Friday, 26 April 2024

வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?

வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு வீடு அல்லது ஒரு சொத்தினை நீங்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகிறீர்கள் என்றால் அந்த உரிமையாளரிடம் நீங்கள் சட்டப்படி வாடகை ஒப்பந்தம் மேற்கொள்வது அவசியமாகும். இந்த வாடகை ஒப்பந்தம் இருதரப்பிலும் உள்ள அனைத்து நிபந்தனைகளும் இடம்பெற்ற ஒரு சட்டப்பூர்வ ஆவணமாக கருதப்படுகிறது. ரியல் எஸ்டேட்டில் பணத்தைக் கொட்டும் NRI-கள்..பின்னணி என்ன? பொதுவாக வாடகை ஒப்பந்தங்கள் நான்கு வகையில் போடப்படுகின்றன. 1. வணிக நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் வாடகை ஒப்பந்தம் , 2. குடியிருப்புகள் 3.தனிப்பட்ட ஒரு அறை , 4. ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஓரிடத்தை பகிர்ந்து பயன்படுத்துவது. இந்த நான்கு வகைகளில் வாடகை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால் பொதுவாக இந்த மாதிரியான வாடகை ஒப்பந்தங்களின் காலம் என்பது 11 மாதங்கள் மட்டுமே. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 17 பதிவு சட்டம் 1918-இன் படி வாடகை ஒப்பந்தத்தின் காலம் என்பது ஓராண்டுக்கு கீழ் இருந்தால் அதனை பதிவு செய்ய தேவையில்லை. எனவே தான் பொதுவாக இது போன்ற வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதங்கள் மற்றும் அதற்கு குறைவான காலத்திற்கு மட்டுமே போடப்படுகின்றன. இதனை பதிவு செய்ய இரு தரப்பினரும் அலைய வேண்டிய தேவை இருக்காது. குறிப்பாக வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கான பதிவு கட்டணம் நாம் செலவிட வேண்டிய தேவையில்லை. நீண்ட கால அடிப்படையில் நீங்கள் ஒப்பந்தம் போடும்போது அதற்கான பதிவு கட்டணம் அதிகமாக இருக்கும். இதுபோல 11 மாத காலத்திற்கு மட்டுமே ஒப்பந்தங்களை போடும்போது உரிமையாளர்களுக்கு அது சாதகமாக உள்ளது. குறிப்பாக வாடகை உயர்வு மற்றும் வாடகை காலத்தை முடிவுக்கு கொண்டு வருவது ஆகியவற்றுக்கான சுதந்திரம் உரிமையாளர்களுக்கு கிடைக்கிறது. மறுபுறம் வாடகைக்கு குடியிருப்பவர்கள் முத்திரை வரி அல்லது பதிவு செலவுகளை செய்ய வேண்டிய தேவை இருக்காது.
 ஆனால் நீண்ட கால அடிப்படையில் ஒரு இடத்தை வாடகைக்கு பயன்படுத்தப் போகிறீர்கள் எனில் ஒப்பந்தம் செய்து அதனை முறையாக பதிவு செய்வது இரு தரப்புக்குமே நல்லது என்கின்றனர் வழக்கறிஞர்கள். இந்தியாவில் வாடகை ஒப்பந்தம் உரிமையாளருக்கும், வாடகைக்கு வருபவருக்கும் சட்ட ரீதியான பாதுகாப்பை தரக் கூடியது. ஒப்பந்தமானது வாடகைக்கு குடியிருப்பவர் மற்றும் உரிமையாளர் ஆகிய இரு தரப்பும் பரஸ்பரம் ஒப்புக் கொண்ட விஷயங்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர். வாடகைக்கு குடியிருப்பவர் வீட்டின் மீது உரிமை கொண்டாடாமல் இருக்க, வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வது முக்கியம். அதே போல வீட்டை காலி செய்வது பற்றி எத்தனை நாட்களுக்கு முன் கூற வேண்டும் என்பது கட்டாயம் இடம்பெற வேண்டும் என்கின்றனர் வழக்கறிஞர்கள். .

நிர்வாணமாக ஏன் குளிக்கக்கூடாது?



நிர்வாணமாக ஏன் குளிக்கக்கூடாது? ஜோதிடம் கூறும் காரணம் இதோ!
நிர்வாணமாக ஏன் குளிக்கக்கூடாது? ஜோதிடம் கூறும் காரணம் இதோ!
குளிக்கும்போது சில விதிகளை கடைபிடிப்பது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது.




ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காலை கண் முழிப்பதில் இருந்து இரவில் படுக்கைக்கு செல்லும் வரை செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் பல உள்ளன. சமைப்பது, சாப்பிடுவது, வேலைக்கு செல்வது, குளிப்பது, நகம் வெட்டுவது என அனைத்து வேலைகளும் முக்கியம். நம் வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சில நடைமுறைகள் உள்ளது. அதை நமது முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றனர்.





நமது முன்னோர்களும் சரி… நமது பெற்றோர்களும் சரி.. காலை எழுந்தவுடன் குளிக்க வேண்டும் என கூறுவார்கள். அதுவும், இன்னும் சில வீடுகளில் சமைப்பதற்கு முன் குளிக்க வேண்டும் என்ற விதியை கடைபிடிப்பார்கள். அது நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், குளிப்பதற்கு சில விதிகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆமாம்… உண்மைதான் குளிப்பதற்கு என வேத சாஸ்த்திரத்தில் சில முறை இருப்பதாக கூறப்படுகிறது. குளிக்கும் போது தவறுதலாக நாம் செய்யும் சில விஷயங்கள் நமக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.


இந்து மத சாஸ்திரங்களின்படி ஒருவர் குளிக்கும் போது நிர்வாணமாக குளிக்கக் கூடாது என கூறப்படுகிறதாம். ஆனால், நம்மில் பலர் குளிக்கும் போது ஆடைகள் எதுவும் அணியாமல் தான் குளிப்போம். நிர்வாணமாக குளிப்பதால் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும் என கூறப்படுகிறது.


காலம் காலமாக ஆடை அணியாமல் குளித்தால் தீய சக்திகள் வீட்டிற்குள் நுழையும் என்ற ஐதீகம் உள்ளது. இதனால், குளிப்பவரின் மனமும், வீடும் பாதிக்கப்படும். எனவே, குளிக்கும் போது உடலில் ஏதாவது ஆடை அணிய வேண்டும் என கூறப்படுகிறது.


இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆடை இல்லாமல் குளித்தால் லட்சுமி தேவி கோபப்படுவாள் என்பதும் ஐதீகம். இதனால், அவர்களின் பொருளாதார நிலை பாதிக்கப்படும். ஆடை என்றால், சுடிதார், சேலை, சட்டை அல்ல. குறைந்த பட்சம் டவலில் போர்த்தியாவது குளிப்பது அவசியம் என அறிவியல் கூறுகிறது.


மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் நிர்வாணமாக குளித்தால், சில சமயங்களில் உங்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. நீங்கள் நிர்வாணமாக குளித்தால் முன்னேர்கள் கோபப்படுவார்கள். இதனால், வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.




நிர்வாணமாக குளிப்பதற்குப் பின்னால் மற்றொரு புராண உண்மை உள்ளது. கோபிகைகள் நீராடும் போது அவர்களின் ஆடைகளை கிருஷ்ணர் மறைத்தார். பிறகு, கோபியர்கள் அவரிடம் கெஞ்சிய பிறகு அவர் ஆடைகளை கொடுத்தார். இதன் அர்த்தம், கிருஷ்ணர் கோபியர்களிடம் ஒருபோதும் நிர்வாணமாக நீராடக்கூடாது என்பதை உணர்த்துவதாக கூறப்படுகிறது.


குளிப்பதற்கு பின்னால் உள்ள மற்றொரு சுவாரஷ்யமான விஷயம் என்ன என்றால், முன்பெல்லாம் கழிப்பறைகள் வீட்டை விட்டு தள்ளி இருக்கும் அல்லது குளிப்பதற்காக மிடுக்காய் வைத்து ஒரு கழிப்பறை வைத்திருப்பார்கள். அப்படி அதற்கு ஏதாவது பூச்சிகள் வந்தால், நம்மால் அப்படியே வெளியில் ஓடி வர முடியாது என்பதால் இதை கூறியுள்ளனர்.


தற்போது எல்லாவீடுகளிலும் அறைக்கு அரை கழிப்பறை உள்ளது. இருப்பினும் சில அவசர சூழ்நிலைகளில் நம்மால் அப்படியே வெளியே வர முடியாது என்பதால் மட்டுமே இது கூறப்படுகிறது.


