Thursday, 7 March 2019

ஹோமத்தின் ( #யாகம் )மகிமை

ஹோமத்தின் ( #யாகம் )மகிமை.
ஹோமங்கள் பலவகை உண்டு.
‘அக்னிம் தூதம் வ்ருணீமஹே’ என்கிறது வேதம்.
அக்னி பகவானை தூதுவனாகக் கொண்டு இந்த ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.அதாவது எந்தக் கடவுளை நினைத்து நாம் ஹோமத்தைச் செய்கிறோமோ, நாம் கொடுக்கும் ஆஹுதியை அவரிடம் சென்று சேர்க்கும் வேலையைத்தான் அக்னி பகவான் செய்கிறார்.
இந்த முறையில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே ஹோமத்தில் இட வேண்டும்.
பெரும்பாலும் சமித்து, அன்னம், ஆஜ்யம் (நெய்) ஆகியவற்றால் மட்டுமே இந்த வகை யான ஹோமங்கள் செய்யப்படுகின்றன.
ஹோம அக்னியில் மந்திரத்தினால் இறைவனை ஆவாஹனம் செய்து
இறைவனே அக்னியின் ரூபத்தில் வந்து நாம் கொடுக்கும் ஆஹுதிகளை ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். இவற்றில் வஸ்திரம், புஷ்பம், பழம் என நைவேத்யப் பொருட்கள் உள்பட அனைத்தையும் ஹோம குண்டத்தில் சமர்ப்பணம் செய்து அக்ன் #பகவான் ரூபத்தில் நாம் எந்த #ஹோமம்செய்கின்றோமோ அந்த தேவதையின் அருட்கடாக்ஷம் கிட்டும்

விலங்குகள்_இறைவன்_சிவபெருமானை வழிபட்டு முக்தி பெற்ற தலங்கள்



விலங்குகள்_இறைவன்_சிவபெருமானை வழிபட்டு முக்தி பெற்ற தலங்கள் மற்றும் அதன் வரலாற்றை_காண்போம்.
🕉புலி சிவபெருமானை வழிப்ட்ட தலம்-திருப்புலிவனம்.
காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் திருப்புலிவனத்தில் திருப்புலிவனமுடையார் என்ற பெயரில் சிவபெருமான் அருள்கிறார்.
சாபத்தால் புலியாக மாறிய முனிவர் இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறார்.
🕉பசு சிவபெருமானை வழிபட்ட தலம்-சங்கரன் கோவில்
நெல்லைக்கு அருகில் உள்ள சங்கரன் கோவிலில் அம்பிகை தேவர்கள் சூழ்ந்திருக்க சிவனை வழிபட்டிருக்கிறார்.கோ எனும் பசு வழிபட்ட்தால் அம்பிகை கோமதி என அழைக்கப்படுகிறாள்
🕉சிலந்தி மற்றும் யானை சிவபெருமானை வழிபட்ட தலம்-திருவானைக்காவல்
திருச்சிராப்பள்ளியில் காவிரி ஆற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் அமைந்துள்ள தலம் இது.
இங்கு சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில்,மழையில் கிடந்தது.
சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில்.மழை,மரத்தின் சருகுகள் சிவலிங்கத்தில் விழாமல் தடுத்தது.
யானை தன் துதிக்கை மூலம் காவேரி ஆற்றில் நீரும்,பூவும் கொண்டுவந்து வழிபட்டது.யானை சிலந்தி பின்னிய வலையை அழித்துவிட்டு செல்லும்.
சிலந்தி மீண்டும் வலைபின்னி வழிபாட்டை தொடரும்.யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி அதன் துதிக்கையில் நுழைய இரண்டும் மடிந்தன.
இவைகளின் பக்திக்கு மெச்சிய சிவன் யானையை சிவகணங்களுக்கு தலைவனாக ஆக்கினார்.சிலந்தி மறுபிறவில் கோட்செங்கட் சோழன் என்ற அரசனாக பிறந்தது.
🐜எறும்புகள் சிவபெருமானை வழிபட்ட தலம்-திருவெறும்பூர்..
அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்ற தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்ட தலம்.🐝🐝
திருச்சி மாவட்டம்,திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோவிலில் பிரசாததை எறும்புகள் எடுத்துக்கொள்கிறது.
🕉 ஈ - வடிவில் அகத்திய முனிவர் சிவனை வழிபட்ட தலம் -திரு ஈங்கோய்மலை.
திருச்சி மாவட்டம், தொட்டியம் to முசிறி செல்லும் வழியில் அமைந்துள்ளது திரு ஈங்கோய்மலை (திருவிங்கநாதமலை)
🕉பாம்புக்ள் சிவபெருமானை வழிபட்ட தலம்-திருப்பாம்புரம்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தலத்து சிவனை ஆதிசேசன் என்ற பாம்பு வழிபட்டுள்ளது.
🕉அணில்,குரங்கு,காகம் -சிவபெருமானை வழிபட்ட தலம்-குரங்கணில் மூட்டம்.
சாபத்தால் காகமாக மாறிய எமனும்,அணிலாக மாறிய இந்திரனும்,குரங்காக மாறிய வாலியும் இங்குள்ள சிவனை வழிபட்டிருக்கிறார்கள். இத்தலம் காஞ்சிபுரம் மாமண்டூர் எனும் இடத்தில் உள்ளது.
🕉மயில்-சிவபெருமானை வழிபட்ட தலம்-மயிலாடுதுறை
சாபத்தால் மயிலாக மாறிய அம்பிகை சிவனை வழிபட்ட தலம்.
🕉கழுகு சிவபெருமானை வழிபட்ட தலம்-திருக்கழுக்குன்றம்.
நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் கழுகுகள் சிவபெருமானை பூஜித்து வருகின்றன.
🕉வண்டு-சிவபெருமானை பூஜித்த தலம்-திருவண்டுதுறை.
திருவாரூர் மாவட்டம்,திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு வடிவில் சிவனை பூஜித்தார்.
இன்றும் இந்த கோவிலின் கருவறையில் வண்டுகளின் ரீங்கார ஒலியை கேட்க முடியும்.
🕉நண்டு-சிவபெருமானை வழிபட்ட தலம்-நண்டாங்கோவில்.
சாபத்தால் நண்டாக மாறிய இந்திரன் இத்தல சிவனை பூஜித்து பேறு பெற்றான். 
இத்தலம் கும்பகோணம் அருகே உள்ளது.
🕉சக்ரவாகப் பறவை-சிவபெருமானை பூஜித்த தலம்-திருச்சக்கராப் பள்ளி.
தஞ்சாவூர் மாவட்டம்,திருச்சக்கராப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ள கோவில் இது.
🕉யானை-சிவனை பூஜித்த தலம்-திருக்கொட்டாரம்.
துர்வாச முனிவரால் சாபம் பெற்ற ஐராவதம் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றது.
🕉பசு-சிவனை வழிபட்ட தலம்-பட்டீஸ்வரம்.
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டீஸ்வரத்தில் காமதேனு என்ற பசுவின் மகளான பட்டி என்ற பசு வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.
🕉ஆமை-சிவபெருமானை பூஜித்த தலம்-திருக்கச்சூர்
இங்குள்ள சிவனை வழிபட்டு திருமால் மந்தார தாங்குவதற்கு( கூர்மமாக)தேவையான சக்தியை பெற்றுள்ளார்.
🕉கிளி வழிபட்ட தலம்-சேலம் சுகவனேஸ்வரர்.
கிளியாக மாறிய சுக முனிவர் வழிபட்ட சிவன் சேலத்தில் சுகவனேஸ்வரராக அருள்கிறார்.
🕉சிட்டுக்குருவி சிவனை பூஜித்த தலம்-வட குரங்காடுதுறை.🌳
தன்னை வழிபட்ட சிட்டுக்குருவிக்கு மோட்சம் அளித்துள்ளார் இங்குள்ள சிவன்.
அதனால் சிட்டிலிங்கேஸ்வரர் என வணங்கப்படுகிறார்.
🕉இறைவன் மீது பக்தி செலுத்துவதில் மனிதர்களுக்கு சளைத்தவை அல்ல விலங்குகள்.
அதன் காரணம் தேவர்களோ,முனிவர்களோ தான் பெற்ற சாபத்திற்க்கு விலங்காக மாறி சிவபெருமானை வழிபட்டிருக்கிறார்கள்.
இது வெறும் கதை அல்ல.உண்மையில் நடந்த சம்பவத்திற்கான வரலாறு இருக்கிறது.
சில உயிரினங்கள் தன்னை அறியாமலே இறைவனை பூஜித்து பேறு பெற்றுள்ளன.
🕉 இன்னும் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் விலங்குகள் இறைவனை வழிபட்ட தலங்கள் பலவற்றை அறிய முடியும்.
ஓம்_நமசிவாய

