காலண்டரை ‘இந்த’ திசையில் மாட்டவே கூடாது! இல்லயென்றால் பெரிய கஷ்டம் வரும்..
2024ஆம் ஆண்டு இப்போதுதான் ஆரம்பித்தார் போல் இருந்தது. ஆனால், அதற்குள் டிசம்பர் மாதம் முடிந்து, 2025ஆம் ஆண்டே தொடங்கி விட்டது. பொதுவாக புத்தாண்டு தொடங்கியபின் பலர் காலண்டர் வாங்குவது, புது பொருட்கள் வாங்குவது போன்ற விஷயங்கள் நடைபெறும். பலர், காலண்டர் வாங்கி, அதை எந்த திசையில் மாட்ட வேண்டும் என்பதை கூட பார்ப்பர். அப்படி, நாம் எந்த திசையில் காலண்டரை மாட்ட வேண்டும் தெரியுமா? சரி, புது காலண்டர்களை வாங்கினால் பழைய காலண்டர்களை என்ன செய்வது? அதிலும் சாமி படங்கள் போட்டிருந்தால் என்ன செய்வது? இது குறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.
வருடா வருடம் புதுப்புது விஷயங்கள் நம்மை சுற்றி மாறிக்கொண்டேதான் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு புத்தாண்டும் மாறிக்கொண்டே இருப்பது, புதுப்புது காலண்டர்கள்தான். இந்த புத்தாண்டு காலண்டர்கள் யாரால் வழங்கப்பட்டாலும் முருகன், லட்சுமி, குபேரர், பெருமாள், கிரிஷ்ணன் உள்ளிட்ட கடவுள்களின் புகைப்படங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். இப்படி நாம் வாங்கி வைக்கும் காலண்டர்களை வாஸ்து சாஸ்திரப்படிதான் மாட்டி வைக்க வேண்டுமாம்.
எந்த திசையில் மாட்ட வேண்டும்?
புத்தாண்டுக்கு காலண்டர் மாட்டியவுடன், அதனை கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியபடி மாட்ட வேண்டுமாம். அதிலும் குறிப்பாக அதில் சாமி படம் போடப்பட்டிருந்தால் சாமியின் முகம் வடக்கு திசை நோக்கி இருக்கும் வகையில் இருக்க வேண்டுமாம். இதன் காரணமாக வீட்டில் செல்வத்தின் வளர்ச்சி பெருகுவதுடன் தெய்வ அருளும் மேலோங்குமாம். அதே நேரத்தில், கேலண்டர் மாட்டக்கூடாத திசை என்ற ஒன்றும் இருக்கிறதாம். இதனை தெற்கு நோக்கியவாறு மாட்டவே கூடாதாம். அப்படி மாட்டினால், வீட்டில் உள்ளவர்களின் உடல் நலன் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் தொழில் மற்றும் வாழ்க்கை ரீதியான வளர்ச்சிகளும் தடைபடுமாம்.
பலர் செய்யும் இன்னொரு தவறு, ஓரிரண்டு காலண்டரை தாண்டி, பல காலண்டர்களை வீட்டில் மாட்டி வைப்பது. இதனால் நாம் பலமுறை தேதிகளை கிழிக்காமல் அப்படியே விட்டுவிடுகிறோம். இப்படி, ஒரு வாரத்திற்கும் மேற்பட்டு நாம் தேதியை கிழிக்காமல் விட்டால் வீட்டில் எதுவும் முன்னேறாமல் இருக்குமாம். அதே போல, வீட்டில் இருப்பவர்கள் பல வித தடைகளையும் மன அழுத்தங்களையும் கூட சந்திப்பராம்.
பழைய காலண்டரை என்ன செய்வது?
புது காலண்டரை மாட்டியவுடன், பழைய காலண்டரை என்ன செய்வது என்பதே பலருக்கு தெரியாது. அதே சமயத்தில் இந்த பழைய கேலண்டர்களை வீட்டிலேயேவும் வைத்திருக்க கூடாதாம். அதே சமயத்தில் அந்த காலண்டரில் சாமி படம் இருந்தால் அதனை குப்பையிலும் போடக்கூடாதாம். எனவே, அதில் இருக்கும் சாமி படத்தை மட்டும் தனியாக எடுத்து விட்டு மற்றவற்றை பழைய பேப்பர் கடையில் அல்லது குப்பையில் போடலாம். தேதி கிழிக்கும் கேலண்டராக இருந்தால் அதனை கோயில்களில் வைத்துவிடலாம். திருநீர்,குங்குமங்களை எடுப்பவர்கள் அந்த பேப்பரில் அதனை வைத்து எடுத்துச்செல்ல உதவும்.
வாவ்... அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். நல்ல பதிவு அய்யா.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMon. 14 Apr. 2025 at 11.10 am
ReplyDelete*விஸ்வாவசு ஆண்டு :*
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு இனிய நல் வாழ்த்துகள்.
