Saturday, 30 May 2020

வாதநாராயண எண்ணெய்:

வாதநாராயண எண்ணெய்:

வாதநாராயணன் இலைச்சாறு ஒரு லிட்டர், மஞ்சள் கரிசாலை, குப்பைமேனி, வெற்றிலை இவற்றின் சாறு ஒவ்வொன்றும் ¼ லிட்டர், வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் இவை ஒவ்வொன்றும் ½ லிட்டர், சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், சீரகம், மஞ்சள் வகைக்கு 20 கிராம் தூள் செய்து கொள்ள வேண்டும்.

பசும்பால் ½ லிட்டர் சேர்த்து, அனைத்தையும் ஒன்றாக்கி, பதமாகக் காய்ச்சி, 21 எருக்கம் பூக்களை நசுக்கி எண்ணெய்யுடன் கலந்து, மேலும் கொதிக்க வைத்து, வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதனை மேற்பூச்சாகத் தடவிவர பக்கவாதம், பாரிசவாயு, உடல் இழுப்பு, உடல் வலி ஆகியவை குணமாகும்

Wednesday, 27 May 2020

நெய் பல அற்புதமான மருத்துவ குணங்கள்

நெய் பல அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதை கண்ட நம் முன்னோர்கள் அதை உயர் தரமான உணவுபொருளாகவும் மற்றும் பல்வேறு நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தினர்.தினந்தோறும் உணவில் சிறிது நெய் சேர்த்து சாப்பிடுவதால் மேற்கூறிய இரண்டு சக்திகளும் கிடைக்கப் பெற்று உடல் ஆரோக்கிய நிலை மேம்படுகிறது.
 
நெய்யில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. நெய்யில் சங்கிலி தொடர்பான கொழுப்பு அமிலங்கள் அதிகம்  நிறைந்திருக்கின்றன. இந்த கொழுப்பு அமிலங்களை உடலில் இருக்கும் கல்லீரல் நேரடியாக செரிமானம் செய்து, அவற்றை உடலுக்குத் தேவையான சக்தியாக  மாற்றுகிறது.
 
நெய்யில் கேஸ்ட்ரிக் அமிலங்கள் அதிகம் இருக்கிறது. நெய்யைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால், பசி உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. 
 
வயிற்றில் சேரக்கூடிய எத்தகைய உணவுகளை செரிக்க கூடிய, செரிமான அமிலங்கள் சமசீர் தன்மையை காக்கிறது. எனவே வயிறு மற்றும் குடல்களை வலுப்பெறச் செய்து உடல் நலத்தை மேம்படுத்துகிறது.
 
நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின்  நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய் படாமல் இருப்பார்கள்.
 
பசுநெய்யை ஹோமத்தில் விடும் போது, அதனால், காற்றில் உள்ள மாசு குறைகிறது. நெய் கலந்த அரிசியை ஹோமத்தில் போடுவதால், அதில் இருந்து அசிட்டிலின், எத்திலீன் ஆக்ஸைடு உள்ளிட்ட வாயுக்கள் உருவாகின்றன. இவை மனிதனுக்கு ஏற்படும் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, குடல் தொடர்பான நோய்கள் என  பல நோய்களை தீர்க்கும் சக்தி பெற்றுள்ளவையாக இருக்கின்றன.
 
தீக்காயம் பட்ட இடங்களில் தினமும் சுத்தமான பசு நெய்யை தடவி வருவதால் காயத்தில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சல் தன்மை குறைவதோடு, விரைவில்  தீக்காயங்கள் குணமாகி தீக்காயங்களால் ஏற்படும் அழுத்தமான தழும்புகள் உருவாவதையும் தடுக்கிறது.
 
உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும்

சந்திரன் இருக்கும் இடத்தின் பலன்

சந்திரன் இருக்கும் இடத்தின் பலன்                   1 இல் ஆரோக்கியம்,மன தெளிவு,சுகம்,பெண் அனுகூலம்.                         2 இல் காரிய தடை,பண விரயம்,மானக்கேடு.         3 இல் லாபம்,தைரியம், ஜெயம்.                                 4இல் ரோகபீதி,குழப்பம்,செயல் நட்டம், நீர் கண்டம்,தன விரயம்.                                 5 இல் சஞ்சலம் ,காரிய தோல்வி.                      6இல் சுகம், பண வரவு,வெற்றி.                     7 இல் பணவரவு,அரரோக்யம், போஜன சயன சுகம்.  8இல்சோர்வு,மன குழப்பம், கழகம்.        9இல் அச்சம், காரிய தடங்கல்.                    10இல் தொழில் சிறப்பு, நல்ல பலன்.             11இல் லாபம்,சுகம், ஊற்றர் நேசம்.         12இல் காரிய தன விரயம்.

*சரணாகதி* *நீயே..... கதி

*சரணாகதி* 

*நீயே..... கதி*

        பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர்.

 குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் படுத்திக்  கொண்டிருந்தனர். 

        ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன்  வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப் படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது.

        தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் பட்டனர். சிட்டுக்குருவி, பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது. “ கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டது.

        “ நீ சொல்லுவது எனக்குக் கேட்கிறது! ஆனால் இயற்கை விதிகளை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று பதில் சொன்னார் ஸ்ரீ கிருஷ்ணர்.

        “ எனக்குத் தெரிந்ததெல்லாம், நீ தான் எங்களைக் காப்பவர்! எங்களைக் காப்பதையும், அழிப்பதையும் உன் கையில் விட்டு விடுகிறேன்” 
என்றது குருவி!

   *"காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது”*- இது ஒன்றே ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன பதில்!

        குருவிக்கும், ஸ்ரீகிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்கள் அர்ஜுனனுக்கு விளங்கவே இல்லை.

        போருக்கு முன், ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம் தன் வில்லையும், அம்பையும் எடுத்துக் கொடுக்கச் சொன்னார்.

 அர்ஜுனனுக்கு ஆச்சர்யம்! போரில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லி, தனக்கு சாரதியாக மாறிய ஸ்ரீ கிருஷ்ணர் எதற்காக தன் வில்லையும், அம்பையும் கேட்கிறார் என்று புரிய வில்லை. 

 ஆனாலும் அவற்றை எடுத்து ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டான்.

        ஸ்ரீகிருஷ்ணர், ஒரு யானை மீது அம்பைத் தொடுத்து, அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை அறுத்து எறிந்தார். 

யானையைக் குறி வைத்து, அதன் மீது அம்பை எய்து, அதனைக் கொல்ல முடியாமல், அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை மட்டும் அறுத்து எறிந்த ஸ்ரீ கிருஷ்ணரைக் கிண்டலாகப் பார்த்தான் அர்ஜுனன்.

 ஸ்ரீகிருஷ்ணரை விட தான் வில் வித்தையில் சாமர்த்தியசாலி என்னும் எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டது!

 மனிதன் தானே!
 “நான் வேண்டுமானால் அம்பு எய்து, யானையை வீழ்த்தட்டுமா?” எனக் கேட்டான் அர்ஜுனன். ஒரு புன்முறுவலுடன் வில்லையும், அம்பையும், அர்ஜுனனிடம் கொடுத்து, பத்திரமாகத் தேருக்குள் வைக்கச் சொல்லி விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்!

        “பிறகு ஏன் யானை மீது அம்பை எய்தீர்கள்?” எனக்கேட்ட அர்ஜுனனிடம், “அப்பாவி சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்துப் போட்டதற்கு யானைக்கான தண்டனை இது” என்று மட்டும் சொன்னார் பகவான்!

 அர்ஜுனனுக்கு பகவான் சொன்னது எதுவும் விளங்க வில்லை!

        போர் நடந்து,  பாண்டவர்கள், 18-ம் நாள் யுத்தத்தில் வென்றும் விட்டனர்.

 அர்ஜுனனுடன் பரமாத்மா க்ருஷ்ணன் போர்க்களத்தை சுற்றி வருகிறார்! 

தான் முன்பு அறுத்து எறிந்த யானையின் மணிக்கருகில் வந்து நின்ற பகவான். 

ஹே அர்ஜுனா! "இந்த மணியைத் தூக்கி ஓரமாகப் போடுகிறாயா?” என்று கேட்கிறார்!

 “எத்தனையோ முக்கியக் காரியங்கள் இருக்கும் போது, இப்போது அறுந்து போய்க் கிடக்கும் இந்த மணி தான் பகவானுக்கு முக்கியமாகப் போய் விட்டதோ?” என்று எண்ணினாலும், அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னபடி, மணியைக் கையில் எடுத்தான்.

       அந்த மணிக்குள் இருந்து ஒரு தாய் சிட்டுக் குருவியும், 4 குஞ்சுகளும் சந்தோஷமாகப் பறந்து சென்றன. 

தாய்க்குருவி, ஸ்ரீபகவானை வலம் வந்து, 18 நாட்களுக்கு முன் தான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அபயம் வேண்டியதையும், யானையின் மணிக்குள் தன் குடும்பத்தை வைத்து பகவான் 18 நாட்கள் தங்களுக்கு அபயம் அளித்ததையும் நன்றியோடு எண்ணி சிறகைக் கூப்பியது!

        “ பகவானே! என்னை மன்னித்து விடு! 

உன்னை மானுட உருவில் பார்த்துப் பழகியதால் , நீ உண்மையில் யார் என என் சிற்றறிவுக்குக் கொஞ்ச காலம் புலப்படாமல் போய் விட்டது! என்று கைகூப்பித் தொழுதான் அர்ஜுனன்.

        அண்டசராசரத்தில் உள்ள ஒவ்வொருவரையும் எப்படி இரட்சிக்க வேண்டும் என்பது பகவானுக்கு நன்குத் தெரியும்! 

அவனிடம் சரணாகதி அடையுங்கள்! மற்றதை அவனிடம் விட்டு விடுங்கள்.

        “பரித்ராணாய சாதூனாம், விநாசாய சதுஷ்கிருதாம், தர்ம சம் ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே”

*"சரணாகதி நீயேகதி"*  -- என்று சரணடைவோம் மற்றவை நம்மை படைத்தவனின் பொறுப்பு  

*நம்புவோம் நிம்மதியாக வாழ்வோம்*

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன 24 இறைத்திருநாமங்கள்*

*பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன 24   இறைத்திருநாமங்கள்* 

 1 *.ஓம் கேசவாய நமஹ!* 
2. *ஓம் சங்கர்ஷனாய நமஹ!* 
3. *ஓம் நாராயணாய நமஹ* !
4 *.ஓம் வாசு தேவாய நமஹ!* 
5 *.ஓம் மாதவாய நமஹ!* 
6. *ஓம் ப்ரத்யும்னாய நமஹ!* 
7. *ஓம் கோவிந்தாய நமஹ!* 
8. *ஓம் அனிருத்தாய நமஹ!* 
9. *ஓம் விஷ்ணவே நமஹ!* 
10. *ஓம் புருஷோத்தமாய நமஹ!* 
11. *ஓம் மதுசூதனாய நமஹ!* 
12. *ஓம் அதோஷஜாய நமஹ!* 
13. *ஓம் த்ரிவிக்மாய நமஹ!* 
14. *ஓம் லஷ்மி நரசிம்ஹாய* 
      *நமஹ!* 
15. *ஓம் வாமனாய நமஹ!* 
16. *ஓம் அச்சுதாய நமஹ!* 
17. *ஓம் ஸ்ரீதராய நமஹ!* 
18. *ஓம் ஜனார்தனாய நமஹ!* 
19. *ஓம் ஹ்ருஷீகேஷாய நமஹ!* 
20. *ஓம் உபேந்த்ராய நமஹ!* 
21. *ஓம் பத்மநாபாய நமஹ!* 
22. *ஓம் ஹரயே நமஹ!* 
23. *ஓம் தாமோதராய நமஹ!* 
24. *ஓம் கிருஷ்ணாய நமஹ!* 
            
 *யார் ஒருவர் தினமும் மேற்கண்ட ஸ்ரீநாராயணனின் 24 திருநாமங்களை அனுதினமும் தவறாமல் ஜெபிக்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜ யோகமும், பிறவி முடிந்த பின்னும் மேலுலக இன்பத்தையெல்லாம் அனுபவித்து இறுதியில் எம்பெருமான் ஸ்ரீநாராயணனின் திருவடிகளை அடையலாம்.*

சித்ரா பௌர்ணமி

*சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்*

பெளர்ணமி நேரம்*


சித்ரா பெளர்ணமியில்
வீட்டுவாசலில் விளக்கேற்றுங்கள்....

குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வ வழிபாடு அவசியம்....

சித்ரா பெளர்ணமியில், வீட்டில் சிரத்தையுடன் செய்யப்படும் பூஜையால், வீட்டில் இதுவரை இருந்த கஷ்டங்கள் விலகும். சுபிட்சம் நிலவும் என்பது உறுதி. சித்ரா பவுர்ணமி அற்புத நாளில், வீட்டில் பூஜையிலும், வழிபாட்டிலும் ஈடுபடுங்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சித்ரா பௌர்ணமியை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுகிற வைபவம். இந்த நந்நாளில், ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. கோயிலின் சாந்நித்யமும் சக்தியும்  சித்திரை மாதத்தின் பெளர்ணமி நாளில், இன்னும் வீறு கொண்டு வெளிப்படும் என்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே, அந்த நாளில், கோயிலுக்குச் செல்லும் போது நல்ல அதிர்வலைகள் நம் மீது பட்டு, நம்மை செம்மையுறச் செய்யும் என்கிறது நமது சாஸ்திரம்.

அதே போல், சித்ரா பெளர்ணமியன்று வீட்டில் செய்யப்படும் பூஜைக்கு, பன்மடங்கு வீரியம் அதிகம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

*சித்ரா பெளர்ணமி நாளில் வீட்டில் என்ன செய்ய வேண்டும்?*

‌சி‌த்ரா பௌர்ண‌மி அ‌ன்று அதிகாலை‌யி‌ல் கு‌ளி‌‌த்து முடி‌த்துவிடுங்கள். முன்னதாக, இல்லத்தை தண்ணீர் விட்டு, நன்றாகத் தூய்மையாக்கி விடுங்கள். அதேபோல், பூஜையறையில் உள்ள சுவாமி படங்களையும் தூய்மையாக்கி, சந்தனம் குங்குமம் இடுங்கள். பூக்களால் அலங்கரியுங்கள்.

 உங்கள் ‌குலதெய்வத்தை வணங்குங்கள். அதேபோல், உங்களுக்கான இஷ்ட தெய்வத்துக்கு உகந்த மலர்களைக் கொண்டு அலங்கரியுங்கள்.  அடுத்து, வீட்டு தெய்வம் என்பார்கள். அதாவது, வீட்டில் எவரேனும் கடந்த தலைமுறைகளில், கன்னிப்பெண்ணாகவோ கர்ப்பிணியாகவோ இருந்து இறந்திருப்பார்கள். அவர்களின் படங்கள் இருந்தால், அந்தப் படங்களுக்கும் சந்தனம் குங்குமம் இடுங்கள். மலர்களால் அலங்கரியுங்கள்.

குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வம் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்வதுதான் சித்ரா பெளர்ணமி நாளின் மிக முக்கியக் கடமை. எனவே இந்தநாளில், மறக்காமல் விளக்கேற்றி, இந்தத் தெய்வங்களை வழிபடுங்கள். காலை வழிபாட்டின் போது, சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், எலுமிச்சை சாதம் என நைவேத்தியம் செய்யுங்கள். காகத்துக்கு உணவிடுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு  நைவேத்தியப் பிரசாதத்தை வழங்குங்கள்.

அதேபோல், மாலையில் பூஜையறையில் விளக்கேற்றுங்கள். வீட்டு வாசலில் இரண்டு அகல்விளக்குகள் கொண்டு விளக்கேற்றுங்கள். மீண்டும், குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வங்களுக்கு தீபதூப ஆராதனைகள் செய்யுங்கள். முடிந்தால், குடும்பத்தார் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவது இன்னும் சிறப்பு வாய்ந்தது.

பூஜை செய்த பிறகு, நிறைவாக, பயறு வகைகள் கொண்டு சுண்டல் அல்லது கேசரி அல்லது சர்க்கரைப் பொங்கல் அல்லது அவல் பாயசம் நைவேத்தியம் செய்து, அக்கம் பக்கத்தாருக்கும் வழங்குங்கள். அப்படியே வீட்டு வாசலில் இருந்தபடி, சந்திர தரிசனம் செய்யுங்கள். மனதார சந்திர பகவானிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.

