ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திர நாள் மிகவும் விசேஷமானது. இந்நாளில் அம்மனுக்கு உரிய மிகவும் சிறப்பான நாள். இந்நாளில் தான் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படும். இந்த விஷேச நாளில் அம்மனுக்கு பல்வேறு பிரசாதங்கள் செய்து படைத்து மக்கள் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளை செய்வார்கள். அப்படி ஆடி பூரம் நாளில் அம்மனுக்கு படைக்கும் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு தான் அக்காரவடிசல். அக்காரவடிசல் மிகவும் சுவையானது, நாவில் வைத்ததும் கரையக்கூடியது. வாயில் வைத்ததும் கரையும் செட்டிநாடு ஸ்பெஷல் ஆடி கும்மாயம் - எப்படி செய்யணும் தெரியுமா? நீங்கள் ஆடி பூரம் நாளில் வீட்டில் அம்மனுக்கு ஸ்பெஷலான ஸ்வீட் செய்து படைத்து வழிபட நினைத்தால், அக்காரவடிசலை செய்து படையுங்கள். இந்த அக்காரவடிசல் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். முக்கியமாக இந்த அக்காரவடிசலை மிகவும் சுலபமாக குக்கரிலேயே செய்யலாம். உங்களுக்கு அக்காரவடிசலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அக்காரவடிசல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்கும், அப்பளமும் இருந்தா.. மதியம் இப்படி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு செமயா இருக்கும்... தேவையான பொருட்கள்: * பாசிப்பருப்பு - 1/4 கப் * பச்சரிசி - 1 கப் * நெய் - 1 கப் * முந்திரி - 10-15 * உலர் திராட்சை - 15-20 * பொடித்த வெல்லம் - 3 கப் * தண்ணீர் - 1 கப் * சூடான பால் - 5 கப் + 3 கப் * குங்குமப்பூ - 1 சிட்டிகை * முட்கரண்டி - 1 * ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன் * பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை செய்முறை: * முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும். * பின் அதில் அரிசியை சேர்த்து, அரிசி சூடாகும் வரை நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். * பின்பு அதில் நீரை ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய்யை ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக மாறத் தொடங்கியதும், அதில் உலர் திராட்சையை சேர்த்து ப்ரை செய்து, அவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். * பின்னர் அதே வாணலியில் 3 கப் பொடித்த வெல்லத்தை சேர்த்து, அதில் 1 கப் நீரை ஊற்றி, வெல்லம் கரைந்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * அதன் பின் குக்கரில் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை சேர்த்து, அதில் 5 கப் சூடான பாலை ஊற்றி, குங்குமப்பூ சேர்த்து, குக்கரை அடுப்பில் வைத்து, ஒரு கொதி வர வைக்க வேண்டும். * பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு, அதனுள் ஒரு முட்கரண்டியை சாய்வாக வைக்க வேண்டும். இப்படி கரண்டியை வைப்பதால், அதில் உள்ள பால் பொங்காமல் இருக்கும். * பின்பு குக்கரை மூடி, 7-8 விசில் விட்டு இறக்க வேண்டும். * விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உள்ள கரண்டியை எடுத்துவிட்டு, ஒரு கரண்டியால் நன்கு மசித்து விட வேண்டும். * அடுத்து அதில் மீதமுள்ள 3 கப் சூடான பாலை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். * பின் மீண்டும் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி, நன்கு கிளறி, சிறிது நெய் ஊற்றி, ஏலக்காய் தூள் சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். * இறுதியாக அதில் பச்சை கற்பூரத்தை பொடி செய்து சேர்த்து, ப்ரை செய்து வைத்துள்ள முந்திரி, திராட்சை மற்றும் மீதமுள்ள அனைத்து நெய்யையும் ஊற்றி கிளறினால், சுவையான ஸ்பெஷல் அக்காரவடிசல் தயார்.
Monday, 28 July 2025
கோ தானம்
தானம் கொடுக்கும் வழக்கம், ஆன்மீகத்தில் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம், தீராத இன்னல்களிலும், சிக்கல்களிலும் குடும்பங்கள் சிக்கியிருக்கும்.. மாளாத கடன் பிரச்சினையிலிருந்தும் மீள முடியாமல் இருக்கும்.. இதுபோன்ற பிரச்சனைகள் இருக்குமானால், சில பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும் என்பார்கள்.. இதனால் குடும்பத்திலுள்ள தரித்திரங்கள் விலகி நன்மை பிறக்கும் என்பது நம்பிக்கையாகும்.. அந்தவகையில், பசுதானம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. ஆனால், இந்த பசு தானம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள், சில கட்டுப்பாடுகள் உள்ளன.. பசு தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
கோ தானம் ஆன்மீகத்தில் போற்றப்பட காரணம், பசுவின் கொம்பில் பிரம்மாவும் விஷ்ணுவும் வசிப்பதாக நம்பப்படுகிறது.
பசுவின் தலையில் மகாதேவனும், நெற்றியில் கௌரியும், நாசியில் கார்த்திகேயனும், கண்களில் சூரியன்-சந்திரன், காதில் அஷ்வினி குமாரன், பற்களில் வாசுதேவனும், நாக்கில் வருணன், தொண்டையில் இந்திரன், முடியில் சூரிய கதிர்கள், குளம்புகளில் கந்தர்வன், வயிற்றில் பூமி, 4 மடிகளில் 4 கடல்கள், கோமியத்தில் கங்கையும், சாணத்தில் யமுனையும் இருப்பதாக நம்பப்படுகிறது.
கவனிக்க வேண்டியவை
பசுவை சரியாக பராமரிக்கக்கூடிய சக்தி படைத்தவர்கள் மட்டுமே இந்த தானத்தை செய்ய வேண்டும்... தானம் செய்ய வேண்டிய பசு கன்றுடன் கூடியதாக இருக்க வேண்டும்... குறிப்பாக, முதல் கன்றாக இருந்தாலே நல்லது.. பசுவின் கொம்பும், கால், குளம்பு போன்றவை உடையாமலும், நோய் நொடி இல்லாமலும், முழு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதுபோன்ற பசுவையே தானம் செய்ய வேண்டும்.
பசு தானம் எப்போது செய்யலாம்
பசுவை தானம் செய்ய முடிவெடுத்தால், அதற்குரிய நாள், நட்சத்திரம் தெரிந்து செய்ய வேண்டும். அந்தவகையில், சித்திரை மாதத்தில் வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் சதுர்த்தியன்று விரதமிருந்து பசுவை தானம் செய்யலாம். இதனால், தானம் செய்பவர் கைலாசத்தில் சிவகணங்களுடன் சிவதரிசனம் செய்யும் பலனை பெறுவார்களாம்..
மேலும், பசு கிருஷ்ணருக்கு பிரியமானது என்பதால், இதனை தானம் செய்வதால் கிருஷ்ணரும் திருப்தி கொள்கிறார்.. அவருடைய ஆசியும் பூரணமாக கிடைக்கும்.
அதேபோல, ஒருவருக்கு தாம் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன், பசு தானத்தை செய்யலாம்.. இப்படி பசுவை தானம் செய்வதால் எம பயம் விலகும் என்பார்கள்.
எப்படி கோ தானம் செய்யலாம்
பசுவை தானம் செய்பவர்கள், குளித்து முடித்து சூரியனை வணங்கி, தங்களது பிரார்த்தனையை சொல்லி பசுவை தானமாக வழங்கலாம்.. அப்போது அந்த பசு மாட்டிற்கு தேவையான ஒரு வருடத்துக்கான தீவணத்தையும் சேர்த்தே தானம் செய்ய வேண்டும்.
ஒருவேளை தனி நபர்களுக்கு பசுவை தானமாக கொடுக்க விருப்பம் இல்லாதவர்கள் கோவில்களுக்கும் பசுவை தரலாம். அப்படி கோவில்களுக்கு தருவதானால், பசுவை பராமரிப்பதற்கான நிதியையும் சேர்த்து தரவேண்டும். எக்காரணம் கொண்டும், வயதான பசு, பால் கறவை அல்லாத பசு, கன்று இல்லாத பசுக்களை தானம் தரக்கூடாது.
வம்சம் தழைக்கும் - பாவம் தீரும்
சுப காரியங்கள் வெற்றிகரமாக நடக்க வேண்டுமானால், வம்சம் தழைக்க வேண்டுமானால், பாவங்கள் விலகவேண்டுமானால், பசுவை தானம் தரலாம். ஒருவர் கோ தானம் செய்வதால், அறியாமல் செய்யும் அனைத்து பாவங்களும் விலகும்.. அவர் மோட்சத்துக்கு செல்வதுடன், தன்னுடைய 7 தலைமுறையினர் மோட்சத்திற்கு போகவும் வழி செய்கிறார்.
கோ தானம் செய்யும்போது கடன் பிரச்சனை தீரும், நிதிப்பற்றாக்குறை சீராகும்.. பசுவை தானம் செய்வதால் பெரும் புண்ணியம் கிடைக்கும். பசு தானம் செய்பவர், தன்னுடைய முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்புவதாகவே கருதப்படுகிறது. எனவே, வாழ்நாளில் ஒருமுறையாவது பசுவை தானம் செய்துவிட வேண்டும்.
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்ப்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
Sunday, 27 July 2025
மேஷ லக்னத்தில் சூரியன் தனித்து இருந்தால்
மேஷ லக்னத்தில் சூரியன் தனித்து இருந்தால், அது ஒரு நல்ல அமைப்பு ஆகும். சூரியன் மேஷ ராசியில் உச்சமாக இருப்பதால், ஜாதகருக்கு நல்ல அந்தஸ்து, மதிப்பு, மரியாதை மற்றும் கௌரவம் கிடைக்கும். இது தவிர, ஜாதகர் தைரியசாலி, தலைமைப் பண்பு கொண்டவர், மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர் மற்றும் தன்னம்பிக்கை உடையவர் ஆவார்.
விளக்கம்:
உச்சம்:
மேஷ லக்னத்தில் சூரியன் உச்சம் பெறுவதால், ஜாதகருக்குரிய பலன்கள் மிகவும் அதிகமாக இருக்கும்.
நல்ல அந்தஸ்து:
சூரியன் லக்னத்தில் இருப்பதால், ஜாதகர் சமூகத்தில் நல்ல அந்தஸ்து பெறுவார்.
மதிப்பு, மரியாதை:
சூரியனின் கௌரவமான தன்மை ஜாதகருக்கு மற்றவர்களிடம் இருந்து மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தரும்.
கௌரவம்:
ஜாதகர் தனது செயல்களால் சமுதாயத்தில் கௌரவிக்கப்படுவார்.
தைரியசாலி:
மேஷ ராசியின் ஆளுமைப் பண்பு சூரியனுடன் சேர்ந்து ஜாதகரை தைரியசாலியாக மாற்றும்.
தலைமைப் பண்பு:
சூரியன் ஒரு தலைமைக் கிரகமாக இருப்பதால், ஜாதகர் தலைமைப் பண்புகளைக் கொண்டிருப்பார்.
உதவும் குணம்:
சூரியன் ஒரு தர்ம கிரகமாக இருப்பதால், ஜாதகர் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டிருப்பார்.
தன்னம்பிக்கை:
சூரியன் ஜாதகருக்குள் ஒரு வலுவான தன்னம்பிக்கையை உருவாக்கும்.
சுக போக வாழ்க்கை:
சூரியன் லக்னத்தில் இருப்பதால் சுக போக வாழ்க்கை அமையும்.
உடன்பிறப்புகளுக்கு உதவி:
சூரியன் லக்னத்தில் இருப்பதால், ஜாதகர் தனது உடன்பிறப்புகளுக்கு உதவுவார்.
இந்த அமைப்பு பொதுவாக ஒரு சாதகமான அமைப்பாகும், ஆனால், கிரகங்களின் மற்ற அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, சூரியனுடன் வேறு கிரகங்கள் சேர்ந்திருந்தால், அதன் பலன்கள் மாறுபடலாம். எனவே, ஒரு முழுமையான பலனை அறிய, ஒரு நல்ல ஜோதிடரை அணுகுவது நல்லது.
Friday, 25 July 2025
கோரோசனை
கோயில்களில் பூஜைக்குப் பயன்படுத்தப்படும் மிகவும் புனிதமான பொருட்களில் கோரோசனையும் ஒன்றாகும். கோரோசனை என்பது பசுவில் இருந்து எடுக்கப்படும் பொருளாகும். இது பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். சித்தர்கள் இந்த கோரோசனையை ஆன்மிகம் மற்றும் மருத்துவத்திற்குப் பயன்படுத்தி வந்தனர். முன்பெல்லாம் கோரோசனையை பாலில் சிறிது கலந்து குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். இதை தீட்டு மற்றும் தோஷம் நீங்க வேண்டும் என்பதற்காக செய்தனர். இந்த கோரோசனையை கஸ்தூரி என்னும் மானிடமிருந்து கூட எடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பசு என்பது எத்தகைய தெய்வத்தன்மை பொருந்தியது என்பதை அறிவோம். அத்தகைய பசுவின் பித்தப்பையில் இருந்துதான் இந்த கோரோசனை எடுக்கப்படுகிறது. இதை மாடு இயற்கையாக இறந்த பிறகு அதிலிருந்து எடுத்து காய வைத்து நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள்.
கோயில்களில் அபிஷேகத்திற்கு கோரோசனையை பயன்படுத்துவார்கள். இதை தானமாகக் கொடுப்பதால் குலவிருத்தி ஏற்படும். கோரோசனையை தினமும் பயன்படுத்துவதால், சர்வமும் வசியமாகும், ஈர்ப்பு சக்தியும் வசீகரத் தோற்றமும் கொடுக்கக்கூடியது கோரோசனையாகும். நேர்மறை எண்ணங்கள் நமக்கு உருவாகும். தோல்விகள், அவமானம் நம்மிடம் நெருங்காது. இதை நெற்றியில் வைத்துக்கொண்டு தொடங்கும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும்.
