் தருமர் சாகவும் கூடாது. என்ன செய்வது என்று அருச்சுனன் கவலையுற்றான்.
அதற்கு மாயக் கண்ணன் கொல்லாமல் கொல்லலாம். சாகமல் சாகலாம் தெரியுமா? என்றான்.
தருமர் உன்னைவிடப்பெரியவர். பன்மையில், நீங்கள் என்று அழைக்கப்பட வேண்டியவர். அவரை ஒருமையில் நீ என்று அழைத்தால் கொன்றதற்குச் சமம் , என்றான் கண்ணன்.
நீங்கள் என்று பன்மையில் அழைக்க வேண்டிய தருமரை நீ என்று ஒருமையில் அழைத்துக் கொல்லாமல் கொன்ற அருச்சுனன், பெரியோரை அவமதித்த நான் இனி எப்படி உயிர்வாழ முடியும். எனவே தற்கொலை செய்து கொள்வேன் என்று வாளை உருவித் தற்கொலை செய்து கொள்ளப் போனான். நில் என்று தடுத்த கண்ணன், எப்படிதருமரைக் கொல்லாமல் கொன்றாயோ அப்படி உன்னைச் சாகாமல் சாகடித்துக் கொள் என்று சிரித்தான். எப்படி என்றான் அருச்சுனன். தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது தற்கொலைக்குச் சமம். நீயே உன்னைப் புகழ்ந்து கொள்.
தற்புகழ்ச்சி தற்கொலையாகி விடும் என்றான்.
பெரியவர்களை அவமதிப்பது ஒருமையில் பேசுவது கொலை.
தற்புகழ்ச்சி என்பது தற்கொலை.

Tuesday, 15 August 2017

நரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும்! இயற்கை ‘வயாகரா’ முருங்கைப்பூ !

நரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும்! இயற்கை ‘வயாகரா’ முருங்கைப்பூ !
எம்.மரிய பெல்சின்
முருங்கைப்பூ பால், முருங்கைப்பூ சூப், முருங்கைப்பூ சாதம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முருங்கை என்றதும் அதன் காய்களும் கீரைகளும் மட்டுமே நமக்குத் தெரியும். அதில் மருத்துவக் குணங்கள் இருப்பதாகச் சொல்லக்கேட்டு விதம்விதமாய் சமைத்து உண்டு ருசித்து ரசித்திருப்போம். ஆனால், முருங்கைப்பூவில் இருக்கும் சத்துகள் மட்டுமல்ல, அதில் இருக்கும் ரகசியங்கள் நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று! அதன் மகிமை அறிந்த ஒருவர் கவிதையாக வடித்துள்ளார்.
‘அவென்யூ அழகுபெறட்டுமே என்று
பூச்செடிகள் வளர்க்க...
அதில் தப்பி வளர்ந்தது முருங்கை ஒன்று!
அதை வெட்டவேண்டும் என
சொன்னபோது பூச்சொரிந்து நின்றது.
முருங்கைப்பூ பால்கூட்டும்
முளைத்த பிஞ்சுக்குழம்பும் ருசியோ ருசி!
பிரசவித்த அக்காவுக்கு
மருந்தாகக் கொடுக்கையில்
நானும் ருசித்து ரசித்தேன்!'
சிலாகித்து எழுதும் அளவுக்கு முருங்கைப்பூவில் அத்தனை சத்துகள் நிறைந்திருக்கின்றன.
முருங்கையின் பலன் பற்றி சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் பலன் பற்றி அறிந்ததாலேயே சித்தர்கள் முருங்கையை 'பிரம்ம விருட்சம்' என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை எங்கு பார்த்தாலும் பரவிக் காணப்படுகிறது முருங்கை!
வீடுகள் மற்றும் தோட்டங்களில் முருங்கை மரங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால் நம்மில் எத்தனைபேர் முருங்கைப்பூவை சமைத்துச் சாப்பிட்டிருப்போம்..? காரணம் அந்தப் பூக்களின் மருத்துவ குணம் பற்றி தெரியாதது மட்டுமல்ல... முருங்கைப்பூவை விட முருங்கைக்காயையே நாம் அதிகம் சமையலுக்குப் பயன்படுத்திப் பழகியிருக்கிறோம். முருங்கைப்பூக்களின் பயன் அறிந்து இனிமேலாவது அவற்றைச் சமைத்து ருசிப்போமா?
முருங்கைப் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி கடலூரைச் சேர்ந்த இயற்கை வைத்தியர் அன்னமேரி பாட்டி, “இன்றைக்கு பல்வேறு காரணங்களால் குழந்தையின்மைக் குறைபாடு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அந்தப் பிரச்னைக்கு மிகச் சிறந்த தீர்வாக அமைந்திருக்கிறது இந்த முருங்கைப்பூ. இதை `இயற்கையின் வயாகரா' என்று சொல்வார்கள்.
தாம்பத்யம்
இன்றைய அவசர யுகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு பகலாக ஓய்வின்றி உழைப்பது, கம்ப்யூட்டரே கதி என்று மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பது போன்றவற்றால் மனஅழுத்தம், மன உளைச்சல் ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. .
அதிக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக நரம்புகள் செயலிழந்து நரம்புத்தளர்ச்சி ஏற்படும். அந்த நேரங்களில் முருங்கைப்பூவை கஷாயம் வைத்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத்தளர்ச்சி சரியாகும்.
மேலும், பலருக்கு தாம்பத்ய உறவில் நாட்டம் இருப்பதில்லை. இதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து குடித்து வந்தால் தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும். முருங்கைப்பூவை காய வைத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து அதே ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும்.
முருங்கைப்பூ பால்
முருங்கைப்பூக்களுடன் பால், பாதாம் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு விந்து முந்துதல் பிரச்னை குறையும்.
முருங்கைப்பூக்களை உணவாகவோ மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் தாம்பத்யம் சிறக்கும். அரைக்கீரையுடன் அரைப் பங்கு முருங்கைப்பூ சேர்த்துக் கடைந்து சோற்றுடன் சாப்பிட்டு வரலாம்.
முருங்கைப்பூவை துவையல் செய்தும் சாப்பிடலாம். இப்படி ஏதோ ஒரு வகையில் முருங்கைப்பூக்களை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும்.
இதை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் சூடு தணியும். பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, மேக நோய்கள் போன்றவற்றையும் குணப்படுத்தும். மேலும், மாதவிலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, வயிற்றுவலி எனப் பல்வேறுவிதமான மனம், உடல் அவதிகளுக்கு ஆளாவார்கள். அப்போது முருங்கைப் பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் மனம் அமைதி பெறும். உடல் கோளாறுகளும் நீங்கும்.