ஆன்மீக குறிப்புகள்.

ஆன்மீக குறிப்புகள்.
1. தினசரி காலையும், மாலையும் தூய
மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள்
பெயரை உச்சரித்தல் வேண்டும்.
2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க
வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம்,
தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த
மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம்,
கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி,
குழந்தைகள்.
3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி,
வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித
நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை
அண்டாது. தூய்மையான காற்றும்
கிடைக்கும்.
4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக
வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை
இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து
வைக்காதீர்கள். இது இறை சக்தியைக்
குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள்
ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு
பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம்
ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால்,
அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை
சிறிது சிறிதாக நீக்கும்.
6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில்
பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ
வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக
இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும்.
அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற
பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும்
இவ்வாறு செய்ய வேண்டும்.
7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி
இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது
உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது
துவாதசன தரிசனம் எனப்படும்.
8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில்
வாசலில் கோலம் போடக்கூடாது.
9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம
நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய்
தேய்த்துக் குளிக்க கூடாது.
10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல்
பூஜை செய்யக்கூடாது.
11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது.
இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.
12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல்
கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும்
இடத்தில் இருக்கவும் வேண்டாம்.
13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத
பூக்களைக் சூடக்கூடாது.
14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள்
வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும்,
விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே
குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம்
அணைக்கக் கூடாது.
16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு
மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை
மணி முதல் ஆறு மணிக்குள் தீபம்
ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும்
நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும்
எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில்
விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.
17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய்,
இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை
ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி
பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர
சக்தியும் கிடைக்கும்.
18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ
ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.
19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி
வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை
ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான்
விளக்கேற்ற வேண்டும்.
20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில்
பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி
தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட
வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.
21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப்
படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை
சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால்,
சிறந்த பலன் கிடைக்கும்.
22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக்
கூடாது.
23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில்
காலையில் தினமும் கேட்பது நல்லது.
24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது
நின்றவாரே தொழுதல் குற்றமாகும்.
அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.
25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்ப
ோது காலை, மாலை வேளைகளில்
விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த
பிறகுதான் விளக்கேற்ற வேண்டும்.
தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய்
உடைக்கக் கூடாது.
26. பூஜையின்போது விபூதியை நீரில்
குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள்
மட்டுமே விபூதியை நீரில் குழைத்து
பூசலாம்.
27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும்
இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது
பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால்
மாங்கல்ய விருத்தி ஏற்படும்.
28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப்
பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.
29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல்
உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல்
கூடாது.
30. ஈர உடையுடனும், ஓராடையுடனும்,
தலைகுடுமியை முடியாமலும்,
தலையிலும், தோளிலும் துணியை
போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ
வழிபாடு செய்யக் கூடாது.
31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர
உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி
உதறி உதடுத்தலாம்.
32. சுப்ரபாதத்தை தினமும் காலை
வேளையில் மட்டுமே கேட்க வேண்டும்.
அவ்வாறு கேட்க முடியாத நிலையில்
மாலையில் கேட்பது அவ்வளவு
உசிதமானதில்லை எனப்படுகிறது.
33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க
தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே
வெற்றிதான். காலையில் விழித்தவுடன்
நாராயணனையும் இரவு தூங்கு முன்
சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.
34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி
தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில்
தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில்
எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம்
ஏற்றி வைக்கலாம்.
35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய
வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து
கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல்
இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.
37. காலையில் நின்று கொண்டு செய்யும்
ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில்
உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால்
பகலில் செய்த பாவமும் தொலைகிறது.
38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது
கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை
எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது.
39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள்
அணைக்கக் கூடாது.
40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது
தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.
41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு
பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.
42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி
வைக்கக் கூடாது.
43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட
துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு
நிவேதனம் செய்யக்கூடாது.
44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும்.
மா இலை தோரணங்களுக்கு பதிலாக
பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால்
மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.
46. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின்
வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.
47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு
வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது.
யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து
கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக்
கொள்கிறார்.
48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும்
துளசியை கையில் வைத்துக் கொண்டு என்
பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின்
தொடர்ந்து செல்வேன் என பகவான்
கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில்
துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை
அவருக்கு உண்டு.
49. தெய்வங்களுக்கு நிவேதனம்
செய்யும்போது வெற்றிலை மற்றும்
பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2,
4, 6, 8, 10) வைக்க வேண்டும்.
50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு,
வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள்,
தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில்
நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற
பொருட்களின் மீது வைக்க வேண்டும்.
51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில்
வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில்
வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம்
செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல
மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.
52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள்
போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும்.
நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில்
ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில்
போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட
வேண்டும்.
53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்
வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி
கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை
ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி
இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது
என்பார்கள்.
54. உறவினர்களை வெளியூர் செல்ல
வழியனுப்பிய பிறகு பூஜை,
முதலியவைகளை செய்யக் கூடாது.
55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம்,
திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை
வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும்.
வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம்
கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம்
பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.
56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள்
ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம்
இட்டுக் கொள்ள வேண்டும்.
57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப்
போட்டு கட்டாயம் வைக்க வேண்டும்.
ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும்
வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால்
சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களை
யும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.
58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு
குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி,
குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து
விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு
நல்லது.
59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு.
காலையில் எழுந்ததும் துளசியைத்
தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம்
கொடுக்கும்போது சிறிது துளசியுடன்
தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு
தரப்படாத தானம் வீண்.
60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப்
படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க
வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக்
கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை
எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு
வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில்
எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த
அளவு பாக்கு வைக்க வேண்டும்.
61. வெற்றிலை நுனியில் லட்சுமியும்,
மத்தியில் சரவஸ்தியும், காம்பில்
மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே
வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு
வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு
வைக்க வேண்டும்.
62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு
இடது புறம் வருமாறு வைக்க வேண்டும்.
அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி
சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.
63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை
போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை
போடும் போது வாழை மரத்திலிருந்து
நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது
பக்கம் வரவேண்டும்.
64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு
முன் தான தருமம் செய்வதென்றால் செய்து
விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம்
செய்யாதீர்கள்.
65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும்
ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல
பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.
66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து
முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.
தலையை விரித்து போட்டு இருந்தால்
லட்சுமி தேவி தங்க மாட்டாள்.
67. பூஜை செய்யும்போது கடவுள்
உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப்
பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும்,
பாதமும் திறந்து நிலையில் இருக்க
வேண்டும்.
68. செல்வத்திற்குரிய தெய்வங்களான
வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர்
படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து
இருக்குமாறு மாட்டக்கூடாது.
69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப்
படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும்.
வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத்
திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம்.
தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக்
கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால்
தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப்
பார்த்து படங்களை வைக்கவும்.
70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு,
தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து
கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.
71. பூஜை அறையில் அதிக படங்களையும்,
தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம்
என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக்
கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும்
இடையில் போதிய இடம் விட்டு வைக்க
வேண்டும்.
72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில்
சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு
நிவேதனம் செய்யக்கூடாது.
73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர்
பாத்திரங்களில் நேரடியாக வைத்து
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை
வைத்து நிவேதனம் செய்யலாம்.
74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட
விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.
75. தனது வீட்டில் கோலம் போடாமலும்
விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு
செல்லக்கூடாது.
76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது
நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு
அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும்
கூடாது.
77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு
வைக்கக் கூடாது.
78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது
லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு
வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு
கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே
உட்காரக் கூடாது.
79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம்
சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது
வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி
வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும்
உதவும். வெளியே செல்லும்போது சட்டைப்
பையிலும் வைத்துக் கொள்ளலாம்.
80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து
சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி,
தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது

அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது.

அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வந்தால் இன்னும் விசேஷம், அன்றைய தினம் பைரவரை வணங்கிட, வேண்டும் வரங்கள் எல்லாம் கிடைக்கும். அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். பைரவர் சிவனின் 64 வடிவங்களில் மகாஞானியான, ரௌத்ர தோற்றம் கொண்டவர். எல்லா சிவாலயங்களிலும் பைரவர் இருப்பார். நாயை வாகனமாகக் கொண்டு காட்சி தருபவர்.
அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் யாவும் விலகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி அனைத்தும் பைரவரை வணங்கினால் நன்மையாக முடியும். பைரவருக்கு நள்ளிரவு பூஜையே உகந்தது எனப்படுகிறது. எனினும் உச்சி காலம் எனப்படும் நண்பகல் பூஜையும் சிறப்பானது.
அஷ்டமி நாளில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு கிட்டும். எலுமிச்சம்பழத்தை பைரவமூர்த்தியின் காலில் வைத்து அர்ச்சித்து வீட்டுக்கு கொண்டு போனால் தீராத வியாதிகள் தீரும். வீட்டை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியும். மன அமைதியே இல்லாதவர்களுக்கு பைரவரே நல்ல துணை.
எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.
தேய்பிறை அஷ்டமி நாள் இன்று. துக்கங்கள் யாவையும் மாற்றி நிம்மதியை அருளும் பைரவ வழிபாட்டை "காலபைரவாஷ்டகம்" என்னும் பாடலை கேட்டு சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவரை வழிபட்டு, ஆபத்துகளில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம். இந்த பாடலை பாடியவர் உன்னிகிருஷ்ணன், இசை வீரமணிகண்ணன், தயாரிப்பு ஸ்ருதிலயா மீடியா கார்ப்.

ஈசனும் தீ யும்:



ஈசனும் தீ யும்:
தீ நெருப்பு என்பது ஈசனால் உருவாக்கப்பட்ட பஞ்ச பூதங்களில் ஒன்று. தீ க்கு கனல்,தணல்,நெருப்பு என்ற பெயர்கள் உண்டு. இது ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. தீ என்றால் தீவிரம்; நெருப்பு என்றால் நேர்மை; கனல் என்றால் கண்டிப்பு; தணல் என்றால்
தண்டிப்பு. இவைகள் கவித்துவமான உவமைகள் அல்ல. உண்மையில் வெப்பத்தின் தன்மையே இயல்பே இதுதான். ஐம்பூதத் தளங்களில் நெருப்புக்கான தளம் திருவண்ணாமலை யாகும். ஈசனால் உருவாக்கப் பட்ட வெப்பம் ஈசனைப் போன்றே கடமை தவறாத போர்வீரன். தீ சிறு பொறி யாக இருப்பினும் நெருப்புக் கோளமாக கதிரவனாக இருந்தாலும் தான் எடுத்துக் கொண்ட பணியை செய்து முடிப்பதில் வெப்பத்திற்கு நிகர் இல்லை.வெப்பத்தை பிரபஞ்சத்தின் இதயம் எனலாம். ஆகவே பிறப்பு முதல் இறப்பு வரை துடித்துக் கொண்டே இருக்கும் இதயத்தை உடம்பின் கதிரவன் எனலாம்.
இதைத்தான் மணிவாசகர் தனது திருவாசக சிவபுராண த்தில் 
" மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
நேசனே தேனாரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே" என்கிறார். இதையே அவர் திருவாசக திருவார்த்தை யில் 
"மாதிவர் பாகன் மறைபயின்ற
வாசகன் மாமலர் மேயசோதி
.............
தாதி பிரமம் வெளிப்படுத்த
அருளறி வாரெம்பி ரானாவாரே" என்கிறார்
அதாவது "ஈசன் பெண்ணின் இட பாகத்தில் இருப்பவன்; மறைகளை கூறியவன்; மலர் போன்ற இதயத்தில் ஒளி விளக்கானவன்"என்கிறார். 
இதையே திருமூலர் தனது திருமந்திரத்தில் 
"அணைதுணை அந்தனர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததன்
உட்பொருள் ஆன
இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது
துணையணை ஆயதுஓர்
தூயநெறி யாமே" 
இதன் பொருள் "அடியார்கள் வளர்க்கின்ற தீயுனுள் தீயாக
இருக்கக்கூடிய ஈசனே சிவபெருமானே உயிர்களுக்குத் உயிராகவும் துணையாகவும் இருப்பவன்" என்பதாகும். 
நெருப்பைப் போல இருப்பது 
அழிவு குணமல்ல. அது நேர்மையின் கடமையின் அடையாளம். அது ஆக்கத்து க்கான குணம்.வெப்பத்தால் ஒன்று அழிகிறது என்றால் இன்னொன்று பிறக்கிறது என்று பொருள். ஈசன் தனது 
மூன்றாவது கண்ணான நெருப்பினை வெளிப்படுத் துவது என்பது தீயனை அழித்து நன்மையை உரு வாக்கத்தான். வெப்பம் இல்லைஎனில் மழை இல்லை. உண்மைக்கு நேர்மைக்கு ஆக்கல் அழித்தல் காத்தல் அதோடு அருளுவது ஆகியவற்றின் மூலமான ஈசனின் மறு உருவம்தான் ஒளி, நெருப்பு,
கனல், தணல் ஆகும். 
எனவே கோள வடிவிலான ஆதியும் அந்தமுமில்லா
அருட்பெருஞ்ஜோதியான ஈசனை நெஞ்சுருக வேண்டி அவனருளைப் பெறுவோம். 
ஓம்நமச்சிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம்.

சனியும் கடனும்.....

