jaga flash news

Saturday, 17 October 2026

மகர லக்னத்திற்கு நன்மை மற்றும் தீமை செய்யும் கிரகங்கள்

மகர லக்னத்திற்கு நன்மை மற்றும் தீமை செய்யும் கிரகங்கள்:

* மகர லக்னத்திற்கு லக்னாதிபதியான சனி குடும்பஸ்தானமாகிய இரண்டாம் பாகத்திற்கும் அதிபதியாக வருவார். சனி ஒரு முழு பாவ கிரகம் என்பதால் லக்னாதிபதியாகவே இருந்தாலும் லக்னத்தில் அமர்வது நல்ல பலனை தராது. லக்னத்தை கெடுக்கவே செய்யும்

* அதேபோல் தனது அடுத்த ஆட்சி வீடான இரண்டில் ஆட்சி பெற்று அமரும் சனி குடும்ப ஸ்தானத்தை கெடுக்கவே செய்வார். ஆட்சி வீடுகளில் அமரும் சனி வலுவான சுபர்களின் தொடர்பினை பெற வேண்டும்.

பத்தாம் பாவத்தில் நட்பு வீட்டில் உச்சம் பெறும் சனி சுப தொடர்பினை பெற்றிருப்பது நன்மையை தரும். சனி ஆனவர் ஆட்சி மற்றும் உச்சம் எனும் நிலையை பெறுவதை விட மூன்று மற்றும் பன்னிரண்டாம் பாவகத்தில் சுபரான குருவின் வீட்டில் இருப்பதும், ஆறாம் பாவகத்தில் நட்பு வீட்டில் சுப தொடர்புடன் இருப்பதும் அல்லது உப ஜெய ஸ்தானமான பதினொன்றாம் பாவகத்தில் ஆம் பாவத்தில் சுப கிரக தொடர்பினை பெற்று இருப்பதும் நல்ல நிலையை தரும்.

* சுக்கிரன் ஆனவர் இந்த லக்னத்திற்கு ஐந்து மற்றும் பத்தாம் பாவத்திற்குரிய ராஜ யோகாதிபதி ஆவார். சுக்கிரன் இந்த லக்னத்திற்கு பாவ தொடர்பினை பெறாத வகையில் அனைத்து வகையான யோகங்களையும் நல்ல பலன்களையும் செய்வார். இவர் லக்னம் மற்றும் இரண்டாம் பாகத்தில் நட்பு நிலையில் இருப்பதும், ஐந்து அல்லது பத்தாம் பாவகத்தில் ஆட்சி எனும் நிலையை பெறுவதும் மிகச்சிறந்த நல்ல பலன்களை தரும். அதேபோல் ராஜ யோகாதிபதி உச்சம் எனும் நிலையை பெறுவதும் ஒரு நல்ல நிலையே.

* அடுத்ததாக புதன் இந்த லக்னத்திற்கு நன்மைகளை தரக்கூடிய லக்னாதிபதிக்கு நட்பு கிரகம் ஆகும். புதனானவர் இந்த லக்னத்திற்கு ஆறாம் பாவகத்திற்கும், பாக்கியங்களை கொடுக்கக்கூடிய ஒன்பதாம் பாவத்திற்கும் அதிபதியாக வருவார். இவர் லக்னாதிபதிக்கு நட்பு கிரகம் எனும் நிலையில் பாவத்தன்மை அடையாத வரை ஆறாம் பாவத்திற்கு உண்டான பலன்களை பெரிதாக செய்வதில்லை, மேலும் ஒன்பதாம் பாவமான கன்னியே புதனின் மூலத்திரிகோண வீடாகும். இவர் லக்னம் மற்றும் குடும்பஸ்தானமாகிய இரண்டாம் பாவத்தில் இருப்பதும் அல்லது ஐந்து மற்றும் பத்தாம் பாவகத்தில் நட்பு நிலையில் இருப்பதும் ஒன்பதில் ஆட்சி, உச்சம் எனும் நிலையை பெற்ற அமர்வதும் நல்ல பலனை தரும்.