பள்ளி, கல்லூரி பயிலும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் இருந்தால்தான் அவர்கள் நல்லமுறையில் தேர்ச்சி பெறமுடியும். ஆகவே குழந்தைகளுக்கு நினைவாற்றல் பெருகவும் முதியோருக்கு வரக்கூடிய மறதி நோயைத் தடுக்கவும், வந்த நோயை விரட்டவும் இது நல்ல மருந்தாகிறது. கைப்பிடி அளவு முருங்கைப்பூவை அரைத்து அல்லது பாலில் கலந்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை எனக் குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் நாம் எல்லோருமே கண்களுக்கு அதிக வேலை கொடுக்கிறோம். கம்ப்யூட்டரில் பணியாற்றுபவர்களுக்கு 40 வயதுக்குமேல் ஆகிவிட்டால் கண்ணாடி அணியாமல் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களால் பேப்பர்கூட படிக்க முடியாது.
அன்னமேரிவீடுகளில் இருப்பவர்கள் தொலைக்காட்சியே கதி என்று இருப்பதால் அவர்களுக்கும் விரைவில் கண்கள் வறண்டுபோதல், கண்ணிமைகளைச் சிமிட்டும் தன்மை குறைந்துபோவது, கண்களின்முன் மின்மினிப்பூச்சிகள் பறப்பது போன்ற தோற்றம் ஏற்படுதல், தலைவலி, பார்வை மங்கல் எனக் கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன. அத்தகைய சூழலில் முருங்கைப்பூவை நிழலில் உலர்த்தி பொடித்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பார்வைத்திறன் அதிகரிப்பதோடு கண்ணில் ஏற்படும் வெண்படலம் மாறி கண் கோளாறுகள் சரியாகும். பூக்களுடன் பசும்பால் சேர்த்துக் காய்ச்சி அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து பிரச்னைகள் நீங்கும்.
முருங்கைப்பூ பால்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முருங்கைப்பூ பால் அருந்தி வந்தால் உடல்நலக் கோளாறுகள் நீங்கும். இரண்டு கைப்பிடி முருங்கைப்பூவை 100 மி.லி பாலில் கொட்டி நன்றாக வெந்ததும் மசித்து, மூன்று ஏலக்காய், நான்கு பாதாம்பருப்பு பொடித்துப்போட்டு மேலும் 200 மி.லி பாலைச் சேர்த்து பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். முதலில் பச்சை வாசனை வீசும், குடித்துப் பழகினால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும்.
முருங்கைப்பூ சூப்
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத்தாளிக்க வேண்டும். அத்துடன் ஒன்றாகச் சேர்த்து அரைத்த தனியா, சீரகம், மிளகு மற்றும் சுக்கு, பூண்டு,வெங்காய கலவைகளைப் போட்டு லேசாக வதக்க வேண்டும். பிறகு அதில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கலக்கி பச்சை வாசனை போகுமளவு கொதிக்க விட வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய முருங்கைப்பூக்களைச் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். பூ நன்றாக வெந்ததும் இறக்கினால் சூடான சுவையான முருங்கைப்பூ சூப் தயார். விரும்பினால் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம். அடிக்கடி இதைச் செய்து குடித்து வந்தால் சளித்தொல்லைகள் நெருங்காது.
முருங்கைப்பூ சாதம்
பாசுமதி அரிசியை உதிரியாக வடித்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிது நெய் சேர்த்து உதிர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கிடையே இட்லித்தட்டில் முருங்கைப்பூக்களை வைத்து அரை வேக்காடாக வேக வைக்கவும். அதன்பிறகு சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் வெட்டிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சாதம், முருங்கைப்பூ சேர்த்துக் கலக்க வேண்டும். அத்துடன் சிறிது சிறிதாக நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்தால் சுவையான முருங்கைப்பூ சாதம் தயார். இது சத்தானது மட்டுமல்ல சுவையானதும்கூட!
முட்டைப் பொரியல்
வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய சீரகம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். அதைத்தொடர்ந்து நறுக்கிய பச்சை மிளகாய், கிள்ளிய கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும் காம்பு நீக்கி தண்ணீரில் அலசிய முருங்கைப்பூக்களைப் போட்டுக் கிளற வேண்டும். நன்கு வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து மூடி வைக்க வேண்டும். வெந்ததும் கிளறிவிட்டு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக் கிளறினால் முருங்கைப்பூ முட்டைப் பொரியல் தயார். சாப்பிடச் சுவையாக இருக்கும்.
ஆண்மை அதிகரிக்கும்
முருங்கைக் கீரை, முருங்கைப்பூ இரண்டையும் சம அளவு எடுத்து நறுக்கி, எண்ணெயிட்டு வதக்கி வறுத்த வேர்க்கடலையைப் பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்மைத் தன்மை அதிகரிக்கும். தாம்பத்யம் சிறக்கும். இதை வேக வைத்துக் கடைந்து குழம்பாகவும் செய்து சாப்பிடலாம்.” என்றார்.
இது மட்டுமல்ல... முருங்கைப்பூவின் மகிமையைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