Thursday, 25 April 2024

வீட்டில் வளர்க்கக் கூடாத மரங்கள்


வீட்டில் வளர்க்கக் கூடாத மரங்கள் என்னென்ன தெரியுமா?
நம் வீட்டில் அழகுக்காக மரம், செடி, கொடிகள் வளர்ப்பது என்பது சாகஜமான விஷயமேயாகும். இருப்பினும் சில மரங்கள் எதிர்மறை ஆற்றலை உருவாக்குவதால் அவற்றை வீட்டில் வைக்கக்கூடாது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட சில மரங்களைப் பற்றித்தான் இந்தப் பதிவில் காண உள்ளோம்.

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் அரசமரம் வைப்பது தீங்கு விளைவிக்கும். இதனால் பணப் பிரச்னை மற்றும் பண விரயம் ஏற்படலாம். வீட்டின் அருகிலே புளியமரம் இருக்கக் கூடாது. அப்படியிருக்கும் இடத்தில் வீடு கட்டுவதைத் தவிர்த்து விடுவது நல்லது. தென்னை மரத்தை வீட்டில் ஒற்றைப்படையில் வைக்கக்கூடாது. தென்னை மரத்தை ஜோடியாகத்தான் வளர்க்க வேண்டும்.

பனைமரம் இருக்கும் வீட்டில் பணப்பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமில்லாமல், தலைக்கு மேல் கடனும் ஏறிக்கொண்டே போகும். இலந்தை மரத்தை ஒருபோதும் வீட்டில் வைக்ககூடாது. இது வீட்டின் அமைதியை சீர்குலைக்கும்.

நாவல் மரத்தை வீட்டில் வளர்க்கக் கூடாது என்று சொல்வதற்குக் காரணம், அது மிகவும் குளிர்ச்சியான தன்மை வாய்ந்த மரம் என்பதால் நச்சு பூச்சுகளை கவர்ந்திழுக்கக் கூடிய தன்மையை உடையது. அதனால் அந்த பூச்சுக்கள் வீட்டிற்குள்ளும் வரும் என்பதால் இவ்வாறு சொல்லப்பட்டது.

அத்தி மரத்தையும் வீட்டில் வளர்க்கக் கூடாது என்று சொல்வதற்குக் காரணம், இது வௌவால்களுக்கு மிகவும் பிடித்த பழம் என்பதால் நிறைய வௌவால்கள் வரும். அதனால் நோய்கள் ஏற்படும் என்பதால் சொல்லப்பட்டது.

முற்கள் இருக்கும் செடிகளை வீட்டில் வளர்க்கக் கூடாது. கள்ளிச்செடி துரதிர்ஷ்டத்தையும், கஷ்டத்தையும் தரும் என்று கூறுகிறார்கள்.


வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகள் இருந்தால் கருவேப்பிலை மரத்தை வளர்க்கலாம். அப்படியில்லையேல் கருவேப்பிலை மரம் வளர்க்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. அப்படி மீறி வளர்த்தால் அந்தப் பிள்ளை நோய்வாய்ப்படும், வாழ்க்கையில் கஷ்டம் ஏற்படும், இல்லற வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படாது என்று கூறுகிறார்கள். உடனே காய்ந்து விடக்கூடிய தாவரங்களையோ செடிகளையோ வீட்டில் வளர்க்கக் கூடாது. உதாரணத்திற்கு காகிதப்பூ எதிர்மறையான சக்திகளை ஈர்க்கக் கூடியது என்று சொல்லப்படுகிறது.


சிவப்பு நிற அரளியை வீட்டில் வைப்பதால் குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு வரும். அதனால் அதை வீட்டில் வைப்பதை தவிர்க்கவும். தாழம்பூ செடி, செண்பக மரம் ஆகியவற்றிலிருந்து வரும் அதிக மணம் நாகங்களை கவரக்கூடியது என்பதால் அதை வீட்டில் வைக்கக் கூடாது என்று கூறுவார்கள். முருங்கை மரத்தை வீட்டின் வாசல் அருகில் வைக்ககூடாது. வீட்டின் பின்புறத்தில் வைப்பதே சிறந்ததாகும்.

அகத்தியர், ‘புனைச்சுருட்டு’ என்னும் நூலில் எந்தெந்த செடிகளை வீட்டில் வைக்கக்கூடாது என்று கூறுகிறார் என்பதைப் பார்க்கலாம். பருத்தி, அகத்தி, பனை, நாவல், அத்தி, எருக்கு, வெள்ளெருக்கு, புளியமரம், கருவேலம், முருங்கை, கல்யாண முருங்கை,கள்ளி, கருவூமத்தை, வில்வம், இலவம், உத்திராட்சம், உதிரவேங்கை ஆகிய 17 மரங்களை வீட்டில் வைக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

நம்முடைய வீடு வாஸ்துப்படி கட்டியிருந்தாலும், சில நேரங்களில் நோய், பணக்கஷ்டம், சண்டை போன்ற பிரச்னைகள் வரக்கூடும். அதற்குக் காரணம் நாம் சில நேரங்களில் விவரம் அறியாமல் இதுபோன்ற வீட்டில் வைக்கக் கூடாத மரம், செடியை வைத்திருப்பதே காரணமாக இருக்கும். எனவே, அதைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் செழிப்பாக வாழலாம்.

 

Wednesday, 24 April 2024

காலணிகள் மற்றும் செருப்புகளை எந்த திசையில் வைக்க வேண்டாம்



தப்பி தவறி கூட இந்த திசையில் காலணிகளை விடாதீர்கள்.. பண கஷ்டம் வருமாம்!
தப்பி தவறி கூட இந்த திசையில் காலணிகளை விடாதீர்கள்.. பண கஷ்டம் வருமாம்!
Footwear Vastu Tips |
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தில், காலணிகள் கழற்றி வைப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. காலணிகள் மற்றும் செருப்புகளை தலைகீழாக வைத்திருப்பது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்குமாம்.



இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. வீடு கட்டுவது முதல் அதன் அலங்காரம் வரை அனைத்திற்கும் வாஸ்து முக்கியம். அதே போல, வீட்டில் காலணி வைப்பது முதல் ஆடை பராமரிப்பு வரை வாஸ்து முக்கியம். செருப்பு, ஷூ போன்றவற்றை தலைகீழாக வைக்கக் கூடாது என்று வீடுகளில் அடிக்கடி பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஏனென்றால் அது அபசகுனமாக கருதப்படுகிறது.


இப்படி செய்வதால் குடும்பங்களில் தகராறுகள் தலைதூக்கும் என்பது ஐதீகம். வாஸ்து சாஸ்திரத்தில் ஷூ மற்றும் செருப்புகளை வீட்டில் வைக்க சில விதிகள் கூறப்பட்டுள்ளது. வீட்டில் ஷூ மற்றும் செருப்புகளை கழற்றும் போதும், வைக்கும்போதும் என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


வடகிழக்கு திசையில் காலணிகள் மற்றும் செருப்புகளை வைக்க வேண்டாம் : நம்மில் பலர் காலணிகளை இஷ்டத்திற்கு எங்காவது கழட்டி வைப்போம். ஆனால், அது நல்லது அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா?. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் காலணிகள் மற்றும் செருப்புகளை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கக்கூடாது என கூறப்படுகிறது. ஏனென்றால், இது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்.


வடக்கு அல்லது கிழக்கு திசையில் ஷூ மற்றும் செருப்புகளை கழற்றினால் அன்னை லக்ஷ்மி கோபப்படுவார் என கூறப்படுகிறது. இது வீட்டின் பொருளாதார நிலையை பலவீனப்படுத்துகிறது. அதுமட்டும் அல்ல, வீட்டில் வறுமையை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை மோசமடையலாம்.


ஷூ மற்றும் செருப்புகளை வைக்க சரியான திசை எது? : வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஷூ மற்றும் செருப்புகளின் அலமாரி எப்போதும் வீட்டில் தெற்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும். வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும்போது, ​​தெற்கு அல்லது மேற்கு திசையில் மட்டுமே காலணிகள் மற்றும் செருப்புகளை கழற்றி வைக்கவும். வீட்டின் பிரதான வாசலில் காலணிகள் மற்றும் செருப்புகளை கழற்றக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


காலணிகளை தலைகீழாக வைக்க வேண்டாம் : வாஸ்து சாஸ்திரங்களின்படி, காலணிகள் மற்றும் செருப்புகளை வீட்டில் ஒருபோதும் தலைகீழாக வைக்கக்கூடாது. இவ்வாறு செய்வதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இது குடும்பத்தின் மகிழ்ச்சியையும் அமைதியையும் சீர்குலைக்கிறது. அதனால் தான் ஷூ, செருப்புகளை தலைகீழாக வைக்கக் கூடாது என கூறப்படுகிறது. இதனால், வீட்டில் வறுமை ஏற்படும்.


