Saturday, 30 April 2016

நினைத்த காரியங்கள் கைகூட வெண்ணெய் சாத்தி வழிபாடு

நினைத்த காரியங்கள் கைகூட வெண்ணெய் சாத்தி வழிபாடு
ராவணன் சம்ஹாரத்திற்கு பிறகு இரண்டு அசுரர்கள் தப்பி ஓடி தவம் செய்து வரங்களைப் பெற்று தேவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களை சம்ஹாரம் பண்ணக் கூடியவர்களை அனுப்ப வேண்டும் என்று கலந்து ஆலோசித்தபோது அனுமன் கடவுளே அதற்குத் தகுதியானவர் என்று முடிவு பண்ணி அவரை அனுப்ப ஏற்பாடு செய்தனர். அனுமனுக்கு போரில் உதவ ஒவ்வொரு கடவுளும் அவருக்கு உரிய ஆயுதங்களை ஆசிர்வாதம் பண்ணி அளித்தார்கள். ஸ்ரீ கண்ணபெருமான் வெண்ணை அளித்து ‘இந்த வெண்ணெய் உருகுவதற்குள் உனது காரியம் வெற்றியடையும், அசுரர்களையும் அழித்து விடலாம்’ என்று சொல்லி ஆசீர்வதித்தார். அதன்படி அனுமன் கையில் ஆசீர்வாதமாக அளிக்கப்பட்ட வெண்ணெய் உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் போரில் சந்தித்து வெற்றி பெற்று அவர்களை அழித்து விட்டார். ஆகவே அதேபோல நாம் வெண்ணெய் சாத்தி வழிபட்டால் நாம் சாத்திய வெண்ணெய் உருகுவதற்குள் நாம் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..?

ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..?
ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..? அப்படி எடுத்துக்கொள்ளும் காசுகளை என்ன செய்ய வேண்டும்?
முதலில் ஹோமத்தின்போது காசுகளை அதில் போடலாமா, கூடாதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஹோமங்கள் பலவகைப்படுகின்றன. வைதீக முறை, ஆகம முறை, சாக்த முறை, சாந்தி பரிகார ஹோமங்கள் என்று பல பிரிவுகள் அதில் உள்ளன. வேதத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்ற ஹோமங்கள் வைதீக முறை என்று அழைக்கப்படுகிறது. இந்தவகை ஹோமங்களில் இறைவனை அக்னியில் ஆவாஹனம் செய்வதில்லை.
‘அக்னிம் தூதம் வ்ருணீமஹே’ என்கிறது வேதம். அக்னி பகவானை தூதுவனாகக் கொண்டு இந்த ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. அதாவது, எந்தக் கடவுளை நினைத்து நாம் ஹோமத்தைச் செய்கிறோமோ, நாம் கொடுக்கும் ஆஹுதியை அவரிடம் சென்று சேர்க்கும் போஸ்ட்மேன் வேலையைத்தான் அக்னி பகவான் செய்கிறார். இந்த முறையில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே ஹோமத்தில் இட வேண்டும்.
பெரும்பாலும் சமித்து, அன்னம், ஆஜ்யம் (நெய்) ஆகியவற்றால் மட்டுமே இந்த வகையான ஹோமங்கள் செய்யப்படுகின்றன. ஒரு சில இடங்களில் விசேஷமாக அறுகம்புல், வெள்ளை எள், நெல் முதலானவற்றைக் கொண்டும் ஹோமங்களைச் செய்வார்கள். இந்த முறையில் பூர்ணாஹுதி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பட்டுத் துணியில் கொப்பரை வைத்து மூட்டை கட்டி ஹோமத்திற்குள் இடுவது இல்லை.
அதே நேரத்தில் ஆகம ரீதியாகவும், சக்தி வழிபாடு ஆன சாக்த முறைப்படியும் செய்யப்படும் ஹோமங்களில் அக்னியில் இறைவனை ஆவாஹனம் செய்வார்கள். இறைவனே அக்னியின் ரூபத்தில் வந்து நாம் கொடுக்கும் ஆஹுதிகளை ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். இவற்றில் வஸ்திரம், புஷ்பம், பழம் என நைவேத்யப் பொருட்கள் உள்பட அனைத்தையும் ஹோம குண்டத்தில் சமர்ப்பணம் செய்வார்கள்.
இந்த முறையிலான யாகங்களில் இறுதியில் பட்டுத்துணியில் கொப்பரை முதலானவற்றை மூட்டை கட்டி பூர்ணாஹுதியைச் செய்வார்கள். இந்த முறையில் ஆபரணம் சமர்ப்பயாமி என்று சொல்லும்போது நம்மால் இயன்றால் தங்கம், வெள்ளி முதலான எளிதில் உருகி பஸ்மமாகும் உலோகங்களை சமர்ப்பிக்கலாம். மாறாக எளிதில் உருகாத இரும்பு, நிக்கல் முதலான உலோகங்களை இடுவது கூடாது.
பூர்ணாஹுதியின்போது மூட்டைக்குள் இரும்பும் நிக்கலும் கலந்த இந்த சில்லரை காசுகளைப் போடுவது என்பது தவறு. நாம் எந்த ஒரு பொருளை யாகத்தில் செலுத்தினாலும் அது நன்றாக எரிந்து சாம்பலாக வேண்டும். அந்த ஹோம பஸ்மத்தினையே நாம் இறைவனின் பிரசாதமாக நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். ஒருமுறை ஆஹுதியாகக் கொடுத்த பொருளை திரும்ப எடுத்துக் கொள்வது என்பது தவறு. ஆக, இவ்வாறு ஹோமத்திற்குள் காசு போடுவது என்பது சமீப காலத்தில் உருவான ஒரு பழக்கமே அன்றி சாஸ்திரோக்தமாக ஏற்பட்டது அல்ல.
ஹோமத்தில் போடப்படும் காசுகளை நம் வீட்டினிலும், அலுவலகத்திலும் பணப்பெட்டியில் எடுத்து வைத்துக்கொள்வது அல்லது தரையினில் பள்ளம் வெட்டி அதற்குள் புதைத்து வைப்பது போன்ற செய்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கையே. ஒருமுறை இறைவனுக்கு ஆஹுதியாகக் கொடுத்ததை திரும்ப எடுக்கக்கூடாது என்பதால் ஹோமத்தில் இடப்பட்ட காசுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இன்னமும் ஒரு படி சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஹோமத்தில் காசுகளைப் போடுவதையே தவிர்ப்பது மிக மிக நல்லது. அப்படி தெரியாமல் போட்டிருந்தாலும் அதனை எடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், இறைவனுக்கு ஆஹுதியாக அக்னியில் அளித்ததை திரும்பவும் எடுத்துக்கொண்டதுபோல் ஆகிவிடும் நம் செயல். ஹோமப் பிரசாதம் என்பது அதில் இருந்து நாம் இட்டுக்கொள்ளும் ரக்ஷையும், அந்த சாம்பலுமே ஆகும். ஹோமகுண்டத்தில் இருந்து எடுத்து வடிகட்டிய சாம்பலை தினமும் நெற்றியில் இட்டுக்கொள்ளலாம். அதனையே வாயிற்படியில் மஞ்சள்துணியில் கட்டியும் வைக்கலாம்.

Thursday, 28 April 2016

கர்ப்பப்பை நீக்கம் தீர்வா? திண்டாட்டமா?

கர்ப்பப்பை நீக்கம் தீர்வா? திண்டாட்டமா?




''கர்ப்பப்பையை ஒரு உடல் உறுப்பா மட்டும் நான் பார்க்கலை... என் தங்கங்களைச் சுமந்த தங்க மாளிகை அது. என்னோட சந்ததிக பத்து மாசம் பத்திரமா இருந்த கோயில் அது. பரம்பரை வீடு சேதாரமாப் போனாலும், அதை இடிக்க மனசு வராமல் அழுவுற மாதிரிதான், என் மனைவியோட கர்ப்பப்பையை நீக்கணும்னு சொன்னப்ப நான் அழுதேன்!'' நடிகர் வடிவேலு, தன் மனைவி விசாலாட்சிக்கு கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை நடந்தபோது கண்ணீரோடு சொன்ன வார்த்தைகள் இவை. கரு உருவாகி முழுக் குழந்தையாக உருவெடுக்கும் அதிசயம்... பெண்ணின் கருவறைக்குள் நடக்கும் பிரமிக்கத் தக்க ஆச்சரியம். இனப்பெருக்க மண்டலத்தின் முக்கிய உறுப்பாக இருக்கும் கர்ப்பப்பை பெண்மைக்கே பெருமை சேர்க்கும் அடையாளம். ஆனால், பரபரப்பும், பதட்டமும் நிறைந்த இன்றைய வாழ்க்கைச் சூழலாலும், உணவுப் பழக்கத்தாலும், மாதவிடாய் நிற்கும் நிலையில் இருக்கும் சில பெண்களுக்குத் தொடர்ந்து அதிகப்படியான உதிரப்போக்கு, கர்ப்பப்பை இறக்கம், கர்ப்பப்பை வலுவிழத்தல் என வேதனைகளையும் சோதனைகளையும் சுமக்கும் ஓர் அங்கமாகவும் கர்ப்பப்பை மாறிவிடுகிறது. கர்ப்பப்பையில் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளை எளிதில் சரிசெய்துவிடக்கூடிய அளவுக்கு இன்றைய மருத்துவம் முன்னேறி இருந்தாலும், கர்ப்பப்பையையே அகற்றவேண்டிய சூழலும் சிலருக்கு ஏற்படத்தான் செய்கிறது.

