jaga flash news

Showing posts with label சாஸ்திரம். Show all posts
Showing posts with label சாஸ்திரம். Show all posts

Saturday, 22 February 2014

திதி

திதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.
எண்கிருஷ்ண பட்சம்சுக்கில பட்சம்தெய்வம் மற்றும் செய்ய வேண்டியவை!
1பிரதமைபிரதமைமுதல் சந்திர நாள் முக்கிய தெய்வம் அக்னி ஆகும். பூஜைகள் மற்றும் மங்கள காரியங்கள் செய்ய உகந்த நாள்.
2துவி்தியைதுவி்தியைஇது ப்ரம்மாவுக்கு உரிய நாள் இன்று கட்டிடம் கட்டுவதர்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் நன்மைதரும்.
3திருதியைதிருதியைகெளரிமாதாவுக்கு உகந்த நாள்.சிகை திருத்தம் செய்தல்,முகசவரம், நகம் வெட்டுதல் முதலியன நன்ைம தரும்.
4சதுர்த்திசதுர்த்திநான்காம் நாள் எமன் மற்றும் வினாயகருக்குரிய நாள். எதிரிகளை வீள்த்துதல்,தடை தகர்தல் முதலிய போர் காரியங்கள் வெற்றி தரும்.
5பஞ்சமிபஞ்சமிஇது நாகதேவனின் நாள்,விஷம் முரித்தல்,மருத்துவம் செய்தல் அறுவை சிகிச்சை முதலியன பலன் தரும்.
6சஷ்டிசஷ்டிநாளின் தெய்வம் முருகன்.புதிய நண்பர்களை சந்தித்தல்,கொண்டாட்டம் கேளிக்கை முதலியன சிறப்பு.
7சப்தமிசப்தமிசூரியனின் நாள்.பிரயாணம் தொடங்குதல்,பிரயாண படி கேட்டல், முதலிய நகர்தல் சம்மநதமான காரியங்கள் கைகூடும்.
8அஷ்டமிஅஷ்டமிஇன்னாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார்.ஆயுதம் எடுத்தல்,அரன் அமைத்தல்,போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை உகநதது
9நவமிநவமிஅம்பிகையின் நாள்.எதிரிகளை கொல்லுதல்,வினாசம் செய்தல்.
10தசமிதசமிதர்மராஜாவின் நாள்.மதவிழாக்கள்,ஆன்மீக செயல்கள் நன்மை தரும்.
11ஏகாதசிஏகாதசிமஹாருத்ரனின் நாள். இன்னாளில் விரதம் மேற்கொள்ளுதல் மற்றும் பரமாத்வாவை தியனிதல் சிறப்பு.
12துவாதசிதுவாதசிமஹாவிஷ்ணுவின் ஆதிக்கமுடய நாள்.விளக்கு ஏற்றுதல், மதவிளாக்கள், பணிகள் செய்தல்.
13திரயோதசிதிரயோதசிமன்மதனின் நாள்.அன்பு செலுதுதல்,நட்பு வளர்தல்.
14சதுர்த்தசிசதுர்த்தசிகாளியின் ஆதிக்கமுடய நாள்.விஷத்தை கைய்யாளுதல்,தேவதைகளை அைழத்தல்.
15அமாவாசைபௌர்ணமிஅமாவாசை பித்ருகளுக்கு காரியங்கள் செய்யவும்

Thursday, 5 December 2013

பல்லியை கொல்வதால் எற்படும் தோஷம்! பரிகாரம் என்ன?

மனிதர்களுக்கு நல்லது, கெட்டதை எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் பல்லிக்கு உள்ளது. எனவே அது மதிக்கத் தகுந்த ஜீவராசியாக கருதப்படுகிறது. எனவே, அதனைக் கொன்றால் தோஷம் ஏற்படும்.
அதற்கு பரிகாரம் என்ன?
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சந்திர, சூரியர்களாக காட்சி தரும் பல்லி உருவங்களை தொட்டு வணங்குவதும், மூகாம்பிகை கோயில்களிலும் பல்லி உருவத்தை தொட்டு வணங்குவது இதற்கு பரிகாரமாக கூறப்படுகிறது.
பொதுவாக எந்த ஜீவராசிகளையும் கொல்லாது இருப்பது சந்ததிக்கு சிறப்பையும், மேன்மையையும் தரும்.

