Monday, 31 May 2021
இலுப்பை_மரம்
இலுப்பை மரம் மேகக்கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம்கொண்டது.
இலுப்பையின் தாயகம் தமிழகம் தவிர நேப்பாளம், இலங்கை மற்றும் மியான்மரிலும் காணப்படுகிறது. நம் நாட்டில், ஜார்கண்ட், குஜராத், மத்தியபிரதேசம், பீகார், ஒரிஸ்ஸா, கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் உள்ளது. இது சப்போட்டா மரத்தின் வகையை சேர்ந்தது.
தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டு வாக்கில் 30,000 மரங்களுக்கும் அதிகமாக இருந்தன. ஆனால் 2015 ஆம் ஆண்டு கணக்கின்படி 10,000 மரங்களுக்கும் குறைவாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இலுப்பை ஒரு வெப்ப மண்டல தாவரம். வறண்ட நிலங்களிலும் எளிதாக வளரக்கூடியாது. இலுப்பையின் ஆயுட்காலம் நானூறு ஆண்டுகளுக்கு மேல்.
சுமார் அறுபது அடிக்கும் மேல் வளரக்கூடியது.
இலுப்பை மரம் அதிகமான மருத்துவ குணமுடைய தாவரம். இதன் இலை, பூ, விதை, பட்டை, எண்ணெய், புண்ணாக்கு ஆகிய அனைத்தும் சங்க காலம் தொட்டு இன்று வரையிலும் மருத்துவத்திற்கான பயன்பாட்டில் உள்ளது.
இதன் பருவகாலம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை. முளைத்த நாளிலிருந்து பத்து வருடங்களுக்கு பின்னர்தான் பலன் தரும்.
"ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை" என்பது பழமொழி.
ஒரு வருடத்திற்கு இருநூறு கிலோவிலிருந்து முன்னூறு கிலோ பூவும், இருபது முதல் இருநூறு கிலோ வரை இலுப்பை விதையும் கிடைக்கும். ஒரு கிலோ விதையிலிருந்து முன்னூறு மில்லி லிட்டர் எண்ணெய் எடுக்கலாம்.
ஒரு டன் பூவிலிருந்து எழுநூறு கிலோ சர்க்கரையும் நானூறு கிலோ ஆல்ககாலும் தயாரிக்கலாம். இலுப்பை ஆல்ககால் (சாராயம்) ஒரு மாற்று எரிபொருளாக பயன்படக்கூடியது. இலுப்பை எண்ணெய் ஒரு வலி நிவாரணி, சமையலுக்கும் இது பயன்படுகிறது.
இது தவிர பாம்பு விஷம், வாத நோய், சக்கரை வியாதி, சளி, இருமல் மூலநோய், வயிற்றுப்புண், சுவாசக்கோளாறு, காயம் ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. இலுப்பைப் பூ ஊறுகாய் காச நோய்க்கு அருமருந்தாகும்.
விறகாக மட்டுமின்றி அறைக்கலன்கள், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உப்புநீரை தாங்குவதால் இம்மரம் படகுகள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
வணிகரீதியாக ஒரு ஏக்கருக்கு சுமார் இருநூறு இலுப்பை மரங்கள் வரை நட்டு, ஆண்டொன்றுக்கு ஆயிரத்தி ஐநூறு லிட்டர் எண்ணெய் எடுத்தால் அதன் மூலமாக மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இது தவிர பூ, பட்டை, சர்க்கரை, புண்ணாக்கு, சாராயம், சிகைக்காய் ஆகிய அனைத்துமே பணம்தான்.
ஒரு கண அடி மரம் ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்டது. அறுபது ஆண்டுகள் கழித்து ஒரு மரம் சுமார் ஐந்து லட்சத்திற்கு மேல் மதிப்புடையதாகிறது.
இதை ஒரு பணம் காய்க்கும் மரம் என்று கூறினால் அது மிகையாகாது.
வவ்வாலுக்கு மிகவும் பிடித்தமான உணவு இலுப்பை பழங்கள்தான்.
இலுப்பையின் அழிவு வவ்வாலின் அழிவு.
வவ்வாலின் அழிவு கொசுவின் வளர்ச்சி.
கொசுக்களின் வளர்ச்சி வியாதிகளின் வளர்ச்சி.
இலுப்பையை அழிவிலிருந்து மீட்போம்,
சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் காப்போம்.....
தும்பை
தும்பை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். 50 சென்றிமீட்டர் வரை உயரமாக வளரும் இதன் இலையும் பூவும் மருத்துவக் குணமுடையன. தும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும்; இது ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. வெள்ளை நிறப் பூக்களுடன் சிறிய செடிகளாகக் கேட்பாரின்றி விளைந்து கிடக்கும் .
தும்பைச் செடி வகைகள்
தும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித் தும்பை என்று பல வகைகளுண்டு.
மருத்துவ பயன்கள்
தும்பையை ஆயுர்வேதத்தில் இதனை துரோன புஸ்பி என்று சொல்வோம்.குணமாக்கும் நோய்களில் -விஷம ஜ்வரம்.அக்னி மாந்த்யம் என்னும் பசி இன்மைக்கு ,காமாலை என்னும் மஞ்சள் காமாலைக்கு பக்ஷாகாதம் என்னும் பக்கவாதத்திற்கு ,ப்ரமேஹம் என்னும் சர்க்கரை நோய்க்கு ,விஷ ரோகங்களுக்கு ,மூல நோய்க்கும் நல்ல பலனை தரும் . காரணம் தெரியாத அரிப்பு அதனுடன் மறைந்து விடும் தடிப்புக்கும் நல்ல பலனை தரும்மஞ்சள் காமாலைக்கு -இந்த தும்பை பூவில் செய்யும் கண் மை நல்ல பலன் தரும்.தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் அரைத்து சுத்தமான எண்ணெயில் கலந்து காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.
தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூசினால் பூரான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும். தும்பை இலைச்சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர்க்கோவை குணமாகும். பாம்புக்கடிகளுக்கும் தும்பையும் மிளகும் சேர்த்து முதலுதவியாக அளிக்கலாம்.தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்புக் கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குழித்துவரச் சிரங்கு , சொறி , நமச்சல்போகும்.தும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ, மண்டைக்குத்தலோ, மண்டையிடியோ குணமாகும்.தும்பையிலைச் சாறு 25 மில்லியளவு பாம்பு தீண்டியவருக்குக் கொடுக்க இரண்டு மூன்று முறை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும்.
குளிர்ந்த உடல் சூடு அடையும்.புதுப்பானையில் பச்சரிசி, பாசிப்பயறு பொங்கி உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். ஒருநாள் முழுவதும் பாம்பு தீண்டியவரைத் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் உப்பில்லாமல் பொங்கல் செய்து கொடுக்க நஞ்சு இறங்கும். மயங்கிய நிலையில் இருந்தால் சாற்றினை நசியமிடலாம். நசியத்தில் தெளியவில்லையென்றால் இறப்பது உறுதி. நச்சு முறிவில் தும்பை தனித்த ஒரு இடம் பெறுகிறது.தும்பை இலை, கீழா நெல்லி இலை இரண்டையும் சம அளவாக எடுத்து அரைத்துச் சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.
தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் தர ஆசனப் புண் குணமாகும். தும்பைச் செடியை அரைத்துத் தேமல் உள்ள இடத்தில் பூசி வரத் தேமல் குணமாகும். தும்பைப் பூ, நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும்; கண் பார்வை தெளிவடையும். இன்னும் எத்தனையோ பலன்கள் தும்பைக்கு; இதன் பயன்பாடு பாரம்பரியாமாக நம் நாட்டு மக்களிடையே இருந்துவருகிறது.
கழுதைத் தும்பை எனும் கவிழ் தும்பை மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாத நோய், ரத்தமும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு அத்தனையும் நீங்கும் என்கிறார் ஒரு சித்தர்.தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் அரைத்து சுத்தமான எண்ணெயில் கலந்து காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூசினால் பூரான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும். தும்பை இலைச்சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர்க்கோவை குணமாகும். பாம்புக்கடிகளுக்கும் தும்பையும் மிளகும் சேர்த்து முதலுதவியாக அளிக்கலாம்.
தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்புக் கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குழித்துவரச் சிரங்கு , சொறி , நமச்சல்போகும்.தும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ, மண்டைக்குத்தலோ, மண்டையிடியோ குணமாகும்.தும்பையிலைச் சாறு 25 மில்லியளவு பாம்பு தீண்டியவருக்குக் கொடுக்க இரண்டு மூன்று முறை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும். குளிர்ந்த உடல் சூடு அடையும்.புதுப்பானையில் பச்சரிசி, பாசிப்பயறு பொங்கி உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். ஒருநாள் முழுவதும் பாம்பு தீண்டியவரைத் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் உப்பில்லாமல் பொங்கல் செய்து கொடுக்க நஞ்சு இறங்கும். மயங்கிய நிலையில் இருந்தால் சாற்றினை நசியமிடலாம். நசியத்தில் தெளியவி
Saturday, 29 May 2021
காகம்
*#காகம்*
காகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத்திய குணங்கள் பல தெய்வ ரகசியங்கள் அதற்கு உண்டு என்றும், மனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் பறவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
பல பிரபஞ்ச ரகசியங்களை அறிய, இயற்கையின் பூரண அறிவை பெற இன்று காகங்களை பற்றி பல அபூர்வ சித்த நூல்களில் சொல்லப்பட்ட ரகசியங்கள்.
காகம் ஒரு உயர்ந்த ஒழுக்க நெறி கொண்ட பறவை. கற்புக்கு உதாரணமாக காகத்தை சொல்லலாம். தனது ஜோடியுடன் மட்டுமே இனை சேறும்.
கூச்ச சுபாவம் கொண்டது காகம்.
பெரும்பாலும் மாலையில் நீர் நிலைகளில் குளித்துவிட்டு தான் தன் கூட்டுக்கு செல்லும் வழக்கம் உடையது காகம்.
உணவை ஒருபோதும் தனியாக சாப்பிடவேண்டும் என்கிற சுயநலம் சிறிதும் இல்லாத பறவை. உணவு கிடைத்தால் கரைந்து தன் சகாக்களையும் அழைத்து பகிர்ந்து சாப்பிடும் சிறந்த குணம் காக்கைக்கு உண்டு.
சிறந்த தாய்
காக்கைக்கு இது தன் முட்டை இல்லை என்று தெரியும். தெரிந்தும் குயிலின் முட்டையை அடை காக்கும். குயில் குஞ்சுக்கும் தன் குஞ்சு போலவே பறக்கும் வரை உணவளித்து பராமரிக்கும். "உலகில் மிகச்சிறந்த மாற்றந்தாய் காகம் தான் என்பதை உங்கள் அனுபவத்தில் உணரலாம்.
தங்கள் இனத்தில் ஏதாவது காக்கை இறந்து விட்டால் அனைத்துக் காக்கைகளும் ஒன்றுகூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்கு சமமாக கருதப்படுகிறது.
மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள் தான், ஆனால் மெல்ல மெல்ல இதை நாமே பெரிது படுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது. காகத்திற்கு தினமும் காலையில் கம்பு சோளம் திணை வைக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வு பித்ருக்களின் ஆசிர்வாதமாகும்
ஆனால் உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண்பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது. செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள் புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும் உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது உங்கள் முன்னோர் வழிபாடு தான்.
உங்கள் முன்னோர்களுக்கே நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற் அபரிமிதான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல அற்புதமான ஜீவராசி காக்கை இனம்.
குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப்பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம். தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தக் கணுப்பிடி பூஜையையும் செய்கிறார்கள்.
திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்தரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கி கைப்பிடி அளவு எடுத்து வைத்து காக்கைகளை கா…கா….கா என்று குரல் கொடுத்து அழைப்பார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும்.
அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள் அன்னங்களை சுவைக்கும். அப்படி சுவைக்கும் போது அந்த காக்கைகள் கா... கா... என்ரு கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டு சென்றதும் அந்த வாழை இலையில் பொரி பொட்டுக்கடலை வாழைப்பழங்கள் வெற்றிலைபாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.
இதனால் உடன் பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள்....
காக்கை சனி பகவானின் வாகனம் காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம். காக்கைகளில் நூபூரம் பரிமளம் மணிக்காக்கை அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு.
காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்த பறவைகளிடமும் காண முடியாது. எம தர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம்.
எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம்...
தந்திரமான குணம் கொண்ட காகம் யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும் முன் கூட்டியே காகம் நம் வீட்டின் முன் கா……………….கா…………. என்று பல முறை குரல் கொடுக்கும். இந்த பழக்கம் இன்றும் உண்டு....
காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும்.
எனவே காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான் எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.
காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்
காலை எழுந்திரு.
மாலையிலும் குளி.
கிடைக்கும் உணவைப் பகிர்ந்து உண்க.
குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா...?
🌺👉 குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா...?
🕉️🙏🏻தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு, குரு பகவான் என்பவர் வேறு இருவரும் ஒருவரல்ல...🍀👍
By
🙏🙏Srinivasan Arunachalam Koundinya -
- Vedic Astrologer Pandit..🙏🙏
" சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள்....."🙏
👉அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தெட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.
👉இந்த தெய்வங்களை எப்படி வணங்குவது, அவர்களுக்கு படைக்க வேண்டிய நைவேத்தியம், அணிவிக்க வேண்டிய வஸ்திரம் என்ன, அவர்களுக்கிடையே உள்ள தனித்துவம் என்ன....
👉நம்மில் பெரும்பாலானோர் தட்சிணாமூர்த்தியும், குரு பகவானும் ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவர் ஞான குரு, மற்றொருவர் நவகிரக குரு என்பது தெரிவதில்லை.....
இதன் காரணமாக கோயில்களில் வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்குவதற்காக அல்லது பரிகாரம் செய்வதற்கு என நினைத்து தட்சிணாமூர்த்தி முன் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
👉அதே சமயம் உண்மையான குரு முன் வழிபடச் செல்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக குரு பகவானுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை தட்சிணாமூர்த்தி முன் செய்து வருகின்றனர்.