''வெளிநாடுகளில் - குறிப்பாக ஐரோப்பாவில் - கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சையை மேற்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 2 லட்சமாக இருந்தது. ஆனால், தற்போது 20 ஆயிரமாகக் குறைந்துவிட்டது. எச்சரிக்கையாக இருந்தால் கர்ப்பபையை அகற்ற வேண்டிய நிலைமை நம் நாட்டுப் பெண்களுக்கும் ஏற்படாமல், கணிசமான அளவு குறைக்க முடியும்'' - நம்பிக்கையோடு சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயம் கண்ணன்.

''கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய சூழல் ஒரு பெண்ணுக்கு எப்போது ஏற்படுகிறது?''


அதிகப்படியான உதிரப்போக்கு நீண்டகாலமாக இருக்கும்போது மருந்துகள் சாப்பிட்டும் பலன் கிடைக்காத நிலையில், இனிமேல் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் கர்ப்பப்பையை அகற்றலாம்.

கர்ப்பப்பையின் உட்சுவர் சவ்வுப் பகுதி கர்ப்பப்பையின் உள்ளுக்குள் வளராமல், வெளியே வளர்ந்து ஆங்காங்கே ரத்தக் கட்டு ஏற்படும். இதை எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) என்போம். இந்த நிலை வரும்போது அதிக வலி மற்றும் அதிக உதிரப்போக்கு ஏற்படும். மருந்துகள் பலன் அளிக்காது போனால், கர்ப்பப்பையை அகற்றவேண்டி இருக்கும்.

கர்ப்பப்பையில் வளரும் சதைக் கட்டிகளான ஃபைப்ராய்ட் (Fibroids) மிகப்பெரிதாக இருக்கும் போதும், நோய் அறிகுறிகள் தென்பட்டாலும், கர்ப்பப்பை அகற்றப்படும்.

கர்ப்பப்பையில் புற்று நோய் இருப்பது பரிசோதனைகள் மூலம் 100 சதவிகிதம் உறுதி செய்யப்பட்டால் கர்ப்பப்பையை அகற்றவேண்டி இருக்கும்.

வயது கூடிய பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை இறக்கம் (Prolapse)போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாகவும் கர்ப்பப்பை அகற்றப்படலாம்.

பிரசவக் காலத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டு, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட்டால், கர்ப்பப்பையை அகற்றும் சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.

''கர்ப்பப்பையை எடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?''


சிறுநீர், மலம் கழிப்பதில் பிரச்னை, குடல் இறக்கம், தொடர்ந்து அடிவயிற்றில் வலி போன்ற பிரச்னைகள் சிலருக்கு ஏற்படக்கூடும். பிற்காலத்தில் குடல் இறக்கம் ஏற்பட ஒரு சிலருக்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருக்குக் கர்ப்பப்பையை எடுக்கும்போது திசுக்கள் சேதமடைந்து வலுவிழந்துவிடலாம். இதனால் சிறுநீர், மலம் கழிப்பதில் சிரமம் இருக்கும்.

ஆனால் பொதுவாகப் பார்த்தால் கர்ப்பப்பையை எடுப்பதால் பெரிய பிரச்னைகள் எதுவும் வராது. அதனால், நிச்சயமாக பயப்படத் தேவை இல்லை.

''கர்ப்பப்பை எடுத்த பிறகு எந்த மாதிரியான முன் எச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்?''


நான்கு வாரங்கள் நல்ல ஓய்வு எடுக்க«வண்டும். அதுவும், முதல் நான்கு நாட்கள் முழுமையான ஓய்வு. 15 நாட்களுக்குப் பிறகு வீட்டுக்குள்ளேயே நடக்கலாம். 20 நாட்களுக்குப் பிறகு உடம்பை வருத்திக்கொள்ளாத அளவில் வீட்டு வேலைகளைச் செய்யலாம். ஒரு மாதத்துக்குப் பிறகு வெளியிடங்களுக்குச் சென்று வரலாம். ஆனால், வெளியில் செல்லும்போது நோய்த்தொற்று ஏற்படாமல் கவனமாக இருக்கவேண்டும். இரண்டு மாதங்கள் ஆனதும் மென்மையான தாம்பத்திய உறவில் ஈடுபடலாம்.

கர்ப்பப்பையை எடுத்துவிட்டால் அந்தப் பெண்ணுக்குத்
தாம்பத்திய உறவில் ஆர்வம் இல்லாமல் போய்விடும் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. இது முற்றிலும் தவறு. கர்ப்பப்பையை எடுப்பதற்கும் தாம்பத்திய உறவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. 40 வயதுக்குள் ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பையை எடுக்கவேண்டிய சூழல் நேரிட்டால், அதற்கு முன்பும், பின்பும் அந்தப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் உரிய ஆலோசனைகள் நிச்சயம் தேவை. இதனால், கணவன் - மனைவிக்குள் புரிதல் மற்றும் அக்கறை எற்படும்.

''உடல், பழைய நிலைக்கு வருவதற்கு என்ன மாதிரியான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்?''


குனிந்து நிமிர்ந்து செய்யக்கூடிய சின்னச் சின்ன வேலைகளைச் செய்யலாம். இதனால், அடிவயிறு மேல் நோக்கிப் போகும். வயிறு சுருங்கும். ஃபிசியோதெரபிஸ்ட் உதவியுடன் பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். பயிற்சிகளால் வயிற்றுத் தசைகள் வலுப்பெறும். வாயு நிறைந்த கிழங்கு வகைகளைத் தவிர்த்து காய்கறி, பழங்கள், கீரை வகைகள் எனச் சத்தான உணவுகளை அந்தந்த வயதுக்கு ஏற்ப சாப்பிட்டால் போதும். அதிக ஓய்வு எடுப்பது உடலை பருமனாக்கிவிடும்''

நமது உடலின் நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை


நமது உடலின் நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை




நமது பாதங்கள் சக்திவாய்ந்தவை. உடல் உள்ளுறுப்புகளின் நரம்புகள் நமது பாதத்தில் முடிகின்றது. சீன மருத்துவத்தில் இதை மெரிடியன் என்று சொல்லுவார்கள். இந்த மெரிடியன்கள் நமது உள்ளுறுப்புகளின் பாதையாக செயல்படுகிறது. சிலர் இதை மறுப்பதுண்டு. ஆனால் சீன மருத்துவத்தை கற்றவர்களும், அறிந்தவர்களும் மெரிடியனும் நமது நரம்பு மண்டலங்களும் ஓன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை என்பதை அறிவார்கள்.

நீங்கள் நரம்புமண்டலங்கள் உண்டு என்று நம்பினால் மெரிடியன்களையும் நம்பித்தான் ஆகவேண்டும். நமது பாதத்தில் உள்ள 7000 நரம்புமண்டலங்களின் முடிவுகள் உடல் உள்ளுறுப்புகளுடன் தொடர்புள்ளவை. இவற்றை சக்திவாய்ந்த மின்சார சுற்றுகள் (circuit) என்றும சொல்லாம். நாம் காலணிகள் அணிந்து கொள்வதால் பாதத்திற்கோ அல்லது நரம்பு மண்டலங்களுக்கோ சரியான அழுத்தம் கிடைப்பதில்லை. எனவே மெரிடியன்கள் எப்பொழுதும் செயலற்ற நிலையில் உள்ளது. காலணிகள் இல்லாமல் நடக்கும் போது இந்த மெரிடியன்கள் தூண்டப்படுகின்றன.

வெங்காயமும், பூண்டும் இந்த மெரிடியன்களை எளிதானமுறையில் ஊக்கிவிக்கவும், நமது உடலுறுப்புகளை சுத்தம் செய்யவும் உதவுகிறது. இவற்றை உட்கொள்ளமாலே வெளிப்புறமாக ஊக்குவிக்க வெங்காயத்தையும், பூண்டையும் வட்டாமாக நறுக்கி படுப்பதற்க்கு முன் நமது பாதத்தின் அடியில் அழுத்தும் பெறும் வகையில் வைத்து காலுறைகளை அணிந்து கொள்ளலாம். இந்த முறையில் வெங்காயமும், பூண்டும் எந்த முறையில் செயல்படுகிறது என்று பார்ப்போம்.

வெங்காயமும், பூண்டும் கிருமிகளை ஈர்ப்பவை. காற்று மண்டலத்தை சுத்தம் செய்கின்றன. தீய பாக்டீரியாக்களை ஈர்த்து அழிக்கின்றன. அதனால்தான் நறுக்கிய வெங்காயத்தை நீண்டநேரம் வெளியில் வைத்தோ, பிரிட்ஜில் வைத்தோ உபயோகிக்ககூடாது என்று சொல்லப்படுகின்றது. வெங்காயம் நறுக்கும் போது கண்ணீரை வரவழைக்கும் வெங்காயத்திலுள்ள பாஸ்பாரிக் ஆசிட் நமது இரத்தநாளங்களில் நுழைந்து சளி, காய்ச்சல், ஃபுளு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கின்றது.

இயற்கை முறையில் விளைந்த ஆர்கானிக் வெங்காயத்தை உபயோகிப்பதே நல்லது. காரணம் இரவில் முழுவதும் உங்கள் பாதங்களின் அடியில் இருப்பதால் தேவையற்ற இரசாயனங்களும், பூச்சிகொல்லிகளும் நமது உடலில் உட்புகாது.

இவ்வாறு செய்யும் போது வெங்காயத்தின் சாறு தோல் மூலமாக உடலில் ஊடுறுவி (transdermal application) இரத்தநாளங்களில் ஈர்த்து தீய பாக்டீரியாக்களை அழிப்போதோடு அல்லாமல் உங்கள் அறையையும் சுத்தமாக்குகின்றது. இங்கிலாந்தில் பிளேக் நோய் தொடங்கும் காலங்களில் இந்த முறையை செய்து பாதுகாத்து கொண்டார்கள்.

இறந்தவர்க்கும் நட்சத்திரம் பார்க்க வேன்டுமா?

