சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
சோளம், நம்மில் பலருக்கும் இதை பிடிக்கும்.. ஆனால் இதனை டூர் அல்லது பீச் பக்கம் சென்றால் மட்டுமே சாப்பிடுகிறவம். அதிக சத்துக்கள் நிறைந்த சோளத்தை நம் அன்றாட டயட்டில் எடுத்துக்கொள்வது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் சோளத்தில் உள்ள சத்துக்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சோளத்தை சாப்பிடுவதால் நம் உடலுக்கு புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின், ஆன்டிஆக்சிடன்ட் என பல சத்துக்கள் கிடைக்கிறது.
சோளத்தில் நார்ச்சத்து உள்ளதால் உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஏற்ற உணவாகும். மேலும் இதய ஆரோக்கியம், சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளுதல் போன்ற நன்மைகள் சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும். இருப்பினும் அதனை அளவாக எடுத்துக்கொள்வது நல்லது. அளவு மீறினால் நல்ல சத்துக்கள் தீயவையாக மாறிவிடும்.
தினந்தோறும் நம் டயட்டில் சோளத்தை எடுத்துக்கொள்ளலாம். மேலும் நீரிழவு நோய் உள்ளவர்களும் சோளத்தை தாராளமாக சாப்பிடலாம். அதேபோல் கண் சார்ந்த பிரச்னை, வயது சார்ந்த பிரச்சனைகள் வராமல் காக்கும்.
சோளத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் உள்ளவர்கள் தங்களது டயட்டில் சோளத்தை எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்த்து குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
சோளத்தில் வைட்டமின் சி உள்ளதால் நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடல் ஆரோக்யத்திற்கு வழிவகுக்கும்.
சோளத்தை வேகவைத்தும், வயதானவர்கள் சூப்பாகவும் நம் அன்றாட டயட்டில் எடுத்துக்கொள்வது உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடியதாக அமையும்.