🌸"குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மைஸீ குருவே நம:"🌸
என்ற ஸ்லோகத்தில் குரு என்ற வார்த்தைக்கு தட்சிணாமூர்த்தி என்று அர்த்தம். ஆனால் குரு என குறிப்பிடப்படுவதால் குரு பகவானும், தட்சிணாமூர்த்தியும் ஒன்று என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
👉அதே சமயம் ஆலங்குடியில் குரு பகவானுக்குரிய கோயிலும், பட்டமங்கலத்தில் தட்சிணாமூர்த்தி ஸ்வாமியும் பிரபலமடைந்து இருப்பதால் இருவரும் ஒன்று என எண்ணத்தோன்றச் செய்துள்ளதும் ஒரு காரணமாக இருக்கலாம்....
👉நவகிரகங்கள் என்பது இறைவன் இட்ட கட்டளையை, கடமையைச் செய்யக் கூடிய ஒன்பது கோள்களாகும். அவற்றில் ஒருவர் தான் குரு பகவான் எனும் ப்ரஹஸ்பதி.
👉இரு தெய்வங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
🌺தட்சிணாமூர்த்தி என்பவர் யார், எப்படி இருப்பார்🌺
👉சிவன் கோயிலில் தென்முகம் பார்த்து அருள்பாலிப்பவர் தட்சிணாமூர்த்தி. இவர் எப்போது தியானத்தில் ஆழ்ந்திருப்பார். தட்சிணாமூர்த்தி என்பவர் ஞான குரு. அவருக்கு விருப்பமான நிறம் வெண்மை. அதனால் அவர் வெண்ணிற ஆடையில் அருள்பாலிப்பார். (ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம் என வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. அதாவது ஸ்வேதம் என்றால் வெண்மை என்று பொருள்.
👉இவர் சிவ பெருமானின் ரூபம். ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமத்தை உபதேசிக்கும் குருவின் உருவமாக தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் அடியில் அமர்ந்திருக்கக் கூடியவர். இவரை ஞான குரு அல்லது ஆதி குரு என அழைக்கப்படுகிறார்...👍
👉ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தி முன் நாம் தியானத்தில் அமர்ந்து வழிபடலாம். அதே சமயம் ஞானத்தை வேண்டுபவர்களுக்கு வியாழக்கிழமை தான் உகந்தது என்று இல்லை. எந்த கிழமையானாலும் அவருக்கு உகந்ததே....🙏🙏🙏
🌸👉 தட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம்...🌺🙏
🌸👉 இவரே சிவம்....🍀🙏
🌸👉 தட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி..🌺🙏
🌸👉 தட்சிணாமூர்த்தி என்பவர் சிவகுரு...🍀🙏
🌸👉 தட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர்...🌺🙏
🌸👉 தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர்...🍀🙏
🌸👉 சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர்....🌺🙏
🍀👉 சரி இனி 🌺குரு என்பவர் யார், எப்படி இருப்பார்🌺
🌸👉 நவகிரகங்களில் இருக்கக் கூடிய குரு பகவானோ வடக்கு திசை நோக்கி வீற்றிருப்பார். இவருக்கு உகந்த நிறம் மஞ்சள். அதே போல் அவருக்கு விருப்பமான நைவேத்தியம் கொண்டைக் கடலை....
🌸👉 இவருக்கு மஞ்சள் வஸ்திரத்தைச் சாற்றுவதும். கொண்டைக்கடலை மாலை அணிவிப்பதும் உகந்தது.
🌸👉 ஆனால் குரு என்பவர் இந்திர லோகத்தில், தேவர்களுக்கெல்லாம் குருவாக, ஆலோசனை வழங்கக் கூடியவராக அதாவது ஆசிரியர் பணியை செய்யக் கூடியவர் ப்ருஹஸ்பதி எனும் குரு பகவான். (வியாழன் கோள்).
🌸👉 குரு பகவான் என்பவர் கிரக வடிவம்...🌺🙏
🌸👉 இவரே பிரகஸ்பதி (பிரம்ம குமாரர்)...🍀🙏
🌸👉 குரு என்பவர் அதிகாரி...🌺🙏
🌸👉 குரு என்பவர் தேவகுரு....🍀🙏
🌸👉குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து ஜீவன்களிடம் கொண்டு சேர்ப்பவர்....🌺🙏
🌸👉குரு என்பவர் ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர்....🍀🙏
🌸👉குருவோ உதயம் -அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்....🌺🙏
🌺👉இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இரு தேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல…😒
எனவே இந்த குரு வாரத்திலிருந்தாவது.....
👉 தட்சிணாமூர்த்தியை தட்சிணாமூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள்...🙏🙏🙏🙏
🍀🌺 👍🙏🙏🙏
மாம்பழம் சாப்பிட்ட உடனே இவற்றையும் சாப்பிட்டால் வயிற்றுக்குள் தவறான ரியாஷனாகிவிடுமாம்
மாம்பழம் சாப்பிட்ட உடனே இவற்றையும் சாப்பிட்டால் வயிற்றுக்குள் தவறான ரியாஷனாகிவிடுமாம். எனவே கவனமாக இருங்கள்.
மாம்பழம் சாப்பிட்ட பிறகு இந்த உணவுகளை கையில் கூட தொடக்கூடாது : ஏன் தெரியுமா?
தயிர் : மாம்பழம், தயிர் குளிர்ச்சி மற்றும் சூட்டை கிளப்பும் இரு வெவ்வேறு உணவுகள் என்பதால் அவற்றை ஒன்றாக சாப்பிட்டால் சரும அலர்ஜி உண்டாகலாம்.
தயிர் : மாம்பழம், தயிர் குளிர்ச்சி மற்றும் சூட்டை கிளப்பும் இரு வெவ்வேறு உணவுகள் என்பதால் அவற்றை ஒன்றாக சாப்பிட்டால் சரும அலர்ஜி உண்டாகலாம்.
காரமான உணவு : மாம்பழம் சாப்பிட்டதும் காரசாரமான உணவுகளை சாப்பிடாதீர்கள். வயிற்றுக்குள் ஒரு கலவரமே நிகழ்ந்துவிடும்.
காரமான உணவு : மாம்பழம் சாப்பிட்டதும் காரசாரமான உணவுகளை சாப்பிடாதீர்கள். வயிற்றுக்குள் ஒரு கலவரமே நிகழ்ந்துவிடும்.
குளுர்ச்சியான தண்ணீர் அல்லது ஜூஸ் : பொதுவாக மாம்பழம் இனிப்பு சுவை நிறைந்தது. எனவே மாம்பழம் சாப்பிட்ட உடனே குளுர்ச்சியான ஜூஸ் அல்லது கார்போஹைட்ரேட் பானங்கள் குடித்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யலாம்.
குளுர்ச்சியான தண்ணீர் அல்லது ஜூஸ் : பொதுவாக மாம்பழம் இனிப்பு சுவை நிறைந்தது. எனவே மாம்பழம் சாப்பிட்ட உடனே குளுர்ச்சியான ஜூஸ் அல்லது கார்போஹைட்ரேட் பானங்கள் குடித்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யலாம்.
ஆதண்டை....
: இந்த இலையும் காயும் பார்த்திருக்கீங்களா? மழைக்காலத்தில் வரும் எல்லா நோய்க்கும் இதுதான் மருந்து
பழமை மாறாத கிராம உணவுமுறைகளில், சில காய்கறிகள், கீரைகளை குறிப்பிட்ட பருவகாலங்களில், இன்றும் சீராக உணவில் சேர்த்துவருவதை கவனிக்கமுடியும்.
தமிழர்கள் உணவில் கோடைக்காலத்தில் சேர்க்கப்படும் வேப்பம்பூ போல, குளிர்கால உணவில் அவசியம் இடம்பெறும் ஒரு மூலிகை, ஆதண்டை. குளிர்காலத் தொடக்கமான ஆடி மாதத்திலும், முன்னோரை வழிபடும் ஆடி அமாவாசை நாளிலும் உணவில், ஆதண்டைக் கீரை கட்டாயம் இடம் பெற்றிருக்கும்.
எப்படி இருக்கும்? சிலர் பார்க்க கரடுமுரடாக இருந்தாலும், பழகும்போது, மிகவும் சாதுவாக, நல்ல தன்மைகள் மிக்க அப்பாவியாக இருப்பார்கள் அல்லவா?
முட்களுடன் கூடிய சிறிய இலைகளைக் கொண்ட, புதர்போல வளரும் ஆதண்டைச் செடியும் அப்படித்தான். முட்கள் நிரம்பிய புதர்ச் செடியாக இருந்தாலும், பல நூற்றாண்டுகளாக, தமிழரின் வாழ்விலும், உணவிலும் ஒன்றெனக் கலந்ததுதான், ஆதண்டை எனும் மூலிகைச் செடி ஊறுகாய்.
வறண்ட நிலங்களிலும் உயரமான மலைப்பகுதிகளிலும் செழித்து வளரும் பல இயற்கை மூலிகைச்செடிகளில், ஆதண்டையும் ஒன்று. செடி போலவும், கொடி போலவும் படர்ந்து வளரும் ஆதண்டை, ஆலிலை போன்ற இலைகளையும், உருளை வடிவ பழங்களையும் கொண்டது.
கோடைக்காலத்தில் பூக்கள் பூத்து, மழைக்காலத்தில் காய்க்கும் கால்சியம் சத்துமிக்க ஆதண்டை பழங்கள், சிறந்த மருத்துவ பலன்கள் நிரம்பியவை. காய்களை வற்றலாக, ஊறுகாயாக பயன்படுத்துகின்றார்கள்
குளிர்காலம் கருஞ்சுரை, காத்தோடி கொடி, காட்டுக்கத்திரி எனும் பெயர்களிலும் அழைக்கப்படும் ஆதண்டைச்செடியின் இலைகள், பூக்கள் மற்றும் வேர்கள் மருத்துவ குணமிக்கவை.
சுவாச கோளாறுகள், இரத்த சர்க்கரை பாதிப்பு, கண்பார்வை குறைபாடு போன்ற பாதிப்புகளுக்கு, ஆதண்டை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. எல்லாம் சரி, குளிர் காலங்களில், ஆடி மாதத்தில், ஏன் அதிகம் உணவில் சேர்க்கிறார்கள்? அதைச் சொல்லுங்கள் முதலில், என்கிறீர்களா? இதோ! குளிர்கால மூலிகை ஆதண்டை. குளிர்காலத்தில் மழை மற்றும் ஈரத்தன்மை நிறைந்த காற்றின் காரணமாக, ஏற்படும் கிருமித்தொற்றால், சுவாசம் தொடர்பான பாதிப்புகளும், பல்வேறு வியாதிகளும் ஏற்படுகின்றன.
நோயெதிர்ப்பு சக்தி
பள்ளி செல்லும் குழந்தைகளுக்குச் சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள், குளிர் காலத்தில் அதிகம் பரவுவதற்கு, காற்றின் ஈரமும், மழையுமே காரணம் என்றாலும், அடிப்படை காரணம், குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியின் குறைபாடே எனவேதான், மழைக்காலங்களில் வீடுகளில். நோயெதிர்ப்பு சக்திமிக்க ஆதண்டைக் கீரையை சமைத்து உண்டு வந்தார்கள். மேலும், சில சமூகங்களில் மூதாதையர் வழிபாடு நாளான அமாவாசை நாளிலும், ஆதண்டைக் கீரையை உணவில் சேர்க்கும் வழக்கமும் ஏற்பட்டது.
மழைக்காலம் குளிர் காலத்தின் ஆரம்ப மாதமான ஆடி மாதத்தில் உணவில் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தி மற்றும் பல்வேறு ஊட்டச் சத்துக்களை வழங்கும் ஆதண்டையை உணவில் சேர்த்தார்கள். இதன் மூலம், பசியைத் தூண்டி, உடலில் செரிமான ஆற்றலை அதிகரிக்கிறது. உடலில் நோயெதிர்ப்பு சக்தி மேம்பட்டு, குளிர்கால தொற்று வியாதிகளான சளி, இருமல் மற்றும் ஜூரத்திலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
இதனால் தான், இன்றும் கிராமங்களில் சிலவீடுகளில் ஆதண்டையை விடாமல், மழைக்காலத்தில் தொடர்ந்து சமைத்து, உடல் நலத்தைக் காத்து வருகிறார்கள். ஆதண்டையின் பயன்கள் மழைக் காலத்தில் மட்டும்தானா? மற்ற காலங்களில் இல்லையா? என்று யோசிக்க வேண்டாம். வருடம் முழுவதும், மனிதர்களின் உடல்நலம் காக்கும் தன்மைகளில், முன்னிலைபெற்ற மூலிகைகளில் ஒன்றாக இருப்பது, ஆதண்டையும் தான். இதன் மற்ற பலன்களையும், அறிந்து கொள்வோம்.
இரத்த சர்க்கரை
சித்த மருத்துவத்தில், ஆதண்டை இலைகள் மற்றும் பழங்கள், இரத்த சர்க்கரை பாதிப்புகளை குணமாக்குவதில் மருந்தாகின்றன. தினமும் இரண்டு ஆதண்டை இலைகளை மென்று வந்தாலே ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்
எலும்புகளை வலுவாக்க இயல்பிலேயே கால்சியம்சத்து நிரம்பிய ஆதண்டை இலைகளை, உணவில் கீரை போல கடைந்தோ, கீரைக்கூட்டு போல சமைத்தோ, இரசம் போன்று செய்தோ அல்லது துவையல் போல அரைத்தோ சாப்பிட்டு வர, உடலில் எலும்பு தொடர்பான பாதிப்புகள் நீங்கி, எலும்புகள் வலுவாகும். ஆதண்டைக் காய்களை காயவைத்து, உப்பிட்டு வற்றல்போல வறுத்தோ அல்லது ஊறுகாய்போல செய்தோ வைத்துக்கொண்டு, சாப்பிட்டுவரலாம்.
தலைவலி கடுமையான தலைவலி தோன்றும் சமயங்களில், ஆதண்டை இலைகளை நன்கு அலசி சாறெடுத்து, அந்தச்சாற்றை நெற்றிப்பொட்டில் இதமாகத் தடவி வர, தலைவலி விரைவில் குணமாகி விடும்.
சிறுநீர் அடைப்பு வயது முதிர்ந்த சிலருக்கு, உடல்நல பாதிப்பாலோ அல்லது சிறுநீரக பாதிப்பாலோ சிறுநீர் வெளியேறாமல், சிரமப்படுவார்கள். இதைப்போக்க, மோரில் ஆதண்டை இலைகளை அரைத்து, அந்த விழுதை நீரில் கலக்கி பருகி வர, சிறுநீரக அடைப்பு நீங்கி, சிறுநீர், சீராக வெளியேறி, உடல் பாரமும், மன பாரமும் குறைந்து, நலம் பெறுவார்கள்.