இறந்தவர்க்கும் நட்சத்திரம் பார்க்க வேன்டுமா?



இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமானது என சித்தர்கள் கூறியுள்ளார்கள்.

தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன? தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்?

தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்.

1. அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.

2. ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.

3. கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.

4. மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன.

அது என்ன அடைப்பு?


 அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள். சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.

தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6 மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.

முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.

கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப் படுகிறோம்.

ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.

இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி,தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ''இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் '' என்று வேண்டிக் கொண்டு,கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும்.

தர்ப்பணம் சிராத்தம்

தர்ப்பணம் சிராத்தம் MORE INFORMATION



1. வீட்டில் பசியால் வாடும் தன் வயதான பெற்றோருக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்குப் பட்டுவஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்தப் பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.

2. பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.

3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிராத்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும், ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தன் பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.

5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைக் கட்டாயம் செய்ய வேண்டும். இதனால் பித்ருக்களின் ஆசி உண்டாகும்.

6. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்குப் பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

7. அமாவாசை திதியை ‘பித்ரு திதி’ என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க,.. கறுப்பு எள் கலந்ததண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர்களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.

8. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்ததண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீர் தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டுச் செல்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

9. மறைந்த முன்னோருக்கு நாம் செய்யும் சிராத்தங்களும், தர்ப்பணங்களும் நம் குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. ஆகவே தவறாது சிராத்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.

10. மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிராத்தம் செய்யவேண்டும்.

11. மன்வாதி 14 நாட்களிலும் யுகாதி 4 திதிகளிலும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆயிரம் ஆண்டுகள் வரை முன்னோருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

12. மன்வாதி யுகாதி நாட்களில் செய்யப்படும் புண்ணிய நதி நீராடல், ஜெபம், ஹோமம் ஆகியவை கூடுதல் பித்ரு புண்ணியத்தைத் தரும்.

13. தமிழ் மாதப் பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும் ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.

14. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொண்ணூற்று ஆறு. இவற்றில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

15. இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்ய வேண்டிய நாள்தான்.

16. துவாதசியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத் தரும். ஆகவே அதிக புண்ணியங்களைத் தரும் தந்தையரின் சிராத்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.

17. ஒருவன் தன் தாய் தந்தைக்குச் சிராத்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என மகாவிஷ்ணுவும், சிவனும் கூறியுள்ளனர்.

18. இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிராத்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றைய நாளன்று இறந்த ஜீவன் காற்றுவடிவில் இறந்தவரின் குழந்தைகள் வாழும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிராத்தத்தில் தரும் உணவைச் சாப்பிடுவதற்காக காத்துக் கொண்டிருக்குமாம்.

19. முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் சிராத்தத்துக்குப் பார்வணசிராத்தம் என்று பெயர்.

20. ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிராத்தம் சங்கல்ப சிராத்தம்எனப்படும்.

21. ஒருவருக்கு சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள் அனைத்தையும், சமைக்காமல் அப்படியே தட்சணையுடன் அளித்துச் செய்யும் சிராத்தம் ஆம சிராத்தம் எனப்படும்.

22. சிராத்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வது ஹிரண்ய சிராத்தம் எனப்படும்.

23. சிராத்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரைத் தர்ப்பணமாகச் செய்யலாம்.

24. சிராத்தம் நடத்தப்படும் இடம், சிராத்தம் செய்யும் நேரம், சிராத்தத்தில் பித்ருக்களாக பாவித்து பூஜிக்கப்படும் நபர், சிராத்தத்தில் உபயோகிக்கும் பொருட்கள், சிராத்தம் செய்யும் நபர் ஆகியவை சிராத்தத்துக்கு முக்கியமானவை. இவை தூய்மையானவைகளாக இருந்தால் சிராத்தத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும்.

25. பித்ருக்களை சிராத்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு சிராத்தம் செய்து அவர்களுக்கு உணவளித்து, அவர்களைத் திருப்தி செய்தால் அவர்கள் அந்தக் குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள், அழியாப்புகழ், உடல் வலிமை, செல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றைத் தருகிறார்கள்.

26. நம் பித்ருக்களிடத்தில் சிராத்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிராத்தத்தில் வாங்கித்தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிராத்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பியபலன் கைகூடும்.

27. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிராத்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோரின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்குச் சரியாகச் சென்றடையும்.

28. பெற்றோரின் வருஷ சிராத்தமும் மாதப் பிறப்பும் சேர்ந்தால் மாதப் பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

29. அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பண பூஜைகளை செய்து விட்டு பிறகு மஹாளயத்தைச் செய்ய வேண்டும்.

30. பெற்றோரின் வருஷாந்தர சிராத்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதி தர்ப்பணங்கள் செய்து விட்டு பிறகு பெற்றோரின் வருஷ சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

31. தாய், தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொருவருக்கு வருஷாந்திர சிராத்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில் வருஷ சிராத்தம் செய்து விட்டு பிறகு மாஸிகத்தைச் செய்ய வேண்டும்.

32. தாய், தந்தை இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிராத்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிராத்தம் செய்ய வேண்டும். பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.

33. பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர்களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டு விட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

34. இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில் உங்கள் மறைந்த முன்னோர் வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள்.

35. சிராத்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாகப் பிறப்பான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

36. உடல் நிலை சரியில்லாதவர்கள் அருகில் யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு சிராத்தம் செய்ய வேண்டும்.

37. நம்மைவிட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாகப் புண்ணியமும், செல்வமும் நமக்குக் கிடைக்கும்.

38. மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெறவேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிராத்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், அதன் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

39. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையைச் சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையைச் சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களைச் செய்ய வேண்டும்.

40. “மக்களுக்குத் தொண்டாற்றி, சுயநலமின்றி அரிய இறைப்பணிகளைப் புரிந்தோர் மட்டுமே பித்ருலோகம் அடைகின்றனர் என்பதை கருடபுராணம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

41. “நமக்காக எத்தனையோ கஷ்டங்களைத் தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மஹாளயபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம். அவர்களுக்குப் பிடிக்காத வாசனை அவையே.

42. கார்த்திகை மாதம் உத்திராயண புண்ணியகாலம் சுக்ல பட்சம், பவுர்ணமி திதியில் தானம் செய்ய வேண்டும். கிருஷ்ணபட்சம்(தேய்பிறை) துவாதசி திதியில் தானங்கள் அளிக்கலாம்.

43. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்தமரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.

44. பித்ருக்கள் எங்கிருந்தாலும் சரி, தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள்ளளவும் சந்தேகம்கிடையாது.

45. ஒருவர் மரணப் படுக்கையில் அவதிப்படும்போது அவரது மகன் அல்லது மகள் மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரையை எருமைமாட்டிற்கு தானம் அளித்தால் மரண அவதி நீங்கும்.

46. வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மை அளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.

47. சாஸ்திரப்படி, சிராத்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக் கூடாது.

48. சிராத்தம் செய்யக்கூடியவர் முதல் நாள் முகச்சவரம் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது, மனைவியுடன் சேர்ந்து உறங்கக் கூடாது, பிரஷ் கொண்டு பல் தேய்ப்பதும், வெற்றிலை தாம்பூலம் போடுவதும் கூடாது.

49. மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக, மிகமுக்கியம்.

50. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் ‘சொர்ண லாபம்’ (தங்கம்)பெறுவான்.

51. திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவனுக்கு அறிவு, ஞான சக்தி, பசுக்கள், தேக ஆரோக்கியம், சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம், அனைத்துப் பலன்களும் தவறாமல் கிடைக்கும்.

52. சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் திருப்தி அடைவார்கள்.

53. மஹாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை நினைத்து மனதார வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் தேடி வரும்.

54. மஹாளய பட்சத்தின் 16 நாட்களும் சிராத்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அளிக்கும்.

55. தர்ப்பணம் என்னும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அவற்றை நன்குதெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

56. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் என்னும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

57. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மஹாளய சிராத்தம் செய்வது மிக முக்கியம்.

58. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

59. திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிகச் சிறந்தது.

60. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்குத் தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுத்தவர் கவியோகிவேத

அர்த்த சாஸ்திரத்தில் சில கருத்து

அர்த்த சாஸ்திரத்தில் சில கருத்து


ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.


அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான். 
ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.

ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது.

கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.

அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான். 

ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.

காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,

நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.

யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.

பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது.

கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.

கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.

பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

கல்வி கற்கும் மாணவன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.

உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்...

புனித நீராடுவது எப்படி?

புனித நீராடுவது எப்படி?





நீர்நிலைகளில் புனித நீராடுவது பாபத்தைத் தொலைத்து, புண்ணியத்தைப் பெறலாம் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் குளிக்கப் போய் சேற்றை பூசிக்கொள்வது அறிவுடைமை ஆகாது. புண்ணிய ஸ்நானம் செய்யப்போய் பாபத்தை சுமந்து வர வேண்டாமே. நீர்நிலைகள், கடல், ஆறு, அருவி, குளம், கிணறு, நூபுர கங்கை என்ற ஊற்று போன்றவை ஆகும்.

இவை ஒவ்வொன்றிலும் ஸ்நானம் செய்வதற்கான விதிமுறைகள் உண்டு. ஆறு, அருவி, நூபுர கங்கை போன்றவை, ஓரிடம் தங்காமல் ஓடும் நீர். அமைப்புக் கொண்டவை.. இவை விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடியவை. எனவே சோப்பு, ஷாம்பு போன்றவற்றை தேய்க்காமல், ஸ்நானப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை நீராடப் பயன்படுத்த வேண்டும்.

