Saturday, 30 January 2021

ஷட்திலா ஏகாதசி எனும் மோட்ச ஏகாதசி..

ஷட்திலா ஏகாதசி எனும் மோட்ச ஏகாதசி! மாசி மாதத் தேய்பிறை ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி எனப்படும். அமாவாசை அல்லது பெளர்ணமிக்கு பதினோராம் நாள் ஏகாதசி என அழைக்கப்படுகிறது. ஏகாதசி ஒவ்வொரு மாதத்திலும் 2 முறை வரும். ஒன்று கிருஷ்ண பக்ஷத்திலும், மற்றொன்று சுக்லபக்ஷத்திலும் வரும். சுக்லபக்ஷம் என்பது அமாவாசையிலிருந்து பௌர்ணமிக்கு முனிதினம் வரை உள்ள 15 நாட்கள்.கிருஷ்ணபக்ஷம் என்பது பௌர்ணமியிலிருந்து அமாவாசைக்கு முன்தினம் வரையிலான 15 நாட்கள்.

The important aspect of Shattila Ekadashi

ஒருசமயம் தாலப்ய ரக்ஷி புலஸ்திய முனிவரிடம், முனிசிரேஷ்டரே! பூமியில் மக்கள் அறியாமையின் காரணமாக கொலை, கொள்ளை, அடுத்தவர் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ளுதல், போன்ற மகாபாபமான செயல்களில் ஈடுபடுகின்றனர். பின்னர் அதனை எண்ணி சிலர் வருந்துகின்றனர். அப்படிப்பட்டவர்கள் நரகத்திலிருந்து மீள வழி இருக்கிறதா என்று வினவினார். பிரம்மஹத்தி, பசுவைக் கொன்ற பாவம் அடுத்தவர் பொருட்களைத் திருடிய பாவம் போன்றவை தீர என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து சொல்லுங்கள்!'' என வேண்டினார்.

புலஸ்தியர் பதில் சொல்லத் தொடங்கினார்: ''தால்ப்யரே! மாசி மாத ஆரம்பத்தில், பசுமாடு சாணமிடும் போது, அது தரையில் விழாதபடி கைகளில் ஏந்த வேண்டும். அதனுடன் எள் மற்றும் பருத்திக்கொட்டை ஆகிய வற்றைச் சேர்த்து, தூய்மையான ஓர் இடத்தில் (வீட்டுக்குள்ளேயே பூஜை அறையில் அல்லது மாட்டுக் கொட்டகையில் ஒரு பக்கமாக) வைக்க வேண்டும். அந்தக் கலவை, பௌர்ணமி வரை காயாமல் ஈரப் பதத்துடன் இருந்தால் நமது பாவம் அனைத்தும் விலகும்!'' என்ற புலஸ்தியர், ஷட்திலா ஏகாதசி பூஜை முறை யைப் பற்றியும் கூறினார்.

Thursday, 28 January 2021

பாலாரிஷ்டம்.....

பாலாரிஷ்டம்
பாலாரிஷ்டம் என்றால் பாலனுக்கு கேடு என்பதாம்.
இப்பாலாரிஷ்டம் என்பது சந்திரன் குழந்தை ஜெனனமானபோது ராசியிலோ அம்சத்திலோ தீய இல்லத்தை அடைந்திருந்தாலும் அல்லது நீச்சம் பெற்றிருந்தாலும் குழந்தைக்கு பாலாரிஷ்டம் ஏற்படும்.
12,வயதுவரை பாலாரிஷ்டம் என்றும்.
20,வயதுவரை எவ்வனாரிஷ்டம் என்றும்.
32,வயதுவரை அற்ப ஆயுள் எனவும்.
50,வயதுவரை மத்திமாயுள் எனவும்.
80,வயதுவரையில் தீர்க்காயுள் எனவும் கூறப்படுகிறது....

அன்னையவள் முற்பிறப்பில் ஈட்டிய தீவினை வயத்தால் ஆண்டு நான்கும்.
பின்னுமொரு நான்காண்டும் பிதுர் பாவத்தால் சிசு வினையின் பெருக்கால் பின்பு
மன்னு மொரு நான்காண்டும் அரிட்டமது சம்பவிக்கும் வருமுன் நான்காயச்
சென்றவயதின் பின்னர் வயதளவைக் கண்டுரைப்பார் தூயோரன்றே..
         (குப்புசுவாமியம்)
குழந்தை 4,வயது வரை தாய் செய்த கர்ம ஊழ்வினைப்பயனாலும்,
8,எட்டு வயதுக்குள் தந்தை செய்த கர்ம ஊழ்வினைப்பயனாலும்,
11,வயதுக்குள் தனது பூர்வ கர்மப்பயனாலும் தோஷம் உண்டாகும்.
இதன் பின்னர் வயதில் ஏற்படும் திசை புத்தி பலன்களைக்கொண்டு அரிட்டம் சொல்ல வேண்டும்...

பாலாரிஷ்டத்தை இரண்டு வகையாகப்பிரித்துக்கூறுவர்.
அசைவத்தியோ பாலாரிஷ்டம்,
அசைவத்தியோ பாலாரிஷ்டம் என்பது குழந்தை பிறந்தவுடனோ அல்லது,2-3மாதத்திற்குள்ளாக அன்றி1வருடத்திற்குள்ளாவது உண்டாவது.. இதற்கு விதிவிலக்கு யாதெனில் சுப கிரகங்கள் கேந்திரம் பெற்றிருப்பதுவே...

செளம்மிய பாலாரிஷ்டம் என்பது பிறந்தபோது உண்டான திசைமுடிவிற்குள் சம்பவிக்கும் தோஷம்...

குரு பகவான் ஆயுள் கர்த்தா என்பதால் குழந்தை பிறந்த போது, ஆட்சி, உச்சம், நட்பு, மூலத்திரிகோணம் போன்ற நல்ல அமைப்பில் இருந்தால் குழந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டு..

ஜோதிடர் ஒரு குழந்தைக்கு சாதகம் கணிப்பதற்கு முன் ஆயுள் நிர்ணயம் செய்ய இயலுமா?.அதனாலே பாலாரிஷ்டம் இல்லாத குழந்தைதானா என்பதை அறிந்த பின்னர் சாதகம் கணிப்பதே சிறந்தது.
(இதனாலே குழந்தைக்கு சாதகம் கணிப்பதென்பது 1வயது முதல்3வயதுவரை செய்வதில்லை பல ஜோதிடர்கள்)

இலக்கிணத்திற்கு,6,8,ல் பாவக்கிரகங்கள் இடம் பெற்றால் குழந்தை பிறந்தவுடன் மரணமென்றும். ஜெனன லக்கினத்தில் செவ்வாய் இருந்தாலும் அல்லது லக்ன த்திற்கு6,8,ல் சனியுடன் கூடியிருந்தாலும் குழந்தை இறக்கும்.
லக்ன த்திற்கு,68,ல் சந்திரனிருந்து சுபர்களாகிய புதன். குரு. சுக்கிரன் பார்வை பட்டால் எட்டாண்டுகள் இருக்கும் என்பதாம்...

எல்லா கிரகங்களும் ஸ்திர ராசியிலிருந்து சனி அம்சம்ஏறி இவை கேந்திர கோணமாகியிருந்தால் எண்ணிக்கை யில் அடங்காத வயதுடையவரென்க..
(இப்படி ஒரு அமைப்பு உண்டாவது கடினமே)
6,ல் புதனும்,7,ல்குருவும்,8,ல் சுக்கிரனும், தனித்தனி யாக இருந்தாலும். தனுசில் செவ்வாயும் மீனத்தில் சனி இருக்க மற்ற கிரகங்கள் எல்லாம் இவர்களுக்கிடையில் இருந்தால் நீண்ட ஆயுளுடன் நிறைய அதிசயங்களை நடத்திக்கொண்டிருப்பார்கள். 
லக்னத்திற்கு8,ல் பாவக்கிரகங்களிருப்பின் அக்குழந்தை ஏழுநாள் வரை இருக்கும். அதன்மேலும் உயிரோடிருப்பின் அக்குழந்தையின் கண் களுக்கு
தோஷம் உண்டாகும்.
லக்னத்தில் செவ்வாய் இருப்பினும்,6,8,12,ல் சனி செவ்வாய் இருப்பினும்.
லக்னம்,5,7,8,9,12,ஆகிய வீடுகளில் ஏதேனும் ஒன்றில் சூரி செவ் சனி இவர்களில் ஏதேனும் ஒருவருடன் அல்லது பலருடன் தேய்பிறை சந்திரன் கூடியிருக்கப்பிறந்த குழந்தைக்கு சரீர பீடையும் அரிட்டதோஷமும் உண்டாம்....

சாமுத்திரிகாலட்சணம்....

சாமுத்திரிகாலட்சணம்....
 தலைமயிர். நெற்றிபுருவம். கண்.காது. மூக்கு. வாய். பல்.முகம். கழுத்து. தோள். முன்கை. அகங்கை. விரல் கைவிரல். நகம். கொங்கை. கொங்கைக்கண். வயிறு.வயிற்றுரோமம். வயிற்று மடிப்பு. இடை. நாபி. குறி. தொடை. முழங்கால். கணைக்கால். புறங்கால். காற்பரடு குதிகால். கால்விரல் அதன்நகம். உள்ளங்கால் என்பனவாம்.....

உத்தமபுருஷலட்சணம்....
ஒருஉத்தமபுருஷனுக்குள்ள உறுப்புகள். உன்னதமான அவயங்கள்..6
நீண்ட உறுப்புகள்..5
சிறிய உறுப்புகள்..5
குறுகிய உறுப்புகள்..4
அகன்ற உறுப்புகள்..2
சிவந்த உறுப்புகள்..7
ஆழ்ந்த உறுப்புகள்..3....
ஆக முப்பத்திரண்டாம் அவற்றின் இலக்கணங்கள்
சுருக்கமாக....
வயிறு. தோள்.நெற்றி. நாசி. மார்பு. கையடி. இவை ஆறும் உயர்ந்திருப்பின் அவன் இந்திரபோகத்துடன் இருப்பான்.

கண். கபோலம். செங்கை. மூக்கு. முலை. மார்பு.இவை ஐந்தும் நீண்டிருப்பின் அவன் நன்மையடைவான்...

சிகை. சருமம். விரற்கணு. நகம். பற்கள். இவை ஐந்தும் சிறியதாயிருப்பின் அவன் தீர்க்காயுள் உள்ளவனாவான்...

கோசம். கணைக்கால். நாக்கு. முதுகு. இவைநான்கும் குறுகியிருப்பின் அவன் செல்வமுள்ளவனாவான்...

சிரம். நெற்றி. இவையிரண்டும் அகன்றிருப்பின் அவன் மிகுந்த நன்மையுடையவனாவான்...

கண்கள். உள்ளங்கால். உள்ளங்கை. இதழ்கடை. அண்ணம். நாக்கு. நகம். இவை ஏழும் சிவந்திருப்பின் அவன் மிக்க இன்பமுடையவனாவான்...

இதழ். ஓசை. நாபி. இம்மூன்றும் ஆழ்ந்திருப்பின் அவன் மேலான நன்மைகளடைபவனாவான்...
இவைகளை ஒருவரின் இலக்கிணத்தைக்கொண்டு அறிலாம்... 

இருபத்தேழு நட்சத்திரங்களுக்குறிய கோவில்

ஜோதிடவிதிப்படி,27,நட்சத்திரங்கள். இந்த இருபத்தேழு நட்சத்திரங்களுக்குறிய கோவில்களை அறியலாம்....

அஸ்வினி...
ஶ்ரீ பவ ஔஷதீஸ்வரர் திருக்கோவில்.. ஊர்திருத்துறைப்பூண்டி...

பரணி...
ஶ்ரீஅக்னீஸ்வரர் திருக்கோவில்
ஊர்நல்லாடை....

கிருத்திகை...
ஶ்ரீகாத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில்...
ஊர் கஞ்சனாகரம்...

ரோகிணி...
ஶ்ரீபாண்டவதூத கிருஷ்ணன் கோவில்...
ஊர் காஞ்சிபுரம்...

மிருகசீரிடம்...
ஶ்ரீஆதி நாராயணப்பெருமாள் திருக்கோவில்...
ஊர் எண்கல் கொரடாச்சேரி...

திருஆதிரை...
ஶ்ரீஅபய வரதீஸ்வரர் திருக்கோவில்...
ஊர் அதிராம்பட்டினம்...

புனர்பூசம்...
ஶ்ரீஆதிதீஸ்வரர் திருக்கோவில்..
ஊர் வாணியம்பாடி...

பூசம்...
ஶ்ரீ ஆட்சயபுரீஸ்வரர் திருக்கோயில்...
ஊர் விளங்குளம்...

ஆயில்யம்...
ஶ்ரீகற்கடகேஸ்வரர் திருக்கோயில்...
ஊர் திருந்தேவன்குடி...

மகம்...
ஶ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயில்...
ஊர் தவசிமடை...

பூரம்...
ஶ்ரீ ஹரிதீர்த்தேஸ்வரர்திருக்கோயில்...
ஊர் திருவரங்குளம்...

உத்திரம்...
ஶ்ரீமாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்...
ஊர் இடையாற்றுமங்கலம்...

ஹஸ்தம்...
ஶ்ரீகிருபா கூபாரேஸ்வரர் திருக்கோயில்...
ஊர்கோமல்...

சித்திரை...
ஶ்ரீ சித்திர ரத வல்லபப்பெருமாள் திருக்கோயில்...
ஊர் குருவித்துறை...

சுவாதி...
ஶ்ரீ தாந்தீஸ்வரர் ஶ்ரீசுந்தராஜப்பெருமாள் திருக்கோயில்...
ஊர் சித்துக்காடு...

விசாகம்...
ஶ்ரீதிருமலை முருகன் திருக்கோயில் ...
ஊர் திருமலை செங்கோட்டை...

அனுஷம்...
ஶ்ரீலட்ஷ்மிபுரீஸ்வரர்திருக்கோயில்...
ஊர்திருநின்றவூர்....

கேட்டை...
ஶ்ரீவரதராஜப்பெருமாள் பசுபதி திருக்கோயில்...
ஊர் தஞ்சாவூர்...

மூலம்...
ஶ்ரீசிங்கீஸ்வரர் திருக்கோயில்..
ஊர்மப்பேடு சென்னை...

பூராடம்...
ஶ்ரீஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்...
ஊர் கடுவெளி திருவையாறு...

உத்திராடம்...
ஶ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கோயில்
ஊர் கீழப்பூங்குடி...

திருவோணம்...
ஶ்ரீ பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்...
ஊர் காவேரிப்பாக்கம்....

அவிட்டம்...
ஶ்ரீ பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோயில்...
ஊர் கொறுக்கை பட்டீஸ்வரம்..

சதயம்...
ஶ்ரீ அக்னிஸ்வரர் திருக்கோவில்
ஊர் திருப்புகலூர்..நன்னிலம்..

பூரட்டாதி...
ஶ்ரீதிருஆனேஸ்வரர் திருக்கோயில்...
ஊர் ரெங்கநாதபுரம்..தஞ்சாவூர்

உத்திரட்டாதி....
ஶ்ரீசகஸ்ரலட்மீஸ்வரர் திருக்கோயில்...
ஊர் தீபத்தூர் ஆவுடையார்கோயில்...