சனியும் கடனும்.....
காத்தாயி அம்மன் வால்முனீஸ்வர சாமி துணை
நண்பர்களுக்கு அன்பர்களுக்கு வணக்கம்.கடந்த தினம் ஒரு நண்பர் எம்மிடம் தனக்கு கடன்கள் தொடர்ந்து பெருகிக்கொண்டே வருகிறது இவைகளை தீர்க்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா என்று கேட்டு இருந்தார்.
கடன் என்ற நிலை நமக்கு உண்டாக நம்முடைய தேவைகளின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தை நாம் சரியாக யூகிக்க வில்லை என்று பொதுவாக குறிப்பிடுவது உண்டு.சிலர் சேமிப்பு இல்லாத சூழ்நிலையில் நமக்கு கடன்கள் உண்டாகிறது என்று சொல்வது உண்டு.இந்த பதிவில் நாம் கோள்களின் வழியாக கடன்கள் ஏற்படுவதை அறிந்து கொள்ள சில தகவல்களும் பரிகாரம்களும் பதிக்கப்பட்டு உள்ளது.
நம்முடைய பிறப்பே கடனால் தான் ஏற்படுகின்றது என்று நம்முடைய சித்தாந்த நூல்கள் சொல்கிறது.நல் வினைகளின் கடன் நமக்கு நன்மையாக உயர்ந்த குலத்தில் பிறக்கச்செய்வதும் மேன்மைபெற்ற வாழ்க்கையை பெற செய்கிறது தீய வினைகளின் கடன் நமக்கு தாழ்ந்த குலத்தில் பிறக்கச்செய்வதுடன் வாழ்வில் துன்பங்களை அனுபவிக்க செய்கிறது.திருச்சேறை என்ற ஸ்தலம் சாரபரமேஸ்வர சாமி உடனுறை ஞானவல்லி என்ற அம்பாளுடன் அருளபாவிக்கிறார் நம்முடைய கடன்களை அறுக்கவும் தீர்க்கவும் நாம் திங்கள் தோறும் அங்கே சென்று வழிபட நம்முடைய அணைத்து கடன்களும் தீர்ந்து போகும் என்று ஒரு சோதிடர் சொன்னதால் நாம் அங்கே சென்றோம்.
"ரிண விமோசன லிங்கேஸ்வரர்"என்ற நிலையில் பெருமான் கடன்களை நிவிர்த்தி செய்கிறார் என்று கோவில் தகவல்களில் அறிந்து கொண்டோம்.
உண்மையில் இக்கோவில் மூர்த்தி நம்முடைய பூர்வ ஜென்ம கடன்களை தனது அருட்பார்வையால் அழித்து அருள் செய்கிறார் என்று புரிந்து கொண்டோம்.பூலோகத்தில் நமக்கு ஏன் கடன்கள் ஏற்படுகின்றது என்ற தகவலுக்கு நாம் முன்ஜென்ம வர்ணனையில் சனிக்கோளை பற்றியும் இவருக்கு பகையான செவ்வாய் கோள்களை பற்றியும் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம்.
"சொல் வாக்கினால் ஏமாற்றிய நபர்களும் செல்வாக்கினால் வஞ்சனை செய்த நபர்களும் பணத்தின் மூலமோ அல்லது உலோகத்தின் மூலமோ கடன்காரனாக உண்டாகி வஞ்சிக்க பட்ட நபரின் மூலமாக துன்பத்தை அடைவார்கள்".இதனின் அடையாளத்தை சனி கோளின் மூலமாக அறிந்து கொள்ளமுடியும்.சனி தாக்கம் உள்ள காலம் மற்றும் சனி லக்கினாதிபதியாகி 2 6 12 போன்ற வீடுகளில் அமர்ந்து இருக்க பிறந்தவர் மற்றும் குரு ஆசிகள் இல்லாமல் பிறந்தவர்களுக்கு சனியின் குணத்தில் ஒன்றான கடன் பெறுவது போன்ற நிலைகள் உண்டாகும்.கடன்களை பலவாறாக பிரிக்கலாம்.நாம் கவனித்த வரையில் சிலர் சிறுவயதிலயே விளையாட்டாக கடன் பெற்று செலவு செய்து வளர்வது உண்டு சிலர் கடனால் மட்டுமே குடும்பத்தை நடத்துவது உண்டு.சிலர் தொழில் துவங்க கடன்பட்டு மீள முடியாமல் தவிப்பது உண்டு சிலர் மற்றவருக்கு உதவி செய்ய கடன் பெற்று மனஉளைச்சலில் தவிப்பது உண்டு சிலர் திருமணத்திற்கும் பிள்ளைகள் படிப்புக்கு என்று கடன் பெற்று தவிப்பது இப்படி கடன்களை பற்றிய காரணத்தை ஊடுருவினால் பல விவரம்களுக்கும் அதன் பின்னணியில் தேவைகளும் ஒளிந்து இருப்பதை நாம் அறிந்து கொள்ளமுடியும்.ஒரு மனிதனுக்கு சனிகோளினால் கடனும் அதனால் மனஉளைச்சலில் ஏற்படும் காலத்தில் கோபத்தின் குணமான செவ்வாய் வெளிப்பட்டு தன்னை அழித்து கொள்வது அல்லது பிறரை அழித்து விடுவது என்ற நிலைக்கு கொண்டு செல்வதை நாம் காண்கிறோம்.இதை தான் சோதிட நூல்கள் செவ்வாயும் சனியும் கடன்பெறுவதற்கும் அழிவிற்கும் காரத்துவம் என்றே சொல்கின்றன.(திருமண வாழ்வில் பிரச்சனைக்கும் இந்த சனிசெவ்வாய் கர்மத்தின் கடனே முன்னின்று செயல்படுகிறது)குருவின் ஆசிகள் இருந்தால் பணத்தால் சமுதாயத்தில் அவமானம் ஏற்படாமல் பாதுகாத்து அருள்செய்வார்.