*இதுவரை உங்கள் வீட்டில் இருந்த குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகள் அடியோடு விலகிவிடும்.  அமைதி தவழும்.  ஐஸ்வர்யமும் சுபிட்சமும் குடிகொள்ளும்.*

தெய்வீக மரம் பாரிஜாதகம்

தெய்வீக மரம்
பாரிஜாதகம்

கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் தேவலோக மரங்களாகும். 

இந்த ஐந்து மரங்களும் பாற்கடலைக் கடையும் பொழுது வந்ததை
இந்திரன் தன் தேவலோகத்திற்காக எடுத்துக் கொண்டார்.

நிலத்தில் விழுந்த பின்னும் கடவுளுக்குச் சூட்டப்படும் ஒரே ஒரு மலர் பாரிஜாதமே. 

இப் பூக்களை மரத்திலிருந்து கொய்து இறைவனுக்குச் சூட்டக் கூடாது என்றும் சொல்கிறார்கள்.

இந்த மரத்தில் இருந்து பூக்கும் மலர்கள் இனிய மணம் வீசும் தன்மை கொண்டவை. 

பவளமல்லிக்கு மற்றொரு பெயர் பாரிஜாதம். 

இலக்கியத்தில் சேடல் என்று அழைக்கப்படுகிறது. 

புட்ப விதி என்னும் நூலில் பவள மல்லிகை சண்பக‘ஞாழல் கோட்டூப்பூவகை’ என்று கூறப்பட்டுள்ளது. 

அதாவது, நாற்பது வகையான கோட்டூப் பூ வகைகளில் பவளமல்லியும் ஒன்று. 

இந்த மரம் முன்னிரவில் பூத்து மணம் வீசி சூரிய உதயத்துக்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும்.

பவளமல்லிமரம் மூன்று இலை தொகுப்புகளைக் கொண்டது. இவற்றில் மும்மூர்த்திகளும் உறைந்திருப்பதாக ஐதீகம். மத்தியில் மகாவிஷ்ணுவும், வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் சிவபெருமானும் இருப்பதாக நம்பப்படுகிறது.

பாரிஜாதம் என்ற இந்த பவளமல்லி, திருமாலுக்கு உகந்தது. 

பவளமல்லி வேரில் சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் குடியிருக்கிறார்..

பவளமல்லிகை
இந்திரனின் மனைவி சாச்சிக்கு மிகவும் பிடித்தமானது ஆகும்.

ஒரு முறை நாரதர், தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மலர்களால் ஆன மாலையைக் கொண்டு வந்து கிருஷ்ணரிடம் கொடுத்தார். 

அந்த மாலையை கிருஷ்ணர், ருக்மணியிடம் கொடுத்தார். இதையறிந்த சத்யபாமா, தேவலோக மலர் மாலையை தனக்கு தராதது பற்றி கேட்டு கோபித்துக் கொண்டாள்.

உடனே கிருஷ்ணர், “தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மரத்தையே கொண்டு வந்து உன்னுடைய அந்தபுரத்தில் வைக்கிறேன்” என்று கூறினார்.

ஆனால் இந்திரன், தேவலோக மரத்தை பூமிக்கு கொண்டு செல்ல மறுப்பு தெரிவித்தார்.

கிருஷ்ணருக்கும் இந்திரனுக்கும்
சண்டை மூளும் நிலை வந்ததை அறிந்து ரிஷிகள் பலர் பேசி
இந்திரனை சமாதானம் செய்தனர். 

அதன்பிறகு கிருஷ்ணர், பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்து, சத்யபாமாவின் அந்தபுரத்தில் வைத்தார். 

அதே நேரத்தில் அதில் இருக்கும் மலர்கள் ருக்மணியின் அந்தபுரத்தில் விழும்படியாகவும் செய்து, இருவருக்குமான பிணக்கை தீர்த்து வைத்தார்.

வாயு புராணம்  கூறும் வேறு ஒரு கதைப்படி 

பாரிஜாதம் என்ற இளவரசி சூரியனை திருமணம் புரிய விருப்பம் கொண்டிருந்தாள். 

ஆனால், சூரியன் இளவரசியை ஏற்கவில்லை. 

இதனால் பாரிஜாதம் மனம் உடைந்து தீயில் குதித்து தனது இன்னுயிரை விடுத்தாள். 

இளவரசி பாரிஜாதம் தீயில் எரிந்த சாம்பலில் இருந்துதான் பாரிஜாதம் என்ற செடி உருவானது. 

சூரியன் பாரிஜாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் இந்த செடி பகலில் சூரியனை பார்த்து பூப்பதைத் தவிர்த்து இரவில் மட்டுமே பூத்துக் குலுங்குகிறது. இதனால்தான் இதனை வருந்தும் மரம் என்றும் அழைப்பார்கள்.

தன்னைக் கைவிட்ட சூரியனைப் பார்ப்பதை தவிர்ப்பதற்காக இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து, கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் .

பவளமல்லிமரத்தின் இலை, விதை, பட்டை ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை. 

பவளமல்லி சிறுநீரகத்தை காப்பாற்றக்கூடிய மருத்துவத்தன்மை உடையதாக இருக்கிறது. 

நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து. கால்மூட்டு வலி, ரத்தப்போக்கு, இடுப்பு வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. 

பவளமல்லி இலை பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தக் கூடியது. 

பவளமல்லி மரத்தின் வேரை மென்று தின்றால் பல்லீறுகளில் உருவாகும் வலியை குணப்படுத்தும்.

விதைகளை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் தீரும். 

இலைச்சாறு குழந்தைகளுக்கு மலமிளக்கியாகவும் உள்ளது. 

பவள மல்லிவிதையை பொடி செய்து அதை எண்ணெயில் குழைத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கையும் மறைந்து முடி வளரும்.

தமிழகத்தில் திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், தென்குரங்காடுதுறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர், திருநாரையூர் சித்தநாதீஸ்வரர், திருவைகுண்டத்தில் உள்ள கண்ணபிரான், திருக்கடிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் பவளமல்லி தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

கம்மவார் குலதெய்வ வரலாறு

கம்மவார் குலதெய்வ வரலாறு  ஒவ்வொரு கம்மவாரும் அறிந்துகொள்ளவேண்டியது.

கிருதயவீர்யன் காலத்திற்கு பின் மகிஷ்மதி நகரை தலைநகராக்கி தவத்தின் வலிமையால்  தத்தாத்ரேயரின் வரத்தால்  ஆயிரம்  கரங்களுடன் ஆட்சி செய்து வந்த  கார்த்தவீர்ய மகாராஜா(கம்மவார்களின் முன்னோர்) 85ஆயிரம் ஆண்டுகள் உலகின் 56 தேசங்களுக்கும் அதிபதியாக இருந்து நீதி அரசராக திகழ்ந்தார். 

 ஒருநாள் கார்த்தவீர்ய மஹாராஜா  ரத கஜ துரக  படை பரிவாரங்களுடன் காட்டிற்கு சென்று வேட்டையாடி முடித்து அரண்மனைக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். வருகின்ற வழியில் தனது ஆஸ்தான குரு ஜமதக்னி முனிவரின் ஆசரமம் கண்டார். குருவிடம் ஆசிபெற்று செல்லலாமே என்று எண்ணி பரிவாரங்களுடன் குருவின் ஆசிரமம் செல்கின்றார்.

களைப்புடன் இருக்கும் மகாராஜாவையும் படை பரிவாரங்களையும் கண்ட ஜமதக்னி(கம்மவார்) ரிஷி அனைவரையும் ஒருவேளை  விருந்துண்டு செல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் ( இது கம்மவார் மக்களுக்கு மட்டுமே உள்ள குறிப்பால் அறிந்து பசியாற்றும் குணம்). ரிஷியின் கோரிக்கையை கேட்ட மஹாராஜா நகைப்புடன் இந்த துரவியால் அனைவரையும் பசியாற்ற இயலாது என்று மனதில் எண்ணிகொண்டார் பிறகு ரிஷியிடம் ராஜபோஜனம் தவிர்த்து நாங்கள் வேறு உண்ணலாகாது என்றார்.

 மகாராஜாவின் விருப்பபடியே விருந்து செய்கிறேன் என்று சொன்னது மட்டுமன்றி காமதேனுவின் உதவியால் சோமபானம் உள்ளிட்ட பல்வகை  பதார்த்தங்களுடன் அவரவர் விரும்பியவாறு அனைவருக்கும் தடபுடலாக விருந்து தகுதிவாய்ந்த ஆசனங்கள் வசதிகளுடன் நடைபெற்று முடிந்தது.(ராஜ போஜனம் என்றால் அதில் மதுவும் உண்டு)

இத்தனை பேருக்கும் ஒரு நொடியில் விருந்தும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுத்த காமதேனு(தேவலோக பசு) குறித்து சிந்தித்த மஹாராஜா இப்படி ஒரு பசுவால் அல்லவா இத்துறவி இத்தகு சிறப்பை செய்ய நேர்ந்தது. இப்படி பட்ட பசு நமது அரண்மனையில் அல்லவா இருக்க வேண்டும் அதுதானே நமக்கு பெருமை என்ற எண்ணம் மகாராஜாவிற்கு ஏற்படுகின்றது.

காமதேனுவை தன்னுடன் அரண்மனைக்கு உடன் அனுப்பி வைக்குமாறு ஜமத்கனி முனிவரிடம் கேட்கின்றார். முனிவர் மறுக்க போர் துவங்கியது. காமதேனுவால் உருவாக்கப்பட்ட வீரர்களுடன் போர் செய்தார்கள்  போரில் கர்த்தவீர்ய மகாராஜா தோற்கடிக்கப்பட்டு அரண்மனைக்கு செல்கின்றார்.

அரண்மனையில் சோகமாக மகாராஜா இருப்பதை கண்ட தனது பிள்ளைகள் விவரம் அறிந்து உலகையே ஆட்சி செய்யும் பெரும் சாம்ராஜின் அதிபதி துறவியிடம் தோற்பதா என கோபம் .கொண்டார்கள். இதை அறிந்தால் நம் கட்டுப்பாட்டில் உள்ள சிற்றரசரர்கள் சிரிப்பார்கள் நம்மை மதிப்பார்களா என்று கேட்டுக்கொண்டே புறப்பட்டு சென்று தவம் செய்துகொண்டிருந்த நேரத்தில் ஜமத்கனி முனிவரை வதம் செய்து காமதேனுவை கைப்பற்றி சென்றார்கள்.

வதம் செய்யப்பட்ட சதியின்(கணவர்) சடலத்தின் அருகில் தலைவிரி கோலமாக பதியாகிய(மனைவி) ஸ்ரீ ரேணுகாம்பாள் அழுது புலம்புகின்றார். குரல் கேட்டு பரசுராமர் வருகின்றார். தனது தந்தையை வதம் செய்த சத்திரியர்களின் செயல்கண்டு 21தலைமுறைக்கும் சத்திரியர்கள் வம்சம் இல்லாமல் அழிப்பேன் என்று சபதமேற்று எட்டுத்திக்கும் வெறிகொண்டு நாளிகைக்கு ஐந்தாயிரம் பேர்கள் என சத்திரியர்களை தனது கோடாரியால் வதம் செய்கின்றார். ஒருகட்டத்தில் சத்ரிய குல ஆண்கள் அனைவரும் அழிந்துபோயினர். பரசுராமர் ஒரு சமயம் தாய் ரேணுகாதேவியிடம் பெண்களை துன்புறுத்த மாட்டேன் என்று சத்தியம் செய்துள்ளார். ஆகவே சத்ரிய குல பெண்களை விடுத்து ஆண்கள் அனைவரையும் அழித்தார்.

சத்திரிய குல பெண்களும் கர்பிணிகளும் தவிர்த்து ஆண்கள் அனைவரும் பரசுராமரால் வதம் செய்யபட்டார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் ஆண்பிள்ளைகள் பிறந்ததும் பரசுராமரால் வதம்  செய்யபட்டார்கள்.

பரசுராமன் நமது வம்சத்தை அழிக்காமல் விடமாட்டேன் என்கிறானே பிறக்கும் ஆண் சிசுக்களை கருணையின்றி  கொல்கின்றானே இதை எப்படி தடுப்பது சந்ததி காப்பது என்று நமது பாட்டிமார்கள் கவலைய்டன் ராஜகுருவிடம் ஆலோசனை கேட்டார்கள்.

ராஜகுரு' மகளே, பரசுராமனின் கோபத்தை அந்த பரமேஸ்வரனே வந்தாலும் தடுக்க இயலாது, பரசுராமர் தன் பெற்றவர் சொல்லை தட்ட மாட்டார் ஆகவே  தாய் ஸ்ரீ ரேணுகாம்பாள் சொல்பேச்சையும் தட்ட மாட்டார். ஆகவே , நீங்கள் சென்று ஸ்ரீ ரேணுகாம்பாளிடம் அபயம் கேளுங்கள், அன்னைஅபயம் அளித்தால் உங்கள் குலம் தழைக்கும் இல்லையேல் இனம் அழியும் என்று சொல்லி அனுப்புவித்தார்.

ராஜகுருவின் ஆலோசனையின்படி கற்பிணி பெண்களுடன் நமது ராஜமாதா உள்ளிட்ட பாட்டிமார்கள் ஸ்ரீ ரேணுகாம்பாள்  ஆசிரமம் சென்று அன்னையிடம் வேண்டினார்கள்.  ஆசிரமத்தில் நமது பாட்டிமார்கள் பலவாறு வேணடியும் பயனற்று போனதால் நம் பாட்டிமார்கள் அம்மனை பார்த்து தாயே எனது பதியின் மதிகெட்ட தனத்தால் போர் மூண்டதும் பின் தோற்றதும் தந்தையின் மானம் காக்க தமையன் தங்கள் சதியை குருவென்றும் பாராமல் வதம் செய்ததும் விதிவாசத்தால் அல்ல உன் கணவரே காரணம் ஆவார் என்றார்கள்.

தன் கணவனே காரணம் என்று சொல்வதை கேட்டதும் ஆசிரமத்தில் வெளியே வந்து கோபத்துடன் பார்க்கும் ஸ்ரீ ரேணுகாம்பாளை பார்த்து மேலும் நம் பாட்டி ராஜமாதா சொல்லுகிறாள்.

ஆம் உன் கணவர் விருந்தென்று சொல்லி சோமபானத்தையுங் கொடுத்தார். சோமபானத்தின் மயக்கத்தினால் என் கணவர் மதி கெட்டு காமதேனுவை கவர எண்ணினார். 56 தேசங்களுக்கும் அதிபதி தன ராஜ்யத்தில் தானே காமதேனு இருக்கிறது என்று அறியாமல் மதிகெட்டு காமதேனுவை கவர தூண்டியது உன் கணவரின் விருந்தே காரணமாகும் என்று வாதாடினார். தன கணவனை உயிரை கவர்ந்து சென்ற யாமனிடமே போராடி உயிர் மீட்ட பரம்பரையில் வந்த நம் பாட்டிமார்கள் வைத்த வாதத்தால் அம்மனும் சிந்திக்க துவங்கிய நொடியில் இதுவே சமயம் என்று ஸ்ரீ ரேணுகாம்பாளை சாந்தப்படுத்த மூன்று சத்தியம் செய்து கொடுத்தனர்.

நடந்தவை குறித்து சிந்தித்து நாம் ஒருவரை ஒருவர் குறை சொல்லி பயனில்லை நீ என் தமையானால் உன் கணவரை இழந்தாய்

நானோ உன் தமையானால் கணவரை இழந்தது மட்டுமல்ல எம் இன ஆண்கள் அனைவரையுமே இழந்துள்ளோம். 

ஆகவே இந்த பேரிழப்புக்கு காரணமான காரியங்களை மறந்து எம் சத்ரிய குலத்தை 21 தலைமுறைக்கும் சந்ததி இன்றி அளிப்பேன் என்று சப்பதமேற்றுள்ள பரசுராமரிடம் இருந்து எம் குல சந்ததியை காப்பாற்ற அபயம் தாருங்கள்.

தாயே  நீங்கள் அபயம் அளித்தால் நாங்கள் உங்களுக்கு சத்தியம் செய்கின்றோம் இன்றிலிருந்து பிறக்கும் எம் சந்ததிகள் அனைவரும் இந்த சத்தியத்தை கட்டுப்பாட்டுடன் கடைபிடிப்பார்கள் என்று சொல்லி மூன்று சத்தியம் செய்தார்கள்.
சத்தியம் 1.
"தாயே அன்று நடைபெற்ற விருந்தில் சோமபானத்தின் போதையால் எமது இல்லத்து ஆண்கள் தகாதது செய்துவிட்டனர். நீங்கள் அபயம் அளித்தால் "எமது சந்ததியில் ஆணும் பெண்ணும் சோமபானத்தை அருந்த மாட்டார்கள்" என்று சத்தியம் செய்கின்றோம்."