ரேவதி...
ஶ்ரீகைலாசநாதர் திருக்கோயில்...
ஊர் காருகுடி திருச்சி....

அன்பர்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் அவரவர் நட்சத்திரங்களுக்கான திருக்கோவில் சென்றுவழிபாடு செய்துவர நன்மைகள் உண்டாகும்....


பக்தி என்பது.......................

பக்தி என்பது.......................

சூரியன் வலுவாய் உள்ளவர்களுக்கு அமைதியாய் இருக்கும்......
சந்திரன் வலுவாய் உள்ளவர்களுக்கு மனதளவில் இருக்கும்......
செவ்வாய் வலுவாய் உள்ளவர்களுக்கு ஆவேசமாய் இருக்கும்...........
புதன் வலுவாய் உள்ளவர்களுக்கு
மெளனமாய் இருக்கும்...........
குரு வலுவாய் உள்ளவர்களுக்கு
தேடலாய் இருக்கும்........
சுக்கிரன் வலுவாய் உள்ளவர்களுக்கு
ஆடம்பரமாய் இருக்கும்........
சனி வலுவாய் உள்ளவர்களுக்கு
சஞ்சலமாய் இருக்கும்...........
இராகு வலுவாய் உள்ளவர்களுக்கு
வீம்பாய் இருக்கும்..............
கேது வலுவாய் உள்ளவர்களுக்கு
தெளிவுபோல இருக்கும்.......
 
மொத்தத்தில் பக்தி உணரும் வரை
வெளியேயும் உணர்ந்தபின் உள்ளேயும் இருக்கும்.............

உணரவைக்கிறேன் என்பவர் மெய்யுடலாய் இருப்பார் குரு போல
உணர்ந்தேன் என்பவர் பொய்யுடலாய் இருப்பார் கேது போல

ஞானம் என்பது...............

ஞானம் என்பது..................

சூரியனைப் போல்
தன்னொளியாய் பேதமற்றும்
சந்திரனைப்போல்
பிரதிபலிப்பாய் குளிர்வுற்றும்............
செவ்வாயைப் போல்
உள் சிவந்து வலிவுற்றும்................
புதனைப் போல்
ஆய்ந்து தெளிவுற்றும்...........
குருவைப் போல்
மெளனமாய் பொலிவுற்றும்........
சுக்கிரனைப் போல்
அக உலகில் அழகுற்றும்............
சனியைப் போல்
சாதனையில் சிறப்புற்றும்..........
ராகுவைப் போல்
நீண்ட காலம் நிலைபெற்றும்
கேதுவைப் போல
தன்னை த் தான் அறிய முற்ப்பட்டதும்
ஆகும்........,

மொத்தத்தில் புறத்தில் தேடினாலும் ஓடினாலும் ஆடினாலும் அடங்கினாலும் சாதித்தாலும் 
சாதனை செய்தாலும் தெளிவதல்ல

ஞானம்.........
தனனுள் தானடங்கி தனக்கென்றில்லாது தவ நிலையில்
தானிருத்தலே தவிர
யாராலும் தரப்படுவதுமில்லை பெறப்படுவதுமில்லை............

உணர்வோம் தெளிவோம்..........
அன்புடன்; பரமானந்தன்...ௐ

தேடல் என்பது..............

தேடல் என்பது..............

சூரியன் வலுவாய் இருப்பின் பகிரங்கமாயும்.
சந்திரன் வலுவாய் இருப்பின்
பதிவிசாகவும்.
செவ்வாய் வலுவாய் இருப்பின்
வேகமாகவும்.
புதன் வலுவாய் இருப்பின்
விவேகமாகவும்.
குரு வலுவாய் இருப்பின்
பக்தியாகவும்.
சுக்கிரன் வலுவாய் இருப்பின்
அழகாகவும்.
சனி வலுவாய் இருப்பின்
சாதனை யாகவும்.
ராகு வலுவாய் இருப்பின்
பரப்பொருளாகவும்.
கேது வலுவாய் இருப்பின்
அகப்பொருளாகவும் இருக்கும்..........

யார் எதைத்தேடினாலும் அது அவர்களிடம் சேர்வதற்கு அவரவர்களின் ஊள் வினை உள்ளார்த்தமாகவே இருக்கும்.........
அந்த ஊள் வினைப்பயனே
அவரவர்களுக்கு தேவையானதை அவர்கள் தேடாமலே கொண்டு சேர்க்கும்.........

பின் எதற்காக மாந்தர்களே நாம் அனைவரும் காலையில் துவங்கி இரவு வரை இப்படி ஓடிக்கொண்டிருக்கின்றோம்?.......

கூடல் (சேர்தல்) என்பது......

கூடல் (சேர்தல்) என்பது......

சூரியன் வலுவாய் இருப்பின் பகிரங்கமாகவும்.
சந்திரன் வலுவாய் இருப்பின்
பாசமாகவும்.
செவ்வாய் வலுவாய் இருப்பின்
உரிமையாகவும்.
புதன் வலுவாய் இருப்பின்
உறவாகவும்.
குரு வலுவாய் இருப்பின்
சுயநலமாகவும்.
சுக்கிரன் வலுவாய் இருப்பின்
விட்டுக்கொடுத்தலாகவும்.
சனி வலுவாய் இருப்பின்
மேன்மையாக வரும்.
ராகு வலுவாய் இருப்பின்
ரகசியமாகவும்.
கேது வலுவாய் இருப்பின்
ஆனந்தமாவும் இருக்கும்...........

எது எப்படியாயினும் நல்லோருடன் கூடி நலமோடு வாழ்தலே அன்றி
பொல்லாருடன் கூடி புறங்கதை பேசி திரியாமல்
உன்னுடன் கூடி உயர்வான உள் உணர்ந்து ஊமையாய் வாழ்தலே உண்மையான கூடல் (சேர்தல்)........


சக்தி என்பது..............

சக்தி என்பது...............

சூரியன் வலுவாய் இருப்பின்
தலைமை யேற்று மற்றவரை பணியவைக்கும்.
சந்திரன் வலுவாய் இருப்பின்
அன்பால் மற்றவரை அடிமையாக்கும்.
செவ்வாய் வலுவாய் இருப்பின்
அதிகாரத்தால் அடி பணிய வைக்கும்.
புதன் வலுவாய் இருப்பின்
அறிவால் அடுத்தவரை அதிர வைக்கும்.
குரு வலுவாய் இருப்பின்
சாமார்த்திய பேச்சால் தன் பக்கம் சாய வைக்கும்.
சுக்கிரன் வலுவாய் இருப்பின்
அலங்கார வார்த்தை ஜாலத்தால் அடுத்தவரை அதிர வைக்கும்.
சனி வலுவாய் இருப்பின்
சலியாத மனத்தால் மற்றவரை
சட்டென்று அடிமையாக்கும்.
ராகு வலுவாய் இருப்பின்
தன் பின்புலத்தால் மற்றவரை அடிமையாக்கும்.
கேது வலுவாய் இருப்பின்
தன் ஆன்மீக பலத்தால் அடுத்தவரை
அடிமையாக்கும்..........

யார் யாரை யாரால் எப்படி அடிமை கொண்டாலும்
உள்ளார்ந்த அப்பழுக்கற்ற அன்பினால் மட்டுமே அனைவரையும்
ஏன் ஆண்டவனையும் கூட அடிபணிய வைக்க இயலும்..............

எந்த எதிர்பார்ப்பும் அற்ற ஆத்மார்த்தமான அன்பு ஒன்றே அனைவரையும் நமக்கு அடிமையாக்கும்.....,...

அடிபணிந்து அடிபணிய வைக்க அன்பால் மட்டுமே இயலும்.......

சுகம் என்பது..........

சுகம் என்பது.................

சூரியன் வலுவாய் இருப்பின்
பிறரால் இருக்கும்.....

சந்திரன் வலுவாய் இருப்பின்
பெண்மையால் இருக்கும்......

செவ்வாய் வலுவாய் இருப்பின்
ஆற்றலாய் இருக்கும்.........

புதன் வலுவாய் இருப்பின்
அறிவால் இருக்கும்..........

குரு வலுவாய் இருப்பின்
குணத்தால் இருக்கும்..........

சுக்கிரன் வலுவாய் இருப்பின்
அழகினால் இருக்கும்...........

சனி வலுவாய் இருப்பின்
உழைப்பினால் இருக்கும்........

ராகு வலுவாய் இருப்பின்
பேராசையில் இருக்கும்............

கேது வலுவாய் இருப்பின்
இழப்பதால் இருக்கும்...............

ஆயினும் அத்ம ஞானம் என்னும்
ஆன்ம எண்ணத்தினால் உண்டாகும்
அளப்பறிய பேரானந்த சுகமே
கிடைத்திட நாம் மனதளவில் வலுவான நிலையில் மெளனத்துடன் இருத்தல் வேண்டும்........

மனம் என்பது...........

மனம் என்பது..............

சூரியன் வலுவாய் இருப்பின்
மரியாதையை விரும்புவதாய் இருக்கும்......

சந்திரன் வலுவாய் இருப்பின்
அன்பை விரும்புவதாய் இருக்கும்....

செவ்வாய் வலுவாய் இருப்பின்
தன் மானத்தை விரும்புவதாய் இருக்கும்..........

புதன் வலுவாய் இருப்பின்
காதலை விரும்புவதாய் இருக்கும்.....

குரு வலுவாய் இருப்பின்
அதிகாரத்தை விரும்புவதாய் இருக்கும்..........

சுக்கிரன் வலுவாய் இருப்பின்
சுகங்களை விரும்புவதாய் இருக்கும்...........

சனி வலுவாய் இருப்பின்
பழமையை விரும்புவதாய் இருக்கும்...........

ராகு வலுவாய் இருப்பின்
கள்ளத்தனத்தை விரும்புவதாய் இருக்கும்.......

கேது வலுவாய் இருப்பின்
தன்னையே ஏமாற்றிக் கொள்வதாய் இருக்கும்............

எது எப்படியாயினும் மனம் மனம்
அது தெளிவாய் இருந்து தீயாய் ஒளிர்ந்தால்............
அது படைக்கப்பட்டதின் உண்மை நிலையை உணரும்..........
உண்மை நிலையை உண்ர்ந்தபின்
இந்த உலகில் உண்மையான அனைத்தும் பொய் என்று புரியும்.....

சங்கடம் என்பது..........

சங்கடம் என்பது............

சூரியன் வலுவாய் இருப்பின்
நேர்மையால் விளையும்.....

சந்திரன் வலுவாய் இருப்பின்
மனமாற்றத்தால் விளையும்.......

செவ்வாய் வலுவாய் இருப்பின்
அதிகாரத்தினால் விளையும்.....

புதன் வலுவாய் இருப்பின்
தன் புத்தியால் விளையும்........

குரு வலுவாய் இருப்பின்
அறியாமையால் விளையும்.........

சுக்கிரன் வலுவாய் இருப்பின்
கெளரவத்தால் விளையும்.........

சனி வலுவாய் இருப்பின்
தலைக்கணத்தால்  விளையும்......

ராகு வலுவாய் இருப்பின்
பேராசையால் விளையும்.........

கேது வலுவாய் இருப்பின்
சொந்தங்களால் விளையும்........

எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் எல்லா வினைகளிலும் எல்லாம் என்னால்
என்றில்லாமல்.......
அனைத்தும் அவனாலே என்று உணர்ந்தால் எந்த சங்கடங்களும்
நம்மை அனுகாது................

உணர்வோம் தெளிவோம்........
அன்புடன்;பரமானந்தன்...ௐ

துன்பம் என்பது.............

துன்பம் என்பது..............

சூரியன் வலுவாய் இருப்பின்
செய்ய வேண்டியதை செய்யாமலிருப்பதால் நேரும்...........

சந்திரன் வலுவாய் இருப்பின்
சொல்ல வேண்டியததை சொல்லாமலிருப்பதால் நேரும்........

செவ்வாய் வலுவாய் இருப்பின்
பிறர் சொல்வதை கேட்பதால் நேரும்..........

புதன் வலுவாய் இருப்பின்
பிறர் சொல்வதை கேளாததால் நேரும்..........

குரு வலுவாய் இருப்பின்
ஆசையை அடக்க நினைப்பதால் நேரும்..........

சுக்கிரன் வலுவாய் இருப்பின்
ஆசை அடங்காததால் நேரும்.........

சனி வலுவாய் இருப்பின்
தற் பெருமையால் நேரும்..........

ராகு வலுவாய் இருப்பின்
தேடுவதெல்லாம் கிடைப்பதால் நேரும்......

கேது வலுவாய் இருப்பின்
தேடுவது எது என்று தெரியாததால் நேரும்.........

ஓன்பது துவாரங்களை ஒழுங்காக பேணி
ஐம்புலன்களை ஆண்டு வரும்
அனைவருக்கும் துன்பம் என்பது எப்போதும் துணையாய் வரும்

உணர்வோம் தெளிவோம்.........
அன்புடன்;பரமானந்தன்...ௐ

Wednesday, 27 January 2021

ஆகாது என நினைக்கும் காரியத்தையும் அமைத்துக்கொடுக்கும் அஷ்டமி விரதம்....

ஆகாது என நினைக்கும் காரியத்தையும் அமைத்துக்கொடுக்கும் அஷ்டமி விரதம்....
இதில் வருடத்தில்,12,தேய்பிறை அஷ்டமி சிவனுக்குறியவையாம்....
அவை முறையே...

மார்கழி... சங்கராஷ்டமி...
தை... தேவதேவாஷ்டமி...
மாசி... மகேச்வராஷ்டமி...
பங்குனி... திரயம்பகாஷ்டமி...
சித்திரை... ஸநாதனாஷ்டமி...
வைகாசி... சதாசிவாஷ்டமி...
ஆனி... பசுவதாஷ்டமி...
ஆடி... நீலகண்டாஷ்டமி...
ஆவணி... ஸ்தானு அஷ்டமி...
புரட்டாசி... சம்புகாஷ்டமி...
ஐப்பசி... ஈச்வராஷ்டமி...
இவ்விரத்தை அனுஷ்டிப்பதால்
கிடைக்கும் பலன்களாவன....

மார்கழி அஷ்டமி யில் கோமூத்ரம் அருந்தி உபவாசமிருந்து மறுநாள் விரதபூர்த்தி செய்பவர்கள் மோட்சபதவி பெறுவர்....

தை அஷ்டமியில் பசுநெய் அருந்தி உபவாசமிருக்க பிரம்மஹத்திதோஷம் முதலான பாபங்களிலிருந்து நீங்குவர்....

மாசி அஷ்டமியில் பசும்பால் பாயாசம் செய்து தட்சிணாமூர்த்தி க்கு நிவேதனம் செய்து உபவாசமிருக்க சொர்க்கம் செல்வர்....

பங்குனி அஷ்டமி யில் எள்ளுப்பொடிசாப்பிட்டு உபவாசமிருக்க நற்கதி அடைவர்....

சித்திரை அஷ்டமியில் பால்மட்டுமறுந்தி உபவாசமிருக்க தர்மம் செய்த புண்ணியம் பெறுவர்....

வைகாசி அஷ்டமியில் சுத்தநீர்மட்டும் அருந்தி உபவாசமிருக்க தான் செய்த பாவங்களிலிருந்து விடுபடுவர்..