பித்ரு தோஷ நிவர்த்தி தலம்

"ஆதி விநாயகர்"
பித்ரு தோஷ நிவர்த்தி தலம்
பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவஸ்தலங்கள் வரிசையில் 58-வது தலமாக இருப்பது திருத்திலதைப்பதி. இதற்கு திலதர்ப்பணபுரி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இன்றைய நாளில் இத்தலம் செதலபதி என்று அழைக்கப்படுகிறது.
அரிசிலாறு, சோழ நாட்டின் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையை ஒட்டி ஓடிவரும் ஜீவநதி.
தேவர்களும் கந்தர்வர்களும் அங்கு வந்து புனிதமான அந்நதியில் நீராடி, இறைவனைத் தொழுது செல்வது வழக்கம்.
மந்தாரவனமாகிய இத்தலத்தில் அருள்வதால், இறைவன் மந்தாரவனேஸ்வரர், இறைவனுடன் அருளும் அன்னை, சுவர்ணவல்லி.
ஒரு சமயம், இறைவன் சிவலோகத்தில் இருந்து தனியே புறப்பட்டு உயிர்களின் நலம் கண்டுணர தேசங்கள் தோறும் சஞ்சாரம் செய்யலானார். அந்த சமயத்தில் ஒருநாள், அம்பாளோ நித்திய கடன் முடிக்க நீராடி வரச் சென்றாள்.
அன்று ஏனோ தனித்திருக்கும் தனக்கு காவலாக ஒருவர் இருந்தால் நல்லது என்று தோன்றியது. குளிக்கச் செல்லும் முன், காவலுக்கு பலம் பொருந்திய ஒருவரை நிறுத்தி விட்டுச் செல்ல எண்ணினாள். நீராடுவதற்காக எடுத்துச் சென்ற மஞ்சள் பொடியால், மங்களம் பொருந்திய சிறுவன் உருவமொன்று சமைத்து காவல் இருக்கச் செய்தாள்.
செல்லும் முன் சின்ன உத்தரவிட்டாள். “மங்கள மகனே, எவர்வரினும் உள்ளே அனுமதிக்காதே!’ என்று சொல்லிவிட்டுச் சென்றாள். அன்னை பார்வதியை வணங்கி “அவ்வாறே ஆகட்டும்’ என்றான், பாலகன்.
வலக்கால் தொங்க விட்டு, இடக்கால் மடித்து இடக்கையை இடக்காலின் மீது வைத்து, வலக்கையைச் சற்றுச் சாய்த்து அபயமுத்திரையினைக் காட்டியவாறு அமர்ந்து காவல் காக்கத் தொடங்கினான் அதேசமயம் உலா முடிந்து அந்த உமாபதி, அவசரமாக உள்ளே செல்ல முற்பட்டார். தடுத்தான், உமைபடைத்த பாலன். விக்னம் செய்த சிறுவன் மேல் சிவபிரானுக்கு சினம் ஏற்பட்டது. வாதம் செய்த அவனை வாதம் செய்ய முடிவு செய்தார். கோபம் மேலோங்க, அவனது சிரம் அறுத்து எறிந்தார்.
போரோலி போன்ற பேரொலி கேட்டு ஓடி வந்தாள், சிவகாமி. நடந்தது அறிந்து சினந்தாள். யார் அந்தப் பிள்ளை என்றார் மகேசன். “நான் படைத்த நம் மகன் என்றாள். அவனை உயிர்ப்பிக்க வேண்டுவது உம் கடன்!’ என்று ஈசனிடம் உரைத்தாள்.
சிறுவன் மேல் கொண்ட சினத்தை உணர்ந்த சிவபெருமான், தவறை நினைத்து வருந்தினார். பின்னர் கனங்களை அழைத்து, வடபுறம் தலைவைத்து இருக்கும் ஜீவனின் தலையைக் கொண்டுவந்து பொருத்துக என உத்தரவிட்டார். கிடைத்த யானையின் தலையைக் கொண்டுவந்து பொருந்தினர் கணங்கள். அதற்கு உயிர் அளித்தார் உலகேசன்.
அதுமுதல் யானை தலையும் மனித உடலுமாக உயிர்த்து எழுந்த கணேசன், பெற்றோரைப் பணிந்தான்.
சிவாலயங்களில் தனக்கெனத் தனியிடமும், அந்தஸ்தும் வேண்டுமெனக் கேட்டான். அதோடு, நான் உருவான இடத்தில் தன் பழைய உருவுடன் காட்சி தர வேண்டும் எனவும் வேண்டினான்.
சிவனார் தனது கணங்களுக்கு எல்லாம் அவனைத் தலைவனாக்கி கணபதி என அழைத்தார். அதோடு கணங்களுக்குத் தலைவன், கணேசன் எனவும் தெய்வ நிலையுடன் விளங்கச் செய்தார்.
அனைத்து சிவாலயங்களிலும் மூலக் கருவறையின் பின்புறம் தனிச் சன்னதி தந்ததோடு, திருவீதி உலாவில் பஞ்ச மூர்த்திகளுள் ஒருவராக எழுந்து அருளும் வாய்ப்பையும் நல்கினார்.
மற்றொரு வரத்தின்படி, மனிதர்கள் தொல்லைகளாகிய விக்னங்களில் இருந்து விடுபட்டு சுகமாக வாழவும், முன்வினைப் பயன்கள் தீரவும் அருள்பவராக அரிசிலாற்றங்கரையில் அமைந்த திலதர்ப்பணபுரியில் ஆதிவிநாயகராக பழைய திருமுகத்துடன் கணநாதனை அருள்புரியச் செய்தார். திலதைப்பதி என்றழைக்கப்பட்ட அத்தலம் முன்னோர்க்கு உரிய கடமைகளைச் செய்யும் தலைமாதலால் திலதர்ப்பணபுரி என்றாகியிருக்கிறது இன்று.
திலதர்ப்பணபுரியில் சிவனை நோக்கி அமர்ந்து மனித முகத்தோடு அருள் வழங்கி சிறப்பிக்கும் நரமுக கணபதியை என்று வழிபட்டாலும் பலப்பல நன்மைகள் கிட்டும். குறிப்பாக சதுர்த்தி தினங்களில் வழிபட ஏராளமானோர் குவிகின்றனர். விநாயகர் சதுர்த்தி பூஜை தனிச் சிறப்புடன் நடக்கிறது. என்றும் வழிபட்டு பேறு பெறலாம்.
திலதர்ப்பணபுரி இன்று மேலும் திரிந்து செதலப்பதி என திரிந்து வழங்குகிறது.
செதலப்பதி ஆதிவிநாயகனை மயிலாடுதுறை மாவட்டம் செதலபதியில் அமைந்து அருள்தரும் முக்தீஸ்வரர் திருக்கோயில் வாயிலில் தரிசனம் செய்யலாம்.
எப்படிப் போவது?
மயிலாடுதுறை - திருவாரூர் சாலை வழியில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது. பூந்தோட்டத்தில் இருந்து ஆட்டோ மூலம் கோயிலுக்கு செல்லலாம். பூந்தோட்டம் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஆதிவிநாயகர் கோயில் என்று இக்கோயிலை அழைக்கிறார்கள். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் கூத்தனூர் சரஸ்வதி கோயில் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு மதிமுக்தீஸ்வரர் திருக்கோயில்,
செதலபதி,
பூந்தோட்டம் அஞ்சல்,
நன்னிலம் வட்டம்.
திருவாரூர் மாவட்டம் – 609 503.
இக்கோயில், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.45 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சித்தர்களால் சொல்லப்பட்ட 20 பரிகார முறைகள்

சித்தர்களால் சொல்லப்பட்ட 20 பரிகார முறைகள்
(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.
(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு, உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு, ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.
(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.
(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.
(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.
(7)அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப, தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.
(8)செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும். வீட்டிலேயே செய்யலாம்.
(9) 7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு, கடை, ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.
(10)வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.
(11)ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.
(12)படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.
(13)வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல. வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வ வரவை, வசீகர சக்தியைப் பாதிக்கும்.
வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய், பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும். இது பூமி தோஷத்தை உண்டாக்கும். எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.
(14)உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..
(15)உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது, மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும், அல்லது குழந்தை வாய்பேசாமல்
போகவும் வாய்ப்புண்டு. அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்
(16)சிறிது கல் உப்பை ஒரு கின்னத்தில் போட்டு, கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .
(17)வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது. இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும். தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம். இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்
(18)கோவில் கொடி, கொடிமரம், கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது. தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள். இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.
இதற்குப் பரிகாரம்:
வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம், கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும். மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று
(19)சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது. இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும். முகத்தில் தேஜஸ், கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை, அவமானம் உண்டாக்கும். பேய், பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.
இதற்குப் பரிகாரம்:
ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும். மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு “ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய” என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்
(20)கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம், ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும். எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்

சிவன் கோயிலுக்கு இப்படி சென்று வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்!