சத்தியம் 2.
"லோகமாதாவே எங்கள் சந்ததிகளுக்கு அபயம் அளித்தீர்களானால் பசுவை முன்னிட்டு நடைபெற்ற  தகாத செயல் நடந்துள்ளதால் "எமது சந்ததிகள் பசுவை துன்புறுத்த மாட்டார்கள்." என்று சத்தியம் செய்கின்றோம்.

சத்தியம் 3.
"ஜகத்முனி பத்தினியே எங்கள் சந்ததிகள் தழைக்க அபயம் வேண்டுகின்றோம். எங்கள் சந்ததியில் பிறக்கும் ஆணும் பெண்ணும் "உன்னையே குல தெய்வமாக வணங்கி வருவார்கள்", என்று சத்தியம் செய்கின்றோம்." 

இவ்வாறு சத்தியம் செய்தமையாலும் நமது பாட்டிமார்களின் விடாமுயற்சியாலும் சாந்தமடைந்த ஸ்ரீரேணுகாம்பாள் செய்துகொடுத்த சத்தியத்தை மெய்யாக கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அபாயம் அளித்தார். தன மகனை அழைத்து கொடுத்த வாக்குப்படி சத்தியம் கடைபிடிக்கும் வரையில் பரசுராமா இவர்களுக்கு அபயம் கொடுத்துவிட்டேன் என்று வரம் அளித்து நமது பாட்டிமார்களை அனுப்பி வைத்தார்.

பாட்டிமார்களின் வேண்டுதலாலும் ஸ்ரீ ரேனுகாம்பாள்  அருளாலும் அன்று முதல் நமது குலத்தில் பிறந்த ஆண் பிள்ளைகள் பரசுராமரால் வதம் செய்யப்படாமல் பிறந்து வளர்ந்து மீண்டும் ராஜ்ஜியங்களை ஆட்சி செய்து வந்தனர்.

நம் முன்னோர்களும் சோமபானம் அருந்தாமல் பசுவை துன்புறுத்தல் செய்யாமல் பராசக்தியை குலதெய்வமாக வணங்கி விழாஎடுத்து  ஸ்ரீ ரேணுகாம்பாளுக்கு கொடுத்த சத்தியம் தவறாது கடைப்பிடித்து சுகமாக வாழ்ந்து வந்தார்கள்.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் நமது முன்னோர்கள் சத்தியம் தவறாமல் வாழ்ந்து வந்தனர்.

1530 - 1540 காலகட்டத்தில் 24 நாட்டு  முகலாய மன்னர்கள்  டில்லி சுல்தான்களுடன் ஒன்று சேர்ந்து தெலுங்கு சாம்ராஜ்யத்தை வென்றிட படையெடுக்க இருக்கும் சேதி அறிந்த நமது ராஜா தனக்கு துணையாக டச்சுக்காரர்களை அழைத்தார்கள். போரில் வென்றார்கள் 

உதவிக்கு வந்த டச்சு படையினரால் சோமபானமும் வந்துவிட்டது. சத்தியம் மறந்த சத்திரியர்கள் போரில் வெற்றிபெற்றாலும்  பரசுராமன் மீண்டும் வதம் செய்ய  ராஜ்ஜியம் அனைத்தும் இழந்தனர். 

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக டச்சுக்காரர்களை போருக்கு துணையாக அழைத்து சோமபானம் அருந்தி சத்தியம் தவறியதால் நமது ராஜ்யங்கள் அனைத்தும் வீழ்ந்தது. அன்று முதல் நமது இனம் அழிவை நோக்கியே பயணம் செய்கின்றது. நம் இனத்தின் மக்கள் தொகை குறைந்துகொண்டே 

உண்மையில் நமது இனம் அழிந்துவருக்கிறதா?
உங்களது ஊரில் நம் இனம் வளர்ச்சி குறித்து ஒரு பார்வை:
உங்களது அப்பாவின் அப்பா(பாட்டன்) நினைவு கொண்டு வாருங்கள். அவருடன் பிறந்தோர் மற்றும் அவரின் தலைக்கட்டு அல்லது நீர்பிழியும் பங்காளிகள் எத்தனை பேர்கள் பிறந்தனர்  என்று எண்ணிக்கொள்ளுங்கள்.  அவர்களில் எத்தனை பேர்களுக்கு திருமணம் நடந்துள்ளது என்று கணக்கெடுங்கள் இப்பொழுது ஊரில் பிறந்த மொத்தம் உள்ள அனைத்து பாட்டன்களில் குறைந்தபட்சம் 10% பேர்களுக்கு திருமணமே நடவாமலும் திருமணம் நடந்தும் புத்திர பாக்கியம் இல்லாமலும், அல்லது ஆண் வாரீசு இல்லாமலும் சந்ததி இன்றி முடிந்து இருக்கின்றதா!...உங்கள் ஒவ்வொருவரின் ஊரிலும் இப்படி தான் இருக்கும் இல்லை எனில் தொடர்புகொள்ளவும்.

அதேபோன்று உங்களது தந்தை மற்றும் அவருடன் பிறந்தோர் மற்றும் அவரது பங்காளிகளை எண்ணிப்பாருங்கள் அவர்களில் குறைந்தபட்சம் 10% பேர்களுக்கு திருமணமே நடவாமலும் திருமணம் நடந்தும் புத்திர பாக்கியம் இல்லாமலும், அல்லது ஆண் வாரீசு இல்லாமலும் சந்ததி இன்றி இருக்கின்றதா!...

உங்களுக்கு 
உங்களது உடன்பிறந்தோர் மற்றும் உங்களது பங்காளிகளை எண்ணிப்பாருங்கள் மேலே  நடந்தது தான் தொடரும்.

 அடுத்த தலைமுறையில் நம்மில்  யாருக்கு சந்ததி இருக்கும்? யாருக்கு  இருக்காது? அறிந்துகொள்ள  முடியுமா ? சொல்ல முடியுமா?

 அடுத்த தலைமுறையில் யாருக்கு சந்ததி இல்லாமல் போகும் ? என்ற கேள்விக்கு விடை தங்களிடம் உள்ளதா?

நமது இனத்தை தவிர பிற இனத்தாருக்கு இந்த ஆபத்து உள்ளதா? நமது ஊருக்கு ஒட்டிய ஊரில் வசிக்கும் பிற சாதியினர் பற்றி ஆய்வு::

நமது ஊரில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நாற்பது கம்மவார் வீடுகள்  இருந்தது என்றால் இன்றும்  அப்படியே அதே அளவுடன் அல்லது சற்று குறைந்தோ இருக்கும்.

ஆனால் அருகாமையில் உள்ள ஊரில் பிற சாதியினர் ஐம்பது ஆண்டிற்கு  முன் நாற்பது வீடுகள் இருந்திருப்பின் இன்று குறைந்தபட்சம் 60 குடும்பங்கள் இருக்கும். அவர்களுக்கு வளர்ச்சி ஏற்படுகின்றது நமக்கு வீழ்ச்சி ஏற்படுகின்றதே என்பதை அறிந்துகொண்டீர்களா?

2001 ஆம் ஆண்டு ஐநா அமைப்பின் மனித  மேம்பாட்டு துறை ஆய்வு அறிக்கை வெளியிட்டது. அதில்  ஒரு இனம் அழியாமல் இருக்க மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.36% இருக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றது.

2001மற்றும் 2011இந்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளிவிவரப்படி கம்மவார் மக்கள் தொகை வளர்ச்சி மைனஸ் 1.30% ஆக உள்ளது. இவையெல்லாம் வலைதளத்தில் இருந்து பெறப்பட்ட விவரங்களாகும்.

 ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மனுக்கு  கொடுத்த சத்தியத்தை நாம் மீறியதால் நம் இனம் அழிந்துகொண்டு உள்ளது என்பதை வரலாற்று ஆய்வு மூலம் கண்டுகொண்டோம். இது சரியா என்பதை அறிய சென்னையில் ஸ்ரீ ரேணுகாம்பாளுக்கு பூஜை செய்து வேண்டுதல் நிகழ்வு ஏற்பாடு செயத்தோம். பூஜைக்கு வந்தவர்களின் திருமண தடை புத்திர பாக்கியமின்மை குடும்ப ஒற்றுமையின்மை போன்ற குறைகள் நீங்கி குடும்ப ஒற்றுமை ஏற்படுவதையும் திருமணம் விரைந்து கைகூடுவதையும் அறிந்தோம். இதன் மூலம் நம் ஆய்வு சரியே என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளோம்.

நமக்கு எத்தனை கோடி சொத்து இருப்பினும் சந்ததி இல்லையேல் வாழ்ந்து என்ன பயன்?

சத்தியம் தவறி நடக்கும் கம்மவார்களுக்கு மட்டுமல்ல அவர்களின் உடன் பங்காளிகளுக்கும் பரசுராமர் பல பிரச்சனைகளை கொடுத்து கெடுக்கின்றார் என்பதை உணர்வோம். யார் தவறு செய்தாலும் அவரை திருத்தி நல்வழிப்படுத்தி சந்ததி காப்போம்.

திருமணம் தடைப்படுகிறதா?
புத்திர பாக்கியம் இல்லையா? தொழில் முடக்கம் குடும்ப ஒற்றுமையின்மை நிலையில்லாமல் போகும் செல்வம் குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லை என  இதுபோன்ற பிரச்சனைகள் தீர்வுக்கு 
ஆடம்பரம் இன்றி பக்தியுடன் பூஜை செய்து உங்கள் குலம் தழைக்க ஸ்ரீ ரேணுகாம்பாளை மனமுருகி வேண்டுங்கள்.

மல்லிகைப்பூ, தாம்பூலம், வாழைப்பழம், மஞ்சள் குங்குமம் பத்தி, நெய்தீபம் ஏற்றி, அருகாமை கம்மவார் சொந்தங்களை தம்பதிகளாய்  அழைத்து நீங்களே உங்கள் இல்லத்தில் 200 ரூபாய் செலவில் பக்தியுடன் பூஜை செய்து இந்த குலதெய்வ வரலாற்றை அனைவருக்கும் சொல்லி இனி சத்தியம் கடைப்பிடித்து காப்போம் என உறுதிமொழி ஏற்று திருமண தடை, புத்திர தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களில் இருந்தும்  நிவர்த்தி பெறலாம். குடும்ப ஒற்றுமை செல்வ வளம் பெறலாம்.

முன்னோர்கள் செய்துகொடுத்த சத்தியத்தின்படி நடந்து நமது சந்ததியை காப்போம் என்று நம் கம்மவார் குல குழந்தைகள் அனைவருக்கும்  சொல்லிக்கொடுத்து உறுதிமொழி ஏற்க செய்வோம் சந்ததி நலன் காப்போம். 

இதை படித்த அனைவரும் இதற்கு முன் அறியாமையால் ஏதேனும் தவறு செய்திருப்பினும் இனி நம் முன்னோர்கள் செய்துகொடுத்த சத்தியத்தின் படி வாழ்ந்து சந்ததி காப்போம்.

"அமைப்புகள் வெவ்வேறாயினும் நம் இலக்கு ஒன்றே"

ஸ்ரீ ரேணுகாம்பாள் பூஜை குறித்து சந்தேகங்கள் தீர்வுக்கு விளக்கங்கள்  பெற தினமும் காலை 10 மணி முதல் 11 மணிவரை மட்டும் அழைக்கவும்.

உங்கள் பகிர்வு கம்மவார் மக்களின் விழிப்புணர்வு உறுதிசெய்யும்.

காரசாரமான உணவை சாப்பிடும்போது மூக்கிலிருந்து தண்ணீர் ஊற்றுவதற்கு என்ன காரணம் தெரியுமா..?

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மிளகு தான் உலகிலேயே காரமான உணவுப் பொருள் என கின்னஸில் இடம் பெற்றுள்ளது என்றால் ஆச்சரியத்திற்கு இல்லை. அப்படி இந்த காரமான உணவுகளை சாப்பிட்டால் , காரம் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் உடனே மூக்கிலிருந்து தண்ணீர் கொட்டோ கொட்டென கொட்டும்.

Advertisement

இதற்கு என்ன காரணம் தெரியுமா..?

அதாவது மிளகாய் போன்ற காரமான தாவர வகைகளில் கேப்சைசின் (capsaicin) என்கிற வேதிப்பொருள் உற்பத்தியாகிறது. அதுதான் உடல் திசுக்களில் எரிச்சலை தூண்டி மூக்கின் வழியாக தண்ணீரை வெளியேற்றுகின்றன.

ரகுல் பிரீத் சிங் வீட்டில் ’டார்க் சாக்லெட் கேக்’ செஞ்சு பாத்திருக்காங்க..! நீங்களும் டிரை பண்றீங்களா..?

அதேபோல் அல்லில் ஐசோதியோசயனேட் (allyl isothiocyanate) என்கிற எண்ணெய் வேதிப்பொருளும் காரமான உணவுப் பொருட்களில் இருக்கின்றன. அதாவது கடுகு போன்ற பொருளில் இவை உற்பத்தியாகின்றன. இதுவும் காரத்தன்மைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

இப்படி காரத்தை தூண்டுகின்ற கேப்சைசின் மற்றும் அல்லில் ஐசோதியோசயனேட் மூக்கின் சளி சவ்வுகளை எரிச்சலூட்டுகிறது. எரிச்சலை சரி செய்ய சளி சவ்வுகள் வெளியிடும் நீரே மூக்கில் வெளியேறுகிறது.

காரத்தை குறைக்க என்ன வழி ?

உண்மையில் காரமான உணவை சாப்பிட்டால் நாம் உடனே தண்ணீர் குடிப்போம். ஆனால் தண்ணீருக்கு காரத்தை குறைக்கும் தன்மைக் குறைவு. எனவே தண்ணீரைக் காட்டிலும் பால் அல்லது தயிர் குடிக்கலாம். ஏனெனில் பாலில் இருக்கும் கேசீன் என்னும் புரதம் கேப்சைசினை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை பால் இல்லை என்றாலும் ஒரு ஸ்பூன் சர்க்கரை சாப்பிடுவதாலும் காரத்தை குறைக்கலாம்

Tuesday, 26 May 2020

சந்திரன் நின்ற பலன்கள் : சந்திரன் ஒவ்வொரு வீட்டில் இருக்க கிடைக்கும் பலன்கள்

Chandiran Nindra Palan ஜோதிடத்தில் சந்திரன் மிக முக்கிய கிரகமாக உள்ளார். நவகிரகங்களில் வேகமாக பெயர்ச்சி ஆகக் கூடிய கிரகங்களில் சந்திரன் முதலிடத்தில் உள்ளது. மனோகாரகன் என அழைக்கப்படும் சந்திரன் ஜாதகத்தில் எந்த வீட்டில் அமர்ந்திருந்தால், அவர் எப்படிப்பட்ட பலன்களைத் தருவார் என்பதை பார்ப்போம்.
samayam tamil
samayam tamil
   
Chandiran Nindra Palan ஜோதிடத்தில் சந்திரன் மிக முக்கிய கிரகமாக உள்ளார். நவகிரகங்களில் வேகமாக பெயர்ச்சி ஆகக் கூடிய கிரகங்களில் சந்திரன் முதலிடத்தில் உள்ளது. மனோகாரகன் என அழைக்கப்படும் சந்திரன் ஜாதகத்தில் எந்த வீட்டில் அமர்ந்திருந்தால், அவர் எப்படிப்பட்ட பலன்களைத் தருவார் என்பதை பார்ப்போம்.
சந்திரன் ஒன்று முதல் ஏழாம் வீடு வரை கொடுக்கும் பலன்கள்
samayam tamil
முதல் வீட்டில் சந்திரன்

சந்திரன் முதல் வீட்டில் அதாவது லக்கினத்தில் இருப்பது மிகவும் நல்லது. ஆனால் சந்திரனுக்கு அது சொந்த வீடாக அல்லது உச்ச வீடாக இருந்தால் மிகவும் நல்லது. அது நட்பு வீடாக இருந்தால் நல்லது.

இதனால் அந்த ஜாதக தாரர் வாழ்வில் உயர் நிலையை பெறுவார். சிற்றின்ப சுகத்தில் திளைப்பார். அதற்கான சுகம் நன்றாக அமையும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறும் அமைப்பும். திடீர் பண வரவு அமைப்பும் இருக்கும்.