சுவாசக் கோளாறுகள் ஆதண்டை வேர்கள், சளி இருமல் போன்ற சுவாச பாதிப்புகளை சரியாக்கும் மருந்துகளில் பயன்படுகின்றன. மேலும், ஆதண்டை வேர்கள், விஷக்கடிகளுக்கும் மருந்தாகின்றன.
மூட்டுவலிக்கு ஆதண்டை வேர் தைலம்.
மூட்டு வலி இல்லாதவர்களைப் பார்ப்பதே அரிதான இன்றைய காலத்தில், மூட்டுவலிகளுக்கு சிறந்த தீர்வை, ஆதண்டைச் செடியின் வேர் மூலம் தயாரிக்கப்படும் தைலம் அளிக்கிறது. ஆதண்டை வேர், சங்கம் செடி வேர், புங்க வேர் இவற்றை இடித்து சலித்து தூளாக்கி வைத்துக்கொண்டு, அதில் முடக்கற்றான் இலைகளின் சாறு, சிறிய வெங்காயச்சாறு இவற்றைச்சேர்த்து ஒரு மண் சட்டியில் வைத்து, ஆமணக்கெண்ணை என்னும் விளக்கெண்ணையை அதில் கலக்கவேண்டும்.
எப்படி பயன்படுத்தலாம்?
சூரியப்புடம் எனும் முறையில் வெயிலில் சில நாட்கள் இந்த ஆதண்டை வேர்த்தூள் எண்ணையை வைத்து வர, எண்ணை வேர்த்தூளில் கலந்து தைலப்பதத்தில் மாறும். இந்தத் தைலத்தை, வலியுள்ள மூட்டுக்களில், நன்கு தடவி வர வேண்டும். இதன்மூலம் சில நாட்களில், மூட்டுக்களின் வீக்கம் போன்ற பாதிப்புகள் குறைந்து, மூட்டுக்கள் வலுவாகி, மூட்டு வலிகள் குணமாகிவிடும்.
Friday, 28 May 2021
விருட்ச சாஸ்திரம் கூறும், மரங்களும் அவற்றுக்கான தெய்வங்களும், அம்மரங்கள் தீர்த்து வைக்கும் நோய்களும்
துளசி
துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில்கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது.துளசிக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களைகுணமாக்கும்.
சந்தன மரம்
சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும்பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிபடுகின்றன. இவ்வதிர்வுகள் மனஅமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.
அத்திமரம்
அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்ப்பார். இம்மரத்திலிருந்துவெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மனசாந்தியைகொடுக்கக்கூடியவை. இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாக கைகூடும்.
மாமரம்
மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள்பயன்படுத்தபடுகின்றன. சுபகாரியங்கள் செய்யும் போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்கவிடப்படுகிறது.
அரசமரம்
அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.
ஆலமரம்
ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். அம்மரத்தின்விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது.
மருதாணிமரம்
மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால்கேட்ட கனவுகள் வராது.
ருத்ராஷ மரம்
ருத்ராஷ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. ருத்ராஷ கோட்டையை உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்தஅழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும்.
ஷர்ப்பகந்தி
இம்மரத்தின் அருகே பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகள் உடலில் கட்டி கொண்டால் பாம்புகள்தீண்டாது.
நெல்லி மரம்
நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை.இம்மரத்தின் கிழே தம்பதிகளை அமரவைத்து அன்னதானம் செய்தால், அன்னதானம் செய்பவருடைய சகலபாவங்களும் நீங்கும்.
வில்வமரம்
வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும்நீங்கும்.
வேப்பமரம்
வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை.இம்மரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி மங்கள் ஆடைகளை கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்துவணங்கி வர சக்தியின் அருள் கிட்டும்.
கருவேல மரம்
கருவேல மரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும் இம்மரத்தின் காய் மற்றும் வேர்களைமந்திரவாதிகள் தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகள் இம்மரத்தின்மீதுதான் குடியிருக்கும்.
காட்டுமரம்
காட்டு வேம்பு பிரம்மாவின் அம்சமாகும். ஒரு சிலர் இதை விஷ்ணும் அம்சம் என கூறுவர். இம்மரம்சாத்வீக அதிர்வுகளை வெளிபடுத்தும்.
அசோக மரம்
அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும்.
புளிய மரம்
புளியமரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும். புளிய மரத்தின் நிழல் நோய்களை உண்டாகும். புளியமரங்களில் பேய், பிசாசுகள் தங்கி இருக்கும் என்பது நம்பிக்கை.
மாதுளம் மரம்
மாதுளை மரம் லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இம்மரத்தின் கிழே விளகேற்றி தம்பதிகளால் வலம் வர தம்பதிகளிடையேஅன்னியோன்யம் ஏற்படும்.
துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில்கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது.துளசிக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களைகுணமாக்கும்.
சந்தன மரம்
சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும்பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிபடுகின்றன. இவ்வதிர்வுகள் மனஅமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.
அத்திமரம்
அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்ப்பார். இம்மரத்திலிருந்துவெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மனசாந்தியைகொடுக்கக்கூடியவை. இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாக கைகூடும்.
மாமரம்
மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள்பயன்படுத்தபடுகின்றன. சுபகாரியங்கள் செய்யும் போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்கவிடப்படுகிறது.
அரசமரம்
அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.
ஆலமரம்
ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். அம்மரத்தின்விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது.
மருதாணிமரம்
மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால்கேட்ட கனவுகள் வராது.
ருத்ராஷ மரம்
ருத்ராஷ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. ருத்ராஷ கோட்டையை உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்தஅழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும்.
ஷர்ப்பகந்தி
இம்மரத்தின் அருகே பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகள் உடலில் கட்டி கொண்டால் பாம்புகள்தீண்டாது.
நெல்லி மரம்
நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை.இம்மரத்தின் கிழே தம்பதிகளை அமரவைத்து அன்னதானம் செய்தால், அன்னதானம் செய்பவருடைய சகலபாவங்களும் நீங்கும்.
வில்வமரம்
வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும்நீங்கும்.
வேப்பமரம்
வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை.இம்மரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி மங்கள் ஆடைகளை கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்துவணங்கி வர சக்தியின் அருள் கிட்டும்.
கருவேல மரம்
கருவேல மரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும் இம்மரத்தின் காய் மற்றும் வேர்களைமந்திரவாதிகள் தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகள் இம்மரத்தின்மீதுதான் குடியிருக்கும்.
காட்டுமரம்
காட்டு வேம்பு பிரம்மாவின் அம்சமாகும். ஒரு சிலர் இதை விஷ்ணும் அம்சம் என கூறுவர். இம்மரம்சாத்வீக அதிர்வுகளை வெளிபடுத்தும்.
அசோக மரம்
அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும்.
புளிய மரம்
புளியமரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும். புளிய மரத்தின் நிழல் நோய்களை உண்டாகும். புளியமரங்களில் பேய், பிசாசுகள் தங்கி இருக்கும் என்பது நம்பிக்கை.
மாதுளம் மரம்
மாதுளை மரம் லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இம்மரத்தின் கிழே விளகேற்றி தம்பதிகளால் வலம் வர தம்பதிகளிடையேஅன்னியோன்யம் ஏற்படும்.
விருட்ச சாஸ்திரம் (சுருக்கமாக )
விருட்ச சாஸ்திரம்
(சுருக்கமாக )
உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.
அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். இனி நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்...
நட்சத்திரம்:
***********
* அஸ்வதி ஈட்டி மரம்
* பரணி நெல்லி மரம்
* கார்த்திகை அத்திமரம்
* ரோகிணி நாவல்மரம்
* மிருகசீரிடம் கருங்காலி மரம்
* திருவாதிரை செங்கருங்காலி மரம்
* புனர்பூசம் மூங்கில் மரம்
* பூசம் அரசமரம்
* ஆயில்யம் புன்னை மரம்
* மகம் ஆலமரம்
* பூரம் பலா மரம்
* உத்திரம் அலரி மரம்
* அஸ்தம் அத்தி மரம்
* சித்திரை வில்வ மரம்
* சுவாதி மருத மரம்
* விசாகம் விலா மரம்
* அனுஷம் மகிழ மரம்
* கேட்டை பராய் மரம்
* மூலம் மராமரம்
* பூராடம் வஞ்சி மரம்
* உத்திராடம் பலா மரம்
* திருவோணம் எருக்க மரம்
* அவிட்டம் வன்னி மரம்
* சதயம் கடம்பு மரம்
* பூரட்டாதி தேமமரம்
* உத்திரட்டாதி வேம்பு மரம்
* ரேவதி இலுப்பை மரம்
ராசிகள்
*******
* மேஷம் செஞ்சந்தனம் மரம்
* ரிஷபம் அத்தி மரம்
* மிதுனம் பலா மரம்
* கடகம் புரசு மரம்
* சிம்மம் குங்குமப்பூ மரம்
* கன்னி மா மரம்
* துலாம் மகிழ மரம்
* விருச்சிகம் கருங்காலி மரம்
* தனுசு அரச மரம்
* மகரம் ஈட்டி மரம்
* கும்பம் வன்னி மரம்
* மீனம் புன்னை மரம்
அவரவர் ராசி நட்சத்திரத்திற்கும் உண்டான விருட்சங்களை தன் நட்சத்திரம் வரும் நாளில் கோவிலில் அல்லது வீட்டு தோட்டங்களில் தன் கைப்பட நட்டு வணங்கி வளர்த்து வர பலவித கர்ம தோஷங்கள் குறைந்து நன்மைகள் அதிகமாகும்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் 1008 வகையான ஜீவ(உயிருள்ள) மூலிகைகள் சித்தர் நூலில் சொல்லப்பட்டுள்ளது இருப்பினும் உதாரணத்திற்காக ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒன்பது வகையான ஜீவ மூலிகைகளின் விவரங்களை மட்டும் இப்பொழுது காண்போம்.
ரவிவிருட்சம், சங்கரவிருட்சம், அலரிவேம்பு, அண்டவிருட்சம், வேங்கைக்கரணி, தேவருத்திரவிருட்சம், வெள்ளெருக்கு, செந்நாவல் மற்றும் சூரியபாணம் போன்ற மூலிகைகள் சூரியபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
வெண்வேம்பு, சுந்தரிகற்பம், நாதவிருட்சம், வெள்ளவுரி, துர்க்கைக்கரணி, வெண்நாவல், வெண்வேம்பு, வெண்புங்கன் மற்றும் வெண்முருக்கு போன்ற மூலிகைகள் சந்திரபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
சத்தியகரணை, வேல்விருட்சம், கஸ்தூரிவிருட்சம், செவ்வவுரி, ஞானக்கரணி, மகாவில்வம், செம்மாவிருட்சம், கருங்காலிவிருட்சம் மற்றும் செண்பகவிருட்சம் போன்ற மூலிகைகள் செவ்வாய் பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
நாராயணவிருட்சம், கோதண்டவிருட்சம், கருநெல்லி, மறைமூலி, பூதக்கரணி, கருநாயுருவி, கருந்துளசி, கருணைவிருட்சம் மற்றும் சங்குவிருட்சம் போன்ற மூலிகைகள் புதபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
பொற்சீந்தில், கயல்விருட்சம், வேதச்சாரளை, உண்ணாவிருட்சம், சித்தர்கற்பம், திருநீற்றுப்பத்
திரி, அரசவிருட்சம், முல்லைவிருட்சம் மற்றும் வித்யாவிருட்சம் போன்ற மூலிகைகள் குருபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
சக்திவிருட்சம், மோகினிவிருட்சம், காமவிருட்சம், போகவிருட்சம், ஆசனவிருட்சம், அத்திவிருட்சம், சந்தனவிருட்சம், வெண்டாமரைமூலி மற்றும் காமாட்சிவிருட்சம் போன்ற மூலிகைகள் சுக்கிரபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
நீலவேம்பு, அஞ்சனைவிருட்சம், கரும்புங்கன், இரும்புக்கொடி, அரனார்விருட்சம், வன்னிவிருட்சம், மகிழம்விருட்சம், கருங்குவளை விருட்சம் மற்றும் மந்தாரை விருட்சம் போன்ற மூலிகைகள் சனி பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
கறுஞ்சீந்தில், கார்கோடகவிருட்சம், கல்லரவுவிருட்சம், பணிக்கொடி, மகாவல்லாரை, மருதவிருட்சம், கடம்புவிருட்சம், அறுகுவிருட்சம் மற்றும் மோட்சவிருட்சம் போன்ற மூலிகைகள் ராகுபவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
பிரம்மவிருட்சம், ஞானிவிருட்சம், கோதைவிருட்சம், எழில்விளம்பிவிருட்சம், மதியூக்கி, தேவதர்ப்பை, பஞ்சாட்சரமூலி, யோகவிருட்சம் மற்றும் செம்பணி விருட்சம் போன்ற மூலிகைகள் கேது பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
மிளகில் இருக்கு சூட்சுமம்
*மிளகில் இருக்கு சூட்சுமம்
* ஒரே ஒரு மிளகு போதும்...
உண்ணும் உணவு சுவையாக.
* இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும்.
* மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசு முசுவென்று வளரும்.
* நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.
* ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.
* ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண, மூலநோய் வந்த சுவடின்றி தானே மறையும்.
* ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசி எடுக்கும். தொண்டைப்புண்ணும் தொண்டைக்கட்டும் விட்டுப் போகும்.
* எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் வாந்திகூட எட்டி நிற்கும்.
* ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) துரத்தியடிக்கும்.
பத்து மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் பயமேயின்றி விருந்துண்ணலாம்.
🌷🌷
கொரோனாவும் துளசியும்
வீட்டில் வேப்பிலை கட்டி கிருமி வராமல் தடுப்பர். அது போல தான் கொரோனாவும்.ஒரு சிலர் காய்ச்சல் வந்து மறுநாள் சரியானால் கொரோனாவாக இருக்காது என மற்றவர்களோடு கலந்து பழகி பரப்பி விடுகின்றனர். இப்போதெல்லாம் கை கொடுப்பதால் கையை தொடுவதால் மட்டுமே கொரோனா பரவுவதில்லை. பாதிக்கப்பட்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும் எளிதில் பரவுகிறது. எங்கேயும் மாஸ்க் அணியாமல் செல்லக்கூடாது. வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் எல்லோரும் வீட்டுக்குள்ளும் மாஸ்க் அணிய வேண்டும். கதவை பூட்டி வைக்கக் கூடாது. சுத்தமான காற்று அவசியம். இயற்கையான காற்று நோயை குணப்படுத்தும்.