சிவன் கோயிலுக்கு இப்படி சென்று வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்!
சிவலாய வழிபாட்டு இயல் என ஒன்றை சித்தர்கள் முறையாக வகுத்து வைத்திருந்தார்கள். ஏனெனில் சித்தயுகமே சிவயுகம். நவீனயுகத்தில் சித்த நெறிகள் பின்பற்றப்பட வாய்ப்பில்லை என்ற உத்தியை சிலர் உருவாக்கியிருக்கின்றனர். ஆனால் நம்மால் எளிதாக பின்பற்றிட முடியும். இறைவன் உறையும் ஆலயங்களில் திருக்கோயில் வழிபாட்டு இயலின் படி, வழிபாடு நடத்தினால் நிச்சயமாக இறையருளை பெற்றிட முடியும். எந்த சித்த முறைமைகளை இங்கே பாப்போம்.
#1 சிவாலயத்திற்கு செல்லும்போது தூய்மையான உடைஅணிந்து, வீபுதி பூசிக்கொண்டு, சிவ பாராயனங்களை மனதில் நினைத்துச் செல்ல வேண்டும்.
#2 சிவன் லிங்கமாக வீற்றிருப்பார். சிவ கோபுரத்தை தூல லிங்கம் என்பார்கள். எனவே இரண்டு கைகளையும் தலை மேல் குவித்து முதலில் கோபுர தரிசனம் செய்ய வேண்டும்.
#3 அதையடுத்து பலிபீடத்தின் முன்பாக வீழ்ந்து வணங்க வேண்டும். கிழக்கு அல்லது மேற்கு நோக்கிய திருக்கோயில் என்றால் வடக்கு நோக்கியும், வடக்கு அல்லது தெற்கு நோக்கிய கோயில் என்றால் கிழக்கிலும் தலை வைத்து வணங்க வேண்டும்.
#4 ஆண்கள் தங்கள் எட்டு உறுப்புகள் நிலத்தில் தோய வீழ்ந்து வணங்க வேண்டும். எட்டு உறுப்புகள் என்பது தலை, 2 கைகள், 2 செவிகள், மேவாய், 2 புயங்கள். இரு செவிகளும் நிலத்தில் பட வேண்டும் என்றால் தலையை இரு பக்கமும் திருப்பி நிலத்தில் படுமாறு வணங்க வேண்டும்.
#5 பெண்கள் ஐந்து உறுப்புகள் நிலத்தில் தோய வீழ்ந்து வணங்க வேண்டும். ஐந்து உறுப்புகளாவன தலை, 2 கைகள், 2 முழந்தாள்.
#6 வீழ் வணக்கத்திற்கு பிறகு இரு கரங்களையும் மார்பின் மேல் குவித்து, சிவனை எண்ணிக்கொண்டே திருக்கோயில் சுற்றினை மூன்று முறை வலம் வர வேண்டும். 5, 7, 9 எண்ணிக்கையிலும் வலம் வரலாம்.
#7 முதலில் விநாயகரை தரிசித்துவிட்டு, பின் நந்தியை வணங்கியே மூல லிங்கத்தை நோக்கி செல்ல வேண்டும்.
#8 மூல லிங்கமான சிவபெருமான், உமையம்மை, முருகன், தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை, வீரபத்திரர், பைரவர், நவகிரக திருமேனிகளை வழிபட வேண்டும். திருமஞ்சனம் (அபிஷேகம்), அலங்காரம் செய்யும் காலங்களில் வழிபடக் கூடாது.
#9 தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் மூல லிங்கத்தை வழிபடும்போது இருகரங்களையும் தலை மேல் வைத்தோ, மார்பின் மீது வைத்தோ, சிவ மந்திரங்களை உச்சரித்தவாறு வழிபட வேண்டும்.
#10 சண்டிகேஸ்வரர் சன்னதியில் கைத்தட்டக் கூடாது. கையை மூன்று முறை துடைத்துக் காட்ட வேண்டும். இதன் பொருள், இறைவனின் அனைத்து பிரதாசங்கள் மற்றும் உடைமைகளுக்கும் இவரே அதிபதி. எனவே கோயிலில் இருந்து வெளியேறும்போது நான் எதுவும் எடுத்துச்செல்லவில்லை என்பதை அவரிடம் தெரிவிக்க இந்த முறை பின்பற்றப்படுகிறது.
#11 சண்டிகேஸ்வரரை பார்த்த பின்னர், கொடிமரம் முன்பாக சென்று வீழ்ந்து வணங்க வேண்டும். ஓம் நமசிவாய என்ற திருவைந்தெழுத்து மந்திரத்தை ஒருமுறையேனும் உச்சரித்துவிட்டு, பின் எழுந்து விடைபெற வேண்டும்.

தலைமுறை சாபம் நீங்க வேண்டுமா?

தலைமுறை சாபம் நீங்க வேண்டுமா?
🌟 மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே பிறந்தது முதல் இறப்பு வரை செல்வச் செழிப்புடன் வாழ்கிறார்கள். ஒரு சிலர் பிறந்தது முதல் இறப்பு வரை கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒரு சிலர் சிறிது காலம் செல்வ செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கையில் திடீரென ஏழ்மை நிலைக்குச் சென்றுவிடுவர். ஒரு சிலர் விவரம் தெரிந்தது முதல் வறுமையிலேயே வாழ்வார்கள்.
🌟 மேலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, தொழில் அமையாமை, தொழிலில் நஷ்டம், வேலையில் நிம்மதியின்மை, சரியான வேலை கிடைக்காத நிலை, வேலை இருந்தும் போதிய வருமானம் இல்லாத நிலை, குடும்பத்தில் கணவன், மனைவி ஒற்றுமையின்மை, திருமணத்திற்குப்பின் தம்பதியினர் இருவரும் பிரிந்து செல்லுதல், எடுத்த செயல்கள் அனைத்திலும் தடை, தாமதம் ஏற்படுதல், உற்றார், உறவினர்களுடன் பகை ஏற்படுதல், குழந்தைகள் கல்வியில் தடை ஏற்படுதல், சரியான பருவத்தில் திருமணம் நடக்காமல் இருப்பது போன்ற கஷ்டங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தால் தலைமுறை சாபம் இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
🌟 வாழ்வில் அடிக்கடி கஷ்டங்களை அனுபவித்து வருபவர்களின் முன்னோர்கள் மற்றவர்களுக்கு கெடுதல் செய்து வாழ்ந்துள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முன்னோர்களால் பாதிக்கப்பட்டவர்கள் கஷ்டத்தை தாங்க முடியாமல் இறைவனிடம் முறையிடுவார்கள். இறைவன் முன்னோர்கள் செய்த பாவத்திற்காக தண்டனையை அவர்களின் சந்ததிகளுக்கு தக்க சமயத்தில் வழங்குவார்.
🌟 முன்னோர் செய்த பாவமானது தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். முன்னோர்கள் செய்த பாவம் சந்ததிகளைப் பாதிக்கும். செல்வ செழிப்புடன் வாழும் ஒருவர் திடீரென ஏழையாகிவிட்டால் அவருக்கு தலைமுறை சாபம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தலைமுறை சாபம் இருந்தால் அடிக்கடி கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும். கஷ்டங்கள் நீங்க முன்னோர்கள் செய்த பாவம் மற்றும் பிரம்மஹத்தி தோஷப் பரிகாரங்களை செய்ய வேண்டும்.
🌟 தலைமுறை சாபத்திலிருந்து விடுபட திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று முன்னோர்கள் செய்த பாவம் மற்றும் பிரம்மஹத்தி தோஷப் பரிகாரங்களை செய்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து அடிக்கடி கஷ்டங்களை சந்தித்து வருபவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று தோஷப் பரிகாரங்களை செய்து கொள்வதன் மூலம் தலைமுறை சாபம் நீங்கி வாழ்வில் ஏற்றம் பெறலாம்.
Image may contain: sky and outdoor