இரண்டாம் இடத்தில் சந்திரன்

சந்திரன் 2ல் அமைந்தால் செல்வம் தருவார். பேச்சு திறமை இருக்கும். அரசாங்கத்தில் நன்மதிப்பு இருக்கும். சொத்து சுகம் சேரும். பெயர் புகழ் உண்டாகக் கூடும். கல்வி சிறக்கும்.

அதே சமயம் சந்திரன் கெட்டால் அவர் செல்வத்தை இழக்க நேரிடும். போதிய பண வரவு இருக்காது. பொதுவாக வளர்பிறையில் நல்லது செய்வார்.

மூன்றாம் இடத்தில் சந்திரன்

சந்திரன் 3ல் இருந்தால் அவர் உடல் வலிமையுடனும், ஆற்றல் மிக்கவராகவும் இருப்பார். சகோதர, சகோதரிகளை ஆதரிப்பார். சிறப்பான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார். மூன்றாம் இடத்தில் இருப்பதால் அடிக்கடி குறிய பயணம் செய்யக் கூடியதாக அமையும். வாகன, வசதிகள் கிடைக்கும்.

சந்திரன் கெட்டால் இவை அனைத்தும் எதிர்மறையாக நடக்கும்.

நான்காம் இடத்தில் சந்திரன்

4ல் சந்திரன் இருந்தால் மகிழ்ச்சியான சிறப்பான வாழ்வு கிடைக்கலாம். 4ஆம் வீடு நீர்நிலையைக் குறிப்பதால், அவருக்கு ஆறு, குளம், கடல் போன்ற நீர் நிலைக்கு அருகே வீடு அமையலாம். நண்பர்களுக்கு உதவி செய்வார். கொடை குணம் கொண்டவராக இருப்பார். தாய் வழியில் சொத்துக்கள் கிடைக்கும்.

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமமா? பால் குடிக்க மறக்காதீங்க..!

ஐந்தாம் இடத்தில் சந்திரன்

5ல் சந்திரன் அமைந்திருந்தால், அது பலம் பெற்றிருந்தால் பண வரத்துச் சிறப்பாக இருக்கும். நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெறுவார்கள். அதிர்ஷ்டமிகவராக இருப்பார். நல்ல அறிவாற்றலை பெறுவார். வாழ்வில் உயரத்தை அடைய வைப்பார்.

குழந்தை பாக்கியம் சிறப்பாக அமையும். குறிப்பாக பெண் குழந்தைகளே பிறக்கும்.

சந்திரன் கெட்டால் இவை எதிர்மறையாக அமையலாம்.

ஆறில் சந்திரன்

சந்திரன் ஆறாம் இடத்தில் இருக்கப் பெற்றவர் சுகபோக வாழ்வை பெறுவார். விரோதிகளை அவர்களே உண்டு பண்ணுவர். இளம் வயதில் மகிழ்ச்சியில்லா வாழ்க்கை அமையக்கூடும்.

சந்திரன் பலம் கெட்டு இருந்தால் பகைவர்களுக்கு அடங்கி நடக்கக் கூடிய நிலை தருவார்.

சூரியன் நின்ற பலன்: சூரியன் ஜாதகத்தில் ஒவ்வொரு வீட்டில் அமர்ந்திருக்கக் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

ஏழாம் இடத்தில் சந்திரன்

லக்கினத்த்தில் சந்திரன் அதாவது முதல் இடத்தில் சந்திரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் ஏழாம் இடத்தில் சந்திரன் இருக்க கிடைக்கப் பெறலாம்.


​எட்டாம் இடத்தில் சந்திரன்
samayam tamil
எட்டாம் இடத்தில் சந்திரன்

உணர்ச்சி வசப்படக் கூடிய சூழல் அதிகம் இருக்கும். சிலர் மன நிலை பாதிக்கப்படக் கூடக் கூடும்.

ஒன்பதாம் இடத்தில் சந்திரன்

சந்திரன் 9ல் அமைந்திருந்தால் நல்ல பாக்கியங்களை பெற்றிருப்பார். புத்திர பாக்கியம் இருக்கும். உறவினர்களால் நல்ல உதவி கிடைக்கப்பெறுவார். செல்வ நிலை சிறப்பாக இருக்கும். நடனம், நாடகம் போன்றவற்றில் அலாதி ஈடுபாடு இருக்கும். தாயின் அரவணைப்பு இருக்கும்.

லக்கினமும் அதன் குணங்கள் மற்றும் சுப, அசுப கிரகங்களின் பலன்கள்

​பத்தாம் இடத்தில் சந்திரன்
samayam tamil
பத்தாம் இடத்தில் சந்திரன்

சந்திரன் 10ம் இடத்தில் அமையப்பெற்றவர், தன் மதத்தின் மீது அதீத பற்று கொண்டவர். ஆன்மிக பிரச்சாரம் செய்வார். நல்ல செல்வ வளம் இருக்கக் கூடும். வாழ்வின் உன்னதமான பல காரியங்களை செய்வார். தொழில் இருக்கும் எதிரிகளை வெற்றி கொள்ளும் தைரியம் பெற்றிருப்பார்.

தங்கம் எந்த கிழமையில் வாங்கினால் நல்லது?- எந்த ராசியினருக்கு தங்கம் பெருகும்?

வாழ்க்கை குறித்த எண்ணங்கள் இயற்கையாக உண்டு பண்ணுவார். தாய்வழியில் சொந்தங்களுக்கு நன்மை செய்வர். நண்பர்கள், உறவினர்களுடன் நல்ல நட்பில் இருப்பர். தொழில்நுட்ப அறிவு சிறக்கும். அந்த துறையில் ஈடுபட வைக்கும். வசதி வாய்ப்பு சிறப்பாக இருக்கும். அரசாங்க வசதி அல்லது வேலை வாய்ப்பு கிடைக்கும்.


​பதினொன்றாம் இடத்தில் சந்திரன்
samayam tamil
பதினொன்றாம் இடத்தில் சந்திரன்

சந்திரன் 11ல் அமையப்பெற்றவர் சகோதரர் மூலம் லாபத்தைப் பெறுவார். எந்த தொழில் அல்லது வேலையை எடுத்தாலும் அதை எளிதாக முடிக்கும் ஆற்றல் மிக்கவராக, திறனுடன் இருப்பார். நல்ல ஆயுள் இருக்கும். வேலையாட்கள் வைத்து அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மீது ஆர்வம் இருக்கும். அரசு மூலம் நல்ல பெயரும், புகழும் கிடைக்கப் பெறுவார். செல்வ வளம் சேரும்.

​பன்னிரண்டில் சந்திரன்
samayam tamil
பன்னிரண்டில் சந்திரன்

சந்திரன் 12ல் அமையப் பெற்றவர் பாதங்களில் வலி உண்டாகக் கூடும். வாழ்வில் மதிப்பு இழக்க நேரிடும். கண் பார்வை பிரச்சினை ஏற்படலாம். அறிவுத்திறன் குறைந்திருக்கும். குறுகிய மனப்பான்மையும், மன உளைச்சலும் கொண்டவராக இருப்பார். செலவுகள் அதிகமாக ஏற்படக் கூடும்.


விகர்ணன் !

விகர்ணன்!

பத்து பேர் கூடியிருக்கிற சபையில் அவர்கள் கருத்துக்கு மாற்றாக ஒரு கருத்தைச் செல்வதென்றால் அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதுவும் தீயவர்களே நிறைந்திருக்கிற சபையில் அவர்கள் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு நற்கருத்தைச் சொல்ல வேண்டுமென்றால், அதற்குத் தனியாக ஒரு துணிவு வேண்டும். அதற்கும் மேலாக, தீயோர்கள் நிறைந்து ஆபாச வெறியாட்டம் ஆடும்போது, அங்கிருந்த அறிவிலும் ஞானத்திலும் வயதிலும் மூத்தவர்கள்கூட, ஒவ்வொரு காரணத்துக்காக வாய்மூடி மவுனிகளாக இருந்தபோது, அவர்கள் அனைவரையும்விட அறிவு, ஞானம், வயது என அனைத்திலும் சிறியவனாக இருந்த ஓர் இளைஞர், அந்தச் சபையில் நடக்கும் தீயவர்களின் ஆபாச வெறியாட்டத்தைத் தடுக்க முனைகிறான் என்றால், அந்த இளைஞனுக்கு எவ்வளவு ஆவேசம் இருக்க வேண்டும்!

அதனால் தான் அந்த இளைஞனைப் பகைவர்களில் ஒருவனாகக் கருதிக் கொலைசெய்த மாபெரும் வீரன்கூட தன்னைத் தானே நொந்துகொண்டு அழுதான். இவ்வளவு பெருமை வாய்ந்த அந்த இளைஞன் யார்? உப்புக் கடலில் முத்து பிறப்பதைப் போலப் பிறந்தவன். இருண்ட வானத்தில் தோன்றும் வால் நட்சத்திரம் வருவதைப் போல வந்தவன் அந்த இளைஞன். அவன் கர்ணனைவிடத் தலைசிறந்தவன். திகைக்க வேண்டாம். மகாபாரத யுத்தம் பதினெட்டு நாட்கள் நடந்தது. அதில், பாதி நாட்கள் தாண்டியும் கர்ணன் போரில் கலந்துகொள்ளவில்லை. பத்து நாட்கள் கழிந்து பதினோராவது நாளில் இருந்துதான், அதாவது பீஷ்மர் கீழே விழுந்த பிறகுதான் கர்ணன் போரில் கலந்துகொண்டான். பீஷ்மர் ஏதோ ஒரு வார்த்தை சொல்லிவிட்டார் என்பதற்காக, கர்ணன் அந்த முடிவை எடுத்தான். கர்ணனுக்கு முடிசூட்டி, அங்க தேசத்துக்கு அரசனாக்கி அவனுடைய பெருமைக்கெல்லாம் காரணமாக இருந்தது துரியோதனனா இல்லை பீஷ்மரா?

கர்ணன், துரியோதனனால் அடைந்த நன்மைகள் பற்பல இவ்வாறு கர்ணனைப் பற்றிப் பல விதமாகவும் நாம் பட்டியலிட முடியும். இவ்வாறு எந்தவிதமாகவும் சொல்ல முடியாதபடி, கர்ணனைப் போல அல்லாமல் துரியோதனனை இடித்துத் திருத்த முயல்வான் என்பதற்காகத் தானோ என்னவோ இந்த இளைஞனுக்கு விகர்ணன் எனப் பெயரிட்டார்கள். துரியோதனனின் தம்பிகளில் ஒருவன் விகர்ணன். இவன் மிகவும் நல்லவனாகவும் தர்மம் அறிந்தவனாகவும் இருந்தும். துரியோதனனிடம் அவன் எதையும் பெறவில்லை; ஏச்சும் பேச்சும்தான் பெற்றான். துரியோதனனும் அவன் கூடப் பிறந்தவர்களும் பீஷ்மர் துரோணர், கிருபர் முதலியவர்களிடம் இருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொண்டிருந்தாலும் நல்லவற்றைக் கடைப்பிடிக்கவில்லை. ஆனால் துரியோதனன் தம்பிகளில் ஒருவனான விகர்ணன் நல்லவற்றை மட்டுமே கடைப்பிடித்தான். அதை வியாஸர் வெளிப்படுத்தியிருக்கும் காலம், இடம் சூழல் முதலியவை அற்புதமானவை!

கவுரவர்களும் பாண்டவர்களும் சூதாட்டம் ஆடிக்கொண்டுடிருந்த நேரம்! தர்மர் செல்வங்களை எல்லாம் தோற்று பின் பாண்டவர்கள் அனைவரையும் வைத்துத் தோற்றார். அதன்பின் திரவுபதியையும் ஆட்டத்தில் இழந்தார். ஒற்றை ஆடையுடன் வீட்டுக்கு விலக்காக இருந்த திரவுபதியை துரியோதனன் ஏவலால் துச்சாதனன் பலாத்காரமாகப் பிடித்து இழுந்துவந்து சபையில் நிறுத்தினான். துயரத்தின் எல்லை காணாத திரவுபதி, சபையில் அனைவரையும் நோக்கி பலவிதமாகவும் தர்மங்களைச் சொல்லி நீதி கேட்டாள். யாருமே வாய் திறக்கவில்லை. பதில் சொல்ல முடியாததற்கான காரணத்தையே பதிலாகச் சொன்னார் பீஷ்மர். அந்த நேரத்தில் விகர்ணன் எழுந்தான்: அரசர்களே! சபையில் இவ்வளவு பேர் இருக்கிறீர்களே! திரவுபதியின் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்கள்! பதில் சொல்லாவிட்டால், நம் அனைவருக்கும் உடனே நரகம்தான் கிடைக்கும். பீஷ்மர், திருதராஷ்டிரர், அறிவாளியான விதுரர் ஆகியோர்கூட ஒன்றும் சொல்லவில்லையே! ஆசார்ய புருஷர்களும் பிராம்மணோத்தமர்களுமான துரோணர் கிருபர் ஆகியோர்கூட வாயைத் திறக்கவில்லை. ஏன்? எல்லாத் திசைகளில் இருந்தும் எல்லா அரசர்களும் வந்திருக்கிறீர்கள். யாராவது ஒருவராவது உங்களுக்குத் தெரிந்த தர்மத்தைச் சொல்லுங்கள்! யாருக்கும் எதற்கும் பயப்படாதீர்கள் என்றான்.

அதர்மம் நிறைந்த அந்த சபையில் விகர்ணனின் வாக்கு எடுபடவில்லை. அதற்காக விகர்ணன் மனம் தளர்ந்து போகவில்லை. மறுபடியும் மறுபடியும் இங்கு நடக்கும் அக்கிரமத்தைத் தட்டிக் கேளுங்கள்! என்று கூவினான். அவன் வார்த்தைகள் மட்டும் அங்கே சபையில் வெளிபட்டு எதிரொலித்துக் கொண்டிருந்தனவே தவிர, அங்கிருந்தோர் யாரும் ஒரு வார்த்தைகூடப் பதில் சொல்லவில்லை. அதாவது விகர்ணன் சொன்னதை ஆமோதிக்கவும் இல்லை; மறுத்துப் பேசவும் இல்லை. அந்த அளவுக்குச் சபையில் இருந்தவர்கள் துரியோதனனிடம் பயந்து கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் விகர்ணனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. சற்று சலித்தான். கைகளைப் பிசைந்துகொண்டு பெருமூச்சு விட்டான். அரசர்களே! இவ்வளவு பேரும் பயந்துவிட்டீர்களே! நீங்கள் இப்படி இருந்தால், நீங்களும் உங்களை நம்பியிருக்கும் நாடும் மக்களும் என்ன ஆவார்கள்? வலிமை உள்ளவன் வைத்தது எல்லாம் சட்டம் என்று வாய்மூடி இருப்பதா தர்மம்? விகர்ணன் அங்கே, துரியோதனன் சபையில் பயந்து வாய்மூடி இருந்தவர்களை வார்த்தைகளால் இடித்துவிட்டு, தன் உள்ளத்தில் இருந்தததைத் தெளிவாக வெளிப்படுத்தினான்.

அரசர்களே! நீங்கள் எல்லோரும் என் கேள்விக்குப் பதில் சொன்னாலும் சரி, பதில் சொல்லாவிட்டாலும் சரி. நான் கவலைப்படப் போவதில்லை. கவுரவர்களே! எனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதைச் சொல்லத்தான் போகிறேன். வேட்டை, கள், சூதாட்டம், சிற்றின்பத்தில் மிகுந்த பற்று என்னும் நான்கும்-அரசர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு )மிகவும் துன்பத்தை விளைவிக்கும். இவற்றின்மேல் ஆசை கொண்ட மனிதன் தர்மத்தைவிட்டு விலகிவிடுவான். அது இங்கும் அப்படியே நடக்கிறது. சூதாட்டத்தில் அகப்பட்டுக்கொண்ட தர்மர், அதில் பற்று வைத்த தர்மர், திரவுபதியைப் பந்தயமாக வைத்து இருக்கிறார். அதை இங்கிருப்போர் அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். அதுவே தவறு. அதற்கும் மேலாக திரவுபதி என்ன தர்மருக்கு மட்டுமா சொந்தம்? குற்றமற்றவளும் யாகத் தீயில் இருந்து தோன்றியவளுமான திரவுபதி, பாண்டவர் ஐவருக்கும் அல்லவா சொந்தம்! ஐவருக்கும் பொதுவானவளை, தர்மர் மட்டும் தன் இஷ்டப்படி எப்படி பந்தயப் பொருளாக வைக்கலாம்?