நள்ளிரவில் சுதந்திரம் ஏன்.....?!

நள்ளிரவில் சுதந்திரம் ஏன்.....?!
மவுண்ட்பேட்டன் இந்தியாவிற்க்கு சுதந்திரம் வழங்க முடிவு செய்துவிட்டு இங்கிலாந்து பாராளமன்ற அனுமதியும் பெற்றுவிட்டார், இதனை பத்திரிகையாளர் மத்தியில் அறிவிக்கும் போது ஒரு நிருபர் என்ன தேதி (தினத்தில்)... சுதந்திரம் கொடுக்க நினைத்துள்ளீர்கள் என்று கேட்டார். அதுவரை அது பற்றி யோசித்திராத மவுண்ட்பேட்டனின் மனதில் உடனடியாக வந்த தேதி ஆகஸ்ட் 15.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை சேர்ந்த 1,50,000 வீரர்கள் கிழ்க்கு ஆசியா கடற்படை கமாண்டராக இருந்த மவுண்ட்பேட்டனிடம் 1945 ஆகஸ்ட் 15இல் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்) சரண்டைந்தனர். எனவே ஆகஸ்ட் 15 அவர் வாழ்நாளில் மறக்க முடியாது தேதி, அதனால் ஆகஸ்ட் 15 இல் இந்தியாவிற்க்கும் சுதந்திரம் கொடுக்க முடிவு செய்தார்.
இவர் இதனை அறிவித்தவுடன் இந்தியாவிலுள்ள நம்மவர்கள் அந்த ஆகஸ்டு 15-ம் நாள் அஷ்டமி தினம் என்றும், அன்று நாடு சுதந்திரம் பெற்றால் நாடு நலம் பெறுமா எனவும் ஐயப்பாடு கொண்டனர். 17-ம் தேதி வேண்டுமானால் சுதந்திரம் பெறுவோம்; இவ்வளவு நாள்கள் பொறுத்தோம் இன்னும் இரண்டு நாள்கள் பொறுக்க முடியாதா என அங்கலாய்த்தனர்.
ஐவஹர்லால் நேருவிடம் இதுபற்றி முறையிட்டனர். அவருக்கு அஷ்டமி-நவமி இவற்றில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் மற்றவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கில அரசை அணுகினார். சட்டம் இயற்றியாகிவிட்டது. இனிமாற்ற முடியாது என்று ஆங்கில அரசு மறுத்துவிட்டது. நம்மவர்கள் தீவிரமாக யோசித்தனர்.
ஆங்கிலேயர்களுக்கு புதியநாள் அதாவது மறுநாள் என்பது நள்ளிரவு 12 மணிக்கே தொடங்கிவிடுகிறது. ஆனால் நமக்கோ விடியற்காலை ஐந்து மணிக்குத்தான் தொடங்குகிறது. எனவே நள்ளிரவில் சுதந்திரம் வாங்கினால் ஆங்கில அரசுக்கு அது 15-ம் தேதியாகவும் நம்மவர்களுக்கு முக்கிய நாளாகவும் இருப்பதால் அஷ்டமி-நவமி பிரச்னை இல்லாது போகும் என்று நினைத்தனர். இதனால் தான் சுதந்திரத்தை பகலில் பெறாமல் நள்ளிரவில் பெற்றோம்.

அரசமரத்தின் சிறப்பு.....

ஆன்மிகமும் அறிவியலே....
அரசமரத்தின் சிறப்பு.....
அரச மரத்தடி விநாயகர் மட்டுமல்ல அரசமரமே சக்தி வாய்ந்தது தான்.
பெரியவர்கள் பஞ்சாயத்து பேசுவதற்கும் சிறியவர்கள் பம்பரம் விளையாடுவதற்கு
மட்டுமே அரசமர நிழல் பயன்படுவதாக நினைப்பது தவறு. சித்திரை, வைகாசி போன்ற
மாதங்களில் மதிய நேரம் அந்த நிழலில் இளைப்பாறினாலே தோல் சம்பந்தப்பட்ட
நோய்கள் வராது. இருக்கும் நோய் கூட வீரியம் குறையும்.
மருத்துவக் குணங்கள்:
அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவிற்கு மருத்துவ சக்தி பெற்றது. அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.
அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறது.
நம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்.
அதனால்தான், அரச, வேம்பு போன்றவைகளை பராமரிப்பது என்பது பரிகாரம் போன்றது என்று சொல்லியிருக்கிறார்கள். 4 அரச மரங்களை நட்டு அதற்கு கீழ் 4 பேர் உட்கார்ந்து மருத்துவ குணம் பெற்று உடல் நலம் தேறிச் செல்கிறார் என்றால், அந்தப் புண்ணியம் அந்த மரத்தை நட்டவரைப் போய்ச் சேரும்......
ராஜவிருட்சம்
அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன அதனாலேயே அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. ‘மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்’ என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறான். புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியா வில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் இந்தியாதான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.
போதிமரம்
அரசமரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான். அரசுநீழலிருந்தோன் என சூடாமணி நிகண்டு கடவுட் பெயர் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.
விஞ்ஞான உண்மை
அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது என்பது ஒரு நம்பிக்கை. இதன் காரணமாகவே “அரசினை நம்பி புருசனை கைவிட்டாள்” என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளளது. அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது
சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே. அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.
கருப்பை கோளாறு
அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
பிராணவாயு
நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர். இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் ஒன்றான அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