Wednesday, 4 December 2013

இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு!

இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்பதை ராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது. ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக கையைப் பிடித்தபடியே, புதுமணத் தம்பதிகள் போல அக்னியை வலம் வந்தனர். ”ராமா! நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல், சுகமோ கஷ்டமோ நம் இரண்டு பேருக்கும் உரியது,” என்றான் சுக்ரீவன். ராமனும் அந்த வார்த்தைகளை அங்கீகரித்தார். அந்த சமயத்தில், எங்கோ இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது. ஒன்று அசோகவனத்தில் இருந்த சீதை.
பெண்களுக்கு இடதுகண் துடித்தால் நன்மை ஏற்படும். சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது. வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. ஆண்களுக்கு இது கெடுபலனை உண்டாக்கும். அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே உருவாகி விட்டது. பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடதுகண் துடித்தால், அவனது முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்.
eye

பெண்களின் மாதவிலக்கு நாட்களில் இறைவனை வழிபடலாமா?

பெண்களின் மாதாந்த இயற்கையைக் காரணம் காட்டி அவர்களை வீட்டில் அடைத்துவைத்ததும், இறைவழிபாட்டை மறுத்ததும் பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்க வாதம் என்று இன்றெல்லாம் பெண்ணியவாதிகள் கருத்துப் பேசுகின்றனர். ஆனால், இந்த விலக்கிவைத்தலுக்குக் காரணம் இல்லாமலில்லை!
மாத இயற்கை காலத்தில் பெண்களின் உடல் சற்று வலிதாங்கவேண்டியிருப்பது உண்மைதான். இன்றைய விசேட துணி வசதிகள் இல்லாத பழங்காலத்தில், மாதவிலக்குக்குள்ளான பெண்கள் நடமாடித் திரிவது எத்தனை கடினம் என்பதை குறித்த பெண்களாலேயே ஊகித்துணர முடியும். எனவேதான் பெண்ணை அந்நாட்களில் ஒற்றையாடை அணிவித்து, வீட்டின் ஓரம் விலகியமர்ந்திருக்கச் செய்தனர். அதுதான் மாத + விலக்கு! அவளது உடல்வேதனையைக் கருதி அந்நாட்களில் வீட்டுவேலைகள் செய்வதிலிருந்தும் இறைவழிபாட்டில் ஈடுபடுவதிலிருந்தும் அவளுக்கு விலக்களிக்கப்பட்டது. நீராடித் தூய்மையான பின்னரே அவள் சாதாரண வாழ்வு வாழ அனுமதிக்கப்பட்டாள்.
குழந்தைகளைப் பெறுவதற்காக இயற்கை மாதர்க்கே கொடுத்த வரத்தின் கடுமையான மறுபக்கம் இந்த உபாதை நாட்கள்! என்றாலும், சமயத்தின் பெயரால் அதனை தீட்டென்று ஒதுக்கிவைத்ததும், அந்தக் குருதியை இந்திரனின் பிரம்மகத்தி தோசம் என்று “கப்சா” விட்டதையும் ஏற்றுக்கொள்ள முடியாதுதான்.
இன்றைக்கு “அந்த” நாட்களிலும் சாதாரண நாட்கள் போல சுதந்திரமாக இயங்குமளவுக்கு பெண்களுக்கு வசதிவாய்ப்புக்கள் உள்ளது. எனினும் அந்நாட்களில் இறைவழிபாடு கூடாதென்ற விதி மட்டும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
சகோதரிகளே! நீங்கள் ஒற்றையாடை அணிந்து இக்கட்டாக அந்த நாட்களைக் கழிக்கவேண்டிய பழங்காலத்தில் வாழவில்லை. மன ஒருமைப்பாடு சாத்தியமாகவுள்ளபோது, தாராளமாக அந்த நாட்களிலும் இறைவழிபாட்டில் ஈடுபடலாம்.
இறைவழிபாடு என்பதே மனதுக்கும் உடலுக்கும் வலுவூட்டத் தானே! மனம் ஒத்துக்கொள்ளாவிட்டால் மட்டும் கோயிலுக்கு செல்லாதீர்கள். மற்றும்படி, இல்லங்களில் பூசனையாற்றுவதிலோ இறைநாமங்களைச் செபிப்பதிலோ வழக்கத்தை மாற்றவேண்டியதில்லை!
உபரித் தகவல்: கேரளாவின் செங்கனூர் பகவதியம்மன், சாதாரண மானிடப்பெண்டிர் போல இன்றைக்கும் மாத இயற்கைக்குள்ளாகிறாள். “திருப்பூத்து” என்று பயபக்தியுடன் அழைக்கப்படும் இவ்வற்புதம் இன்றும் நிகழ்ந்துவருகிறது.
god

பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன?

மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்? அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.
பச்சரிசி மாவில் கோலம் போட்டால்
அம்மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும். எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

இணையத்தளம் ஒன்றில் நான் வாசித்த கட்டுரை எனக்குள் ஏற்படுத்திய அருட்டுணர்வு (inspiration) காரணமாக நான் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கின்றேன். இதன் முற்பகுதியில் நான் வாசித்த கட்டுரையை பிரதி பண்ணியிருக்கின்றேன். பிற்பகுதியில் எனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றேன். இந்த இரண்டு பகுதியையும் பாவிக்கப்பட்ட தமிழ்நடையை வைத்து வாசகர்கள் வேறுபிரித்து அறிந்து கொள்வார்கள் என நம்புகின்றேன்.
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது.
பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100 சதவிகிதம் உள்ளது.
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான அமைவிடமாகும். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள் மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதுனுடைய அடையாளமாகும். கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், மனிதர்களுக்கு நேரிடையாக வழங்கக் கூடிய நல்ல சக்தியையும் அதிகம் கொண்டிருக்கும். இது வடதுருவத்தில் இருந்து தென்துருவத்தை நோக்கி வீசும் அலைகளின் சக்தி போல இருக்கும் முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றிருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம். இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் நேரிடியான சக்திகளின் மையமாக இருக்கும் . பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலைகள் அல்லது நேர்மறையான அறிகுறிகளைக் கொண்டு உருவாகும். அப்புறம் தான் கோயில் உருவாகும்.
நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் சக்தியை பன்மடங்காக்கி வெளிக் கொணரும். அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று பக்கங்களும் மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த சக்தியை சிதறவிடாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக. இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு சக்தி. தொடர்ந்து கோயிலுக்கு செல்லும் அடியார்களுக்கு அங்கு ஒரு சக்தி இருப்பது தெரியும். அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வருவதற்கு காரணம் காரணம் சக்தியின் சுற்று பாதை இது தான் . அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே சக்தியின் சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே எங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித நேர்மறையான மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு நேர்த்தன்மை கொண்ட இராசாயன மாற்றத்தை எங்கள் உடம்புக்கு கொடுக்கின்றது. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல. அது அந்த சக்தியை அப்படியே பிரதிபலிக்கும் செய்யும் ஒரு தொழில்நுட்பம்தான்.
அது போக மந்திரம் சொல்லும் போதும் மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த சக்தியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான சக்தியை உருவாக்கும் தொழிறகூடம் தான் இந்த மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் போன்றவற்றை ஒரு 10 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட அறையில் தொடர்ந்து நீங்கள் செய்து பாருங்கள் . இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால்,தயிர்,பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது. அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும்.