# இந்த லக்னத்திற்கு இரு பெரும் நட்பு கிரகங்களும் 9 மற்றும் 10 ஆம் அதிபதியாகி தர்மகர்மாதிபதி யோகத்தினை பத்தாம் பாவகத்தில் அமர்ந்து செய்யுமானால் மிகச்சிறந்த யோக பலனானது சுக்கிரன் மற்றும் புதனின் தசா காலங்களில் ஏற்படும். ஒன்பதாம் பாவகத்தில் ஏற்படும் தர்மகர்மாதிபதி யோகம் சுக்கிரன் அங்கு நீச்சம் எனும் நிலையினை பெறுவதால் சிறிது பங்கப்படும்.

* குருவானவர் இந்த மகர லக்னத்திற்கு மூன்று மற்றும் 12-ஆம் பாவத்திற்கு அதிபதியாக வருவார்.
அதேபோல் செவ்வாய் ஆனவர் இந்த லக்னத்திற்கு நான்கு மற்றும் பதினோராம் பாகத்திற்கு அதிபதியாக வருவார். பதினோராம் பாகம் இந்த லக்னத்திற்கு பாதகஸ்தானம் எனும் நிலையில் பாதகஸ்தானத்தில் தனித்து அமர்ந்து சுப நிலையை அடையும் செவ்வாய் பாதகத்தையே செய்வார், எனவே இவர்கள் நட்பு வீடுகளில் அமர்ந்து பாவத்தன்மை அடையாமல் தசா நடத்தும் பொழுது தனது காரகத்துவம் மற்றும் ஆதிபத்தியங்களில் வாயிலாக நல்ல பலன்களை செய்வார்கள்.

* சந்திரன் ஆனவர் இந்த லக்னத்திற்கு திருமணம் மற்றும் களத்திர ஸ்தானமான ஏழாம் பாவத்திற்கு அதிபதியாக வருவார். லக்னாதிபதி சனி, சந்திரனை எதிரி எனும் நிலையை கொண்டு பார்ப்பார், இந்த லக்னத்திற்கு சந்திரனின் தசாவானது பெரும்பாலும் நன்மையை செய்யாது.

* அதேபோல் ஏழில் அமரும் சந்திரன் ஆனவர் தேய்பிறை அல்லது அம்மாவாசை அமைப்புகளில் அமரும் பொழுது திருமணம் சார்ந்த வகையில் நன்மையை செய்வதில்லை. எனவே ஏழில் சந்திரன் பாவத்தன்மை அடைந்து ஆட்சி பெற்று அமர்வது நல்ல நிலை அல்ல. சந்திரன் ஆனவர் வளர்பிறை அல்லது பௌர்ணமி அமைப்புகளில் 3, 6, 8,11,12 அமரும் பொழுது சுபத் தொடர்பினை பெற்று இருக்கும்பொழுது பெரிய அளவிலான கெடுதல்களை செய்வதில்லை.

* சனியின் லக்னத்திற்கு ஒளி கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரன்களின் தசாவானது பெரிய அளவில் நன்மைகளை செய்வதில்லை. இந்த லக்னத்திற்கு எட்டாம் அதிபதியாக வரும் சூரியன் ஆனவர் லக்னாதிபதி சனிக்கு முதல் நிலை எதிரி எனும் அமைப்பினை பெறுவார், பாவத்தன்மை அடைந்து எட்டாம் பாவகத்துடன் தொடர்பு கொண்டு சூரியன் தசா நடத்தும் பொழுது எட்டாம் பாவத்திற்கு உண்டான கெடுதல்கள் அனைத்தையும் வலுவாக செய்வார்.

* இவர் பாவத்தன்மை அடையாமல் சுப அமைப்பில் இருந்து தனது எட்டாம் பாவத்திற்கு எட்டில் மறைந்து இருப்பதும், அல்லது தனது நட்பு வீடுகளில் பாவ கிரகங்களின் தொடர்பினை பெறாமல் இருக்கும் நிலையில் எட்டாம் பாவத்திற்கு உண்டான கெடுதல்களை சூரியன் செய்வதில்லை.

* ராகுவானவர் சுக்கிரன் அணியை சார்ந்தவர் என்பதால் மகர லக்னத்திற்கு நட்பு வீடுகளில் அமர்ந்து தசா நடத்தும் பொழுது நல்ல பலன்களை செய்வார் அதுவும் தர்ம கர்மாதிபதிகளின் தொடர்பினை பெற்று ராகு தசா வருமாயின் சிறந்த யோகங்களை ஜாதகர் அடைவார்.