இதை பூஜையறையில் வைத்து தீப தூபம் காட்டி வழிபடுவது சிறந்ததாகும். வியாழக்கிழமையில் பூச நட்சத்திரம் வரும் நாளில் கோரோசனையை வெள்ளி தட்டில் வைத்து தூப தீபம் காட்டுவதால் வீட்டில் செல்வம் பெருகும். மேலும், வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்று நம்பப்படுகிறது.
கோரோசனை
கோரோசனை
கோரோசனை சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. முந்தய காலத்தில் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த ஒரு மேற்பூச்சு மருந்தாக கோரோசனை பயன்படுத்தப்பட்டது. கோரோசனையில் இயற்கையாகவே வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே அதிக அளவில் உள்ளன. அவை , அனைத்து வைட்டமின்களின் குறைபாடு நோய்களை குறைகிறது. கோரோசனையில் கால்சியம், துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம், செலினியம் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் உள்ளன. மேலும், இதில் ஆன்டிகான்வல்சண்ட், ஆன்டிஅலெர்ஜிக், ஆண்டிஸ்பாஸ்மோடிக் போன்ற பல மருத்துவப் பண்புகளை கொண்டுள்ளது.
பலன்கள்:
1. நாள்பட்ட இருமல் மற்றும் சளிக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.
2. வீங்கிய தொண்டையை குணப்படுத்தவும், கொதிப்பு, புண்கள் குணப்படுத்தவும் கோரோசனை பயன்படுத்தப்படுகிறது.
3. தோல் நிறத்தை மேம்படுத்துகிறது, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல், இரைப்பை குடல் அழற்சி, மயக்கமின்மை, தட்டம்மை, மற்றும் மூளைக்காய்ச்சல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது
அகங்காரம் என்றால் என்ன?
அகங்காரம் என்பது ஒருவரது மனதில் எழும் ஒருவிதமான கர்வம் அல்லது செருக்கு ஆகும். இது ஒருவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி, தான் பெரியவன் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. இதன் விளைவாக, மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவோ அல்லது மதிக்கவோ முடியாமல் போகலாம்.
அகங்காரத்தின் வெளிப்பாடுகள்:
ஆணவம்:
பிறரை தாழ்வாக மதிப்பிடுதல், தனது செயல்களை மட்டுமே சரி என்று நம்புதல்.
தலைக்கனம்:
தன்னைப் பற்றி மிகைப்படுத்தி பேசுதல், புகழுக்கு ஆசைப்படுதல்.
செருக்கு:
மற்றவர்களின் கருத்துக்களை மதிக்காமல், தனது கருத்தே சிறந்தது என்று வாதிடுதல்.
அகந்தை:
தனது சாதனைகளை மட்டுமே பெரிதாக எண்ணுதல், மற்றவர்களின் சாதனைகளை குறைத்து மதிப்பிடுதல்.
அகங்காரத்தைக் குறைக்க உதவும்.
தன்னைத்தானே விமர்சித்துக் கொள்ளுதல்: தனது செயல்களை தானே ஆராய்ந்து, தவறுகளைத் திருத்திக் கொள்ளுதல் அகங்காரத்தைக் குறைக்க உதவும்.
Thursday, 24 July 2025
அகங்காரம் அதாவது Ego அல்லது Pride
ஜாதகத்தில் அகங்காரம் (அதாவது Ego அல்லது Pride) அதிகமாக இருக்கும் ஒரு நபரின் ராசி கட்டத்தில் சில முக்கிய கிரகங்களின் நிலைமைகள், பார்வைகள், மற்றும் பாவங்களின் அமைப்புகள் அதன் காரணமாக இருக்கலாம். இதோ சில முக்கியமான அம்சங்கள்:
🔥 அகங்காரம் குறிக்கக்கூடிய கிரகங்கள் மற்றும் அமைப்புகள்:
1. சூரியன் (Sun):
சூரியன் அஹங்காரம், அதிக மரியாதை, ஆதிக்கம், மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை குறிக்கும்.
சூரியன் மிகவும்தீவிரமாக (அதாவது உச்சத்தில் அல்லது சுயராசியில்) இருந்தால், அதுவே ஒரு நபருக்கு பெரும் அகங்காரத்தை தரலாம்.
உச்சம்: மேஷ ராசியில் (Aries)
சுயராசி: சிங்கம் (Leo)
சூரியன் 1ம் பாவத்தில் (லக்னத்தில்), 10ம் பாவத்தில் (தொழில் / பதவி), அல்லது 5ம் பாவத்தில் இருந்தால், நபர் தன்னை உயர்வாக நினைத்துக் கொள்ளக்கூடும்.
2. ராகு (Rahu):
ராகு ஒரு நபருக்கு தவறான நம்பிக்கைகள், மிகைப்படுத்தப்பட்ட தன்னம்பிக்கை, மற்றும் ஆசைமிகுந்த அகங்காரத்தை ஏற்படுத்தலாம்.
சூரியன்-ராகு சேர்க்கை (அரிஷ்ட யோகம்) உள்ளவாறான சந்தர்ப்பங்களில் அகங்காரம், புகழ், மற்றும் வீண்பெருமை ஏற்படலாம்.
3. லக்கினாதிபதி & சூரியன் இணைப்பு:
லக்னத்தின் அதிபதி (1ம் பாவத்தின் கவர்னர்) சூரியனுடன் சேரும்போது அல்லது சூரியன் மிகவும் பலமாக இருக்கும் போது, நபர் தன்னை எப்போதும் உயர்வாகவே நினைக்க வாய்ப்பு உண்டு.
4. சிம்ம ராசி (Leo Lagna or Moon Sign):
சிங்கம் ஒரு ராஜ ராசி (kingly sign), சூரியனின் வீட்டாக இருப்பதால், அகங்காரம், கட்டளையிடும் தன்மை, மற்றும் சுயநலம் அதிகமாக இருக்கலாம்.
💡 அகங்காரம் குறைய காரணமாக அமையக்கூடிய அமைப்புகள்:
சந்திரன் (Moon), குரு (Guru / Jupiter), மற்றும் சனி (Saturn) ஆகியவை சூரியனுடன் இணைந்து இருந்தால், அகங்காரம் ஒரு எல்லைக்குள் கட்டுப்பட வாய்ப்பு உண்டு.
சனி பாவபாதிக்கிறார் என்றால் (சனி பார்வை கொடுப்பது அல்லது சேர்வது), அகங்காரம் குறையலாம் — காரணம் சனி தாழ்மையை கற்றுத்தரும்.
சுருக்கமாக:
அகங்காரம் அதிகமாக இருக்கக்கூடிய ஜாதக அமைப்புகள்:
சூரியன் உச்சத்தில் அல்லது சுயராசியில்
சூரியன் லக்னத்தில், 10ம் பாவத்தில், 5ம் பாவத்தில்
சூரியன்-ராகு சந்ததி
சிம்ம லக்னம் / சிம்ம சந்திர லக்னம்
குரு, சந்திரன் போன்ற கிரகங்கள் பலவீனமாக இருப்பது
.
அகங்காரம்
அகங்காரம் அகங்காரத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். குறிப்பாக, சூரியன், செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற கிரகங்கள் லக்னத்திற்கு 1, 2, 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களில் வலுவாக இருந்தால், அகங்காரம் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், 1, 5, 9 ஆம் பாவங்கள் திரிகோண ஸ்தானங்கள் என்றும், இவை அகங்காரத்தை குறிக்கும் இடங்களாகவும் கருதப்படுகிறது
விளக்கம்:
கிரகங்களின் பங்கு:
சூரியன்: ஆளுமை, அதிகாரம், அகங்காரத்தின் காரணியாக கருதப்படுகிறது. சூரியன் வலுவாக இருந்தால், ஒருவருக்கு தன்னம்பிக்கை மற்றும் அகங்காரம் அதிகரிக்கலாம்.
செவ்வாய்: தைரியம், வீரம், அதிகாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. செவ்வாய் வலுவாக இருந்தால், ஒருவருக்கு கோபம் மற்றும் அகங்காரம் அதிகரிக்கலாம்.
ராகு: மாயை, கற்பனை, குழப்பம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. ராகு வலுவாக இருந்தால், ஒருவருக்கு அகங்காரம் மற்றும் சுயநலம் அதிகரிக்கலாம்.
கேது: ஆன்மீகம், துறவு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. கேது வலுவாக இருந்தால், ஒருவருக்கு அகங்காரம் மற்றும் தற்பெருமை அதிகரிக்கலாம்.
பாவங்களின் பங்கு:
1 ஆம் பாவம் (லக்னம்): உடல், மனம், ஆளுமை ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த பாவத்தில் கிரகங்கள் வலுவாக இருந்தால், ஒருவருக்கு தன்னம்பிக்கை மற்றும் அகங்காரம் அதிகரிக்கும்.
2 ஆம் பாவம்: வாக்கு, குடும்பம், தனம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த பாவத்தில் கிரகங்கள் வலுவாக இருந்தால், ஒருவருக்கு பேச்சு மற்றும் குடும்ப விஷயங்களில் அகங்காரம் அதிகரிக்கும்.
4 ஆம் பாவம்: சுகம், தாய், வீடு ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த பாவத்தில் கிரகங்கள் வலுவாக இருந்தால், ஒருவருக்கு சுகபோகங்கள் மற்றும் சொத்துக்களில் அகங்காரம் அதிகரிக்கும்
5 ஆம் பாவம்: புத்தி, குழந்தைகள், பூர்வ புண்ணியம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த பாவத்தில் கிரகங்கள் வலுவாக இருந்தால், ஒருவருக்கு அறிவு, குழந்தைகள் மற்றும் பூர்வ புண்ணியத்தில் அகங்காரம் அதிகரிக்கும்.
7 ஆம் பாவம்: மனைவி, தொழில், கூட்டாண்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த பாவத்தில் கிரகங்கள் வலுவாக இருந்தால், ஒருவருக்கு மனைவி, தொழில் மற்றும் கூட்டாளிகளில் அகங்காரம் அதிகரிக்கும்.
9 ஆம் பாவம்: தந்தை, அதிர்ஷ்டம், மதம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த பாவத்தில் கிரகங்கள் வலுவாக இருந்தால், ஒருவருக்கு தந்தை, அதிர்ஷ்டம் மற்றும் மத விஷயங்களில் அகங்காரம் அதிகரிக்கும்.
10 ஆம் பாவம்: தொழில், பெயர், புகழ் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த பாவத்தில் கிரகங்கள் வலுவாக இருந்தால், ஒருவருக்கு தொழில், பெயர் மற்றும் புகழில் அகங்காரம் அதிகரிக்கும்.
திரிகோண ஸ்தானங்கள்:
1, 5, 9 ஆம் பாவங்கள் திரிகோண ஸ்தானங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த பாவங்கள் அதிர்ஷ்டம் மற்றும் வெற்றி ஆகியவற்றைக் குறிக்கின்றன. இந்த பாவங்களில் கிரகங்கள் வலுவாக இருந்தால், ஒருவருக்கு அகங்காரம் மற்றும் தற்பெருமை அதிகரிக்கலாம்.
Monday, 21 July 2025
Celiac Disease
சிலியாக் நோய் (Celiac Disease) பற்றி தமிழில் விளக்கம் கீழே உள்ளது:
---
✅ சிலியாக் நோய் என்றால் என்ன?
சிலியாக் நோய் என்பது ஒரு தானாக ஏற்படும் எதிர்ப்பு செயல்முறை நோய் (autoimmune disease) ஆகும். இதில், ஒருவர் கிளூட்டன் (gluten) என்ற புரதத்தை சாப்பிடும்போது, அவருடைய உள்ளாது குடலின் சுவர் (small intestine lining) மீது அவருடைய உடல் தானாகவே தாக்குதல் நடத்தும்.
---
🔍 கிளூட்டன் என்றால் என்ன?
கிளூட்டன் என்பது கோதுமை, மால்ட் (barley), சேரகம் (rye) போன்ற தானியங்களில் உள்ள ஒரு புரதமாகும். இது பல உணவுப் பொருட்களில் இருக்கும்.
---
⚠️ சிலியாக் நோயின் அறிகுறிகள்:
சிலியாக் நோயின் அறிகுறிகள் வயதுக்கேற்ப மாறுபடும்.
குழந்தைகளில்:
வயிற்று வலி
வாந்தி, மலம் சரியாக இல்லாமை (அல்லது சர்க்கரைப் போக்கு)
மெலிதாக வளர்ச்சி, உடல் எடை குறைவு
மூட்டு வலி
பெரியவர்களில்:
தைராய்டு கோளாறு, குருதி சோகை (Anemia)
வீக்கம், அடிக்கடி மலம்
மன அழுத்தம், சோர்வு
தோலில் வறண்டும் சுரக்கும்தொற்றுகள் (Dermatitis Herpetiformis)
---
🧪 நோய் கண்டறிதல்:
இரத்த பரிசோதனை மூலம் கிளூட்டனுக்கான எதிர்ப்பு சத்துக்களை காணலாம்
குடல் உள் பார்வை (Endoscopy) மற்றும் துண்டு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தலாம்
---
🥗 சிகிச்சை:
சிலியாக் நோய்க்கு நிலையான சிகிச்சை இல்லை, ஆனால்:
கிளூட்டன் இல்லாத உணவுகள் மட்டும் வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்வது தான் முக்கியமான பராமரிப்பு.
கோதுமை, மால்ட், சேரகம் போன்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
---
🌾 கிளூட்டன் இல்லாத உணவுகள்:
அரிசி
ராகி
சாமை
கீனுவா (Quinoa)
பாசிப்பருப்பு, துவரம்பருப்பு
சிறுதானியங்கள
தலைக்கு குளிச்சா சளி பிடிக்கும் என்பது உண்மை தானா?
தலைக்கு குளிச்சா சளி பிடிக்கும் என்பது உண்மை தானா?
மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், இதுவரை தலைக்கு வாரத்திற்கு 2-3 முறை குளித்து வந்தவர்கள், இனிமேல் வாரம் ஒருமுறை தலைக்கு குளிக்கும் பழக்கத்திற்கு மாறியிருப்பார்கள். இதற்கு காரணம் எங்கு தலைக்கு குளித்தால் சளி பிடித்துவிடுமோ என்ற ஒரு பயம் தான்.