இந்நீர்நிலைகளில் கால் வைக்கும் முன் காலைக்கடன்களை முதலில் சுத்தமாக முடித்துவிட வேண்டும். பின்னர் குனிந்து வலக்கை விரல்களால் நீரின் மேல் ஓடும் குப்பை சத்தைகளை விலக்க வேண்டும். முதலில் கொஞ்சம் நீர் எடுத்துத் தலை மீது தெளித்துக்கொள்ள வேண்டும்.

இப்போது நீரில் இறங்கி, சூரியன் உதிக்கும் கிழக்குமுகமாகத் திரும்பி நின்று, இரு கைகளையும் கூப்பி இயற்கையை வணங்க வேண்டும். நீந்திக் குளிக்கலாம். நீந்தத் தெரியாதவர்கள், பாதுகாப்பாக நீரைத் துளாவிக் களிக்கலாம். இதனைத்தான் நீராடப் போதுவீர் என்றாள் ஆண்டாள். தைந்நீராட்டம் என்று நீராட்டத்தைச் சிறப்பித்துக் கூறுகிறது சங்க இலக்கியம். எனவே நன்கு திருப்தியாக நீரில் ஆடிய பின், சூரியனை நோக்கித் திரும்பி நின்று அர்க்கியம் விட வேண்டும்.

இரு உள்ளங்கைகளையும் கிண்ணம் போல் குவித்து, அதில் நீரை மொண்டு, `இறைவா, இதனை உனக்கு அர்ப்பணிக்கிறேன்` என்று சொல்லியபடியே, இரு உள்ளங்கைகளையும் இடையில் லேசாகப் பிரித்து, அதன் வழியாக நீரை வழியவிட வேண்டும். இதுவே அர்க்கியம் விடுதல். இது போல் மூன்று முறை செய்துவிட்டு, நீரை அதிரச் செய்யாமல், நீர்நிலையில் இருந்து மென்மையாய் வெளியேற வேண்டும்.. பிளாஸ்டிக் கவர்கள், பழத்தோல்கள், பழைய துணிகள் உட்பட எந்தக் குப்பையையும் கண்டிப்பாக நீர்நிலைகளில் போடக் கூடாது. நீர்நிலைகள் இயற்கையின் பொக்கிஷங்கள். அவை புனிதமானவை. புனிதத்தால் புண்ணியம் தருபவை என்பது ஐதீகம்

எத்தனை தீபங்கள் ஏற்றினால் தோஷம் நீங்கும்

எத்தனை தீபங்கள் ஏற்றினால் தோஷம் நீங்கும்



ஆலயங்களில் தீபங்கள் ஏற்றினால்


1. ராகு தோஷம் - 21 தீபங்கள்
2. சனி தோஷம் - 9 தீபங்கள்
3. குரு தோஷம் - 33 தீபங்கள்
4. துர்க்கைக்கு - 9 தீபங்கள்
5. ஈஸ்வரனுக்கு - 11 தீபங்கள்
6. திருமண தோஷம் - 21 தீபங்கள்
7. புத்திர தோஷம் - 51 தீபங்கள்
8. சர்ப்ப தோஷம் - 48 தீபங்கள்
9. கால சர்ப்ப தோஷம் - 21 தீபங்கள்
10. களத்திர தோஷம் - 108 தீபங்கள்

இல்லத்தில் தீபம் ஏற்றினால்


திங்கள், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே விளக்கை துலக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றினால் கண் நோய்கள் அகலும். திங்கள் கிழமை தீபம் ஏற்றினால் மனதில் அமைதி ஏற்படும். வியாழன்க்கிழமைகளில் தீபம் ஏற்றினால் குருவின் அருள் பார்வை கிடைக்கும்.

அபிஷேகத் தத்துவத்தை புரிந்து கொள்வோம் அர்த்தத்துடன் வழிபடுவோம்

அபிஷேகத் தத்துவத்தை புரிந்து கொள்வோம் அர்த்தத்துடன் வழிபடுவோம்


அபிஷேகத் தத்துவம்:


கோயிலுக்கு செல்கிறோம் . குருக்கள் எதோ அபிஷேகம் செய்கிறார்.கும்பிட்டுவருகிறோம். ஆனால் அதன் தத்துவத்தை புரிந்து கொள்ளவேண்டும். நம்மை காக்கும் கடவுளுக்கு முதலில் தூய நீர், மஞ்சள் நீர், ஆகியவற்றில் நீராடிய பின் பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறுகிறது. இவைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தத்துவம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது நல்லது. தூய நீர்- தூய வாழ்கை வாழ வேண்டும் என்ற நமது எண்ணத்தை நீர் அபிஷேகத்தால் இறைவனிடம் வெளிப்படுத்துகிறோம்.

மஞ்சள்- மங்களமும், ஆரோக்கியம் பெருக வளம் கொண்ட வாழ்வைப் பெற மஞ்சள் அபிஷேகம் செய்யப்படுகிறது.

பால்- களங்கமற்ற மனம் வேண்டி செய்யப்படும் அபிஷேகம் பாலாபிஷேகம்.

சந்தனம்- தேயத்தேய சந்தனம் மணப்பது போல் பிறருக்காக உழைத்து, வாழ்க்கையில் தியாகம் புரிவதைக் குறிக்கும்.

பன்னீர்- பன்னீர் போன்ற தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கும்.

விபூதி- இந்த உலகில் என்னதான் அனுபவித்தாலும் இறுதியில் எல்லாம் ஒரு பிடி சாம்பல்தான் என்பதை விபூதி அபிஷேகம் உணர்த்தும்.

அர்த்தத்துடன் வழிபடுவோம் . தத்துவத்தை புரிந்து கொள்வோம் பலனை பெறுவோம்.

இறைவனுக்கு செய்யும் அபிஷேகமும் அதன் பலன்களும்!

பலவிதமான வழிபாடுகளுள் விரைவாக பலன் தரும் ஒன்று, அபிஷேகம், ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம்.

முக்தி கிடைக்க: இறைவனை நெய்யால் அபிஷேகம் செய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி வகுக்கும்.

தீர்க்காயுசுடன் வாழ: சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக்கும்.

குடும்ப ஒற்றுமை நீடிக்க: குடும்ப ஒற்றுமைக்கும், குதூகலத்திற்கும் இறைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

நல்வாழ்க்கை அமைய: நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய பிரச்னை தலையெடுக்காது உங்கள் வீட்டில்.

கடன் தீர: மாப்பொடியினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை தீரும்.

நினைக்கும் காரியம் நிறைவேற: சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும்.


பிணிகள் தீர: கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும்.

குழந்தை பாக்யம் பெற: நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்யம் உண்டாகும்.

பயம் போக்க: மனதில் தோன்றும் இனம் புரியா பயத்தை நீக்க எலும்பிச்சை சாற்றால் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

இனிய குரல் வளம் கிடைக்க: இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்தால் வாழ்வும் இனிமையாகும். குரலும் தேன் குரலாகும்.

செல்வம் சேர: பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும். அதேபோல சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம்.

பாவங்கள் கரைய: பஞ்சகவ்யத்தால் அதாவது பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால், நெய், தயிர், சாணம், கோமியம் சேர்த்து அபிஷேகம் செய்ய பாவங்கள் கரைய உதவும்.

அமானுஷ்ய குலதெய்வ வழிபாடு

அமானுஷ்ய குலதெய்வ வழிபாடு




குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது
அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று
விளக்குஎண்ணெய் ஊற்றி இரண்டு மண் ஏற்றி ஒரு எலுமிச்சபழம்த்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இந்த வழிபாடு தொடருந்து செய்து வருவது மிகவும் நல்லது. குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.

கஷ்டத்தையும் ரசிக்கப் பழகு

கஷ்டத்தையும் ரசிக்கப் பழகு
○ உனக்கு ஒரு காயம் பட்டாலோ நோய் வந்தாலோ அதை கடவுளே அனுப்பி வைத்திருப்பதாக நினைத்து ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும்.அவற்றால் ஏற்படும் வலியை சமாளிப்பதை ஒரு தவம் போல கருத வேண்டும்.பழகப்பழக இந்த மனோபாவம் உறுதியாகி விடும்.நோய்நொடியை தாங்குகிற சக்தி உண்டாகும்.
□ நமக்கு எந்த கஷ்டம் வந்தாலும் வறுமையினால் சிரமப்பட்டாலும் அவை எல்லாம் நமக்கு வைராக்கியத்தை கொடுப்பதற்காக சுவாமியினால் அனுப்பப்பட்டவை என நினைத்துக்கொள்.
○ சாந்தமாக வாழ சாத்வீக உணவை உண்ண வேண்டும்.
□ அரை வயிற்றுக்குத்தான் சாப்பிட வேண்டும்.கால் வயிற்றுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். கால் வயிறை வாயுவுக்கு விட்டுவிட வேண்டும்.பசி தீர்க்கத்தான் ஆகாரமே தவிர ருசிக்காக அல்ல.
○ காஞ்சி மஹா பெரியவர்.

ஜீவன் முக்தி!!