சரி! அவர் வைத்துவிட்டார்; சகோதரர்கள் வாய் திறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் செய்துவிட்டதாகவே வைத்துக்கொள்ளுங்கள். அவராகவா செய்தார்? அந்த நிலைக்குத் தருமரைத் தள்ளி, அவரைத் தூண்டிவிட்டவர்கள் யார்? திரவுபதியைப் பந்தயமாக வை என்று சகுனியல்லவா தூண்டினார். இந்த அசம்பாவிதங்களுக்கு எல்லாம் காரணம் சகுனியே. தெரிந்தும் வாய் மூடி இருக்கிறீர்களே! சரி அதையும் விட்டுவிடுவோம். தர்மர் சூதாட்டத்தில் தன்னைத் தோற்று, அதன்பிறகே திரவுபதியை வைத்துத் தோற்றிருக்கிறார். தானே அடிமையான பிறகு, அந்த தர்மர் எப்படி அடுத்தவரை அடிமையாக்க முடியும்? அது செல்லுபடியாகாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே! ஆகையால் இந்த திரவுபதி அடிமையில்லை. சூதாட்டத்தில் அவளை வைத்து தர்மர் தோற்றது செல்லுபடியாகாது. திரவுபதியை யாரும் அடிமையாக நினைத்து உரிமை கொண்டாட முடியாது. இதுவே என் கருத்து. இதைத்தான் திரவுபதியும் கேட்கிறாள். பதில் சொல்ல வேண்டியது இந்தச் சபையின் பொறுப்பு என்று கர்ஜித்து முடித்தான் விகர்ணன். அத்தி பூத்தாற்போல், எப்போதாவது நல்லவற்றுக்கு ஆதரவு கிடைக்கும் போலிருக்கிறது. தர்ம ஆவேசத்துடன் விகர்ணன் பேசி முடித்ததும், சபையில் ஒரு மாபெரும் மாறுதல் உண்டானது. விகர்ணனைப் புகழ்வதும் சகுனியை இகழ்வதுமாகப் பெருங்கூச்சல் உண்டானது. விகர்ணன் பற்றவைத்த தர்மம் என்னும் சின்னஞ்சிறிய தீப்பொறி பரவத் தொடங்கிவிட்டது போல் இருந்தது ஆனால், அதை ஒரு பெருவெள்ளம் வந்து அணைத்துவிட்டது அதன் பெயர்...

விகர்ணனால் சபையில் உண்டான மாறுதலைப் பார்த்தான் கர்ணன். உடனே அவன் கைகளைத் தூக்கி சபையில் எழுந்த கூச்சலை அடக்கிவிட்டு விகர்ணன் பக்கம் திரும்பினான். விகர்ணா! குலத்தைக் கெடுக்கவந்த கோடாரிக் காம்பே! திரவுபதியின் கேள்விக்கு இங்கு யாரும் பதில் சொல்லாமல் இருந்ததில் இருந்தே அவள் அடிமைதான் என்பதை இங்கு எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள் என்பது உனக்குத் தெரியவில்லையா? சிறு பிள்ளைத்தனமாக இவ்வளவு பெரிய சபையில் அடக்கமில்லாமல் பேசுகிறாய். உனக்கு தர்மமும் தெரியாது, அறிவும் கிடையாது. ஐவருக்கும் பொதுவான, தாசியான திரவுபதி ஒற்றை ஆடையுடன் இருந்தால் என்ன? அல்லது ஆடையே இல்லாமல் இருந்தால்தான் என்ன? ஆச்சரியப்பட அதில் என்ன இருக்கிறது? சிறுபிள்ளை நீ! மூடு வாயை! என்று விகர்ணனை அடக்கிய கர்ணன், துச்சாதனன் பக்கம் திரும்பினான்.

துச்சாதனா! பாண்டவர்களின் மேல் உள்ள ஆடைகளையும் திரவுபதியின் ஆடைகளையும் கொண்டு வா! போ! என்று ஏவினான். கர்ணனின் அந்த வார்த்தைகள் விளைவித்த விபரீதம் எல்லோருக்குமே தெரியும்! தன்னுடைய வாக்கு சபையில் இவ்வாறு கர்ணனால் அடித்துத் தூக்கி வீசப்பட்டத்தை அறிந்து, விகர்ணன் மனது என்ன பாடுபட்டிருக்கும்? அவன் மனது பாடுபட்டதோ இல்லையோ, அவனைக் கொன்றவனின் மனம் அழுதது. ஆமாம்! விகர்ணனைக் கொன்றவன், விகர்ணனுக்காக அழுதான். துரோணரின் தலைமையில் கவுரவர்கள் போர் புரிந்து கொண்டிருந்தபோது(ஏற்கெனவே நாம் பார்த்த) ஜயத்ரத வதத்துக்குப் பிறகு போர்க்களத்தில் பீமன் துரியோதனனின் தம்பிகளில் ஏழு பேரை ஒட்டுமொத்தமாகக் கொன்றான். சத்ருஞ்யன், சத்ருஸகன், சித்ரன், சித்ராயுதன், த்ருடன், சித்ரஸேனன், விகர்ணன் என்னும் அந்த ஏழு பேரும் மாபெரும் வீரர்கள். அவர்களில் ஒருவனான விகர்ணனைக் கொல்ல நேர்ந்ததற்காக பீமன் அழுதான்.

தம்பி விகர்ணா! எங்கள் நன்மையில் பற்று கொண்டவன் நீ! விசேஷமாக தர்மரின் நன்மையில் பற்று அதிகமாகக் கொண்டவன். அப்படிப்பட்ட தர்மரின் உன்னைக் கொன்று தரையில் தள்ளும்படியாக ஆகிவிட்டதே! சே! க்ஷத்திரிய தர்மம் எத்தனை கொடியது! என்று தன்னைத்தானே பீமன் நொந்துகொண்டான். ஆஞ்சநேயரை நேருக்கு நேராகத் தரிசித்து அவர் அருளை முழுமையாகப் பெற்ற மாபெரும் வீரரான பீமனையே அழ வைத்த ஒரு கதாபாத்திரம் விகர்ணன். துரியோதனனும் அவன் சகோதரர்களும் செய்த தீமைகளை எல்லாம் விவரித்த வியாஸர், அவர்களில் நல்லவனான விகர்ணனின் தர்ம ஆவேசத்தையும் பதிவு செய்திருக்கிறார்

நோய் #எதிர்ப்பு #சக்தி #அதிகரிக்க. #கொய்யா #இலைக் #குடிநீர் :

#நோய்  #எதிர்ப்பு  #சக்தி #அதிகரிக்க. #கொய்யா #இலைக்  #குடிநீர் : 

 கொய்யா மரத்தின் பழத்தை விட அதன் இலைகளுக்கு தான் மருத்துவக் குணங்கள் அதிகம் உள்ளன.  அடிக்கடி  சளிப்பிடிக்கும் நோயாளிகளும் ,  ஆஸ்துமா நோயாளிகளும் கொய்யாப் பழத்தைச் சாப்பிடக் கூடாது. மற்றவர்கள் தினம் ஒரு கொய்யாப் பழம் சாப்பிடலாம். கொய்யாப் பழம் #மலச்சிக்கலை நீக்க வல்லது. 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்புச் சுவை உடைய கொய்யா பழத்தைச்  சாப்பிடக் கூடாது. அவர்கள் துவர்ப்பு சுவை உடைய கொய்யாக் காயைச் சாப்பிட வேண்டும்.

#கொய்யா  #இலையின் #பயன்கள் :

கொய்யா மரத்தின் ஆங்கிலப் பெயர் Guava.

தாவரவியல் பெயர்:
 Psidium guajava .

#தன்மை : குளிர்ச்சி
#சுவை :  துவர்ப்பு

#கொய்யா #இலைக் #குடிநீர் :

பச்சையான 8 கொய்யா இலைகளைப் பறித்து வந்து, ஒரு பாத்திரத்திலிட்டு  அதில் 500 மி.லி நீர்விட்டு பாதியாக வற்றக் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி இளம்சூட்டில்  காலை உணவிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில்  குடிக்கவும்.
இதேபோல் குடிநீர் செய்து மாலையிலும் குடிக்கவும். இவ்வாறு 3 மாதங்கள் தொடர்ந்து  குடித்துவர #சர்க்கரைநோய் கட்டுப்படும். 

சர்க்கரை நோய்க்கு ஆங்கில மாத்திரை  சாப்பிடுபவர்கள் அந்த மாத்திரைகளை உணவிற்கு பின்பு சாப்பிட்டு, இந்த குடிநீரை உணவிற்கு முன்பு குடித்து வரலாம்.
ஆரம்பநிலை சர்க்கரை நோய்க் காரர்களுக்கு இந்த கொய்யா இலைக் குடிநீரே நல்ல பலனைத் தரும்.!

கொய்யா இலைக் குடிநீரை தினமும் காலை,மாலை குடித்துவர #கீழ்க்காணும் #நோய்கள் #குணமாகும்.

1. நீரழிவுநோய் (டைப்-2)  கட்டுப்படும்.
2. உயர் இரத்தழுத்தம் ( B.P)    சீராகும்.
3. மலச்சிக்கல் நீங்கும்.
4. மூலநோய்க் குணமாகும்
5. இரத்தமூலம் நீங்கும்
6.தீராத வயிற்றுவலி தீரும்
7.அதிக உடல் பருமன் குறையும்.
8. குறை தைராய்டு என்ற ஹைப்போ தைராய்டு சீராகும்.
9.கெட்ட கொழுப்பை (L.D.L),(T.G.L) கரைக்கும்.
10.மாத விடாய்கால அதிக இரத்தப் போக்கை நிறுத்தும்.
11. பெண்களுக்கு வெள்ளைப்படுதலை குணமாக்கும்
12. கருப்பை, சினைப்பை நீர்க்கட்டிகளை கரைக்கும்
13. கருப்பை நோய்களை நீக்கி குழந்தைப் பேறு கிடைக்க வழிவகுக்கும்
14. ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்கும்
15. விந்தணு குறைபாட்டை போக்கும்.
16.விரை வீக்கத்தைக் குணமாக்கும்.
17.பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தைக் குறைக்கும்.
18 புற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.
19. மஞ்சள் காமாலையைக் குணமாக்கும்.
20. கல்லீரல் நோய்களை நீக்கும்.
21. சிறுநீரை நன்கு பிரிக்கும்.
22. சிறுநீர் சம்மந்தப்பட்ட நோய்களை குணமாக்கும்.
23.நீரடைப்பு,சதையடைப்பு நீங்கும்.
24. வாந்தி நிற்கும்
25. நெஞ்சு எரிச்சல் நீங்கும்
26.வயிற்று உப்பிசம் நீங்கும்.
27.வயிறு எரிச்சல் நீங்கும்
28. வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.
29. வாய்ப்புண், தொண்டைப்புண்,வயிற்றுப் புண்கள் ஆறும்.
30. குடிபோதை வெறி தணியும்.
31. மது மீது நாட்டம் குறையும்.
32.கிருமிகளால் வரும் வயிற்றுப் போக்கை நிறுத்தும்.
33. சூட்டினால் வரும் இருமல் குணமாகும்.
34. இதய நோய்கள் குணமாகும்.
35. நன்கு பசி எடுக்கும்.
36. செரியாமை நீங்கும்.
37. அடிக்கடி ஏப்பம் வருதல் குணமாகும்.
38. தலைச்சுற்றல்,மயக்கம் சீராகும்.
39.காலரா கட்டுப்படும். (தினம் 4வேளை குடிநீர் குடிக்க வேண்டும்)
40. வயிற்றில் கெட்ட கிருமிகளை அழிக்கிறது.
41. உடல் சோர்வைப் போக்குகிறது.
42. மூளையை பலப்படுத்துகிறது.
43. தோல்நோய்களை குணமாக்குகிறது.
44. இரத்தத்தை சுத்தமாக்குகிறது.
45. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
46.தூக்கமின்மையைப் போக்குகிறது.
47. மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
48.பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணமாக்குகிறது.
49.மூட்டு எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.
50.நரம்புத் தர்ச்சியைப் போக்குகிறது.
51.கண்பார்வைத் திறனை அதிகரிக்கிறது.
52. கெட்ட பாக்டீரியா, பூஞ்சைகளை அழிக்கிறது.
53. நினைவாற்றலை அதிகரிக்கிறது.
54. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கின்றது.
55. உடலுக்குத் தேவையான  உயிர்ச் சத்துக்களும் (வைட்டமின்) தாது உப்புக்களும் நிறைந்தது.ஆகவே இளநரையைத் தடுக்கும்.
56. வைட்டமின் "C 'பற்றாக் குறையினால் வரும் #ஸ்கர்வி நோய் வராமல் தடுக்கிறது.

#வயிற்றுப்போக்கு #நிற்க:

4 கொய்யா இலைகளை  பறித்து கழுவி,  அம்மியில் வைத்து நீர்விட்டு நன்கு அரைத்து அவ்விழுதை  ஒரு தம்ளர் மோரில் கலந்து குடிக்கவும். இவ்வாறு தினம் 3 வேளை குடித்துவர வயிற்றுப்போக்கு விரைவில் குணமாகும்.

மேற்கூறிய நோய்கள் அனைத்தும் #பித்தநோயில்
 அடங்கும்.

இனி #கபம் ( சளி) நோய்களை  எவ்வாறு போக்கலாம் என்று பார்ப்போம்.!

கொய்யா இலைகள் - 5
இஞ்சி        - 5 கிராம்
ஏலக்காய்  - 2 
மிளகு        - 10 
நீர்             -    2 தம்ளர்

இவற்றை ஒரு பாத்திரத்திலிட்டு 2 தம்ளர் நீர் ஒரு தம்ளராக வற்றும் படிக் காய்ச்சி காலையில் உணவிற்கு முன்பு அல்லது உணவிற்கு பின்பு குடிக்கவும்.

இதேபோல் மாலையிலும் குடிக்க வேண்டும். இவ்வாறு தினம் 2 வேளை இக்கசாயத்தைக் குடித்து  வர சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா ஆகியன தீரும்.

#செய்முறை:
பச்சையான கொய்யா இலைகளை 5 பறித்து வந்து அதைக் கழுவி, ஒரு பாத்திரத்தில் இட்டு, அதனுடன் உங்கள் கட்டைவிரலுக்கு பாதியளவு   தோல் சீவிய இஞ்சியை தட்டிப் போட்டு, ஏலக்காய் 2 எண்ணிக்கை எடுத்து அதையும் நன்கு இடித்துப் போட்டு,10 எண்ணிக்கை முழு மிளகையும் இட்டு, 400 மி.லி நீர் விட்டு பாதியாக வற்றக் காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் உணவிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு  குடிக்கவும். வயிற்றுப்புண் உடையவர்கள் காலை உணவிற்குப் பின்பு குடிக்கவும். 

இவ்வாறு தினம் காலை, மாலை என 2 வேளை குடித்துவர 
கபம் (சளி) நோய்களும், மூட்டுவலி போன்ற வாத நோய்களும் படிப்படியாக  குணமாகும்.

#பல்நோய்கள்   #தீர:
காலையில் மூலிகைப் பற்பொடியால் பல்தேய்த்த பின்பு வெறும் வயிற்றில் 
3 இளம் கொய்யா இலைகளை வாயிலிட்டு நன்கு மென்று விழுங்கி அதன் சாற்றைக் குடித்துவர

1.பல்வலி நீங்கும்.
2. பற்களில் சொத்தை வராமல் தடுக்கும்.
3. வாய்துர்நாற்றம் நீங்கும்.
4. ஈறு வீக்கம் வற்றும்.
5. பல்லீறுகள் பலப்படும்.
6. பல்லீற்றில் இரத்தம் வடிதல் நிற்கும்.
7.வாய்ப்புண், நாக்குப்புண், தொண்டைப்புண் ஆறும்.

#முகம் #பொலிவு #பெற:

கொய்யா இலைகளை 5 பறித்து நீர் விட்டு நன்கு அரைத்து,  இதை 2 தேக்கரண்டி தயிரில் குழைத்து பசைபோல் ஆக்கி பெண்கள் முகத்திற்கு பூசி ஒருமணி நேரம் கழித்து முகம் கழுவி வர

1. முகப்பருக்கள் நீங்கும்.
2.முகத்தில் கறும்புள்ளிகள் மறையும்
3.முகச் சுருக்கம் நீங்கும்.
4. முகம் பொலிவு பெறும்.

#வெட்டுக்காயம் #ஆற:

கொய்யா இலைகளை அரைத்து வெட்டுக்காயத்தின் மீது கட்டிவர காயங்கள் விரைவில் ஆறும்.