அலோபதி மருந்துகளுடன் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் குடித்தால் கிருமி பரவ விடாமல் தடுக்கும். பசி, தாகம், சுவையின்மை, வாசனையின்மை, நீர்ச்சத்து பிரச்னைகளை குணப் படுத்தும்.நிலவேம்பு குடிநீர் தினமும் ஒரு வேளை வீதம் 120 மில்லி ஒரு வாரம் சாப்பிடலாம். மாதந்தோறும் ஒரு வாரம் சாப்பிடலாம். வியாபாரிகள், வெளியில் மக்களோடு பழகுகிறவர்களாக இருந்தால் இரு வேளை சாப்பிடலாம். சளி இருந்தால் 3 நாட்கள் கபசுர குடிநீர் 60 மில்லி குடித்தால் போதும். நீர்ச்சத்து குறைவதை தடுக்க வெந்நீர் நிறைய குடிக்க வேண்டும். பழச்சாறு குடிக்கலாம். தொண்டை கரகரப்பாக இருந்தால் பழச்சாறுடன் மிளகுத்துாள் கலந்து கொள்ளலாம்.
மூக்கில் வாசனை வராதவர்கள் நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும். சிறிது ஓமம், கிராம்பு தனித்தனியாக வறுத்து காட்டன் துணியில் கொட்டை பாக்கு அளவு இரண்டையும் ஒன்றாக கட்டி அவ்வப்போது முகர்ந்து பார்க்க வேண்டும். இதன் மூலம் வாசனை நுகரும் தன்மை சீக்கிரமே திரும்பும். அதிமதுரம், ஆடாதோடை, மஞ்சள், இஞ்சி, சிற்றரத்தை, கிராம்பு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள். இவற்றை ஒன்றிரண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து சாப்பிடலாம். வேப்பம்பூ ரசம், நெல்லிக்காய் துவையல், மிளகு குழம்பும் அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.
தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கிய பின் அதில் கொஞ்சம் துளசி இலைகளை போட்டு மூடி வைத்து வெதுவெதுப்பாக குடித்து வரலாம். துாதுவளை இலைகளை பறித்து ரசம், சூப் போல செய்து சாப்பிடலாம். இதனால் தொண்டையில் வைரஸ் கிருமிகளின் வளர்ச்சியை ஆரம்பத்திலேயே தடுக்கலாம்.
Thursday, 27 May 2021
இஞ்சி சாறில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்களும்.:
இஞ்சி சாறில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்களும்.:
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும்.
இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.
இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.
இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுக்கும். இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.
இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்கவேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும். அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.
Wednesday, 26 May 2021
புரோட்டின், இரும்புச் சத்து அதிகம்: இந்தத் தருணத்தில் பச்சைப் பயறு ரொம்ப முக்கியம்
Health benefits of green gram detoxifies your body: பச்சைப் பயறு பொட்டாசியத்தைக் கொண்டிருப்பதால், நிச்சயமாக, உங்கள் இரத்த அழுத்த அளவை சீராக்குகிறது. ஒரு கப் சமைத்த பச்சை பயறில் 537 கிராம் பொட்டாசியம் உள்ளது
By WebDesk
May 26, 2021 3:39:08 pm
நம்முடைய பருப்பு வகைகளில் ஒன்றான பச்சைப்பயறில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. பச்சைப் பயறு முங் பீன்ஸ் என்றும் அழைக்கப்படும். பச்சை பயறு அளவில் சிறியது மற்றும் வட்ட வடிவத்தில் இருக்கும். இதனை ஒரு பருப்பு வகையாக உணவில் பயன்படுத்தலாம் அல்லது முளைக்கட்டிய பயிராகவும் உட்கொள்ளலாம். எப்படி சாப்பிட்டாலும், இந்த பச்சைப் பயறு நமக்கு அதிக ஊட்டச்சத்துக்களையும், நார்ச்சத்துக்களையும் அளிக்கிறது. இந்த பச்சைப் பயறின் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
புரதச்சத்தின் களஞ்சியம்
பச்சை பயறில் ஏராளமான புரதச்சத்து உள்ளது. இதனால் பச்சைப் பயறை புரதச்சத்தின் களஞ்சியம் என்றே கூறலாம். ஒரு கப் பச்சை பச்சை சுமார் 14 கிராம் புரதத்தைக் கொண்டுள்ளது. இதனால் கோழி இறைச்சி அல்லது மாமிசத்துடன் ஒப்பிடும்போது இது ஒரு சிறந்த மாற்று உணவாகும். அசைவ உணவை விரும்பாதவர்களுக்கு பச்சைப் பயறு புரதச்சத்திற்கான வாய்பாக உள்ளது. பச்சை பயறில் உள்ள அதிக புரதச்சத்தின் காரணமாக இது எடை குறைப்பிற்கு உதவுகிறது. மேலும் இது, அதிக எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், மெலிந்த தசைகளை உருவாக்க உதவுகிறது. ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்யாமலே, இந்த பச்சைப் பயறை உட்கொள்வதன் மூலம் கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பெறலாம்.
இரும்புச்சத்து
பச்சை பயறு இரும்புச்சத்தின் நல்ல மூலமாகும். உங்கள் உணவில் போதுமான இரும்புச்சத்து கிடைக்காதது பல சுகாதார குறைபாடுகளுக்கு வழி வகுக்குகிறது. இந்த இரும்புச்சத்து தேவையை பூர்த்தி செய்ய உங்கள் உணவில் பச்சைப் பயறை சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் பச்சை கிராம் 2.83 மில்லிகிராம் இரும்புச்சத்தைக் கொண்டிருக்கிறது. இது சிவப்பு அவுன்ஸ் வான்கோழியில் கிடைக்கும் இரும்புச்சத்தை விட அதிகமாக இருக்கும். இதில் வைட்டமின் சியும் இருப்பதால் உங்கள் உடலில் இரும்பு உறிஞ்சுதலை பச்சைப் பயறு அதிகரிக்கும்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பச்சை பயறு உதவுகிறது. பச்சைப் பயறு சோடியத்தின் விளைவுகளை எதிர்க்கிறது. இதனால் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பொட்டாசியம் நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியம். பச்சைப் பயறு பொட்டாசியத்தைக் கொண்டிருப்பதால், நிச்சயமாக, உங்கள் இரத்த அழுத்த அளவை சீராக்குகிறது. ஒரு கப் சமைத்த பச்சை பயறில் 537 கிராம் பொட்டாசியம் உள்ளது, இது உங்கள் அன்றாட தேவையில் 10 சதவீதத்தை கவனித்துக்கொள்கிறது.
உடலில் நச்சு நீக்கம்
உங்கள் உடலிலுள்ள நச்சுக்களை நீக்க பச்சை பயறு உகந்தது. பச்சைப் பயறு சிலிக்காவைக் கொண்டுள்ளதால் தோல்கள் இணைப்பு திசுக்களை மீண்டும் உருவாக்குகிறது. இது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை திறம்பட நீக்குகிறது, இது உங்கள் இரத்த ஓட்டத்திற்குள் உயிரற்ற மற்றும் மந்தமான நிறத்தை நீக்க வழிவகுக்கும்.
எடை குறைப்பு
பச்சை பயறில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதேநேரம் கலோரிகள் குறைவாக உள்ளது. இதனால் உடல் எடையை குறைப்பதற்கு பச்சைப் பயறு உதவுகிறது. நீங்கள் கலோரிகளைக் குறைக்க விரும்பினால், பச்சை பயறு உங்களுக்கு உதவும். ஒரு கப் பச்சை பயறில் 15 கிராம் ஃபைபர் உள்ளது. எனவே நீங்கள் வேறு உணவைத் தேட மாட்டீர்கள். உங்கள் உணவில் நார்ச்சத்தை சேர்க்கும்போது, நீங்கள் தானாகவே குறைந்த கலோரிகளை சாப்பிடுவீர்கள். இது உடல் எடையை குறைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
வயதான அறிகுறிகளைத் தடுக்கிறது
பச்சைப் பயறில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளது. அவை டி.என்.ஏ அழிக்கப்படுவதைத் தடுக்கின்றன மற்றும் உங்கள் சருமத்தின் செல்களை வயதாகாமல் பாதுகாக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது உங்கள் தோலில் வயதான அறிகுறிகளை நிறுத்தி, உங்களுக்கு பிரகாசமான மற்றும் அழகான நிறத்தை அளிக்கிறது.
ஆலுவேரா எனப்படும் கற்றாழையில் நம்ப முடியாத ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது.
ஆலுவேரா எனப்படும் கற்றாழையில் நம்ப முடியாத ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. கற்றாழை பல்வேறு இடங்களில் சுலபமாக கிடைக்கிறது. வெயில் காலத்தை சமாளிக்க இயற்கையாகவே படைக்கப்பட்டது இந்த கற்றாழை. இது சரும நோய்களுக்கும், முடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. இந்த கற்றாழையில் இருந்து சாறு மற்றும் ஜெல் பெறப்படுகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இந்த கற்றாழை எகிப்து நாட்டில் 16 நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளது. கற்றாழை இந்தியா, எகிப்து மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகள் அதை மகிமையை உணர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கற்றாழை இந்தியாவில் பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறது. தமிழில் கற்றாழை, இந்தியில் ஹிரித்குமாரி, தெலுங்கில் கலாபண்டா, மலையாளத்தில் குமாரி, கன்னடத்தில் லோலிசரா, மராத்தியில் கோரோபிடா, பெங்காளியில் கொர்டாகுமாரி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
கற்றாழையின் பயன்கள் (Aloe Vera Benefits)
தோற்றத்தில் மட்டுமல்ல மருத்துவத்திலும் கற்றாழையின் செயல்பாடுகள் அழகுதான். அதன் பயன்கள் என்னென்ன என்பதை தற்போது காண்போம்.
தோலுக்கு கிடைக்கும் நன்மைகள் (Aloe Vera Benefits for Skin)வயதான தோற்றத்தை கற்றாழை மூலம் எப்படி தடுக்கலாம்?
முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் தான் வயதான தோற்றத்தை கொடுக்கும். இந்த வயதான தோற்றத்தை தடுப்பதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. வயதான தோற்றத்தை தடுக்க கற்றாழையை கொண்டு தோலை பாதுகாக்கும் கீரிம் எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
1 தேக்கரண்டி ஆலிவ் வேரா ஜெல்
அரை தேக்கரண்டி ஆலிவ் ஆயில்
1 தேக்கரண்டி ஓட்ஸ்
தயாரிக்கும் முறை
மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு அதனை பேஸ்ட் மாதிரி பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த கலவையை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். பின்னர், முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
முகத்தை கழுவிய பின்னர் முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறைந்து இளமையும் காணப்படுவதை கண்டு நீங்களே நெகிழ்ச்சியடைவீர்கள். கற்றாழை முகத்தை பொலிவை தருவதோடு இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை புத்துயிர் பெற செய்கிறது. கற்றாழையை தொடர்ந்து பயன்படுத்துவதால் தோல் மிருதுவாக இருக்கும் என்பதை ஆராய்ச்சிகள் மூலமும் நிருபித்துள்ளனர்.
மிருவதான சருமத்தை பெற
கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால் தோல் மிருதுவனதாக இருக்கும். முகப்பரு மற்றும் எண்ணெய் வழியும் முகத்தை தடுக்கவும் இந்த கற்றாழை பயன்படுகிறது.
பயன்படுத்தும் முறை
காற்றாழையில் இருந்து நேரடியாக அதன் ஜெல்லை எடுத்து முகத்தில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் கடைகளில் விற்கும் கற்றாழை ஜெல்லையும் வாங்கி பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
கற்றாழை மட்டுமே போதுமானது.
தயாரிக்கும் முறை
கற்றாழை வெட்டி அதில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதை பயன்படுத்துவதற்கு முன்னர் ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை போட்டு பிரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும். பின்னர் அதை முகத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
இந்த கற்றாழை ஜெல்லை முகத்தில் பயன்படுத்துவதால் முகம் எப்போதும் ஈரப்பதத்துடன் காணப்படும். இதனால் வறண்ட சருமத்திலிருந்து விடுபடலாம்.
முகப்பருவை தடுத்து அழகை மெருகேற்ற
கற்றாழையின் ஜெல் உங்களது முகத் தோலில் படிந்துள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவுறச் செய்யும். மேலும், முகப்பருக்களை கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை கொண்டுள்ளது.
பயன்படுத்தும் முறை
கற்றாழை மற்றும் சிறு துளி எலுமிச்சை சாறு கலந்த கலவையினை பயன்படுத்தினால் சரும நோய்கள் நீங்கும். தழும்புகளை நீக்கும் குணங்களும் இதில் உள்ளது. எலுமிச்சை சாறு மற்றும் கற்றாழை கலந்த கலவையானது முகப்பருக்களை வேருடன் அழிக்கும் திறன்களையும் கொண்டுள்ளது.
தேவையான பொருட்கள்1 தேக்கரண்டி கற்றாழை ஜெல்2 முதல் 3 துளி எலுமிச்சை சாறுதயாரிக்கும் முறைகற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறினை நன்றாக கலக்க வேண்டும்.அந்தக் கலவையினை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் ஒரே இரவில் நல்ல பலனைக் காண முடியும்.கிடைக்கும் பலன்கள்
கற்றாழையின் ஜெல்லானது அதிகப்படியான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டுள்ளதால் சருமத் தொடர்பான பிரச்சனைகளை எளிதில் கட்டுப்படுத்துகிறது. முகப்பருக்களை வேருடன் அளித்து பொலிவுறச் செய்யும் தன்மை இதில் உள்ளது. உயிரிழந்த செல்களை நிக்கி புதிய செல்களை புத்துயிர் பெற செய்கிறது.