ஜீவன் முக்தி!!
-------------------------
பலரையும் எதோ பிரம்மிப்பிலும், பயத்திலும், தேடலிலும் ஆழ்த்தும் ஒரு சொல்."ஜீவன் முக்தி".
ஜீவன் முக்தி என்றால் என்னவென்றே தெரியாமல் திரிபவர் பலர். ஜீவன் முக்தி என்றால், ஜீவித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது உயிருடன் இருக்கும்போதே முக்தி அடைவது என்பது தான் பொருள். 
என்னது உயிருடன் இருக்கும்போதே முக்தியா?
அது எப்படி?
முக்தி என்றால் செத்தபிறகு வைணவரானால் வைகுண்டதிற்கும், சைவர்கலானால் கயிலாயதிர்க்கும் சென்றால்தானே முக்தி. அதெப்படி வாழும்போதே முக்தி? என்கிறீகளா!!
வைகுண்டம், கயிலாயம் என்று இருந்தால்தானே ஜி செத்தபிறகு அங்கே போவதற்கு!!
முதலில் முக்தி என்றால் என்னவென்று தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முக்தி என்பது ஒரு வடமொழிச் சொல்.
அதற்கு தமிழில் "விடுதலை" என்று பொருள்.
எதில் இருந்து விடுதலை?
நம் மனதில் இருந்துதான்!!!
இப்பிரபஞ்சத்தில் நாம் நம் மனதைத் தவிர வேறு எதற்குமே அடிமையாக இருக்கவில்லை.
நம்மை, நாம் நம் இன்வாழ்கையை சுகித்து வாழமுடியாத வண்ணம் செய்வது நம் மனம்தான். இறைவன் புரியும் அணைத்து செயல்களிலும் மூக்கை நுழைத்து இது சரி தவறு என்று அதிகப்பிரசங்கித்தனம் செய்வது நம் மனம் தான்.
மனதின் பிடியில் இருந்து விடுபடுவதே உண்மையில் விடுதலையாகும்,
மனோ நாசமே முக்தியாகும்,
அவ்வாறு உயிருடன் இருக்கும்போதே நாம் நம் மனதை ஜெயித்து, கற்பனைகளை கடந்து, சிந்தையை நினைப்பர வைத்தோமேயானால், அதேவே ஜீவன் முக்தி.
"முக்தி என்பது ஒருவன் வாழ்நாளில் அடையப்பட வேண்டுமே தவிர, செத்தபிறகு எங்கோ சென்று அடைவது அல்ல" என்று மகரிஷி வசிஷ்டர் தன் யோக வாசிஷ்டம் என்னும் நூலில் தீர்கமாக மொழிகிறார்.

எது தவம்?

எது தவம்?
தவத்தின் மேன்மையை உரைக்கின்றது உபநிஷத்.
உண்மை பேசுதல் தவம். உண்மையாக நடத்தல் தவம். (பிரம்மத்தை பற்றிய) கேள்வி தவம், புலனடக்கம் தவம், மனவடக்கம் தவம், ஈகை தவம், வேள்வி தவம், "பூ: புவ: ஸுவ:" என்பது பிரம்மம், (அதாவதுஅனைத்துமே பிரம்மம்). இதை உபாசித்தலே தவம்.
--மகாநாராயன உபநிஷத், தைத்ரீய ஆரண்யகம்.

மாமிசத்தை உண்பவன் அறிவீனன்

ஒரு நாடோ அல்லது வீடோ அதன் பசுக்களின் எண்ணிக்கையை வைத்தே பண்டைய காலங்களில் செல்வம் நிறைந்ததாக கருதப்படும். நாட்டில் எத்தனை கால்நடைகள் உள்ளனவோ அந்நாடு அவ்வளவு வளம்மிக்கதாக கருதப்பட்டது. சங்ககாலங்களில் பெரும்பாலான யயுத்தங்கள் கால்நடைகளை கவர்ந்ததால் உருவானவையே. பசுக்களே செல்வம் ஆகையால், அவை தெய்வமாக உருவகப்படுத்தப்பட்டன. கால்நடைகளை அழிப்பது நாட்டின் செல்வத்தை அழிப்பதாகும். 
தெய்வப்புலவர் வள்ளுவர் "புல்லால் மறுத்தல்" என்னும்அதிகாரத்தில் "நிறைவான அறிவை உடையோர் பிறஉயிரின் உடலை உண்ணமாட்டார்" என்று அருளுகிறார். அதாவது மாமிசத்தை உண்பவன் அறிவீனன், புத்தி அட்டறவன், அறிவிலி என்பது பொருள்.

வேதங்கள் யாராலும் இயற்றப்படவில்லை. வியாச பகவான் ஒன்றாக இருந்த வேதங்களை தனித்தனியே தொகுத்து நான்கு வேதங்களாக நமக்களித்தார்

வேதங்கள் யாராலும் இயற்றப்படவில்லை. வியாச பகவான் ஒன்றாக இருந்த வேதங்களை தனித்தனியே தொகுத்து நான்கு வேதங்களாக நமக்களித்தார். வியாசர் வேதத்தை இயற்றினார் என்பது தவறு. வியாசர் வேதங்களை தொகுத்தார். பல ரிஷிகள் தங்கள் தவ வலிமையினால் வேதமந்த்ரங்களுக்கு மெய்ப்பொருளை கண்டறிந்தனர். அவர்கள் அறிந்தவையை வியாசர் தொகுத்தார். ரிஷிகளாலும் வேதமந்த்ரங்கள் இயற்றப்படவில்லை. பிரபஞ்சம் உண்டானதில் இருந்தே வேதங்கள் திகழ்கின்றன. ரிஷிகள் அந்தந்த மந்த்ரங்களுக்கு மெய்ப்பொருளை அறிந்தனர்.
வேதம் என்றால் “நல்லறிவு” என்பது பொருள். அனைத்து உயர்அறிவிற்கும் வேதமே அடிப்படை. நம் பாரதத்தின் ஜீவநாடி வேதங்களாகும். வேதங்களை ஒருவன் மருப்பதன்மூலம் அவன் நல்லறிவை இழக்கிறான். சனாதன தர்மத்தில் கடவுளை மறுப்பவன் நாத்திகன் அல்ல. ஆனால் வேதத்தை மருப்பவனே நாத்திகன் ஆவான். ஒருவனுக்கு நம் தர்மத்தில் கடவுளை ஏற்கவும், மறுக்கவும் உரிமை உண்டு. ஆனால் வேதத்தை மறுக்க எந்த உரிமையும் யாருக்கும் இல்லை. வேதங்கள் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தம் என்பது மடமை. வேதம் பாரதத்தின் சொத்து. பாரதியர் அனைவருக்குமே அதில் பாத்யதை உண்டு. உரிமை உண்டு. வேதங்கள் அனைத்துமே நல்லொழுக்கங்களை போதிப்பவை. வேதத்தின் அடிப்படையே உலக நன்மைக்கான யாகங்களும், அகிம்சையும் தான். எந்த ஒரு ஜீவராசியையும் துன்புறுத்த வேதம் அனுமதிப்பது இல்லை. யாகங்கள் உலகநன்மைக்காக செய்யப்படுபவை. அந்த யாகங்களில் பற்பல மூலிகைகள் உபயோகிக்கப்படுகின்றன. அவற்றை செடிகளில் இருந்தோ, மரத்தில் இருந்தோ அப்படியே பரிதுவிடக்கூடாது. மூலிகைகளை பறிப்பதற்கும் சில மந்த்ரங்கள் உண்டு.
“ஹே! மூலிகைகளின் ராஜாவே! சோம தேவனே! நான் உலக நன்மைக்காக இச்செடியில் இருந்து பறிக்கும் மூலிகையால் இந்த தவரதிற்கு எந்த பாதிப்பும், துன்பமும் வராமல் பார்த்துக்கொள்” என்பது அந்த மந்த்ரம். ஓரவிவு தாவரத்திற்கும் தீமை இழைக்ககூடாது என்று என்னும் வேத மாதா, எப்படி உயிர் பலியை ஆதரிப்பாள்?
அனைத்து பூஜைகள், யாகங்களின் இறுதியிலும் “ஸ்வஸ்தி: ப்ரஜாப்ய:” என்ற ஒரு பிரார்த்தனை வைக்கைப்படும் அதன் பொருளாவது,
“அரசன் மக்களை நல்வழிக்கு நடத்தவேண்டும்
மக்களும் நியாயமான மார்கத்தில் நடக்கவேண்டும்/
“பசுக்களும்” அந்தணர்களும் என்றுமே குறைவின்றி இருக்கவேண்டும்
உலகம் அனைத்துமே துன்பமே இல்லாமல் இருக்கவேண்டும்//”
பசுக்கள் என்றைக்குமே குறைவில்லாமல் இருக்கவேண்டும் என்று பிரார்த்திக்கும் தர்மம், எவ்வாறு பசுவதையை ஆதரிக்கும்?
வேததின்மீது அவதூறான பிரச்சாரம்:-
-------------------------------------------------------------------------
கடந்த 1000 ஆண்டுகளில் பாரத தேசம் சந்தித்த மோசமான நிகழ்வுகள் அந்நியமத படைஎடுப்புகளும், கட்டாய மத மாற்றங்களும். பாரதத்தை துருக்கி,பாரசீகம், மற்றும் அரபுநாடுகளில் இருந்து படையெடுத்தவர்கள் ஈவு இரக்கமே இல்லாமல் பல லக்ஷம் மக்களை கொன்று குவித்து அவர்களின் பிணக்குவியலின் மீது தங்கள் சிம்மாசனத்தை நிறுவினர். அன்றைய காலகட்டத்தில் மக்களை அவர்கள் கட்டாயமாக அவர்களது மிலேச்ச மதத்திற்கு மாறுமாறு தங்கள் அதிகார பலத்தினால் வற்புறுத்தினர். உயிருக்கு பயந்து சில மக்களும் அதற்கு அடிபணிந்தனர். ஆனால் பெரும்பாலான மக்கள் அழிவில்லாத சனாதன தர்மத்தினின்று நழுவி மிலேச்ச மதத்தை தழுவுவதை விட உயிரை விடுவதே மேல் என எண்ணினார். முதலில் மக்களை தங்கள் பக்கம் இழுக்க அவர்களின் மத நம்பிக்கைகளை அவைகளிடம் பொய்யாக பிரச்சாரம் செய்தால், தானே அவர்கள் நம்வழிக்கு வந்துவிடுவார் என எண்ணி யுகங்களை கடந்து இயமயம்போல் கம்பீரமாய் திகழும் “வேதங்களை” தங்கள் சுயனலதிர்க்காக பொய்ப்பிரச்சாரம் செய்யத் துவங்கினர். அப்பொழுதுதான் “வேதத்தில் மிருகவதை ஆதரிக்கப்டுகிறது. வேதத்தில் பசுவதை ஆதரிக்கபடுகிறது. இந்திரன் பசு மாமிசத்தை உண்டான். பல ரிஷிகள் பசு மாமிசத்தை உண்டனர். அஸ்வமேத யாகத்தில் குதிரைகள் பலியிடப்பட்டன. புருஷமேத யாகத்தில் மனிதபலி இடப்பட்டன” என்னும் நீசத்தனமான, அருவருக்கத்தக்க, கீழ்த்தரமான பிரச்சாரங்களை செய்து மக்களை வேதத்தின் பாதையில் இருந்து திசைதிருப்பினர். உண்மையை உணர்ந்தோர் இந்த சூழ்ச்சியில் சிக்கவில்லை. பாமரமக்கள் என்றைக்குமே பாவம்.. அணைத்து சூழ்ச்சிகளிலும் சிக்குவது அவர்கள்தான். அதனால்தான் வெள்ளையர்களும் தங்கள் மதத்தை திணிக்க முதலில் பாமர மக்களை குறிவைத்தனர். பறங்கியரும் சளைத்தவர் இல்லை. பாலைவனத்தவர் கட்டாயத்தால் மதமாற்றத்தில் ஈடுப்பனர். பறங்கியர் பணத்தை கொடுத்து மதமாற்றத்தில் ஈடுப்பனர். இவரிறுவருக்கும் இதுவே வித்தியாசம். இவ்விருவருமே வேதத்திற்கு எதிராக பற்பல சூழ்சிகளை கையாண்டனர். அதில் ஒன்று தான் வேததின்மீது அவதூறு பரப்புவது. வேதத்தை பற்றி ஆரம்பித்து பின் ஏன் மதமாற்றைதப்பற்றி பேசி பேச்சை திசை திருப்புக்ரீர் என்கிறீர?
மதமாற்றதிற்காகவே வேதங்களின் மீது அவதூறு பரப்பினர் என்று கூற விழைகிறேன்.
மேலை நாட்டோரும், வேத-விரோதிகளும் வேதத்தில் இருந்து தங்கள் அரைகுறை சம்ஸ்க்ருத புலமையால் தவறாக மொழிபெயர்கப்பட்ட மந்தரங்களின் உண்மையான பொருளையும், வேதத்தில் மிருகவதை இல்லை என்பதையும், குறிப்பாக வேதத்தில் பசுமாமிசம் பற்றி இல்லவே இல்லை என்பதையும் இனிவரும் தொடர் பாகங்களில் பாப்போம்.

