jaga flash news

Thursday, 28 September 2023

திருப்பதியில் உள்ள 7 மலைகள்

Tirupati Temple: திருப்பதியில் உள்ள 7 மலைகளும் அதன் சிறப்புகளும் என்னென்ன தெரியுமா?

பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமலைக்கு சென்று தரிசனம் செய்ய 7 மலைப்பாதைகளை பக்தர்கள் பயன்படுத்தியுள்ளனர். அவற்றின் வரலாற்று சிறப்புகள் பற்றி பார்ப்போம்.
விருஷாத்ரி மலை: விருஷன் என்னும் அரசன் மோட்சத்தை அடைய இம்மலைக்கு வந்து தவம் செய்தார். அவனது பெயரில் இம்மலை 'விருஷாத்ரி' எனப் பெயர் பெற்றது.
(1 / 7)

விருஷபாத்ரி மலை: விருஷபன் என்ற அசுரன் பெருமாளுடன் சண்டையிட்டான். இறுதியில் தன் தவறை உணர்ந்து இதற்கு பரிகாரமாக பக்தர்களின் பாதம் படும் இடத்துக்குத் தன் பெயரை வைக்கும்படி வேண்டினான். அதன்படி, அவனது பெயரில் இது ‘விருஷபாத்ரி மலை’ எனப் பெயர் பெற்றது.
(2 / 7)

கருடாத்ரி: கருடாழ்வார் தன் பாவத்தை போக்க இங்கு தவம் செய்தார். அதனால் இது 'கருடாத்ரி மலை' எனப் பெயர் பெற்றது.
(3 / 7)

அஞ்சனாத்ரி: குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி அஞ்சனாதேவி தவம் செய்த மலை. அந்தக் குழந்தைதான் ஆஞ்சநேயர். இவளது பெயரில் ஏற்பட்ட மலை 'அஞ்சனாத்ரி மலை' எனப்படுகிறது.
(4 / 7)

நாராயணாத்ரி மலை: பூலோகத்தில் பெருமாள் தங்குவதற்காக நாராயண மகரிஷியால் அடையாளம் காட்டப்பட்ட மலை இது.
(5 / 7)

வேங்கடாத்ரி மலை: வேம் + கடம் = வேங்கடம். வேம் - பாவம், கடம் - எரிபடுதல். அதாவது இந்த மலையில் நமது பாதங்கள் பட்டதும் பாவங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்பது பொருள். பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு 'வேங்கடாத்ரி மலை' என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு கோலத்தில் காட்சி தருகிறார்.
(6 / 7)

சேஷாத்ரி மலை: மஹாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ளார். அதைப்போலவே இங்கும் ஆதிசேஷனே மலையாக இருக்கிறார். அதன் மீது வெங்கடேசப் பெருமாள் காட்சி தருகிறார். ஆதிசேஷன் அமைந்ததால் அந்த மலைக்கு பெயர் 'சேஷாத்ரி மலை' என்று அழைக்கப்படுகிறது.
(7 / 7)

No comments:

Post a Comment