jaga flash news

Wednesday, 28 February 2024

லீப் ஆண்டு என்றால் என்ன?:

 


லீப் ஆண்டு என்றால் என்ன?: பூமி தன்னைத்தானே சுற்றுக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவது நமக்குத் தெரியும். பூமி, 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 வினாடிகளில், ஒரு சுற்றுப்பாதையை நிறைவு செய்கிறது. அதாவது பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் 365 நாட்கள் மற்றும் 6 மணி நேரம். இதில் 365 நாட்களை நாம் ஓரு ஆண்டாக கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்.


Today is a very rare day: What is leap year: Detail in tamil
பூமி சூரியனை சுற்றி முடிக்க முந்நூற்றி அறுபத்தி ஐந்தே கால் நாட்கள் எடுத்துக் கொண்டாலும் நாம் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் என்றே கணக்கிடுகிறோம். ஒவ்வொரு ஆண்டிலும் மீதம் இருக்கும் அந்த 6 மணிநேரம், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மொத்தமாக ஒரு நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை, அந்த ஒரு நாள் கணக்கிடப்படும் ஆண்டு லீப் வருடம் என அழைக்கப்படுகிறது.






பிப்ரவரி 29: பிப்ரவரி மாதத்தில் வழக்கமாக 28 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கூடுதலாக ஒரு நாள் கணக்கிடப்படும் லீப் ஆண்டில், பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் கூடுதலாக சேர்க்கப்படும். இதுதான் லீப் ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. இந்த கணக்குப்படி ஒவ்வொரு 4 வருடங்களுக்கும் ஒரு லீப் வருடம் வரும். அந்த ஆண்டில், பிப்ரவரி மாதத்தில் 29ஆம் தேதி வரும்.

கடைசியாக, கடந்த 2020ஆம் ஆண்டு லீப் வருடமாக இருந்தது. அதன் பிறகு இந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு லீப் வருடமாக இருக்கிறது. இன்றைய நாள் பிப்ரவரி 29 2024 (வியாழக்கிழமை) இந்த ஆண்டின் கூடுதல் நாளாக உள்ளது.


லீப் ஆண்டு தோன்றியது எப்படி?: முதன் முதலில் இந்த கால் நாளை ஒரு நாளாக்கி நான்கு வருடங்களுக்கு ஒரு முறை காலண்டரில் சேர்த்தது ரோமானிய அரசர் ஜூலியஸ் சீசர். நாம் இப்போது பயன்படுத்தும் க்ரிகோரியன் காலண்டர், ஜூலியஸ் சீசர் வடிவமைத்த ஜூலியன் காலண்டரின் லீப் வருடத்தை உள்ளடக்கிய காலண்டர்தான்.

Today is a very rare day: What is leap year: Detail in tamil
ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு லீப் ஆண்டாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு லீப் ஆண்டா, இந்த ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் 29 தேதி வருமா என்பதை கண்டறிய எளிமையான முறை உள்ளது. சரியாக நான்கால் வகுபடும் ஆண்டு லீப் வருடம் எனப்படும். உதாரணமாக 2000ஆம் ஆண்டு ஒரு லீப் ஆண்டாக இருக்கும். ஆனால், 2040ஆம் ஆண்டு லீப் ஆண்டாக இருக்கும். 2030 ஒரு லீப் ஆண்டு அல்ல.

4 வருடங்களுக்கு ஒருமுறைதான் உண்மையான பிறந்தநாளை கொண்டாட முடியும்: உலகில் சராசரியாக தினமும் சுமார் 3.5 லட்சம் குழந்தைகள் பிறக்கிறார்கள். பிப்ரவரி 29ஆம் தேதியும் இதேபோல, லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆனால் இந்த நாளில் பிறக்கும் அனைவரும் தங்கள் பிறந்தநாளை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் சரியான நாளில் கொண்டாட முடியும். மற்ற ஆண்டுகளில், மார்ச் 1 அல்லது, பிப்ரவரி 28 அன்றே பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.