பூக்கள்- கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்)- துளசி (புனித பேஸில்)- குங்குமப்பூ (சேஃப்ரான்)-கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது. இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை தொடர்ந்து உட்கொண்டவர்களுக்கு இது ஒரு உடலினுள் நோயை எதிர்க்க் கூடிய எதிர்ச் சக்தியை அதிகமாக உருவாக்கும் என்றால் அதிகமில்லை. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் அடிப்படையில் கராம்பு-துளசி- வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் தீர்த்தம் பல ரோக நிவாரணியாக விளங்கின்றது. இந்த தீர்த்தம் வாய் நாற்றம் பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம். கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக சக்தி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜிஇ அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.
பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான். நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம்- கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் சக்தியை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு சக்தியை மீண்டும் உடம்பிற்கும் மனத்திற்கும் வழங்குவது (காரின் பற்றியை சார்ஜ் செய்வது போல) இந்த கோயிலின் மூலஸ்தானம் தான்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி மின்னியல் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இடிதாங்கியாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் காந்த மின்னலைகள் இடியின் தாக்கதை சமநிலைப்படுத்தும். மாடிக்கட்டடங்களுக்கு இடிதாங்கி வைத்துக் கட்டும் தொழில் நுட்பம் வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் அந்த இடிதாங்கியும் இல்லாமல் கோயில்கள் கட்டப்பட்டிருப்பதற்கு காரணம் இதுதான் காரணம். தான் ஒரு சாதாரண கலசத்தையும் இடிதாங்கியாக மாற்றும் திறன் படைத்தது. அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும்
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு தொழில் நுட்பத்தை தன்னகத்தே கொண்டது.
அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா அதிகூடிய அதிர்வுகளையும் நடுவுநிலைப்படுத்தக் கூடிய சக்தி மரத்திற்கு உண்டு. இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான்.
நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். சித்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான் நியதி. கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த ருசியையும் எந்த ஐந்து நட்சத்திர உணவகமும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி.
சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த சக்தி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் என்ற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் தொழில் நுட்பம்.
மேலேயுள்ள கட்டுரையின் தொடர்ச்சியாக புலம் பெயர் நாடுகளில் கோயில்களின் அமைப்பு, தேவைகள், அவற்றின் கடப்பாடுகள் என்னவாக இருக்கின்றது என்றும் என்னவாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என ஆராய்வாதே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.
பல புலம் பெயர்ந்த நாடுகளில் நகரப்பகுதிகளின் மத்தியில் மேற் சொன்னவகையில் கோயில்களை அமைப்பதில் பல இடர்ப்பாடுகள் உண்டு.
முதலாவாதாக இந்த நாடுகளில் இந்த இந்த நகரசபை பகுதிகளில் இவ்வாறுதான் கட்டடங்கள் அமைக்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டிருக்கும். அதற்கமைவாகவே எந்தக் கட்டடமும் அமைக்கப்பட வேண்டும். எனவேதான் நகரப்பகுதிகளில் அமைக்கப்படும் கோவில்கள் பொதுவாக ஒரு மூடிய கட்டத்துள் கோயில் உள்பிரகாரம் அமையக்கூடிய வகையில் அமைக்கப்படுகின்றது.
அவ்வாறு இல்லாமல் இலங்கை இந்தியாவில் உள்ளது போல முற்று முழுதாக நகரப்பகுதியின் வெளியில் கட்டப்பட வசதிகளும் சட்டத்திலும் இடம் உண்டு. அவ்வாறான அழகிய ஆலயங்களும் ஆங்காங்கே உண்டு. ஆனால் மக்களின் போக்குவரத்து வசதிகள், நேர இடர்ப்பாடுகள், பூசகரைத் தங்க வைத்தலில் உள்ள சிரமங்கள் என்பவற்றையும் குறிப்பாக பொருளாதாரப் பிரச்சனையையும் கருத்திற் கொண்டு மூடிய மண்டபத்துள் அமைக்கப்படும் சிறிய கோயில்கள் அதிகமாக அமைக்கப்படுகின்றன.