விளைவுகள்
சூரியனிள் வெப்பத்திற்கு ஏற்றவாறு எலுமிச்சை சாறினை குறைத்துக் கொள்வது நல்லது
ஏலக்காய்க்கு எமனும் அஞ்சுவான் !* *கிராம்புக்கு எக்கிருமியனாலும் அழியும் !"*
*"ஏலக்காய்க்கு எமனும் அஞ்சுவான் !*
*கிராம்புக்கு எக்கிருமியனாலும் அழியும் !"*
*இதுவே தேவ ரகசியம் தேவர்களின் அமிர்தம் அதில் முக்கிய பொருட்கள் கிராம்பும், ஏலக்காய்யும் தான் !*
*ஆகவே எம் முற்பிறவி தகப்பன் போகர் மகாசித்தர் எமக்கு உணர்த்தியதை கூறுகிறேன் , தேவ ரகசியங்களை அறிவித்து எம்தந்தை தம் சக்தியை தான் இழந்தார் !*
*நானோ சாதாரண மானிடப்பிறவி என் உயிர் தான் போகும் ! பரவாயில்லை ! எம் தந்தை போகர் அதற்கு விடமாட்டார் என்ற அன்பினால் கூறுகிறேன் !*
*நீங்கள் குடிக்கும் குடிநீரில் (3லிட்டர் குடிநீரில்) ஏலக்காய் 1 , கிராம்பு 1 சேர்த்து வெந்நீர் ஆக்கி மிதமான சூட்டில் தினமும் குடியுங்கள் !*
*இதைவிட சிறந்த மருந்து உலகில் வேறெவுமில்லை எக்கிருமி ஆனாலும்
👍👍😎..
Tuesday, 25 May 2021
இஸ்ரேல் மக்கள்..
இஸ்ரேல் மக்கள் ஏன் அதி புத்திசாலிகளாக இருக்கிறார்கள்..? உலகின் முக்கிய கண்டுபிடிப்புகள் 90 சதவீதம் ஏன் அவர்களால் மட்டும் சாத்தியம் ஆனது..?உலகின் அதிக பட்டதாரிகள் கொண்ட நாடாக இருக்க காரணம் என்ன..?
தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஒரு மேதாவியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு கர்ப்பிணி முதலிலிருந்தே தன்னை தயார் செய்து கொள்ளுகிறாள். அவள் எப்போதும் பாடிக்கொண்டும் பியானோ வாசித்துக் கொண்டும் இருப்பாள். கணவனுடன் சேர்ந்து சிக்கலான கணித வினாக்களை விடுவிக்க முயற்சி செய்வாள். தான் போகுமிடமெல்லாம் கணக்குப் புத்தகத்தை எடுத்துச் செல்வாள்.
கர்ப்பிணியின் உணவும் விசேஷமானது: பாலில் பாதாம்பருப்பு முதலான கொட்டை வகைகளையும், பேரீச்சையையும் கலந்து உண்கிறாள். மதிய உணவுக்கு தலை துண்டிக்கப்பட்ட மீன், பிரெட், பாதாம்பருப்பும், மற்ற கொட்டை வகைளும் (nuts) சேர்த்த பச்சைக் காய்கறிக் கலவை (salads) ஆகியவற்றை உண்ணுகிறாள்.
உணவு உண்ணுவதற்கு முன் பழங்கள் சாப்பிடுகிறார்கள். முதலில் பிரெட், சாதம் போன்றவற்றை சாப்பிட்டால் தூக்கம் வரும்; அதனால் பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள் சரிவர புரியாது என்கிறார்கள்.
முதலில் பழங்கள், பாதாம்பருப்பு, பின் மீன் எண்ணெய் என்ற வரிசையில்தான் குழந்தைகள் உணவு உட்கொள்கிறார்கள்.
இசைக்கருவி வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் IQ (intelligence quotient) வை அதிகரித்து, அவர்களை மேதைகள் ஆக்கும். இசை அதிர்வுகள் மூளையை தூண்டிவிட்டு அதன் திறன்பாட்டை அதிகரிப்பதால்தான் யூதர்களிடையே மேதைகள் அதிகம் என்கிறார் ஒரு யூத விஞ்ஞானி.
யூதக்குழந்தைகள் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகிய உடல், மனம் சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவ்விரண்டு விளையாட்டுக்களும் மனதை ஒருமுகப்படுத்தி துல்லியமான, நுட்பமான முடிவு எடுக்க உதவுகின்றன.
Dr. Stephen Carr Leon – எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு
Sunday, 23 May 2021
கொத்தமல்லி தண்ணீர் தினமும் ஏன் பருக வேண்டும் தெரியுமா?
Coriander Water : கொரோனா காலகட்டத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொத்தமல்லி நீர் தரும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம் தற்போதைய கொரோனா காலகட்டம் நமது உடல் பாதுகாப்பு மிக அவசியம் என்பதை நமக்கு புரிய வைத்துள்ளது. இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளுக்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும். உடல் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதன் மூலம் எளிதில் கொரோனவை விரட்டலாம். அந்த வகையில் உடல் நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் 6 வகை திரவ உணவுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
ஆயுஷ் அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட கொரோனா தொற்று வழிகாட்டுதலின் படி, தானியா சேர்த்த வெதுவெதுப்பான நீர் ஒரு ஆரோக்கியமான உணவு முறையாகும். லைஃப் பயிற்சியாளரும் பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான லூக் கோடின்ஹோ கூட இது இந்தியர்களின் மிகவும் சத்தான மசாலாப் பொருட்களில் இதுவும் ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ குணங்கள்நிறைந்த தனியாவில், மனித உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவசியமான வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு நீங்கள் ஒரே ஒரு தீர்வைத் தேடுகிறீர்கள் என்றால், அது தனியாவாக இருக்கலாம. தனியா சேர்த்து தயாரித்த நீரின் நன்மைகள் மற்றும் அதை நீங்கள் எவ்வாறு வீட்டில் தயாரிக்கலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
தனியா நீர் செய்வது எப்படி
ஒரு வாணலியை எடுத்து, 1 டீஸ்பூன் கொத்தமல்லி 2 கப் தண்ணீரில் 5 நிமிடங்கள் வேகவைக்கவும். அடுத்து அதனை குளிர்வித்து, நன்கு தனியாவை கசக்கி, பிழிந்துவிட்டு அந்த நீரை குடிக்கவும். இது அதிக நன்மைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வெப்பத்தை தனிக்க உதவுகிறது
அதிகப்படியான காரமான உணவை உட்கொள்வதால் உங்கள் வயிற்றில் அதிக எடை அல்லது வெப்பம் இருக்க வாய்ப்புள்ளது. அப்போது நீங்கள் கொத்தமல்லி தண்ணீரை ஒரு நாளைக்கு 3-5 முறை குடிக்கவும், அதன் குளிரூட்டும் பண்புகள் உடனடியாக உடல் உடல் சூட்டை தனிக்கும்.
செரிமானத்தில் பயனுள்ளதாக இருக்கிறது
இது பெரும்பாலும் எடை குறைப்புக்கு நல்லது என்று கண்டறியப்பட்டுள்து. கொத்தமல்லி விதைகளில் செரிமான பண்புகள் உள்ளன, அவை செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன மற்றும் எடை குறைப்புக்கு பயணத்தில் பயனுள்ளதாக இருக்கும்.
சிறுநீரகத்தை சுத்தப்படுத்துகிறது.
நீங்கள் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்படுகிறீர்கள் அல்லது உங்கள் சிறுநீரகங்கள் பலவீனமாக இருந்தால், தினமும் கொத்தமல்லி தண்ணீரைக் குடிக்கத் தொடங்குங்கள், ஏனெனில் இது உடலில் நீர் தக்கவைப்பதை குறைக்க வழிவகுக்கிறது. மேலும் அனைத்து வகையான நச்சுகள் மற்றும் நுண்ணுயிரிகளையும் வெளியேற்ற அனுமதிக்கிறது.
Saturday, 22 May 2021
உயிரியல் கடிகாரம்
இதை செய்தால் *100 ஆண்டுகள்* அல்ல
200 ஆண்டுகள் முழு *ஆரோக்கியமாக வாழலாம்*
மருந்து மாத்திரை வேண்டாம்
தீவிர உடற்பயிற்சி வேண்டாம்
தீவிர யோகாசனம் வேண்டாம்
அதிக உணவு திங்க வேண்டாம்
அப்படி என்றால் என்ன தான் செய்ய வேண்டும்
நம் உடம்பு இயற்கையாகவே நேரம் தவறாமல் சில வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. அதற்கு நாம் ஒத்துழைத்தால் போதும்.
கடவுளின் மர்மம் நமது உள்ளுறுப்புகள் என்ன செய்கிறது
எப்போது செய்கிறது
எப்படி செய்கிறது
எது எது செய்கிறது என்பது தெரியாமலே இதுவரை இருந்து வந்தோம்.
அந்த மர்மம் இன்று உடைக்கப்படுகிறது.
இது தெரிந்த பின்னும் இதை செய்யாமல் இருந்தால் அதற்கு முழுப் பொறுப்பு அதை செய்யாதவர்கள் மட்டுமே.
உண்மை இதுதான்
கால கடிகாரம் ஒன்று இயங்குவதுபோல
*உயிரியல் கடிகாரம்*
ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது.
*பயாலஜிக்கல் கிளாக்* *(BIOLOGICAL CLOCK)* அதனடிப்படையில் முதல் வேலையாக
1. அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை
*நுரையீரலுக்கான* நேரம் அது தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது இறந்த செல்களை வெளியேற்றுகிறது தன்னைப் பாதுகாத்துக் கொள்ள துடிக்கிறது இதற்கு ஒத்துழைக்க நாம் இந்த நேரத்தில் எழுந்து பயிற்சி செய்தால் முழு ஆரோக்கியம் பெறலாம்.
2. காலை 5 மணி முதல் 7 மணி வரை *பெருங்குடலின் நேரம்* உணவுக் கழிவுகள் வெளியேறும் நேரம் இந்த நேரத்தில் தூங்கி கொண்டிருக்காமல் அதை வெளியேற்ற நாமும் முயற்சிக்க வேண்டும்.
3. காலை 7 மணி முதல் 9 மணி வரை *வயிறு சம்பந்தமான நேரம்*
உணவை ஜீரணம் செய்ய அமிலங்களும் நொதிகளும் சுரக்கும் நேரம் இந்த நேரத்தில் கண்டிப்பாக காலை உணவு சாப்பிட்டு ஆகவேண்டும். இல்லை என்றால் அமிலமும் நொதிகளும் அசிடிட்டி ஆக மாறி நோயை ஏற்படுத்தும்
4. காலை 9 மணி முதல் 11 மணி வரை *மண்ணீரல் - நேரம்* காலை உணவுகளை ஜீரணம் செய்து ரத்த சிவப்பு அணுக்களுக்கு அனுப்பும் நேரம்
5. முற்பகல் 11 மணி முதல் 1 மணி வரை
*இதயத்துக்கான* நேரம் உடலில் நீர் சத்துக்கள் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதிக மன அழுத்தம் கோபம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் நகைச்சுவைகள் கேட்டு சிரிக்க வேண்டும்.
6. பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை
*மதிய உணவு நேரம்* இந்த நேரத்தில் கண்டிப்பாக சாப்பிட்டாக வேண்டும். சாப்பிடும் போது மெதுவாக நன்றாக மென்று அரைத்து சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் தூங்கக்கூடாது.
7. பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை *சிறுநீரகத்திற்கான நேரம்* இந்த நேரத்தில் சிறுநீரகத்தில் கழிவுகள் தேங்கக்கூடாது எப்படியாவது அதை வெளியேற்ற வேண்டும்.
8. 5 மணி முதல் 7 மணி வரை *கழிவுகள் வெளியேற்றும் நேரம்* உடலில் உள்ள அத்தனை நீர்க் கழிவுகள் வெளியேற வேண்டும் அது வியர்வை வழியாகவும் சிறுநீர் வழியாக வெளியேற்றி ஆகவேண்டும் இந்த நேரத்தில் நடைபயணம் அதிக வேலை செய்வது உடற்பயிற்சிகள் போன்றவை செய்யலாம்
9. இரவு 7 மணி முதல் 9 மணி வரை இதயத்திற்கான நேரம் இரவு உணவை ஏழு மணிக்கு முன்பு சாப்பிட்டாக வேண்டும். இந்த நேரத்தில் இதயத்திற்கு மேலே பாதுகாப்பாக இருக்கும் *பெரிகார்டியம்* என்னும் மேற்பகுதி தன்னிடம் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் நேரம்
10. இரவு 9 மணி முதல் 11 மணி வரை *பித்தப்பை நேரம்* பித்த நீர் சுரந்து செரிமானம் நடைபெறும் நேரம்.
11. இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை *லிவர் நேரம்* இந்த நேரத்தில் கண்டிப்பாக ஆழ்ந்து உறங்க வேண்டும். இந்த நேரத்தில் உறங்காமல் வேலை செய்தால் மொபைல் பார்த்துக் கொண்டே இருந்தால் ஃபேட்டி லிவர், ஹார்ட் அட்டாக், சோரியாசிஸ், ஹார்மோன் இம்பேலன்ஸ் போன்ற நோய்கள் வர காரணமாக அமையும்.
ஆகவே அனைவரும் இந்த உயிரியல் கடிகாரத்தை பின்பற்றினால் நோயற்ற வாழ்வு வாழலாம்.
அனைவரும் பின்பற்றுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்.
ஏலக்காய்க்கு எமனும் அஞ்சுவான் !* *கிராம்புக்கு எக்கிருமியனாலும் அழியும் !"*
*"ஏலக்காய்க்கு எமனும் அஞ்சுவான் !*
*கிராம்புக்கு எக்கிருமியனாலும் அழியும் !"*
*இதுவே தேவ ரகசியம் தேவர்களின் அமிர்தம் அதில் முக்கிய பொருட்கள் கிராம்பும், ஏலக்காய்யும் தான் !*
*ஆகவே எம் முற்பிறவி தகப்பன் போகர் மகாசித்தர் எமக்கு உணர்த்தியதை கூறுகிறேன் , தேவ ரகசியங்களை அறிவித்து எம்தந்தை தம் சக்தியை தான் இழந்தார் !*
*நானோ சாதாரண மானிடப்பிறவி என் உயிர் தான் போகும் ! பரவாயில்லை ! எம் தந்தை போகர் அதற்கு விடமாட்டார் என்ற அன்பினால் கூறுகிறேன் !*
*நீங்கள் குடிக்கும் குடிநீரில் (3லிட்டர் குடிநீரில்) ஏலக்காய் 1 , கிராம்பு 1 சேர்த்து வெந்நீர் ஆக்கி மிதமான சூட்டில் தினமும் குடியுங்கள் !*
*இதைவிட சிறந்த மருந்து உலகில் வேறெவுமில்லை எக்கிருமி ஆனாலும் !*
Friday, 21 May 2021
காலம் முழுக்க நாம் தேனீக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கோம்; ஏன்னா?' - தேனீக்கள் தின பகிர்வு 20 ஆம் தேதி மே மாதம்..