Sunday, 21 April 2024

கனவுகளுக்கு என்ன மாதிரியான பலன்கள்


 நாம் எந்தெந்த கனவுகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் நமக்கு கிடைக்கப் போகிறது என்பது குறித்து பார்க்கலாம். மனிதர்கள் கனவில் கண்டால், கட்டிடங்களை கனவில் கண்டால்,பொருட்களை கனவில் கண்டால், பஞ்சபூதங்கள் கனவில் வந்தால், பறவைகள் கனவில் வந்தால், தானியங்கள் கனவில் வந்தால், விலங்குகள் கனவில் வந்தால், கோவில்கள் கனவில் வந்தால் என நிறைய கனவு பலன்கள் உள்ளது. அதில் இப்போது கோயில்களில் இந்த மாதிரியான கனவுகள் வந்தால் என்ன பலன் அது சாதகமாக பாதகமா என்பது குறித்து பார்க்கலாம்.

கோயில்கள் பற்றிய கனவுகள் உங்களுக்கு வந்தால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்று அர்த்தமாம். கோயிலுக்குள் போக முடியாமல் கூட்டத்தில் சிக்கி தவிப்பது போல கனவு கண்டால் எதிர்பாராத பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு அவதிப்பட போகிறீர்கள் என்பது இந்த கனவின் அர்த்தமாம்.

கோயில்களில் தனியாக இருப்பது போல கனவு கண்டால் தொழிலில் தேக்கம் இருக்கிறது அல்லது இருக்கப் போகிறது என்பது அர்த்தமாம். கோயில் நடை திறந்து அதில் நீங்கள் செல்வது போல கனவு கண்டால் நீங்கள் நினைக்கும் காரியம் 100% வெற்றி பெறும் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை உணர்த்துமாம்.

கோயில் கருவறைக்கு சென்று கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு லாபம் கிட்டும் பணம் பொருள் செல்வம் செழிக்கும் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிட்டும் என்பது அர்த்தமாம்.

கடவுளை கனவில் கண்டால் பிரச்சனைகள் உங்களை விட்டு அகலும் என்று அர்த்தமாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமண யோகம் கைகூடும். திருமண தடைகள் அனைத்தும் நீங்கும். உங்களை தோற்கடிக்க யாராலும் முடியாது. கடவுளை நீங்கள் கனவில் கண்டால் இத்தனை பலன்களும் உங்களை வந்து சேருமாம்.

காளி தீபம் உங்கள் கனவில் கண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்கும் அல்லது சண்டை சச்சரவுகள் நிகழ வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது அர்த்தமாம்.

கோபுரத்தை நீங்கள் கனவில் கண்டால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய கொள்கையை கடைப்பிடிக்க போகிறீர்கள் அதன் மூலம் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக போகிறது என்பது அர்த்தமாம். அதேபோல உங்கள் பாவங்களும் நீங்குமாம்.

கோயிலில் பிரசாதம் வாங்குவது போல கனவு கண்டால் உங்களுக்கு சிலரால் பிரச்சனை ஏற்பட போகிறது என்பது அர்த்தமாம்.

கோயில் தெப்பக்குளம் உங்கள் கனவில் கண்டால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். நீங்கள் கடல் தாண்டி போகப் போகிறார்கள் என்ற அர்த்தம்.

கடவுளிடம் பேசுவது போல நீங்கள் கனவு கண்டால் மிகவும் சுபம் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அகலும் இறைவன் உங்கள் வீட்டிலேயே இருக்கிறார் என்று அர்த்தமாம்.

கோயில் தேர் கனவில் கண்டால் உங்களைத் தேடி இறைவன் வருகிறான் என்று அர்த்தமாம் நீங்கள் நினைத்தது கை கூடும். வெகு சீக்கிரத்தில் எத்தனை தடைகள் வந்தாலும் இறைவன் உங்களுடன் இருப்பார்.

Friday, 19 April 2024

அரைஞாண்கயிறு அணிந்து கொள்வது ஏன் தெரியுமா?


அரைஞாண்கயிறு அணிந்து கொள்வது ஏன் தெரியுமா? எந்த கலர் கயிறை அணியலாம்?
 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரைஞாண்கயிறு கட்டுவது ஏன் என்பது தெரியுமா? இதில் அடிவயிற்று பகுதிக்கான அனைத்து நலன்களும் இருக்கிறது.



குழந்தை பிறந்ததும் தீட்டு கழித்தவுடன் வெள்ளியிலோ அல்லது கருப்பு, சிகப்பு கயிறிலோ தாயத்தை கோர்த்து அரைஞாண்கயிறு கட்டும் வழக்கம் இருக்கிறது.



What is the use of Araignankayiru which is tied around hip
இது குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களும் கடைசி வரை கட்டிக் கொள்கிறார்கள். இதற்கு பல்வேறு மருத்துவக் காரணங்கள் உள்ளன. ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரும் ரத்தக் குழாய்களும் விதைப்பையிலிருந்து வரக் கூடிய ரத்தக் குழாய்களும் ஒன்று சேரும் இடமே அடிவயிறுதான்.


அதனால்தான் அரைஞாண்கயிறு கட்டுகிறார்கள். இப்படி கட்டுவதால் குடல் இறங்காமல் இருக்கும். முக்கியமாக விதைப்பையை பாதுகாக்கத்தான் இது கட்டப்படுகிறது. அரைஞாண்கயிறு கட்டுவதால் அடிவயிற்றுப்பகுதிகளுக்கு கீழ் இருக்கும் உறுப்புகளுக்கு ரத்தம் செல்கிறது. வெள்ளியில் கூட அரைஞாண்கயிறு கட்டலாம்.

அது கட்டுவதால் உடல் சூட்டை தணிக்கும். பெண்களுக்கு அரைஞாண்கயிறு தேவையில்லாத ஒன்று என்கிறார்கள். அதாவது வயிறு பகுதி பெரிதாக ஆகாமல் இருக்க கட்டிக் கொள்ளலாம். சில பெண்கள் கைகளில் கூட தாயத்தை கட்டிக் கொள்கிறார்கள். குழந்தையின் தொப்புள் கொடியை காய்ந்தவுடன் அதை தாயத்தில் சொருகி, அரைஞாண்கயிறாக கட்டிக் கொள்கிறார்கள்.

ADVERTISEMENT
இதனால் குழந்தையை கெட்ட சக்தி அண்டாது. மருத்துவக் காரணங்கள் இருந்தாலும் அந்த காலத்தில் ஆண்கள் கோவணம் கட்டிக் கொள்ள இந்த கயிறு உதவியாக இருந்தது. அது போல் கிராமப்புறங்களில் நீச்சல் கற்றுத் தர அரைஞாண் கயிற்றில் சேலை கட்டி இறக்கிவிடுவார்கள். பெல்ட் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த காலத்தில் அரை டிரவுசரை கீழே விழாமல் பிடித்துக் கொள்ள இந்த கயிறு உதவியாக இருந்தது.

அது போல் வயல்வெளிகளில் வேலை செய்யும் போது பாம்பு கடித்துவிட்டால் உடல் முழுவதும் விஷம் பரவாமல் இருப்பதை தடுக்க இந்த அரைஞாண் கயிறு தேவைப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு கட்டும் போது குழந்தையின் எடை குறைந்தால் அது இந்த அரைஞாண் கயிறு இளகுவதில் இருந்து தெரியும். கயிறு டைட்டானால் குழந்தையின் உடல் எடை அதிகரித்துள்ளது என தெரியும். இந்த அரைஞாண்கயிறு கண் திருஷ்டியை போக்கவும் பயன்படுகிறது. இது கருப்பு, சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது. அவரவர் தேவைக்கேற்ப இதை கட்டிக் கொள்ளலாம்.


Thursday, 18 April 2024

தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும்?சாப்பிடும் முன்பு ,பின்பு


சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? சாப்பிடும் முன் பருகலாமா? தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும்? அடடே
சாப்பிடும் முன்பு தண்ணீர் குடிக்கலாமா? சாப்பிட்டதுமே தண்ணீர் குடிக்கலாமா? உணவு நிபுணர்கள் சொல்வது என்ன?


தண்ணீர் என்பது எப்போதுமே நமக்கு பலத்தையும், ஆற்றலையும் தரக்கூடியது.. குடல் பகுதியின் சீரான செயல்பாட்டுக்கு தண்ணீர் மிகவும் அவசியம்.. இதனால் செரிமானம் எளிதாகிறது.. உடலிலுள்ள கழிவுகளும், நச்சுக்களும் நீங்குகின்றன.. இதில் வெந்நீரை குடிப்பது கூடுதல் நன்மைகளை தருகிறதாம்.