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன்?

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன்?

திருமணத்தின் போது திருமணத் தம்பதிகள் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்ப்பது ஏன் என்பது பற்றி முன்பொரு விளக்கமும் பிரசுரமாகி இருந்தது. அதுபற்றிய அருமையான மற்றுமொரு விளக்கமும் இருக்கிறது. வசிட்ட முனிவரின் மனைவி அருந்ததி மிக அழகானவள். அதனால் அவள் மீது இந்திரனுக்கே கொள்ளை ஆசை இருந்து வந்தது.
வசிட்ட முனிவர் தினமும் அதிகாலையில் சேவல் கூவும் சத்தத்தினைக் கேட்டு கண் விழித்து எழுந்து ஆற்றங் கரைக்குச் சென்று ஆற்றில் நீராடி தவஞ் செய்வது வழக்கம். இதனை இந்திரன் நன்கு தெரிந்து வைத்திருந்தான். அதனால் ஒருநாள் அதிகாலை இரண்டு மணிக்கு அவன் அவரது பன்னசா லைக்குச் சென்று சேவல் கூவுவது போன்று பலமுறை கூவினான். அதனைக் கேட்ட வசிட்ட முனிவரும் விடிந்து விட்டதாகக் கருதிக் கொண்டு விழித்தெழுந்து ஆற்றங்கரைக்குச் சென்றார்.
அந்த நேரம் இந்திரன் வசிட்ட முனிவரின் வடிவத்தில் பன்னசாலைக்கு உள்ளே சென்று அருந்ததியை கட்டி அரவணைத்து இன்பம் அனுபவித்தான். அருந்ததியும் கடுகளவேனும் சந்தேகிக்காது அவர் தனது கணவர் தான் என நினைத்துக் கொண்டு ஒத்துழைப்பு நல்கினாள். ஆனால் ஆற்றங்கரைக்குச் சென்ற வசிட்ட முனனிவர் வானத்தில் விடிவெள்ளியைக் காணாததினனால் இன்னும் விடியவில்லை. சேவல் தவறுதலாகக் கூவி விட்டது போலிருக்கிறது என எண்ணிக் கொண்டு நீராடாமல் விரைவாக பன்னசா லைக்குத் திரும்பி வந்தார்.
வந்த போது அங்கு நடந்த இந்திரனின் திருவிளையாடலைக் கண்டு ஆத்திரமுற்று நீ செய்த பாவத்துக்கு தண்டனையாக “நீ ஒரு ஜோனிக்கு ஆசைப்பட்டதனால் உனது உடல் முழுவதும் ஜோனி ஆகட்டும்” எனச் சாபம் இட்டார். அதனால் அவனது உடல் முழுவதும் ஜோனியாகி விட்டதாம். இதனை அறிவுறுத்தும் வகையிலேயே உடலெல்லாம் ஜோனிகள் இருப்பதைப் போன்ற தோற்றமுடைய முள்முருக்கம் தடியினை திருமணத்தின் போது அரசாணியாக மணவறையின் முன்பாக வைப்பது வழக்கமாகியது. ஜோனியை அம்மணமாகக் காண்பிக்கப்படாது என்பதற்காக முள்முருங்கைத் தடியினை வெள்ளை நிறத் துணியினால் மூடிக் கட்டுவார்கள்.
அருந்ததி மீதும் ஆத்திரமுற்று நீ கருங்கல்லாகப் போய்விடு எனச் சாபம் போட்டார். அப்போது அருந் ததி மிக்க மனம் வருந்தி சுவாமி நான் நீங்கள் என்று நம்பித் தான் தவறு செய்துவிட்டேன். தெரியா மல் செய்த தவறுக்காக என்னை மன்னித்து விடுங்கள் எனக் கெஞ்சினாள். இல்லை நீ செய்த குற்றம் மன்னிக்க முடியாததாகும் எனக் கூறினார். சரி உங்கள் சாபப்படி நான் கருங்கல்லாகப் போகிறேன். அதிலிருந்து எனக்கு மீட்சி கிடைக்காதா? எனக் கேட்டாள்.
கருங்கல்லாகப் போகும் உன்மீது யாராவது புண்ணிவானின் பாதம் பட்டால் நீ மீணடும் உனது சுய ரூபத்தினைப் பெறுவாய் என உத்தரவிட்டராராம். அதே போன்று சில காலத்தின் பின்னர் வனவாசத்தை அனுபவித்துக் கொண்டிருந்த இராமபிரான் வனத்தின் ஊடாக நடந்து சென்ற போது வனத்தில் கிடந்த கருங்கல்லின் மீது அவரது பாதம் பட்டதும் அருந்ததி தனது சுயரூபத்தினைப் பெற்றாள். அவளது சோகமான கதையினக் கேட்ட இராமபிரான் குற்றமற்றவளான நீ என்றும் வானத்தில் ஒளி வீசும் நட்சத் திரமாகத் திகழ்வாய் எனக் கூறி ஆசீர்வாதம் வழங்கினாராம்.
அதனால் தான் திருமணம் செய்யும் தம்பதிகள் கற்பு நெறி தவறாது வாழ வேண்டும் என்பதனை நினைவுறுத்தும் வகையிலேயே இன்றும் அருந்ததி நட்சத்திரத்தினைப் பார்த்து வருகின்றனர்.
அத்துடன் மணப் பெண் திருமண வைபவத்தின் போது அம்மி மிதிப்பதும் கற்பு நெறி பிறழ்ந்தால் அருந்ததிக்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும் என்பதனை நினைவுறுத்துவதற்காகும்.