இந்தியாவில் மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் (1896), அர்ஜூனா விருது வென்ற பிரகாஷ் நஞ்சப்பா, கலாஷேத்ரா நிறுவனரும், பரதநாட்டிய கலைஞருமான ருக்மிணி தேவி (1904), ஹாக்கி வீரர் ஆடம் சிங்ளேர் (1984) ஆகியோர் பிப்ரவரி 29ஆம் தேதி லீப் வருடத்தில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

4 comments:

  1. Mon. 1, Apl. 2024 at 5.47 pm.

    ஜோதிடம் :*

    *இன்று கெளரி பஞ்சாங்கம் எவ்வாறு பார்ப்பது என பார்க்கலாம் !*

    *கெளரி பஞ்சாங்கம் கணிக்கும் முறை :*

    * ஒரு நாளின் 60−நாழிகைகளை, 16−பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

    * அவ்வாறு பிரிக்கப்படும்போது, ஒவ்வொரு பிரிவும் 3 3/4 நாழிகைகள் ஆகும்.

    * இதற்கென குறிப்பிட்ட பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    *இந்த 16−பிரிவுகளும், பகலில் 8; இரவில் 8 என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.*

    *இவ்வாறு இந்த எட்டுப் பிரிவுகளின் பெயர்களை அளிக்கிறேன்.*

    1. உத்தியோகம்
    2. அமுதம்
    3. ரோகம்
    4. லாபம்
    5. தனம்
    6. சுகம்
    7. சோரம்
    8. விஷம்.

    இவற்றுள், *உத்தியோகம், அமுதம், லாபம், தனம், சுகம்* ஆகிய ஐந்தும் நன்மை தரவல்லன.

    *முக்கியக் குறிப்பு : ஞாயிறன்று பகலில் உத்தியோகத்தில் ஆரம்பித்து வரிசையாக விஷத்தில் முடியும். இரவில் ஐந்தாவதான தனத்தில் ஆரம்பித்து, வரிசையாக லாபத்தில் முடியும்.*

    *அட்டவணையைப் போட்டுக் கொள்ளுங்கள் :*

    அட்டவணைத் தலைப்பை வரிசை படுத்துங்கள் கீழ்க்கண்டவாறு...!

    *ஞாயிறு பகல் :*
    உத்தியோகம் : 6 − 7 1/2 மணி வரை.
    அமுதம் : 7 1/2 − 9 வரை.
    ரோகம் : 9− 10 1/2 வரை
    லாபம் : 10 1/2 − 12 வரை
    தனம் : 12 − 1 1/2 வரை.
    சுகம் : 1 1/2 − 3 வரை
    சோரம் : 3 − 4 1/2 வரை
    விஷம் : 4 1/2 − 6 வரை.
    என நேர் வரிசையாக எழுதிக் கொள்ளுங்கள்.

    * ஞாயிறு இரவு :
    தனம் : 6−7 1/2
    சுகம் : 7 1/2 − 9
    சோரம் : 9 − 10 1/2
    விஷம் : 10 1/2 − 12 மீண்டும் உத்தியோகம் : 12 − 1 1/2
    அமுதம் : 1 1/2 − 3
    ரோகம் : 3 − 4 1/2
    லாபம் : 4 1/2 − 6 வரை.

    *திங்கள் : பகல் : இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். *ஞாயிறன்று பகலில் உத்தியோகத்தில் ஆரம்பித்து, விஷத்தில் முடிக்கிறோம். திங்களில் அதற்கு அடுத்ததான "அமுதம் ல் ஆரம்பித்து, உத்யோகத்தில் முடியும்.

    நீங்கள் தெளிவாக அட்டவணை போட்டீர்களானால், வரிசை முறை தானாகத் தெரிந்துவிடும்.