Can we drink water while eating and which is the Suitable time to drink water while taking food
கலோரிகள்: கலோரி இல்லாத தண்ணீரை குடிப்பது தேவையற்ற கலோரிகளை உட்கொள்வதில் இருந்து பாதுகாக்கிறது. அதேசமயம், நாம் குடிக்கும் தண்ணீரின் அளவும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன..


இதில் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். எனவே, 30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீரை குடிக்க சொல்கிறார்கள். காரணம், சரியான நீரேற்றமானது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறதாம்.. செரிமானமும் சீராக நடக்கிறதாம்.. ஊட்டச்சத்து உறிஞ்சுதலும் தடையில்லாமல் நடக்கிறதாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சாப்பிடுவதற்கு முன்பு குறிப்பிட்ட அளவு தண்ணீரை குடிக்கலாம் என்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் இல்லாத மாவட்டமா? உண்மை என்ன.. இதை பாருங்க ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் இல்லாத மாவட்டமா? உண்மை என்ன.. இதை பாருங்க
வறட்சி: வறட்சியை தடுக்க தண்ணீர் குடிக்க நேரிடுகிறது என்றாலும், சாப்பிடும்போது தண்ணீர் குடித்துவிட்டால், செரிமானம் பாதிக்கப்படும் என்கின்றன ஆய்வுகள்.. செரிமான சுரப்புகளின் தாக்கம் குறைந்துவிடும்.. அத்துடன் உள்ளே விழுங்கும் உணவும், முழுமையாக செரிமானம் ஆகாமல், மந்தம், உப்புசம், பசியின்மை போன்றவற்றை ஏற்படுத்திவிடக்கூடும். முக்கியமாக, குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால், அவர்கள் வழக்கமாக சாப்பிடும் அளவு குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாம்..


சாப்பிடும்போது அதிகளவில் தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டுமானால் இருக்க வேண்டுமானால், உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். சாப்பிட்டு முடித்ததுமே தண்ணீர் குடிக்கக்கூடாதாம்.. சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிப்பதே செரிமானத்துக்கு உகந்ததாக இருக்குமாம்.

காலையில் எழுந்து பல்லை துலக்கியதுமே! ஒரே கல்ப்பாக ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கலாமா? காலையில் எழுந்து பல்லை துலக்கியதுமே! ஒரே கல்ப்பாக ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கலாமா?
குளிர்ந்த நீர்: சாப்பிடும்போது, குளிர்ச்சியான தண்ணீர் குடிப்பதும், செரிமான மண்டலத்திலுள்ள என்சைம் செயல்திறனை குறைத்துவிடுமாம்.. இதனால், உடலில் நச்சுக்கள் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். அதனால், சாப்பிடும்போது, சோடா, ஜில் ஜூஸ், காபி இவைகளை குடிக்க வேண்டாம் என்கிறார்கள்.


ஆனால் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் உடல் பலவீனம் அடையும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது..அதேபோல, சாப்பிடும்போது சிறிது தண்ணீரை குடிப்பது தவறில்லை, செரிமான மண்டலத்துக்கு நல்லது, உணவுகளை உடைப்பதற்கும் இந்த தண்ணீர் உதவியாக இருக்கும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது.

ஆயுர்வேதம்: அதேபோல, சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் சீரான செரிமானம் தடைப்பட்டு உடல்பருமன் அதிகரிக்கும் என்பதால், சாப்பிட்டு 30 நிமிடம் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறது ஆயுர்வேதம்.


Wednesday, 17 April 2024

பனை நுங்கு...

உடல்நலம் பனை நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க! கோடைகாலம் வந்து விட்டாலே உடல் சூட்டினால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். இந்நிலையில் வெயில் காலத்தில் நுங்கு வரத்தும் அதிகரித்துவிடும். எங்கு பார்த்தாலும் நுங்கு வியாபாரம் களைகட்டத் தொடங்கும். மக்களும் வெயில் சூட்டை தனிக்க, தாகத்தைத் தனிக்க நுங்கு உண்பார்கள். அதற்காக மட்டுமல்லாமல் அது உடலுக்கு இன்னும் பல நன்மைகளைக் கொடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நுங்குவின் பொதுவான பயன்பாடுகள் குறித்து பொதுவான பலன்கள் அனைவருக்கும் தெரியும் என்றாலும், பெண்களுக்கு நுங்கு அருமருந்தாக அமைந்துள்ளது என்கிறார்கள்.. அந்த அளவுக்கு அதில் மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளதாம். வெயில் காலத்தை தவிர, நிறைய பேர் இதைப் பெரிதாக கண்டுகொள்வதில்லை... ஆனால், எந்த காலத்திலும், கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம்.. எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். காலநேரம் கிடையாது. இதில் உள்ள மருத்துவ நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். நுங்கில் வைட்டமின் பி, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் இருந்தாலும், இந்த பழத்தில் குறைந்த கலோரி மற்றும் அதிக நீர்ச்சத்து இருக்கிறது.. அதனால்தான் நுங்கை சாப்பிட்டவுடன், வயிற்றை நீண்ட நேரம் நிரப்புகிறது.. எடை இழப்பு முயற்சியில் இருப்பவர்கள் இதனை அதிகம் சேர்த்து கொள்வதற்கு இதுதான் அடிப்படை காரணம் என்கிறார்கள்.. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துவதில் நுங்கு வல்லமை கொண்டது... அதிலும், பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது. வயிற்று கோளாறுகளை சரி செய்வதில் நுங்கு நல்ல பலனை தரும். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய இரண்டு பிரச்சனைகளில் சிக்கியவர்கள் நுங்கு தாராளமாக சாப்பிடலாம். நுங்கை ஐஸ் ஆப்பிள் என செல்லமாகவும் அழைக்கிறார்கள். நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாகும். இது வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும். கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும். நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது. கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவது அவசியம். பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு மறையும். நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும். வயிற்றுப் புண், வயிற்றுப் பிரச்னை, மலச்சிக்கல், உடல் சோர்வு , தோல் நோய்கள், கல்லீரல் பிரச்னை, அஜீரணக் கோளாறு, ஆற்றல் குறைவு போன்ற பிரச்னைகளையும் இந்த நுங்கு சுளை சரி செய்யலாம். கர்ப்பிணிகளும் இந்த நுங்கை உண்டால் மலச்சிக்கலை குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். அசிடிட்டி பிரச்னையும் இருக்காது. நுங்கு சுளைகளை இளநீரில் ஊற வைத்து உண்டால் அத்தனை ருசியாகவும், குளிர்சியாகவும் இருக்கும். கூடுதல் சுவைக்கு சர்க்கரை தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.

வாரிசு அல்லாதோருக்கும் உயிலில் சொத்துக்களை எழுதி வைக்க முடியுமா?

வாரிசு அல்லாதோருக்கும் உயிலில் சொத்துக்களை எழுதி வைக்க முடியுமா? அப்படியா?
பத்திரப்பதிவு, நிலம், வீடு, சொத்து விவகாரங்களில் அடிக்கடி பயன்படுத்தும் சொல் உயில்.. இதற்கான அர்த்தம் தெரியுமா? உயில் எழுத வேண்டுமானால் அதற்கான வழிமுறைகள் என்னென்ன தெரியுமா?


ஒருவர் தன்னுடைய சொத்துக்களை தன் வாழ்நாளுக்கு பிறகு, தன்னுடைய உறவினர்களுக்கு சேரும்படி எழுதி வைக்கும் பத்திரமே "உயில் பத்திரம்" ஆகும்..


Are these the Major Points of preparing a Will document and Importance of Will Settlement
ஆனால் சிலர், உயிலும், செட்டில்மென்ட் பத்திரமும் ஒன்றுதான் என நினைக்கிறார்கள். ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துகளை, தனக்கு பிறகு இன்னொருவருக்கு எழுதி வைப்பது உயில்.. இது முழுக்க முழுக்க சுயநினைவுடன் மட்டுமே எழுத முடியும்.. தன்னுடைய சொத்துக்களை அவரது விருப்பத்தின் அடிப்படையில், வாரிசுகளுக்கு அவரது விருப்பப்படி, பிரித்து எழுதி வைக்கப்படுவதுதான் செட்டில்மென்டு பத்திரம் ஆகும்.


விதிமுறை என்ன: அதேபோல, உயில்களை வாரிசுகளுக்கு மட்டுமே எழுதி வைக்க வேண்டும் என்பதில்லை.. தனக்கு விருப்பமானவர்கள் அல்லது டிரஸ்ட்களுக்கும் எழுதி வைக்கலாம்..