Wednesday, 6 March 2019

சுந்தரர்

திருநாவலூரில் சிவனைப் பரம்பரையாகத் தொழும் குலத்தைச் சேர்ந்தவர் சடையனார். இவரது மனைவி பெயர் இசைஞானியார்.
இவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு நம்பியாரூரன் எனப் பெயர் சூட்டினர். குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.
மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் என்பதற்கு இணங்க சிவனைத் தொழுத குலத்தில் பிறந்ததால், மழலையாக இருந்த நம்பியாரூரர் சிவப் பழமாக ஜொலித்தார்.
இவர் மற்ற பிள்ளைகளுடன் தெருவில் ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த மன்னன் மனத்தை மயக்கிவிட்டார்.
குழந்தையைக் கையில் தூக்கிக்கொண்ட மன்னன், அவரது தந்தை சடையனார் இல்லத்திற்குள் சென்றார்.
அப்போது மன்னன் நரசிங்கமுனையரும் சடையரும் ஏற்கனவே பால்ய நண்பர்கள் என்பது தெரியவந்தது. அந்த உரிமையில் இக்குழந்தையைத் தான் அரண்மனையில் வைத்து வளர்க்க விரும்புவதாகக் கூறவே அதற்கு ஒப்புக்கொண்டார் சடையனார்.
மன்னன் தத்துப் பிள்ளை ஆனதால், இளவரசரான நம்பியாரூரன் ஆய கலை அறுபத்து நான்கையும் கற்றார். அவருக்கு திருமண வயதும் வந்தது. இளவரசர் அல்லவா?
தனது திருமணத்திற்காகப் பெண் வீட்டாரின் ஊருக்கு வெண் புரவியில் ரத, கஜ, துரக பதாதிகளோடு புறப்பட்டுச் சென்றார். அப்போது இவரிடம் சிவன் தன் திருவிளையாடலை நடத்தத் திருவுளம் கொண்டார்.
முதிய அந்தணர் உருவில் திருமணக் கூடத்திற்கு வந்த சிவன், இவர் தனது அடிமை என்றும் தான் கூறுவதைக் கேட்குமாறும் அங்குள்ளோரிடம் வேண்டினார்.
அங்குள்ளோர் முதியவர் தரப்பு வாதத்தைக் காதுகொடுத்துக் கேட்டார்கள். நம்பியின் பாட்டனார் எழுதி முத்திரை வைத்த அடிமை ஓலை ஒன்றினைச் சான்றாக அளித்தார். அதனைப் பறிப்பது போல் பிடுங்கிய நம்பியோ ஓலையைச் சுக்கு நூறாகக் கிழித்துவிட்டார்.
இவ்வோலை நகல்தான் என்றும் மூலவோலை, தான் வாழும் திருவெண்ணைநல்லூரில் உள்ளது என்றும் எடுத்துக் கூறிய முதியவர், அங்கு அனைவரும் வருமாறு கூறினார்.
இவ்வழக்கை முடித்த பின்னரே மணம் முடிப்பேன் என்று சபதமெடுத்த நம்பியாரூரன், அம்முதியவருடன் திருவெண்ணைநல்லூருக்குப் பயணப்பட்டார். பல காத தூரம் நடந்து வந்த களைப்புத் தீர, முதியவர் இல்லம் எதுவென்று வினவினார்.
திருவெண்ணைநல்லூர் கோவிலுக்குள் நுழைந்த சிவபெருமான் மறைந்து போனார். அப்போது “இவருக்கு என்ன பித்தா (பித்துப் பிடித்திருக்கிறதா)? இவ்வளவு தூரம் நம்முடன் வந்துவிட்டு தற்போது காணவில்லையே?” என்று கேட்டார் நம்பியாரூரன்.
அப்போது சிவபெருமான் பார்வதி சமேதராக நந்தியம்பெருமான் மேல் காட்சியளித்தார். இவ்வாறு ரிஷபாரூடராக காட்சியளித்த சிவன், சுந்தரா என விளித்து தன்னைக் குறித்துப் பாட நம்பியாரூரரிடம் வேண்டினார். இப்படி திடீரென்று காட்சி அளித்ததில் ஆனந்த அதிர்ச்சி அடைந்த சுந்தரர், என்ன பாடுவது என்று தெரியாமல் திகைத்தார்.
“இத்திருக்கோயிலுக்குள் நுழையும்பொழுது பித்தனா என்று கேட்டாயே அதனையே முதல் சொல்லாகக் கொண்டு பாடு” என்று அடியெடுத்துக் கொடுத்தார் அப்பெருமான். சுந்தரரும், ‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று தொடங்கிப் பதிகங்கள் பாடினார். இப்படியாகத் திருப்பதிகம் பாடிப்பாடியே சிவனுக்கும் சுந்தரருக்கும் நல்ல நட்பு வளர்ந்தது.
அந்த முறையிலே சுந்தரர் சிவபெருமானிடம் எதை வேண்டுமானாலும் கேட்பார். சுந்தரருக்குப் பிரியமானவர் பரவை நாச்சியார். சுந்தரர் ஊரைச் சேர்ந்த அவளிடம், இவருக்குப் பிரியம் அதிகம் உண்டு. வரவை நாச்சியா திருவாரூர் கோவிலில் நாட்டியம் ஆடுபவர்களில் ஒருவர். பரம பக்தை. தானதர்மம் செய்வதில் மிகுந்த விருப்பமுடையவள். இதனை அவள் சிறப்புறச் செய்வதற்காக சுந்தரரிடம், பொன், பொருள் தருமாறு நச்சரிப்பாள். இவரோ பரமனைப் பாடிக் கொண்டிருப்பவர்.
அப்படிச் செல்லும்போது, திருமுதுகுன்றம் என்று தேவாரத்தில் சொல்லியிருக்கும் விருத்தாசலத்திலேயும் அவர் சிவனிடம் பொன் கேட்டார்.
சிவனும் பன்னிரண்டாயிரம் பொன் கொடுத்தார். சுந்தரரோ விருத்தாசலத்தில் கொடுத்தால், பத்திரமாகத் திருவாரூர் வரை எடுத்துச் செல்ல முடியாது என்பதால் அவற்றை திருவாரூரிலேயே அளிக்குமாறு வேண்டுகிறார்.
இவரது வேண்டுகோளுக்கு இணங்கிய சிவன், லீலை செய்யவும் திருவுளம் கொள்கிறார். இந்தப் பொன்னை மணிமுத்தாற்றிலே போட்டுவிட்டு பின்னர் ஒவ்வொரு ஊரில் உள்ள கோயிவிலும் தன்னைப் பாடிக்கொண்டு திருவாரூரையடையும்படி கூறினார்.
திருவாரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கமலாலயத் திருக்குளத்தில் ஈசான்ய மூலையில் இந்தப் பொன் மூட்டையை எடுத்துக்கொள்ளப் பணித்தார்.
சுந்தரரும் மணிமுத்தாறில் மூட்டையைப் போடப் போனார். திடீரென்று அவருக்குச் சந்தேகம் வந்தது. சிவபெருமான், இங்கு உயர்ந்த பொன்னைக் கொடுத்துவிட்டு அங்கு மாற்றுக் குறைந்த பொன்னாக மாற்றிவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் அந்த பொன்னார் மேனியன் மேல் வந்துவிடுகிறது. இதனால் ஆற்றில் போடும் இடத்திலும், எடுக்கப் போகின்ற திருக்குளத்திலும் அளந்து பார்த்துவிடுவது என்று முடிவு செய்கிறார்.
ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்ற சொலவடை இதை ஒட்டி ஏற்ப்பட்டிருக்கலாம்.
பொன்னின் தரத்தைப் பின்னர் ஒப்பு நோக்கத் துணுக்குப் பொன்னை வெட்டி எடுத்துக்கொள்வது அந்நாளைய வழக்கம்.
இதற்குப் பொன் மச்சம் என்று பெயர். இவ்வாறு சுந்தரரும் பொன் மச்சத்தை எடுத்துக்கொண்டு மூட்டையை மணிமுத்தாறில் போட்டுவிட்டார்.
பல நாட்களுக்குப் பின்னர் திருவாரூரை அடைந்தார் சுந்தரர். இவர் வந்த செய்தி அறிந்த பரவை நாச்சியார் பொன் குறித்துக் கேட்க, அவளைத் திருக்குளத்திற்குப் பெருமையுடன் அழைத்து சென்றார்.
ஈசான்ய மூலையில் குளத்தில் இறங்கித் தேடினால் முதலுக்கே மோசம். மூட்டையையே காணவில்லை. ஆற்றில் போட்டுவிட்டுக் குளத்தில் தேடினால் எப்படிக் கிடைக்கும் என்று கேட்டுப் பரவை நாச்சியாரோ பரிகாசம் பண்ணுகிறாள். கையில் உள்ள மச்சப் பொன்னைக் காட்டினால் அவளது பரிகாசம் இன்னும் அதிகரித்துவிடும்.
என்ன செய்வது என்று அறியாத சுந்தரருக்கோ சிவன் மேல் கோபமாக வருகிறது. ஆனாலும் பெண் முன்னால் அவமானப்பட்டுவிடக் கூடாது என்று சிவனிடம் குழைந்து வேண்டிப் பதிகம் பாடுகிறார்.
பொன் குறித்த காரணத்தால் எழுந்த பதிகம் என்பதால் பொன் செய்த மேனியினீர் எனத் தொடங்கிப் பாடினார். பிறிதொரு சமயத்தில் பொன்னார் மேனியனே என்று குறிப்பிட்டுப் பாடியவரும் சுந்தரரே.
பதிகத்தைப் பெற்று மனம் மகிழ்ந்த சிவனும் பொன் மூட்டை அவர் கைக்குக் கிடைக்கச் செய்தார். ஆனால் அதை `மச்சம்’ பொன்னுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மாற்றுக் குறைந்திருந்தது. மீண்டும் சுந்தரர் பொன் போன்ற பதிகம் பாட, பொனின் தரமும் உயர்ந்து தன் தகுதியை அடைந்தது.
சுந்தரரின் ‘பொன்னாசை’யைப் பயன்படுத்திக்கொண்டு பொன்னைவிடவும் விலை மதிப்பு வாய்ந்த பாசுரங்களைப் பாடவைத்தார் சிவன்.
தனது தனித் தமிழ்ச் சொல்லினால் சிவ பெருமானை மட்டுமல்ல இன்றளவும் சிவ பக்தர்களையும் கட்டிப் போட்டுவிட்டார் சுந்தரர்.
Image may contain: 1 person