மற்றும் ஆனியிஅஷ்டமியில் கோமூத்ரம்
ஆடிஅஷ்டமியில் பழங்கள்
ஆவணி அஷ்டமியில் உப்புநீர்
புரட்டாசி அஷ்டமியில் தயிர்
ஐப்பசி அஷ்டமியில் வெந்நீர்
கார்த்திகை அஷ்டமியில் தேன்
இவைமட்டும் அருந்தி உபவாசம் இருந்து வர சகலபாவங்களும் நிவர்த்தியாகும் நிலை பெறுவார்கள்........


இதனால் கெட்டார்கள் இவர்.........

இதனால் கெட்டார்கள் இவர்.........

வணக்கமில்லாததால் கெட்டவர்கள்...
நகுஷன், சுதாசன், நிமி....

சூதால் கெட்டவர்கள்....
நளன்,தருமி, உருக்குமி.....

பிறன்மனை நயத்தால் கெட்டவர்கள்....
இராவணன், இந்திரன், கீசகன்..

காமத்தால் கெட்டவர்கள்...
சும்ப.நிசும்பர், அந்தகாசூரன்...

சகோதரனை வெறுத்ததால் கெட்டவர்கள்...
வாலி, இராவணன்....

கெட்டவார்த்தைகளால் கெட்டவன்...
சிசுபாலன்...

சொல்லிச்செய்யாது கெட்டவன்.
உத்தரன்...

வஞ்சனை யால் கெட்டவர்கள்...
மாரீசன்,வில்லவன்...

அகங்காரத்தால் கெட்டவர்கள்..
இரண்யாட்ஷன், துரியோதனன்....

கோபத்தால் கெட்டவன்...
தட்ஷன்...

கொடுங்கோலால் கெட்டவன்...
கம்சன்...

புல்லறிவால் கெட்டவர்கள்...
மதுகைடபன், கலந்தரன்....

உட்பகையால் கெட்டவன்...
சம்பரன்...

பெரியோரை மதியாமல் கெட்டவன்....
இந்திரன்.....

இவர்களைப்போல் நாமும் கெடாமல் இருக்க இறைவனை வேண்டி வழிபடுவோம்....

தானம் செய்வதினால் கிடைக்கும் பலன்கள்....

தானம் செய்வதினால் கிடைக்கும் பலன்கள்....

12,மாதங்களில் செய்யவேண்டியதானங்கள்...
சித்திரை.. நீர்மோர். விசிறி. செருப்பு. குடை.தயிர்சாதம். பட்சணங்கள்...

வைகாசி...
பானகம். ஈயப்பாத்திரம். வெல்லம்...

ஆனி...
தேன்

ஆடி...
வெண்ணெய்...

ஆவணி... தயிர்...
புரட்டாசி ...சர்க்கரை...
ஐப்பசி.... பரமான்னம்...
கார்த்திகை... பால். தீபம்...
மார்கழி...பதிர்பேணி. பொங்கல்...
தை... தயிர்ஏடு...
மாசி... நெய்...
பங்குனி... தேங்காய்...

கிழமைகளில் செய்யவேண்டியவை...

ஞாயிறு... பாயாஸான்னம். சர்க்கரைப்பொங்கல்...
திங்கள்... பால்...
செவ்வாய்... வாழைப்பழம்...
புதன்... வெண்ணெய்...
வியாழன்... சர்க்கரை....
வெள்ளி... வெள்ளைசாதம்...
சனி...பசும்நெய்...

இவைகளை ஆண்டுமுழுவதும் செய்துவந்தால் சுவர்க்கபலன் கிட்டும்....

பிறதானபலன்கள்...

வஸ்திரம்.. ஆயுள் அபிவிருத்தி...
பூமி.. பிரம்ஹ லோகம்...
தேன்.. புத்ரபாக்யம்...
கோ தானம்.. பித்ரு. ரிஷி. தேவர்கள் இம்மூவர்கள் கடன்களும் தீர்க்கும்...

நெல்லிக்காய்.. ஞானம்... கிடைக்கும்...
கோயிலில் தீபம்.. ராஜபதவி...
தீபம்..கண்பார்வை விருத்தி...
எருமை..அகாலமரணம் தவிர்க்கும்...

விதை.. தீர்க்காயுளையும் தீர்க்காயுள்உள்ள சந்ததியும் தரும்...

அரிசி.. பாபம்போக்கும்...
தாம்பூலம்.கனிவர்க்கம்.. ஸ்வர்க்கம் தரும்...

கம்பளி.. வாயுரோகம் நீக்கும்...
பருத்தி.. வெண்குஷ்டம் நீக்கும்..
பூணூல்.. பிராமண ஜென்மம்...
நெய்.. ரோகநாசனம்...

புஷ்பம். துளசி. ஸமித்து. காய்கறி. தான்யம் தானம்..
ஸ்வர்க்கம் தரும்...

சர்க்கரை.. ஆயுள்விருத்தி...
பால்.. துக்கம் அகலும்...
வடை.. விக்நத்தைப்போக்கும்...
வாழைப்பழம்.. புத்தி சூட்சுமம்...
வெல்லம்.. சோகம் அகலும்...
தேங்காய்.. கவலை தாபம் நீங்கும்...

பொரி.. இவ்வுலசுகம்...
எள்.. யமபயம் நீங்கும்...
தயிர்.. இந்திரீயவிருத்தி...
அவல்.. தேவப்ரஸாம் உண்டாகும்...

கடலை.. ஸந்ததி விருத்தி...
சத்துமாவு.. பகவத்பக்தி...
பாயஸம்.. பித்ருபிரீதி. சந்ததிவிருத்தி...

ஸ்வர்ணம்.. பாபம். ஏழ்மைஅகலும்...

குடை. பாதுகை.. இஹத்திலும் எமலோகத்திலும் இன்பம் தரும்...

கன்யாதானம்..27,ஜென்ம பாபம் நீக்கும்...

விசிறி.பானகம். நீர்மோர். தீர்த்தம்... மனசாந்தி யும் வாயு வருணலோக ப்ராப்தியும் தரும்..

படுக்கை.. சுகம் தரும்...

ஜபமாளை. ஆஸனம். விபூதி. கோபிசந்தனம்... சுகசுரம். நல்ல ஜன்மாவையும் தரும்...

அன்னதானம்.. ஸ்வர்க்கம் கிடைக்கும்...

அன்பர்களே முடிந்தவரை இவற்றில் நம்மாள் இயன்றதானங்களைச்செய்து இனிது வாழலாம்....

இரவில் தூங்குமுன் நினைக்க வேண்டிய தெய்வங்கள்...

ராமஸ்கந்தம் ஹநூமந்தம் வைநதேயம் வ்ருகோதரம் ஸயநே ய;ஸ்மரேந்நித்யம்துஸ்வப்நம் தஸ்ய நயதி....

ஶ்ரீராமனை தோளில் தரித்த ஶ்ரீஹனுமானையும் கருடனையும் பீமஸேனனையும் நினைத்துப்படுத்துரங்கினால்
நிம்மதியாக உறங்கலாம்....

அன்புடன்; பரமானந்தன்...ௐ

எந்த ஹோரையில் எந்தகாரியங்களைச்செய்யலாம்

நாம் செய்யும் அனைத்துவித மான தொழில்களும் காரியங்களும் நல்லபடியாக நடைபெற வேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பமாகும்.
இப்படி அத்துனை செயல்களும் சிறப்பாக நடக்க அந்த அந்த காரணகாரியங்களுக்குறிய கிரகங்களுக்கு உரிய ஹோரையில்(குறிப்பிட்ட மணியில்)செய்யும் பட்சத்தில் அக்காரியம் செவ்வனே நடந்து சிறப்புறும்.....

இனி எந்த ஹோரையில் எந்தகாரியங்களைச்செய்யலாம் என்பதுபற்றி பார்ப்போம்....

சூரியஹோரை....
அரசு துறை சார்ந்த காரியங்களை சாதிக்க, ஒருவருடைய உதவியைப்பெற, உத்தியோகத்தில் சேர, வியாபாரம் ஆரம்பிக்க,
பெரியோரை பேட்டி காண சூரிய ஹோரை நல்லது....

சந்திரஹோரை.....
பிரயாணம் செய்ய கப்பலில் பயணம் செய்ய பெண்கள் சம்பந்தமான காரியங்கள் பேச
சந்திர ஹோரை நல்லது....

செவ்வாய் ஹோரை....
நிலம் சம்பந்தப்பட்ட காரியங்கள் தவிர வேறு செய்ய சிறந்ததல்ல செவ்வாய் ஹோரை....

புதஹோரை.....
எழுத்து வேலைகள் ஆரம்பிக்க ஜோதிட மற்றும் விஞ்ஞான சம்பந்தப்பட்ட ஆய்வு செய்ய வக்கீல்களை பார்த்து பேச தபால் தந்தி அனுப்ப
புதஹோரை நல்லது....

குருஹோரை......
சாமான்கள் வாங்க செல்வந்தர்கள் தயவைநாட பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பேச கல்வி கற்க ஆரம்பிக்க கலைபயில ஆபரணங்கள் வாங்க விவகாரங்கள் பேசி வெற்றிபெற
குரு ஹோரை நல்லது......

சுக்கிரஹோரை....
சுபகாரியங்கள்,திருமணகாரியங்கள், பெண்சம்பந்தப்பட்ட காரியங்கள் பேச விருந்துண்ண வாகனங்கள் வாங்க மருந்துண்ண 
சுக்கிரஹோரை நல்லது......

சனிஹோரை......
இவ்வோரை தனில் எக்காரியங்களும் செய்யலாகாது ஆனால் நிலம் வாங்க விற்க
சனிஹோரை நல்லது....


பதினெண் சித்தர்களும் அவர்கள் உறையும் திருக்கோயில் களும்..

பதினெண் சித்தர்களும் அவர்கள் உறையும் திருக்கோயில் களும்...

1,நந்தீசர்.....காசி
2,போகர்... பழனி
3,திருமூலர்... சிதம்பரம்
4,பதஞ்சலி... சேது
5,தன்வந்திரி... வைத்தீஸ்வரன் கோவில்.
6,கருவூர்சித்தர்... கரூர்
7,சுந்தரானந்தர்... மதுரை
8,மச்சமுனி... திருப்பரங்குன்றம்
9,இராமதேவர்... அழகர்கோயில்
10,சட்டமுனி... திருவரங்கம்
11,கமலமுனி... திருவாரூர்
12,வன்மீகர்...எட்டுக்குடி
13,குதம்பை சித்தர்... மாயூரம்
14,பாம்பாட்டி சித்தர்... விருத்தாசலம்.
15,இடைக்காடர்... திருவண்ணாமலை.
16,கோரக்கர்... பேரூர்
17,கொங்கணவர்... திருப்பதி
18,கும்பமுனி... திருவனந்தபுரம்


நாமகரணம்....

நாமகரணம்....

பொதுவாக குழந்தைபிறந்தது முப்பது நாளில் பெயர்சூட்டுதலையே நாமகரணம் சூட்டுதல் என்கின்றோம்.
இதை ஒருசடங்காக செய்யவேண்டுமென்பது மரபு ஆனால் இன்றையதலைமுறையினர் அதை ஒருபொருட்டாக கருதுவதில்லை ஏதாவதொருவெப்சைட்டில் சென்று வாயிலும் நுழைய முடியாத ஒரு பெயரை குழந்தை பிறக்கும் முன்னரே தேர்வுசெய்து அதை வைத்தும் விடுகின்றனர்.
அதனால் பெயர் சூட்டுதல் ஒருசடங்கு என்பதே இப்போது மாறிப்போனது.
நாமகரண சம்ஸ்காரம் என்ற பெயரில் அறியப்படும் ஒருசடங்கு நம் முன்னோர்கள் நடத்திவந்தனர்.
குழந்தைபிறந்து பதினைந்து நாளிலிருந்து முப்பது நாளுக்குள் இச்சடங்கு பொதுவாக செய்து வந்தனர்.
அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் தாய் குழந்தையை நீராட்டி புதிய ஆடைகளைஅணிவித்து மனையில் அமர்ந்திருக்கும் தந்தையின் பின்புறமாகச்சென்று குழந்தையை தந்தையிடம் கொடுத்துவிட்டு அவரின் இடதுபுறம் அமர்ந்துகொண்டு குழந்தையை வாங்கியபின்
தந்தை இறைசிந்தனையுடன் குழந்தைக்கு அதன் பெயரை காதில் மூன்று முறை குழந்தையின் காதில் சொல்லுதலே நாமகரணம் செய்வித்தல்.
ஆண்குழந்தையானால் சக்தியை பிரதிபலிக்கும் பெயர் வழங்கவேண்டும்.
பலம். ஐஸ்வர்யம். சேவை என்பவற்றைக்குறிக்கும் பெயர்கள் உத்தமமானது.
பெண் குழந்தை எனில் எளிதில் உச்சரிக்க கூடியதும் தெளிவான பொருள் விளங்குவதும் கேட்பவர் மனதில் மகிழ்ச்சி யூட்டும்படியான சுபம் நிறைந்த தும் நெடில் ஓசையில் முடியும்படியானதுமான பெயர்கள் உத்தமம்.
இவற்றில் கவனிக்க வேண்டியது பெயரில் கூடுதல் எழுத்துக்கள் இல்லாதவையாக இருத்தல் நலம்.

ஒருபெயரில் என்ன இருக்கிறது என்று கேட்பதுவே இன்றைய கண்ணோட்டம் என்றாலும் ஒரு தனிநபரின் பெயர் அவரில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எண்ணியல் மற்றும் மனநிலை அறிஞர்கள் அங்கீகரித்துள்ளனர்.....

27 நட்சத்திரக்காரர்களும்... அவர்களின் வெற்றிநாட்களும்!

27 நட்சத்திரக்காரர்களும்... அவர்களின் வெற்றிநாட்களும்!

உங்கள் வாழ்க்கையில் 100 சதவிகிதம்என்னும் முழுமையான வெற்றியைக்கண்டிருக்கிறீர்களா? அப்படி இருந்தால், அந்த நாள் என்ன என்பது தெரிந்தால்,அந்த நாளின் நட்சத்திரம் என்ன என்று பாருங்கள்.

அது நிச்சயமாக உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திர நாளாகத்தான்இருக்கும்.

வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்தானே. பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் இருக்கிறார்களா என்ன? எடுத்த முயற்சிகள் யாவும் சிந்தாமல் சிதறாமல் வெற்றியாக, கெளரவமாக, சந்தோஷமாக கிடைக்க வேண்டும் என்பதுதானே நம் எதிர்பார்ப்பு.

 புதியதாக ஆரம்பிக்க இருக்கும் தொழில், வியாபாரம் முழு வெற்றியடைய வேண்டும் என்றுதானே கடும் போராட்டத்துக்குத் தயாராகிறோம்.  

புதிய கல்வி முயற்சி தடையில்லாமல் முடிக்கவேண்டும் என்பதுதானே நம் குழந்தைகள் குறித்த ஆகச்சிறந்த பெருங்கவலை.  வெளிநாட்டு வேலைமுயற்சி வெற்றிபெற வேண்டும் என்பது நம்மில் பலருக்குமான கனவு அல்லவா!

சொத்துக்கள் வாங்க, விற்க. பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய, வியாபாரரீதியிலான பயணம் மேற்கொள்ள என நம் வாழ்வியல் தொடர்பான அத்தனைவிஷயங்களும் முழுநன்மையோடு நம்மை வந்தடைய வேண்டும் என்பதற்காகத்தானே சதாசர்வ காலமும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றேஒன்றுதான். அதுதான் சம்பத்து தாரை.