ஒருவேளை வாரிசு இருந்தும், அவர்களை தவிர்த்து பிறருக்கும் எழுதி வைக்கலாம். அப்படி எழுதி வைத்தால் வாரிசுகளால் அதை கேள்வி கேட்கவோ, எதிர்க்கவோ முடியாது. அதுக்காக, வாரிசுகளுக்கு எழுதி வைத்தால், அந்த சொத்து மனைவிக்கு கிடைக்கும் என்றும் அர்த்தம் கிடையாது.

நாமினி: அவசியமிருந்தால், வாரிசுக்கு எழுதி வைக்கும்போது, மனைவியையும் ஒரு பங்குதாரராக சேர்த்து உயில் எழுதினால் சிறந்தது.. அல்லது வாரிசுதாரரையே நாமினியாக நியமித்துவிட்டால், வருங்காலத்தில் சிக்கல்கள் எதுவும் இருக்காது.


உயில் எப்போது செல்லுபடியாகிறது? எதற்காக சுயநினைவுடன் இருக்கும்போதே உயில் எழுதப்படுகிறது? உயில் எழுதியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாவிட்டாலும், அந்த சொத்துக்களால், பிற்காலத்தில், குடும்பத்தில் ஒருவருக்கும் எந்தவிதமான பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, முன்கூட்டியே எழுதி வைக்க நேரிடுகிறது. எனினும், அவரது மரணத்துக்கு பிறகே இது உயிலாக கருதப்படும்.

சுயநினைவு: குடும்பங்கள் பிரியவும், சிதையவும், இந்த சொத்துக்கள்தான் பல இடங்களில் முக்கிய காரணமாக இருந்து வருகின்றன. ஒருவேளை சொத்தை எழுதி வைக்காமல், சம்பந்தப்பட்டவர் இறக்க நேரிடுமானால்,சொத்தை பிரித்துக்கொள்வதிலும் பல தகராறுகள், வன்முறைகள் வெடித்துவிடுகின்றன. இது தொடர்பாக நீதிமன்றத்தையே நாடினாலும்கூட, உடனடியாக தீர்வை எதிர்பார்க்க முடியாது. எனவேதான், ஒருவர் உயிருடன் இருக்கும்போதே, சுயநினைவுடன் சொத்தை பிரித்து எழுதி வைத்து விடுவார்கள்.


திமுக, தேர்தல் பத்திரம், டெஸ்லா கார்.. பிரதமர் மோடி பேட்டியில் பகிர்ந்த 3 விஷயங்கள் திமுக, தேர்தல் பத்திரம், டெஸ்லா கார்.. பிரதமர் மோடி பேட்டியில் பகிர்ந்த 3 விஷயங்கள்
ஒருவர் தான் சொந்தமாக சம்பாதித்ததை, தனக்குரிய சொத்துக்களை மட்டுமே உயிலாக எழுதி வைக்க முடியும்.. பூர்வீக சொத்தாக இருந்தாலும் அதை யாருக்கும் உயிலாக எழுத முடியாது, பிரித்து எழுதி வைக்கவும் முடியாது..

உயில் எழுதும் முறை: சொத்தை, யாருக்கு, எவ்வளவு தருவது என தீவிரமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். இதில் 2 சாட்சி கையெழுத்துக்கள் முக்கியம். ஆனால் சாட்சி கையெழுத்து போடுபவர்கள், உயிலுக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். உயிலில் டாக்டர் மற்றும் வக்கீல்களின் சாட்சி கையெழுத்து அவசியம்.

நீங்கள் எழுதிய உயிலை ரத்து செய்யலாம், திருத்தம் செய்யலாம்.. இதற்கு முத்திரைத்தாள் தேவைப்படாது.. சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, பதிவு செய்துகொள்ளலாம்.. அரசு நிர்ணயம் செய்துள்ள பதிவு தொகையை மட்டும் செலுத்தி, பதிவு செய்துகொள்ளலாம்.


Saturday, 13 April 2024

பம்பளிமாஸ்

 உடலுக்கு சக்தி தரும் பம்பளிமாஸ் பழம்  கோடை காலத்தில் பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவது உடல் சூட்டினைத் தணிக்கும் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள வைட்டமின் சத்தும், கால்சியம் சத்து உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை அளிப்பதோடு, கோடைகால சோர்வினை போக்குகிறது. பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் பச்சை நிறத்தில் பெரிய பந்து போல இருக்கும். முற்றின காயின் மேல் இளம் மஞ்சள் நிறத்தில் மாறும் அதுதான் பழம். இதன் தோல் அழுத்தமாக காணப்படும். உள்ளே சாத்துக்குடிபோல சுளைகள் இருக்கும். சிலவகை வெள்ளைச் சுளைகளைக் கொண்டிருக்கும். சிலவற்றின் சுளைகள் ரோஸ் நிறத்தில் காணப்படும். இந்த இரண்டு வகைப் பழங்களின் குணமும் ஒன்றுதான். இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டுவகை உண்டு. இதில் புளிப்புவகையை விட இனிப்பு வகையே சிறந்தது. இது அனைத்து காலங்களிலும் கிடைக்காது அதற்கென உள்ள சீசனில் மட்டுமே கிடைக்கும். இது குளிர்ச்சி நிறைந்தது எனவே சளி, சீதாள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. உடல் சூடு தணியும் இந்தியாவின் இந்த அதிசய கிணறு நீங்க எப்ப சாகப்போறீங்கனு சொல்லுமாம். இந்த கிணறுகிட்ட நீங்க போவீங்களா? கோடைக்காலத்தின் அதிக வெயிலில் அலைபவர்கள், அதிக சூடுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்களின் உடல் வெகு விரைவில் வெப்பமடையும். இவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு ஏற்படுவது குறையும். வைட்டமின் எ, கால்சியம் இந்த பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. கண் பார்வைக் கோளாறுகள் நீங்க வைட்டமின் ‘ஏ’ சத்து அவசியம். இந்த வைட்டமின் ‘ஏ‘ சத்துக் குறைவதால் மாலைக் கண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குறைகளை களைய பம்பளிமாஸ் பழம் சிறந்த மருந்தாகும். காரட் எப்படி கண்களை காக்கிறதோ அதேபோல் பம்பளிமாஸ் பழமும் காக்கும். பம்பளிமாஸ் பழத்தில் சுண்ணாம்புச் சத்தும் உள்ளதால் பித்த சூட்டை அகற்றும். சக்தி தரும் பம்பளிமாஸ் நோய் பாதிப்பினால் உடல் இளைத்துப்போனவர்கள் மதிய நேரத்தில் பம்மளிமாஸ் பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் பலமடையும், சோர்வு நீங்கும். மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் நல்லது. இப்பழம் கிடைக்கும் காலத்தில் அதிகம் வாங்கி சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படாமல் தடுக்கலாம். இரத்தத சோகையைப் போக்கும் குணம் பம்பளிமாஸ் பழத்திற்கு உண்டு. இந்தப் பழத்தின் சுளைகளை மதிய உணவுக்குப்பின் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை குறைபாடு நீங்கும். -

சப்போட்டா பழம்..


சப்போட்டா பழம்.. ஒரு நோயும் அண்டவிடாது சப்போட்டாக நிற்கும் பழம்.. யாரெல்லாம் சப்போட்டா சாப்பிடலாம்?

சென்னை: சப்போட்டா பழங்களிலுள்ள சத்துக்கள் என்னென்ன? யாருக்கெல்லாம் இந்த சப்போட்டா பழங்கள் அருமருந்தாகின்றன தெரியுமா?



சப்போட்டா பழங்கள் என்றாலே நார்ச்சத்துக்களின் இருப்பிடம் என்று சொல்லலாம்.. வைட்டமின்கள் A, B, C, ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், மக்னீசியம், பொட்டாசியம், எலக்ட்ரோலைட்டுகள், கார்போ ஹைட்ரேட்டுகள் போன்ற அனைத்து வகையான சத்துக்களும் இந்த பழத்தில் நிறைந்துள்ளதால், உடலின் திசு அமைப்பின் ஆரோக்கியத்தை பேருதவி புரிகிறது.


Best Medicinal Uses of Sapota Fruits and Can Pregnant Ladies take Sapota what are the Super Benefits of Sapota
சத்துக்கள்: இந்த பழத்திலுள்ள மெக்னீசிய சத்துக்கள் ரத்த நாளங்களை சீராக இயங்க வைக்க உதவுகிறது.. ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும்.




இந்த பழத்திலிருக்கும் பொட்டாசியம் சத்துக்கள், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது... எனவே, தினமும் 2 சப்போட்டா பழங்கள் சாப்பிட்டு வந்தால், இதயம் திறன்பட செயல்படும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இது பயன்தரக்கூடியது.

