jaga flash news
Tuesday, 16 November 2021
பிறப்புடன் பிறக்கும் ஐந்து...
பிறப்புடன் பிறக்கும் ஐந்து...
ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.
(1) ஆயுள்: மனிதனுடைய ஆயுள். எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது.
(2) வித்தம்: இவ்வளவு பொருள் தான் அதற்கு ப்ராப்தம். அதற்கு மேல் எகிறி குதித்தாலும் ஒரு சல்லி
காசு கூட சேமிக்க முடியாது. தங்காது.
(3) வித்யா: இவ்வளவு கல்வி தான் வாய்க்கும். எவ்வளவு பணம் செலவு
செய்தாலும் மணிக்கணக்காக படித்ததாலும் பயனளிக்காது.
(4) கர்மா: தொழில், குணம், மனைவி
மக்கள் அமைவது. இவன் இந்த தொழில் தான் செய்வான். இன்ன
தொழில் செய்து தான் இந்த ஜீவன்
ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது.
வாழ்க்கையில் நாமே காண்கிறோம். பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் சிறிதளவும் சம்பந்தம் இருக்காது. நல்லவர்கள் கெட்டவர்களாகவும், அவ்வாறே கெட்டவர்கள் நல்லவர் களாக மாறுவதையும் கண்கூடாக
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
(5) மரணம்: இன்றைய தினத்தில் இந்த க்ஷணத்தில் இந்த நிலையில்
இந்த ஜீவனுக்கு ப்ராண வியோகம்
என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை
யாரும் மாற்றமுடியாது. யாராலும் மாற்றமுடியாது. ஒரு நோயாளியை
மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கு பரிசோதித்துவிட்டு
மருத்துவர் அரை மணி நேரம் முன்பு
வந்திருந்தால் பிழைத்திருப்பார்
என்கிறார். அரை மணி நேரம் முன்பு ஏன் போகமுடியவில்லை என்பது தான் கேள்வி. அரை மணி நேரம் முன்பு போயிருந்தாலும்
மருத்துவர் இதே கேள்வியை தான்
கேட்டிருப்பார். பிழைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் தான்
பிழைப்பார்.
ஆக இந்த ஐந்தும் கர்ப்பத்தில் இருக்கும் போதே பூர்வ வினைக்கு ஏற்ப நிர்ணயிக்கப படுகிறது. இதை மற்றயாராலும் மாற்ற முடியாது..
சிவ ஓம் நமசிவாய
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDeleteஅய்யா..வெ. சாமி அவர்களுக்கு.. 2021−ஆம் வருடத்திய திருக்கார்த்திகை நல் வாழ்த்துகள். தங்கள் பாதம் பணிகிறேன். என்னை ஆசீர்வதியுங்கள் அய்யா.
ReplyDeleteVery Nice.
ReplyDelete