உலகில் தேனீக்கள் இல்லாமல் போனால் உயிரினங்களின் சூழலியல் சுழற்சி கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக மனித குலமே அழிய வாய்ப்புண்டு என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அப்படிப்பட்ட தேனீக்களின் மகத்துவத்தைப் உலகரியச் செய்யும் விதமாகவும் ஆண்டுதோறும் மே 20-ம் தேதி உலக தேனீக்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மனிதனுக்கு எல்லா வகையிலும் முன்னோடியாக இருப்பது தேனீக்கள்தான் என்றால் நம்ப முடிகிறதா.. நம்பமுடியவில்லை என்றாலும் அதான் நிஜம்.. அந்த நிஜத்தின் தொகுப்பு இதோ...
``சதுரமான ஓர் அறையைவிட, அறுங்கோண வடிவமுள்ள அறையில்தான் அதிக இடவசதியிருக்கும்கறதால, அந்த வகையான அறைகளைப் பல விஷயங்களுக்கு மனுஷன் பயன்படுத்துறான். இதை அவனுக்குச் சொன்னதே, தேனீக்கள் தான். தேன்கூட்டைக் கவனிச்சுப் பார்த்தீங்கன்னா அறுங்கோண வடிவ அறைகளா இருக்கும். அதுலதான் தேனை சேமிச்சு வைக்குது தேனீக்கள். நாகரிகத்துக்கு நாமதான் சொந்தக் காரங்கன்னு சொல்லிகிட்டு அடிதடி, ஜாதி, மத சண்டை, வன்முறையை வளர்த்துகிட்டிருக்கோம். இன்னிக்கும் கூட்டு வாழ்க்கை முறையைச் சரியா கடைப்பிடிக்குறது பூச்சிகள் மட்டும்தான். எறும்பு, கறையான், தேனீ, குளவினு கூட்டம் கூட்டமா உண்டு, உறங்கிக் காலத்தைக் கழிக்குதுங்க அந்தப் பூச்சிகளெல்லாம்.
தேனீக்களோட வாழ்க்கைமுறையைப் பார்த்தா, `நாங்கள்லாம் ஆறறிவு படைச்சவங்கப்பா...'னு சொல்லிக்கிறதுக்கே நாம யோசிப்போம். ஒரு கூட்டிலிருக்குற ஆயிரக்கணக்கான தேனீக்கள்ல ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு குழுவை அமைச்சு, மனுஷனைவிட அபாரமா செயல்படுதுங்க தேனீக்கள். கூட்டிலிருந்து எந்தத் திசையில, எவ்வளவு தூரத்துல, எந்தப் பூவுல தேன் இருக்குதுங்கிறதைப் பார்த்துட்டு வந்து, அதை நடன மொழியில சொல்றதுக்காகத் தகவல் தொடர்புக்குழு.
தேனீக்கள்..தேனீக்கள்..
சொல்ற தகவலைப் போய்ப் புரிஞ்சுகிட்டு, அதுங்க சொன்ன திசையில போயி, தேனை எடுத்துட்டு வர்ற பொருள் சேகரிக்கும் குழு; தேனை எடுக்கப் போய், குறிப்பிட்ட பூவுல உக்கார்ந்ததுமே அதுல இருகுற ஏதாவது ஒரு விஷயத்தால (ரசாயனங்கள் உள்ளிட்ட) உடம்பு சரியில்லாம போயிடுற தேனீக்களுக்கு வைத்தியம் பார்க்குற மருத்துவக்குழு; மருத்துவத்துக்குப் பயனில்லாம இறந்துபோற தேனீக்களைக் கூட்டிலிருந்து அப்புறப்படுத்துற துப்புரவுக்குழு; இளம் தேனீக்களைப் பராமரிக்குற தாதிக்கள் குழு... இப்படியொரு ஒழுங்கோட தேனீக்கள் வாழுற வாழ்க்கையைப் பார்த்தா, நாமெல்லாம் சும்மா..?'னு வாய்விட்டு உங்களையும் அறியாம கூப்பாடு போட்டுடுவீங்க!
ஒரு கூட்டுல ஆயிரக்கணக்கான தேனீக்கள் இருந்தாலும், ராணித்தேனீ, ஒரே ஒரு ஆண் தேனீயுடன் ஒரே ஒருமுறை மட்டுமே கூடி, வாழ்நாள் முழுவதும் முட்டையிடும். ராணியுடன் கூடின அந்த ஆண் தேனீ, உறவு முடிஞ்சதும் இறந்துடும். அதுக்குப் பிறகு அந்த ராணித் தேனீ வேறெந்த ராஜாவோடவுடம் கூடாது. இப்படியொரு ஒழுங்கு, அதுங்களோட வாழ்க்கையில இருக்குறதைக் கேட்டா பிரமிப்பா இருக்கு.
இப்படியெல்லாம் கட்டுப்பாட்டோட வாழுற அந்தத் தேனீக் கூட்டம், முழுக்க முழுக்க வாழுறது தனக்காக இல்லீங்க... ஊருக்காக, உலகத்துக்காக. பல்வேறு ஜீவராசிகளுக்காக அதுங்க வாழுது. அதாவது அயல் மரகந்தச்சேர்க்கை மூலமா தாவர இனங்களை வாழ வைக்குது. ஆடு, மாடு, மனுசன், புழு, பூச்சினு பல ஜீவராசிகளுக்கும் உணவு கிடைக்கிறதே இந்தத் தாவரங்களாலதானே!
அதை விவசாயம்ங்கிற பேருல நாம, ஒரு தொழிலாக்கி, காலகாலமா செய்துட்டிருக்கோம். உலகத்துல இருக்கற அதிஉன்னதமான புனிதத் தொழில்ல, முதல இருக்குற ஒரு தொழில்னா... தேனீக்கள் செய்ற மகரந்தச்சேர்க்கையைச் சொல்லலாம். கிட்டத்தட்ட நாம செய்துகிட்டிருக்கிற விவசாயத்துக்கும் மேலான தொழில்.
தேனீக்கள்தேனீக்கள்
ஏன்னா, தேனீக்கள் மகரந்தச் சேர்க்கையாலதான் விவசாயத்துல மகசூலே கிடைக்குது. தேனீக்கள் விவசாயம் இல்லைன்னா, மனுச மக்க மட்டுமில்லீங்க... எந்த ஜீவராசியுமே இங்க உயிர் வாழ முடியாது. அதனால தேனீக்களை இந்த உலகத்துல இருக்க ஒவ்வொரு ஜீவராசியுமே கைத்தொழணும், சூரியனுக்கு இணையா..!
ரொம்ப நாளா பூவெடுக்காத மரங்களுக்குப் பக்கத்துல தேன் பெட்டியை வெச்சா, கொஞ்ச நாள்லயே அந்த மரம் பூவெடுக்கும். அது கொஞ்ச, கொஞ்சமா சேர்த்து வைக்குற தேனும் நமக்குக் கிடைக்கும். இப்படி மகசூலை அதிகரிச்சு, தேன்ங்கற அற்புதமான அமுதத்தையும் கொடுத்து, நமக்காகவே வாழுற தேனீக்களுக்கு நாம எவ்வளவு நன்றியுள்ளவங்களா இருக்கணும். ஆனால், பயிர்களுக்குப் பூச்சிமருந்து தெளிக்குறேன் பேர்வழினு, அந்தத் தேனீக்களையெல்லாம் பரலோகம் அனுப்பிக்கிட்டிருக்கோம். இதுதான் நன்றிக்கடனா?" என்று சொல்கிறார் பூச்சியியல் வல்லுநர் செல்வம்.
Thursday, 20 May 2021
மரணம் வரும் வழி!
1.சந்திரன் எட்டில் இருப்பதுடன், சனியின் நேரடிப் பார்வையையும் பெற்றால், ஜாதகன் அறுவை சிகிச்சையின்போது உயிரைவிட நேரிடும்.
2. தேய்பிறைச் சந்திரன், செவ்வாய், அல்லது சனி, அல்லது ராகுவுடன் கைகோர்த்துக்கொண்டு எட்டில் இருந்தால், ஜாதகன் நீரில் மூழ்கி இறப்பான். அல்லது நெருப்பில் சிக்கி இறப்பான். அல்லது ஆயுதங்களால் தாக்குண்டு இறப்பான்.
3. சூரியன், சந்திரன், செவ்வாய், சனி ஆகிய நான்கு கிரகங்களும் ஒன்றாக எட்டாம் வீடு, அல்லது ஐந்தாம் வீடு அல்லது ஒன்பதாம் வீட்டில் இருந்தால் ஜாதகன் மலை உச்சி போன்ற உயரமான இடங்களில் இருந்து தவறி விழுந்து இறக்க நேரிடும். அல்லது இடி, மின்னல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் சிக்கி இறக்க நேரிடும்.
4. தேய்பிறைச் சந்திரன் 6 அல்லது 8ல் இருக்க, ஜாதகனின் 4 & 10 ஆம் வீடுகளில் பாவக்கிரகங்கள் இருந்தால், ஜாதகன் எதிரிகளின் சூழ்ச்சியால் இறக்க நேரிடும். அல்லது எதிரிகளால் கொல்லப்படுவான்.
5. சூரியன், சந்திரன், புதன் ஆகிய 3 கிரகங்களும் ஏழில் இருக்க, சனி லக்கினத்திலும், செவ்வாய் விரையத்திலும் இருந்தால் ஜாதகன் வெளி தேசங்களில் இறக்க நேரிடும். அல்லது தூர தேசங்களுக்குப் போகும்போது இறக்க நேரிடும்.
6. புதனும், சுக்கிரனும் ஒன்றாக எட்டில் இருந்தால், ஜாதகன் தூக்கத்திலேயே இறந்து போவான் (அடடே, இது நன்றாக இருக்கிறதே!)
7. புதனும் சனியும் ஒன்றாக எட்டில் இருந்தால், ஜாதகன், அரச தண்டனையால் இறக்க நேரிடும்.
8. சந்திரனும் புதனும் 6 அல்லது 8ஆம் வீட்டில் ஜாதகனின் மரணம் விஷத்தால் (poison) ஏற்படும்.
9. சந்திரன், சனி, செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றாக 8ல் இருந்தால் ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.
10. செவ்வாய் 12லும், சனி 8லும் இருந்தாலும், ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.
11. சந்திரன் 12ல், சனி 8ல் இருந்தாலும் ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.
12. ஆறில் செவ்வாய் இருந்து, அவர் மீது வேறு சுபப்பார்வை எதுவுமில்லை என்றால், ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.
13. ஆறாம் வீட்டில் ராகுவும் நான்காம் அதிபதியும் சேர்ந்து இருந்தால், ஜாதகன் திடீர் என இறக்க நேரிடும். அதாவது திருட்டு, கொள்ளை, கலவரம் போன்ற நிகழ்வுகளில் இறக்க நேரிடும்.
14. அந்த இடத்தில் ராகுவிற்குப் பதிலாக கேது இருந்தாலும், அதே முடிவுதான்!
15. எட்டாம் வீட்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாவக் கிரகங்கள் இருந்தால், மரணம் வலி உடையதாக இருக்கும். அது புற்றுநோய் போன்ற கொடிய நோயாக இருக்கலாம் அல்லது விபத்தாக இருக்கலாம். அல்லது, கொலை, தற்கொலை போன்ற சம்பவங்களால் ஏற்படலாம்.
16. எட்டாம் வீட்டில் சுபக் கிரகங்கள் இருந்தால், மரணம் வலியில்லாததாகவும்,இயற்கையானதாகவும், அமைதியனதாகவும் இருக்கும்.
17. எட்டில் சந்திரன் இருக்க, எட்டாம் வீட்டில் இருபுறமும் பாவக்கிரகங்கள் இருந்தால் (அதாவது எட்டாம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில் இருந்தல்) ஜாதகன் நீரில் மூழ்கி இறக்க நேரிடும்
2. தேய்பிறைச் சந்திரன், செவ்வாய், அல்லது சனி, அல்லது ராகுவுடன் கைகோர்த்துக்கொண்டு எட்டில் இருந்தால், ஜாதகன் நீரில் மூழ்கி இறப்பான். அல்லது நெருப்பில் சிக்கி இறப்பான். அல்லது ஆயுதங்களால் தாக்குண்டு இறப்பான்.
3. சூரியன், சந்திரன், செவ்வாய், சனி ஆகிய நான்கு கிரகங்களும் ஒன்றாக எட்டாம் வீடு, அல்லது ஐந்தாம் வீடு அல்லது ஒன்பதாம் வீட்டில் இருந்தால் ஜாதகன் மலை உச்சி போன்ற உயரமான இடங்களில் இருந்து தவறி விழுந்து இறக்க நேரிடும். அல்லது இடி, மின்னல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் சிக்கி இறக்க நேரிடும்.
4. தேய்பிறைச் சந்திரன் 6 அல்லது 8ல் இருக்க, ஜாதகனின் 4 & 10 ஆம் வீடுகளில் பாவக்கிரகங்கள் இருந்தால், ஜாதகன் எதிரிகளின் சூழ்ச்சியால் இறக்க நேரிடும். அல்லது எதிரிகளால் கொல்லப்படுவான்.
5. சூரியன், சந்திரன், புதன் ஆகிய 3 கிரகங்களும் ஏழில் இருக்க, சனி லக்கினத்திலும், செவ்வாய் விரையத்திலும் இருந்தால் ஜாதகன் வெளி தேசங்களில் இறக்க நேரிடும். அல்லது தூர தேசங்களுக்குப் போகும்போது இறக்க நேரிடும்.
6. புதனும், சுக்கிரனும் ஒன்றாக எட்டில் இருந்தால், ஜாதகன் தூக்கத்திலேயே இறந்து போவான் (அடடே, இது நன்றாக இருக்கிறதே!)
7. புதனும் சனியும் ஒன்றாக எட்டில் இருந்தால், ஜாதகன், அரச தண்டனையால் இறக்க நேரிடும்.
8. சந்திரனும் புதனும் 6 அல்லது 8ஆம் வீட்டில் ஜாதகனின் மரணம் விஷத்தால் (poison) ஏற்படும்.
9. சந்திரன், சனி, செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றாக 8ல் இருந்தால் ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.
10. செவ்வாய் 12லும், சனி 8லும் இருந்தாலும், ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.
11. சந்திரன் 12ல், சனி 8ல் இருந்தாலும் ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.
12. ஆறில் செவ்வாய் இருந்து, அவர் மீது வேறு சுபப்பார்வை எதுவுமில்லை என்றால், ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.
