jaga flash news

Tuesday 5 November 2013

விதியும் விதி விலக்குகளும்

அம்ச/வர்கச் சக்கரங்கள் - இறுதி பாகம் 


இந்த அம்ச சக்கரங்களில் பலன்களைப் பார்ப்பதற்கு சில விதிமுறைகளைப் பார்த்தோம். விதி என்று இருந்தால் அதற்கு விதிவிலக்கு கிடையாதா என்று யாரும் கேட்கலாம். இதை இப்படியும் சொல்லலாம். கீழ் நீதிமன்றத்தில் தண்டனை பெற்று மேல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து தண்டனையிலிருந்து தப்பிப்பது போல் (தண்டனையிலிருந்து விலக்கு பெறுவது) விதிகளுக்கு ஏதும் விதிவிலக்கு இருக்கிறதா என்று கேட்கலாம். அதைப் பற்றியும் வேறு சிலவற்றையும் இன்று பார்க்கலாம்.

First things first. ராசி சக்கரத்தில் இல்லாத சில விதிமுறைகள் அம்ச சக்கரங்களுக்கு உண்டு. அதே போல் ராசி சக்கரத்திற்கு இருக்கும் சில விதிமுறைகள் அம்ச சக்கரங்களுக்கு கிடையாது. அதில் ஒன்றைப் பார்ப்போம்.

அம்ச சக்கரங்களில் ஒரு ஸ்தானத்திற்கு அல்லது வீட்டிற்கு இணை வீடுகள் முறை என்று ஒன்று இருக்கிறது. ஒன்றில் இருந்து பன்னிரண்டு வீடுகள் ஆறாகப் பிரிக்கப்பட்டு ஒரு பிரிவில் இரண்டு வீடுகள் என்ற விகிதத்தில் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் எது இணை வீடு (companion house) என்று பார்ப்போம். 

1 ↔ 7
2 ↔ 12
3 ↔ 11
4 ↔ 10
5 ↔ 9
6 ↔ 8


இதனால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா. அதைத்தான் சொல்ல வருகிறேன். துப்பாய்க்கியில் இரட்டை குழல் துப்பாய்க்கி என்று ஒரு வகை இருக்கிறது. அதைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். அது போல் நன்மையான பலனோ தீய பலனோ, இந்த இணை வீடுகள் இரட்டைக் குழல் முறையில் செயல்பட்டு இரட்டிப்பு நன்மை அல்லது இரட்டிப்பு தீமை என்ற நிலையில் பலனைக் கொடுக்கும்.  இதன் இன்னொரு பயன். ஒரு வீட்டின் பலன் (7ம் இடம் என்று வைத்துக் கொள்வோம்) சரியில்லை என்றால் இந்த இணை வீடாவது சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி சரியாக இருந்தால் 7ம் வீட்டின் குறைகளை அதன் இணை வீடு போக்கிவிடும்.இதற்கான உதாரணங்களைப் பார்ப்போம்.


தசாம்ச லக்னத்திற்கு 9ல் 2 சுபர்கள், நட்பு கிரகங்கள் கூட. இதில் ஒருவர் தசாம்ச லக்னாதிபதி. புதன், சுக்கிரன் தசா, புத்தி, அந்தரங்களில் தொழிலில் மேன்மை, பதவி உயர்வு போன்றவை ஏற்படும்.

சரி இப்போது கீழே உள்ள கிரக நிலையைப் பாருங்கள்.


9ம் இடத்தில் தசாம்ச லக்னாதிபதி இருக்கிறார். மேலே கொடுத்த பட்டியலில் 9 இடத்திற்கு இணை வீடான 5ல் இன்னொரு சுபர் இருக்கிறார். இதனால் இரட்டிப்பு பலன், தொழிலில் அசுர வளர்ச்சி, குறைந்த உழைப்பினால் அதிக பலன் போன்றவற்றை எதிர் பார்க்கலாம். 


மேலே உள்ள ஜாதகத்தில் தசாம்ச லக்னத்திற்கு 3ல் சுக்கிரன் இருக்கிறார். சுக்கிர தசா, புத்திகளில் தொழிலில் பிரச்சினைகள், சிக்கல், வளர்ச்சியின்மை போன்றவை ஏற்படும். இதற்கு விதிவிலக்காக கீழே உள்ள அமைப்பைச் சொல்லலாம்.


3ம் இடத்திற்கு இணை வீடான 11ல் சூரியன் ஆட்சியாக இருக்கிறார். இதே சுக்கிர தசா அல்லது புத்தியில், தொழில் மேன்மை போன்ற சுப பலன்கள் ஏற்படும். 3ல் இருக்கும் சுக்கிரனின் குறைகள், 3ம் வீட்டிற்கு இணை வீடான 11ல் இருக்கும் சூரியனால் களையப் பட்டு விட்டது. வேறு எதாவது ஒரு வர்கத்திலும் 8ல் இருக்கும் ஒரு கிரகத்தின் தசா நடந்தால் அதற்கு இணை வீடான 6ல் ஏதும் கிரகங்கள் இருந்தால் 8ல் இருக்கும் கிரகத்தின் குறை களையப்பட்டு விடும்.


மேலே உள்ள உதாரண ஜாதகத்தைப் பார்ப்போம். குரு தசை நடந்து முடிந்து விட்டது. மேலோட்டமாகப் பார்த்தால் குரு தசாம்ச லக்னத்திற்கு 8ல் இருக்கிறார். நிச்சயம் தொழில் விஷயத்தில் எந்த வித முன்னேற்றமும் ஏற்பட்டிருக்காது என்ற முடிவுக்கு வர வேண்டும். சந்திரன் 6ல். குரு தசை சந்திர புத்தி நிச்சயம் உருப்படாமல் போயிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும்.

ஆனால் நான் சொன்ன விதிவிலக்கின் படி 8ம் இடத்திற்கு இணை வீடான 6ல் சந்திரன் அதுவும் அவர் சுபர், ஆட்சியாக இருக்கிறார். குரு தசையில் தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு போன்ற சுபப் பலன்கள் நடந்தன. அதுவும் சந்திர புத்தியில்தான் தொழிலில் ஒரு stageல் அடுத்த stageக்கு உயரும் வாய்ப்பு ஏற்பட்டது. இருப்பினும் இந்த இரு இடங்களும் 6,8 என்று இருப்பதால், சொந்த ஊரை விட்டு தொலை தூர இடத்திற்கு posting ஆகி போக வேண்டியிருந்தது. இது ஒரு குறை என்று சொல்லலாம்.

இப்படி பட்ட விதிவிலக்குகளையும் பார்த்துதான் பலன் சொல்ல அல்லது பலன் காண வேண்டும். 

இந்த வர்கங்களின் பாடம் இன்னும் ஆழமாகப் போகப் போக இன்னும் கடினமாகவும், குழப்பம் ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். அதையும் தாண்டி அதை பற்றி நன்கு புரிந்துக் கொண்டால் (mastered) பார்த்தவுடனேயே துல்லியமாக பலன் சொல்லக் கூடிய திறன் ஏற்பட்டு விடும். 

No comments:

Post a Comment