#தலைமுடி  #உதிர்தல்  #நிற்க :

முதலில்  கூறிய கொய்யா இலைக் கசாயத்தை தயார் செய்து அதை ஆறவைத்து பெண்கள் இதை தலையில் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் ஊறவைத்து குளித்துவரவும். இவ்வாறு வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்துக் குளித்துவர

1.தலைமுடி உதிர்தல் நிற்கும்.
2.பொடுகு நீங்கும்
3. தலை அரிப்பு நீங்கும்.
4.பேன்கள் நீங்கும்
5.தலைமுடி வெடித்தல் சரியாகும்
6.தலைமுடி பலம் பெறும்.
7.முடி அடர்த்தியாக வளரும்.

#கொய்யா #இலையில் #உள்ள #சத்துக்கள்:

1. நார்ச்சத்து 
2.வைட்டமின் A, B 6, C
3.கால்சியம்
4. இரும்புச்சத்து
5.பாஸ்பரஸ்
6.சோடியம்
7.பொட்டாசியம்
8.துத்தநாகம்
9. மாங்கனீசு
10. தாமிரம்
11. ஃபோலிக் அமிலம்.
12. டானின்கள்
13.கரோட்டினாய்டுகள்
14.ஃபிளேவனாய்டுகள்
15. புற்று நோயை எதிர்க்கும் மூலப்பொருட்களான லைக்கோபீனே ( Lycopene) 
க்வெர்செடின் (Quercetin)
பாலிபினால்கள் ஆகியவை உள்ளன.ஆகவே இவை நுரையீரல் புற்று, வாய்ப்புற்று, வயிற்றுப்புற்று, பெருங்குடல் புற்று, ஆண்களின் ப்ராஸ்டேட் சுரப்பிப் புற்று, 
பெண்களின் மார்பகப்புற்று,  ஆகியவற்றைத் தடுக்கிறது.

16. வயதான தோற்றத்தை எதிர்க்கும் பண்புடைய கொலைன் என்ற சத்தும் இந்த கொய்யா இலையில் உள்ளது. ஆகவே இது ஆயுளை நீடிக்கும்.

#கீரீன் #டீயை #விட #இது #சிறந்தது:

பத்தியம் இல்லாத பக்கவிளைவுகள் அற்ற எளிதில் கிடைக்கும் இந்த கொய்யா இலையின் பயன் நமக்குத் தெரிவதில்லை. ஆனால் கிரீன் டீ யை இன்று  கிலோ 1000 ரூபாய்க்கு வாங்கிப் பயன்படுத்துகிறோம். இனிவரும் காலத்தில் இந்த கொய்யா இலை டீ பிரபலமாகும்.  அதற்கு திருமுனிவரின் இந்த கட்டுரை மிக முக்கிய காரணமாகத் திகழும்.

ஆகவே இந்த கொய்யா இலைகளை நாம் பறித்து உலர்த்தி இடித்து  கிரீன் டீ வடிவில் கொண்டு வந்தால் இந்தியாவில் நல்ல விற்பனை செய்யலாம்.

பொதுவாக கொய்யா இலையை பச்சிலையாக பறித்து நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் 100% பலன் கிடைக்குமென்று வைத்துக் கொண்டால் இதை காயவைத்து டீத் தூள் வடிவில் பயன்படுத்தும் போது 90% அளவு பலன் கிடைக்கிறது.

கிரீன் டீயை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. உணவு சாப்பிட்ட  1மணி நேரம் கழித்தே குடிக்க வேண்டும். ஆனால் இந்த கொய்யா இலை டீயை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.!
புற்றுநோயை எதிர்ப்பதில் கிரீன் டீயைவிட இந்த கொய்யா இலை சிறந்தது.
ஆரம்பநிலை புற்று நோய்களுக்கு இதை தனி மருந்தாக கொடுக்கலாம்.
நாள்பட்ட புற்று நோய்க்கு மற்ற மருந்துகளுக்கு துணை மருந்தாக கொடுக்கலாம்.

ஆகவே கொய்யாத் தோப்பு வைத்துள்ள நண்பர்கள் இந்த கொய்யா இலைகளைப் பறித்து 5 நாட்கள் நிழலில் உலர்த்தி 6 வது நாள் 1 மணிநேரம்  மதியம் வெயிலில் காயவைத்து  உடனே உரலில் இட்டு கசாய சூரணம் போல இடிக்க வேண்டும். (இடித்து பொடி செய்ய கூடாது.) கிரீன் டீ வடிவில் இருக்க வேண்டும்.
கனடா நாட்டில் 1 கிலோ கொய்யா இலைப் பொடி 1700 ரூபாய்க்கு விற்கின்றனர்.
ஆகவே நாமும் நமது நாட்டில் கொய்யா இலை குடிநீர் பொடி மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க மூலிகை தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும்.

ஒவ்வொருவரின் வீட்டுத் தோட்டத்திலும் இனி நாட்டுக் கொய்யா மரம்  வளர்க்க வேண்டும். இதன் மூலம் நமக்குத் தேவையான மருந்தை நாமே தயார் செய்ய வேண்டும். நாட்டில் தற்சார்புக் கொள்கை வளர வேண்டும்.!

     

Sunday, 24 May 2020

உங்கள் ராசிக்கு எந்த செல்ல பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும்னு நீங்களும் தெரிஞ்சிக்கணுமா

செல்லப்பிராணிகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாகி விடுவார்கள். ஒரு சிலரைத்தவிர செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் பெரும்பாலோனோருக்கு ஆர்வமும், விருப்பமும் அதிகமாக இருக்கும். அதிலும் நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பதில் அதிக அளவு ஆர்வம் காட்டுகின்றனர் என்றே கூறலாம். அது மட்டுமில்லாமல் ‘லவ் பேர்ட்ஸ்’ எனப்படும் கிளி வகைகளையும் அதிக அளவில் வளர்ப்பதை விரும்புகின்றனர். இதுபோன்ற வளர்ப்பு பிராணிகளை வீட்டில் வளர்ப்பதால் நம்மிடம் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்பது ஆன்மீக ரீதியாக கண்டுபிடிக்கபட்ட உண்மை. எந்த ராசிக்காரர்கள்? எந்த வளர்ப்பு பிராணியை வளர்த்தால்! மேலும் அதிர்ஷ்டம் பெருகும் என்பதை இப்பதிவில் காணலாம். வளர்ப்பு பிராணிகளுக்கு வீட்டில் இருக்கும் துர் சக்தியை கண்டுபிடிக்கும் ஆற்றல் உண்டு. வீட்டில் இருப்பவர்களை தீய சக்திகளிடமிருந்து முதலில் பாதுகாப்பது செல்லப்பிராணிகள் தான். வீட்டில் தீய சக்திகள் இருந்தால், நன்றாக ஆரோக்கியமாக இருக்கும் உங்கள் வீட்டு செல்லப் பிராணி கூட திடீரென இறந்துவிடும். இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால் செல்லப்பிராணி உங்களை மிகப் பெரிய விஷயத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்று அர்த்தம்.
பறவைகளை வளர்ப்பதால் அதிர்ஷ்டம் வரும் என்று கூறுவார்கள். கிளி, புறா, கோழி போன்ற பறவைகளை வீட்டில் வளர்ப்பதால் வீடு சுபிட்சமாக இருக்கும் என்றும், உங்களுக்கு வர இருக்கும் அதிர்ஷ்டத்தை தடுக்காமல் பாதுகாக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பறவைகளை நேசிப்பவர்கள் அவற்றை துன்புறுத்துவதில்லை. இவற்றை நீங்கள் வளர்க்க விரும்பினால் உங்கள் வீட்டை சுற்றி மரங்களையும் வளர்க்க வேண்டும். புதனின் ஆதிக்கம் பெற்ற ராசிக்காரர்கள் பறவைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவர் என்று கூறப்படுகிறது. உங்கள் வீட்டில் பறவைகளை கூண்டில் அல்லாமல் வெளியில் வைத்து வளர்க்கிறீர்கள் என்றால் நீங்கள் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம். உங்களிடம் நல்ல சிந்தனைகளும், செல்வ வளமும் பெருகியிருக்கும். குரு மற்றும் சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற ராசிக்காரர்கள் நாய்கள் வளர்ப்பதால் நன்மைகளைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. நாய்கள் வளர்ப்பதால் உங்களிடம் சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கும். நாய்கள் வளர்ப்பவர்களுக்கு கோபம் அதிகமாக வராது. அவர்களிடம் அதிக அன்பும், அக்கறையும், வெளிப்படையான பேச்சும் கட்டாயம் இருக்கும். நாயைப் பற்றி நாம் அதிகம் கூற வேண்டிய அவசியம் இல்லை. தன் எஜமானருக்காக இன்னுயிரையும் கொடுக்கும் நன்றியுள்ள ஒரு செல்லப்பிராணியாக இருப்பது அனைவரும் அறிந்ததே. உங்களால் நாய் வளர்க்க முடியவில்லை என்றால், நீங்கள் நாய் படத்தையோ அல்லது உருவத்தையோ உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். நாய், பைரவரின் அம்சமாக பார்க்கப்படுவதால் சகல யோகங்களையும் உங்களுக்கு பெற்றுத்தரும். - Advertisement - மேஷம், துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்கள் சேவல் படத்தை சனி உச்சம் பெற்ற காலத்தில் வீட்டில் வைப்பதால் அதிர்ஷ்டம் உண்டாகும். முடிந்தவர்கள் சேவலை வீட்டில் வளர்க்கலாம். முடியாதவர்கள் சேவல் உருவ சிறிய சிலையை வேலை செய்யும் இடங்களிலோ, வியாபார தளங்களில் வைத்துக்கொள்ளலாம். மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ராசிக்காரர்கள் வீட்டில் மீன் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. மற்ற ராசிக்காரர்கள் அனைவரும் மீன் வளர்ப்பதால் அதிர்ஷ்டம் பெறலாம். மீன் என்பது மீன ராசிக்குரிய குறியீடாக இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் மீன் வளர்ப்பது அவ்வளவு நல்ல பலன்களை தராது. தனுசு ராசிக்காரர்கள் காளை மாட்டை வளர்ப்பது நல்லதல்ல. ரிஷப ராசிக்குரிய குறியீடான காளைமாடு தனுசுராசிக்கு பொருந்துவதில்லை. இதுபோல் ஒவ்வொரு ராசிக்கும் குறியீடுகளின் அடிப்படையில் செல்லப்பிராணிகள் அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் பெற்றுத்தரும். மேஷ ராசிக்காரர்கள் ஆடு, கோழி, சேவல், குதிரை போன்ற பிராணிகளை வளர்ப்பதால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். ரிஷப ராசிக்காரர்கள் பசு, காளை, முயல் போன்ற விலங்குகளை வளர்ப்பதால் இல்லத்தில் மகிழ்ச்சியும், சுபீட்சமும், அதிர்ஷ்டமும் பெறலாம். மிதுன ராசிக்காரர்கள் லவ் பேர்ட்ஸ், கிளி, நாட்டுக்கோழி, பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் முன்னேற்றமும், அதிர்ஷ்டமும் பெறலாம். கடக ராசிக்காரர்கள் கோழி, வான்கோழி, வாத்து போன்ற பறவைகளை வளர்ப்பதால் குடும்பத்தில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் உண்டாகும். கடக ராசிக்காரர்கள் நாய் வளர்க்க கூடாது. அதிலும் பொதுவாகவே சூரியன் பகை வீடாக இருந்தால் கடகம் மட்டுமின்றி எந்த ராசிக்காரர்களும் நாய் வளர்க்கக் கூடாது. சிம்ம ராசிக்காரர்கள் ஆடு, மாடு, நாய், கோழி போன்றவற்றை வளர்ப்பதால் அதிர்ஷ்டம் உண்டாகும். கன்னி ராசிக்காரர்கள் நாய், கிளி, லவ் பேர்ட்ஸ் போன்ற பறவைகளை வளர்ப்பதன் மூலம் அதிர்ஷ்டம் பெறலாம். அதிலும் குறிப்பாக லவ்பேர்ட்ஸ் வளர்ப்பதால் குடும்பத்தில் பிரச்சனை, கணவன் மனைவி பிரச்சனை தவிர்க்கலாம். துலாம் ராசிக்காரர்கள் விலங்குகளை வளர்ப்பதை விட பறவைகள் வளர்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தை தரும். கிளி, புறா, பஞ்சவர்ண கிளி போன்றவற்றை தாராளமாக வளர்க்கலாம். துலாம் ராசிக்காரர்களுக்கு நாய் வளர்ப்பது நல்லதல்ல. நாயால் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் கோழி இனத்தை சேர்ந்த எந்த வகையான பறவைகளையும் வளர்க்கலாம். இது போன்ற பறவைகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தை பெற்று தரும். பறவைகள் வளர்க்க முடியாதவர்கள். நீங்கள் அதிகம் புழங்கும் இடங்களில் பறவைகள் படத்தை வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும். தனுசு ராசிக்காரர்களுக்கு யானை, மயில் போன்றவற்றை நீங்கள் வளர்க்கலாம். ஆனால் யானை, மயில் எல்லாம் வளர்த்தால் சிறை தண்டனை தான் கிடைக்கும் என்பதால் காளை, பசு மாடு வளர்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். யானை, மயில் படமாக வைத்துக் கொள்ளலாம். இவற்றை எப்போதாவது காணும்போது நீங்கள் உங்கள் கைகளால் உணவு வாங்கி கொடுப்பது நல்லது. மகர ராசிக்காரர்களுக்கு கழுதை, பன்றி போன்றவை அதிர்ஷ்ட பிராணிகளாக உள்ளன. ஆனால் இந்த காலத்தில் இவற்றை எல்லாம் வளர்க்க முடியாது என்பதால் நீங்கள் கழுதை படத்தை மாட்டி வைப்பது யோகத்தை பெற்று தரும். கழுதை படத்தை யார் மாற்றி வைத்தாலும் யோகம் தரும். ஆனால் மகர ராசிக்காரர்களுக்கு அது பெரும் யோகமாக அமையும். கும்ப ராசிக்காரர்கள் தினமும் காக்கைக்கு உணவு வைப்பதால் நிறைய நன்மைகளைப் பெறலாம். கும்ப ராசிக்கும் விலங்குகளை விட பறவைகளே அதிர்ஷ்டம் தரும் செல்லப்பிராணியாக இருக்கின்றன. நீங்கள் எந்த வகை பறவைகளாக இருந்தாலும் தாராளமாக வளர்க்கலாம். நாய் வளர்க்கக் கூடாது. மீன ராசிக்காரர்கள் ஆடு, மீன், கோழி வளர்த்தால் அதிர்ஷ்டம் தரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாக்கும். நேர்மறை ஆற்றல்களை ஊடுருவ செய்யும்.

Friday, 22 May 2020

பேரிச்சம் கொட்டை

பேரிச்சம் பழத்தை போலவே அதன் கொட்டையிலும் அதிக சத்துக்கள் உள்ளன. எனவே அதனை வறுத்து பொடி செய்து வாரத்தில் ஒரு முறை பாலில் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும்.

உங்கள் வீட்டில், எறும்புகள் திடீரென்று கூட்டம் கூட்டமாக வருமா? எறும்பு சாக்பீஸ் போட்டுட்டு அப்படியே விட்றாதீங்க! காரணத்தையும் தெரிஞ்சுக்கோங்க.