மழை நேரத்தில் அல்லது பனி காலத்தில் தலைக்கு குளிச்சா சளி பிடிக்கும் என்று சின்ன வயதில் இருந்து நம் பாட்டிமார்கள் மற்றும் தாய்மார்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். அதற்கேற்ப சிலருக்கு தலைக்கு குளித்தால் இப்படி சளி பிடித்து அவதிப்பட வைக்கும்.
இதனால் இன்று வரை நிறைய பேர் இதை மனதில் கொண்டு குளிர்காலத்தில் அல்லது மழை காலத்தில் தலைக்கு குளிக்க யோசித்து வருவதுண்டு. உண்மையிலேயே தலைக்கு குளித்தால் சளி பிடிக்குமா? தலைக்கு குளிப்பதற்கும், சளி பிடிப்பதற்கும் தொடர்பு உள்ளதா? அல்லது இது கட்டுக்கதை அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதில் அவர் கூறியதாவது, "தலைக்கு குளித்தால் சளி பிடிக்குமா என்ற ஒரு கேள்வி உலகளவில் பெரும்பாலானோரின் மனதில் இருக்கும் ஒன்றாகும். இப்படி தலைக்கு குளிப்பதற்கும், சளி பிடிப்பதற்கும் என்ன தொடர்பை அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் குளித்து விட்டு, கை கால்கள் மிகவும் ஜில்லென்று இருக்கும் போது வெளியே சென்றால் சளி பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிய வந்தது. அதில் எந்த வகையான சளி பிடித்தது என்பதை கவனிக்க வேண்டும். முதலில் சளியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று கிருமி சளி, அழற்சி சளி. இதில் கிருமி சளி அதிகமாகுமா என்று இங்கிலாந்தில் உள்ள கார்டிப் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரண்டு குழுக்களாக மக்களை பிரித்து, ஒரு ப்ளூ சீசனில் ஒரு குழுவினரை தலைக்கு கூட குளிக்க சொல்லவில்லை, கை மற்றும் கால்களை ஜில் நீரில் ஒரு 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அவர்களை கவனித்துள்ளனர்.
கருஞ்சீரகத்துடன் பூண்டு தேன் கலந்து சாப்பிட்டால் உண்மையில் நெஞ்சு சளி கரையுமா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க..கருஞ்சீரகத்துடன் பூண்டு தேன் கலந்து சாப்பிட்டால் உண்மையில் நெஞ்சு சளி கரையுமா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க..
அதேப் போல் மற்றொரு குழுவினரை சாதாரணமாக வெளியே செல்ல அனுமதித்துள்ளனர். இந்த இரண்டு குழுக்களை ஒப்பிட்டு பார்க்கையில், கை கால்களை தொடர்ந்து நீரில் நனைத்த குழுவினருக்கு சளி பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இது எதனால் என்று பார்த்தால், பொதுவாக ஜில் நீரில் கை, கால்களை நனைக்கும் போது, உடலானது அந்த வெப்பநிலையை எடுத்துக் கொள்ளும். ஆனால் உடல் அதிகமாக குளிர்ச்சியாகாமல் இருக்க உடலில் ஆங்காங்கு இரத்தக்குழாய்கள் சுருங்கி, உடலின் வெப்பநிலை வெளியே செல்லாமல் பார்த்துக் கொள்ளும். இப்படி ப்ளூ சீசனில் வெளியே செல்லும் போது, இரத்தக்குழாய்கள் சுருங்கினால், உடலை ஏதேனும் கிருமிகள் தாக்கினாலும், இரத்த குழாய் சுருங்குவதால் வெள்ளையணுக்களால் கிருமிகளை எதிர்க்க முடியாமல் போய், தொற்று ஏற்படலாம். இருப்பினும், இதன் ஆபத்து குறைவு தான். எனவே தலைக்கு குளிப்பதால் கிருமி சளி பிடிக்கும் என்பதற்கான உறுதியான ஆராய்ச்சிகள் ஏதும் இல்லை." என்று கூறினார்.
அதே சமயம் அலர்ஜிக் ரைனைடிஸ் என்னும் அடிக்கடி தும்மல், அலர்ஜிக் சைனஸைடிஸ் என்னும் அழற்சியால் மூக்கடைப்பு அல்லது தலைவலி போன்றவற்றால் அவதிப்படுபவர்களை கொண்டு ஆய்வு செய்து பார்த்ததில், இவர்களின் தலைப்பகுதி குளிர்ச்சியாக்கும் போது மூளை அதிகமாக குளிர்ச்சியாகாமல் இருக்க உடம்பு சில பாதுகாப்பு செயல்முறையை மேற்கொள்கிறது. அது என்னவெனில், உள்ளே இருக்கக்கூடிய எத்மாய்டு மற்றும் ஸ்பீனாய்டு சைனஸ் சுரப்பியின் வழிப்பாதை மூடிக் கொண்டு, அதன் விளைவாக உள்ளேயே சுரப்புகள் சேர்ந்து கொள்ளும். இதன் காரணமாக தான் நிறைய பேர் தலைக்கு குளித்த பின் தலை பாரத்தை சந்திக்கின்றனர். எனவே ஏற்கனவே அழற்சி உள்ளவர்கள் ஜில் நீரில் தலைக்கு குளிக்கும் போது, தும்மல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம்." என்று கூறினார்.
"மொத்தத்தில் தலைக்கு குளித்தால் சளி பிடிக்குமா என்றால், கிரும சளி பெரிதளவில் பிடிக்க வாய்ப்பில்லை. ஆனால் அழற்சி இருப்பவர்கள் குளிக்கும் போது, சளியின் அறிகுறிகளை தற்காலிகமாக 1-2 மணிநேரம் சந்திக்க நேரிடும்." என்றும் டாக்டர் அருண்குணமார் கூறினார். எனவே நண்பர்களே, உங்களுக்கு அழற்சி பிரச்சனைகள் இருந்தால், குளிர் அல்லது மழை காலத்தில் தலைக்கு குளிக்கும் போது, சளியின் அறிகுறிகளை ஓரளவு சந்திக்க நேரிடும். ஆகவே சற்று கவனமாக இருங்கள்.
Sunday, 20 July 2025
வடகலை,தென்கலை
தென்கலை, பிராட்டியை எல்லா ஜீவர்களின் உருவகமாகக் காண்கிறது.
வடகலை, விஷ்ணுவையும் பிராட்டியையும் ஒருங்கிணைத்து பரமனின் உருவகமாகப் பார்க்கிறது. இந்த உருவகத்திற்கு ‘ஈருடல் ஓருயிர்’ அல்லது மிதுனம் என்று பெயர்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள்
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்!
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள், வணங்க வேண்டிய தலங்கள், தெய்வங்கள் பற்றி அறிந்துகொள்ள...
செவ்வாயை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் அவிட்டம். இந்த நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் மகர ராசியிலும் அடுத்த இரண்டு பாதங்கள் கும்ப ராசியிலும் இடம்பெறும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். ஒருவன் கெட்டவனாக இருந்தால்கூடப் பொறுத்துக்கொள்வீர்கள். ஆனால், நம்பிக்கை துரோகத்தைப் பொறுத்துக் கொள்ள மாட்டீர்கள். பெற்றோரிடம் மிகுந்த பாசம் கொண்டிருப்பீர்கள். கஷ்டமான சூழ்நிலையில் கூட அவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வீர்கள். இசையில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பீர்கள். `உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை' என்று பாரதி பாடியதற்குப் பொருத்தமானவராக பூகம்பமே வந்தாலும் பதறமாட்டீர்கள். சுயமாக உழைத்து முன்னேறவேண்டும் என்று விரும்புவீர்கள். இனப் பற்றும் தேசப்பற்றும் மிக்கவர்கள். நாட்டின் நன்மைக்காக எதையாவது செய்யவேண்டும் என்று நினைப்பீர்கள். தியாகத்துக்கு மதிப்புத் தருவீர்கள். நீங்களாக சண்டைக்குப் போகமாட்டீர்கள். வந்த சண்டையை இரண்டில் ஒரு கை பார்த்துவிடுவீர்கள்.
வால்காவிலிருந்து கங்கை வரை
யதார்த்தமாகச் சிந்திப்பீர்கள். உறவினர்களை விட நண்பர்களிடம் அதிக அன்பு செலுத்துவீர்கள். ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பீர்கள். அதே தருணத்தில் மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்களாகவும் இருப்பீர்கள். எதையும் காசு கொடுத்து வாங்க நினைப்பீர்களே தவிர, இலவசமாக எதையும் யாரிடமிருந்தும் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள். உழைப்பதற்குச் சளைக்கமாட்டீர்கள். ஆனால், உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காதபோது சோர்ந்துவிடுவீர்கள். வசதி வாய்ப்புகள் இருந்தாலும், எளிமையாக இருப்பதையே விரும்புவீர்கள். தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களை உபசரிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தாம். வாழ்க்கையில் எத்தனை போராட்டங்கள் எதிர்ப்பட்டாலும் எதிர்த்து நின்று வெற்றி பெறுவீர்கள். நகைகள் அணிந்துகொள்வதில் விருப்பமுடையவர்கள். மென்மையான மனம் கொண்ட நீங்கள், மற்றவர்களின் விமர்சனத்தைப் பொறுத்துக்கொள்ள மாட்டீர்கள். அரசாங்கத்தினரின் நட்பைப் பெற்றிருப்பீர்கள். முக்கியப் பிரமுகர்களும் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள்.
இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்...
அவிட்டம் 1-ம் பாதம்:
நட்சத்திர அதிபதி - செவ்வாய்; ராசி அதிபதி - மகர சனி; நவாம்ச அதிபதி - சூரியன்
நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருப்பீர்கள். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்களை விட்டு ஒதுங்கிவிடுவீர்கள். நண்பர்கள் பலர் இருந்தாலும் சிலரிடம் மட்டுமே நெருங்கிப் பழகுவீர்கள். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வீர்கள். வாழ்க்கைத் துணை, பிள்ளைகளிடம் மிகுந்த பாசம் கொண்டிருப்பீர்கள். உங்களிடம் இருப்பதை மற்றவர்கள் கேட்டால் கொடுத்து உதவும் மனப்பான்மையைப் பெற்றிருப்பீர்கள். மன்னிக்கும் மனப்பான்மையைப் பெற்றிருப்பீர்கள். உறவினர்களிடம் ஓர் அளவோடுதான் பழகுவீர்கள். கிடைப்பதை உண்பீர்கள். உங்களில் சிலர் அரசியலில் ஈடுபட்டு பிரகாசிப்பீர்கள். `என் வழி தனி வழி' என்று உங்களுக்கென்று தனி வழி ஏற்படுத்திக்கொள்வீர்கள். வாழ்க்கையில் எதிர்பாராத பல திருப்பங்களைச் சந்திப்பீர்கள்.
அவிட்டம் 2-ம் பாதம்:
நட்சத்திர அதிபதி - செவ்வாய்; ராசி அதிபதி - மகர சனி; நவாம்ச அதிபதி - புதன்
அவிட்டம் இரண்டாம் பாதத்துக்கு அதிபதி உச்சம் பெற்ற கன்னி புதன். சவாலான காரியங்களைக் கூட சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். பல விஷயங்களையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே பேசுவீர்கள். தவறான பாதைக்குச் செல்லமாட்டீர்கள். மற்றவர்கள் தவறு செய்தால் கண்டிக்கவும் தயங்கமாட்டீர்கள். இயற்கை யெழில் சூழ்ந்த இடங்களுக்குச் சென்று வருவதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். உணவு தரமாகவும் ருசியாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். காதலித்துப் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வீர்கள். நடிப்புத் துறையிலும் ஈடுபடக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். எதிரிகளிடம் நேரடியாக மோதாமல், மறைமுகமாக அவர்களை வெற்றி கொள்வீர்கள். குடும்பத்தினரிடம் மிகுந்த அன்பு செலுத்துவீர்கள். பெற்றோருக்கு எந்தத் துன்பமும் நேரிடாமல் பார்த்துக்கொள்வீர்கள்.
அவிட்டம் - 3-ம் பாதம்:
நட்சத்திர அதிபதி - செவ்வாய்; ராசி அதிபதி - கும்ப சனி; நவாம்ச அதிபதி - சுக்கிரன்
அவிட்டம் மூன்றாம் பாதத்துக்கு அதிபதி சுக்கிரன். மற்றவர்களை வசீகரிக்கும் முகத் தோற்றம் கொண்டவர்களாக இருப்பீர்கள். ஆனால், அடிக்கடி சோம்பல் குணம் தலைதூக்கும். புதுப்புது டிசைன்களில் ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்துகொள்வதில் விருப்பமுடையவர்களாக இருப்பீர்கள். அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பீர்கள். யதார்த்தமாகச் செயல்படுவீர்கள். எப்படிப்பட்ட சூழ்ச்சிகளையும் கண்டறிந்து முறியடிப்பதில் வல்லவராக இருப்பீர்கள். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளை அதிகம் நேசிப்பதுடன், அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பீர் கள். சில நேரங்களில் முன்கோபத்தின் காரணமாக வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, பிறகு அதற்காக வருந்தவும் செய்வீர்கள். உங்கள் மனதில் இருப்பதை சுலபத்தில் வெளிப்படுத்த மாட்டீர்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்த உதவி செய்வீர்கள். பெற்றோர் மறுத்து விட்டாலும், காதலித்தவரையே திருமணம் செய்துகொள்வீர்கள்.
