jaga flash news

Friday, 14 July 2023

மேல்நிலை Vs ஆழ்நிலை

மேல்நிலை  Vs  ஆழ்நிலை
-------------------------------------------

தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும்- அப்படியானால் பூனை ஏன் இன்னும் வலிமை பெறவில்லை?
😂

தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கும்- அப்படியென்றால் யானை ஏன் எடை குறையவில்லை?
🤣

 தினமும் 2 மணி நேரம் நீச்சலடித்தால் உடல் மெலிந்து ஸ்லிம்மாகும்- அப்படியென்றால் திமிங்கிலம் ஏன் ஸ்லிம் ஆகவில்லை?
🤔

கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டால், உடம்பில் கொழுப்பு அதிகமாகி அவதிப்படுவீர்கள் - அப்படி என்றால், புல்லை மட்டும் சாப்பிடும் ஆட்டின் உடம்புக்குள் அவ்வளவு கொழுப்பு எங்கிருந்து வந்தது?
😥

தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடிவரும் - அப்படியென்றால் நியூஸ்பேப்பர் போடுபவர் BMW காரில் அல்லவா சுற்றவேண்டும்?
😆

எனவே நீங்க நீங்களாகவே இருந்து, தினமும் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே கவலைப்படாமல் இருங்கள்... 
💪💪
அதுதான் நல்லது...
நலம் பெறுக
👌👌
நன்றாக சிரித்து பிறரையும் சிரிக்க வையுங்கள்... அது போதும் 😍🥰

0o0o0o0o0o0o 0o0o0o0o0o0o 0o0o0o0o0o0o

1. தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும்- அப்படியானால்  பூனை ஏன் இன்னும் வலிமை பெறவில்லை?

வலிமை என்பது உருவின் அளவில் இல்லை. உருவின் தரத்தில் இருக்கின்றது.

2. தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கும்- அப்படியென்றால் யானை ஏன் எடை குறையவில்லை?

அழகும் ஆரோக்கியமும் உங்கள் எடையில் இல்லை. எடையின் தன்மை(body mass composition)யில் உள்ளது. பல நேரங்களில் உடல் இளைப்பு என்பது ஏமாற்று வேலை.

3.தினமும் 2 மணி நேரம் நீச்சலடித்தால் உடல் மெலிந்து ஸ்லிம்மாகும்- அப்படியென்றால் திமிங்கிலம் ஏன் ஸ்லிம் ஆகவில்லை?

பூமி சுற்றிச் சுழன்று கொண்டேயிருந்தாலும், சிதையாமல் இருப்பதற்குக் காரணம் அதன் திண்மை. திண்மையாதல் வேறு உடல் இளைத்தல் என்பது வேறு. நீச்சலடித்தால் உடல் இறுகும் என்பதே மெய்.

4. கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டால், உடம்பில் கொழுப்பு அதிகமாகி அவதிப்படுவீர்கள் - அப்படி என்றால், புல்லை மட்டும் சாப்பிடும் ஆட்டின் உடம்புக்குள் அவ்வளவு கொழுப்பு எங்கிருந்து வந்தது?

புல்லைத் தின்றாலும் அதிலிருக்கும் சத்துகள் செரிக்கப்பட்டு, செல்லுலோசுகள் குளுகோசாகி, உபரி குளுகோசு கொழுப்பாகும். ஆனால், ஒப்பீட்டளவில் அதிகமாக உண்ணப்பட வேண்டும். எல்லாமே ஒப்பீடுதான்.

5. தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடிவரும் - அப்படியென்றால் நியூஸ்பேப்பர் போடுபவர் BMW காரில் அல்லவா சுற்றவேண்டும்?

BMW கார் வைத்திருப்பவன் நியூசு பேப்பர் போடுபவனுக்கும் முன்னமே எழுபவனாக இருக்கலாம். செல்வம் என்பது, காரில் மட்டுமே இல்லை. மன நலத்திலும் உடல்நலத்திலும் நாளைக் கடந்து செல்லும் இன்புறு அனுபவத்திலும் கூட‌ உள்ளது.

No comments:

Post a Comment