    *திங்கள் − பகல் :*
    அமுதம் : 6 − 7 1/2
    விஷம் : 7 1/2 − 9 இவ்வாறு அமுதத்தில் ஆரம்பித்து உத்தியோகத்தில் முடியும்.

    *திங்கள் − இரவு : சுகத்தில் ஆரம்பித்து, தனத்தில் முடியும்.*

    இவ்வாறே, சனிக்கிழமை வரை,
    பகல் − இரவு 6 − 7 1/2 − 4 1/2 − 6 வரை மாறி மாறி வரும்.

    *இதுவே, கெளரி பஞ்சாங்கம் கணிக்கும் முறை.*

    * மீண்டும் சந்திக்கலாம் !

    Sivajansikannan@gmail.com

    ReplyDelete
  2. Mon. 1, Apl. 2024 at 8.10 pm.

    *திருமந்திரம் :*

    *கடந்த பதிவில், கடவுள் வாழ்த்து பார்த்தோம்.*

    இன்று *திருமந்திரப் பாடல் − 2* பார்க்கலாம்.

    பாடல் − 2

    போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
    நால்திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை
    மேல்திசைக்குள் தென்திசைக்கு ஒரு வேந்தனாம்
    கூற்றுஉதைத் தானை யான் கூறுகின் றேனே.

    *இப் பாடலின் பொருள் :*

    போற்றி இசைத்து என்றால், வாழ்த்தி, வணங்கி, வழிபட்டு

    இன்னுயிர் மன்னும் புனிதனை என்றால், உலகத்து உயிர்கள் எல்லாம் கொண்டாடும் பெருமைக்குரியவன்.

    நாற்றிசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை என்றால், அவன் நான்கு திசைக்கும், ஆதி சக்தி நாயகிக்கும் தலைவன்.

    மேற்றிசைக்குள் தென் திசைக்கொரு வேந்தனாம் என்றால், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு, தூன்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு, மேல்கீழ் என விரிந்த திசைகளுக்கெல்லாம் தலைவன்.

    (குறிப்பாக , தென் திசைக்கு அரசன். (திருவாசகத்தில் , தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி, என்கிற திருவாசகத்தை ஞாபகத்தில் கொள்க.)

    கூற்றை என்றால், எமனை அல்லது காலனைக் காலால் உதைத்தவன் அவன்.

    அவனே நான் கூறும் (கூறுகின்றேனே) என்றால், குறிக்கும் பரம்பொருள் இறைவன் ஆவான்.

    இப்பாடலின் விளக்கம் யாதெனில்...

    கூற்று உதைத்தல் என்பது, இருளைப் போக்குதல் ஆகும்.

    கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்னும் இத்திசைகளைத், தலையின்.... முன், பின், வலம், இடம் என்ற இடங்களிலே கொள்ளுதல் வேண்டும்.

    *யோகிக்குத் தலையின் பின்புறம் மேற்கு.*

    *இப்பாடல் கூறும் கருத்து... "உயிரில் பொருந்தி, இருளைப் போக்கும் இறைவனை வணங்கிப் போற்ற வேண்டும் என்பதே இப் பாடலின் கருத்து.*

    *மீண்டும் சந்திக்கலாம் !*

    Sivajansikannan@gmail.com

    ReplyDelete
  3. Mon. 1, Apl. 2024 at 2.35 pm.

    *திருநாவுக்கரசர் 5−ஆம் திருமுறை.* (சிதம்பரம்)

    *பாடல் :*

    அன்னம் பாலிக்கும் தில்லைசிற் றம்பலம்
    பொன்னம் பாலிக்கும் மேலுமிப் பூமிசை
    என்னம் பாலிக்கு மாறுகண்டு இன்புற
    இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.