சம்பத்துதாரை” என்னும் உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமானசம்பத்து நட்சத்திர நாளில் செய்யப்படும் அனைத்து காரியங்களும் 100சதவிகிதம் வெற்றியைத் தந்தே தீரும் என்பது சத்தியம்.

இதை எப்படி அறிந்துகொள்வது? 

உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து தாரை நட்சத்திரங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.

அஸ்வினி:- இதற்கான சம்பத்து நட்சத்திரங்கள் 
பரணி, பூரம், பூராடம்

பரணி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் 
கார்த்திகை, உத்திரம்,உத்திராடம்

கார்த்திகை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
ரோகிணி, அஸ்தம்,திருவோணம்

ரோகிணி:- இதன் சம்பத்து நட்சத்திரம்
மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம்

மிருகசீரிடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
திருவாதிரை, சுவாதி,சதயம்

திருவாதிரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி

புனர்பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூசம், அனுசம்,உத்திரட்டாதி

பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
ஆயில்யம்,கேட்டை,ரேவதி

ஆயில்யம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
மகம், மூலம்,அசுவினி

மகம் :-   இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூரம்,பூராடம்,பரணி

பூரம் :-  இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திரம், உத்திராடம்,கார்த்திகை

உத்திரம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அஸ்தம்,திருவோணம்,ரோகிணி

அஸ்தம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம்

சித்திரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சுவாதி,சதயம்,திருவாதிரை 

சுவாதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
விசாகம், பூரட்டாதி, புனர்பூசம்

விசாகம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அனுசம்,உத்திரட்டாதி, பூசம்

அனுசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
கேட்டை,ரேவதி,ஆயில்யம்

கேட்டை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
மூலம், அசுவினி,மகம்

மூலம் :-   இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூராடம்,பரணி,பூரம் 

பூராடம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திராடம், கார்த்திகை, உத்திரம்

உத்திராடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
திருவோணம், ரோகிணி,அஸ்தம்

திருவோணம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அவிட்டம்,மிருகசீரிடம்,சித்திரை

அவிட்டம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சதயம்,திருவாதிரை,சுவாதி

சதயம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூரட்டாதி, புணர்பூசம், விசாகம் 

பூரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திரட்டாதி, பூசம், அனுசம்

உத்திரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
 ரேவதி,ஆயில்யம்,கேட்டை

ரேவதி :-    இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அசுவினி,மகம்,மூலம்

இப்போது உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து நட்சத்திரங்களை அறிந்துகொண்டீர்கள் அல்லவா. உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து நட்சத்திரங்கள் எந்த நாளில் இருக்கிறதோ... அந்த நாளே உங்களுக்கு உகந்த பொன்னாள். தொட்டதெல்லாம் துலங்கும் என்பார்களே. இந்த நாட்களில் நீங்கள் எடுக்கும் எந்தக் காரியமும் ஜெயத்தில்தான் முடியும். ஜெயத்தையே தந்தருளும்.

இதைப் பயன்படுத்தி வெற்றியை உங்கள் வசப்படுத்துங்கள். 

இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன்.

நவகிரகங்களே அவரவர் நட்சத்திரங்களுக்கு சம்பத்து நட்சத்திரமான அடுத்தநட்சத்திரங்களில் தான் பிறந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... சம்பத்து நட்சத்திரங்களின் மகத்துவத்தையும் மகோன்னதத்தையும்!

உதாரணமாக சூரியனின் நட்சத்திரங்களில் ஒன்று “உத்திரம்.” ஆனால் சூரியபகவான் ஜனித்த நட்சத்திரம் உத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமான “அஸ்தம்”நட்சத்திரத்தில்.

சந்திரன் தன் நட்சத்திரமான “ரோகிணிக்கு” அடுத்த நட்சத்திரமான “மிருகசீரிடம்”நட்சத்திரத்தில் பிறந்தவர். 

இப்படி கிரகங்களே “சம்பத்து நட்சத்திரங்களை” பயன்படுத்தி அழியாப் புகழுடன்இருக்கும் போது, நாமும் அதைப் பயன்படுத்தி வளமான வாழ்க்கையைஅமைத்துக்கொள்வோம். செழிப்பான இந்த வாழ்க்கையை சீரும்சிறப்புமாக்குவோம்.

ஏகாதசி விரதம்...

ஏகாதசி விரதம்...
ஏகாதசிதிதி இது அமாவாசை அல்லது பவுணர்மியிலிருந்து பதினொராம் நாளே ஏகாதசி திதி....
இந்த ஏகாதசிக்கு
இந்நாளில் சூரியன் சந்திரன் பூமி இம்மூன்று சுழற்சியில் ஒருமுக்கோணநிலையை அடையும் அந்நிலையில் சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் பூமியில் உள்ள நீர்நிலைகளின் மீது பாதிப்பு உண்டாகிறது....
மனிதராகிய நம் உடலும்70%நீரினால் ஆனாதால் சந்திரனின் ஆகர்ஷண சக்தியால் ஜீரண உறுப்புக்கள் அன்றைய தினம் சரிவர இயங்காமல் ஜீரணம் சரியாக நடைபெறாது அப்போது உணவருந்தினால் ஜீரணமாவது கடினம் எனவேதான் நமது முன்னோர்கள் ஏகாதசி மற்றும் கிரஹண காலத்தில் உபவாசம் என்னும் உண்ணாநோன்பு இருப்பதை வழக்கமாக்கினர்.

வாகனங்கள் இயந்திரங்கள் இவைகள் கூட தொடர்ந்து வேலைசெய்வதால் கெட்டுப்போய்விடும் என்பதால் அதற்கு சிலநாள் ஓய்வு கொடுக்கின்றோம்.
ஆனால் ஓயாது உழைக்கும் நமது உடலுக்கும் ஜீரண உறுப்புகளுக்கும்ஓய்வு அளிப்பது பற்றி நாம் சிந்திப்பதே இல்லை
இந்த உடல் என்னும் உயிர் உள்ள இயந்திரத்திற்கும்ஓய்வளிக்கும் போது உடலில் பல இரசாயன பெளதீக மாற்றங்கள் உண்டாகின்றன. இதனால் உடலில் உள்ள கழிவுமற்றும் நச்சுப்பொருள்கள் வெளியேற்றப்படுகின்றன.

நீர் கூட அருந்தாத சுத்த உபவாசம் இருக்கும் போது அடிபோஸ் திசுக்களில் இருந்து கொழுப்பு கரையும்.
உபவாசத்தின் போது உடலுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்க திசுக்கள் சிதைந்து அதிலுள்ள புரதம் குளுக்கோஸ் ஆக மாற்றப்படும்.
இது பொதுவாக கல்லீரலில் நடைபெறும் ஒரு வேதிவினை ஆகும்.
திசுக்களில் உள்ள புரதம் குளேக்கோஸாக மாற்றப்படுவதால் ஒரு நாள் உபவாசத்தால் சுமார்66,கிராம் கொழுப்பு அழிக்கப்படுகிறது
இதனால் உடல் எடை குறைந்து வயிறு சுருங்கி தொந்தி குறையும்.

உபவாசத்தின் பின் சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் வழக்கத்தைவிட அதிகமாக வேலைசெய்யும் ஆற்றல் உடலுக்கு உண்டாகும்.
அஜீரணக்கோளாறுகள் .பசியின்மை நீங்கி நல்ல குரல்வளம் தூக்கமும் வரும்.
சாப்பிடும் உணவுகள் காய்கறிகள் பழங்கள் நாக்கிற்குஅதிக சுவையாகவும் இருக்கும்.
கண்கள் பிரகாசமடைந்து ஆரோக்கியமும் ஆயுளும் அதிகரிக்கும்.

சிரி ஆனால் இந்த வைகுண்ட முக்கோடி ஏகாதசியன்று கண்விழித்திருப்பதினால் உண்டாகும் நன்மைகள்.....
பொதுவாக உண்ணாதிருந்தால் உடல் இயற்கையாகவேஉஷ்ணம் அடையும். இத்தோடு இரவில் விழித்திருக்கும் போது மிக அதிக அளவில் உடல் வெப்பம் அதிகரிக்கும். இதனால் நாம் தினமும்உட்கொள்ளும் ஆகாரம் நீர் காற்று இவைகளின் மூலம் உடலில் சேரும் நோய்க்கிருமிகள்அழிந்து சரீரம் புடம் போட்டதங்கம் போல் சுத்தமாகிறது.

இதற்கு மறுநாளான துவாதசியில் நாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய முக்கியமானவைகள்
அகத்திக்கீரை. நெல்லிக்காய். சுண்டைக்காய்.. எதனால் அகத்திக்கீரை
உபவாசத்தினால் எற்படும் உடலின் வெப்பத்தை சமப்படுத்தும் அகத்தில் எழும் தீயை சமன்செய்வது இக்கீரை
அகம்+தீ+கீரை=அகத்திக்கீரை
இக்கீரையில் வைட்டமின். ஏ.சத்து மற்றும் சுண்ணாம்பு.இரும்புச்சத்துக்களும்.. குடல்புண் இரைப்பை கோளாறு பித்தம் குறைத்தல் கபத்தை நீக்குதல் நரம்புத்தளர்ச்சி இவைகளுக்கும் கண்பார்வை கோளாறு பற்களுக்கு உறுதியையும் தரும்.
ஆயினும் இதை அடிக்கடி சாப்பிடுவதால் உடலில் வாயுத்தொல்லை உண்டாகும் அதனால் பதினைந்து நாளுக்கொருமுறை உண்ணலாம்.
ஒருநாள் நாள் ஓய்விற்குப்பின் ஜீரண உறுப்புகள் நன்கு செயல்பட சுண்டைக்காய் மற்றும் நெல்லிகாய் துணைபுரிகிறது. இதுவும் உடலில் குறிப்பாக கண்களின் வெப்பத்தை நீக்க நெல்லிக்காய் உதவும்.
கண்டகண்ட உணவுகளை யெல்லாம் சாப்பிடுவதால் குடல் கழிவுகள் சேர்ந்து கிருமிகள் உருவாகின்றன. இதனால் உடல் மெலிதலும் ரத்தக்குறைவும் அடிக்கடி வயிற்றுவலியும் சரியான தூக்கமின்மையும் உண்டாகும்...
இவைகளை எல்லாம் சரிசெய்யவும். இக்கிருமிகள் மீண்டும் தோன்றாதிருக்கவே சுண்டைக்காய் பயன்படுகிறது.
எனவேதான் ஏகாதசி உபவாசத்தின் மறுநாளான துவதசியில் அகத்திக்கீரை சுண்டைக்காய் நெல்லிக்காய் இவைகளை சாப்பிடுவதால் குடல் சுத்தமாகி நன்கு செயல்பட்டு உடல் ஆரோக்கியமும் காக்கப்படுகின்றது.
இந்த உபவாசந்தன்னை நம்முன்னோர்களும் இன்றும் ஞானமார்க்கப்பெருமக்களும்
மாதமிருமுறை அனுஷ்டிக்கின்றனர்.........

இது சாமான்யர்களுக்கும் பயன்தர வேண்டும் என்பதலேயே வருடத்தில் ஒருநாளாவது இவ்வொழுக்க முறையைக்கடைபிடிக்க வேண்டி...

ஆண்டாள்நாச்சியாரை போற்றிவளர்த்து பெருமாளுக்களித்த பெருமானார் பெரியாழ்வார் அவர்களை வைகுண்டத்திற்கு வரவேற்கும் பொருட்டு மாஹாவிஷ்ணு மார்கழித்திங்களின் வளர் பிறை ஏகாதசி தினத்தில் பரமபதவாசலான வடக்குவாசல்வழியாகக்காட்சிதந்து ஆழ்வாரை ஆட்கொண்ட நன்நாளாம் இந்த வைகுண்ட ஏகாதசியன்று விழித்திருந்து உபவாசமிருப்பதால் உடலும் நாரணனைத்துதித்திருப்பதால் மனமும் சுத்தமாகி நல முடன் வாழ்வோமாக...


படுக்கையறை



வாஸ்து.............

ஏழை பணக்காரன் யாராயினும் அவர்கள் நிம்மதியாய் இருப்பது உறக்கத்தில் மட்டுமே அந்த உறக்கமும் நன்றாக வர ஒரு நல்ல படுக்கையறை அல்லது இடம் தேவை வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு செலவிடப்படும் படுக்கையறை எப்படி இருந்தால் நல்லது என்பது பற்றி அறியலாம்..........
படுக்கையறையின் அமைப்பிற்கும் குடும்ப வளர்ச்சி மற்றும் நிம்மதிக்கும்தொடர்புள்ளது.....
சரியான இடத்தில் சரியான விதத்தில் அமைக்கப்படும் படுக்கயறைகளால் நல்ல குழந்தைச்செல்வங்களை அடையலாம்......
தெற்கு தென்மேற்கு பகுதியில் அமைக்கப்படும் படுக்கையறைகள்
இந்த வகையில் சிறந்தவை
கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அறையை உபயோகிக்கும் தம்பதியருக்கு பெரும்பாலும் பெண் குழந்தைகளே அதிகம் ஜனிக்கின்றனர்......
(ஆய்ந்து பாருங்கள் அன்பர்களே)

தென்மேற்கு படுக்கையறை ஏன்சிறந்ததெனில் வடகிழக்கில் உருவாகும் சக்திகள் வீட்டின் மையப்பகுதியான பிரம்மஸ்தானத்தில் பிரதிபலித்து அதற்கு எதிராக உள்ள தென் மேற்குப் பகுதியை அடைவதால் நல்ல சக்தி வாய்ந்த பகுதியாக மாற்றுவதாலும்
அப்பகுதியின் மேலே நீர்நிலைத்தொட்டி அமைப்பதால் கீழே ஏற்படும் குளிர்ந்த நிலையாலும் இரவில் நன்கு இளைப்பாறவும் உறங்கவும் சிறந்த இடமாகும்.......
இப்படி தம்பதிகளுக்கு உகந்த படுக்கையறை திருமணமாகவர்களுக்கோ குழந்தைகளுக்கோ உகந்ததல்ல......

தென்கிழக்கு ஆக்னி மூலையாவதால் இங்கு உஷ்ணமும் தென்மேற்கிலிருந்து வரும் சக்தியும் இணையும்போது பெண்களுக்கு உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்களும் வரலாம்.........
மேலும் இவ்வறையை உபயோகிக்கும் தம்பதியருக்குள் அடிக்கடி காரணமற்ற சண்டைசச்ரவுகள் ஏற்படும்......
அத்துடன் இவர்களுக்கு ஆண் குழந்தைகள் அல்லது பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றவே
தவிர இரு குழந்தைகளும் சேர்ந்து பிறக்கும் பாக்யம் குறைவே......