Sunday, 1 December 2013

திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல.

ஒருவர் இன்னொருவரிடம்...
பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில்
தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.

அரிசி, நெல் முதலானவற்றை
கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
பணமாயிருந்தால் தட்டு.

இது எதனாலென்றால்,
கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில்
மேல்கீழாய் இருந்தாலும்
அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.

வெறுமனே கையால் கொடுத்தால்,
கொடுப்பவர்கை மேலும்
வாங்குபவர்கை கீழுமிருக்கும்.

இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்
நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே
எப்பொருளை கொடுத்தாலும்
தட்டில் வைத்துக்கொடுப்பதை பழக்கமாகக்கொண்டிருந்தனர்
நம் முன்னோர்கள்.

இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.


# அழைப்பிதழ் கொடுக்கப்போகும்போது
கூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துச்செல்லுங்கள்

சூரியனை பார்க்கக்கூடாத நேரங்கள் எவை தெரியுமா?

சூரியனை பார்க்கக்கூடாத நேரங்கள் எவை தெரியுமா?


காலை வேளையில் கதிரவனை தரிசிப்பதும் வணங்குவதும் நன்று; 
மாலை நேரத்தில் சூரியனைப் பார்ப்பதும் சூரிய ஒளியை உடலில் ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும். ஆனால் சூரியனைப் பார்க்கக்கூடாத நேரங்களும் உள்ளன. 
நீரில் பிரதிபலிக்கும் போதும், நடுபகலிலும் சூரியனைப் பார்க்கக் கூடாது. 
ஜொலித்து நிற்கும் சூரியனை வெறும் கண்களால் காண்பது தீங்கு விளைவிக்கும். நடுப்பகலில் சூரியனைப் பார்ப்பதால் பார்வைக் கோளாறுகள் ஏற்பட வழியுண்டு. விஞ்ஞானமும் இதனை ஒப்புகொள்கிறது. பழங்காலத்தில் நீரில் பிரதிபலிக்கும் சூரியனை மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக, சூரியன் வருண பகவானுடன் இணைந்திருக்கும் காட்சியைக் காணக்கூடாது என்று கூறி விலக்கினர்.

மகாளயம் என்றால்

மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்று பொருள். பட்சம் என்றால் அரைமாதம் அதாவது 15 நாள் என்று அர்த்தம். மகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த 15 நாட்களும் நாம் பித்ருக்களை ஆராதித்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். 

பூலோகத்தில் 15 நாட்கள் தங்கி இருக்கும் நாட்களில் கோவில் தீர்த்தங்களில் உள்ள தெய்வீக சக்திகளை பித்ருக்கள் எடுத்துச் செல்வார்கள். அந்த சமயத்தில் நாம் பித்ருக்களுக்கு அன்னமிட்டு வழிபாடு செய்யும்போது, பித்ருக்கள் மிகவும் மனம் குளிர்ந்து அந்த தெய்வ சக்திகளை நமக்கு கொஞ்சம் பரிசாக தந்து விட்டுச் செல்வார்கள். 

மகாளயபட்ச 15 நாட்களும் நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலன்களையும், ஆத்மசக்தியையும் கொடுக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம். 

ஆக நாம் செய்யும் பித்ருதர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் மகாளய அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது. 

இந்த 15 நாட்களில் மகாளயபட்ச வழிபாட்டை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்கும் கிடையாது. எல்லாமே உங்கள் இஷ்டம்தான். உங்கள் குலு வழக்கப்படி தர்ப்ப ணவழிÖடுகளை எப்படி கொடுப்பார்களோ.... 

அந்த வழக்கப்படியே செய்யலாம். தர்ப்பணம், சிராரத்தம் கொடுப்பதில் சாதி, மத, குல பேதங்கள் எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்க்ள. மகாளய அமாவாசை நாளில் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் பித்ரக்களை தேடி வரும். 

அந்த ஆசீர்வாதத்தை பித்ருக்களும் நம்மிடம் நேரடியாக எடுத்து வரக்கூடும். எனவே மகாளயபட்ச நாட்களில் பிரத்ரக்களை வழிபாடு செய்து, விஷ்ணுவின் அருளை பெறத் தவறாதீர்கள்.

விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை எவை?

விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை எவை?

விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது. 