*வேப்பிலையின் பலன்கள்*

*வேப்பிலையின் பலன்கள்*
அழகை அதிகரிக்கும் வேப்பிலை
*குறிப்பு 1*
1.வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைக்கவும்.
2. அதிலிருந்து நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.
*குறிப்பு 2*
1. சருமத்தை சீர்செய்யவும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும்.
2. அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.
*குறிப்பு 3*
1. வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைக்கவும்
2. பின்பு, அதை அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும்.
இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.
*வேப்பிலையின் பலன்கள்*
1. மஞ்சளையும், வேப்ப இலைகளையும் ஒன்றாக சேர்க்கக் கூடாது. தனித்தனியாக அரைத்து உருண்டைகளாக விழுங்கி நீர் அருந்த வேண்டும்.
2. நம் ஒவ்வொருவர் வயிற்றிலும் எப்போதும் வயிறு தொடர்பான தொற்று நோய் இருந்துகொண்டே இருக்கும். இது நோயாக வெளிப்படாவிட்டாலும் உடலில் சக்தியை, தெம்பை குறைத்துக்கொண்டே வரும். தொற்றுநோய் வயிற்றில் இருக்கிறதென்றால், அதற்குக் காரணமான பாக்டீரியா கிருமிகளும் வயிற்றில் இருக்கும். இந்த கிருமிகளே உடலில் உள்ள சக்தியை இழுத்துக்கொண்டுவிடுகின்றன. விடியற்காலையில் சாப்பிடப்படும் வேப்பங்கொழுந்து உருண்டையும், மஞ்சள் உருண்டையும் இந்த கிருமிகளை அழித்துவிடுகின்றன.
3. சிலருக்கு உடலில் பலவித அலர்ஜிகள் ஏற்படும். அவை தோல் வியாதி, புழுதிக்கு அலர்ஜி என பல வடிவங்களில் உள்ளன. இதை அனைத்திற்கும் எளிய நிவாரணம், வேப்ப இலையை நன்கு அரைத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் ஊறி குளிக்க வேண்டும். அதோடு காலையில் வேப்பங்கொழுந்தை அரைத்து, உருண்டை செய்து, தேனில் நனைத்து விழுங்க வேண்டும். இதனால் உடலில் ஏற்படும் எந்தவித அலர்ஜியும் இல்லாமல் போய்விடும். இதை ஒவ்வொருவரும் அன்றாடம் வாழ்நாள் முழுவதும் செய்யலாம்.
4. கொழுந்து இலைகளில்தான் கசப்புத்தன்மை குறைவாக இருக்கும். அதற்கும் மீறி கசந்தால் தேனில் நனைத்து நாவில் படாமல் நேரடியாக தொண்டையில் போட்டு விழுங்கிவிடுங்கள். இதன் நன்மை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு கிடைக்கும் அதிக சக்தி, புத்துணர்ச்சி மூலம் உங்களுக்குப் புரிந்துவிடும்! வேப்ப இலையின் மருத்துவ குணங்களைக் கண்டு மேல்நாடுகள் வியக்கின்றன. உலகில் எந்த ஒரு தாவரத்துக்கும் இத்தனை மருத்துவ குணங்கள் இல்லை. வேப்ப இலைகளின் மருத்துவக் குணம் இப்போது உங்களுக்கும் புரிந்துவிட்டது இல்லையா? இனி தயக்கமென்ன? தினமும் காலையில் வேப்பங்கொழுந்தினை அரைத்துச் சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக, ஆனந்தமாக வாழ்வோம்!