    இப்பாடலின் விளக்கம் :

    தில்லையம்பல நாதனைக் கண்டு தரிசிக்க, *இம்மை நலனும், மறுமை நலனும் கைவரப்பெறும் என்பதே இப்பாடலின் விளக்கம்.*

    *அன்னம் என்றால் சோறு.* அதாவது, இது முத்தியை (பேரின்பம்) உணர்த்துகிறது. இது மறுமைக்குரியது.
    திருவாசகத் தொடரிலும் *பாதகமே சோறு பற்றினவா தோள்நோக்கம்* (திருத்தோள்நோக்கம்) என சோறு என்பது பேரின்பத்தைக் குறித்தது.
    இம்மையில் கொள்ளும் உணவும், இக நலத்தைக் கருதின் ஆகும் என்க.

    இப்பாடலின் கருத்து :

    *தில்லைச் சிற்றம்பலத்தில் திருநடனம் புரியும் நடராசப் பெருமானைத் தரிசிக்க, உயிர்க்கு அமுதாகிய வீட்டின்பம் கிடைக்கும். பொன்னுலகமாகிய தேவர் உலக வாழ்வும் கிடைக்கும். உடலின் வளமைக்குரிய உணவும் கிடைக்கும்.*

    இப்பூவுலகில் கண்டு இன்புறுவதற்குரிய திருக்காட்சியைக் கண்டு தரிசித்தவர்களுக்கு யாவும் கைவரப் பெறும். எம்பெருமானைத் தரிசித்தவர்களுக்கு மீண்டும் இப்பிறவி வாய்க்குமோ ? என்பதே இதனின் கருத்து.

    *மீண்டும் சந்திக்கலாம் !*

    Sivajansikannan@gmail.com


    ReplyDelete
  4. Tue. 2, Apl. 2024 at 3.37 pm.

    *திருமந்திரம் :*

    *பாடல் : 3.*

    ஒக்கநின் றானை உலப்புஇலி தேவர்கள்
    நக்கன் என்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
    பக்கம்நின் றார்அறி யாத பரமனைப்
    புக்கு நின்று உன்னியான் போற்றிசெய் வேனே.

    *இப்பாடல் *இறைவன் விளங்கும் திறத்தைக் குறிக்கிறது.*

    *இப்பாடலின் பொருள் :*

    *ஒக்க என்றால் ஒரு சேர, இணையாக, பொருந்த, தகுதியாய் இருக்க, கூட* என்று பல பொருள் உண்டு.

    எனவே, *ஒக்க நின்றானை என்றால், உயிர்களோடு கலந்து நிற்பவன்* அதாவது உள்ளக்கோயிலில் குடியிருப்பவன் என்று பொருள்.

    *உலப்பு என்பதற்கு , அழிவு, முடிவு, சாவு, குலைப்பு.*

    *இலி என்பதற்கு இல்லாதது, இல்லாதவன்.*

    எனவே, *உலப்பிலி என்றால் அழிவில்லாத மேலும், அழிவற்றவன் என்று பொருள்.*

    * பக்கம் நின்றார் அறியாத பரமன் என்றால், *முத்தி பெற்றவரும், அறியாத இறைவன். அதாவது, பக்கத்தில் உள்ள திருமால் முதலிய தேவர்கள் அறிய முடியாத மேலோன்.

    *நக்கன் என்றால் சிவன்.* மேலும் பல பொருள் உண்டு. நிர்வாணி, அருகன், நரி, தேவதாசிகளுக்கு வழங்கிய சிறப்பு பெயர்.

    *இத்தகைய இறைவனை நான் அணுகி நின்று நாள்தோறும் வழிபடுவேன். புக்கு நின்று என்றால், அருகில் இருந்து, அல்லது அணுகி நின்று, இறைவனின் அருளில் அடங்கி நின்று, போற்றி வணங்குவேன் எனப் பொருள்.*

    *இவ்வாறு இறைவன் விளங்கும் திறனை இப்பாடல் நமக்கு வலியுறுத்துகிறது.*

    * வலியுறுத்தல் என்றால், உறுதிப்படுத்துதல் என்று பொருள்.

    *மீண்டும் சந்திக்கலாம் !*

    Sivajansikannan@gmail.com


    ReplyDelete