வடமேற்கு படுக்கையறை தம்பதியருக்கு உகந்ததல்ல பெரும்பாலும் இவ்வகை அறை தம்பதியருக்குள் மன சஞ்சலத்தையே
அல்லது கணவர் பலநாட்கள் வெளியூரில் தங்கும் நிலை யையோ
உருவாக்கும்....
இவ்வறைகளில் விருந்தினர்கள் தங்குவதற்கும் கல்யாணம் ஆகாத பெண்கள் தங்குவதற்கும் உகந்தது.
இவ்வறைகளில் தங்கும் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்......
தென்மேற்கில் ஒருபடுக்கையறை இருந்து அதை குடும்ப தலைவன்கலைவி உபயோகப்படுத்துவார்களேயானால்
அடுத்த தலைமுறை தம்பதியினர் வடமேற்கு படுக்கையறையை உபயோகிப்பது தவறில்லை...........

வடகிழக்கு படுக்கையறைக்கானபகுதியல்ல
ஆயினும் வயதான தம்பதியினரும் குழந்தைகளும் தங்குவதற்கு உகந்தது......
இவ்வறைகளில் தங்கும் தம்பதியினருக்கு பிறக்கும் குழந்தைகள் ஏதாவதொரு குறைபாடுடன் பிறக்க நேரிடுகிறது....

உறங்கும் போது தெற்கில் தலைவைத்து வடக்கில் கால் நீட்டி படுத்தல் மிகவும் நல்லது.....
இதனால் நல்ல தூக்கமும் காலையில் விழிக்கும் போது வடதிசையான குபேர திசையை பார்ப்பதால் வாழ்வில் வளங்கள் பெருகும்.......

கிழக்கில் தலைவைத்து உறங்குவதால்ஞானம்வளரும்
படிக்கும் குழந்தைகள் இத்திசையில் தலைவைத்துப்படுப்பதால் ஞாபகமறதி குறைபாடு நீங்கும்.....

மேற்கு திசையில் தலைவைத்து உறங்குதலும் நல்லதே இப்படி உறங்கி காலையில் சூரிய திசையாகிய கிழக்கைப்பார்பதால்
நல்ல தெளிவான மன நிலையைத்தரும்......
ஆயினும் இத்திசையில் உறங்கும் சிலருக்கு அடிக்கடி கனவுத்தொல்லைகள் ஏற்படும்.........


தெருக்குத்து



தெருக்குத்து என்ற தெரு தாக்கங்கள் நல்லதல்ல ஆனாலும் அவற்றிலும் சில நன்மை தருவதாயும் சில தீமை தருவதாயும் சில வகை தெருத்தாக்கங்கள் பாதகமற்றதாயும் இருக்கும் அவைகளைப்பற்றி..........

தெருவோ அல்லது சாலையோ வீட்டிற்கு எதிராக இருத்தலே தெருகுத்து......

இதில் வட கிழக்குப் பகுதியின் கிழக்குச்சாலையைத்தொட்டு உள்ள
தெருக்குத்தும்.
வடக்குச்சாலையையத்தொட்டு வடகிழக்காக உள்ள தெருக்குத்தும்
வடகிழக்கு பகுதியின் விரிவாக்கமாவதால் இது நன்மையே தரும்........

மாறாக தென்கிழக்கு ப்பகுதியில் உள்ள தெருக்குத்து அக்னிமூலையின் விரிவாக்கமாவதால் இது தவிர்க்கப்படவேண்டும்...,..

தென்மேற்கு பகுதியின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள தெருகுத்துக்கள் கன்னிமூலையின் விரிவாக்கமாவதால் இதுவும்
தவிர்க்கப்படவேண்டியதே.....

இதைப்போலவே வடமேற்குப்பகுதியின் தெருக்குத்துக்களும் தவிர்க்கப்பட வேண்டியதே.......

வடகிழக்கு ப்பகுதியில் ஒரு தெரு இருப்பின் நல்லது ஆனால் வடகிழக்கில் வடக்கிலும் கிழக்கிலும் இரு தெருக்குத்துக்கள் இருப்பது மத்திம பலனே...........

தென்கிழக்கின் தெற்குப் பகுதியில் தெருக்குத்து பெண்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்று ஒரு நம்பிக்கை உண்டு......
அதேப்போல வடமேற்குப் பகுதியில் மேற்கில் தெருக்குத்தும் தொழிலில் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்றும் நம்பப்படுகிறது.......

இப்படி உள்ள தெருக்குத்துக்கள் அமைந்துவிட்டால் அங்கு ஒரு வினை தீர்க்கும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வது என்பது மரபாக உள்ளது......
ஆயினும் அப்படி வைக்கப்படும் சிலைகளுக்கும் நம்மாள் முடிந்தளவு தினமும் பூஜைகள் செய்து வருவது தீய விளைவுகளிலிருந்து நம்மை காத்து நிற்கும்..........


வாஸ்து...............

வாஸ்து...............
எண்ணம்போல் வாழ்க்கை வண்ணமயமாய்அமைய எப்படி செவ்வாயும் நான்காம் அதிபதியும் காரணமோ அதேபோல வாஸ்து என்ற விதியிலும் மனையும் அதன் அளவுகளும் காரணமாகின்றன அந்த மனையில் வசிப்பவர்களின் நிம்மதிக்கும் சரியற்ற அளவுகளும்
வகையில்லாத மனைகளும் காரணமாகின்றன.

இன்றைய காலகட்டத்தில் இவையிரண்டும் அமைவது கடினமே
ஆனாலும் வீடு கட்டும் ஆவலில் உள்ள அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியதும் கவனிக்க தவறுவதும் இந்த இரண்டு விசயங்களே........

பிளாட்டில் மனை வாங்குபவர்களைத்தவிர தனிமனை
வாங்க நினைக்கும் ஒவ்வொரு வரும்
கவனிக்க வேண்டிய விஷயங்கள்....

மனையின் மிக அருகில் கோவிலும்
மனையிலிருந்து பார்க்கும் தூரத்தில் இடுகாடு அல்லது சுடுகாடு (மின்மயானமானாலும்)இல்லாதிருத்தலும்....
புற்றுகளும் மூங்கில் தோப்புகளும் இல்லாதிருத்தலும்......
மனையிடத்தின் அருகில் கிழக்கு மற்றும் வடக்கு திசையில் சாக்கடை கால்வாய்கள் இல்லாதிருத்தலும்
மனையிடத்தில் குப்பை கூளங்கள் மற்றும் கழிவுநீர் குட்டைகள் இல்லாதிருத்தலும்....
கருவேல மரங்களை அழித்த இடமாக இல்லாதிருத்தலும்.....
மனையிடத்தின் மண்ணின் வாசம் துர்நாற்றமாக இல்லாதிருத்தலும் 
நாம் தேர்ந்தெடுக்க நினைக்கும் மனையில் நாம் நின்று பார்க்கும் போது நமது மனம் சலனப்படாமல் படபடக்காமல் சாந்தமாய் இருத்தலும்........போன்ற விசயங்களை கவனித்து அறிந்த பின்னரே ஒரு மனையை தேர்வு செய்ய வேண்டும்.......

லிங்கப் (யோனி)பொருத்தம்.....

லிங்கப் பொருத்தம்.....

திருமணப் பொருத்த நிலைகளில் ஜாதகங்கள் சரியாக இருந்தாலும்
சிலர் யோனி பொருந்தவில்லை என்று நல்ல ஜாதகங்களையும் மறுக்கும் நிலை உள்ளது இதற்காகவே முன்னாளில் கடைபிடிக்கப்பட்டு வந்த ஒரு பொருத்தமே இந்த லிங்கப் பொருத்தம்........................

நட்சத்திரங்களை
புல்லிங்க (ஆண்) நட்சத்திரம்
ஸ்திரி லிங்க நட்சத்திரம் மற்றும்
நபும்ஸ லிங்க நட்சத்திரம் என்று
மூன்று வகையாக பிரிவு செய்து அவற்றில்.........

ஆண் பெண் இருவரும் ஒரே நட்சத்திரப் பிரிவை சேர்ந்ததாயிருந்ததாயிருப்பின் (யோனி)நல்ல பொருத்தம் என்றும்.

பெண் ஸ்திரி லிங்கமாயும் ஆண் புல்லிங்கமாயும் இருப்பினும் பொருந்தும் என்றும்.

பெண் நட்சத்திரம் புல்லிங்கமாகவும்
ஆண் நட்சத்திரம் ஸ்திரி லிங்கமாயும் இருப்பின் பொருந்ததாது என்றும்.

ஸ்திரிலிங்கம் புல்லிங்கம் இரு நட்சத்திரங்களுக்கும் நபும்ஸலிங்கம்
பொருந்தாது என்றும்.
வகுத்து வைத்துள்ளனர்........

நட்சத்திரங்கள் முறையே........
அசுவினி, கார்த்திகை, ரோகிணி, புனர்பூசம், பூசம்,ஹஸ்தம்,அனுசம்,திருவோணம், பூரட்டாதி,உத்திரட்டாதி,எனும் பத்தும்
நட்சத்திரங்கள் புல்லிங்கம் (ஆண்)

பரணி, திருவாதிரை, ஆயில்யம்,
மகம்,பூரம், உத்திரம், சித்திரை,
சுவாதி,விசாகம்,கேட்டை,பூராடம்,
உத்திராடம், அவிட்டம்,ரேவதி,எனும் பதினான்கும்
ஸ்திரி லிங்கம் (பெண்)

மிருகசீரிஷம்,மூலம்,சதயம்,எனும் மூன்றும்
நபும்ஸம் ஆகும்..........

இதன்படி பொருத்தி பொருத்தம் இருப்பின் யோனிக்கு மாற்றாக
சேர்த்துக்கொள்ளலாம் என்று வகுத்துள்ளனர்................

இது பல வருட அனுபவம் வாய்ந்த எமக்கு குரு போன்றவர் சொல்ல யான் பதிவு செய்தது........


வயிற்றுப் புண்ணை குணமாக்கும் அகத்தி கீரை.

வயிற்றுப் புண்ணை குணமாக்கும் அகத்தி கீரை.

அகத்தி - அகத்தை சுத்தப்படுத்துவதால் அதை அகத்தி கீரை என அழைக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு.

அகத்தி - அகத்தை சுத்தப்படுத்துவதால் அதை அகத்தி கீரை என அழைக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு. அகத்திக்கீரையுடன் சுத்தமான பசு நெய்யும் சின்ன வெங்காயமும் சேர்த்து கூட்டாகவோ, பொரியலாகவோ செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர மிகச் சிறந்த பலன்களைத் தரும். அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். இது நமது அகத்தின் தீயை அகற்றுவதால் அதை அகத்தி என அழைக்கின்றனர்.

அகத்தியில் அடங்கியுள்ள சத்துக்கள்:

நீர்-73 சதவீதம் புரதம்-8.4சதவீதம் கொழுப்பு-1.4 சதவீதம் தாதுப்புக்கள்-2.1சதவீதம் நார்ச்சத்து-2.2சதவீதம் மாவுச்சத்து-11.8சதவீதம் இந்த கீரையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இக்கீரையில் அடங்கியுள்ள புரதச்சத்து மிகச் சிறந்த புரதமாக கருதப்படுகிறது. சுண்ணாம்புச்சத்து, இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இக்கீரையில் உயிர்ச்சத்துக்கள் நிறைய உள்ளது. வைட்டமின் ஏ 100கி, 9000 கலோரிகள் உள்ளது.

தயாமின் சத்து - 0.21 மிகி
ரைபோப்ளேவின்- -0.09 மிகி
வைட்டமின் சி - 169 மிகி உள்ளது.
அகத்தியின் சிறப்பு:
மருந்திடுதல் போகுங்காண்
வன்கிராந்தி - வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும். வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம்
நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு

விளக்கவுரை:

இது மருந்து உண்ணும் காலத்தில் தவிர்த்தல் நல்லது. இக்கீரை வாதத்தை சரிசெய்யும். இது அதிகப்படியான மலமிலக்கியாகும். வயிற்றில் உள்ள கெட்ட புழுக்களை கொல்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது.

மருத்துவப் பயன்கள்:

அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன் படுத்தும் இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறி சிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும். தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலிக்கு அகத்திக் கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். ரத்தப் பித்தம், ரத்த கொதிப்பு ஆகியவை அகத்திக்கீரையை உண்பதால் அகலும்.

பயன்பாடு:

அகத்தி கோழி, மாடு போன்ற கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகின்றது. அகத்தி இலையிலிருந்து தைலம் தயார் செய்கிறார்கள். அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப் பொருள்களாக பயன்படுகிறது. அகத்தி மரக்குச்சிகள் கூரை வேய்வதற்கு பயன்படுகிறது.

அகத்திப்பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேர் மூட்டு வலிக்கு மருந்தாக அரைத்து பயன்படுத்தப்படுகிறது. வெண்மை நிற அகத்தி மரம் பொம்மை செய்யவும், வெடிமருந்து செய்யவும் பயன்படுகிறது. வெற்றிலைக் கொடிக்கால்களில் வெற்றிலைக் கொடி படரவும் மிளகுத் தோட்டத்தில் மிளகுக்கொடி படரவும் அகத்தி மரம் பயன்படுகிறது.

இந்த கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது இருதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கிறது. அகத்தி கீரையில்-16.22 சதவீதம் வைட்டமின் சி உள்ளது. இது ரத்த குழாய்கள் தடிமன் ஆவதை தடுத்து நிறுத்துகிறது. கொழுப்புகளை கரைக்கிறது. வைட்டமின் சி சத்து குறைவாக உள்ளவர்களை பக்கவாதம், ரத்த குழாய் அடைப்பு, மாரடைப்பு போன்றவைகள் தாக்கும்.

பொலிவிழந்த தோலிற்கு கருவளையங்கள் நிறைந்த முகத்திற்கு அகத்தி ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. ரத்த சோகையை நீக்கு கிறது. பிராணவாயு சரியாக செல்லாததால் தோல் பொலிவிழந்து காணப்படும். இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளுதல் தோலுக்கு நல்ல நிறத்தை தருகிறது.

அகத்தி இப்பணியை செவ்வனே செய்கிறது. நுண்கிருமிகள் வளர்வதை தடுத்து நிறுத்துகிறது. எச்.ஐ.வி. போன்ற உயிர் கொல்லி கிருமிகளையும் தடுக்கிறது. நோய் தொற்று உள்ளவர்கள், அந்த கிருமி தொற்று இருப்பவர்களுக்கு அதன் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.

ரைபோப்ளேவின் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு தலைவலி அதிகமாக இருக்கும். அடிக்கடி வரும் 200-400மிகி ரைபோப்ளேவின் எடுத்துக் கொண்டால் இதற்கு நல்ல தீர்வு. அகத்தி இதற்கு உறுது ணையாக இருக்கும்.

களைப்பு, சதைவலி, மரமரப்பு, அசதி போன்ற குறைபாடுகள் பாஸ்பரஸ் குறைப்பாடுகளினால் ஒரு நாளைக்கு 1200 கி தேவைப்படும். ஆண் மலட்டு தன்மை, விந்தணுக்கள் குறைபாடு போன்றவைகளுக்கு நல்ல தீர்வு.

அகத்தி கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணிநேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும். இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.

அகத்தி கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் உள்ள பித்தம் குறையும்.

அகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும்.

பூவைச் சமைத்து உண்டு வர மலச்சிக்கல் குறையும். அகத்தி இலைச்சாற்றை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த ஒரு மாதத்தில் இருமல் குறையும்.அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாற்றோடு - அதே அளவு தேன் கலந்து உண்டு வர வயிற்று வலி நீங்கும்.

அகத்தி கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கரும்பட்டை, தேமல், சொரி, சிரங்கு உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும்.