அவிட்டம் 4-ம் பாதம்:
நட்சத்திர அதிபதி - செவ்வாய்; ராசி அதிபதி - கும்ப சனி; நவாம்ச அதிபதி - செவ்வாய்
மன உறுதி மிக்கவர்களாகவும், மற்றவர்களை அடக்கி ஆளும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பீர்கள். அடிக்கடி முன்கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, பிறகு அதற்காக வருத்தப்படச் செய்வீர்கள். மற்றவர்களை சுலபத்தில் நம்பிவிட மாட்டீர்கள். மற்றவர்களிடம் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொள்வீர்கள். எப்போதும் தனிமையில் இருக்கவேண்டு மென்று விரும்புவீர்கள். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளுக்குப் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருப்பீர்கள். பாதுகாப்புத் துறையில் பெயரும் புகழும் பெறுவீர்கள். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் மிகவும் யோசிப்பீர்கள். சில நேரங்களில் சுயநலத்துடன் நடந்துகொள்வீர்கள். மற்றவர்களிடம் விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளாமல், மனதுக்குள்ளேயே வைத்துப் புழுங்குவீர்கள். படிப்பில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டீர்கள். ஆனாலும் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றுவிடுவீர்கள். பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் வரனையே திருமணம் செய்து கொள்வீர்கள்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ’தவிட்டு பானை எல்லாம் தங்கமாக இருக்கும்’ என்பவார்கள். ஜீவன ஸ்தானமான மகர ராசியில் பிறந்தவர்கள் உழைப்புக்கு முக்கியத்துவம் தருவார்கள். உழைப்பவர்கள்
அனைவரும் கண்டிப்பாக செல்வத்தை பெற முடியும்”
”அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ’தவிட்டு பானை எல்லாம் தங்கமாக இருக்கும்’ என்பவார்கள். ஜீவன ஸ்தானமான மகர ராசியில் பிறந்தவர்கள் உழைப்புக்கு முக்கியத்துவம் தருவார்கள். உழைப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக செல்வத்தை பெற முடியும்”
”அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ’தவிட்டு பானை எல்லாம் தங்கமாக இருக்கும்’ என்பவார்கள். ஜீவன ஸ்தானமான மகர ராசியில் பிறந்தவர்கள் உழைப்புக்கு முக்கியத்துவம் தருவார்கள். உழைப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக செல்வத்தை பெற முடியும்”
அவிட்டம் நட்சத்திரத்தின் பலன்கள்
செவ்வாய் பகவானின் ஆதிக்கம் பெற்ற அவிட்டம் நட்சத்திரம் உள்ளது. இதன் முதல் இரண்டு பாதங்கள் மகரம் ராசியிலும், கடைசி இரண்டு பாதங்கள் கும்பம் ராசியிலும் உள்ளது.
பாதி நட்சத்திரம் மகரத்திலும், மீதி கும்ப ராசியிலும் இந்த நட்சத்திரம் உள்ளதால் இது உடலற்ற நட்சத்திரமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.
மகரம் மற்றும் கும்பம் ராசிகள் சனி பகவானின் ஆட்சி பெற்ற ராசிகளாக உள்ளதால் அவிட்டம் நட்சத்திரம் முழுவதும் சனியின் வீடான ராசியில் மட்டுமே வருகிறது.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ’தவிட்டு பானை எல்லாம் தங்கமாக இருக்கும்’ என்பவார்கள். ஜீவன ஸ்தானமான மகர ராசியில் பிறந்தவர்கள் உழைப்புக்கு முக்கியத்துவம் தருவார்கள். உழைப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக செல்வத்தை பெற முடியும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியமானவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களால் பசி தாங்க முடியாது. ஆனாலும் கொஞ்சமாக சாப்பிடக்கூடியவர்கள்.
கம்பீரத் தோற்றத்தை கொண்டவர்களாக இருக்கும் இவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள். ஆனாலும் கொஞ்சம் கர்வம் இவர்களிடம் இருக்கும்.
பெண்களிடம் இவர்களுக்கு மோகம் இருக்கும். ஒருவரை பார்த்த உடனே அவர்களை புரிந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள். ஒருவர் மீது இவர்களுக்கு நம்பிக்கை வந்தால், அவர்களை அருகிலேயே வைத்துக் கொள்வார்கள். ஆனால் நம்பிக்கை வரவில்லை என்றால் அவர் மகாபுத்திசாலியாக இருந்தாலும், அவரை அருகில் வைத்துக் கொள்ளமாட்டார்கள்.
இந்த நட்சத்திரக்காரர்கள் இசைப்பிரியர்களாக இருப்பார்கள்.
அவிட்ட நட்சத்திரம் ராட்சஷ கணம் பொருந்திய நட்சத்திரம் ஆகும் என்பதால் இவர்களுக்கு அதிகாரத் தோரணை இருக்கும். இந்த நட்சத்திரத்தின் விலங்காக பெண் சிங்கமும், விருட்சமாக வன்னி மரமும், பறவையாக பொன் வண்டும் உள்ளது.
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தஞ்சாவூருக்கு அருகே உள்ள கீழக்கொளுக்கை கிராமத்தில் உள்ள பிரம்ம ஞானபுரிஸ்வரரை வழிபடுவது சிறப்பு ஆகும். அதே வேலையில் உங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்வதும் சிறப்புத்தான்.
அனந்த சயண பெருமாள் மற்றும் அஷ்ட வசுக்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்ததாக புராண வரலாறுகள் உண்டு.
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக செவ்வாய் தசை வரும். இவர்களின் வசிய நட்சத்திரமாக பூராட்டாதி நட்சத்திரம் உள்ளது.
இந்த இரு நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் இணையும் போது சிறப்பான தம்பதிகளாக இருப்பார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு மகாதிசை, ராகு புத்திகள், சனி மகாதிசை சனி புத்திகள், கேது மகாதிசை கேது புத்திகள், சூர்ய மகாதிசை சூரிய புத்திகள், சந்திர மகாதிசை சந்திரபுத்திக்கள் அதிகமான நற்பலனை கண்டிப்பாக ஏற்படுத்தி வருவார்கள்.
இந்த நட்சத்திரக்காரர்களுக்கு, திருவாதிரை, சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்ரட்டாதி, நட்சத்திர நாட்களில் நல்ல செயல்களை தொடங்கினால் வெற்றி உறுதி ஆகும்
Saturday, 19 July 2025
அவிட்டம் தவிட்டுப்பானையை பொன்னாக்கும்’ உண்மையா?
’அவிட்டம் தவிட்டுப்பானையை பொன்னாக்கும்’ உண்மையா? ’அவிட்டத்தில் பிறந்தால் அயலானுக்கு கொடுக்காதே!’
’அவிட்டம் தவிட்டுப்பானையை பொன்னாக்கும்’ உண்மையா? ’
நட்சத்திரம் "அவிட்டம்" எனும் நட்சத்திரம். இது செவ்வாயின் நட்சத்திரங்களில் ஒன்று. இது நட்சத்திர வரிசையில் 23வது நட்சத்திரம். அவிட்ட நட்சத்திரம் மகர ராசியில் இரண்டு பாதங்களும், கும்ப ராசியில் இரண்டு பாதங்களுமாக இருக்கும்.
இது வானில் பார்ப்பதற்கு மிருதங்கம் போல தோற்றமளிக்கக் கூடியது. மிருதங்கம் எப்படி சுப விசேஷங்களிலும், மங்கல காரியங்களிலும் இசைக்கப் பயன்படுகிறதோ அதுபோல சுப விசேஷங்கள் அனைத்தும் செய்ய ஏற்ற நட்சத்திரம்.
"அவிட்டம் தவிட்டுப்பானையும் பொன்னாக்கும்' என்று ஒரு ஜோதிடப் பழமொழி உள்ளது. அதாவது தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற பழமொழிக்கு இணையானது இந்த ஜோதிடப் பழமொழி. எனவே அவிட்ட நட்சத்திரக்காரர்கள் எதைத் தொட்டாலும் பொன்னாகும். அதாவது, வெற்றிகரமாக முடியும் என்பதுதான் இதற்கு அர்த்தம்.
மேலும் அவிட்டம் நட்சத்திரம் குறித்தும் இன்னொரு முக்கியமான பழமொழி உண்டு.
.
"அவிட்டத்தில் பெண் பிறந்தால் அயலானுக்கு கொடுக்காதே" என்றொரு முதுமொழியை அறிந்திருக்கிறீர்களா?
அதாவது, அவிட்ட நட்சத்திரத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் அந்தப் பெண்ணை வெளி நபருக்குக் கொடுக்காமல் சொந்தத்திலேயே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதாவது அவிட்டத்தில் பெண் பிறந்தால் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்பார்கள். அந்த அதிர்ஷ்டம் தங்கள் குடும்பத்திற்குப் பயன்பட வேண்டும், வேறு குடும்பத்திற்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது இந்தப் பழமொழி. அது தற்காலத்திற்கு சாத்தியமில்லை. சொந்தங்களையெல்லாம் விட்டு, தனித்தனி தீவுகளாக விலகியிருக்கிற சூழல் இன்றைக்கு. அவிட்டத்தின் பெருமையை நீங்கள் இதன் மூலமாக உணர்வதற்காக சொல்கிறேன். அவிட்டம் எனும் நட்சத்திரம் அத்தனை மகத்துவம் வாய்ந்த நட்சத்திரம். அதிர்ஷ்டத்தையும், லட்சுமி கடாட்சத்தையும், செல்வ வளத்தையும் அள்ளிக் கொடுக்கக் கூடிய நட்சத்திரம்.
தேவர்களின் தலைவனான இந்திரன், அந்த இந்திரனின் மனைவியான இந்திராணியின் நட்சத்திரம் அவிட்டம்.
அஷ்ட வசுக்கள் எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அஷ்ட வசுக்கள் பிறந்தது அவிட்ட நட்சத்திரத்தில்தான். வசு என்றால் வெளி என்று அர்த்தம் ஆகும். அதாவது இந்தப் பிரபஞ்ச இயக்கத்தை இயக்கிக் கொண்டிருக்கின்ற பஞ்சபூதங்கள் முதல் சூரிய சந்திரர்கள் வரை அனைத்து இயக்கங்களையும் சரியாக செயல்பட வைக்கின்ற இடத்தில் இருப்பவர்கள் தான் அஷ்ட வசுக்கள். இவர்கள் முறையே, தரா, அனலன், ஆப, அனிலன், துருவன், சோமா, பிரபாசா, பிரத்யூசன் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பணிகள் உள்ளன.
அஷ்ட வசுக்களில் முதலாவதாக இருப்பவர் "தரா" என்னும் வசு. இவர் பூமியையும், "அனலன்" எனும் வசு நெருப்பையும், "ஆப" எனும் வசு நீரையும், அனிலன் எனும் வசு காற்றையும், "துருவன்" எனும் வசு துருவ நட்சத்திரத்தையும் (விடிவெள்ளி), "சோமன்" எனும் வசு சந்திரனையும், "பிரபாசன்" எனும் வசு சூரிய உதயத்தையும் பிரத்யூசன் எனும் வசு உலகம் முழுவதும் சூரிய ஒளியைப் பரவச்செய்வதையும் என தங்கள் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நட்சத்திரம் மகர ராசியிலும் கும்ப ராசியிலும் இருக்கின்றது என்பதைப் பார்த்தோம். இந்த மகர ராசிக்கும் கும்ப ராசிக்கும் ஜோதிட அடிப்படை விதிகளின்படி மகர ராசி 10-ம் இடத்தையும் கும்ப ராசி 11-ம் இடத்தையும் குறிக்கும். பத்தாமிடம் தொழிலையும் பதினோராம் இடம் லாபத்தையும் குறிக்கக்கூடியது. இயல்பாகவே இந்த நட்சத்திரம் தொழிலிலும், தொழில் தொடர்பாக கிடைக்கக்கூடிய லாபத்தையும், தன்னுடைய நட்சத்திர பாதங்கள் மூலம் தொடர்பை வைத்து இருப்பதால் இது முழுக்க முழுக்க லாபத்தை மட்டுமே தரக்கூடிய அதிர்ஷ்ட நட்சத்திரம். எனவே அவிட்டத்தில் பிறந்தவர்கள் தைரியமாக சொந்தத் தொழில் தொடங்குவதில் எந்தத் தடையும் இருக்காது. முழுக்க முழுக்க தன் திறமைகளை வெளிப்படுத்தி தொழிலில் மிகப் பெரிய ஜாம்பவான்களாக, சாதித்துக் காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பது நிச்சயம்.
அவிட்ட நட்சத்திரம் குறித்த மேலும் சில விஷயங்களைப் பார்ப்போம்.
நெல் களஞ்சியம், தங்க நகைகள் போன்றவற்றை வைத்திருக்கக்கூடிய லாக்கர் மற்றும் அறைகள், வங்கிப் பாதுகாப்பு பெட்டகம், லாட்டரிச் சீட்டு போன்ற அதிர்ஷ்டப் பரிசுகள், இசைக்கருவிகள், மிருதங்கம், மத்தளம், துந்துபி எனும் இசைக்கருவி இவை அனைத்தும் அவிட்டத்தின் அடையாளமே.
நாதஸ்வரம், தவில், வயலின், வீணை, தாரை தப்பட்டை, மணியோசை, கதாகாலட்சேபம், பிரசங்கம், தொலைபேசி சாதனங்கள், செல்போன், காது, காதில் அணியக் கூடிய கம்மல், வளையல், வளையம் போன்று இருக்கக்கூடிய அனைத்துப் பொருட்களும், உறவுகளில் மூத்த சகோதரர்,வெகு சிலருக்கு அமையக் கூடிய இரண்டாவது மனைவியையும் இந்த அவிட்ட நட்சத்திரத்தையே குறிக்கும்.
மேலும் அவிட்டத்தின் வடிவம் மிருதங்கம் என்று பார்த்தோம். ஒருவகையில் இது உரல் போன்று தோற்றமளிப்பதால் மாவு அரைக்கக் கூடிய அனைத்து விஷயங்களும் அதாவது, கிரைண்டர், மாவு மில், நூல் மில், ரைஸ் மில், பவர் லூம் தறி, பின்னலாடை தயாரித்தல், கயிறு திரித்தல், புதிதாக தொடங்குகின்ற அனைத்து முயற்சிகளும் அவிட்டத்தின் அடையாளங்களே!