ஆன்மீகம் என்பது பூரண சுதந்திரம் ஆகும்.

ஆன்மீகம் என்பது பூரண சுதந்திரம் ஆகும்.
------------------------------------------------
ஆன்மீகம் என்றாலே பலருக்கும் எதோ பிரமை உண்டு. ருத்ராக்ஷம் அணிவது, திருநீறு பூசுவது, ஆலயம் தொழுவது, விரதம் இருப்பது.................. போன்றவையே ஆன்மிகம் என்று தவறாக கருதி, இருக்கும் அந்த உயர்ந்த உண்மையை அறியாமலேயே பாவம் அனைவரும் செத்தும் போகிறார்கள். இன்றைய சூழலில் ஆன்மிகம் என்பது இதுதான் என தெள்ளதெளிவாக கூறும் ஆற்றல் மிக்கவர்கள் குறைவாகவே உள்ளனர். பணத்திற்கும் பெயருக்கும் புகழுக்கும் இச்சைபூண்டு ஆன்மீகத்தை தவறாக பருப்புபவர்களாகவே அணைத்து நிறுவனர்களும் உள்ளனர்.
ஆன்மிகம் என்றால் எதோ தலையில் கொம்பு முளைத்து, காட்டிலும் மேட்டிலும் மலையிலும் நதிக்கரையிலும் பயித்தியமாய் திரிவது அன்று.
நாம்மை நம் சகஜமான அமைதி நிலைக்கு திருப்பி, நம் வாழ்வை "இயல்பாக" வாழச்செயவதே ஆன்மிகம் ஆகும். ஆன்மிகம் என்றால் "தன்னை அறியும்'' கலையாகும். "நான் யார்?" என்று நம்மை உணரச்செயவதே ஆன்மிகம். நம்மை எதற்கும் கட்டுப்படாத பூரண சுதந்திரர்கலாக வாழும் தயிரியத்தையும், பக்குவத்தையும் தருவதே ஆன்மீகம் ஆகும்.
அனைத்தையும் விட்டுவிடு, உலகத்தை உதறிவிடு, காவி பூண்டுவிடு, சந்நியாசி ஆகிவிடு, பயித்தியமாய் அலைந்துவிடு என்று எந்த "ஆண்மீகவா(வியா)தியாவது" கூறினால் தயிரியமாய் கூறுங்கள் அவர்களுக்கு ஆன்மிகம் என்றால் என்னவென்று இம்மியும் தெரியாது என்று.
உலகிற்கு பயந்து ஓடி மறைவது ஆன்மிகம் அன்று. வானமே இடிந்து உங்கள் தலையின்மீது விழுந்தாலும், தயிரியமாய் அதை எதிகொள்வதே ஆன்மிகம்.
எதற்கும் அஞ்சாமல், தர்மத்தில் பாதையில் வீறுநடைஇட்டு வாழ்வை வாழ்வதே ஆன்மிகம்.
மரணமே எதிரில் நின்றாலும் துளியும் அச்சம் இல்லாமல் இருப்பதே ஆன்மிகம்.
மூச்சை நிறுத்துவதோ, குண்டலினியை எழுப்புவதோ, வாசியை உயர்த்துவதோ, அட்டமாசித்திகளை அடைவதோ, சமாதி என்ற பெயரில் தற்கொலை செய்வதோ,................. வேறு எதுவுமே ஆன்மீகத்தின் முடிவு அன்று. மாறாக எதற்கும் அடிமையாய் இல்லாமல் பூரண சுதந்திரறாய், எதற்கும் அஞ்சாமல், மனதின் எழுச்சிக்கு சிறிதும் இடம்கொடாமல், அமைதியாய் வாழ்வதே ஆன்மிகம்.
ஆன்மீகத்தில் முழுமையை எய்தியவன் எந்த செயல் செய்ய நேர்ந்தாலும், அச்செயலில் சிறிதும் விருப்போ வெறுப்போ இல்லாமல் இருப்பான்.
யாரிடமும் நட்போ பகைமையோ பாராட்டாமல் இருப்பான்,
நன்மை தீமை எனும் இரட்டையின்றும் விடுதளையுற்று இருப்பான்.
சொல்லாலும், எழுத்தாலும் விவரிக்க முடியா அவன் நிலையை அவனைப்போன்றோரே அறிவர்

உலகில் நாம் பிறந்தது நம்மை நாம் திருத்திக்கொள்ளவே. உலகம் திருந்துவது நம் வசம் இல்லை

உலகை திருத்த நினைக்கும் கடமை வீரர்களே!! இது உங்களுக்கு.
--------------------------------------
உலகத்தை முற்றிலும் திருத்திவிடுகிறேன் பார். என்று வீறுகொண்டு எழுந்த அணைத்து மகநீயர்களுக்கும் கிடைத்த கொடை ஒன்றுதான். “தோல்வி”.
துவாபரயுகத்து அயோத்தியாண்ட பகவான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி துவங்கி இன்று உங்களவரை உலகை சீர்திருத்தம் செய்ய புறப்பட்டவர்கள் அனைவருக்கும் மிஞ்சியது ஒன்றுதான். “விரக்தி”.
ஏன்?
உலகத்தின் போக்கை மற்ற எந்த கொம்பனுக்கும் ஆற்றல் இல்லை.
அது நீங்கள் கூறும் அவதாரங்களாக இருந்தாலும் சரி. இறை குமாரர்களாக இருந்தாலும் சரி. இறை தூதர்களாக இருந்தாலும் சரி. உலகை திருத்த நினைத்தால் யாராயிருந்தாலும் சரி, மிஞ்சுவது “ஏமாற்றம் தான்”.
பூமியில் தீயவர்களின் எண்ணிக்கை பெருகியதால், பூமாதேவி பசுவின் வடிவம் கொண்டு பிரம்மாவிடம் முறையிட்டாலாம். பிரம்மாவும், தேவர்களும், பூமாதாவும் திருமாலிடம் சரணடைய, திருமால் பூமியின் பாரத்தை குறைக்க ஸ்ரீகிருஷ்ணாவதாரம் கொண்டாராம். உலகின் பெரும் மக்கட்தொகை பரத போரில் அழிந்தும், தீமை அழிந்துவிட்டதா என்ன? தர்மம் நிலைத்துவிட்டதா என்ன?
கடவுளாம் கிருஷ்ணரின் உறவினர் எல்லாம், மதுவின் போதையில் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு வம்சமே அடியோடு அழிந்தது.
நீங்கள் கூறும் தெய்வங்களாலும் உலகத்தின் போக்கை மாற்ற இயலாது.
மக்கள் ஒருவருக்கொருவர் சமாதானம் இல்லாமல் இருந்ததால், உலகில் சமாதானத்தை நிலைநாட்ட இறைவனால் உலகிற்கு அனுப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கும் உலகை சீர்செய்யும் வெற்றி கிட்டவில்லையே. எவ்வளவுதான் அமைதியாய் இருங்கள் என்று தேவகுமாரன் கூறினாலும் யாரும் கேட்கவில்லையே. இறுதியில் அவரையும் சிலுவயில்தானே அறைந்தனர்.
மக்கள் மூட நம்பிக்கையிலும், மூர்கத்தனதிலும் அடிமையானதால் அவர்களை சீர்திருத்த இறை தூதர் மூகம்மது நபி வந்தாராம். அன்பின் மார்க்கத்தை தோற்றுவித்தார். ஆனால் அதன் இன்றைய நிலை? எங்குபார்த்தாலும் அன்பின் பெயரில் வன்முறை. மார்க்கம் உருவானதோ அன்பின் பெயரில். அனால் உலகின் போக்கு அதை எப்படி மாற்றிவிட்டது?
நீங்கள் கூறும் இறைதூதர்களும் உலகை சீர்திருத்துவதில் தோல்வியையே கண்டனர்.
சுவாமி விவேகானதர் தனது இறுதிநாட்களில் கூறுகிறார், “உலகில் இத்தனை சேவை செய்தபிறகே நான் புரிந்துகொண்டேன், உலகம் நாயில் வாலைப்போல என்று. நாயின் வாலையும் நிமிர்த்த முடியாது. உலகையும் திருத்த முடியாது” என்று.
உலகில் நாம் பிறந்தது நம்மை நாம் திருத்திக்கொள்ளவே. உலகம் திருந்துவது நம் வசம் இல்லை. ஆனால் நாம் திருந்துவதே நம் கையில் உள்ளது. மற்றவரின் முதுகில் உள்ள அழுக்க சுத்தம் செவது இருக்கட்டும். நம் முதிகிலேயே வண்டி அழுக்கு. இதில் என்ன மற்றவரை திருத்துவது. முதலில் நாம் திருந்துவோம். பிறகு உலகை திருத்த யோசிப்போம்,.