அகத்திக்கீரை, மருதாணி இலை மற்றும் மஞ்சள் மூன்றை யும் சமஅளவு எடுத்து அரைத்துத் தடவினால், கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும்.

நோய்கள்_உருவாகும்_இடங்கள்எது??

*#நோய்கள்_உருவாகும்_இடங்கள்எது??
------------------------------------------------------------------------
*நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.*

*இதோ*

*1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்*

*2 - டீ*

*3 - காபி*

*4 - வெள்ளை சர்க்கரை*

*5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.*

*6 - பாக்கெட் பால்.*

*7 - பாக்கெட் தயிர்*

*8 - பாட்டில் நெய்*

*9 - சீமை மாட்டு பால்*

*10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.*

*11 - பொடி உப்பு*

*12 - ஐயோடின் உப்பு*

*13 - அனைத்து ரீபையின்டு ஆயில்*

*14 - பிராய்லர் கோழி*

*15 - பிராய்லர் கோழி முட்டை*

*16 - பட்டை தீட்டிய அரிசி*

*17 - குக்கர் சோறு*

*18 - பில்டர் தண்ணீர்*

*19 - கொதிக்க வைத்த தண்ணீர்*

*20 - மினரல் வாட்டர்*

*21 - RO தண்ணீர்*

*22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்*

*23 - Non Stick பாத்திரங்கள்*

*24 - மைக்ரோ ஓவன் அடுப்பு*

*25 - மின் அடுப்பு*

*26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்*

*27 - சோப்பு*

*28 - ஷாம்பு*

*29 - பற்பசை*

*30 - Foam படுக்கை மற்றும் இருக்கை*

*31 - குளிர்பானங்கள்*

*32 - ஜஸ் கீரீம்கள்*

*33 - அனைத்து மைதா பொருட்கள்*

*34 - பேக்கரி பொருட்கள்*

*35 - சாக்லேட்*

*36 - Branded மசாலா பொருட்கள்*

*37 - இரசாயன கொசு விரட்டி*

*38 - Ac*

*39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.*

*40 - பிஸ்கட்டுகள்*

*41 - பன்னாட்டு சிப்ஸ்*

*42 - புகைப்பழக்கம்*

*43 - மதுப்பழக்கம்*

*44 - சுடு நீரில் குளிப்பது*

*45 - தலைக்கு டை*

*46 - துரித உணவுகள்*

*47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்*

*48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.*

*49 - ஆங்கில மருந்துகள்*

*50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்*

*51 - உடல் உழைப்பு இல்லாமை*

*52 - பசிக்காமல் உண்பது*

*53 - அவசரமாக உண்பது*

*54 - மெல்லாமல் உண்பது*

*55 - இடையில் தண்ணீர் குடிப்பது*

*56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.*

*57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்*

*58 - அறியாமை*

*59 - சுற்றுச்சூழல் மாசுபாடு*

*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்*

*அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது*

*மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.*

*உயிர் பிழைக்க ஒரே வழி*

*இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.*

*குணமாகும் இடங்கள் !*
---------------------------------------------

*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.*

*இதோ*

*1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.*

*2 - மூலிகை தேனீர்*

*3 - சுக்கு மல்லி காபி*

*4 - பனங்கருப்பட்டி*

*5 - பனங்கற்கண்டு*

*6 - வெல்லம்*

*7 - கரும்பு சர்க்கரை*

*8 - இதில் செய்த இனிப்புகள்*

*9 - நாட்டு பசும் பால்*

*10 - நாட்டு பசு தயிர்*

*11 - நாட்டு பசு நெய்*

*12 - நாட்டு பசும்பால் பொருட்கள்*

*13 - இந்துப்பு*

*14 - கல் உப்பு*

*15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்*

*16 - நாட்டு கோழி*

*17 - நாட்டு கோழி முட்டை*

*18 - பட்டை தீட்டப்படாத அரிசி*

*19 - வடித்த சோறு*

*20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்*

*21 - பச்சை தண்ணீர்*

*22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்*

*23 - மழை நீர்*

*24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்*

*25 - இரும்பு பாத்திரங்கள்*

*26 - விறகு அடுப்பு*

*27 - பயோ கேஸ் அடுப்பு*

*28 - சத்துமாவு கலவை*

*29 - குளியல் பொடி*

*30 - சிகைக்காய் பொடி*

*31 - இயற்கை பற்பொடி*

*32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை*

*33 - கோரைப்பாய்*

*34 - பழச்சாறுகள்*

*35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்*

*36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்*

*37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்*

*38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்*

*39 - இயற்கை கொசு விரட்டி*

*40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்*

*41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு*

*42 - நம் நாட்டு சிப்ஸ்கள்*

*43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்*

*44 - குளிர்ந்த நீரில் குளிப்பது*

*45 - இயற்கை ஹேர் டை*

*46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்*

*47 - மண் பானை குளிரூட்டி*

*48 - பச்சை கொட்டை பாக்கு*

*49 - மரபு மருத்துவங்கள்*

*50 - உடல் உழைப்பு*

*51 - பசித்து உண்பது*

*52 - மெதுவாக சுவைத்து உண்பது*

*53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது*

*54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்*

*55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது*

*56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்*

*57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்*

*58 - புத்திகூர்மை*

*59 - சுற்றுச்சூழல் தூய்மை*

*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி*

*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது*

*உங்களின் உணவுமுறைகளும் 
வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை

 அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
   - மிக்ஸி வந்தது;

 ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
   - கிரைண்டர் வந்தது;

 உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
   - குக்கர் வந்தது;

 விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
   - கேஸ் அடுப்பு வந்தது;

 வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
   - மசாலா பொடி வந்தது;

 பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
   - பிரிட்ஜ் வந்தது;

 மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
   - வீடியோ கேம் வந்தது;

 பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
   - டி.வி. வந்தது;

     இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

     இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

               முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது                                                     

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா???

இளநரை, பித்தநரை நிரந்தரமா கருப்பா மாறணுமா? இதை பயன்படுத்துங்க.


Tamil News
ஆப்
லைஃப்ஸ்டைல்
ஆரோக்கியம்
ரெசிபி
உறவுகள்
வீட்டு மருத்துவம்
மகப்பேறு நலன்
ஃபிட்னெஸ்
அழகுக் குறிப்பு
வீடு பராமரிப்பு
ஹெல்த் கேலரி
பியூட்டி & ஃபேஷன்

இளநரை, பித்தநரை நிரந்தரமா கருப்பா மாறணுமா? இதை பயன்படுத்துங்க..
S Dhanalakshmi | Samayam Tamil | Updated: 25 Jan 2020, 02:13:05 PM
    


இளநரை பித்தநரை என்பது இன்று ஆண் பெண் இருவருக்குமே அதிகமாக இருக்கிறது. இதை ஆரம்பத்திலேயே சரி செய்துவிட்டால் அதன் பிறகு வரும் முடி வெள்ளையாக இல்லாமல் கருமையாக வளரும். இருக்கும் நரைமுடிகளும் கருமைக்கு மாறும். பலரும் முடி கருப்பாக தெரிய ஹேர் டை பயன்படுத்துவதுண்டு. ஆனால் இளநரைக்கும் பித்தநரைக்கும் ஹேர் டை பயன்படுத்தினால் பித்தநரையையும் இளநரை யையும் இயற்கையாக கருமையாக்கவே முடியாது. ஆனால் மூலிகையை பயன்படுத்துவதன் மூலம் இதை எளிதில் போக்கலாம்.

இளநரை பித்தநரை

இள வயதில் பித்தநரை என்பது அதிகரித்துவருகிறது. நரையை போக்காவிட்டால் முடியானது வெள் ளையாகிவிடும் என்று பயந்து இளவயதிலேயே ஹேர் டை பயன்படுத்திவருகிறார்கள். ஆனால் இயற்கையாகவே கூந்தலுக்கு நன்மை செய்யும் மூலிகைகளான சில பொருள்களை கொண்டு வீட்டிலேயே ஹேர் டை தயாரித்து போட்டு வந்தால் 5 முறை பயன்பாட்டுக்கு பிறகு அவை முடியை கருப்பாக்கி விடும்.

அனுபவபூர்வமாக இதை நீங்களும் உணரலாம். அதற்கு தேவையான பொருள்களை பார்ப்பதற்கு முன் இந்த ஹேர் டை பயன்பாட்டில் முக்கியமாக தேவைப்படுவது இரும்பு வாணல். அதை வாங்கி வைத்துகொள்ளுங்கள். இரும்பு வாணலியில் மூலிகை பொடிகளை வைக்கும் போது நமக்கு தேவை யான நிறம் சற்று கூடுதலாகவே கிடைக்கும்.


​செம்பருத்தி பொடி

செம்பருத்தி செடி இல்லாத வீடுகளே இல்லாமல் இருந்த காலம் ஒன்று இருந்தது. செம்பருத்தி இலை பூ அனைத்துமே அழகு தருவதிலும் ஆரோக்கியம் தருவதிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது செம்பருத்தி பூவை நிழலில் உலர்த்தி நன்றாக பொடித்து வைத்துகொள்ளலாம். செம்பருத்தி பூ இல்லாதவர்கள் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் பொடியை வாங்கி பயன்படுத்தி கொள்ள லாம். இளஞ்சிவப்பு நிறத்தில் இந்த பொடி கிடைக்கும். இவை முடிக்கு சிவப்பான நிறத்தை கொடுக்க கூடியது. ஷாம்புக்கு நிகரான குணத்தை இது கொண்டிருக்கும்.

செம்பருத்தி பூ பொடி- உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்துகொள்ளுங்கள் ( அதிக வெள்ளை முடி இல்லாதவர்களுக்கு 2 டீஸ்பூன் அளவு போதும்)


கறிவேப்பிலை பொடி

கறிவேப்பிலையி குணம் சொல்லி தெரியவேண்டியதில்லை. முடிக்கு கருமை நிறம் தரக்கூடிய பொருள். கறிவேப்பிலையை வடையாக தட்டி தேங்காய் எண்ணெயில் சேர்த்து தலைக்கு தடவி வருவோம். இது முடிக்கு கருமை நிறத்தை கொடுக்கும். முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். முடி அடர்த்தியாக வளர உதவும். கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி நன்றாக பொடித்து கொள்ளவும். மெல்லிய துணியில் சலித்து வைத்தும் கொள்ளலாம்.

கறிவெப்பிலை பொடி- உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்துகொள்ளுங்கள் ( அதிக வெள்ளை முடி இல்லாதவர்களுக்கு 2 டீஸ்பூன் அளவு போதும்)


​மருதாணி இலை பொடி

இயற்கை ஹேர் டை என்றாலே ஹென்னா என்றழைக்கப்படும் மருதாணி இலை தான். இவை இல்லாமல் கூந்தலுக்கு நிறம் கொடுக்க முடியாது. ஆனால் வேறு கெமிக்கல் இல்லாமல் இவற்றை மட்டும் பயன்படுத்துவது குறைவு என்பதால் நாமே இயற்கையாக வேறு மூலிகைகளுடன் கலந்து பயன்படுத்துகிறோம். இவை நாட்டு மருந்துகடைகளில் எளிதாக கிடைக்கிறது. மருதாணி முடிக்கு ஆரஞ்சு அல்லது பிர வுன் நிறத்தை இயற்கையாக கொடுக்கும். கூந்தல் வளர உதவும் மூலிகை எண்ணெய் அனைத்தி லும் மருதாணி இலையும் சேர்க்கப்படும்.

இந்த மருதாணி பொடியும் இளநரை பித்தநரை போன்ற வற்றை போக்கி நரையின் தோற்றத்தை மறைத்து காட்டும்.மருதாணி இலை பொடி மற்ற பொடிகளின் அளவிலெயே சேர்த்து கலக்க வேண்டும். உங்கள் தலைமுடிக்கேற்ப அனைத்து பொடிகளும் தலா 2 அல்லது 1 டீஸ்பூன அளவாகவே இருக்கும்.


​அவுரி பொடி

அவுரி பொடி குறித்து நாம் முன்பே பார்த்திருக்கிறோம். வெள்ளை முடி இருப்பவர்கள் அவுரி பொடியை வழக்கமாக பயன்படுத்தலாம். இண்டிகோ பவுடர் என்று அழைக்கப்படும் அவுரி பொடி முடிக்கு நல்ல கருமையை தரும். அவுரி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இங்கு கொடுத்திருக்கும் பொடிகளில் கறிவேப்பிலை பொடி தவிர மற்ற அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவை தலைமுடிக்கு நீல நிறத்தை கொடுக்கும் என்பதால் இதை பயன்படுத்திய உடனேயே முடியின் வெள்ளை நிறம் மறைய தொடங்கும். இதை இயற்கை சாயம் என்றும் கூட சொல்லலாம். மற்ற பொடிகளோடு இதையும் சமமாக கலந்து கொள்ளுங்கள்.


​கடுக்காய் பொடி

சீயக்காயில் அந்தகாலத்தில் இந்த கடுக்காய் சேர்க்காமல் அரைக்க மாட்டார்கள். இவை முடிக்கு நிறம், அடர்த்தி, வலிமை போன்றவற்றை கொடுக்கும். முடியில் அழுக்கு சேராமல் பேன் பொடுகு வராமல் பாதுகாக்கவும் உதவும். இந்த கடுக்காய் பொடி எல்லா நாட்டுமருந்துகடைகளிலும் கிடைக்கும் இதே போன்று நெல்லி பவுடரையும் வாங்கி கொள்ளுங்கள். நெல்லி இளநரைக்கு இயற்கையாகவே தீர்வு தரக்கூடியது. நெல்லியை கொட்டை நீக்கி துண்டுகளாக்கி நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துகொண்டால் உள்ளுக்கும் எடுக்கலாம். இந்த மாதிரியான அழகு குறிப்பிலும் பயன்படுத்தலாம்.

இந்த இரண்டையும் பொடிகள் பயன்படுத்துவதற்கேற்ப அதே அளவில் எடுத்துகொள்ளுங்கள்.


​தயாரிப்போம்

கொடுத்திருக்கும் அனைத்து பொருள்களுமே கூந்தலுக்கு நல்ல நிறத்தை தரக்கூடியவை. இதை தலைக்கு பயன்படுத்துவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பு அனைத்துபொடிகளையும் இரும்பு வாணலியில் கொட்டி கலந்து தரமான டீ டிகாஷன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு வெள்ளை முடி இருக்கும் இடங்களில் மட்டும் பேக் போடுங்கள். மற்ற இடங்களில் தடவ வேண்டாம். கூந்தல் முழுக்க பேக் போட்டால் முடியின் மிருதுதன்மை குறைந்துவிடும். நாம் இளநரை பித்தநரை போக்கதான் இதை பயன்படுத்துகிறோம் என்பதால் நரை இருக்கும் இடத்தில் மட்டும் போட வேண்டும்.

பேக் போட்டு ஒரு மணி நேரம் வரை ஊறவிடலாம். சைனஸ் , உடல் குளுமை பிரச்சனை இருப்பவர் கள் 30 நிமிடங்கள் வரை தலையில் ஊறவிடுவது நல்லது. 1 மணி நேரம் கழித்து தலையை ஷாம்பு போடாமல் அலசி எடுக்கலாம்.