13. ஆறாம் வீட்டில் ராகுவும் நான்காம் அதிபதியும் சேர்ந்து இருந்தால், ஜாதகன் திடீர் என இறக்க நேரிடும். அதாவது திருட்டு, கொள்ளை, கலவரம் போன்ற நிகழ்வுகளில் இறக்க நேரிடும்.
14. அந்த இடத்தில் ராகுவிற்குப் பதிலாக கேது இருந்தாலும், அதே முடிவுதான்!
15. எட்டாம் வீட்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாவக் கிரகங்கள் இருந்தால், மரணம் வலி உடையதாக இருக்கும். அது புற்றுநோய் போன்ற கொடிய நோயாக இருக்கலாம் அல்லது விபத்தாக இருக்கலாம். அல்லது, கொலை, தற்கொலை போன்ற சம்பவங்களால் ஏற்படலாம்.
16. எட்டாம் வீட்டில் சுபக் கிரகங்கள் இருந்தால், மரணம் வலியில்லாததாகவும்,இயற்கையானதாகவும், அமைதியனதாகவும் இருக்கும்.
17. எட்டில் சந்திரன் இருக்க, எட்டாம் வீட்டில் இருபுறமும் பாவக்கிரகங்கள் இருந்தால் (அதாவது எட்டாம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில் இருந்தல்) ஜாதகன் நீரில் மூழ்கி இறக்க நேரிடும்
இறப்பு vs மரணம்
இறப்பு vs மரணம்
நமக்கு இறப்புக்கும், மரணத்திற்கும் வித்தாயசம் தெரியாமல் வளர்ந்து இருப்போம். இன்று அதை பற்றியா தெளிவு கிடைக்க இந்த தகவல் உங்களுக்கு பயனளிக்கும் என்ற நம்பிக்கையோடு...
நாம் சாலையில் இந்த செய்தியை போஸ்டர்களின் பார்க்காமல் இருக்கா வாய்ப்பில்லை. "இயற்கை எய்தினார்", "அகால மரணம் அடைந்தார்". ஆனால் இது சாதரணமாக போஸ்டர் தானே என்று எழுதும் வசனம் இல்லை. இதற்க்கு பின்பு சில விஷயங்கள் உள்ளது. உண்மையில் இந்த காலத்தில் இயற்கை எய்தினார் என்பது குறைவே. நாம் போஸ்டரில் பார்க்கும் நபர் உண்மையில் இயற்கை எய்தி இருக்கமாட்டார் மாறாக மரணமடைந்து இருப்பார். என்னது இயற்கை எய்துவதும், மரணமும் ஓன்று இல்லையா?!
ஆம். இறப்பு என்பது இயற்கை எய்துதல் மற்றவை எல்லாம் மரணமே. அப்போ இயற்கை எய்துதல் என்றால் என்ன அது எப்படி இருக்கும் என்பது தெளிவு கிடைத்தால் மரணம் எதுவென்று புரிந்துவிடும்.
இயற்கை எய்தினார் என்பதின் சில அறிகுறிகள்: நம் கண்ணால் பார்க்கவும் முடியும்.
1. உடலை மண் தீண்டாது.
2. உடல் அழுகாது.
3. உடல் பூக்கூடை போல் இருக்கும். (பிணம் கனக்கும். 4 பேர் வேண்டும் தூக்க)
4. உடல் வியர்க்கும்.
5. 98.4 டிகிரி வெப்பம் இருக்கும்.
6. தீர்த்தம் கொடுத்தால் தொண்டைகுழிக்குள் இறங்கும்.
7. கை கால்களில் சொடக்கு எடுத்தால் நெட்டி வரும்.
8. வயோதிகமானவர்கள் முகத்தில் இளமை பூத்து பசுமஞ்சள் வர்ணம் உலாவும். (இதற்க்கு தான் சில வீட்டில் முகத்தில் செயற்கையாக மஞ்சள் தூள் பூசபடுகிறது)
இப்படிப்பட்ட உடல் இருந்தால் தான் அதற்கு பெயர் இறப்பு மற்ற உயிரிழப்பில் மேற்கூறிய எந்த அடையாளங்களும் இருக்காது அவைகள் தான் மரணம். இப்படி இறப்பு நேரிடும் உடலை தான் அன்று மண்ணில் புதைத்தார்கள் மரணம் அடைந்த உடலை எரித்தார்கள். இன்று சாதி, மதம், குலம் என்று பல வேறுபாடுகளில் புதைப்பதும், எரிப்பதும் என்னவென்று நீங்கள் தீர்மானித்து கொள்ளுங்கள்.
எங்கு இறப்பு நேர்கிறதோ அங்கு ஆனந்தா கண்ணீர் மட்டுமே இருக்கும் வேரும் கண்ணீர் இருக்காது. இதைத்தான் எதிரியாக இருந்தாலும் நல்லா காரியத்துக்கு போகவில்லை என்றாலும் பரவாயில்லை சாவுக்கு போக வேண்டும் என்ற கட்டாயத்தை கடைபிடித்தார்கள். அப்போதான் அவர் எப்படி வாழ்ந்தார் என்பது நம்மக்கு தெரியும். வாழ்வது என்பது யார் கையில்? ரஜினி பட வசனம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல
அந்த காலங்களில் வீட்டில் நூறு வயதை தாண்டி வாழ்ந்த மணிதர்கள் இருந்தார்கள். சில வருடங்கள் கழித்து அவர்கள் உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல் கூட இருப்பார்கள் இவர்களை ஒரு நாள் ஒரு பெரிய பானையில்(மூத்தோர் தாலி) வைத்து அவர்களுக்கு பிடித்த உணவுகள் வைத்து குழிகள் புதைப்பதே சாவு என்ற அழைக்கபடுகிறது. இதனை நீங்கள் சில அருங்காட்சியத்தில் காண முடியும். இப்படி நோய்நொடி இல்லாமல் வாழ்ந்த சமூகம் இது.
இப்படி சாவை சந்தோஷமாக கொண்டாடியா மனிதர்கள் இங்கே இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள்... இவர்கள் இன்றும் இயற்கை எய்துவதை தனது இலட்சியமாக வைத்து இருக்கிறார்கள். பிறத்தது ஏதற்காக என்று கேட்டால் சாதிக்க என்று கூறுவோர் இருக்கும் இடத்தில் சாக என்று கூறும் மனிதர்கள். அவர்கள் சாவு என்று கூறுவதை விட அடக்கம் ஆகிட்டாங்க என்று தான் கூறுவார்கள். அடக்கம் என்றால் புதைப்பது. இப்படி இறப்பு பற்றி புரிதல் இருக்கவே அவர்களுக்கு இறப்பு மீது பயம் வருமா என்ன? மாறாக சந்தோஷம் தான் வரும். அவர்கள் புதுக்கோட்டை அருகே மெய்வழிசாலை என்ற ஒரு கிராமத்தை உருவாக்கி வாழும் மனிதர்கள். இவர்கள் அடையாளம் தலையில் தலப்பா அணிந்து இருப்பார்கள், இவர்கள் பெயரில் சாலை என்று இருக்கும். பொறுங்க பொறுங்க அதுக்குள்ள google போய் அவங்களை பற்றி தேட வேண்டாம்(தப்பு தப்பா வந்தா கண்டுகொள்ள வேண்டாம்). இன்னும் கொஞ்சம் தான் இருக்கு படிக்க.
மரணம் = மா (பெரிது படுத்தி கூறுவது)+ ரணம். உதாரணம் மாநாடு.
ரணம் என்றால் புண் அதிலும் மா ரணம் என்றால் அதிக வேதனை தரும் புண் என்று அர்த்தம். இன்று வீட்டில் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நபர்களை இயற்கை எய்தினார் என்று கூறபடுகிறது, அதுவும் தவரே. சில நேரங்களில் மனிதர்கள் கடும் கோவத்தில் உனக்கு நல்லா சாவு வராது என்று கூறுவதும் மரணத்தையே.
இந்த மரணத்தை வைத்து விளையாடும் விளையாட்டு தான் எத்தனை எத்தனை சொல்லி மாலது. இயற்கை ஒரு போதும் தவறு செய்யாது என்பதை புரிந்தவர்களுக்கு மட்டும்.
காகம் வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்
1.வாகனம், குடை, காலணி, உடல் மீது காகம் தீண்டுதல் - அகால மரணம்
2. நாம் செல்லும் திசை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால்- பயணம் தவிர்ப்பது நல்லது
3. ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவளிக்கும் காட்சி - இனிதான செயலை குறிக்கும்
4.தென்கிழக்கு திசை நோக்கி கரைந்தால் – தங்கம் லாபம் கிடைக்கும்.
5.தென்மேற்கு திசை நோக்கி கரைந்தால் – தயிர், எண்ணெய், உணவு லாபம் கிடைக்கும்.
6. மேற்கு திசை நோக்கி கரைந்தால் –நெல், முத்து, பவளம் மூலம் அதிக லாபம் கிடைக்கும்
7. வடக்கு திசை நோக்கி கரைந்தால் – ஆடைகள், வாகனங்கள் வந்து சேரும்
8.உங்கள் எதிரே காகம் வலப்பக்கம் இருந்து இடப்பக்கம் சென்றால்- தன லாபம் கிட்டும்.
9.இடப்பக்கம் இருந்து வடப்பக்கம் சென்றால் - தன நஷ்டம் உண்டாகும்.
Tuesday, 18 May 2021
இயற்கை முறையில் ரத்தம் சுத்தம் செய்யும் முறைகள்
இயற்கை முறையில் ரத்தம் சுத்தம் செய்யும் முறைகள்
இயற்கை முறையில் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்திகரிக்கவும், விருத்தியாக்கவும் கீழே சில வழிமுறைகளை நம் முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ளனர்.
👉இரும்பு சத்து நிறைந்த முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து, அத்துடன் ஒரு நாட்டு கோழி முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
👉தேனில் ஊற வைத்த பேரீச்சம்பழத்தை ஒரு வேளைக்கு 2 அல்லது 3 வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். நாவல் பழத்திற்கு இதயத்தை பலப்படுத்தும் ஆற்றல் உண்டு, எனவே இதை அடிக்கடி சாப்பிட்டு வர உடலில் இரத்தம் அதிகமாக ஊறும்.
👉இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தப் படுத்தி, உடலுக்கு தேவையான ஆற்றலையும் தருகிறது.
👉செம்பருத்திப் பூவிலும் இரத்தம் விருத்தியாக்கும் சக்தி உண்டு. பூவின் நடுவில் இருக்கும் மகரந்தத்தை நீக்கி விட்டு இதழ்களை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் சூடு தீர்ந்து இரத்ததை விருத்தியாகும்.
👉தூங்கும் முன்பு இரவு அரை தம்ளர் நீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் விருத்தியாகும். பீட்ரூட் சாறு அருந்தி வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
👉இஞ்சிச் சாறுடன், சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் இரத்தம் சுத்தமாகும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகளை அழித்து இரத்தத்தை எளிதில் சுத்திகரிக்கும்.
செர்ரி பழம்....
செர்ரி பழத்தில் வைட்டமின் “ஈ” சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும்.
கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து, கண்பார்வை திறனை பிரகாசிக்க செய்கிறது.
செர்ரி பழத்தில் உணவை செரிமானம் செய்ய கூடிய சத்துகள் அதிகம் உள்ளன. இப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் செர்ரி பழம் பேருதவி புரிகிறது.
பலருக்கும் தலைமுடி கொட்டுதல், பொடுகு, தலைமுடியில் ஈரப்பதம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. செர்ரி பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் வைட்டமின் “எ” மற்றும் “ஈ” சத்துக்கள் தலைமுடி உதிர்வதை தடுக்கிறது. இளநரை, பொடுகு போன்ற பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதில் செர்ரி பழம் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது.
செர்ரி பழம் இயற்கையிலேயே ரத்த ஓட்டத்தை தூண்டும் ஒரு பழம் ஆகும். எனவே இதை சாப்பிடுபவர்களின் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் கிடைக்க ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து விடாமல் இருக்க செர்ரி பழங்கள் அதிகம் சாப்பிட்டு வருவது சிறந்த வழிமுறையாகும்.
செர்ரி பழம் உடல் எடை குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.
உங்கள் பல்வலி சில நிமிடங்களில் இல்லாமல்செய்ய ஒரு அருமையான மருத்துவக் குறிப்பு !!
உங்கள் பல்வலி சில நிமிடங்களில் இல்லாமல்செய்ய ஒரு அருமையான மருத்துவக் குறிப்பு !!
பல்வலி வந்தவுடன் வலி நிவாரணி மாத்திரைகளை நாடுபவர்கள் நம்மில் பலர். ஆனால் அதிகமாக பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகளால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் வாய்ப்புகள் அதிகம்.
இந்த பிரச்சனைகளை தடுப்பதற்கு நாம் தினமும் காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளைகளிலும் பற்களை நன்றாக துலக்க வேண்டும்.பல்வலியை உடனடியாக குணமாக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான தீர்வைப் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கிராம்பு
தேங்காய் எண்ணெய்
உப்பு , மிளகு
தண்ணீர்
செய்முறை
முதலில் மிளகு மற்றும் கிராம்பு ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்து தூள் செய்துக் கொள்ள வேண்டும்.பின் ஒரு கிண்ணத்தில் கிராம்பு தூள், தேங்காய் எண்ணெய், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.
ஒரு டூத்ப்ரஷ் பயன்படுத்தி, அந்த பேஸ்ட்டை வலி உண்டாகும் பாதிக்கப்பட்ட இருக்கும் இடத்தில் தொடர்ச்சியாக தடவி சிறிது நேரம் கழித்து நீக்க வேண்டும். இதனால் பற்களில் ஏற்படும் வலி குறைவதுடன், பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படும்.
பல்வலியை போக்கும் வேறு வழிகள்
வீக்கத்துடன் பல்வலி ஏற்பட்டால் ஐஸ் கட்டியை பருத்தி துணியில் சுற்றி வலி உள்ள இடத்தில் வைத்தால் வீக்கம் குறைவதோடு பல் வலியும் குறையும்.தினமும் காலையில் நித்திரையிலிருந்து எழுந்தவுடன் நல்லெண்ணையை வாயிலெடுத்து கொப்பளித்து துப்பிவிடவேண்டும். அவ்வாறு செய்து வருவதன் மூலம் வாயில் ஏற்படும் பிரச்சினைகள் வராது தவிர்த்துக்கொள்ள முடியும்.