இரும்பு சத்துக்கள்: இந்த பழத்திலுள்ள இரும்புச்சத்துக்கள், அனீமியா தொந்தரவை விரட்டியடிக்கிறது. இந்த பழத்திலுள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், புற்றுநோய் செல்களை வளர்ச்சியடையாமல் தடுத்து நிறுத்துவதில் துணைபுரிகிறது. அடிக்கடி இந்த சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோயும் அண்டாது

இந்த பழத்திலுள்ள நார்ச்சத்துக்கள், உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்ற தூண்டுகிறது.. இந்த பழத்திலுள்ள வைட்டமின் A உள்ளிட்ட சத்துக்கள் கர்ப்பிணிகளுக்கு புத்துணர்ச்சியையும், ஆற்றலையும் தருகிறது. அந்தவகையில், நார்ச்சத்து நிறைந்த சப்போட்டோ பழங்கள், கர்ப்பிணிகளுக்கும் , பாலூட்டும் தாய்மார்களுக்கும் நன்மை தருகிறது.


இந்த பழத்திலிருக்கும் அத்தனை சத்துக்களும், நம்முடைய உடலிலுள்ள ஃப்ரீ ரேடிகல்ஸை சமநிலைப்படுத்தி நாள்பட்ட நோய் வரும் ஆபத்தையும் மட்டுப்படுத்துகிறது..

சப்போட்டா : சப்போட்டா சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நம்மை அண்டாது. அத்துடன், சருமத்தையும் பொலிவாக்குகிறது.. சரும சுருக்கத்தையே தள்ளி போடும் கொலாஜின் உற்பத்தி இந்த பழத்தில் பொதிந்திருப்பது கூடுதல் பிளஸ் பாயிண்ட்டாகும். வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்து நிறைந்த இந்த சப்போர்ட்டா பழங்களை கொடுத்து வந்தால், அவர்களது எலும்புகள் உறுதியாகும்..

உடல் உஷ்ணத்தை தணிக்கக் கூடியது இந்த சப்போட்டா பழங்கள்.. தூக்கமின்மையால் அவதிபப்டுபவர்கள், தினமும் 1 கிளாஸ் சப்போட்டா ஜூஸ் குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.

பூனை குறுக்கே சென்றால்...




பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா? சகுனம் பார்த்து பார்த்து நிறைய நல்ல விஷயங்களை இழந்துவிட்டீர்களா?


.


What is the story behind cat running across or cat sagunam
அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போலத்தான் நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் இருக்கிறது. நாய் ஊளையிட்டால் ஆகாது, நரி முகத்தில் முழித்தால் நல்லது என்றெல்லாம் சொலவடை உள்ளது.




அப்படிப்பார்த்தால் இன்று எல்லார் வீட்டு படுக்கை அறையிலும் நாய்க்கு பதிலாக நரிகள்தான் இருந்திருக்க வேண்டும். அது போல் பூனை குறுக்கே போய்விட்டால் கெட்ட சகுனம் என்பார்கள். சிலரை இந்த வேலை செய்துவிட்டாயா என கேட்டால், நாளை செய்கிறேன் என்பார்கள். அதற்கு "ஏன் இன்று என்ன பூனை குறுக்கே போய்விட்டதா" என கிண்டலாக கேட்பார்கள்.

உண்மையில் பூனை குறுக்கே போனால் அபசகுனமா என்ற கேள்வி பலருக்கு எழுகிறது. இதெல்லாமே மூடநம்பிக்கை என்கிறார்கள். பல வீடுகளில் பூனைகளை வளர்க்கிறார்கள், அது வீட்டுக்குள் சுதந்திரமாக சுற்றித் திரியும், அப்படி நாம் வெளியே செல்லும் போது குறுக்கே வந்துவிட்டால் உடனே போற காரியம் விளங்காதா?


அப்படி கிடையாது, பூனை குறுக்கே சென்றால் தண்ணீர் குடித்துவிட்டு சிறிது நேரம் அமர்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்ற மூடநம்பிக்கையை இன்று சந்திர மண்டலத்திற்கு ராக்கெட் விட்டுள்ள காலத்திலும் மக்கள் நம்புகிறார்கள். இந்த பூனைக்கு பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது.

அதாவது அந்த காலங்களில் மோட்டார் வாகனங்கள் கண்டுபிடிக்கும் காலங்களுக்கு முன்பு மக்கள் குதிரை வண்டிகளிலும் மாட்டு வண்டிகளிலும்தான் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வர். இதனால் 50 கி.மீ.ரில் உள்ள பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் கூட பலமணி நேரம் தாமதமாகும்.


சில நேரங்களில் நீண்ட தூர பயணங்கள் நாள் கணக்கில் இருக்கும். இதற்காக கட்டு சோறு கட்டிக் கொண்டு வண்டியை நிறுத்தி சாப்பிட்டு விட்டு இரவெல்லாம் பயணிக்க வேண்டிய சூழல் வரும். அப்போது இரவு நேரத்தில் காட்டு பகுதியில் பூனைகள் வரும் அதன் கண்கள் பார்ப்பதற்கு ரேடியம் விளக்கு போல் மின்னும், உடல் எல்லாம் தெரியாது, கண்கள் மட்டும் மின்னும்.

அது பூனையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, புலி, சிறுத்தை, சிங்கம் உள்ளிட்ட விலங்குகளின் கண்களும் இரவு நேரத்தில் மின்னும். இதனால் அந்த மின்னொளியை பார்த்து குதிரையோ மாடோ பயந்தால் மிரளும், இதனால் வண்டி ஆட்டம் காணும். பின்பு பயணமே பாதிக்கப்படும். இதனால்தான் இது போல் பூனையின் கண்களை பார்த்துவிட்டாலே அது பூனையோ இல்லையோ சிறிது நேரம் மரத்தின் கீழ் ஓய்வெடுத்துவிட்டு குதிரைக்கும் மாட்டிற்கும் தண்ணீர் காட்டிவிட்டு செல்வார்கள்.

இதுதான் பூனை குறுக்கே சென்றால் அபசகுனம் என்றாகிவிட்டது. எனவே இனியாவது மூடநம்பிக்கையை விட்டொழியுங்கள். பூனைக்காகவும் யானைக்காகவும் எந்த செயலையும் தள்ளி போடாதீர்கள். விதி என்ற ஒன்று தாயின் கருவறையில் நாம் இருந்த போதே எழுதியாகிவிட்டது. எனவே எல்லாம் அதுபடிதான் நடக்கும் என சொல்லிவிட்டு தன்னம்பிக்கையுடன் செல்லுங்கள். ஜெயம் நிச்சயம்! உழைப்பை நம்புங்கள். உன் வாழ்க்கை உன் கையில்!


Friday, 5 April 2024

செவ்வாய் சனி கூட்டணி


 

செவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு


சனியும் செவ்வாயும் பகையாளிகள். இவர்கள் இருவரும் இணைந்து எந்த வீட்டில் எந்த ராசியில் இருந்தாலும் சிக்கல்தான். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும் பிரச்சினைதான். ஜோதிட சாஸ்திரத்திலேயே இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணிதான் மிகவும் சிக்கலானது, சவால்கள் நிறைந்தது ஆபத்தானதும் கூட. இவை இரண்டும் சேருவது, பார்ப்பது அந்த வீட்டிற்கு சிக்கலை ஏற்படுத்தும். நந்தி வாக்கியம், பிருஹத் ஜாதகம், உத்தரகாலாமிர்தம் போன்ற ஜோதிட நூல்கள் சனி செவ்வாய் சேர்க்கை மற்றும் பார்வை பற்றி பலவித விளக்கங்களை கூறியுள்ளன. இன்னும் சில தினங்களில் கன்னி ராசிக்கு வரும் செவ்வாய் தனுசு ராசியில் உள்ள சனியை பார்க்கப் போகிறார்.



வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மனதில் மட்டுமல்லாமல் உடலிலும் இந்த இருகிரக சேர்க்கை பாதிப்பை உண்டு பண்ணும். குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எந்த வீட்டில் செவ்வாயும் சனியும் சேர்ந்திருந்தாலும், சமசப்தமாய் பார்த்துக் கொண்டாலும் பூப்பெய்துதலிலிருந்து பிரச்னைகள் தொடங்கும். மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்னை, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, அல்சர், நீண்ட வறட்டு இருமல், ஹீமோக்ளோபின் குறைதல், சிறுநீரகக் கோளாறு, முகத்தில் கண்ணுக்குக் கீழ் மேல் கன்னப் பகுதியில் கருநீலத் திட்டுகள் உருவாதல் என பல பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும்.