* கேது இந்த லக்னத்திற்கு எதிரணியை சார்ந்தவர் எனும் நிலையில் லக்னசுபரகளின் வீடுகளில் அமர்ந்து தசா நடத்தும் போது நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

Wednesday, 14 October 2026

3 செடி வீட்டில் தவறான இடத்தில் வைத்து வளர்த்து வருகின்றனர்.

வாஸ்துப்படி மங்களகரமானதாக கருதப்படும் 3 செடிகளை வீட்டில் தவறான இடத்தில் வைத்து வளர்த்து வருகின்றனர். இப்போது அந்த செடிகள் எவை என்பதையும், அவற்றை வீட்டில் எங்கு வைத்து வளர்க்க வேண்டும் என்பதையும் காண்போம். 1. துளசி செடி பெரும்பாலான இந்திய வீடுகளிலும் வளர்க்கப்படும் ஒரு செடி தான் துளசி. இந்த செடி மிகவும் புனிதமான செடியாக கருதப்படுகிறது. ஏனெனில் துளசி செடி லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது. இந்த செடியை வீட்டில் வளர்த்தால் மட்டும் நற்பலன்களைப் பெற முடியாது. அதை சரியான இடத்தில், சரியான திசையில் வளர்க்க வேண்டியது முக்கியம். வாஸ்துப்படி, துளசி செடியை வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைத்து வளர்க்க வேண்டும். இந்த திசையில் வைத்து வளர்க்கும் போது தான் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, வீட்டு சூழல் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். தவறான திசையில் வைக்கும் போது, அது வீட்டில் பலவிதமான பிரச்சனைகளை வரவழைக்கும்.

2. மணி பிளாண்ட் வாஸ்துப்படி மணி பிளாண்ட் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த மணி பிளாண்ட்டை வீட்டில் வைத்து வளர்க்கும் போது, அது வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். ஆனால் அதற்கு அந்த மணி பிளாண்ட் செடியை சரியான இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும். மணி பிளாண்ட் செடியை வைக்க சிறந்த திசை தென்கிழக்கு. பொதுவாக, மணி பிளாண்ட் செடியை வீட்டிற்கு வெளியே வைப்பதை விட வீட்டிற்குள் வைப்பதே அதிக நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. அதுவும் அதன் கொடிகள் தரையில் படர்ந்து செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். செடியை மேல் நோக்கி வளர விட வேண்டும். இப்படி இருந்தால் தான் அது தனிப்பட்ட வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் உதவுவதாக கூறப்படுகிறது.

3. மூங்கில் செடி வாஸ்துப்படி மூங்கில் செடி அதிர்ஷ்டம் மற்றும் நேர்மறை ஆற்றலின் சின்னமாக கருதப்படுகிறது. இந்த செடியை எப்போதும் வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்க வேண்டும். இப்படி வளர்க்கும் போது, அது வீட்டில் மகிழ்ச்சியை கொண்டு வருவதோடு, எதிர்மறை ஆற்றலை நீக்கும். பொதுவாக மூங்கில் செடியானது தொழில் வளர்ச்சிக்கும், வாழ்க்கையில் சமநிலையை ஏற்படுத்துவதற்கும் உதவுகிறது. வாழ்க்கையில் நிலைத்தன்மையை விரும்பினால், கண்டிப்பாக இந்த மூங்கில் செடியை வளர்க்க வேண்டும்.


Sunday, 4 October 2026

எந்த கிரகம் கெடும் போது என்ன பலன்?