வாஸ்து பார்ப்பது உண்மையா? அதன் நோக்கம் என்ன?

வாஸ்து பார்ப்பது உண்மையா?
அதன் நோக்கம் என்ன?
வாஸ்து என்பது நம் முன்னோர்கள் தங்கள் அறிவியல் நுண்ணறிவால் கண்டுபிடித்த ஒரு கட்டுமான சாஸ்திரம்.
ஆனான் தற்போது வஸ்து பணம் பொருட்டு பலவிதமாக திரித்தும்,பொய்யாகவும் பிரச்சாரம் செயப்படுகிறது.
எப்போது வாஸ்து பார்ப்பார்கள்?
பொதுவாக பண்டைய காலங்களில் புதிதாக ஒரு ஊர் நிர்மாணித்தால் அதற்க்கு வாஸ்து பார்பார்கள்.
உதாரணமாக வடகிழக்கு சனி மூளை எனப்படும் இடத்தில் திசையில் பொதுவாக நீரோட்டம் அதிகம் இருக்கும் ஆதலால் அங்கு குளம்,ஏறி போன்ற நீர்நிலைகளை அமைப்பர்.சனிமூலை தாழ்வான பகுதி.ஆதால் அங்கு நீர் தேங்கும்.அதற்க்கு நேர் எதிரான திசை தென்மேர்க்காகும்.அது மேடான பகுதி.ஆதலால் மழை காலங்களில் அங்கு நீர் தேங்க வாய்ப்புகள் குறைவாதலால் அத்திசையில்தான் உழவு செய்வர்.
ஆக வாஸ்து என்பது மிக முக்கியமாக ஊர் நிர்மாணத்திற்காக இயற்றப்பட்ட அறிவியல் கட்டுமான நூல்.
வீடு கட்டும்போது வஸ்து பார்ப்பது எதற்கு?
முன்கூரினார்போல தாழ்வான பகுதுயாதளால் வடகிழக்கில் நீர்நிலைகள் இருக்குவேண்டும்.
தென்மேற்கு திசை வாயு திசை எனப்படும்.நம் நாட்டு பூகோள அமைப்பாவது தென்மேற்கில் இருந்து காற்று வீசும் நமக்கு பருவமழையும் தென்மேற்கு பருவமழை தான்.ஆகையால் காற்று பலமாயுள்ள இடத்தில் சமையல் அரை இருக்ககூடாது.
அதற்க்கு நேரெதிர் திசை தென்கிழக்கு திசை அக்னிமூலை எனப்படும்.காற்று குறைவாக இருக்கும் அவ்விடம் நெருப்பு எரியூட்ட ஏற்ற இடம்.
அது போன்று தான் வீடுகளுக்கு வஸ்து பார்க்கும் முறை துவங்கியது.
எங்கு வாஸ்து பார்க்க அவசியம் இல்லை?
1000 வாசல்கள் உள்ள ஊரில் வாஸ்து பார்க்க வேண்டாம் என்றும்,சூரிய கிரணங்கள் நேரடியாக வீட்டில் விழும் பட்சத்தில் அந்த வீட்டில் வாஸ்து தோஷம் அண்டாது என்றும் தான் வாஸ்து சாத்திரம் சொல்கிறது.அதை யாரும் சொல்லக்காணோம்.
தயவுசெய்து யாரும் வஸ்துக்கள்,வச்துமீன்,வச்துபரவை,வச்துபோம்மை,வஸ்துசெடி ...........................................................................................................................................,.....
போன்றவற்றை வங்கி ஏமாறவேண்டாம்.
நம் வாழ்கையை இறைவன் நன்றாகத்தான் தீர்மானம் செய்து வைத்துள்ளான்.அவன் இயக்கத்தின் படி நடந்து வாழ்வை சிறப்பாக வாழ்வோம்.
நிம்மதி வாஸ்துவிலோ,ராசிகளிலோ,ராசிக்கல் மோதிரத்திலோ இல்லை.நிம்மதி நம்மிடம் தான் உள்ளது.

மூன்றாம் பிறை

வளர்பிறையிலேயே மூன்றாம் பிறையை தெய்வீகமான பிறை என்றும் சொல்லலாம்.
வளர்பிறையிலேயே மூன்றாம் பிறையை தெய்வீகமான பிறை என்றும் சொல்லலாம். இத்தாய் பிறை சூடிய பெருமானே என்று நாயன்மார்கள் பாடுகிறார்கள். இந்த மூன்றாம் பிறையைத்தான் சிவன் தன் முடி மீது அணிந்திருக்கிறார். காமாட்சி அம்மனைப் பார்த்தாலும் அந்த மூன்றாம் பிறைதான்.
இந்த மூன்றாம் பிறைக்கு என்ன விசேஷம் என்றால், அமாவாசை முடிந்து வெளிப்படக்கூடிய பிறைதான் மூன்றாம் பிறை. ஏனென்றால், அமாவாசை அன்றும், அதற்கு மறுநாளும் சந்திரன் தெரியாது. அதற்கு மறுநாள்தான் சந்திரன் மிளிரும். ஒரு கோடு போல ஒளிக்கீற்றாக வரும். அதனை ஏதாவது ஒரு காட்டில் இருந்தோ, ஒரு கிராமத்தில் இருந்தோ, மின் விளக்கு‌க‌ள் இல்லாத இடத்தில் இருந்து அடிவானத்தில் தோன்றும் போது அதன் பிரகாசத்தைப் பார்த்தால், அது உங்களுக்குள் ஏதோ ஒன்றைத் தூண்டும். முழு நிலவு எனு‌ம் பெளர்ணமி நிலவு தூண்டாத சில விஷயங்களை இந்த மூன்றாம் பிறை நிலவு நமக்குத் தூண்டும்.
அனைத்து மதங்களிலுமே மூன்றாம் பிறை வழிபாடுதான் தெய்வீகமான வழிபாடாக இருக்கிறது. இஸ்லாம் மத‌த்‌தி‌லிரு‌ந்து, கிறித்தவம், ஜைன‌ம், இந்து மத‌ம் என எல்லா மதத்திலும் மூன்றாம் பிறை என்பது தெய்வீக அம்சமாக உள்ளது. அந்தப் பிறையை கண்டு வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையுடன் மூன்றாம் பிறை வரும்போது, சோமவாரம் என்பார்கள் திங்கட்கிழமையை.
அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும். அதனால் மூன்றாம் பிறை என்பது ஒரு தெய்வீகமான பிறை. அதனைப் பார்த்தாலே மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கக் கூடியது.

துளசியை எந்த நாட்களில் பறிக்கக்கூடாது?



துளசியை எந்த நாட்களில் பறிக்கக்கூடாது?
வில்வ இலையை பறிப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இறைவனுக்கு அர்ச்சிக்கப்படும் சில வகை பொருட்களை, அவற்றை சேகரித்த நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்கள் வரை வைத்திருந்து பின்னர் பயன்படுத்தலாம்.
அந்தவகையில் வில்வ இலையை பறித்து 6 மாதங்கள் வரையிலும், வெண்துளசியை பறித்து ஓராண்டு வரையிலும், தாமரையை பறித்து 7 நாள் வரையிலும், அரளியை பறித்து 3 நாட்கள் வரையிலும் வைத்திருந்து பூஜைக்கு பயன்படுத்தலாம்.
இறைவனுக்காக துளசியை பறிக்கும்போது சில விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
திருவோண நட்சத்திரம், சப்தமி, அஷ்டமி, துவாதசி, சதுர்தசி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, மாலை வேளை, இரவு நேரம், ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பூஜைக்காக துளசி பறிக்கலாம்.
மேலும், இறைவனுக்கு அர்ச்சனை செய்ய பூக்களையும், இலைகளையும் பறிக்கும்போது பேசிக் கொண்டோ, சிரித்துக் கொண்டோ பறிக்கக் கூடாது. அதுபோல கைகளை கீழே தொங்க விட்டவாறும் பறிக்கக் கூடாது.
அத்துடன் கையால் உடம்பையும், உடைகளையும் தொட்டவாறும், கொம்புள்ள கிளைகளை முறித்தலும் அப்போது செய்யக்கூடாது.
நம் மனதில் இறைவனை முழுவதுமாக நிறுத்தி, அவன் நாமத்தை உச்சரித்தவாறே பறிக்க வேண்டும்.