வீடுகள் என்று இருந்தால் எறும்புகள் கட்டாயமாக வரும். இதற்கெல்லாம் காரண காரியங்கள் இருக்கின்றதா? என்ற கேள்வி உங்கள் மனதில் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது அல்ல. எறும்புகள் படை எடுத்து வருவதற்கும், காரணம் உண்டா? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் உங்களிடம் இருந்தால், இந்த பதிவை தொடர்ந்து படிக்கலாம். குடித்தனம் செய்யும் வீட்டில் திடீரென்று எரும்பு வருவதற்கு காரணம், நம் வீட்டில் உணவு பண்டங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் இருப்பதும் ஒன்று. இதைத் தவிர்த்து வெயில் காலங்களில், குளிர்ச்சியான இடங்களைத் தேடி எறும்புகள் வருவது இயற்கைதான். இவை எதுவுமே இல்லாமல் உங்கள் வீட்டு வெளிப்புறங்களில், கதவுகளுக்கு பின் பக்கங்களில், இப்படி எறும்புகள் வருவதற்கு வாய்ப்பே இல்லாத சில இடங்களில் திடீரென்று சாரைசாரையாக வரும். இந்த எறும்புகள் உங்களுக்கு எதை உணர்த்துகிறது என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள ஒரு அவசியம் இருக்கிறது. அதைப் பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம். எதிர்பாராமல் கூட்டம் கூட்டமாக உங்கள் வீட்டிற்குள் படையெடுக்கும் பிள்ளையார் எறும்பாக இருந்தாலும் சரி. கட்டெறும்பாக இருந்தாலும் சரி. யாருடைய கஷ்டத்திற்கோ, நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. அதாவது உங்கள் மேல் பாசம் வைத்துள்ள ஒருவரிடம், நீங்கள் நீண்ட நாட்களாக பேசாமல் இருக்கும் பட்சத்தில், அதை நினைவுபடுத்த கூட இந்த எறும்புகளானது உங்கள் வீட்டில் படையெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது உங்களுக்கு நெருங்கிய சொந்தமாக இருந்தாலும், தூரத்து சொந்தமாக இருந்தாலும் உங்கள் மீது உண்மையான பாசம் வைத்திருப்பவர்கள் யாரையும் நீங்கள் தள்ளி வைத்திருக்கிறீர்கள் என்பதை குறிக்கின்றது. - Advertisement - பெண்களாக இருந்தால் கட்டாயம் அம்மா அப்பாவிடம் பேசாமல் இருக்க மாட்டீர்கள். உங்களுடைய மாமனார் மாமியார் உங்களுக்கு ஆகாதவர்கள் ஆக இருந்தாலும் கூட, அவர்கள் மனதில் உங்கள் மீது கொஞ்சம் பாசம் இருக்க வாய்ப்பு உண்டு. அவர்களின் ஏக்கத்திற்கு நீங்கள் காரணமாக இருந்தாலும், அதை வலியுறுத்த இந்த எறும்புகள் உங்கள் வீடு தேடி வரும். சில ஆண்கள் தங்களுடைய தாய் தந்தையரிடம் சண்டை போட்டுக் கொண்டு பேசாமல் இருப்பவர்களும் உள்ளார்கள். அப்படி, இருக்கும் பட்சத்தில், அது மிகப்பெரிய தவறு. உங்களிடம் பாசம் வைத்திருப்பவர்கள் உங்களை நினைத்து கொண்டு ஏங்கிக் கொண்டிருக்கும் பட்சத்தில், அது பெரிய பாவத்தை கொண்டு வந்து, நம் சந்ததியினருக்கு சேர்த்து விடும் என்பதை நினைவில் கொண்டு, உங்கள் சொந்த பந்தங்களை, அலட்சியப்படுத்தாமல் நேரில் சென்று பார்க்க முடியவில்லை என்றாலும், தொலைபேசியிலாவது உரையாடும் வாய்ப்பை  ஏற்படுத்திக்கொள்ளுங்கள். சில வீடுகளில் கணவன் மனைவி பிரிந்து இருக்கும் பட்சத்தில், அவர்கள் மனதில் பாசம் இருக்க வாய்ப்பு உள்ளது. மனதிற்குள்ளேயே ஆயிரம் முறை மன்னிப்பு கேட்பவர்கள், வெளியில் ஒருமுறை மன்னிப்பு கேட்டால் போதுமே, பிரச்சனைகள் தீர்ந்துவிடும். - Advertisement - இதை எத்தனை பேர் நம்புவீர்கள் என்பது தெரியாது. ஆனால், சித்தர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள, குறிப்புகள் தான் இவை அனைத்துமே. யாருடைய ஏக்கத்திற்கும், யாருடைய ஏமாற்றத்திற்கும் கட்டாயம் நீங்கள் காரணமாக இருக்காதீர்கள். உங்கள் மீது பாசம் வைத்து இருப்பவர்களை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், உங்களுக்கு நெருங்கிய சொந்தங்களாக இருந்தால், அவர்களிடம் பேசுவதில் எந்த தவறும் இல்லை. குறிப்பாக குழந்தைகளை தாத்தா பாட்டிகளிடம் பேச வைப்பது அவசியம். மகனாக இருந்தாலும் மகளாக இருந்தாலும், தன்னுடைய தாய் தந்தையரிடம் பேசுவது அவசியம். மருமகள், மருமகன் தங்களுடைய மாமனார் மாமியாரிடம் பேச வேண்டியது அவசியம். இந்த வரிசையில் அத்தை, மாமா, பெரியம்மா பெரியப்பா என்று யார் இருந்தாலும் உங்கள் மீது பாசம் வைத்திருப்பவர்கள் என்றால் அவர்களை ஒதுக்கி வைக்காமல் பேசுவதே நல்லது. இப்படி உங்க சொந்த பந்தங்களில் யாரையாவது நீங்கள் நீண்ட நாட்களாக பேசாமல் ஒதுக்கி வைத்து உள்ளீர்களா? என்று சிந்தித்துப் பாருங்கள்! உங்கள் வீட்டில் எறும்புகள் படை எடுத்து வருவதற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம். உங்களால் சில சொந்த பந்தங்கள் இடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், பேச முடியாத சூழ்நிலை என்றால் கொஞ்சம் அரிசி மாவு அல்லது ரவையிலோ சிறிதளவு சர்க்கரையை சேர்த்து கலந்து கோவில்களுக்கு சென்று அங்கு இருக்கும்  எறுப்புகளுக்கு உணவாக அளிக்கலாம். இதேபோல், வீட்டின் அருகில் செடி கொடிகள் இருந்தால் அங்கு வாழும் எறும்புக்கு, அரிசி மாவு சர்க்கரை ரவை சேர்த்து, உணவாக போடலாம். உங்கள் வீட்டில் வரும் எறும்புகள் காணாமல் போய்விடும். சொந்தபந்தங்கள் என்றுமே ஒன்றுகூடி இருப்பது நல்லது தானே இதை நமக்கு கூட்டம் கூட்டமாக, என்றுமே ஒன்றாக வாழும் எறும்புக் கூட்டம் வலியுறுத்துகிறதுஎன்று சொன்னால் அதை நம்புவதில் ஒன்றும் தவறு இல்லையே! உங்கள் மீது அன்பு வைத்திருப்பவர்கள், யாருடைய ஏக்கத்திற்கும் நீங்கள் காரணமாக இருக்கக் கூடாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Sunday, 17 May 2020

அஸ்வகந்தா மருத்துவ பலன்கள்

அஸ்வகந்தா அதிகம் நம் வாழ்க்கையில் பயன்படுத்த மறந்து இருப்பது அதே நேரத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டியது.அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது.வட மொழியில் அஸ்வகந்தா தமிழகத்தில் இதன் பெயர் அமுக்கிரா கிழங்கு.இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகை உண்டு.சீமை அமுக்கிரா கிழங்கே சிறந்தது என்று பாரம்பரியம் பரிந்துரைக்கிறது.மூலிகை வயாக்ரா என்று இதற்கு இன்னொரு பெயரும் உண்டு .

பழமையான மூலிகையான அஸ்வகந்தாவை நம்முடைய முன்னோர்கள் ஆயுர்வேத முறையில் ஞாபகமறதியை சரி செய்ய பயன்படுத்தி வந்தனர்.இதில் இயற்கையாகவே நினைவு திறனை அதிகரிக்கும் பண்பு உள்ளது.நம்முடைய உடலுக்கு தேவையான வேதி பொருட்கள் புரதங்கள்,அமினோஅமிலங்கள் இதில் நிரம்பியுள்ளதால் இது நமக்கு நல் ஆற்றலை தருகிறது.


 
ஆண்மையை அதிகரிப்பது மட்டுமல்ல,அஸ்வகந்தா நம் மூளையின் நேர்மறை செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.மூளையில் ஏற்படும் அழற்சி,வயோதிகம் போன்றவற்றை கட்டுப்படுத்தும்.நமது உடலில் உள்ள Free radicals ஐ வெளியேற்றி உடலை ஊக்கமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இது உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும். உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளை அஸ்வகந்தா சீர் செய்யும்.

இதன் உறுப்புகளில் இருந்து நமக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.மேலும் இதில் உள்ள வித்தனாய்டு மற்றும் சோம்னிட்டால் சத்துக்கள் நம்முடைய மனஅழுத்தத்தை குறைத்து நம்மை தேவையற்ற சிந்தனையில் இருந்து தடுக்கிறது. எனவே இதனை நம் வீட்டிலே வளர்ப்பது மிகவும் அவசியமானது.இதனை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.


 
அஸ்வகந்தா வேரில் உள்ள சத்துக்கள் நம்முடைய இதயத்திற்கு சத்து மருந்தாக பயன்படும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.மேலும் கண்களின் ஆரோக்கியத்திற்கும் கண் பார்வை மேம்படவும் உதவி புரிகிறது.உடலில் தேங்கும் கெட்ட கொலட்ராலை குறைத்து,இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

அஸ்வகந்தா இலைகளை அரைத்து அதன் சாறை நம்முடைய காயங்களுக்கு மேல் தடவினால்  விரைவில் குணமாகும். அதே போல் இதன் வேர் சாறை நம்முடைய உடம்பில் அடிபட்டோ வேறு காரணத்தாலோ ஏற்பட்டிருக்கும் வீக்கங்கள் மேல் தடவினால் அந்த வீக்கம் விரைவில் கரையும். 

அஷ்வகந்தா பொடியை அன்றாடம் உண்டு வந்தால் நமது நரம்பு மண்டலமும் வலுவாகிவிடும்.மேலும் மலட்டுத்தன்மையும் நீங்கும்.காலையில் அஸ்வகந்தா வேரின் பவுடரை சிறிதளவு நெய் அலலது தேன் கலந்து சாப்பிட்டு வருவது சரியாய் இருக்கும்.


 
ஆண், பெண் இரு பாலருக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படும் அஸ்வகந்தா உச்சி முதல் பாதம் வரை பல நன்மைகளை செய்யக்கூடியது.
அஷ்வகந்தாவிற்கு கெட்ட கிருமிகளை முற்றிலும் அழிக்கும் குணம் உள்ளது.அதனால் இது சிறுநீரக இரைப்பை-குடல் மற்றும் சுவாச தொற்றுகளை குணப்படுத்துகிறது.
புற்று நோய் செல்களையும், புற்றுநோய் கட்டிகளையும் அழிக்கும் தன்மை உள்ள இது உடலை கீமோதெரபியின் பக்க விளைவுகளிலிருந்தும் காக்கிறது.
தொடர்ந்து 4 வாரங்கள் அஸ்வகந்தாவை உட்கொண்டுவந்தால் நீரழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் அதிகமாகி இருக்கும் சர்க்கரை அளவு குறையும்.
அஸ்வகந்தா தைராய்டு சுரப்பை அதிகப்படுத்துகிறது இதன் மூலம் ஹைப்போ தைராய்டு பிரச்சனையை சரி செய்து கொள்ளலாம்.
சரி எப்படி இதை உண்ண வேண்டும்:-

பாரம்பரியம முறைப்படி அஷ்வகந்தா பொடியினை வெதுவெதுப்பான பசும்பால் மற்றும் சுத்தமான மலைத்தேனுடன் கலந்து இரவு உறங்கும் முன் உட்கொள்கிறார்கள்.பொதுவாக கால் அல்லது அரை தேக்கரண்டி அளவு பொடியை ஒரு நாளிற்கு ஒன்று அல்லது இரண்டு முறை என்ற அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.தேனிற்கு பதிலாக நாட்டு சர்க்கரையையும் சேர்த்துக்கொள்ளலாம்,

பொதுவாக அஷ்வகந்தாவை டீயில் கலந்து உட்கொள்வது பரவலாக பின்பற்றப்படுகிறது.

சித்த மருந்து கடைகளில் அஸ்வகந்தா லேகியம் எளிதாக கிடைக்கும்.பவுடராகவும் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்துங்கள் அதன் மூலம் தாம்பத்திய உறவில் இருக்கும் சிக்கல்களை தவிருங்கள்.அழகான வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் அஸ்வகந்தா அருமையான செழுமையான மூலிகை இதை உட்கொள்பவர்களுக்கு உடல் பலம் உயர்ந்து கொண்டே இருக்கும் என்றால் அது மிகையல

Saturday, 16 May 2020

உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்க -


உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்க - Improve blood circulation

உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கான எளிய வழிகள்

உடலில் இருக்கும் இரத்தத்தின் ஓட்டமானது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் சீர்குலைவு பல்வேறு நோய்களுக்கு வித்திடும். இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்கள் இரத்த ஓட்ட குறைபாடுகளால் ஏற்படுகின்றன.

தலைவலி, கைகள் மற்றும் கால்கள் குளிர்ந்து போவது, அடிக்கடி ஏற்படும் தசை பிடிப்புகள், கடினமான தசைகள், பலவீனமாக உணர்வது, சலசலக்கும் காதுகள், ஆறாமல் இருக்கும் காயங்கள், நினைவிழப்பு ஆகியன இரத்த ஓட்ட குறைபாடுகளுக்கு அறிகுறிகளாக கருதப்படுகின்றன. இந்த அறிகுறிகளை லேசாக உணரும் போது, நாம் சந்தேகிக்க தொடங்க வேண்டும். இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யும் போது, உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு சிக்கல்கள், ஆண்மையின்மை, மாரடைப்பு மற்றும் இறப்பு போன்ற மிகவும் தீவிரமான மற்றும் ஆபத்தான விளைவுகள் உண்டாகலாம்.

நம் உடலில் ஒரே சீராக இரத்த ஓட்டத்தை நிலை நிறுத்துவதற்கு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். கொழுப்பு மிகுந்த உணவை குறைத்தல், நார் பொருட்களை அதிக அளவில் உட்கொள்ளுதல், வழக்கமான உடற்பயிற்சி, மன அழுத்தத்தை குறைத்தல் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் இயற்கையான கூடுதல் பொருட்களை எடுத்துக் கொள்வது ஆகியன மிகவும் முக்கியமானவை. இப்போது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் சில டிப்ஸ்களைப் பார்ப்போமா!!!


குளியல்
குளிர்ந்த நீர் குளியல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த வழியாகும். பாதிக்கப்பட்ட பகுதியை வெந்நீரில் கழுவும் போதும் அல்லது ஒத்தடம் கொடுக்கும் போதும், உடலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கும். ஒரு உடனடி குளிர் குளியல், உள்ளுறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குளியலின் போது, உடலில் ஏற்படும் நடுக்கம், இரத்தம் சருமம் வழியே பாய்ந்து பிராண வாயுவை விட்டுச் செல்கிறது, என்பதற்கு அறிகுறியாகும். இந்த குளிர் நீர் சிகிச்சை முறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும்.



சிவப்பு மிளகாய்
சிவப்பு மிளகாய், இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுமட்டுமின்றி, இது இதயத்தை பலப்படுத்துகின்றது. தமனிகளின் அடைப்பை நீக்குகின்றது. அத்துடன் எடை இழப்பிற்கும் உதவி புரிகின்றது.



மூச்சு பயிற்சி
பெரும்பாலான மக்கள், மோசமான சுவாச பழக்கங்களை கொண்டிருக்கின்றனர். நம்முடைய நுரையீரலில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, நுரையீரலின் முழு திறனையும் பயன்படுத்த வேண்டும். அதற்கு, ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும். இது இரத்தம் அதிக அளவு பிராணவாயுவை பெற வழி வகை செய்யும். அத்துடன், கழிவு பொருட்களை நீக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.



மன அழுத்தத்தை தவிர்த்தல்
மன அழுத்தம், இரத்த ஓட்டத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் மிக முக்கியமான மற்றும் முன்னணி காரணங்களில் ஒன்றாகும். ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆட்படும் போது, முக்கிய உறுப்புகளுக்கு மட்டுமே ,ரத்த செல்லும். மற்ற உறுப்புகளுக்கு செல்லாது. இது மோசமான பின் விளைவுகளை உருவாக்கும். கைகள் மற்றும் கால்கள் இதனால் மோசமாக பாதிக்கப்படும். எனவே, இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கு, மன அழுத்தத்தைத் தவிர்ப்பது மட்டுமே ஒரே சிறந்த வழியாகும். தினமும் உடற்பயிற்சி செய்வது, ஆழ்ந்து சுவாசிப்பது மற்றும் தியானம் செய்வது போன்ற எளிய நடைமுறைகள், மன அழுத்தத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.



பாதத்தை உயர்த்துதல்
குறுகிய கால அளவிற்கு பாதத்தை உயர்த்துதல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் பயனுள்ள வழி ஆகும். படுக்கையில் படுத்துக் கொண்டு காலடியில் ஒரு தலையணை வைப்பதன் மூலம் இதை செயல்படுத்தலாம். இது இரத்தம், தலையை நோக்கி பாய்வதற்கு வழி வகுக்கும். இந்த செயல்முறையில், தரையில் படுத்துக் கொண்டு, ஒரு நாற்காலி அல்லது சோபா மீது கால்களை மாற்றி மாற்றி வைக்க வேண்டும். அவ்வாறு செய்வது, இரத்தம் கால்களை விட்டு நீங்குவதற்கு உதவும்.