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு ஜாதகத்தில் ஒவ்வொரு நவகிரகமும் பலவீனமடையும் போதோ அல்லது தீய கிரகங்களின் சேர்க்கை பெறும் போதோ (கெடும் போது) அதற்கேற்ற தனிப்பட்ட உடல் மற்றும் வாழ்க்கை பாதிப்புகளைத் தரும்.
• சூரியன் கெட்டால்: எலும்பு மற்றும் கண் கோளாறுகள், இருதய நோய், வயிற்றுக்கோளாறு மற்றும் தந்தை வழி உறவில் சிக்கல், அவமானம்.
• சந்திரன் கெட்டால்: மன அழுத்தம், பயம், தூக்கமின்மை, தாய் வழி உறவில் பாதிப்பு மற்றும் நீர்ப்பாப்பு பிரச்சனைகள்.
• செவ்வாய் கெட்டால்: இரத்த அழுத்த பாதிப்பு, விபத்துகள், வெட்டுக் காயங்கள், சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு மற்றும் நிலம் சார்ந்த பிரச்சனைகள்.
• புதன் கெட்டால்: நரம்புத் தளர்ச்சி, தோல் நோய்கள், கல்வித் தடை, ஞாபக மறதி மற்றும் வியாபாரத்தில் நஷ்டம்.
• குரு கெட்டால்: தொண்டை மற்றும் தைராய்டு கோளாறுகள், மஞ்சள் காமாலை, புத்திர பாக்கியத் தடை மற்றும் பணக்கஷ்டம்.
• சுக்கிரன் கெட்டால்: சர்க்கரை நோய் (டயாபெடிஸ்), ஹார்மோன் குறைபாடுகள், திருமணத் தடை, வாகனம் மற்றும் சுகபோக இழப்பு.
• சனி கெட்டால்: நீண்ட கால நாள்பட்ட நோய்கள், மூட்டு வலி, உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமை மற்றும் சோம்பல்.
• ராகு மற்றும் கேது கெட்டால்: இனம் காண முடியாத கடுமையான வியாதிகள், மனக் குழப்பம், திடீர் நஷ்டம் மற்றும் பயம்.

Friday, 2 October 2026

கடக லக்னத்திற்கு 9-ஆம் வீட்டில் (மீன ராசி) குரு, சந்திரன் மற்றும் ராகு இணைப்பு

கடக லக்னத்திற்கு 9-ஆம் வீட்டில் (மீன ராசி) குரு, சந்திரன் மற்றும் ராகு இணைந்திருப்பது கலவையான, அதே சமயம் தீவிரமான பலன்களைத் தரும்.
• நேரடி பலன்: இது குரு-சந்திர சேர்க்கையால் [கஜகேசரி யோகம்] மற்றும் குரு-ராகு சேர்க்கையால் [குரு சண்டாள யோகம்], மேலும் சந்திரனுடன் ராகு இணைவதால் [கிரகண தோஷம்] போன்ற பல யோகங்களையும் தோஷங்களையும் ஒரே நேரத்தில் உருவாக்கும் அமைப்பாகும்.
முக்கிய பலன்கள்
• ஞானமும் ஆன்மீகமும்: 9-ஆம் வீடு தர்ம ஸ்தானம் ஆகும். இங்கு குரு தன் சொந்த வீடான மீனத்தில் அமர்வது ஆன்மீக ஈடுபாடு, உயர் கல்வி மற்றும் பல துறைகளில் ஆழ்ந்த ஞானத்தைத் தரும்.
• மாற்றுக் சிந்தனை: ராகுவின் சேர்க்கையால் பாரம்பரிய வழக்கங்களுக்கு மாறான சிந்தனைகள், வெளிநாட்டு பயணம், நவீன தொழில்நுட்பம் அல்லது ஆராய்ச்சித் துறைகளில் ஈடுபாடு உண்டாகும்.
• மன அழுத்தம் மற்றும் குழப்பம்: சந்திரனுடன் ராகு சேர்வதால் மனத்தில் திடீர் குழப்பங்கள், அதிகப்படியான கற்பனை, மற்றும் உணர்ச்சிவசப்படுதல் போன்ற சிக்கல்கள் வரலாம். குருவுடன் ராகு இணைவதால் சில நேரங்களில் தவறான முடிவுகளை எடுக்கும் சூழ்நிலையும் உருவாகலாம்.
• சமூகப் பிம்பம்: இவர்களின் கருத்துக்கள் மற்றும் செயல்கள் மற்றவர்களுக்குப் புரியாமல் வித்தியாசமாக இருக்கக்கூடும். இதனால் சமுதாயத்தில் விசித்திரமான புகழும், சில எதிர்ப்புகளும் மாறி மாறி வரலாம்.