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சராசரி உயரம் உடையவர்கள். முகம் பொலிவாகவும், தேஜஸாகவும் இருக்கும். ஒரு தொழிலை எப்படி தொடங்குவது, எப்படி நடத்துவது, போன்ற தெளிவான திட்டமிடல் இருக்கும். எந்தத் தொழில் செய்வதாக இருந்தாலும் அதில் லாபம் எத்தனை சதவீதம் என்பதில் இவர்கள் குறியாக இருப்பார்கள். லாபம் இல்லாத தொழில் எதையுமே செய்ய மாட்டார்கள். ஒரு சிறிய காரியமாக இருந்தாலும் அதில் ஆதாயம் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்வார்கள். அரசியல் மற்றும் அரசாங்கம் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வெற்றிக் கொடி நாட்டுபவர்கள். அவிட்டத்தில் பிறந்தவர்களிடம் எந்த வேலையையும் நம்பி ஒப்படைக்கலாம். மிகச் சரியாக தெளிவாக செய்து முடிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
பலமான குடும்பப் பின்னணியும், குடும்ப உறவுகளையும் கொண்டவர்களாக அவிட்டம் நட்சத்திரக்கார்களாக இருப்பார்கள். தாய்-தந்தை இருவரிடமும் அன்பையும் அவர்களுடைய ஆசீர்வாதத்தையும் பெற்றவர்களாக இருப்பார்கள். குறிப்பாக தந்தையின் வழிகாட்டுதல் இவர்களுக்கு பக்கபலமாக இருக்கும். ஒரு சிலருக்கு தாயின் வழிகாட்டுதலும், தாயாராலேயே முன்னேற்றத்தைக் காண்பவர்களாகவும் இருப்பார்கள். ஒரு சிலர் தாய்மாமனின் உதவியும் தாய்மாமனாலேயே கல்வி மற்றும் தொழில் உத்தியோகம் முதலான வாய்ப்புகளையும் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இதுபோல, உறவுகள் பலம், நண்பர்கள் பலம் என அனைத்தும் அமைந்தாலும் எந்த ஒரு விஷயத்திலும் கணக்கு பார்க்கும் குணம் இவர்களிடம் இருக்கும். இந்த கணக்கு பார்க்கும் குணம் ஒரு சிலருக்கு குறையாக தெரிந்தாலும் இவர்களுடைய பார்வையில் அது சரியான செயல்பாடு தான் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இரவலாக தரும் நகை அணிந்து கொள்வது நல்லதா?
இரவலாக தரும் நகைகளையோ, அல்லது ஒருவர் போட்ட நகையை வாங்கி, அப்படியே அணிந்து கொள்ளக்கூடாது. இது தோஷத்தை ஏற்படுத்தும்.. தோஷத்துடன் நகை அணிந்து கொள்வது, பலவிதமான இன்னல்களை தந்துவிடும்..
எனவே, பிறரது நகைகளை பயன்படுத்தும் முன்பு, பன்னீர், கஸ்தூரி மஞ்சளை நீரில் கலந்து, அதை இரவல் நகைகளை மூழ்கி எடுத்து, பிறகு அணிந்து கொள்ளலாம்.
இறந்தவர்கள் நகைகள்
இறந்தவர்கள் நகைகள்
இறந்தவரின் நகைகளை அணிந்தால், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பார்கள்.. உடல்நிலை, தொழிலிலும் பலவீனம் ஏற்படலாம். அதிலும், ஜாதகத்தில் சூரியனின் நிலை பலவீனமாக இருந்தால், இறந்தவர்களின் நகைகளை பயன்படுத்த கூடாது என்பார்கள்.
கூடுமானவரை இறந்தவர்கள் பயன்படுத்திய தங்கம், மற்றும் வெள்ளி நகைகளை நினைவுப்பொருளாக பத்திரப்படுத்தி வைக்கலாம்.. அல்லது அந்த நகையை விற்று, குலதெய்வம் கோயிலுக்கு உபயம் தரலாம்.. அன்னதானமும் செய்யலாம்..
ஒருவேளை இறந்தவர்களின் பயன்படுத்த வேண்டுமானால், அவைகளை சுத்தம்செய்துவிட்டு பயன்படுத்த வேண்டும். இதற்கு கங்கை நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து எடுத்து, மஞ்சள் நூலால் கட்டி 21 நாள்கள் அப்படியே வைத்து வைத்து விடவேண்டும். பிறகுதான் தங்கத்தை உபயோகிக்க முடியும்.. அல்லது அந்த நகையை உருக்கி வேறு வடிவமாக செய்து பயன்படுத்தலாம்..
You May Also Like
புதுமணத் தம்பதிகளுக்கு பிடிக்காத ஆடி மாசம்! கணவன்- மனைவியை பிரித்து வைப்பது ஏன்?
"புதுமணத் தம்பதிகளுக்கு பிடிக்காத ஆடி மாசம்! கணவன்- மனைவியை பிரித்து வைப்பது ஏன்?"
எனினும், ஒருவர் இறந்தால், உடனே அந்த நகையை பயன்படுத்தவும் முடியாது, விற்கவும் கூடாது என்பார்கள்.. எனவே, அந்த நகையை சுத்தமான மஞ்சள் நீரில் கழுவி விட்டு எடுத்து துடைத்து, ஒரு பர்ஸில் போட்டு, அதற்குள் ஒரு துளசியையும் போட்டு பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இறந்த வீட்டில் தீட்டுக்கழியும் வரை காத்திருக்க வேண்டும்.. அதற்கு பிறகே இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்
தங்கம் வைக்க உரிய திசை
தங்கம் வைக்க உரிய திசை
தங்க நகைகளை எப்போதும் தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும்.. பீரோ லாக்கர்கள், வடக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும்... அதேபோல, ஈசானிய மூலையில் தங்க நகைகளை வைக்கலாம்... எக்காரணம் கொண்டும், வீட்டின் வடமேற்கு திசையில் தங்கம் வைப்பதை தவிர்க்கலாம்.
அதேபோல, சமையலறையில், அதிலும், மகாலட்சுமி வாசம் செய்யும் , பருப்பு, அரிசி அஞ்சறை பெட்டிகளில் தங்க நகைகளை வைப்பதை தவிர்க்க வேண்டும்.. அடுப்பு மேடையில் தங்க நகைகளை வைக்கக்கூடாது.. வட மேற்கு மூலையிலுள்ள அறையிலும் தங்க நகைகளை வைக்கக்கூடாது.
தங்கத்தை வாங்க நல்ல நேரம்,மற்றும் மந்திரம்
சனிக்கிழமை, ரோகிணி நட்சத்திரம், அமிர்தயோகம் இந்த 3 அம்சமும் நிறைந்த நாளன்று தங்கத்தை வாங்கலாம்.. அதிலும், "ஓம் தங்க கணபதி வஸ்ய வஸ்ய நம" என 108 முறை பாராயணம் செய்துவிட்டு தங்கம் வாங்கினால், கூடுதல் தங்கம் வீட்டில் அதிகரிக்குமாம்.
லக்கினத்தில் குரு,10 ல் சந்திரன், 11ல் புதன் என்ற நிலைகளின் காலகட்டத்திலும் நகை வாங்கலாம்.. வெள்ளி கிழமைகளில், கடவுள் படங்களுக்கு தங்க நகைகளை அணிவித்து வந்தாலும் தங்க்ம் பெருகும்.
இறந்தோரின் தங்க நகைகளை அணியலாமா?
இறந்தோரின் தங்க நகைகளை அணியலாமா, இரவல் தங்கத்தை அணிய செய்ய வேண்டியது?
தங்க நகைகளை உபயோகிக்கும்போதுகூட சில விஷயங்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.. அதேபோல, பிறர் உபயோகித்த நகைகளை உபயோகிக்கலாமா? குறிப்பாக இரவல் நகையை உபயோகிக்கலாமா? இறந்தவர்களின் நகையை அணிந்து கொள்ளலாமா? தங்க நகை எப்போது வாங்க வேண்டும்? இவைகளை பற்றியெல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
சனிக்கிழமை, ரோகிணி நட்சத்திரம், அமிர்தயோகம் இந்த 3 அம்சமும் நிறைந்த நாளன்று தங்கத்தை வாங்கலாம்.. அதிலும், "ஓம் தங்க கணபதி வஸ்ய வஸ்ய நம" என 108 முறை பாராயணம் செய்துவிட்டு தங்கம் வாங்கினால், கூடுதல் தங்கம் வீட்டில் அதிகரிக்குமாம்.
லக்கினத்தில் குரு,10 ல் சந்திரன், 11ல் புதன் என்ற நிலைகளின் காலகட்டத்திலும் நகை வாங்கலாம்.. வெள்ளி கிழமைகளில், கடவுள் படங்களுக்கு தங்க நகைகளை அணிவித்து வந்தாலும் தங்க்ம் பெருகும்.
தங்கம் வைக்க உரிய திசை
தங்க நகைகளை எப்போதும் தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும்.. பீரோ லாக்கர்கள், வடக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும்... அதேபோல, ஈசானிய மூலையில் தங்க நகைகளை வைக்கலாம்... எக்காரணம் கொண்டும், வீட்டின் வடமேற்கு திசையில் தங்கம் வைப்பதை தவிர்க்கலாம்.
அதேபோல, சமையலறையில், அதிலும், மகாலட்சுமி வாசம் செய்யும் , பருப்பு, அரிசி அஞ்சறை பெட்டிகளில் தங்க நகைகளை வைப்பதை தவிர்க்க வேண்டும்.. அடுப்பு மேடையில் தங்க நகைகளை வைக்கக்கூடாது.. வட மேற்கு மூலையிலுள்ள அறையிலும் தங்க நகைகளை வைக்கக்கூடாது.
இறந்தவர்கள் நகைகள்
இறந்தவரின் நகைகளை அணிந்தால், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பார்கள்.. உடல்நிலை, தொழிலிலும் பலவீனம் ஏற்படலாம். அதிலும், ஜாதகத்தில் சூரியனின் நிலை பலவீனமாக இருந்தால், இறந்தவர்களின் நகைகளை பயன்படுத்த கூடாது என்பார்கள்.
கூடுமானவரை இறந்தவர்கள் பயன்படுத்திய தங்கம், மற்றும் வெள்ளி நகைகளை நினைவுப்பொருளாக பத்திரப்படுத்தி வைக்கலாம்.. அல்லது அந்த நகையை விற்று, குலதெய்வம் கோயிலுக்கு உபயம் தரலாம்.. அன்னதானமும் செய்யலாம்..
ஒருவேளை இறந்தவர்களின் பயன்படுத்த வேண்டுமானால், அவைகளை சுத்தம்செய்துவிட்டு பயன்படுத்த வேண்டும். இதற்கு கங்கை நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து எடுத்து, மஞ்சள் நூலால் கட்டி 21 நாள்கள் அப்படியே வைத்து வைத்து விடவேண்டும். பிறகுதான் தங்கத்தை உபயோகிக்க முடியும்.. அல்லது அந்த நகையை உருக்கி வேறு வடிவமாக செய்து பயன்படுத்தலாம்..
எனினும், ஒருவர் இறந்தால், உடனே அந்த நகையை பயன்படுத்தவும் முடியாது, விற்கவும் கூடாது என்பார்கள்.. எனவே, அந்த நகையை சுத்தமான மஞ்சள் நீரில் கழுவி விட்டு எடுத்து துடைத்து, ஒரு பர்ஸில் போட்டு, அதற்குள் ஒரு துளசியையும் போட்டு பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இறந்த வீட்டில் தீட்டுக்கழியும் வரை காத்திருக்க வேண்டும்.. அதற்கு பிறகே இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
அதேபோல, இரவலாக தரும் நகைகளையோ, அல்லது ஒருவர் போட்ட நகையை வாங்கி, அப்படியே அணிந்து கொள்ளக்கூடாது. இது தோஷத்தை ஏற்படுத்தும்.. தோஷத்துடன் நகை அணிந்து கொள்வது, பலவிதமான இன்னல்களை தந்துவிடும்..
எனவே, பிறரது நகைகளை பயன்படுத்தும் முன்பு, பன்னீர், கஸ்தூரி மஞ்சளை நீரில் கலந்து, அதை இரவல் நகைகளை மூழ்கி எடுத்து, பிறகு அணிந்து கொள்ளலாம்.
Thursday, 17 July 2025
வங்கி லாக்கரில் தங்க நகைகளை வைப்பது பாதுகாப்பானதா..?
வங்கி லாக்கரில் தங்க நகைகளை வைப்பது பாதுகாப்பானதா..?