இப்படி தொடர்ந்து விட்டு விட்டு தலையில் தடவி வந்தால் நாளடைவில் இளநரை, பித்தநரை நீங் கும்.



வெண்கடுகு

கருப்பை கட்டிகளை கரைக்கும் வெண்கடுகு.

உள் உறுப்புகளை தூண்டக் கூடிய தன்மை கொண்டதும், வீக்கம் மற்றும் வலியை போக்க கூடியதும், கருப்பை கட்டிகளை கரைக்கவல்லதும், செரிமானத்தை தூண்டக் கூடியதும், இருமல், விக்கலை சரிசெய்ய கூடியதும், ரத்த ஓட்டத்துக்கு மருந்தாக பயன்படுவதுமான வெண்கடுகு பல மருத்துவ பலன்களை கொண்டது.

கடுகை போன்று பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது வெண்கடுகு. கடுகு வகையை சேர்ந்த இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வெண்கடுகை பயன்படுத்தி கருப்பையில் ஏற்படும் கட்டிகளை கரைக்ககூடியதும், செரிமாணத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம். வெண் கடுகை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் வெண்கடுகு பொடி, ஒரு சிட்டிகை மிளகு, சிறிது உப்பு, 2 சிட்டிகை பெருங்காய பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 முதல் 100 மிலி வரை எடுத்துக்கொண்டால், இது செரிமானத்தை தூண்டும். கருப்பை கோளாறுகளை சரிசெய்யும். வெண்கடுகு உள் உறுப்புகளை தூண்டக் கூடியது. இரையறை கோளாறுகளை சரிசெய்யும் தன்மை உடையது. சிறுகுடலில் உள்ள மென் திசுக்களை தூண்டக் கூடியது. மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும். கருப்பையில் உள்ள நீர்கட்டிகளை கரைத்து, கருப்பைக்கு பலம் தரக்கூடியது.

வெண் கடுகை பயன்படுத்தி கெண்டைக்கால் தசையில் வீக்கம், வாயுக்கான மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் விளக்கெண்ணெய்யில், ஒரு ஸ்பூன் வெண்கடுகு பொடியை வறுக்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைத்து, அரிசி மாவு சேர்த்து களி பதத்தில் தயாரிக்கவும். இந்த களியை மெல்லிய துணியில் தடவி வலி, வீக்கம் இருக்கும் இடத்தில் கட்டி வைக்க வேண்டும். இதனால் வலி, வீக்கம் சரியாகும்.

வெண்கடுகை பயன்படுத்தி விக்கலுக்கான மருந்து தயாரிக்கலாம். அரை டம்ளர் அளவுக்கு நீர் எடுத்து கொதிக்க வைக்கவும். தனியாக ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் அளவுக்கு வெண்கடுகு பொடியை எடுத்துக்கொள்ளவும். இதில் வெந்நீரை ஊற்றி நன்றாக கலந்து 15 நிமிடம் வைத்திருந்தால் நீர் தெளிந்துவிடும். மேலே இருக்கும் தெளிந்த நீரை குடித்தால் விக்கல் சரியாகும்.விக்கலால் மது அருந்துபவர்கள், வயிற்று புண் இருப்பவர்கள் மிகவும் அவதிப்படுவார்கள்.

விக்கலை போக்க வெண்கடுகு மருந்தாகிறது. வெண்கடுகை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். கால் ஸ்பூன் வெண்கடுகு பொடியுடன் சிறிது தேன் சேர்த்து குழைத்து சாப்பிட இருமல் கட்டுப்படும்.

சுவாச பாதையில் ஏற்படும் அழற்சி, வீக்கத்தை குறைக்கும்.வெண்கடுகு, ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், இருமல், சளியை போக்கும். நுண்கிருமிகளை அழிக்கும் தன்மைகொண்டது. வலி நிவாரணியாகிறது. ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் தன்மை கொண்டது.

Sunday, 24 January 2021

நரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை !!

நரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை !!
 

கருமையான கூந்தல் நிறம் போரடித்து போய் பல விதமான பிரவுன், லெசான சிவப்பு ஆகிய நிறங்களில் கூந்தல் இருப்பது பலருக்கும் பிடிக்கிறது. இதற்கு இயற்கையாக நிறங்களை தரும் டைக்களை உபயோகிப்பது சிறந்தது

அதே போல் நரை முடி இப்போது டீன் ஏஜ் வயதினருக்கும் வந்துவிட்டது நிறைய இடங்களில் பார்க்க முடிகிறது.

இதற்கு காரணங்கள் என்னவோ இருந்துவிட்டு போகட்டும். ஆனால் வந்துவிட்டதே என்று செயற்கையான க்டைகளில் விற்கும் டைக்களை பயன்படுத்தாதீர்கள். அம்மோனியா கருமை மட்டும் தருவதில்லை. பல ஆபத்தான நோய்களையும் தருகிறது.

ஆனால் அம்மோனியா இல்லாமல் யாரும் டை செய்வதில்லை. ஆகவே கடைகளில் விற்பதை தவிர்த்துவிட்டு இயற்கையான டைக்களை நாடுங்கள்.

இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகள் அனைத்தும் நரை முடியின் தன்மையை இயற்கையாக குறைக்கச் செய்பவை. பயன்படுத்தி பாருங்கள்.

அவுரி எண்ணெய் : அவுரிப்பொடி நாட்டு மருந்துகளில் கிடைக்கும் அதனை வாங்கி நீரில் குழைத்து, சிறு வில்லைகளாகத் தட்டிக் காயவைத்து, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு, காய்ச்சுங்கள். பின் ஆற வைத்து அந்த எண்ணெயை உபயோகிக்கலாம். இதனால் வெள்ளை முடி நாளடைவில் கருமையாக மாறும்.

வெற்றிலை மற்றும் மருதாணி: வெற்றிலை, பாக்கு, வெட்டிவேர், மருதாணி – இவை நான்கையும் அரைத்துத் தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவைத்து அலசவேண்டும். இதனால் கருமை பெறும்.

எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறை தொடர்ந்து உபயோகிக்கும் போது வெள்ளை நிறம் மாறிவிடும். எலுமிச்சை சாறை தலையில் தேய்த்து கால் மணி நேரம் சூரிய வெளிச்சம் தலையில் படும்படி இருங்கள். அதன் பின் தலைக்கு குளித்தால் வெள்ளை நிறம் மட்டுப்படும்

சோற்றுக் கற்றாழை சோற்றுக் கற்றாழை ஜெல், ஹென்னா, டீ டிகாஷன் – இவை மூன்றையும் கலந்து 3 மணி நேரம் அப்படியே ஊர வையுங்கள். பின்னர் அதனை தலையில் த்டவி 1 மணி நேரம் கழித்து குளித்தால் நிறம் மாறும்.

செம்பருத்தி : செம்பருத்தி இதழ்களை நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க விடுங்கள். பின் ஆற வைத்து வடிகட்டி, அந்த நீரை தலையில் தடவவும். அரை மணி நேரம் கழித்து தலையை அலசினால், பிரவுன் நிறத்தில் கூந்தல் ஜொலிக்கும்.

வால் நட் : வால் நட் ஓடுகளை பொடி செய்து நீரில் கொதிக்க வையுங்கள். பின்னர் இந்த நீரை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவவும். அடந்த பிரவுன் நிறத்தை தரும். இதை விட மிகச் சிறந்த கலரிங்க் செய்யும் இயற்கை டையை நீங்கள் பாக்க முடியாது. முயன்று பாருங்கள்.

பீட்ரூட் சாறு : பீட்ரூட் சாறு மற்றும் கருவேப்பிலை சாறு சம அளவு எடுத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இதனால் உங்கல் கூந்தல் தங்க நிறத்தில் அழகாய் மின்னும்

மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல்

விழிப்புணர்வுப்பதிவு

மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்
பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம்  அவர்கள் சொன்ன தகவல் இது.

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R அதாவது,

*SMILE (சிரிக்க சொல்வது),*
*TALK (பேச சொல்வது),*
*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)*

இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, *அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!! 

பகிர்ந்து_கொள்ளுங்கள்.

சங்கடங்களை_போக்க_சம்மணமிடுங்கள்

#சங்கடங்களை_போக்க_சம்மணமிடுங்கள் .
#ஆரோக்கியத்தை_பேணுங்கள்.🧘‍♂.🌺🌸 

🌰நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது ..

🌱இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...

✅ நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

✅ நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

✅ மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது.

✅ எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.
எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

✅ சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.

✅ இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

✅ ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்... எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...

✅ கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

✅ சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

✅ சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

#சாப்பிடும்_முறை...🌺🌸 🧘‍♂ 

1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...
2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...
3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...
4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...
5.அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...
6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...
7.பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...
8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...
9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...
10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...
11.சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...
12.சாப்பிட வேண்டிய நேரம் நன்றாக பசித்த பின்பு மட்டும். பசித்து புசித்தால் ஜீரணம் பிரச்சினை இல்லை.
13.சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...
14.சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...


Wednesday, 20 January 2021

குளிர்ந்த நீரில் முகம் கழுவுங்கள்...

யார் மீதாவது கோபம் வந்தாலோ,மிக கவலையாக இருந்தாலோ குளிர்ந்த நீரில் முகம் கழுவுங்கள்...முகத்துக்கு மட்டுமல்ல..மனசுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்....மனம் எப்போதும் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகதான் குளிர்ந்த சந்தனத்தை நெற்றியில் பொட்டாக வைக்க சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோர்

காரணம் நெற்றிப்பொட்டில் இருக்கும் மூளை நரம்பு முடிச்சுகள் உஸ்ணம் அடைந்தால் அதீத உணர்ச்சிவசப்பட்டு கோபமோ வன்முறையோ மன அழுத்தமோ உண்டாகிறது அது குளிர்ச்சியாக இருந்தால் மனம் அமைதியாக இருக்கும்..!!

ஒரே நேரத்தில் பிறந்தாலும் கர்மம் வெவ்வேறே..!

ஒரே நேரத்தில் பிறந்தாலும் கர்மம் வெவ்வேறே..!

பலருக்கு உள்ள கேள்வி/சந்தேகம், பலர் சோதிடத்தை நம்பாமல் இருப்பதற்கு காரணமாக கூறும் சாக்கு, ஒரு நாளில் அதே நிமிடத்தில் பல குழந்தைகள் பிறக்கிறார்கள் எல்லோருக்கும் வாழ்க்கை ஒரே மாதிரியா அமைகிறது?, இல்லையே ஒருவன் பணக்காரனாகவும் இன்னொருவன் பிச்சைக்காரனாகவும் ஒவ்வொருவரின் வாழ்க்கை ஒவ்வொரு விதத்தில் அல்லவா அமைகிறது இதற்கு காரணம் என்ன?, இதை பலர் விளக்குவதில்லை தெரியவில்லை என்றால் என்ன ஜாதகம் சோதிடம், இதற்கான விரிவான பதிலை இந்த பதிவில் பதிகிறேன் மேற்கொண்டு படிக்கவும்..!

ஒவ்வொரு மனிதனும் கர்மம் சேர்க்கிறான் அவன் வாழும் ஒவ்வொரு நொடியும் கர்மம் சேர்க்கவும்/கழிக்கவும் செய்கிறான், அவன் சேர்க்கும் நல் கர்மம் தீய கர்மம் பொறுத்தே அதன் தாக்கத்துடனே பிறக்கிறான், அவன் இன்னாருக்கு மகனாக/மகளாக பிறக்க வேண்டும் என்பதும் அவனது கர்மம் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது, ஒருவர் சேர்க்கும் கர்மம் அவருக்கு மட்டுமே சொந்தமானது/தனித்துவமானது, அவர் சேர்த்த கர்மத்தை அவரால் மட்டுமே கழிக்க/சரிசெய்ய இயலும், யாருடைய கர்மத்தையும் யாரும் அனுபவிக்க இயலாது, அவரவர் கர்மம் அவரவருக்கே, ஆனால் ஒரே ரத்தம்/சதை என்கிற பெற்றோர்/உடன்பிறந்தோர் கர்ம தொடர்பே, அதாவது உங்கள் பெற்றோரின்/சகோதரரின் கர்மா உங்களின் கர்ம பலனை அனுபவிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் அதாவது பிரதிபலிப்பு, இதனால் உங்கள் கர்ம பலனை நீங்கள் அனுபவிப்பதில்/கழிப்பதில் தடை உருவாகும், உங்களுக்கு திருமணம் ஆக வேண்டிய அமைப்பு இருந்தாலும் திருமணம் நடைபெறாமல் போவதற்கு காரணம் உங்கள் பெற்றோர்/உடன்பிறந்தவரின் கர்ம தாக்கமாகும் இதே போல் தான் உங்கள் கர்ம தாக்கம் அவர்களை பாதிக்கும், நன்றாக கவனியுங்கள் இது தாக்கம் மட்டுமே, நீங்கள் எந்தவிதத்திலும் அவர்களின் கர்மத்தை குறைக்கவோ/கூட்டவோ போவதில்லை, அதே போல் தான் அவர்களும் உங்கள் கர்மத்தை கூட்டவோ/குறைக்கபோவதில்லை, இதுவும் ஒரு காரணம் பலர் ஒரே நேரத்தில் பிறந்தாலும் அவர்களின் வாழ்க்கை வெவ்வேறு விதத்தில் இருக்க, ஆனால் இதை விட இன்னொரு காரணமும் உண்டு அது என்ன மேற்கொண்டு படியுங்கள்..!

ஜாதகத்தில் ஒவ்வொரு பாவத்துக்கும் பல நூறு காரகங்கள், ஒவ்வொரு கிரகங்களுக்கும் பல்வேறு காரகங்கள், ஒரே ஊரில், ஒரே நேரத்தில், இடத்தில், ஒரே பெற்றோருக்கு இரு குழந்தைகளாக பிறந்தாலும் அவர்களின் வாழ்க்கை வெவ்வேறு தான், ஏனெனில் ஒவ்வொருவரின் கர்மாவும் ஒவ்வொரு விதம், உங்களுடைய கர்மாவை நீங்கள் மட்டுமே அனுபவிப்பீர்கள், ஆனால் அதை அனுபவிக்கும் போது பெற்றோர்/உடன்பிறப்பால் ஏற்படும் அவர்களின் கர்ம பிரதிபலிப்பு உங்கள் கர்மாவை நீங்கள் அனுபவிக்க தடை/தாமதம் ஏற்படுத்தும், மேலும் ஒவ்வொரு வீடு/கிரகத்துக்கு பல நூறு காரகங்கள், இரட்டை பிறவி என்றாலும் ஒருவருக்கு ஒரு காரகம் கிடைத்தும் இன்னொருவருக்கு கிடைக்காமல் போவதும், அந்த தனிப்பட்ட நபர் சேர்த்த/செய்த கர்மாவே, அதன் தாக்கம் தன்னுடன் ஒட்டிபிறந்தவன் ஒரு காரகத்தை அனுபவிக்க தான்னால் அதை அனுபவிக்க இயலாமல் பார்த்து தவிப்பது, ஒரே லக்னம்/ராசி கிரகநிலை என்றாலும் ஒருவருக்கு ஒரு பாவத்தில் கிடைக்கும் காரகம் மற்றவருக்கு கிடைக்காமல் போகலாம் ஏனெனில் அது அந்த தனிப்பட்ட ஆத்மாவின் கர்மபலன், ஒருவர் நன்றாக வாழ்வதும் இன்னொருவர் தாழ்ந்துபோவதும் அவரவர் சுய கர்மபலனே என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆகவே தான் ஒரே நேரத்தில் ஒரே ஊரில் ஒரே பெற்றோருக்கு பிறந்தாலும் இருவருக்குள்ளும் வேறுபாடு அதிகம் இருக்கும், இருவரின் வாழ்க்கையும் வெவ்வேறாகும்.