Wednesday, 30 September 2026

மகர லக்ன பாவ அதிபதிகள் பட்டியல்

மகர லக்ன பாவ அதிபதிகள் பட்டியல்
• 1-ஆம் வீடு (மகரம் - லக்னம்): சனி (Saturn)
• 2-ஆம் வீடு (கும்பம்): சனி (Saturn)
• 3-ஆம் வீடு (மீனம்): குரு (Jupiter)
• 4-ஆம் வீடு (மேஷம்): செவ்வாய் (Mars)
• 5-ஆம் வீடு (ரிஷபம்): சுக்கிரன் (Venus)
• 6-ஆம் வீடு (மிதுனம்): புதன் (Mercury)
• 7-ஆம் வீடு (கடகம்): சந்திரன் (Moon)
• 8-ஆம் வீடு (சிம்மம்): சூரியன் (Sun)
• 9-ஆம் வீடு (கன்னி): புதன் (Mercury)
• 10-ஆம் வீடு (துலாம்): சுக்கிரன் (Venus)
• 11-ஆம் வீடு (விருச்சிகம்): செவ்வாய் (Mars)
• 12-ஆம் வீடு (தனுசு): குரு (Jupiter)

Tuesday, 29 September 2026

6கட்டம்



ஜாதகங்களில் லக்னத்திலிருந்து 6கட்டம் வரை நமக்கானது.7 கட்டத்திலிருந்து 12வது கட்டம் மனைவிக்கானது.

6 கட்டம் தாண்டி செவ், சனி, ராகு or கேது சூரியன் இருந்தால் மனைவிக்கு உடல் நல கோளாறுகள் ஏற்படும். மனைவி ஜாதகத்தில் 6 கட்டம் தாண்டி செவ், சன ராகு Or கேது சூரியன் இருந்தால் கணவருக்கு உடல் நல கோளாறுகள் ஏற்படும் 6ம் பாவகத்தில் சனி+செவ்வாய் இருந்தால் மனைவிக்கு வயிறு சார்ந்த

பிரச்சினைகள் ஏற்படும். பாவ கிரகங்களை குரு பார்த்து விட்டால்-இத்தகைய பிரச்சினைகள் எதுவும் நிகழாது.

இப்பிரச்சினைகள் உள்ளவர் கள் காவல் தெய்வங்களை வழிபட்டு வர உடல் நலம் சீராகி நன்மைகள் நடக்கும். பொருத்தத்தில் இதைப் பார்த்து இணைத்த போது மானது

Follow

Sunday, 27 September 2026

தாரா பலன் கணிக்கும் முறை

தாரா பலன் கணிக்கும் முறை

உங்கள் பிறந்த நட்சத்திரம் முதல் பார்க்க விரும்பும் அன்றைய நாள் நட்சத்திரம் வரை எண்ணிக்கொள்ளுங்கள் (உங்கள் பிறந்த நட்சத்திரத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்).வந்த மொத்த எண்ணை 9-ஆல் வகுக்க வேண்டும்.கிடைக்கும் மீதியை (Remainder) வைத்துத் தாரா பலனை அறியலாம்.

மீதி எதுவும் வரவில்லை என்றால் (0 அல்லது 9 எனில்) அதற்கேற்ப கணக்கிடப்படுகிறது.மீதிக்கான பலன்கள்சுப தாரைகள் (நற்பலன் தரக்கூடியவை - மீதி 2, 4, 6, 8, 9/0):

2 (சம்பத்து): தனவரவு, நற்காரியங்கள் செய்ய உகந்தது.
4 (க்ஷேமம்/சுபம்): நன்மை மற்றும் பாதுகாப்பு தரக்கூடியது.
6 (சாதகம்/தெய்வ அனுகூலம்): புதிய முயற்சி, எடுத்த காரியங்களில் வெற்றி.
8, 9 (மைத்திரம் / பரம மைத்திரம்): நட்பு மற்றும் மிகவும் உத்தமமான பலன்கள்.அசுப தாரைகள் (தவிர்க்க வேண்டியவை - மீதி 1, 3, 5, 7):
1 (ஜன்மம்): மனக்குழப்பம், கவலை.
3 (விபத்து): பயணங்கள் மற்றும் புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
5 (பிரத்யக்): வீண் அலைச்சல், காரிய நாசம், கவனச்சிதறல்.
7 (வதை): தீய பலன்கள், சுப காரியங்களைத் தவிர்த்தல் நலம்

Friday, 25 September 2026

GOVERNMENT JOB * INDICATIONS IN * VEDIC ASTROLOGY

GOVERNMENT JOB

* INDICATIONS IN *

VEDIC ASTROLOGY

1 Strong Sun in the 10th House.

② Connection between Sun and 10th Lord.