** ஸ்வஸ்திக் **

** ஸ்வஸ்திக் **
வெற்றியைத் தேடி தருவது ஸ்வஸ்திக் சின்னமாகும்.விநாயகர் கைகளில் மங்கள சின்னமான ஸ்வஸ்திக் திகழ்கிறது. செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும்,இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக்.இதனை பூஜையறை வாசலில் கோலமாக இடுவர்.வீட்டு நிலையில் மஞ்சள் குங்குமம் கொண்டு இதை வரைவதுண்டு.
"ஸ்வஸ்திக்" என்றால் தடையற்ற நல்வாழ்வு என்பது பொருள்.இதிலுள்ள எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிக்கும்.8திசைகளிலும் நாம் தொடங்கும் செயல் எவ்வித தீங்கும் நேராமல் இறையருளுடன் இனிதே நிறைவேற வேண்டும் என்பது இதன் தாத்பரியம்.
வெற்றிக்கு எட்டுத்திசைகளிலும், நாம் தொடங்கும் செயல் எவ்வித தீங்கும் நேராமல் இறையருளுடன் இனிதே நிறைவேற வேண்டும் என்பது இதன் தாத்பர்யம். விஷ்ணுவின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம், ஸ்வஸ்திக் வடிவில் இருப்பதாகச் சொல்வதுண்டு. சூரிய வழிபாட்டிலும் இது இடம் பெற்றிருந்தது.
ஸ்வஸ்திக் கோலம் போடக்காரணம்
ஸ்வஸ்திக் சின்னத்தில் நடுவில் வைக்கப்படும் புள்ளி நம் ஆத்மா.வீட்டில் உள்ளவர் ஆத்மா அனைத்து திசைகளிலும் உள்ள தெய்வங்களை நோக்கி பிராத்தனை செய்து கொண்டே இருக்கட்டும் என்பதற்காகவே ஸ்வஸ்திக் கோலம் போடப்படுகிறது.
ஸ்வஸ்திக் நமக்கு எடுத்துக்காட்டுவது என்ன?
நான்கு வேதம் -----ரிக் ,யசுர் ,சாம ,அதர்வண
நான்கு திசை ----கிழக்கு,மேற்கு ,வடக்கு,தெற்கு
நான்கு யுகங்கள் ---சத்ய ,த்ரேதா ,துலாபார ,கலியுக
நான்கு ஜாதிகள் ---பிராமண,ஷத்ரிய ,வைஷ்ய ,சூத்திர
நான்கு யோகங்கள்---ஞான ,பக்தி,கர்ம ,ராஜ
நான்கு மூலங்கள் ---ஆகாயம்,வாயு,நீர்,நிலம்
வாழ்க்கையின் நான்கு பருவங்கள் ---குழந்தை,பிரம்மச்சரியம்,கிரஹஸ்தர்,சந்நியாசி
ஸ்வஸ்திக்,ஓம்,திரிசூலம் போன்றவற்றை வாசல் கதவின் உள்பக்கமோ,வெளிப்பக்கமோ ஒட்டி வைத்தால் அது வீட்டினுள் துஷ்டசக்தியை நுழையவிடாமல் காக்கும்.இந்த சின்னங்களை காலில் மிதிப்படாத இடங்களில் போடுவது நன்மை உண்டாகும்.
நன்மை தரக்கூடிய கோலங்களை பூஜையறையில் போட்டு பலன் பெறவேண்டும்.
உங்கள் மனதை சந்தோஷமாக வைத்து ,பிறரையும் சந்தோஷப்படுத்தி வாழ்வில் எல்லா வளங்களையும் பெற நான் இறைவனை வேண்டுகிறேன்.
உங்கள் கருத்தை தெரிவித்தால் எனக்கு இன்னும் எழுத தூண்டுகோலாக அமையும்.

*பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் திருமீயச்சூர் வரமுடியும்*

*பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் திருமீயச்சூர் வரமுடியும்*
**************************************
தமிழகத்தில் ஸ்ரீலலிதாம்பாள் எனும் திருநாமத்துடன் அம்பிகை குடியிருந்து அருள்பாலிக்கும் தலம் திருமீயச்சூர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது , இந்தத் தலத்துக்கு ஏகப்பட்ட பெருமைகள் உள்ளன. ஸ்ரீசனீஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின் அவதாரத் திருத்தலம் இது!
திருமீயச்சூர் தலத்துக்கு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என எங்கிருந்தெல்லாமோ ஏராளமான அன்பர்கள், தினமும் வந்தபடி இருக்கின்றனர். சிலிர்ப்பும் பக்தியும் பொங்க, தரிசித்துச் செல்கின்றனர். காரணம்… இந்தத் தலத்தின் நாயகி, ஸ்ரீலலிதாம்பாள்!
உலகின் எல்லா இடங்களில் இருந்தும், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, அவளை அனுதினமும் மனமுருகிப் பிரார்த்திப்பவர்கள் மிக மிக அதிகம்! அதனைப் பாராயணம் செய்தாலே, மன பாரமெல்லாம் போய்விடும். அப்பேர்ப்பட்ட, சக்தியும் சாந்நித்யமும் கொண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான திருத்தலம், திருமீயச்சூர்!
பண்டாசுரன் எனும் அரக்கனால், துன்பங்களுக்கு ஆளான தேவர்கள், ஈசனின் திருவடியைச் சரணடைந்து கதறினர். அரக்கனை அழிக்க, ஸ்ரீபார்வதியை ஸ்ரீலலிதையாக அவதரிக்கச் செய்தார் ஈசன். கடும் உக்கிரத்துடன் தோன்றிய ஸ்ரீலலிதை, சகஸ்ர கோடி வருடங்கள், அரக்கனுடன் யுத்தம் செய்தாள். இறுதியில் அவனை அழித்தொழித்தாள். ஆனாலும் அவளது உக்கிரம் தணியவில்லை.
இந்தக் கோபம், பூமிக்கும் மக்களுக்கும் நல்லதல்ல’ என்பதால், ‘ஸ்ரீபுரத்தில் தவம் செய்தால், உனது உக்கிரம் தணியும்’ என அருளினார் சிவபெருமான். இதையடுத்து ஸ்ரீலலிதை ஸ்ரீபுரத்துக்கு வந்தாள். அங்கே கடும் தவம் புரிந்தாள். அவளுக்குள்ளிருந்து ‘வாக் தேவதைகள்’ எட்டுப்பேர் வெளிவந்தனர். ஸ்ரீலலிதையைச் சுற்றி வட்டமாக நின்றனர். ஸ்ரீலலிதையின் கூந்தல், கண்கள், கன்னம், நெற்றி, திருப்பாதம் என அவளது அழகை வியந்து, பாடினர்.
‘அடடா… இத்தனை அழகா எனது கண்கள்? பிறகு ஏன் இவ்வளவு கொடூரமாகப் பார்க்கவேண்டும்?! என் கன்னமும் நெற்றியும் அழகு பொருந்தியிருக்கிறதா? அப்புறம் எதற்காக, முகத்தை உக்கிரமாக வைத்திருக்கவேண்டும்? நெடுநெடுவென, கரிய நிறத்தில் வளர்ந்திருக்கிறதாமே கூந்தல்? அந்தக் கூந்தலை தலைவிரி கோலமாகவா வைத்திருப்பது?!’ என யோசித்தாள்.
எட்டுத் தேவதைகளும் அந்த ஸ்தோத்திரத்தைப் பாடப்பாட… அவளது உக்கிரம் காணாமல் போனது. அவளுக்குள் சாந்தமும் கருணையும் பொங்கிப் பிரவாகித்தன! அதே தலத்தில் இருந்தபடி, அன்பர்களுக்கு அருட்கடாட்சத்தை அள்ளித்தர திருவுளம் கொண்டாள்.
இதோ… இன்றளவும், உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு, லலிதா சகஸ்ரநாமத்தை எவர் பாடினாலும், அவர்களது சகல தோஷங்களையும் போக்கி, சகல ஐஸ்வரியங் களைத் தந்து மகிழ்கிறாள். மகிழ்விக்கிறாள். இங்கே, ஸ்ரீசதாசிவ லிங்க பீடத்தில், ஸ்ரீசக்ரத்தில் நின்றபடி, அகில உலகையும் ஆட்சி செய்கிறாள், ஸ்ரீலலிதாம்பிகை!
வருடம் முழுவதும், இங்கே தேர்க்கூட்டம், திருவிழாக் கூட்டம்தான்! ஸ்ரீலலிதாம்பிகைக்கு அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம், வருடத்தில் மூன்று முறை நடைபெறுகிறது. நவராத்திரியில்… விஜயதசமியிலும், மாசி மாதத்தின் அஷ்டமி நாளிலும், வைகாசி – பௌர்ணமியின் போதும் அன்னப்பாவாடை சார்த்தும் வைபவத்தைக் காண, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண் பொங்கல், பட்சணங்கள், பழ வகைகள் என வைத்து, நெய்யை ஊற்றிக் குளம் போலாக்கிவிடுவார்கள். அம்பிகையின் சந்நிதிக்கு முன்னேயுள்ள அர்த்த மண்டபத்தில் இதனை வைத்திருக்க… குளம் போல் ததும்பியிருக்கும் நெய்யில், அம்பிகையின் திருவுருவம் பிரதிபலிக்கும் அழகே அழகு!
மகா பெரியவா, ‘’இது சாதாரண தலமல்ல; மிக உன்னதமான புண்ணிய க்ஷேத்திரம். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால்தான், இங்கு வரமுடியும்; அப்படி வந்து தரிசித்தீர்கள் என்றால், ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களைக் காப்பாள், ஸ்ரீலலிதாம்பிகை!’’ என அருளினாராம்!