இப்படியொரு பிரச்சனை இருப்பது தெரியுமா..? இந்தியாவில் பலரும் தங்களது எதிர்கால நலன் கருதியும், பாதுகாப்புக்காகவும் தங்கத்தை வங்கி லாக்கரில் சேமித்து வைப்பார்கள். அந்த தங்கம் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறது என்பதே நமக்கு நிம்மதி தரும். ஆனால், அந்த தங்கம் மெதுவாக சேதமடைந்து வருவதும், அதன் மதிப்பு குறைந்து வருவதும் எத்தனை பேருக்கு தெரியும்..? அதுகுறித்து நிதி ஆலோசகர தெளிவாக விளக்கியுள்ளார். இதுதொடர்பாக சமீபத்தில் தனது நண்பருக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அந்த நண்பரின் குடும்பத்தினர் தங்களின் பாரம்பரிய தங்க நகைகளை, பாதுகாப்புக்காக ஒரு வங்கியின் லாக்கரில் வைத்திருந்தனர். ஆனால், பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த லாக்கரில் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் விளைவாக, அந்த நகைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. ஆனால், வழக்கமான பாதுகாப்பு காப்பீட்டின் கீழ் இந்த பாரம்பரிய தங்க நகைக்கு ரூ.3 லட்சம் மட்டுமே வழங்கப்படும் என வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த நகைகளின் உண்மையான மதிப்பு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சத்திற்கு மேல் இருக்கும். மக்களே இத செக் பண்ணாம இனி நகை வாங்காதீங்க! பல்வேறு வங்கிகளில் உள்ள பாதுகாப்பு லாக்கர்கள் பெரும்பாலும் ரூ.3 லட்சம் வரையிலேயே காப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன. இது, ஒரு சாமானிய நகை தொகுப்பின் மதிப்பையும், முழுமையாக ஈடுகட்ட இயலாத அளவிற்கு குறைவாகவே இருக்கும் இன்றும் பலர் வங்கிக் லாக்கர்களை தங்கள் குடும்பத்தின் தங்க சேமிப்புகளுக்கு 'மிகப்பெரிய பாதுகாப்பு' என்று நம்புகிறார்கள். ஆனால், இது மிக தவறான நம்பிக்கை" என்று கூறியுள்ளார். -
உண்மை என்ன..?: வங்கி லாக்கர்களுக்கு வழங்கப்படும் காப்பீடு மிகவும் குறைவானது. திருட்டு, தீவிபத்து அல்லது வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் நேர்ந்தாலும், அதற்கான நஷ்ட ஈடு லாக்கர் வாடகை அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது. இது பெரும்பாலும் ஒரு சில ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் செல்லாது. எனவே, லாக்கரில் நீங்கள் வைக்கும் நகைகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சத்திற்கும் மேல் இருந்தாலும், காப்பீடு அந்த அளவு மட்டுமே கிடைக்கும். நீங்கள் வைத்திருக்கும் நகைகளின் மதிப்பு கோடிகளில் இருந்தாலும், அதற்கான பாதுகாப்பு வெறும் லட்சங்கள் மட்டும்தான் . மேலும், வெள்ளி பார்கள், பழமையான நாணயங்கள், திருமண நகைகள் போன்றவை லட்சங்களிலும், சில நேரங்களில் கோடிகளிலும் மதிப்புள்ள தங்கம் வங்கி லாக்கர்களில் பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். ஆனால், அது உண்மை கிடையாது. இதனால், உங்களுக்கு கிடைப்பது நிம்மதி மட்டுமே. தங்கத்தை வெறும் லாக்கரில் போட்டு விட்டு மறந்து விடுவது, அதை பாதுகாக்கும் வாய்ப்பையும், அதன் மதிப்பை மீட்டெடுக்கும் வாய்ப்பையும் இழப்பதற்கு சமம்.
தானமாக இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. கிஃப்ட்டாக நீங்க இதை வாங்காதீங்க.. வீட்டில் வறுமை வந்துடும்
தானமாக இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. கிஃப்ட்டாக நீங்க இதை வாங்காதீங்க.. வீட்டில் வறுமை வந்துடும்
குடும்பங்களில் பணப்பற்றாக்குறை தீர வேண்டுமானால், சில விஷயத்தை கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.. குறிப்பாக வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களை யாருக்கு தர வேண்டும்? எந்த பொருட்களை தரக்கூடாது? எந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது? என்பது குறித்தெல்லாம் பெரியோர்கள் தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார்கள்.. அதேபோல, குறிப்பிட்ட சில பொருட்களை மறந்தும் பிறருக்கு தானமாக கொடுக்கக் கூடாது, பரிசு பொருளாகவும் தரக் கூடாது என்பார்கள். இதுகுறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
எப்போதுமே பெண்கள் வீட்டு வாசலில் கோலம் போடும்போது, தெற்கு திசையில் நின்று கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் அமாவாசை நாளிலும் சரி, திதி தரக்கூடிய நாட்களிலும்சரி, வாசலில் கோலம் போடக்கூடாது என்பார்கள்..
அமாவாசை நாட்களில் முட்டைக்கோஸ், நூக்கல், முள்ளங்கி, பீன்ஸ், கத்தரிக்காய், காலிஃபளவர், ப்ரோக்கோலி, பட்டாணி போன்ற காய்கறிகளை சமைக்கக்கூடாது.. வேறு எந்த கசப்பான உணவையும் தயாரிக்கக்கூடாது என்பார்கள்.
பெண்கள் மெட்டி
பெண்கள் எப்போதுமே காலில் மெட்டி அணிந்திருக்க வேண்டும். ஆனால், 3 மெட்டி அணிய கூடாது.. மாதவிடாய் நேரங்களில் தலைக்கு பூ வைக்க கூடாது.. அதைவிட முக்கியமாக, கோயிலில் பிரசாதமாக தருகின்ற துளசி இலைகளை தலையில் வைத்துக் கொள்ளவே கூடாது..
வீட்டிலுள்ள பொருட்களில் கூடுதல் கவனத்தை செலுத்தினாலே, நம்முடைய கஷ்டங்கள், சிக்கல்கள், இன்னல்கள் தீரும் என்பார்கள்.. வியாழக்கிழமை, திங்கட் கிழமைகளில் வீட்டை பெருக்கி கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.. அடுப்பு மேடைகளை வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்யும் நாட்களில் கழுவிவிடக்கூடாது. துணிகளை துவைப்பதாக இருந்தாலும் வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுக்க கூடாது.
ஜாதகங்கள், கிரகங்கள்
எக்காரணம் கொண்டும், பூச்சிகள், கரையான், சிலந்திகள், ஒட்டடை போன்றவை வீட்டில் எந்த மூலையிலும் சேர்ந்துவிடக்கூடாது..
அதேபோல, ஒருவருக்கு தானம் தருவது நல்ல விஷயமாகும்.. பிறருக்கு தானம் செய்வது, ஜாதகத்திலுள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் சாதகமாக இருந்து அவர்களின் நிலையை உயர்த்தும் என்பது நம்பிக்கையாகும்.
அதேசமயம், தானம் செய்யும்போது சில விஷயங்களை கவனித்து செயல்பட வேண்டும்.. குறிப்பாக, தங்க நகைகளையும் யாருக்கும் தானமாக தரக் கூடாது... இதனால் குடும்பத்திலுள்ள பெண்களின் ஐஸ்வர்யம் குறைந்துவிடுமாம்..
தானம் தரக்கூடாத பொருட்கள்
அதேபோல, மாலை 6 மணிக்கு மேல் வீட்டிலுள்ள வெள்ளை நிற பொருட்களை தானம் செய்யக்கூடாது. அரிசி, உப்பு, பால் போன்ற பொருட்களையும் தானம் தரக்கூடாது.. அப்படியே யாருக்காவது தர வேண்டுமானால், சாஸ்திரத்துக்கு சிறிதளவு ரூபாயை பெற்றுக் கொண்டு, அவைகளை தானம் வேண்டும்.
தானம் செய்வது மட்டுமல்ல, பிறருக்கு பரிசுப்பொருளை கொடுக்கும்போதுகூட, சிலவற்றை கவனிக்க வேண்டும்.. ஏனென்றால் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்பு இருக்கும்.. எனவே, நல்லெண்ணத்தில் பரிசு கொடுத்தாலும், நாம் தரக்கூடிய பொருட்களால் தாக்கங்கள் ஏற்பட்டுவிடும். இதனால் உறவும் கெட்டுப்போய்விடும்.
தவிர்க்க வேண்டிய பரிசு பொருட்கள்
கடிகாரம், பர்ஸ், செருப்புகள், முகம் பார்க்கும் கண்ணாடியை பிறருக்கு பரிசாக தரக்கூடாது.. கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தையும் தரக்கூடாது.. மீன் தொட்டி போன்று தண்ணீர் சம்பந்தமான பொருட்களையும் பரிசாக தரக்கூடாது.. மேலும் கறுப்பு நிற பொருட்களையும் யாருக்கும் பரிசாக தர வேண்டாம்..
மேற்கண்டவற்றை நாம் பரிசாக தரக்கூடாது என்பது மட்டுமல்ல, பிறரிடமிருந்து இந்த பொருட்களை பரிசாகவும் பெற்றுக் கொள்ளக்கூடாது. அப்படி தருவதும் - பெறுவதும், குடும்பத்தில் வறுமையை தந்துவிடுமாம். உறவுகளையும் பிரித்துவிடுமாம்.
Wednesday, 16 July 2025
சனீஸ்வரர்
சனீஸ்வரர் நவகிரகங்களில் ஒருவர். இவருக்கு மந்தன் என்றும் சனைச்சரன் என்றும் பெயர்கள் உண்டு. எள்ளும் நல்லெண்ணெய்யும் இவருக்கு உகந்தவை. கணபதி, அனுமனை வழிபட்டால் சனியின் பாதிப்புகள் குறையும்.
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரியகுமாரனே சனி. இவர் யமதர்மராஜனின் சகோதரன். சனி பகவான், ஒரு மனிதனின் ஆயுளை ஆதிக்கம் செய்பவர் ஆதலால், இவர் ஆயுள்காரகன் என்றும் போற்றப்படுகிறார்.
சனி பகவானின் பத்தினியின் பெயர் நீலாதேவி. காகம் இவரது வாகனம். இவர் வாஸம் செய்யும் திசை மேற்கு. சனி பகவானுக்கு உகந்த நிறம் கருநீலம். மனித உடலில் பித்தம், நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஆள்பவர் இவர்.
இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதி.
சனி பகவானின் திக்கு - மேற்கு.
சனி பகவானின் அதிதேவதை : பிரம்மன்
சனி பகவானின் பிரத்யதி தேவதை: எமன்
சனி பகவானின் ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி
சனி பகவானின் தலம் - திருநள்ளாறு
சனி பகவானின் நிறம் - கருமை
சனி பகவானின் வாகனம் - காகம்
சனி பகவானின் தானியம் - எள்
சனி பகவானின் மலர் - கருங்குவளை, வன்னி
சனி பகவானின் வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
சனி பகவானின் ரத்தினம் - நீலம்
சனி பகவானின் அன்னம் - எள்ளுப்பொடி சாதம்
Saturday, 12 July 2025
வருமான வரிக் கணக்கு: யாரெல்லாம் தாக்கல் செய்ய வேண்டும்? செய்யாவிட்டால் என்ன நடக்கும்?
வருமான வரிக் கணக்கு: யாரெல்லாம் தாக்கல் செய்ய வேண்டும்? செய்யாவிட்டால் என்ன நடக்கும்?
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட், சாதாரண குடிமக்களுக்கு, அதாவது வரி செலுத்துவோருக்கு, ஒரு பெரிய நிவாரணத்தைக் கொண்டு வந்துள்ளது.
இப்போது, தங்கள் ஆண்டு வருமானம் ரூ.12.75 லட்சம் வரை இருந்தால், ஊழியர்கள் எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை. மற்ற வரி செலுத்துவோருக்கு ரூ. 12 லட்சம் வரை வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ஆண்டு வருமான வரிக் கணக்கு தொடர்பான புதிய விதி பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நாட்டில் வருமான வரிக் கணக்கு மற்றும் பான் கார்டு குறித்து சாதாரண வரி செலுத்துவோரிடம் ஏற்கெனவே பல தவறான கருத்துகள் உள்ளன.
உதாரணமாக, "யாரெல்லாம் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும்? தாக்கல் செய்ய வேண்டியவருக்கு ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் இருக்க வேண்டும்? வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லையெனில் என்ன நடக்கும்?" போன்ற கேள்விகள் மக்களிடையே உள்ளன.
எனவே, ஐடி ரிட்டன்ஸ் தொடர்பான சில முக்கிய அம்சங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள பட்டயக் கணக்காளர் பேசியது.
'வருமான வரி அடிப்படையில் மிகப்பெரிய நிவாரணத்தை அறிவித்தார்.
உங்கள் மொத்த வருமானம் 'அடிப்படை விலக்கு வரம்பை' மீறினால், நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்
வரி செலுத்துபவரின் (60 வயதுக்கு உட்பட்ட) ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மேல் இருந்தால் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மூத்த குடிமக்கள் (60 முதல் 80 வயது வரை) ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு மேல் இருந்தால் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
ஒரு சூப்பர் மூத்த குடிமகன் (80 வயதுக்கு மேற்பட்டவர்) தனது ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மேல் இருந்தால் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்
உங்கள் மொத்த ஆண்டு வருமானம் (பிரிவு 80இன் கீழ் விலக்குகளைப் பெறுவதற்கு முன்பு) மேலே குறிப்பிடப்பட்ட 'அடிப்படை விலக்கு வரம்பை' மீறினால், வருமான வரிக் கணக்கை கட்டயாம் தாக்கல் செய்ய வேண்டும்.
அதே நேரத்தில், எந்தவொரு நிறுவனமும் அதன் லாபம் அல்லது நஷ்டத்தை பொருட்படுத்தாமல் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
இதேபோல், பின்வரும் சந்தர்ப்பங்களில் நீங்கள் வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்ய வேண்டும்.
வரியாகப் கழிக்கப்பட்டபணத்தைத் திரும்பப் பெறுவதற்கு கோரிக்கை வைக்கும்போது
நிறுவனம் ஏதேனும் இழப்புகளைச் சந்தித்தால், அவை அடுத்த நிதியாண்டுக்கு முன்னோக்கிக் கொண்டு செல்லப்படும்போது
இந்தியாவில் ஒரு மத அல்லது தொண்டு அறக்கட்டளையின் கீழ் உங்களுக்கு ஏதேனும் சொத்து இருந்தால்
நீங்கள் ஒரு அரசியல் கட்சி வைத்திருந்தால்
நீங்கள் நாட்டிற்கு வெளியே சொத்து அல்லது நிதி நலன்களைக் கொண்ட ஒரு இந்திய குடிமகனாக இருந்தால் (NRI அல்லது RNOR)
நீங்கள் இந்தியாவில் வசிப்பவராக இருந்து, நாட்டிற்கு வெளியே உள்ள ஒரு கணக்கில் (NRI அல்லது RNOR) கையொப்பமிடும் அதிகாரம் இருந்தால், நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
வேறு சில சூழ்நிலைகள்
கூடுதலாக, உங்கள் வருமானம் 'அடிப்படை விலக்கு வரம்புக்கு' கீழே இருந்தாலும்கூட, நீங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய சில சூழ்நிலைகள் உள்ளன.
நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடப்புக் கணக்குகளில் ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்திருந்தால்
சேமிப்புக் கணக்கில் ரூ. 50 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்திருந்தால்
உங்களுக்காகவோ அல்லது வேறு ஒருவருக்கோ வெளிநாட்டுப் பயணம் அல்லது சுற்றுலாவுக்கு இரண்டு லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் செலவு செய்திருந்தால்
உங்கள் வருடாந்திர மின்சாரக் கட்டணம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால்
உங்கள் TDS அல்லது TCS (அசலில் இருந்து வசூலிக்கப்படும் வரி) ரூ. 25,000க்கும் அதிகமாக இருந்தால் (மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000).
உங்கள் வணிகத்தின் ஆண்டு வருவாய் ரூ. 60 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால்
உங்கள் வணிக வருமானம் ரூ. 10 லட்சத்திற்கு மேல் இருந்தால்
இதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
கடுமையான வழக்குகளில், வருமான வரித் துறை சட்ட நடவடிக்கை எடுக்கலாம். வரி செலுத்த வேண்டிய தொகை ரூ.25,000க்கு மேல் இருந்தால், 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
படக்குறிப்பு,கடுமையான வழக்குகளில், வருமான வரித் துறை சட்ட நடவடிக்கை எடுக்கலாம்
பொதுவாக, "தணிக்கை செய்யப்பட வேண்டிய அவசியமற்ற நிறுவனங்களும், வரி செலுத்தும் தனிநபர்களும், தங்கள் வருமான வரிக் கணக்கை பட மூலாதாரம், ஆண்டும் ஜூலை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்"
மொத்த வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்து, காலக்கெடுவுக்கு பிறகு வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
உங்கள் வருமானம் 'அடிப்படை விலக்கு வரம்புக்கு' கீழே இருக்கும்போது தாக்கல் செய்யாததற்கு எந்த அபராதமும் இல்லை.
இருப்பினும், உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1 கோடிக்கு மேல் டெபாசிட் செய்தாலோ அல்லது வெளிநாட்டுப் பயணத்திற்கு ரூ.2 லட்சத்திற்கு மேல் செலவழித்தாலோ, வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யத் தவறினாலோ, அல்லது தாமதமாகத் தாக்கல் செய்தாலோ, உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
உங்கள் வருமான வரியில் நிலுவைத் தொகை இருந்து, சரியான நேரத்தில் உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றால், நிலுவைத் தொகைக்கு மாதத்திற்கு ஒரு சதவிகிதம் எளிய வட்டி வசூலிக்கப்படும்.
உங்களுக்கு ஒரு வணிக அல்லது மூலதன இழப்பு ஏற்பட்டு, நீங்கள் வரிக் கணக்கை சரியான நேரத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால், அடுத்த ஆண்டு உங்கள் வருமானத்தில் அந்த இழப்பைக் காட்ட முடியாது.
நீங்கள் அதிக வரி செலுத்தி, பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு அல்லது வருமான வரி ரிட்டன்சுக்கு தகுதியுடையவராக இருந்தால், உங்கள் வருமான வரிக் கணக்கை தாமதமாகத் தாக்கல் செய்வதும் பணத்தைத் திரும்பப் பெறுவதை தாமதப்படுத்தக்கூடும்.
கடுமையான வழக்குகளில், வருமான வரித் துறை சட்ட நடவடிக்கை எடுக்கலாம். வரி செலுத்த வேண்டிய தொகை ரூ.25,000க்கு மேல் இருந்தால், 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
மற்ற சந்தர்ப்பங்களில், மூன்று மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
டிடிஎஸ் (TDS) பட மூலாதாரம்,
படக்குறிப்பு,டிடிஎஸ் (TDS) செலுத்திய பிறகு, நீங்கள் வருமான வரிக்கு உட்பட்டவராக இல்லாவிட்டால், அதைக் கோர நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
"நீங்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யத் தொடங்கியதும், ஒவ்வோர் ஆண்டும் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை" .
"அந்த ஆண்டுக்கான விதிகளின்படி நீங்கள் வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்யத் தகுதியற்றவராக இருந்தால், நீங்கள் அவ்வாறு செய்யத் தேவையில்லை. அதாவது, அந்த ஆண்டுக்கான மொத்த வருமானம் அடிப்படை விலக்கு வரம்பைவிடக் குறைவாக இருந்தால், வேறு எந்த நிபந்தனைகளும் பொருந்தவில்லை என்றால், அந்த ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை நீங்கள் தாக்கல் செய்யத் தேவையில்லை," என்று அவர் கூறினார்.
உதாரணமாக, "2023-24 மதிப்பீட்டு ஆண்டில் உங்கள் வருமானம் ரூ. 3 லட்சமாக இருந்தது என்றும், நீங்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்தீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம். அடுத்த ஆண்டில், அதாவது 2024-25இல், உங்கள் வருமானம் ரூ. 2 லட்சமாக மட்டுமே இருக்கும். அப்படியானால் நீங்கள் ஐடி ரிட்டன்ஸ் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை" என்கிறார்
இருப்பினும், ஐடி ரிட்டன்ஸை தவறாமல் தாக்கல் செய்வது நல்லது . இது பொருளாதார ஒழுக்கத்தைக் காட்டுவதாகவும் எதிர்காலத்தில் கடன்களைப் பெறுவதை எளிதாக்குவதாகவும் அவர் கூறுகிறார்.
டிடிஎஸ் (TDS) செலுத்திய பிறகு, நீங்கள் வருமான வரிக்கு உட்பட்டவராக இல்லாவிட்டால், அதைக் கோர நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
அதன்படி, எதிர்கால வருமானம் அல்லது லாபங்களுக்கு எதிராக வணிக இழப்புகளை ஈடுசெய்ய விரும்பினால், உங்கள் வருமானம் வரி 'அடிப்படை விலக்கு வரம்புக்கு' கீழே இருந்தாலும், நீங்கள் ஒவ்வோர் ஆண்டும் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
நீங்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு உங்கள் சம்பளத்திலிருந்து அதிக டிடிஎஸ் (TDS) செலுத்தியிருந்தால், பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், நீங்கள் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும்.
நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு அல்லது வேலையை நிறுத்திய பிறகு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா என்பது சில விஷயங்களைப் பொறுத்தது.
வருமானம்: ஓய்வுக்குப் பிறகு உங்கள் வருமான ஆதாரங்கள் அல்லது வழிகள் என்ன? உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா? வங்கிகளிடம் இருந்து உங்களுக்கு ஏதேனும் வட்டி, வாடகை வருமானம், பங்குச் சந்தை வருமானம் போன்றவை உள்ளதா? அப்படி கிடைக்கும் இந்தத் தொகை 'அடிப்படை விலக்கு வரம்பை' மீறினால், நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
ஓய்வூதியம்: ஓய்வுக்குப் பிறகு பெறப்படும் ஓய்வூதியமும் வருமானமாகக் கருதப்படுகிறது. ஓய்வூதியம் மூலம் பெறப்படும் வருமானம் 'அடிப்படை விலக்கு வரம்பை' மீறினால், வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும்.
வங்கிப் பரிவர்த்தனைகள்: ஓய்வுக்குப் பிறகு வங்கிக் கணக்கில் பெரிய பரிவர்த்தனைகள் நடந்தால், உதாரணமாக, கணக்கில் ரூ. 1 கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டாலோ அல்லது வெளிநாட்டுப் பயணத்திற்கு ரூ. 2 லட்சத்திற்கு மேல் செலவழித்தாலோ, வரி செலுத்துவோர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். ஒரு நபரின் வருமானம் 'அடிப்படை விலக்கு வரம்பை' விடக் குறைவாக இருந்தாலும், வருமானக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வரி திரும்பப் பெறுதல் கோரிக்கை: நீங்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு உங்கள் சம்பளத்தில் இருந்து அதிக டிடிஎஸ் (TDS) செலுத்தியிருந்தால், பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
நன்மைகள் என்ன?
வரி செலுத்துவது பொருளாதார உறுதித்தன்மை மற்றும் வருமானத்திற்கு சான்றாகும். இது விசா பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
ஐடி ரிட்டன்ஸை தவறாமல் மற்றும் சரியான நேரத்தில் தாக்கல் செய்ய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன.
ஐடி ரிட்டன்ஸ் என்பது உங்கள் வருமானத்திற்கான அதிகாரபூர்வ சான்று. இது அனைத்து வகையான கடன் விண்ணப்பங்கள், கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் அல்லது முக்கிய நிதிப் பரிவர்த்தனைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கை கேட்கின்றன.
வெளிநாடு செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, பல நாடுகளின் தூதரகங்கள் கடந்த சில ஆண்டுகளாக, வருமான வரிக் கணக்கை கேட்டு வருகின்றன.
வரி செலுத்துவது உங்களது பொருளாதார உறுதித்தன்மை மற்றும் வருமானத்திற்கு சான்று. இது விசா பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
அரசாங்க டெண்டர்கள் மற்றும் பிற வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் போதுகூட, கடந்த சில ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
கூடுதலாக, ஐடி ரிட்டன்ஸ் உங்கள் முகவரிக்கான சான்றாகவும் கருதப்படுகின்றன.
பெரிய காப்பீட்டுக் கொள்கைகளை எடுக்கும்போது, சில காப்பீட்டு நிறுவனங்கள் ஐடி ரிட்டன்ஸை கேட்கலாம்.
பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. இது உங்கள் மொத்த வருமானம் மற்றும் வேறு சில காரணிகளைப் பொறுத்தது.
மீன்களை வீடுகளில் தொட்டியில் வளர்ப்பது மிகச்சிறந்த வாஸ்து பரிகாரமாக கருதப்படுகிறது
மீன்களை வீடுகளில் தொட்டியில் வளர்ப்பது மிகச்சிறந்த வாஸ்து பரிகாரமாக கருதப்படுகிறது.. மீன்களை வளர்ப்பது உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை தரக்கூடியது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. வாஸ்துபடி மீன் தொட்டிகள் தரும் நன்மைகள் என்னென்ன? மீன் தொட்டிக்கான திசை என்ன? பெஸ்ட் வாஸ்து மீன் எது? மீன் தொட்டிகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? இவைகளை பற்றியெல்லாம் இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
மனதில் பாரம் படிந்திருந்தாலோ, மன அழுத்தம் இருந்தாலோ, குழப்பமான மனநிலை இருந்தாலோ, மீன்கள் நீந்துவதை பார்த்தாலே போதும்.. மனம் லேசாகிவிடும். அதுமட்டுமல்ல, இதய துடிப்பை குறைக்கக் கூடிய சக்தி , தொட்டியில் வளர்க்கப்படும் மீன்களுக்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
"மணி பிளான்ட் மகிமை.. வீட்டில் அதிர்ஷ்டம், யோகம் பெருக இந்த செடிகளை தூக்கி தூர போடுங்க! வாஸ்து டிப்ஸ்"
நரம்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைத்து, ரத்த அழுத்தத்தையும் இது குறைக்க செய்கிறது.. எனவே, High-BP உள்ளவர்கள், வீடுகளில் தொட்டியில் மீன் வளர்க்கலாம்.. இதனால், வீட்டிற்குள் பாசிட்டிவ் எனர்ஜி பெருகும்..
இதனாலேயே வாஸ்துவில் முக்கிய இடத்தை மீன்கள் பிடித்துள்ளன. மகாவிஷ்ணுவின் முதல் அவதாரம் மச்ச அவதாரமாகும்.. சப்தரிஷிகளை காக்க பெருமாள் மீன் அவதாரம்தான் எடுத்தார். எனவே மீன்களை வீட்டில் வளர்ப்பதற்கும் ஆன்மீகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
பெஸ்ட் வாஸ்து மீன்
வாஸ்து முறைப்படி, கோல்டன் ஃபிஷ் என்ற தங்கமீன், ராகன் மீன் போன்ற மீன்களை வளர்க்கலாம். ஆனால், ஆஸ்கார், பிரான்ஹஸ் போன்ற வகையான மீன்களை வளர்த்தால், குடும்பத்துக்கு ஆகாது என்பார்கள்..
மற்றபடி பல வண்ணங்களிலுள்ள மீன்களை வீட்டில் வளர்க்கலாம். இதில் உலகளவில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது டிராகன் மீன் எனப்படும் அரோவானா மீன் வகைகளாகும்.. குடும்பத்தில் அனைத்து அதிர்ஷ்டத்தையும் இந்த மீன் தந்துவிடுமாம்..
பணவரவு, ஆரோக்கியம், வளர்ச்சி, லாபம் போன்ற அனைத்துமே இந்த மீன் வளர்ப்பதால் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
கருப்பு மீன் வளர்க்கலாமா
ஆனால் லட்சக்கணக்கில் மீன்களை வாங்கி, வீட்டில் வளர்த்தாலும், ஒரே ஒரு கருப்பு மீன் தொட்டியில் இருப்பது நல்லதாம். கண் திருஷ்டிகள், எதிர்மறை ஆற்றல், மொத்தத்தையும் இழுத்து கொள்ளும் தன்மை கருப்பு நிற மீனுக்கு உண்டு... அந்த கருப்பு மீன் இறந்தாலும், கவலைப்பட தேவையில்லை. உடனடியாக அதை வெளியே எடுத்துவிட்டு, வேறொரு கருப்பு மீனை தொட்டியில் விட வேண்டும்.
எந்த திசையில் வைக்கலாம்
எத்தனை மீன்களை வாங்கி வளர்த்தாலும், அவைகள் ஒற்றை இலக்கத்துடன் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.. தண்ணீரும் அழுக்காக மாறிவிடாமல் கவனித்து கொள்ள வேண்டும்.
சதுரமான, நீளமான மீன் தொட்டியை தேர்ந்தெடுக்கலாம். மீன் தொட்டிகளை தென்கிழக்கு மூலையில் அமைக்கலாம்.. வடக்கு, கிழக்கு அல்லது வட கிழக்கு திசையில் மீன் தொட்டியை வைப்பதால் நிதிப்பற்றாக்குறை இருக்காது.. வடகிழக்கு திசையில் வீட்டிற்குள் நுழையும்போது, இடது பக்கத்தில்தான் வைப்பது இன்னும் சிறப்பு.. அதேபோல, தலைவாசலுக்கு இடது புறம் வைத்தால், குடும்பத்தில் ஒற்றுமை கூடும்..