③ Connection between 6th Lord and 10th Lord.

④ Strong Saturn connected to the 10th House

⑤ Sun and Saturn both influencing 10th House.

⑥ Exalted Sun (Aries) or Sun in own sign (Leo). 16

⑦ Strong 6th House.

⑧ Strong 10th House and 10th Lord.

⑨ Strong D10 (Dashamsha) Chart.

10 Favourable Dasha of Sun, Saturn, 6th Lord, or 10th Lord.



Service Honour

11 Sun in the 10th House + Strong Saturn.

Stability

12 Raj Yogas connected to 6th or 10th House.

13 Strong Mars and Mercury for Competitive Exams.

→ ASTROSINDHU VERDICT

Government Job = 6th House (Service) + 10th House (Career) + Sun (Authority) + Saturn (Administration) + D10 + Favourable Dasha.


9 YEARS OF FINANCIAL ADVICE IN 90 SECONDS

9 YEARS OF FINANCIAL ADVICE IN 90 SECONDS

3 Bank Accounts

← 1st Income, 2nd Exp, 3rd Investments

50-30-20 Rule

→ 50% Needs, 30% Wants, 20% Investments

Emergency Fund

6 Months of Monthly Exp 50K - 3 Lacs

Term Insurance

10-15 Times of your AI, 10 L → 1 Crore

Health Insurance

Minimum 10-15 Lacs Cover

SIP in MF

Minimum 20% of Monthly Income

Step up SIP

Increase SIP by 7 to 10% every year


X

Thursday, 24 September 2026

இந்த ஜாதகருக்கு மறுபிறவி என்பது கிடையாது ஏன் தெரியுமா?



இந்த ஜாதகருக்கு மறுபிறவி என்பது கிடையாது ஏன் தெரியுமா?

. மகரம் மற்றும் கும்பம் ராசியில், சனிக்கிழமையில் பிறந்தவர்களுக்கு மறுபிறவி என்பது கிடையாது.

காரணம் :- சனியின் ராசிநாதனாக இருப்பதால், இவர்கள்

பிறக்கும்போது, சனியின் கர்ம்வினை பிடியில் இருந்து... நிறைய கஷ்டங்களை அனுபவித்து பின், கடின உழைப்பால் நல்ல நிலைமைக்கு வருவார்கள்... அதன்பின் தான தர்மங்கள் அதிகம் செய்வதால்... இவர்களுக்கு மோட்சம் கிடைக்கும். அதன் பின் மறுபிறவி கிடைக்காது.

பூசம் (கடகம்) அனுசம் (விருச்சிகம்) உத்திரட்டாதி (மீனம்) இந்த ராசி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது.

காரணம்:- இவர்கள் பிறகும் போது, சனி திசையில் பிறப்பதால்...

இந்த ராசி நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள், பிறந்ததிலிருந்து 9 வருடம் தாய் அல்லது தந்தையின் அரவணைப்பு இவர்களுக்கு கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும்... பகைவர்களாகவே இருப்பார்கள். அதன்பின் இவர்களுக்கு 36 வயது கடந்ததும் தன் கடின உழைப்பால், முன்னேறி தன் பெற்றோரை அரவணைப்பதால்... சனியின் ஆசீர்வாதத்தை பெறுவதால், இவர்களுக்கு மறுபிறவி கிடையாது.

கேது 12ஆம் இடத்தில் இருப்பவர்களுக்கு, மறுபிறவி கிடைத்து மோட்சம் அடைவார்கள்.

அதே போல் சனி திசை கடந்தவர்களுக்கு மறுபிறவி என்பது கிடையாது.