பல் வலியை நொடியில் போக்க

தீராத பல் வலியை நொடியில் போக்க வேண்டுமா? இதோ அற்புதமான 10 இயற்கை மருத்துவ முறைகள்! 

நம்மில் சிலருக்கும் திடீரென அடிக்கடி பல்வலி வருவதுண்டு 

நம் பற்களின் இரண்டு பாதுகாக்கும் கவசங்கள் இனாமல், டென்டின் உள்ளது. இரண்டையும் தாண்டி சொத்தை ஆழமாக பரவும் போது வலி ஏற்படுகின்றது. இதனை எளிதில் சரி செய்ய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை பின்பற்றினால் போதும். தற்போது அவற்றை பார்ப்போம். 

• மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் விளக்கி வர சொத்தைப் பல், பல்வலி, ஈறு வலி, வாய் துர்நாற்றம் போகும். 

• ஈறுகளில் வீக்கம் மற்றும் வலிக்கு பப்பாளிப் பாலை வீக்கத்தில் தடவி, இலேசாகத் தேய்க்க உள்ளிருந்த கெட்டநீர் வெளியேறி வலியும் வீக்கமும் போகும்.

• பல் வலி உள்ள போது பல் துலக்கியபின், ஒரு நெல்லிக்காயை நன்கு மென்று தின்னவும்.

• பிரம்ம தண்டு இலையை எரித்து சாம்பலாக்கி பல் தேய்க்க, பல் ஆட்டம், பல் சொத்தை, பல் கறை, பல்லில் இரத்தம் வடிதல் எல்லாமே தீரும். 

• ஆலமரப் பாலை பற்கள் மீது தடவினால் பல் ஆட்டம் நிற்கும்.ஆயில் புல்லிங் தினம் செய்ய பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா தொற்றிலிருந்து விடுபடலாம். 

• கோவைப்பழம் அடிக்கடி சாப்பிட பல் பலப்படும். நந்தியாவட்டை வேரை வாயிலிட்டு மென்று துப்பவும்.ஒமத்தை நீர்விட்டு அரைத்து களி போல் கிளறி இளஞ்சூட்டில் பற்றுப்போடவும். 

• ஒரு பல் பூண்டை நசுக்கி, வலி உள்ள இடத்தில் வைக்கலாம். இதுபோல் கிராம்பை நசுக்கியும் வைக்கலாம்.) 

• வாகை மரப் பட்டையை எரித்துப் பொடித்து பல் துலக்க ஈறு நோய் மற்றும் பல் வலி குணமாகும்.கருவேலம் பட்டைப் பொடியால் பல் துலக்கவும். 

• மாசிக்காயைத் தூளாக்கி, நீரில் கொதிக்க வைத்து கொப்பளிக்க ஈறு பலமடையும்.அசோக மரப் பட்டைப் பொடியுடன் உப்பு சேர்த்து விளக்கவும். 

• கடுகை பொடி செய்து வலிக்கும் இடத்தில் பற்று போடவும். வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவவும்.

நன்றிகளும்
பிரியங்களும்.

தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த ஜூஸ்களை குடிங்க…

தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த ஜூஸ்களை குடிங்க…

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ் போட்ட குடிக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிவதோடு, புண்ணும் குணமாகும்.

இஞ்சி ஜூஸ்

இஞ்சியில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை இருப்பதால், இது எந்த வகையான கிருமியானாலும் எளிதில் அழித்துவிடும். எனவே தொண்டை கரகரவென இருக்கும் போதே, சிறிது இஞ்சி ஜூஸ் குடித்துவிடுங்கள்.

கேரட் ஜூஸ்

கேரட்டில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது தொண்டையில் எவ்வித தொற்றுகள் இருந்தாலும் குணப்படுத்திவிடும். அதலும் இதனை தினமும் ஒரு கப் குடித்து வந்தால், தொண்டைப் புண்ணின் தொல்லையில் இருந்து குணமாகலாம்.

பூண்டு ஜூஸ்

இஞ்சியைப் போன்றே பூண்டிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே தொண்டைப் புண் இருக்கும் போது 4 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பூண்டு ஜூஸ் குடித்தால், உடனே குணமாகிவிடும்

குருதிநெல்லி ஜூஸ்

தொண்டைப் புண்ணை சரிசெய்யும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் குருதிநெல்லி. ஆகவே தொண்டைப் புண் இருக்கும் போது குருதிநெல்லியை ஜூஸ் போட்டு குடியுங்கள்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண் மற்றும் வலி குணமாகும்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஒரு சிறப்பான மூலிகைப் பொருள். இந்த கற்றாழையை சாறு எடுத்து, அதில் சிறிது கிராம்பு பொடி சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் விரைவில் குணமாகும்.

தக்காளி ஜூஸ்

தினமும் இரண்டு முறை தக்காளி ஜூஸில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

புதினா ஜூஸ்

இஞ்சி, பூண்டு போன்றே புதினாவிலும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் உள்ளது. அதற்கு இதனை சாறு எடுத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து குடிக்க வேண்டும்.

அன்னாசிப் பழ ஜூஸ்

அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்னும் நொதி உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் இருப்பதால், இது தொண்டையில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு ஆகியவற்றை குணமாக்கும்

கிவி ஜூஸ்

கிவி பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால் கூட தொண்டைப் புண்ணுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இதில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இது வறட்சி இருமலில் இருந்து பாதுகாக்கும்.

வாழைப்பழ ஜூஸ்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண்ணை சரிசெய்யலாம். மேலும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், சளி மற்றும் இருமலில் இருந்து விலகி இருக்கலாம்.

தர்பூசணி ஜூஸ்

தர்பூசணியை வெதுவெதுப்பான நீரில் ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண்ணினால் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஆப்ரிக்காட் ஜூஸ்

தொண்டைப் புண்ணினால் அவஸ்தைப்படும் போது, ஆப்ரிக்காட் ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது

தேமல் மறைய இயற்கை வழிமுறைகள்:::

தேமல் மறைய இயற்கை வழிமுறைகள்:::

1.அருகம்புல், கஸ்தூரிமஞ்சள், மருதோன்றி போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் விரைவாக குணமாகும்.

2.நாயுருவி இலை சாறை தடவி வந்தால் தேமல், படை குணமாகும். இப்படியான நாயுருவி இலையானது எளிதாக கிரமாப்புறங்களில் கிடைக்க கூடியது.

3.கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்மற்ற்கு தேய்த்து குளித்து வரவும். எலுமிச்சை பழச்சாறு தேமல் உள்ள இடங்களில் தேய்த்தால் தேமல் மறையும்.

4.நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து சர்க்கரை சேர்த்து குடித்தால் தேமல் குறையும்.

5.எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வந்தால் தேமல் குறையும்.

6.மஞ்சள் இடித்து நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும். துளசி இலை, வெற்றியைலை எடுத்து அரைத்து தேமல் மேல் பூசினால் தேமல் நீங்கும்.

வறட்டு இருமல் என்றால் என்ன?

வறட்டு இருமல் என்றால் என்ன?

வறட்டு இருமல் என்பது ஒரு வைரஸ் தொற்று. இது அதிகமாக குழந்தைகளை பாதிக்கிறது. இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சற்று அதிக சத்தத்துடன் இருமுவார்கள். இருமும் பொழுது தொண்டையில் எரிச்சல் அதிகமாக ஏற்படும். குறிப்பாக படுத்தவுடன் இருமல் அதிகமாக ஏற்படும். தொண்டை கட்டினாற்போல் பேசுவார்கள்.

வறட்டு இருமல் வரக்காரணம்

வறட்டு இருமல் வர முக்கியமான காரணமாக கருதப்படுவது தூசு மற்றும் புகை. புகை பிடிப்பவகளை மட்டுமின்றி அவர்கள் அருகில் இருப்பவர்களையும் இது பாதிக்கிறது. அசுத்தமான தண்ணீரினால் கூட இந்த நோய் ஏற்படலாம். வறட்டு இருமலின் பெயருக்கு ஏற்றார் போல் இந்த வறட்டு இருமல் சளி இல்லாமல் நம்மை தாக்கும். இதன் மற்றொரு காரணமாக ஒவ்வாமை கூறப்படுகிறது. சிலருக்கு விலங்குகளின் முடியினாலும் வறட்டு இருமல் ஏற்படலாம். சினிமா தியேட்டரில் விற்கும் நாள்பட்ட ஐஸ்கிரீம் சாப்பிட்டாலும் வறட்டு இருமல் வரும்.

 

வறட்டு இருமலை வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டு விரட்டலாம்.

 

வறட்டு இருமலுக்கு கொள்ளுப்பொடி,மிளகு, சுக்கு, பூண்டு  கசாயம் மருந்து

கொள்ளுப்பயிறு 50கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து கொண்டு அதனுடன் மிளகு, சுக்கு, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு இந்த கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனை இரண்டு நாட்கள், நாளுக்கு இரு வேளை குடித்தாலே போதும் வறட்டு இருமல் மட்டுமின்றி எந்த விதமான இருமலும் காணாமல் போகும்.

 

வறட்டு இருமல் குணமாக எலுமிச்சை, தேன் மருத்துவம்

பொதுவாக இருமல் ஜலதோஷம் அதிகம் உள்ளவர்கள் விட்டமின் c அதிகமாக உட்கொள்ள வேண்டும். காரணம் விட்டமின் c சளி யை எதிர்த்து போராடும் குணம் கொண்டது. எலுமிச்சையில் விட்டமின் c அதிக அளவில் உள்ளது. இளஞ்சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எழுமிச்சை சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல் மற்றும் அதன் காரணமான சளியும் காணாமல் போகும்.

 

வறட்டு இருமல் குணமாக இஞ்சி, தேன் மருந்து

அரை விரல் அளவிற்கு இஞ்சியை எடுத்துக் கொண்டு அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொண்டு அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதனை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி, இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று வேளை பருகி வர வறட்டு இருமல் குணமாகும்.

 

வறட்டு இருமல் குணமாக உலர் திராட்சை மருந்து

உலர் திராட்சை குழந்தைகளால் அதிகம் விரும்பப்படும் ஓர் உணவு. 50 கிராம் உலர்திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்துக் அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாக ஆகும் வரை கிண்ட வேண்டும். பின்பு இந்த கலவையை தினமும் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும். இதன் சுவையும் நன்றாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். வறட்டு இருமல் குழந்தைகளுக்கு வந்திருந்தால் இந்த மருந்தை தாரளமாக கொடுக்கலாம்.

 

வறட்டு இருமலுக்கு புதினா மருந்து

வறட்டு இருமலுக்கு வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புதினா ஒரு அருமருந்தாகும். புதினாவை துவையலாகவோ சூப் செய்தோ சேர்த்துக்கொள்வதால் வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.

 

வறட்டு இருமல் குணமாக மாதுளம், தேன், இஞ்சி மருந்து

மாதுளம் பழத்தை தோல் இல்லாமல் மாதுளம் பழ முத்துக்களை மட்டும் எடுத்து பழசாறு ஆக்கி கொள்ள வேண்டும். மாதுளம் பழத்தின் முத்துக்களை மிக எளிமையாக எடுக்க, மாதுளம் பழத்தை சரி பாதியாக வெட்டி, பாதி மாதுளம் பழத்தை தலைகீழாக பிடித்துக்கொண்டு ஒரு கரண்டியை வைத்து வேகமாக தட்டினால் முத்துக்கள் தானாய் உதிர்ந்து விடும். மாதுளம் பழசாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல் குணமாகும்.

 

வறட்டு இருமல் குணமாக திப்பிலி, தேன் மருந்து

திப்பிலி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வறுத்து பொடி செய்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வறட்டு இருமல் குணமாகும்.

 

வறட்டு இருமல் குணமாக வெங்காயம், சர்க்கரை மருந்து

சின்ன வெங்காயம் 150 கிராம் எடுத்துக்கொண்டு அதனை நீர் விட்டு நன்கு அரைத்து சிறு துணியில் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 150 கிராம் சர்க்கரை சேர்த்து பாகு பதமாக காய்ச்ச வேண்டும். இந்த பாகினை மூன்று வேளையும் பருகி வர வறட்டு இருமல் காணாமல் போகும்.

 

வறட்டு இருமல் குணமாக பால், மஞ்சள், மிளகு மருந்து

நன்கு காய்ச்சிய பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து அருந்தி வர வறட்டு இருமல் வந்த இடம் தெரியாமல் ஓடி விடும். புகை பிடிப்பவர்கள் வாரம் ஒரு முறையேனும் இந்த மங்சள், மிளகு சேர்த்த பாலை அருந்த வேண்டும்.

 

வறட்டு இருமல் குணமாக பால், பனங்கற்கண்டு, மிளகு மருந்து

நன்கு காய்ச்சிய பாலுடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்து மூன்று நாள் அருந்த வேண்டும். இப்படி செய்தால் வறட்டு இருமல் மட்டுமின்றி எப்பேர்பட்ட இருமலும் காணாமல் போகும்.

 

வறட்டு இருமல் குணமாக சீரகம், பனங்கற்கண்டு மருந்து

10 கிராம் சீரகத்தை எடுத்துக்கொண்டு அதனை பொடி செய்து கொண்டு அதனுடன் சம அளவில் பனங்கற்கண்டை பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இதை காலை மாலை அரை ஸ்பூன் சாப்பிட்டு இளஞ்சூடான நீரை அருந்தினால் வறட்டு இருமல் குணமாகும். வறட்டு இருமலை குணமாக்க இது மிகவும் எளிமையான முறை ஆகும்.

 

வறட்டு இருமல் சரியாக மிளகு மருந்து

மிளகை நன்கு சிவப்பாக வறுத்து கொண்டு அந்த சட்டியில் சிறிது நீரை ஊற்றி மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். இதில் பாதி நீரை காலையிலும் மீதி நீரை மாலையிலும் அருந்தி வர வறட்டு இருமல் சரியாகும்.

 

வறட்டு இருமல் சரியாக தேன், பட்டை மருத்துவம்

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமலை போக்க ஒரு ஸ்பூன் தேனுடன் பட்டையை பொடி செய்து ஒரு சிட்டிகை கலந்து கொடுக்க வேண்டும். இருமல் காணாமல் போகும்.

 

வறட்டு இருமல் குணமாக தேன், தூதுவளை மருந்து

சளிக்கும் இருமலுக்கும் தூதுவளை மிக அருமையான மருந்து. தூதுவளை கொடியை நன்கு காய வைத்து பொடியாக்கி வைத்து கொள்ள வேண்டும். நாட்டு மருந்துக்கடைகளில் தூதுவளை பொடியாகவே கிடைக்கும். ஒரு சிட்டிகை தூதுவளை பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொடுத்து வர வறட்டு இருமல் குணமாகும். இருமல் மட்டுமல்லாமல் சளியும் குணமாகும்