மீன் சிலைகள் நன்மை
எக்காரணம் கொண்டும், படுக்கையறை, கிச்சன், நடு ஹால், நேரடியாக வெயில், வெளிச்சம் படக்கூடிய இடங்கள், படிக்கட்டுகள், ஏசி, டிவி போன்ற எலக்ட்ரிக் பொருட்களுக்கு அடியில் வைக்கக்கூடாது. வீட்டிற்குள் நுழைந்தால் அவர்கள் கண்ணில் படும்படி வைக்க வேண்டும்.
மீன்சிலைகளையும் வீட்டில் வைக்கலாம்.. பித்தளை அல்லது வெள்ளியால் ஆன மீன் சிலையை வீட்டில் வைத்திருப்பதன் மூலம், குடும்ப உறுப்பினர்களிடம் முன்னேற்றம் காணப்படும், வருமானமும் பெருகும்.. மீன் சிலையை வீட்டின் வடகிழக்கு திசையை நோக்கி எப்போதும் வைத்திருக்க வேண்டும்.. எக்காரணம் கொண்டும், மீன்சிலை மீன் தொட்டிகளை தெற்கு திசையில் வைக்கக்கூடாது.
Thursday, 10 July 2025
ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.
மேஷம்:
சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.
ரிஷபம்:
கன்னி மற்றும் மகர ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.
கடகம்:
ரிஷபம், மீனம், விருச்சிகம், கன்னி ராசிக்காரர்கள் நல்ல நண்பர்களாக இருப்பார்கள்.
சிம்மம்:
மேஷம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.
துலாம்:
மிதுனம் மற்றும் கும்பம் ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.
விருச்சிகம்:
கடகம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.
தனுசு:
மேஷம் மற்றும் சிம்மம் ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.
மகரம்:
ரிஷபம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.
கும்பம்:
மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.
மீனம்:
கடகம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.
இது பொதுவாக ராசிப் பலன்களின் அடிப்படையில் சொல்லப்படுகிறது. எனினும், ஒருவருக்கொருவர் உள்ள புரிதல், அனுசரிப்பு மற்றும் பழகும் விதத்தைப் பொறுத்து நட்பு அமையும்.
ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன்?
ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன்?
சந்திரன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம். சந்திரன், முதல் வீட்டில் இருந்தால், லக்கினத்தில் இருப்பது நல்லது. ஆனால், சந்திரனுக்கு அது சொந்த வீடாகவோ, அல்லது உச்ச வீடாகவோ இருந்தால், நல்லது. நட்பு வீடாக இருந்தாலும் நல்லது. வாழ்க்கையில் உயர்வு பெறுவதற்கு நல்லது செய்வார். சிற்றின்ப சுகம் நன்றாக அமையும். பந்தயத்தில் வெற்றி பெறுவார். திடீர் பணவரவு இருக்கும்.
2ல் சந்திரன் செல்வம் தருவார். நன்றாக பேச்சு வரும். அரசாங்கத்தில் நல்ல மதிப்பு இருக்கும். சொத்து சுகம் ஏற்படும். பெயரும் புகழும் உண்டாகக் காரணமாக இருப்பார். நல்ல கல்வி கிடைக்கும். சந்திரன் கெட்டால் செல்வத்தை இழக்க செய்யும். நல்ல பணவரவு இருக்காது. பொதுவாக வளர்பிறையில் நல்லது செய்வார்.
3ல் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும் தருவார். சகோதர சகோதரிகளை ஆதரிப்பார். நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். மூன்றாவது வீடாக இருப்பதால் அடிக்கடி குறுகிய பயணம் செய்ய வைப்பார். வாகன வசதி கிடைக்கும். சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்
.
4ல் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும். 4 ஆம் வீடு வீட்டை குறிப்பதால் ஆறு, குளம், கடலோரத்தில் வீடு அமையும். நண்பர்களுக்கு உதவி செய்வார். தாய்வழிச்சொத்து கிடைக்கும். கொடை குணம் இருக்கும்.
5ல் சந்திரன் பலம் பெற்று இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். நல்ல அறிவாற்றலை தருவார். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையவைப்பார். குழந்தை பாக்கியம் அமையும். ஆனால் பெண் குழந்தைகளே பிறக்கும். சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்
.
6ல் சந்திரன் இருந்தால் சுகபோக வாழ்வு வாழ்பவர். விரோதிகளை உண்டு பண்ணுவார். இளம் வயதில் மகிழ்ச்சி குறையும். சந்திரன் அசுபபலன் பெற்று இருந்தால் அடுத்தவருக்கு அடங்கி நடக்கக்கூடிய தன்மையை தருவார்.
வளர்பிறை சந்திரன்
7ல் அமர்ந்து, பாபக்கிரகங்களின் சேர்க்கையோ, பார்வையோ பெறாமல் இருந்தால் அன்பான வாழ்க்கை துணைவர் அமைவார். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
8ல் சந்திரன் இருந்தால், சஞ்சலமான குணம் கொண்டவர்கள். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடியவர்கள். தாயுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
9ல் உள்ள சந்திரன் இருந்தால் நல்ல பாக்கியசாலியாக இருப்பார். புத்திரபாக்கியம் இருக்கும். உறவினர்கள் நல்ல உதவி செய்வார்கள். செல்வம் குவியும். சங்கீதம், நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாகும். அம்மாவின் அரவணைப்பு இருக்கும்.
10ல் உள்ள சந்திரன் தன் மதத்தின் மீது பற்று ஏற்பட்டு மதப் பிரசாரம் செய்வார். நல்ல செல்வ வளம் சந்திரன் தருவார். வாழ்க்கையில் உன்னதமான பல நல்ல காரியங்களை செய்வார். செய்தொழில்களில் பகைவர்களை வெற்றி கொள்ளும் தைரியத்தைத் தருவார். வாழ்க்கை பற்றிய எண்ணத்தை இயற்கையாக உண்டு பண்ணுவார். தாய் வழியில் நல்லது செய்வார். நண்பர்களிடத்தில் நல்ல நட்பு உண்டு பண்ணுவார். தொழில் நுட்பத்துறையில் ஈடுபட வைக்கும். தொழில்நுட்பத்துறையில் நல்ல அறிவு வளர செய்வார். வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். சிலபேருக்கு அரசாங்கத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
11ல் உள்ள சந்திரன், மூத்த சகோதர்களின் மூலம் லாபத்தைத் தருவார். எந்த வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்கக் கூடிய திறமையைத் தருவார். நல்ல தீர்க்காயுள் ஏற்படும். வேலையாட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மீது ஆர்வம் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். நல்ல செல்வ வளம் சேரும்.
12ல் உள்ள சந்திரன் பாதங்களில் வலி உண்டாக செய்வான். வாழ்க்கையில் மதிப்பு இழக்க. செய்வான். கண் பார்வை மங்கச் செய்வான். அறிவாற்றல் குறையும். குறுகிய மனப்பான்மை இருக்கும். மனஉளைச்சல் இருக்கும். செலவு கூடும்.
.
Monday, 7 July 2025
வீட்டிற்கு நிறைய எறும்பு வருதா?
வீட்டிற்கு நிறைய எறும்பு வருதா? உங்கள் வீட்டில் நடக்கப்போகும் சகுனம் இதுதான்
வீட்டில் அடிக்கடி எறும்பு வந்தால் அதற்கான காரணம் தெரிந்துவிட்டு விரட்டுவதா இல்லையா என்பதை சரியாக யோசித்து செய்யுங்கள்.
வீட்டில் எறும்புகள் வருவதன் சகுனம்
வீட்டில் எறும்புகள் தோன்றுவது சாதாரணமானதுதான், ஆனால் அதன் பின்னால் சில மறைந்த நம்பிக்கைகள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது. இது நல்லதும், கெட்டதுமான பல அறிகுறிகளை சுட்டிக்காட்டுகிறது.
எறும்புகள் சில நேரங்களில் சுவர்களிலும், சில நேரங்களில் தரையிலும் ஊர்ந்து செல்லும் காட்சிகள் எங்களை அசௌகரியப்படுத்தலாம்.
வீட்டிற்கு நிறைய எறும்பு வருதா? உங்கள் வீட்டில் நடக்கப்போகும் சகுனம் இதுதான் | Ants In The House Mean In Terms Of Omen Vastu
இதனால், பலரும் அவற்றை விரட்ட வீட்டு வைத்தியம் அல்லது இயற்கை முறைகள் பயன்படுத்துவார்கள். ஆனால், வீட்டில் எறும்புகள் இருப்பது வெறும் தொல்லை மட்டுமல்ல; இது நல்லதையும், கெட்டதையும் குறிக்கும் அறிகுறியாக பார்க்கப்படுகிறது
சிவப்பு எறும்புகள் – நிதி சிக்கலின் எச்சரிக்கை
வீட்டில் அதிகமாக சிவப்பு எறும்புகள் தோன்றினால், அது செலவுகள் அதிகரிக்க, கடன் தேவைப்பட வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. இது உங்கள் நிதி நிலையை பாதிக்கும் சின்னம் எனக் கருதப்படுகிறது.
வீட்டிற்கு நிறைய எறும்பு வருதா? உங்கள் வீட்டில் நடக்கப்போகும் சகுனம் இதுதான் | Ants In The House Mean In Terms Of Omen Vastu
கருப்பு எறும்புகள் – செல்வம், மகிழ்ச்சி, வளர்ச்சி
கருப்பு எறும்புகள் தோன்றுதல், உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள், வளர்ச்சி வாய்ப்புகள் வரப்போகின்றன என்பதைக் குறிக்கும். மகிழ்ச்சி, செழிப்பு, சமூக மரியாதை அதிகரிக்கும். கருப்பு எறும்புகளை விரட்டாமல், மாவு கொடுத்தால், அவை தானாக விலகும் என நம்பப்படுகிறது.
வீட்டிற்கு நிறைய எறும்பு வருதா? உங்கள் வீட்டில் நடக்கப்போகும் சகுனம் இதுதான் | Ants In The House Mean In Terms Of Omen Vastu
பண வரவுக்கான சின்னங்கள்
அரிசியில் கருப்பு எறும்புகள் தோன்றினால், பண வரவு, பதவி உயர்வு, வணிக வாய்ப்பு ஏற்படும். தங்கத்தில் இருந்து எறும்புகள் வெளிவருவது, செல்வம் விரைவில் பெருகும் எனக் கருதப்படுகிறது.
வீட்டிற்கு நிறைய எறும்பு வருதா? உங்கள் வீட்டில் நடக்கப்போகும் சகுனம் இதுதான் | Ants In The House Mean In Terms Of Omen Vastu
திசைகளும் அவசியம்
வடக்கு / தெற்கு திசையில் இருந்து எறும்புகள் வருவது – குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். கிழக்கு திசை – எதிர்மறை செய்திகள். மேற்கு திசை – தேவையற்ற பயணங்கள் ஏற்படலாம். அறையின் கூரை பகுதியில் எறும்புகள் இருப்பது – பண ஆதாயம் பெருகும் அடையாளம்.
இந்த நம்பிக்கைகள் பழைய பாரம்பரியங்களிலும் வாஸ்து நம்பிக்கைகளிலும் அடிபடையுடன் கூறப்பட்டவை. எறும்புகளின் இயக்கத்தையும், வரையறைகளையும் கவனித்தால், வாழ்க்கையின் சில மாற்றங்களை முன்கூட்டியே உணர முடியும் என்பதே இந்த பதிவின் விளக்கம்.
Wednesday, 2 July 2025
மக்கா சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
சோளம், நம்மில் பலருக்கும் இதை பிடிக்கும்.. ஆனால் இதனை டூர் அல்லது பீச் பக்கம் சென்றால் மட்டுமே சாப்பிடுகிறவம். அதிக சத்துக்கள் நிறைந்த சோளத்தை நம் அன்றாட டயட்டில் எடுத்துக்கொள்வது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் சோளத்தில் உள்ள சத்துக்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சோளத்தை சாப்பிடுவதால் நம் உடலுக்கு புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின், ஆன்டிஆக்சிடன்ட் என பல சத்துக்கள் கிடைக்கிறது.
சோளத்தில் நார்ச்சத்து உள்ளதால் உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஏற்ற உணவாகும். மேலும் இதய ஆரோக்கியம், சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளுதல் போன்ற நன்மைகள் சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும். இருப்பினும் அதனை அளவாக எடுத்துக்கொள்வது நல்லது. அளவு மீறினால் நல்ல சத்துக்கள் தீயவையாக மாறிவிடும்.
தினந்தோறும் நம் டயட்டில் சோளத்தை எடுத்துக்கொள்ளலாம். மேலும் நீரிழவு நோய் உள்ளவர்களும் சோளத்தை தாராளமாக சாப்பிடலாம். அதேபோல் கண் சார்ந்த பிரச்னை, வயது சார்ந்த பிரச்சனைகள் வராமல் காக்கும்.
சோளத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் உள்ளவர்கள் தங்களது டயட்டில் சோளத்தை எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்த்து குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
சோளத்தில் வைட்டமின் சி உள்ளதால் நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடல் ஆரோக்யத்திற்கு வழிவகுக்கும்.
சோளத்தை வேகவைத்தும், வயதானவர்கள் சூப்பாகவும் நம் அன்றாட டயட்டில் எடுத்துக்கொள்வது உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடியதாக அமையும்.
கொண்டைக்கடலை
கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க இவை உதவி செய்கிறது.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வைத் தடுக்கும். கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும். மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் உதவும்.
இரத்த சோகை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம்.
கொண்டைக்கடலையை அவித்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு உறுதியை கொடுக்கும். கொண்டைக்கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.
வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக் கடலையை தவிர்ப்பது நல்லது. இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். எனவே இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லது