உடற்பயிற்சி
உடல் உழைப்பு மட்டுமே இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் மிக நிச்சயமான வழியாகும். பெரும்பாலான மக்கள், இன்று எந்த ஒரு உடல் உழைப்புமின்றி உட்கார்ந்த நிலையிலேயே பணியாற்றுகின்றனர். வழக்கமான, உடற்பயிற்சி, நடைபயிற்சி, நீச்சல் மற்றும் ஓட்டப்பயிற்சி ஆகியன இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனினும், நடை பயிற்சியின் போது, நிலையான வேகத்தில் ஆரம்பித்து படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும்.



சமச்சீர் உணவு
உட்கொள்ளும் உணவு, இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஆரோக்கியமான உணவு பழக்கம் என்பது கொழுப்பு மிகுந்த உணவை குறைத்துக் கொள்வது தான். இதனால் இரத்த ஓட்டம் உடலில் அதிகரிக்கும். குறைந்த கொழுப்பானது, இரத்தம், சிறிய நாளங்கள் வழியாக எளிதாக செல்ல உதவுகிறது. உணவில் நார்ச்சத்து மிகுந்த உணவை உட்கொள்வது, கொழுப்பை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிப்பது எப்படி


இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிப்பது எப்படி?


மனிதன் உயிர் வாழ ஆக்ஸிஜன் மிகவும் இன்றியமையாதது. மனித உடலில் உள்ள செல்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குவது இரத்தம் தான். அத்தகைய இரத்தத்தில் போதிய அளவு ஆக்ஸிஜன் இருந்தால் தான், உடலால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவோ, நச்சுக்களை வெளியேற்றவோ மற்றும் இதர உடலின் செயல்பாடுகளை சரியாக செய்யவோ முடியும்.


ஆனால் இக்காலத்தில் நம்மைச் சுற்றி நச்சுமிக்க வாயுக்களின் அளவு அதிகம் உள்ளதால், சுவாச கோளாறால் ஏராளமானோர் கஷ்டப்படுகின்றனர். ஆக்ஸிஜன் அதிகம் வேண்டுமானால் மரங்கள் அதிகம் வேண்டும். ஆனால் பணத்தின் மீதுள்ள ஆசையால், மரங்களை வெட்டி கம்பெனிகளையும், வீடுகளையும் கட்டி, நமக்கு நாமே நாமம் போட்டுக் கொள்கிறோம்.

சரி, நமக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்க என்ன வழி என்று நீங்கள் கேட்கலாம். கீழே இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி ஆக்ஸிஜன் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.


டிப்ஸ் #1
நல்ல வேளை நாம் பூங்காக்களை விட்டு வைத்துள்ளோம். நல்ல சுத்தமான காற்று மட்டுமின்றி, ஆக்ஸிஜனும் பூங்காக்களில் கிடைக்கும். எனவே தினமும் அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று, சிறிது நேரம் தியானம் செய்யுங்கள். இதனால் மரங்கள் வெளியிடும் ஆக்ஸிஜனை சுவாசித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.


டிப்ஸ் #2
தினமும் மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இப்படி மூச்சுப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம், நம்மைச் சுற்றியுள்ள ஆக்ஸிஜனை நாம் சுவாசிக்க முடியும்.



டிப்ஸ் #3
எப்போதும் நல்ல மற்றும் நேரான நிலையில் அமர வேண்டும். இப்படி நல்ல நிலையில் ஒருவர் அமர்ந்து சுவாசிக்கும் போது நுரையீரலால் சீரான முறையில் செயல்பட்டு சுவாசிக்க முடியும்.



டிப்ஸ் #4
அன்றாடம் தவறாமல் 20 நிமிடம் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதிலும் கார்டியோ பயிற்சிகளை தினமும் சிறிது நேரம் மேற்கொள்வதன் மூலம், உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, ஆக்ஸிஜனின் அளவும் அதிகரிக்கும்.


டிப்ஸ் #5
புகைப்பிடிக்கும் பழக்கத்தை முதலில் கைவிடுங்கள் மற்றும் புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பதையும், மது அருந்துவதையும் தவிர்த்திடுங்கள். இந்த ஒரு விஷயத்தை மனதில் கொண்டு நடந்தாலே, ஆக்ஸிஜன் குறைபாட்டினால், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதில் இருந்து விடுபடலாம்.


டிப்ஸ் #6
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள். ஏனெனில் இரத்தத்திற்கு இரும்புச்சத்து மிகவும் நல்லது. இத்தகைய இரும்புச்சத்து கீரைகள், பச்சை இலைக் காய்கறிகளில் அதிகம் இருப்பதால், இவைகளை அன்றாட உணவில் முடிந்த வரை சிறிது சேர்த்து வாருங்கள்.


டிப்ஸ் #7
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ள உணவுகள், ஆக்ஸிஜனை இரத்தத்தில் சரியான அளவில் கலக்கச் செய்யும். அதிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை நிறைந்த உணவுகளான ப்ளூபெர்ரி, கிரான் பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளம்ஸ், ப்ளாக்பெர்ரி போன்றவை கிடைக்கும் போது தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

Monday, 11 May 2020

மன அழுத்தம் போக்கும் ஏலக்காய்

சமையலில், வாசனைக்காக சேர்க்கப்படும் ஒரு முக்கியப் பொருள் ஏலக்காய். எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் உள்ளதால், சிறந்த மருத்துவத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால், இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து, குழந்தையின் நாக்கில், மூன்று வேளை தடவினால், வாந்தி நின்று விடும்.
மூக்கடைப்பால் அவதிப்படும் குழந்தைகளுக்கும், ஏலக்காய் நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தால், மூக்கடைப்பு நீங்கும். மன அழுத்த பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவர். நா வறட்சி, வாயில் அதிகமாக உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு, ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும்.
வெயிலில் அதிகம் சுற்றித்திரிந்தால், தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் நீரில் போட்டு காய்ச்சி, சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால், தலைசுற்றல் உடனே நீங்கும். விக்கலால் அவதிப்படுவோர், இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளை போட்டு, அரை டம்ளர் நீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் கஷாயத்தை குடித்தால் போதும்.
சிறிதளவு ஏலக்காயை பொடியை, அரை டம்ளர் நீரில் கொதிக்க விட்டு, உணவு உட்கொள்வதற்கு முன், இந்நீரை குடித்தால், வாய்வு தொல்லை நீங்கி விடும். நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும்.
வாய் துர்நாற்றத்தை போக்க, ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம். சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. இதிலுள்ள வாலட்டைல் என்ற எண்ணெய் தான் நறுமணத்தை தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப்பொருமலைக் குணமாக்கி எளிதில் ஜீரணம் ஆகும்படி தூண்டுகிறது. காலையில், தேநீர் அல்லது காபியில், ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது.
ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை, ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும். நெல்லிக்காய் சாறில் ஒரு சிட்டிகை ஏலக்காய் தாள் சேர்த்து, தினம், மூன்று வேளை அருந்தி வந்தால், மேகவெட்டை நோய்க்கு தீர்வு கிடைக்கும். இத்துடன், சிறுநீர்ப்பை சுழற்சியும், சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.
ஒரு கப் நீரில், இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி போட்டு, புதினாவை சிறிதளவு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி அருந்தினால், விக்கல் தீரும். ஏலக்காய், சீரகம், சுக்கு, கிராம்பு சம அளவாகப் பொடித்து, 2 கிராம் தேனில் தினமும் 3 வேளைகள் சாப்பிட்டு வர, வயிற்று வலி குணமாகும். ஏலக்காய், ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து வறுத்து, பொடி செய்து கொண்டு, அதில் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள, ஜீரணப் பிரச்னை தீரும்.

Sunday, 10 May 2020

திரிகடுக சூரணத்தை பயன்படுத்துவதால்

திரிகடுகு என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் கலவையே ஆகும். பொதுவாக சுக்கு நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். இதனால் இதனை நிறைய  அஜீரணக் கோளாறுக்கான மருந்துகளில் முதன்மையாக சேர்க்கின்றனர். சாதாரண சளி, இருமல் ஆகியவற்றிற்கு தொன்றுதொட்டு நாம் உபயோகப்படுத்துவது  மிளகைத்தான்.

திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக்குணமாக்கும். காது, மூக்கு சம்பந்தப்பட்ட கப நோய்களையும் போக்கும்.உடலில் நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
 
திரிகடுக சூரணத்தை பயன்படுத்துவதால் பலவித நோய்களுக்கும் தீர்வாக இருக்கும். விட்டுவிட்டு வரும் முறைக்காய்ச்சலைப் போன்ற பலவித காய்ச்சல்கள், வயிற்று உப்புசம், உணவில் விருப்பமின்மை, பசியின்மை, செரிமான பிரச்சனையால் வரும் நோய்கள், கழுத்தில் தோன்றும் நோய்கள், தோல் நோய்கள், இருமல், ஜலதோஷம், சர்க்கரை போன்ற நோய்களுக்கு  திரிகடுக சூரணத்தை தேனுடன் சேர்த்துத் தரப்படுகிறது.
 
நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல பிரச்சனைகளை தீர்க்கவல்லது. நெஞ்சு சளி, ஜலதோஷத்தை நீக்கும். நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின்  செயல்திறனை கூட்டும். இம்மண்டல பலவீனத்தை போக்கும்.
 
நுரையீரலின் உயிர் சக்தியை அதிகபடுத்தும். கபம் சார்ந்த பிரச்சனைகளை போக்கும். இன உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும். ஆண்களின் விந்தடைப்பு என்ற பிரச்சனைக்கும் திரிகடுக சூரணத்தை பயன்படுத்துகின்றனர்.
 
மேலும் உடல் எடை கூடிய நோயாளிகள், அதிக கொழுப்பு சத்துள்ள நோயாளிகள், தைராய்டு குறைவாக சுரக்கும் நோயாளிகள், உடல் வீக்கம் சார்ந்த நோயாளிகள்,  மற்றும் வளர் சிதை மாற்றமுள்ள நோயாளிகளில் இந்த மருந்து தக்க துணை மருந்துகளோடு நன்றாக வேலை செய்யும்.
 
செரிமான சுரப்பி, வயிற்றில் சுரக்கும் நொதி கோளாறுகள் என எப்படி இருந்தாலும் சரி செய்துவிடும். வலிகளை போக்கும் மருந்துகளில், இந்த மருந்தை பல வலி நிவாரண மூலிகை மருந்துகளின் சேர்க்கையோடு சேர்ப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

Friday, 8 May 2020

இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நிகழும் தெரியுமா?

தேன் மருத்துவ குணம் நிறைந்த பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தேன் சளியை எதிர்த்துப் போராடவும், சருமத்திற்கு ஈரப்பதமூட்டவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தேனைப் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. தேனை ஒருசில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால், அது மிகவும் சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியத்தையும் வாரி வழங்கும்.


ஹ்ஆனால் அந்த தேனை ஒருவர் தினமும் இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால், நம் உடலினுள் பல்வேறு அற்புதங்கள் நிகழும் என்பது தெரியுமா? அந்த அற்புதங்கள் என்னவென்று தெரிந்தால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தமிழ் போல்ட்ஸ்கை இரவு தூங்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நல்ல தூக்கம்

தேனில் ட்ரிப்டோஃபேன் என்ற ஹார்மோன் உள்ளது. இது உடலை ரிலாக்ஸ் அடைய உதவுகிறது மற்றும் உடலுக்கு "இது படுக்கைக்கு செல்ல வேண்டிய நேரம்" என்ற சிக்னலை அளிக்கிறது. நம் உடலுக்கு இந்த அமினோ அமிலம் தேவைப்பட்டாலும், அது இயற்கையாகவே உற்பத்தி செய்வதில்லை. மேலும் தேன் போன்ற குறிப்பிட்ட உணவுகளை உண்பதன் மூலமே பெற முடியும். சில சமயங்களில் நாம் நள்ளிரவில் எழுந்திருப்போம். இது ஏன் நடக்கிறது என்று தெரியுமா? ஏனென்றால் நம் தூக்கத்தின் போது, மூளைக்கு க்ளைகோஜன் என்னும் பொருள் தேவைப்படுகிறது மற்றும் சிறுநீரகங்களில் அமைந்துள்ள அட்ரீனல் சுரப்பிகளை அட்ரினலின் மற்றும் கார்டிசோலை வெளியேற்றத் தூண்டுகிறது. இதுவே உங்கள் தூக்கத்தைக் கெடுக்கிறது. அதிர்ஷ்டவசமாக, தேனில் க்ளைகோஜன் உள்ளது. எனவே தூங்குவதற்கு முன் இதை உட்கொள்ளும் போது, அட்ரினலின் அவசரமாக வெளியேற்றுவது தடுக்கப்பட்டு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.

இரத்த அழுத்தம் குறையும்

உயர் இரத்த அழுத்தம் இதய நோய்களின் அபாயத்திற்கு முக்கிய காரணியாக இருப்பதால், இதை சரியான அளவில் பராமரிக்க வேண்டியது அவசியம். இதனால் இதய நோய்களின் தீவிரத்தைத் தவிர்க்கலாம். தேனில் உள்ள ஆன்டி-ஆகஸிடன்ட்டுகள், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக காட்டப்பட்டுள்ளன. ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவது இப்பிரச்சனையைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழியாகும்.

ட்ரைகிளிசரைடுகள் குறையும்

ட்ரைகிளிசரைடுகள் என்பது இரத்தத்தில் உள்ள ஒரு வகையான கொழுப்பு. ஒருவரது உடலில் ட்ரைகிளிசரைடுகுள் அதிக அளவில் இருந்தால், அது சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். அதிர்ஷ்டவசமாக, தேன் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைப்பதுடன் தொடர்பு கொண்டுள்ளது. இத்தகைய தேனை ஒருவர் இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைப் பிரித்து வெளியேற்றிவிடும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளது. இது உடலைத் தாக்கும் நுண்கிருமிகளான பாக்டீரியா, பூஞ்சி மற்றும் பல வைரஸ்களை எதிர்த்துப் போராடும் அளவில் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவும். தினமும் இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், உடலுக்கு கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறன் அதிகரித்து, உடல் வலிமையாக இருக்கும்.

வயிற்றுக் கொழுப்பைக் கரைக்கும்

தினமும் இரவு தேனை உட்கொள்வதால், உடல் ஒரு தெர்மோஜெனிக் விளைவை உருவாக்குவதன் மூலம் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது. இது உடல் வெப்பநிலையை சிறிது அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, எவ்வித கஷ்டமுமின்றி உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.

இருமலை போக்குகிறது

தேனில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இயற்கையாகவே உள்ளது. ஒரு டம்ளர் வெதுவெப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து தினமும் இரவு குடித்து வந்தால், அது தொண்டையில் உள்ள கரகரப்பை குறைப்பதோடு, இருமலை போக்குகிறது. கூடுதலாக, தேன் மிகச்சிறந்த ஆன்டி-பயாடிக் பொருள். இது தொண்டையில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து, தொண்டையில் உள்ள தொற்றுக்களைப் போக்கும்.

முதுமையைத் தடுக்கும்

முதுமையைத் தடுக்க சிறந்த வழி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை உட்கொள்வது. இத்தகைய ஆன்டி-ஆக்ஸிடன்ட் தேனில் நிறைந்துள்ளது. முதுமையைத் தடுக்க சருமத்திற்கு ஈரப்பதமூட்டுவதும், சத்தான சீரம் பயன்படுத்துவதும் சிறந்த யோசனை தான். ஆனால் இரவு தூங்கும் முன் தேன் சாப்பிடுவது முதுமை தோற்றத்திற்கான அறிகுறிகளை எதிர்த்துப் போராட பெரிதும் உதவி புரியும்.

மன இறுக்கத்தைப் போக்கும்

தேனில் பாலிஃபீனால் என்னும் மன இறுக்கத்தை எதிர்த்துப் போராடும் ஆர்கானிக் கெமிக்கல் உள்ளது. நீங்கள் எந்நேரமும் ஒருவித மன அழுத்தத்துடன் இருப்பது போன்று உணர்ந்தால், தினமும் இரவு தூங்கும் முன் தேனை சாப்பிடுங்கள். இதனால் மறுநாள் காலை மன அழுத்தம் நீங்கி, புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்வீர்கள்.