Wednesday, 27 April 2016

எளிய வாஸ்து பரிகாரங்கள்

எளிய வாஸ்து பரிகாரங்கள்
1. கணபதி ஹோமம் பண்ணுங்கள்.
2. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
3. மேற்கு அல்லது தெற்கு தெருக்குத்து இருந்தால் பிள்ளையார் சிலை வையுங்கள்.
4. துளசி செடி வையுங்கள்.
5. தினமும் மறக்காமல் விளக்கேற்றுங்கள்.
6. குறைபாடுகள் உள்ள இடங்களில் கல் உப்பை வையுங்கள்.
7. ஈசான்யம் கெட்டிருந்தால் நித்ய மல்லி செடி வையுங்கள்.
8. வாசல் சரி இல்லையென்றால் கண்ணாடி வையுங்கள்.
9. 'ஓம் நமோ வாஸ்து தேவதையே நமஹ' என்று 27 முறை அல்லது 108 முறை சொல்லுங்கள்.
10. 'ஓம்' ஒலி, மற்றும் கந்த சஷ்டி கவசம், லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம், காயத்ரி ஜெபம் இவற்றை வீடு முழுவதும் ஒலிக்க விடவும்.
11. எளிய வாஸ்துப் பொருட்களை வாங்கி வைக்கலாம்.
12. செப்பு தகடுகளை குறைபாடுகள் உள்ள இடங்களில் பதிக்கலாம்.
13. வாஸ்து மீன் வளர்க்கலாம்.
14. தினமும் நவக்ரக வழிபாடு நலம் தரும்.
15. தினமும் தியானம் செய்யுங்கள்.

Tuesday, 26 April 2016

வலிய பிரச்சனைகளை தீர்க்க எளிய தாந்த்ரீக பரிகாரங்கள்

வலிய பிரச்சனைகளை தீர்க்க எளிய தாந்த்ரீக பரிகாரங்கள்



(1) நீரிழிவு, ஞாபக மறதி, ஆஸ்துமா, மூச்சிறைப்பு போன்றவை ஜாதகத்தில் குரு கிரகத்தினால் ஏற்படுபவை ஆகும். இதற்கு வாழை மரத்தின் வேரை வியாழனன்று காலை 6-7 மணியளவில் எடுத்து மஞ்சள் பூசி, பின்பு மஞ்சள் நூலில் கட்டி கழுத்திலோ அல்லது கை மணிக்கட்டிலோ அணிந்து கொள்ள மேற்சொன்ன நோய்கள் விலகும். (வேர் எடுக்கும் முறை பல பதிவுகளில் கொடுத்துள்ளது-மந்திரம் எதுவும் தேவை இல்லை)

(2) கர்ம வினைகளால் பாதிப்பிற்க்கு உள்ளானோர், சனி, ராகுவினால் தொல்லைகளுக்கு உள்ளானோர், ஏழரை சனி மற்றும் ராகு,சனி திசை நடப்பில் உள்ளோர்-ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் நாள் முழுதும் தன்னுடன் யூக்கலிப்டஸ் மர இலையை தன்னுடன் வைத்திருக்க பாதிப்புகள் அகலும். ஒவ்வொரு சனியான்றும் வைத்திருக்கலாம்.

(3) எவ்வளவு பணம் வந்தும் சேமிக்க முடியவில்லை என கவலையில் உள்ளோர் தங்களின் உடைகள் வைக்கும் பீரோ மற்றும் பணம் வைக்கும் இடங்களில் கரு நீல துணியை விரிப்பாக உபயோகித்து வர பண விரயம் நிற்கும். சனிக்கிழமை தொடுங்குவது சிறப்பு.

(4) பண பிரச்சனைகளால் மிகுந்த அவதிக்கு ஆளானோர், ஒரு வெள்ளியன்று யாரும் பார்க்காத நேரத்தில் வேப்ப மரம் ஒன்றில் (மரத்திடம் மானசீக மன்னிப்பு கோரி) சிறிய துளையிட்டு அதில் சிறிய சதுர வடிவ வெள்ளியை வைத்து பின்பு மூடி விடவும். முன்னேற்றம் பின்பு கண் கூடாக தெரியும்.

குரு பலம் சேர, திருஷ்டி கழிய, கல்வியில் தேர்ச்சி பெற தாந்த்ரீக பரிகாரம்

குரு பலம் சேர, திருஷ்டி கழிய, கல்வியில் தேர்ச்சி பெற தாந்த்ரீக பரிகாரம்


கோட்சார குரு அல்லது ஜாதகத்தில் குரு பலம் அற்று இருந்தாலோ, கல்வியில் நாட்டமின்மை, கண் திருஷ்டியால் அவதிப்.படுவோர், வியாழனன்று பப்பாளி மரத்தின் சிறு வேர் மற்றும் பழத்தின் விதைகள் 3 சேர்த்து சிகப்பு துணியில் கட்டி கழுத்தில் அணிய மேற்கண்ட கஷ்டங்கள் நீங்கி சுகம் பெறுவதை அனுபவத்தில் காணலாம். மேலும் குறு பலம் அற்று உள்ளோர் தினசரி பப்பாளி பழம் சாப்பிட்டு வர குருவினால் ஏற்படும் குறைகளை நிறைகள் ஆக்கலாம்

ஏழரை சனியின் தாக்கம் குறைய தாந்த்ரீக பரிகாரம்

ஏழரை சனியின் தாக்கம் குறைய தாந்த்ரீக பரிகாரம்


ஏற்கனவே கூறியுள்ளபடி நாம் அன்றாடம் உபயோகிக்கும் வீட்டு பொருட்களின் மூலமே நம் பல் வேறு பிரச்சனைகளை, கிரக தாக்கங்களை அடியோடு துரத்தலாம். அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்று தான் இஞ்சி. சனி, சுக்கிரன் மற்றும் சந்திரனின் குறைபாடு இருப்பின் அதை இஞ்சியின் துணை கொண்டு நீக்கலாம்.
தினமும் இஞ்சியை சாறெடுத்து அதோடு சிறிது எலுமிச்சை பிழிந்து நீருடன் சாறாக ( சர்க்கரை அல்லது உப்பு சேர்ப்பது அவரவர் விருப்பம்) அருந்தி வர, ஏழரை சனி மற்றும் பிற சனியின் தாக்கங்கள் உடளவில் குறைய ஆரம்பிக்கும். மேலும் தாயுடனான உறவில் பிரச்னை, சுகக்கேடு, பெண்களால் பிரச்ச னை உள்ளோரும் மேற்கண்ட முறையில்செய்து வர நல்ல மாற்றம் உண்டாகும். இஞ்சியை துவையலாக உண்டு வந்தாலும் பயன் உண்டு.அப்படி தொடர்ந்து உபயோகிக்கும் பொழுது 45 நாட்களுக்கு ஒரு முறை 10 நாள் நிறுத்தி விட்டு பின் தொடரவும்.எலும்பு குறைபாடு உள்ளோரும் மேற்கண்ட இஞ்சியை உண்டு வர நலம் பிறக்கும். மேலும் தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு பூண்டு பல் சாப்பிட்டு வர செவ்வாயினால் ஏற்படும் அணைத்து கஷ்டங்களும் நீங்கும்.

Sunday, 24 April 2016

குன்றி மணியின் தாந்த்ரீக பலன்கள்


கருப்பு சேர்ந்த சிகப்பு குன்றிமணி : எளிதில் விளையக்கூடியது. எனினும் அபார சக்தி கொண்டது. வீட்டில் வைத்தோ அலுவலகத்தில் வைத்தோ தாயத்து கொண்டு அணிந்தோ உபயோகிக்கலாம் பண பிரச்சனைகளை போக்கும்.
கருப்பு குன்றிமணி : ராஜஸ்தான் மாநில காடுகளில் விளையும் இவை மிகுந்த சக்தி கொண்டவை. இதை வைத்திருப்போறுக்கு ஏவல் மற்றும் செய்வினை பாதிப்புகள் ஏற்படாது. காளியின் ரூபமாக கருதபடுபவை.பல தாந்த்ரீக பயன்பாட்டிற்கு உபயோகமானவை. தாயத்தில் அணிந்தோ அல்லது பாக்கெட்டில் வைத்தோ இருந்தாலே மிகுந்த பயன் தரும்.கிடைப்பது அரிது.
வெள்ளை குன்றிமணி : அம்பாள் ரூபமாக கருதப்படுபவை. மிகுந்த பண கஷ்டம், தொடர்ந்த பண சரிவு, வியாபாரத்தில் நஷ்டம்,மன அமைதியின்மை, படிப்பில் நாட்டமின்மை போன்றவை இருப்பின் இதன் துணை கொண்டு ஜெயிக்கலாம். அபார சக்தி கொண்டவை.
சுத்த சிகப்பு குன்றி மணி : மனிதர்களின் துர் அதிர்ஷ்டத்தை போக்க வல்லவை. தொடர்ந்து எதிர் மறையாக செயல்படும் மற்றும் சிந்திக்கும் மனிதர்களின் மனதை மாற்ற கூடியவை.
மொத்தம் பன்னிரண்டு விதமான வண்ணங்களில் வளரும் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான தாந்த்ரீக பயன்பாட்டிற்கு ஏற்றவை. மற்றும் மனிதர்களின் பல் வேறு பிரச்சனைகளை தீர்க்க வல்லவை.