சனி செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களும் எந்த வீட்டில் எந்த ராசியில் கூட்டணியாக இருந்தாலும் ஆபத்தானது என்கிறது ஜோதிட நூல்கள். கணவன்-மனைவி விவாகரத்துக்கான வாய்ப்புகளையே அதிகம் காட்டும் சேர்க்கை இது. மண வாழ்க்கையில் சூறாவளியை சந்தேகத்தாலும் பிடிவாதத்தாலும், ஈகோ பிரச்னையாலும் உண்டாக்கும். நீதிமன்றத்தில், எனக்கேற்ற துணை இவரல்ல என்று குற்றம்சாட்டி பிரிய வைப்பதெல்லாம் இந்த சேர்க்கைதான்.

செவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்குசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு
வேகமான செவ்வாய்
செவ்வாய் சனி கூட்டணி
வேகம், விரைந்து முடிவெடுத்தல், தன் சுதந்திரத்தில் யாரும் தலையிடக் கூடாது என்று நினைத்தல், முரட்டுத்தனம். இவையெல்லாம் செவ்வாய் தரும் குணங்கள். நான் சொன்னா சொன்னதுதான். அவரு வேணா இறங்கி வரட்டும். நான் ஏன் இறங்கிப் போகணும் என்று பேச வைப்பதும் செவ்வாய்தான். சனி என்பது, இதற்கு எதிர்மாறான தன்மைகளைக் கொண்டிருக்கும் கிரகம். செவ்வாய் வேகமாகப் பேசி விரைந்து முடிக்கும் கிரகமென்றால், சனி எதிரே இருப்பவரின் பொறுமையைச் சோதிக்கும் அளவிற்கு நிதானம் தரும் கிரகம்.

மந்தமும் சுறுசுறுப்பும்
ஆயுள் ஆரோக்கியம்
மந்தமாக போகும். சுறுசுறுப்பானவனும் மந்தமானவனும் சேர்ந்தால் எப்படியிருக்கும். செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்கள் எரிமலை போல வேகமாக வெளிப்படுத்துவார்கள். அணுகுண்டே வெடிச்சாலும் எதுவும் நடக்காதது போல ஆகாயம் பார்த்தபடி இருப்பவர்களே சனி ஆதிக்கமுள்ளவர்கள்.
ஆயுட்காரகன் சனி என்றால், ஆரோக்யகாரகன் செவ்வாய். அதர்மத்தையும் தாங்கிக் கொள்ளுமளவுக்கு சகிப்புத்தன்மைக்குரியவர் சனி என்றால், தர்மத்தைக் காக்க அதர்மத்தை வேரோடு பெயர்க்கும் கிரகமே செவ்வாய்.

ஜாதகத்தில் கூட்டணி
கிரகச்சேர்க்கையால் பாதிப்பு
ஒரு மனிதருக்கு இந்த இரண்டு குணங்களுமே வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் அத்தியாவசியமாகிறது. ஐம்புலன்களையும் முறுக்கேற்றி வீராவேச வேட்கையுடன் வாழ்க்கையை நடத்த வைப்பது செவ்வாய் என்றால், நெறிப்படி வாழ வைத்து அடுத்த தலைமுறையையும் பேச வைக்கும் ரோல்மாடலாக மாற்றுபவர் சனி. மேற்கண்ட இரு குணங்களும் ஒருவருக்குள் முட்டி மோதிக் கலந்திருக்கும்போது என்ன நிகழுமோ, அதுதான் சனி - செவ்வாய் சேர்க்கையாகும். அதனால், இந்த இரண்டு கிரகங்களுமே ஒரு ஜாதகத்தில் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கையில் அனைத்து சுகங்களையும் தரமுடியும்.

ஏழாம் வீட்டில் சனி செவ்வாய்
சனி செவ்வாய் ஏழாம் வீடு
சனி செவ்வாய் லக்னத்தில் ஏழாமிடத்தில், சேர்க்கை பெற்றவர்கள் அல்லது ஐந்தில் சனி,ஏழில் செவ்வாய் நிற்க, அவர்கள் யாரையுமே பகைத்துக் கொள்ள மாட்டார்கள். எவ்வளவு பகை உணர்வு இருந்தாலும் அதை வெளிக்காட்ட மாட்டார்கள். உதாரணமாக ஒரு ஆண் ஜாதகத்தில் மேற்சொன்ன அமைப்பில், சுபர்கள் பார்வையின்றி சனி செவ்வாய் சேர்க்கை பெற்று இருக்கும்பொழுது, அவர்களுக்கு யார் நம்பிக்கை உள்ளவராக இருக்கிறார்களோ, அந்த ஒருவரை தவிர மற்ற யாரையுமே அவர்கள் நம்ப மாட்டார்கள்.

கணவன் மனைவி 
தம்பதிகள் பிரச்சினை
அந்த ஒருவரும், இவர் மேல் முழு அன்பு வைத்து இருப்பார்களா?? என்பது சந்தேகமே. மேலும் இந்த அமைப்பு இவர்களுடைய திருமண வாழ்க்கைக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும். இவர்கள் முற்பாதியில் மனைவியின் அன்பை புரிந்து கொள்ளாமல், பிற்பாதியில் புரிந்துகொண்டு துயரப்படும் சூழல் உருவாகும். மேலும் இவர்கள் மனைவியின் சாபத்தை பெறுபவர்கள் ஆவார்.

விதிவிலக்கு என்ன
குரு சுக்கிரன் பார்வை பலம்
கடகம் மற்றும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, இயற்கையாகவே ஏழாம் இட அதிபதி சனியாக வருவதால் அவர்களுக்கு இந்த அமைப்பு இருந்தால், கண்டிப்பாக அவர்கள் மனைவியை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இவர்கள் கௌரவத்திற்காக 40 ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலும், திருப்திகரமான திருமண வாழ்க்கை இவர்களுக்கு இருக்காது. ஜோதிடத்தில் விதிவிலக்கு பெரும்பங்கு அளிப்பதால், சுக்கிரன் பலமாக இருக்கும் பட்சத்தில், குரு போன்ற சுப கிரகங்கள் களத்திர ஸ்தானத்தில் தொடர்பு கொள்ளும் போதும், மேற்கூறியவற்றில் இருந்து மாறுபட்ட பலன்களும் நடக்கும்.

பரிகாரம் என்ன
நரசிம்மர் வழிபாடு
இந்த கிரகங்களின் கூட்டணியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பரிகாரம் இருக்கு வீர்யம் மிக்கதுமாகும். பெரும்பாலும் எதிர்மறை கதிர்வீச்சையே வெளிப்படுத்தும் சேர்க்கையாகும். அதனால் உக்கிரமான தெய்வங்களின் வழிபாடு இதற்கு முக்கியமாகும். எனவே, நரசிம்மர் ஈசனை தரிசிக்கும் அல்லது வணங்கிய கோயில்களுக்குச் சென்று வருதல் நல்லது. கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் உள்ள நரசிங்கம்பேட்டை தலத்தில் அருளும் நரசிம்மர் வணங்கிய சுயம்புநாதரை வணங்கி வாருங்கள். இத்தலத்திலேயே அமைந்துள்ள யோக நரசிம்மரின் ஆலயத்திற்கும் சென்று வணங்கிவர பாதிப்புகள் குறையும்


குக்குலு...


ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தும் குக்குலு என்னென்ன நோய் தீர்க்கும்... பக்க விளைவுகள் ஏற்படுமா?
நமது இந்திய கலாச்சாரத்தின்படி, குக்குலு மரத்தின் பிசின்களைப் பயன்படுத்தி, வீடுகளில் தூப புகை போடுவது வழக்கம். அதேபோல குக்குலு என்பதையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவற்றில் உள்ள நன்மைகள் என்ன, பக்க விளைவுகள் என்னென்ன என்று இங்கே பார்ப்போம்.

செயற்கை வாசனைக் கொண்டு தயாரிக்கப்படும் தூபங்கள் பல இருந்தாலும் இயற்கையான தூப பீடங்களே மிகவும் சிறந்தவை ஆகும். அவற்றிலிருந்து வெளிவரும் வாசனை நம்மை ஒரு புதிய சகாப்தத்திற்கே அழைத்துச் செல்ல வல்லது. குங்கிலியம் பிசின் என்று தமிழில் அழைக்கப்படும் இவை இந்தியில் குக்குலு என்றும், பிலடெலியம் என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகின்றது.


Samayam Tamil
uses and side effects of guggul in tamil


​குக்குலு பிசின் :
​குக்குலு பிசின் :

குக்குலை தமிழில் எருமைகன் குங்கிலியம் என்று அழைக்கிறார்கள். வீட்டில் குக்குல் தூபத்தை எரிப்பது நெகட்டிவ் சக்தியை நீக்குகிறது மற்றும் வாஸ்து குறைபாடுகளால் ஏற்படும் மோசமான விளைவுகளையும் நீக்குகிறது என்று நம்பப்படுகிறது. அற்புதமான இந்த வாசனை மிகவும் அமைதிப்படுத்துகிறது. இந்த புகையை வீட்டிலுள்ள எல்லா அறைகளிலும் புகைய விடுவது வழக்கம். இந்த புகையினால், லேசான மணம் வீடுமுழுவதும் நிரம்பி இருக்கும்.