இஞ்சிச் சாற்றை லேசாக சூடுபடுத்தி வாயிலிட்டு கொப்பளித்துவர பல்வலி குறையும்.இரண்டு கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால் பல் வலி குறைந்துவிடும்.வீட்டில் கொய்யா மரம் இருந்தால் இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாற்றை வாயில் சில நிமிடங்கள் வைத்திருந்து பின் நீக்கிவிட வேண்டும்.
பச்சையாக வெங்காயத்தை மென்று சாற்றை விழுங்க பல்வலி குறையும். அத்தோடு அவ்வாறு வெங்காயத்தினை மென்று சாற்றினை விழுங்குவதன் மூலம் வெங்காயத்தின் காரத்தன்மை பல்லிலுள்ள கிருமிகளை அழிக்கும்.ஒரு கிளாஸ் சூடான தண்ணீருடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனைக் கொண்டு நன்றாக வாயை கொப்பளிக்க வேண்டும்
விதியும்_சதியும்
#விதியும்_சதியும்🙄
👌👌பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி!
👎நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!
👌👌 தாகத்திற்கு நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி!
👎தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி!
👌👌 தரமான இயற்கை உணவுகள் இயற்கையின் விதி!
👎உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி!
👌👌தாய்ப் பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி!
👎மாட்டுப் பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி!
👌👌 சுகப் பிரசவம் என்பது இயற்கையின் விதி!
👎சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி!
👌👌யாரும் இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!
👎சர்க்கரை நோயாளிகள் இனிப்பும் பழமும் தொடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி!
👌👌 யாரும் கொழுப்பு உணவுகள் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!
👎இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி!
👌👊 பசித்து உண்டால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி!
👎எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!
👌👌ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி!
👎அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி!
👌👌நம் ஆரோக்கியத்தை சொல்லும் உடலின் மொழி இயற்கையின் விதி!
👎நோயைக் காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி!
👌👌 எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது இயற்கையின் விதி!
👎எந்த நோயும் குணமாகாது என்பது கார்ப்பரேட் சதி!
👌👌ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓராயிரம் மருத்துவர் என்பது இயற்கையின் விதி.
👎ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் என்பது கார்பரேட் சதி.
👌👌தண்ணீரை மண் வடி கட்டும் என்பது இயற்கையின் விதி.
👎தண்ணீரை வடி கட்ட R.O மிஷின் தண்ணீரை குடியுங்கள் என்பது கார்பரேட் சதி.
👌👌 நாட்டுச் சோளம் சாப்பிடுவது இயற்கையின் விதி.
👎மரபியல் மாற்ற அமெரிக்க சோளத்தை தின்று மரணிக்க வைப்பது கார்பரேட் சதி.
👌👌மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி!
👎அதை வணிகமாக்கியது கார்ப்பரேட் சதி!
👌👌 மற்றவருக்கு இதனை படித்தும், பகிர்ந்தும், இதன்படி நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி !
👎 படித்து மற்றவர்க்கு அனுப்பி மட்டும் விட்டு மீண்டும் கார்ப்பரேட் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது சதி!
மண்பானை நீர்_7- 8 pH அளவு கொண்டது
மண் பானை நீர் அருந்தினால் சளி பிடிக்கும் எனச் சொல்லாதீர்கள்!
சளி என்கிற கழிவைத் தான் மண் பானை வெளியேற்றும்!
உங்கள் வீட்டு RO வாட்டர் வெளியேற்றாது !
மண்பானை நீர்_7- 8 pH அளவு கொண்டது"
இரத்தத்தில் pH அளவும்
எலும்பு,மூட்டு வலியும்...!
*************************
மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பது தான் .
இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen").
ஒரு பொருள் 7 ற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமிலத் தன்மை உடையது.
( Acid ).
ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்தப் பொருள் காரத் தன்மை உடையது. (Alkaline).
நமது இரத்தம் இயல்பாகவே காரத்தன்மை உடைய 7.4 pH அளவு உடையது...!
ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.
அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும்.
இந்த குளிர்பானங்களை அருந்தும் போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.
இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத் தன்மையை அடையும்.
இது பல்வேறு உடல் நல கேடுகளுக்கு வழிவகுக்கும்.
எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மாற்ற முயலும்.இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்றக் கூடிய பொருள் கால்சியம். எனவே இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்றப் பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.
எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.
குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.R.O.WATER - 5 - 6 pH அளவு.காபி -4.5 -5.5 pH அளவு.
மண்பானை நீர் - 7- 8 pH அளவு.
R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி.
தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறோம்.
நாம் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும்.
ஏன் என்றால் #மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.
கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள். அதுபோல தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள். பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள்.
இந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே நமக்கு நோய் குணமாகும்...!
Monday, 17 May 2021
ஸர்வம்_கிருஷ்ணார்பனம்
சிறுவயதில் கடவுள் மறுப்பு கேள்விகளை நான் என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். - -
----------சுஜாதா------------
எப்படி ட்விஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும் பதில், “வயசானா உனக்கே #புரியும்.
புரியும்போது ...
கேள்விகள் அப்படியே இருக்கும், ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்.!”
இந்தப் பதில் இன்னும் குழப்பும்.
அப்பா....
பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு செய்கிறார் என்று தோன்றும்.
“நீ ஏதோ டபாய்க்கிற.!” என்பேன்.
“நீ #சயன்ஸ் படிக்கிற,
அதனால் இதை எல்லாம் கேட்கிற.
நானும் பிஸிக்ஸ் ஸ்டூடண்ட் தான்”, என்பார்.
அப்பாவுடன் கோயிலுக்குச் செல்லும்போது நல்ல படிப்பு வர வேண்டும்,
மார்க் நிறைய வர வேண்டும் என்று எல்லாம் வேண்டிக்கொள்ளச் சொல்லமாட்டார்,
அவர் வேண்டிக்கொள்ளச் சொல்லுவது, “நிறைய #அறிவு கொடு என்று வேண்டிக்கோ”, என்பார்.
இவை எல்லாம் ....
எனக்குப் புரிந்ததே கிடையாது.
சின்ன வயதில்
அவர் சொன்னது ...
சில வருடங்கள் முன் ....
புளி டப்பாவைத் திறக்கும்போது புரிந்தது.
புளி டப்பாவைத் திறந்தபோது,
அதிலிருந்து சின்னப் பூச்சி ஒன்று பறந்தது.
ஏர்-டைட் ...டப்பர் வேர் புளி டப்பா. மூடியிருக்கிறது.!
அதற்குள்....
பூச்சி எப்படி வந்தது என்று யோசித்து தலையைச் சொறிந்தேன்.
நான் சொறிந்துகொள்வதைப் பார்த்துத் தலையில் என்ன பேனா.?” என்றார்கள்.
தலையில் பேன் எப்படி உற்பத்தி ஆகியது என்று ...
மேலும் ....
பலமாகச் சொறிந்துகொண்டேன்.
ஷாம்பு போட்டுக் குளித்தால் அரிப்பு சரியாகிவிடும் என்று கூறினார்கள்.
குளித்துவிட்டு பெருமாள் சேவிக்கும்போது சாளரத்தைப் பார்த்தேன்.
எப்படி?யொரு பூச்சி சோறு தண்ணீர் காற்று எதுவும் இல்லாமல் உள்ளே தோன்றியிருக்க முடியும்.? என்று யோசித்தேன்.
மீண்டும் குழப்பம்.
கல்லிலிருந்து பூச்சி எப்படி வந்தது என்பதே தெரியாமல் இருக்க, ....
தூணிலிருந்து நரசிம்மன் எப்படித் தோன்றினார் என்று எனக்கு எப்படிப் புரியும்.?
பூச்சிக்குத் தாய் யார் என்று தெரியாமல் முழிக்கும் எனக்கு ...
நரசிம்மருக்கு ...யார் ?
தாய் என்று புரிந்துகொள்ள முடியுமா.?
இந்தக் கேள்விகளுக்கு
ஆழ்வார் பாசுரங்களையும்
ஸ்வாமி தேசிகனையும் நாடினேன்.
ஸ்வாமி தேசிகன். ..
நரசிம்மர் தூணிலிருந்து வந்தார்,
அதனால்
அவருடைய தாய் ....
அந்தத் தூண் தான் என்கிறார்.
தேசிகன் கூறிய பிறகு
அதை மறுத்துப் பேச முடியுமா.?
(a+b) ² =a²+2 ab+b² என்பதை எப்படிக் கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறோமோ ?
அதே போல்
ஆழ்வார்கள்
ஆசாரியர்கள் எது செய்தாலும் ....
அதில்
தப்பிருக்காது என்று முதலில் நம்ப வேண்டும்.
ஆசாரியன் கூறிய பிறகு
அதை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் ஞானம்.
வள்ளுவர்
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்கிறார்.
இதற்குப் பொருள், “எந்தப் பொருளை யார் சொன்னாலும்,
அதன் உண்மைத் தன்மையை அறிவது தான் அறிவு”.
அதாவது
பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு.
ஸ்ரீ வைஷ்ணவத்தில் பகுத்து அறிவதற்கு அறிவு கலங்க வேண்டும்.
எனக்கு அறிவு இல்லை என்று தெரிந்துகொள்வதே அறிவு என்கிறார் நம்மாழ்வார்.
கொஞ்சம் அறிவியல் படித்தவர்கள் கடவுள்பற்றிப் பேசுகிறேன் என்று ...
அவர்களின்
பி.எச்.டியை வைத்துக்கொண்டு ...
கடவுளை ஒரு வரையறைக்குள் அடக்க முயற்சி செய்வதை நாம் பார்த்திருக்கிறோம்.
நம் சிறிய அறிவை வைத்துக்கொண்டு அவனை அளக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது.
நம் அறிவு என்பது
எவ்வளவு சின்னது என்று ....
ஒரு கணிதவியலாளர் சொன்ன சோதனை மூலமே சொல்லுகிறேன்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு கணிதவியலாளரான Jules henri poincaré,
"சிந்தனைப் பரிசோதனை" என்று ஒரு விஷயத்தைச் சொல்லியுள்ளார்.
இந்தச் சோதனையை யாராலும் செய்து பார்க்க முடியாது.
அதனால் ....?
நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள் :
இன்று தூங்கி ...நாளை எழுந்துகொள்ளும்போது ....
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும்...
உங்கள் அப்பா, அம்மா,
நாய்குட்டி,
வீடு, கோயில், செடி,
தட்டு, அரிசி,
பேனா, பென்சில், சட்டை,
அணுக்கள், நீங்கள் படுத்துத் தூங்கும் கட்டில்,
ஏன்,?
நீங்கள் என....
உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே பெரிதாகிவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
மறுநாள் காலை
நீங்கள் எழுந்த பிறகு ...
எல்லாம் பெரிசாகிவிட்டது என்று
உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்றால்...?
முடியாது என்கிறார் Jules henri.
அவ்வளவு தான் நம் அறிவு.
சாதாரணமாக இதையே #அளக்க முடியாதபோது ....
பெருமாளை ...
இப்படித்தான் என்று பேசுவது எல்லாம் டூமச்.
ஆலமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்,
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லது ஓரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.
- திருப்பாணாழ்வார்
எழு உலகையும் உண்டு
ஒரு குழந்தை வடிவில் ஆலிலையில் படுத்துக்கொண்ட பெருமாள் என்று சொல்லும்போது ....
உலகை உண்ட பிறகு
அந்த இலையில் எப்படிப் படுத்துக்கொள்வான் என்று கேள்வி எழும்.
கோவர்த்தன மலையைத் திருப்பிக் குடையாய் பிடித்தபோது அதில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் கீழே சிந்தவில்லையாம்.
அதே போல
மரங்கள் எல்லாம் எப்போதும் போலச் சாதாரணமாக இருந்ததாம்.
( உடனே புவியீர்ப்பு தத்துவம் உங்களுக்கு ஞாபகம் வந்தால் ....
நீங்க இன்னும் கடவுளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.! )
எப்படி என்று ...இதை எல்லாம் ....யோசிக்கவே முடியாது.
முயற்சியும் செய்யாதீர்கள்.!
இது தான்
அகடிதகடனா சாமர்த்தியம்.
(லிஃப்கோ தமிழ் அகராதியில் - “perfectly accomplishing even the impossible” என்று கொடுத்திருக்கிறார்கள். ).
நம் இரைப்பையில்
‘ஹைட்ரோ குளோரிக் அமிலம்’ இருக்கிறது என்றால் நம்புவீர்களா.?
அதை
ஒரு பாட்டிலில் பிடித்து அடித்தால் ரவுடிகள் வீசும் ஆசிட் தோற்றுவிடும்.
அந்த அமிலம் கையில் பட்டால் நம் கை ஓட்டையாகும்.!
ஹார்பிக் என்ற நம் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வஸ்துவில் 10% இந்த அமிலம்தான் இருக்கிறது.
நம் வயிறு,
ஆசிட் வைத்திருக்கும் ரவுடி.!
இவ்வளவு மோசான ஆசிட் உள்ளே இருக்க நம் வயிறு ஏன் இன்னும் பஞ்சராகவில்லை.?
பேன் தலையில் இருந்தால் ...
அந்த ‘இச்சிங்’ உணர்வை நாம் எப்படி உணர்கிறோம்.
இச்சிங்கோ, டச்சிங்கோ
நாம் அதை உணர்வது எப்படி.?
உணர்த்துவது யார்.? என்று கேட்கும் கேள்விகளுக்கு ....
விடை ஆழ்வார் பாசுரங்களில் எங்கோ புதைந்து இருக்கிறது.
நாம் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறோம். பதவி உயர்வு, பணம், வீடு வாசல் வேண்டும்.
தேர்வில் மதிப்பெண், கல்யாணம், வெளிநாட்டு வீசா, சில சமயம் காகிதத்தில் எழுதி ஆஞ்சநேயர் கழுத்தில் கூட மாட்டிவிடுகிறோம்.
‘உண்டியே உடையே உகந்து ஓடும்’ என்று ஆழ்வார் சொல்லுவது போல ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
ஆனால் ....
என்றாவது ?
எனக்கு ’அறிவு இல்லை,
அது வேண்டும்', என்று பெருமாளிடம் கேட்டிருக்கிறோமா.? கேட்டதில்லை,
காரணம்
நம்மை நாமே அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்கிறோம்.
#யாதுமாகி நிற்பவன் அவனே...
அவனின்றி ஓர் #அணுவும் அசையாது.
#ஸர்வம்_கிருஷ்ணார்பனம்