அசுவனி, 6
பரணி,10
கார்த்திகை,20 ரோகிணி,32 மிருகசீரிடம்,22 திருவாதிரை,12 புனர்பூசம், 8
பூசம், 32
ஆயிலியம், 45
மகம்,42
பூரம், 64
உத்திரம்,56
அஸ்தம்,54
சித்திரை, 79
சுவாதி,39
விசாகம்,97
அனுஷம்,68
கேட்டை, 88
மூலம்,87
பூராடம்,73
உத்திராடம்,92 திருவோணம்,90 அவிட்டம்,85
சதையம்,93
பூரட்டாதி,89 உத்திரட்டாதி,95
ரேவதி16
Ashwini:6
Bharani: 10
Krittika: 20
Rohini: 32
Mrigashira: 22
Ardra:12
Punarvasu: 8
Pushya: 32
Ashlesha: 45
Magha: 42
Purva Phalguni: 64
Uttara Phalguni: 56
Hasta:54
Chitra: 79
Swati: 39
Vishakha: 97
Anuradha: 68
Jyeshtha: 88
Mula: 87
Purva Ashadha: 73
Uttara Ashadha: 92
Shravana: 90
Dhanishta: 85
Shatabhishak: 93
Purva Bhadrapada: 89
Uttara Bhadrapada: 95
Revati: 16
Mon. 16, June, 2025 at 8.35 pm.
ReplyDelete*சோதிடம் :*
*மந்திர உபதேசம் மற்றும் மந்த்ர சித்தி :*
சோதிடத்தில் மந்திர உபதேசம் என்னும் மந்திர சித்தி அடையும் வழிகள் பற்றி பார்க்கலாம் "
*மந்திரங்கள் உச்சரிக்கும் போது, வார்த்தைப் பிழைகள் ஏற்பட்டு, அதனால் தோஷங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும், முறையாகச் சிறந்த ஆசார்யனை அடைந்து, மந்திர உபதேசம் பெறுவது அவசியம்.
அதற்கான காலங்களை சிறப்பாக அமைத்துக் கொடுக்க வேண்டியது ஒரு சோதிடர் மற்றும் ஆசார்யரின் பொறுப்பு.
அவ்வகையில்....
திருஅஷ்டா௯ஷர மந்திர உபதேசத்திற்காக திருமங்கையாழ்வார் பாடிய பாசுரம்....
குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும் பருளும்
அருளொடு பெரு நிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திடும்
பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்
என்று திருஅஷ்டா௯ஷர திருமந்திரத்தின் பொருளை அறிந்து இவ்வாறு திருமங்கையாழ்வார் பாடுகிறார்.
இப்பாசுரத்தின் பொருள்....
*நாராயணா* என்னும் நாமம் தன்னைச் சிந்தித்தவருக்கு "உயர்ந்த"குலத்தைக் கொடுக்கும், செல்வத்தைக் கொடுக்கும். அடியார்கள் அனுபவித்தே தீர வேண்டிய துன்பங்களை எல்லாம், தரை மட்டமாக்கி விடும்.
*பரம பதத்தைக் கொடுக்கும்*
என... திருமந்திரத்தாலே ஜீவன் பிறக்கிறான். எனவே, இவனுக்கு இது தாயாகி, அதாவது உடலைப் பெற்ற தாயாகி, உடலைப் பெற்ற இத் தாய் உடலுக்குச் செய்வதற்கு மேலாக, உயிருக்குத் தாயான திருமந்திரமானது, அறிவு, அனுஷ்டானம், வைராக்யம், கர்மயோகம், ஞானயோகம் என்ற வரிசைகளை அளிக்கும். அதற்கும் மேலான பக்தியை *நலந்தரும்* என்ற சொல்லால் குறிக்கிறார்.
எதைக் கொடுத்தாலும், அதற்கு முடிவு ஆனந்தமே ! ஆகவே, *நலந்தரும் என்று ஆனந்தத்தை தருவதை முடிவாகக் குறிக்கிறது.
என்ன... மந்திர உபதேசம்னு தலைப்பு கொடுத்துவிட்டு, திருமங்கையாழ்வார் பாசுரத்தை புகட்டுகிறேன் என நினைக்கிறீர்களா ! அப்பாசுரத்தில் அத்தனையும் அடங்கியிருக்கிறது.
இப்போ..! தலைப்புக்குள்ளே போவோம் !
*மந்திர உபதேசம் பெற உகந்த நட்சத்திரங்கள் :*
*உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, ரோகிணி, ரேவதி, பூசம், அவிட்டம், சுவாதி, அனுஷம், மகம், சித்திரை, மூலம், புனர்பூசம், திருவாதிரை, கேட்டை, திருவோணம், ஹஸ்தம்
ஆகியவை *உத்தமம்.*
*மந்திர உபதேசம் பெற வேண்டிய மாதங்கள் மற்றும் பலன்கள் :*
*சைத்ர மாதத்தில், மந்திர உபதேசம் பெற்றால்.... மிகுந்த துக்கத்தைக் கொடுக்கும்.
*வைசாக மாதத்தில், மந்திர உபதேசம் பெற்றால்... உயர்ந்த பொருள் கிடைக்கும்.
*ஜேஷ்ட மாதத்தில், மந்திர உபதேசம் பெற்றால்.... *விரைவில் மரணத்தை அளிக்கும்.*
*ஆஷாட மாதத்தில, மந்திர உபதேசம் பெற்றால்.... பந்துக்களுக்கு ஆகாது...
*சீராவண மோதத்தில், மந்திர உபதேசம் பெற்றால்.... மேன்மை அளிக்கும்.
*பாத்ரபத மாதத்தில், மந்திர உபதேசம் பெற்றால்... *குல நாசம்* ஏற்படும்.
*ஆஸ்வீன மாதத்தில், மந்திர உபதேசம் பெற்றால்... பலவிதத்திலும் சுகத்தை அளிக்கும்.
*கார்த்தீக மாதத்தில், மந்திர உபதேசம் பெற்றால்.... ஞான வளர்ச்சியைக் கொடுக்கும்.
*மார்கசீர்ஷ மாதத்தில், மந்திர உபதேசம் பெற்றால்... சுபத்தை அளிக்கும்.
*புஷ்ய மாதத்தில், மந்திர உபதேசம் பெற்றால்... ஞான விருத்தி ஏற்படும்.
*மாக மாதத்தில், மந்திர உபதேசம் பெற்றால்.... மேதாவியாவான்.
*பால்குண மாதத்தில், மந்திர உபதேசம் பெற்றால்... சகல விதத்திலும் வசியம் ஏற்படும்.
இவற்றில்.... சூரியன், கடகம், கன்னி, தனுசு, கும்ப ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
*திதிகள் :*
*சதுர்தசி, அஷ்டமி, அமாவாசை தவிர மற்றவை *உத்தமம்.*
*கிழமை :*
*செவ்வாய்க்கிழமை தவிர மற்றவை உத்தமம்.*
*லக்கினம் :*
சர லக்கினங்களான மேஷம், கடகம், துலாம், மகரம் *உத்தமம்.*
*உபய லக்கினங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் *மத்யமம்.*
*ஸ்திர லக்கினங்களான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் *அதமம்.*
*இதர விஷயங்கள் :*
அ) லக்கினத்திற்கு 8−மிடம் ஒரு கிரகமும் இருக்க கூடாது.
ஆ) ஜென்ம, அனுஜன்ம, திரிஜன்ம நட்சத்திரங்கள், மாதப் பிறப்பு நாட்கள், புதன் கிழமை மிக *உத்தமம்.*
*இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் !*
Jansikannan438@gmail.com