யார் ரிஷி? யார் முனி? யார் த்விஜன்? யார் விப்ரன்? யார் பிராம்மணன்? தெரிந்து கொள்வோமே...

யார் ரிஷி? யார் முனி? யார் த்விஜன்? யார் விப்ரன்? யார் பிராம்மணன்? தெரிந்து கொள்வோமே...

ஒரு பிராம்மண தகப்பனுக்கும், பிராம்மண தாய்க்கும் பிறப்பதால் 'பிராம்மணன்' என்ற பெயரை மட்டுமே பெறுகிறான்.
வெறும் பிறப்பினால் மட்டும், ஒருவன் பிராம்மணத்துவம் அடைவதில்லை. 
பிறக்கும்போது ப்ராம்மணனும் நாளாம் வர்ணத்தவன் தான். சூத்திரன் தான் (employee)


உபவீதம்(பூணுல்) என்ற சம்ஸ்காரம் செய்து, தன் தகப்பானரிடம் மந்திர உபதேசம் பெற்ற பின், "த்விஜன்" என்ற அடுத்த பிறவியை அடைகிறான்.
ப்ரம்மத்தை (பரவாசுதேவனை) உபாசனை செய்ய உலக ஆசைகளை துறக்க தயாராவதால், உபவீதம் அணிந்த பின், இரண்டாம் பிறவி (த்விஜன்) எடுக்கிறான்.
அலங்காரங்கள் ஆசைகள் விட்டு, வேஷ்டி, குடுமி, நெற்றியில் திலகம் வைத்து கொண்டு, கடல் போன்ற வேதத்தை 12 வருடங்கள் அத்யயணம் குருவிடம் இருந்து கற்று, குருவுக்கு பணிவிடை செய்து,  வேதியனாக ஆகும் போது, "விப்ரன்" என்று பெயர் பெறுகிறான்.
வேத மந்திரங்கள் கற்ற வேதியன், வேத மந்திரங்களை ஜபித்து, அந்த மந்திரங்களுக்கு உரிய தெய்வங்களை ஆகர்ஷிக்கும் சக்தி பெறும் போது "ரிஷி" என்ற பெயர் பெறுகிறான்.

 பிராம்மண குடும்பத்தில் பிறக்காது போனாலும், "பிராம்மணத்துவம் பெற்றே தீருவேன்" என்று, பல வருடங்கள் ஓங்கார ஜபம் செய்து, காயத்ரி மந்திரத்தை ஆகர்ஷிக்கும் சக்தி பெற்ற பின், க்ஷத்ரியனாக பிறந்த இவர், விஸ்வாமித்ர "ரிஷி" என்று ஆனார்.
ரிஷியாக உள்ளவன், "எங்கும் பாண்டுரங்கனான ஸ்ரீ கிருஷ்ணரே (நாராயணன்) உள்ளார்" என்று எப்பொழுதும் பகவத் தியானத்திலேயே இருப்பவன், "முனி" என்ற பெயர் பெறுகிறான்.

ரிஷிகளும் மதிக்ககூடியவர்கள் முனிகள்.
ரிஷிகளை முனி என்று சொல்வதில்லை. முனியை ரிஷி என்றும் சொல்லலாம்.
அகத்தியர் முனி, பிரம்மாவின் மானஸ புத்ரன் "நாரத முனி" போன்றவர்கள், ரிஷிகளுக்கும் மேலானவர்கள்.
தன் ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்தவன் "ப்ராம்மணன்" (ப்ரம்மத்தை உபாசிக்கும்) ஆகிறான். ப்ராஹ்மணத்துவம் பெறுகிறான்.
ப்ரஹ்ம-பதத்தால் (வேதத்தால்) குறிப்பிடப்படும் பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தில்(அறிவில்) ஸித்திஅடையும்போதே ‘ப்ராம்மணன்’ ஆகிறான்.

வெறும் பிறப்பால் பிராம்மண குலத்தில் பிறந்து, உலக ஆசைகளோடு வாழ்பவன் பிறரால் ப்ராம்மணன் என்று மதிப்பு பெற மாட்டான்.

சப்த ப்ரஹ்மமாகிய வேதத்தால் குறிப்பிடப்படும் பரமாத்மாவிலேயே ரமிக்கும் ப்ராம்மண குலத்தில் பிறந்தவர்கள் இன்றும் மதிக்கப்படுகிறார்கள்.