விளக்கேற்றியவுடன் தலை குளிக்கக் கூடாது.

 விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது. 

விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது. 

விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவற்றைக் கொடுக்கக்கூடாது.

ஆத்திகன். நாத்திகன்.

பூஜை அறைக்கும், குளிக்கும் அறைக்கும் பேதம் தெரிந்தவன், ஆத்திகன்.

மல ஜலம் கழிக்கும் இடத்திலேயே சாப்பிட்டுப் பழகியவன் நாத்திகன்.
.
தர்மம் தர்மம் என்று பயப்படுகிறவன், ஆத்திகன்.

அனுபவிப்பதே தர்மம் என்று நினைப்பவன், நாத்திகன்.

ஆத்திகன் மனிதனாக வாழ்ந்து தெய்வமாகச் சாகிறான்.

நாத்திகன், மனிதன் போலக் காட்சியளித்து, மிருகமாகச் சாகிறான்.

உண்மையிலேயே ஒருவன் நாத்திகம் பேசினால் அவன் உணர்ச்சியற்ற ஜடம்; ஆராயும் அறிவற்ற முடம்.

பகுத்தறிவு ஒழுங்காக வேலை செய்யுமானால், அது கடைசியாக இறைவனைக் கண்டுபிடிக்குமே தவிரச் சூனியத்தைச் சரணடையாது. 

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் 

கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் 
. . . . உலகோர்க் கெல்லாம் காரமா 
மூலியடா பங்கம்பாளை கொண்டு...
. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்
கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்
. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்
நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா
. . . . அன்றான ஆகாசகருடன் மூலி
அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

- சித்தர் பாடல்.

ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.

கொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது?

கொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது? 

கருவுற்ற பெண் அல்லது பெண் விலங்கின் கருப்பையினுள் நச்சுக்கொடி (Placenta) ஒன்று உருவாகி குழந்தை பிறக்கும்வரை அதன் வழியாகக் குழந்தைக்கு ஊட்டச்சத்து தரப்படுகிறது. கருவிலுள்ள குழந்தையின் கொப்பூழுடன் நச்சுக்கொடி (placenta) கொப்பூழ்க் கொடியால் (umbilical cord) இணைக்கப்பட்டுள்ளது. இந்த நச்சுக்கொடி, தாய்-சேய் இணைப்பி எனவும் கூறப்படுகிறது.

குழந்தையின் உயிர்ப்பாதை (Life line) உயிர்வாழ்வதற்குத் தேவையான ஒவ்வொரு பொருளும் – காற்று, குருதி ஊட்டச்சத்து – கொப்பூழ்க் கொடி வழியாகவே குழந்தைக்குச் சென்றாக வேண்டும். அது ஓர் அங்குலம் (inch) அகலத்திற்கு மேற்படாத அகலமும் ஓர் அடி நீளமும் ஒரு வேளை கொண்டிருக்கலாம்....

குழந்தை பிறந்த பின் அந்தத் தாய்-சேய் இணைப்பி (placenta) கருவுற்றிருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட பணிக்காக இருந்த இக்கொடி – விலக்கீடு செய்யப்படும்.

பிறந்த குழந்தையின் வயிற்றிலிருந்து ஒரு சில அங்குலங்கள் (inches) தள்ளி கத்திரியால் கொப்பூழ்க் கொடி வெட்டப்படும் இது. இந்த வெட்டுதல்-வலியேதும் ஏற்படுத்தாது. ஏனெனில் கொப்பூழ்க் கொடியில் நரம்புகள் ஏதும் இல்லை. குழந்தை இப்போது தானாகவே மூச்சை இயக்கிக் கொள்ளும்.

தெவசம்; --

தெவசம்; ------------ தெய்வத்தின் வசம் என்பதன் சுருக்கமே தெவசம் ஆகும்.நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி,பட்சம்,தமிழ்மாதம் அறிந்து,ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே ...திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்)குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே தெவசம் அல்லது சிரார்த்தமாகும். நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் சக்தி உடையதுபித்ரு தர்ப்பணம் ஆகும். ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான்.இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர்தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன.இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும். ஒருவேளை முன்னோர்களின் இறந்தத் திதி தெரியாதவர்கள்,ஆடி அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று.அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று(ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையகளையும்,அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். தெவச தினம் அன்று ஆதரவற்றோர், ஊனமுற்றோர், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு ஒரு வேளை உணவிற்கு ஏற்பாடு செய்யலாம். அது மிகப்பெரிய புண்ணியமாகும்

பெண்கள் மணியடித்துப் பூஜை செய்யக்கூடாது என்பது ஏன்?