தமிழ் மாதங்கள் - 60 என அனைவரும் அறிவோம்.
இந்த 60- ஆண்டில் 39-வது ஆண்டு விசுவாவசு ஆண்டு ஆகும்.
விசுவாவசு ஆண்டின் அபிமான அதி தேவதை "வைஸ்வாநரன்".
இத் தேவதையின் நிறம் - சிவப்பு.
இத் தேவதையின் தோற்றம் - காட்டில் நீரில்லா நிலம், இருப்பிடம் மற்றும் குட்டையின் படிக்கட்டு என எங்கும் நிறைந்தவர்.
இவ் விசுவாவசு ஆண்டில் பிறந்தவர்களின் பலன் பார்த்தீங்கன்னா.
நல்ல புதல்வன் மற்றும் மனைவியைப் பெற்றவன், கொடையாளி, நற்குணம் மிக்கவன், நல்லொழுக்கத்தில் நிறைந்தவன், தைரியசாலி, விருப்பமான உணவை உட்கொள்பவன் மற்றும் எல்லா குணங்களாலும் மேம்பட்டவனாக இருப்பான்.
சுபம்.
Jansikannan438@gmail.com .
Tue. 22, July, 2025 at 7.45 pm.
ReplyDelete*மாண்டூக்ய உபநிஷத்*
*சாந்திபாட (சாந்தி மந்திரம்) :*
பத்ரம் கர்ணேபி : ச்ருணுயாம தேவா: பத்ரட்
பச் யேமா௯ஷபி ர்யஜத்ரா: | ஸ்தி ரைரங்கை ஸ்துஷ்டு
வாம்ஸஸ்தனூபி : | வ்யசே ம தே வஹிதம் யதா யு :
ஸ்வஸ்தி"ந இந்த் ரோ வருத் த ச ரவா:| ஸ்வஸ்தி ந:
பூஷா விச் வவேதா:| ஸ்வஸ்தி நஸ்தார்௯்ஷயோ
அரிஷ்டனேமி:| ஸ்வஸ்தி நோ
ப் ருஹஸ்பதிர் த தா து|
ஓம் சாந்தி: சாந்தி சாந்தி: ||
*பொருள் :*
*தேவா − ஓ தேவர்களே
*கர்ணேபி − காதுகளால்
*பத்ரம் − நல்ல விஷயங்களை
*ச்ருணுயாம − கேட்க வேண்டும்
*யஜத்ரா − பூஜிக்கத் தகுந்தவர்களே
*அ௯ஷபி: − கண்களால்
*பத்ரம் − நல்ல விஷயங்களை
*பச்யேம − காண வேண்டும்
*ஸ்திரரங்கை − உறீதியான அங்கங்களுடன் கூடிய
*தனூபி − உடலுடன்
*யதாயு − ஆயுள் முழுவதும்
*துஷ்டீ வாம்ஸ − உங்களைத் துதிக்க வேண்டும்.
*தேவ ஹிதம் − தேவர்களுக்கு"நன்மை செய்த வண்ணம்
*வ்யசேம − வாழ வேண்டும்
*வ்ருத்தச்ரவா − பழம்புகழ்பெற்ற
*இந்த்ர − இந்திரன்
*ந − நமக்கு
*ஸ்வஸ்தி − நன்மை செய்யட்டும்
*விச்வ வேதா − எல்லாம் அறிகின்ற
*பூஷா − சூரியன்
*ந − நமக்கு
*ஸ்வஸ்தி − மங்கலம் செய்யட்டும்.
*அரிஷ்ட்டநேமி − தீமையை அழிக்கின்ற
*தார்௯்ஷய − கருடன்
*ந − நமக்கு
*ஸ்வஸ்தி − நன்மை செய்யட்டும்
*ப்ருஹஸ்பதி − பிருகஸ்பதி
*ந − நமக்கு
*ஸ்வஸ்தி − நன்மை
*ததாது தரட்டும்.
*விளக்கம் :*
*தேவர்களே ! காதுகளால் நாங்கள் நல்ல விஷயங்களைக் கேட்க வேண்டும்.
*பூஜிக்கத் தகுந்தவர்களே, கண்களால் நாங்கள் நல்ல விஷயங்களைக் காண வேண்டும்.
*உறுதியான அங்கங்களுடன் கூடிய உடலுடன் ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்க வேண்டும்.
*தேவர்களுக்கு நன்மை செய்த வண்ணம் வாழ வேண்டும்.
*பழம்புகழ்பெற்ற இந்திரன் நமக்கு நன்மை செய்யட்டும்.
*எல்லாம் அறிகின்ற சூரியன் நமக்கு மங்கலம் செய்யட்டும்
*தீமையை அழிக்கின்ற கருடன் நமக்கு நன்மை செய்யட்டும்.
*பிருஹஸ்பதி நமக்கு நன்மை தரட்டும் !
*மீண்டும் சந்திக்கலாம்..!*
Jansikannan438@gmail.com