jaga flash news

Thursday, 13 June 2024

பம்பளிமாஸுனு


பம்பளிமாஸுனு வாய் கூசாமல் பாடி ஷேமிங் செய்றீங்களே! அந்த பழத்தில் எத்தனை அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சக்தி ஒரு பழத்திற்கு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா! ஆம் அதன் பெயர் பம்பளிமாஸ் பழம். இதை பொமலோ பழம் என்றும் கூறுவதுண்டு.


யாராவது குண்டாக இருந்தாலே பம்பளிமாஸ், பப்ளிமாஸ் என கிண்டல் செய்வதுண்டு. அப்படி கிண்டல் செய்யும் போது அவர்களுடைய மனம் எவ்வளவு நொந்து போகும் என்பதை யாரும் கவலைப்பட மாட்டார்கள்.

health fruit
அப்படிப்பட்ட பப்ளிமாஸ் பழத்தில் எத்தனை நன்மைகள் இருக்கின்றன தெரியுமா? பழங்களில் சிட்ரஸ் பழங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இதில் விட்டமின் சி இருப்பதால் நிறைய சத்துக்கள் கிடைக்கும்.

இதய ஆரோக்கியமாக இருக்க, கல்லீரல் வலுப்பெற, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த ஒரு பழம் உதவி செய்கிறது என்பது தெரியுமா. அதுதான் அந்த பம்பளிமாஸ் பழம். இந்த பழத்தால் ஏற்படும் ஆரோக்கியமான நன்மைகளை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பழத்தில் விட்டமின் சி, ஆண்டி ஆக்ஸிடென்ட் போல் செயல்பட்டு மனித செல்கள் சேதமடைவதை தடுக்கும். இதில் அஸ்கார்பிக் அமிலம் இருக்கும். இந்த அமிலம் ஆப்பிளில் இருக்கும். உடலில் உள்ள வெள்ளை அணுக்களை தூண்டி நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. இந்த நிலையில் இதில் இருக்கும் நரின்ஜினின், நரின்ஜின் ஆகியவை கல்லீரலுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது.

இதனால் கல்லீரல் செயலிழப்பிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் வயதான தோற்றத்தை தடுக்கும். தோல் சேதமடைவதை தடுத்து நிறுத்தி இளமையாகவே வைத்திருக்கும். அதிக நார்சத்து, விட்டமின் சி இருப்பதால் உடல் எடையும் குறையும். கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். சாத்துக்குடி, ஆரஞ்ச் இனத்தை சேர்ந்தது. இந்த பழம் பெரிய சாத்துக்குடி பழம் போல் இருக்கும். குறைந்த அளவு கிளைசெமீக் குறியீடு கொண்டிருக்கிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பண்பும் இந்த பழத்திற்கு உள்ளது.


கலோரிகள், நார்ச்சத்து, பொட்டாசியம் என உடலுக்கு தேவையான ஊட்டசத்துகள் உள்ளன. முக்கியமாக ரத்த அழுத்தத்தை குறைக்கும். பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. செரிமானத்திற்கு உகந்தது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. மலச்சிக்கலை போக்கும்.

கலோரிகள் குறைந்த பழம் என்பதால் உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது. ப்ரீ ரேடிக்கல் நிறைந்த இந்த பம்பளிமாஸ் பழம் புற்றுநோய்க்கு காரணமான செல்களை அழிக்கும். கெட்ட கொழுப்புகளையும் கரைக்கும். எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் கிடைக்க வழிவகை செய்கிறது.


No comments:

Post a Comment