பெண்கள் மணியடித்துப் பூஜை செய்யக்கூடாது என்பது ஏன்?அப்படி எதுவும் சாஸ்திரத்தில் கூறப்படவில்லை. 
முறையான தீட்சை பெற்று, ஆகம விதிப்படி பெண்கள் மணியடித்து வீட்டில் பூஜை செய்யலாம்.

"பந்தி'

கல்யாணம் மற்றும் பிற சுபநிகழ்ச்சிகளில், எல்லாரும் இணைந்து உண்பதை "பந்தி' என்கிறார்கள். இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? சமஸ்கிருதத்தில் "பங்க்தி' என்பது தமிழில் "பந்தி' ஆனது. "பங்க்தி' என்றால் "சேர்ந்து உண்ணுதல்'. மனத்தூய்மையான ஒருவர், பந்தியில் அமர்ந்து சாப்பிட்டால் அங்கு பரிமாறும் உணவெல்லாம் சுத்தமாகி விடும் என்பது ஐதீகம். அப்படிப்பட்டவரை "பங்க்தி பாவனர்' என்பர். நம்மோடு சேர்ந்து சாப்பிடுபவர்களின் குணம், பக்கத்தில் அமர்ந்திருக்கும் எல்லார் உணவின் மீதும் பரவும். எனவே,நற்குணத்தை வளர்த்துக் கொண்டால், நம் எல்லாருக்குமே நல்லது

கருட புராணத்தை வீட்டில் படிக்கக் கூடாது என்கிறார்களே ஏன்?

கருட புராணத்தை வீட்டில் படிக்கக் கூடாது என்கிறார்களே ஏன்?

ஒருவர் இறந்த பிறகு அவரது ஆவியின் பயணம் பற்றிக் கூறும் நூல் கருட புராணம். இறப்பதற்கு முன் செய்த பாவ புண்ணிய பலனை உயிர் அனுபவிப்பதை அது விளக்குகிறது. இறந்தவரின் பிள்ளைகள் செய்யும் கர்மாக்களினால் துன்பத்திலிருந்து விடுபட்டு பிதுர் உலகம் செல்வதையும் கூறுகிறது. இதனால் சாதாரண நாட்களில் இதனைப் படிக்க கூடாது என்பர். ஆனால், இந்நூலில் உள்ள விஷயங்களை தெரிந்து கொண்டால் நம்மிடம் தவறுகள் குறையும். புத்தகம் என்பது மற்றவர் படிக்கத் தான். இறந்த வீட்டில் பத்து நாளுக்குள், இந்நூலை ஒருவர் படிக்க மற்றவர்கள் கேட்பர். கோயில், மடங்களில் தகுதியான ஒருவர் படிக்க மற்றவர் கேட்கலாம். 

வீட்டில் கணபதி ஹோமத்தை நடத்துவதாக இருந்தால் எப்போது செய்வது நல்லது?

வீட்டில் கணபதி ஹோமத்தை நடத்துவதாக இருந்தால் எப்போது செய்வது நல்லது?

பிரம்ம முகூர்த்தம் என்னும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் நடத்துவது நல்லது. விநாயகருக்குரிய சதுர்த்தி திதி, அஸ்தம் நட்சத்திர நாளில் நடத்துவது இன்னும் சிறப்பு. 

முடிவெட்டுவதையும், எண்ணெய் ஸ்நானத்தையும் ஒரே நாளில் செய்யக்கூடாது என்கிறார்கள். உண்மைதானா?

முடிவெட்டுவதையும், எண்ணெய் ஸ்நானத்தையும் ஒரே நாளில் செய்யக்கூடாது என்கிறார்கள். உண்மைதானா?

உண்மை தான். வீட்டிலேயே சவரம் செய்தாலும், எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தவறு தான். அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளிலும், செவ்வாய், சனிக்கிழமைகளிலும் முடி வெட்டுதல், சவரம் செய்தலைத் தவிர்க்க வேண்டும்.