குக்குலு தூபத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. குக்குலு பிசினிலிருந்து கிடைத்த குக்குலு சாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். குக்குலுவிலில் மிக அற்புதமான நன்மைகள் உள்ளன.


குக்குலு மரம் :
குக்குலு மரம் :

முகுல் மைரா மரம்/பிலடெலியம் மரம் என இதை இந்தியில் அழைக்கிறார்கள், கமிபோரோ முகுல் என்பது குக்குலு மரத்தின் தாவரவியல் பெயர் ஆகும். இது முட்கள் நிறைந்த ஒரு சிறிய புதர். இந்த புதர் சிவப்பு நிற வட்டமான பழங்களைக் கொண்டுள்ளதோடு, பிசினையும் உருவாக்குகிறது. குக்குலு மரம் பொதுவாக வட இந்தியாவில் முக்கியமாகக் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் காணப்படுகிறது. குக்குலு பிசின் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுவதால், அதன் பயன்பாடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.


குக்குலு மரத்தில் பிசின் தயாராவதற்கு, சுமார் 8 ஆண்டுகள் ஆகும். மேலும் இது ஒரு தடவை சுமார் கால் கிலோ அளவுக்குப் பிசினைக்கொடுக்கும். பின்னர் மரம் அந்த அளவு பிசினை உருவாக்க, இன்னும் இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். பிசினிலிருந்து எடுக்கப்படும் சாறு குக்குலிபிட் என்றும், சாற்றில் காணப்படும் ஒரு முக்கியமான ஸ்டீராய்டு குக்குலுஸஸ்டிரோன் என்றும் அழைக்கப்படுகிறது.

​குக்குலு பாரம்பரிய பயன்கள் :
​குக்குலு பாரம்பரிய பயன்கள் :

குக்குலு பொதுவாகக் கீல்வாதத்திற்கு சிகிச்சையளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் எடை குறைப்பிற்கு இது மிகவும் உதவுகிறது. இது ஒரு உண்மையான நச்சுத்தன்மையாக்கும் மூலிகை. மேலும் இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் இது மிக முக்கிய பங்காற்றுகிறது. குக்குலு பொதுவாக மற்ற மூலிகைகளுடன் இணைந்து மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

​பக்க விளைவுகள்:
குக்குலுவை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாது. அதே போல பாலூட்டும் பெண்கள் மருத்துவர்களின் ஆலோசனையில்லாமல் சாப்பிடக்கூடாது. நீரழிவு நோயாளிகள், ரத்த அழுத்த மாறுபாடு உள்ளவர்கள் இதை எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டும் இது, உடலில் உள்ள சர்க்கரை அளவு வேகமாகக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

​கீல்வாதத்திற்கு குக்குலு
யோகிராஜ் குக்குலில் 25க்கும் மேற்பட்ட மூலிகைகள் குக்குலுடன் ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளன. குக்குலைத்தவிர மற்ற சில பொருள்கள் திரிகடுகம், திரிபாலா தூள், நெல்லிக்காய், ஜீரா போன்றவை. இது முக்கியமாகக் கீல்வாத வலி, வீக்கம் போன்றவற்றிற்கு சிகிச்சையாக்கப் பயன்படுகிறது. இது மூட்டுகளை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் கடினமான மூட்டுகளைக் கொண்டவர்களுக்கு இயக்கத்தை எளிதாக்குகிறது. எந்தவொரு பெரிய மோசமான பக்கவிளைவுகளும் இல்லை. எனவே இதை நீண்ட காலத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். இருந்தாலும், மருத்துவ ஆலோசனைப்படி, இதை எடுத்துக்கொள்வது நல்லது.

​தைராய்டுக்கு
காஞ்சனார் குக்குலு குறிப்பாக தைராய்டு கோளாறுகள், பிகோஸ் ஆகியவற்றிற்கு சிகிச்சையாக்க அறியப்படுகிறது. இன்னும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, கோயிட்டர் மற்றும் பைப்ராய்டு ஆகியவற்றுக்கான சிகிச்சையில் இது மிகவும் நல்ல பலன்களைத் தர வல்லது. எனவே காஞ்சனார் குக்குலு பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது. இது குக்குலு, நெல்லி, ஹரிட்டகி, நீண்ட மிளகு, ஏலக்காய் போன்ற பொருட்களால் ஆனது. இதைக் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மருந்தாக உண்ணக்கூடாது. மேலும் இது சிலருக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். எனவே மருத்துவ ஆலோசனையைப் பெற்று இதைப் பயன்படுத்துவது நல்லது.

​எடை குறைப்பிற்கு திரிபாலா குக்குலு :
இது மிகவும் பிரபலமான ஆயுர்வேத தயாரிப்பு ஆகும். இது பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. திரிபாலா குக்குலு என்பது நீண்ட மிளகு, ஹரிடகாய் மற்றும் நெல்லிக்காய் போன்ற பிற பொருட்களுடன் திரிபாலா மற்றும் குக்குலு ஆகியவை சேர்த்துச் செய்யப்பட்ட கலவை ஆகும். இது எடை இழப்புக்கு மிகவும் உதவுகிறது. இது உடலிலிருந்து நச்சுக்களை அகற்ற உதவுகிறது மற்றும் மூல நோய், குத பிளவு மற்றும் பிஸ்துலாவுக்கு சிகிச்சையளிக்கவும் நல்லது. இது மருத்துவ மேற்பார்வையின் கீழ் எடுக்கப்படுகிறது என்றாலும், அதை அதிக அளவில் உட்கொள்வது வயிற்று எரிச்சலுக்கு வழிவகுக்கும்.

​ஆரோக்கியமான சருமத்திற்கு கைஷோர்
சிலரின் சருமம் மிகவும் வயதானவர்கள் போலக் காட்சியளிக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இது ஒரு அருமருந்து என்றே கூறலாம். இது இயற்கையான இரத்த சுத்திகரிப்பாளாகவும் செயல்படுகிறது. கீல்வாதம் மற்றும் வீக்கத்திற்கு இது அருமருந்தாகும். கைஷோர் குக்குலுவில் உள்ள முக்கிய பொருள்கள் குடுச்சி, திரிபாலா, திரிகடுகம் மற்றும் குக்குலு ஆகும். இந்த அற்புதமான உருவாக்கம், அண்டி பாக்டீரியா, அண்டி ஆர்த்ரைடிக், வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

​மூல நோய் மற்றும் உடல் பருமனுக்கு
அம்ருதாடி குக்குலு என்பது குடுச்சி, குக்குலு, திரிபாலா, நெல்லி, ஹரிதகி, நீண்ட மிளகு போன்றவற்றின் கலவையாகும். இது மூட்டுகள், மூலநோய் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றின் சிகிச்சையில் பயன்படுகிறது. வயிற்றுப்புண், வயிற்று எரிச்சல் கொண்டவர்கள் இதைப் பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது நல்லது.

​எலும்பு முறிவுகளுக்கு
எலும்பு முறிவுகள் மற்றும் மூட்டு வலிக்கு இது மிகவும் சிறந்தது. இதைத் தயாரிக்க குக்குலு, அஸ்வகந்தா இன்னும் சில பொருள்கள் உள்ளன. இதில் அஸ்வகந்தா இருப்பதால் எலும்பு அடர்த்தியையும் மேம்படுத்த உதவுகிறது. எலும்புப்புரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குறைந்த எலும்பு அடர்த்தி மாறுவதற்கு, இந்த மருந்தை உட்கொண்டால் பெரிதும் பயனடைவார்கள். பெரிய அளவுக்கு வயிற்று எரிச்சலை இது உண்டுபண்ணும். எனவே மருத்துவ ஆலோசனையின்படி, இதைப் பயன்படுத்துவது நல்லது.

​சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகளுக்கு
சிறுநீர் குழாயின் அனைத்து பிரச்சினைகளுக்கும் குறிப்பாக டைசுரியா (சிறுநீரைக் கடப்பதில் சிரமம்) சிகிச்சையளிக்க இது மிகவும் பயனுள்ளது. இதில் நாகர்மோதா, திரிகடுகம், குக்குலு மற்றும் திரிபாலா போன்றனை கலந்துள்ளன. இந்த அற்புத தயாரிப்பு சிறுநீரகங்களைப் பலப்படுத்துகிறது மற்றும் நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் இது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. எந்த பக்க விளைவுகளும் இதற்கு இல்லை. இருந்தாலும், மருத்துவ ஆலோசனையின்படி, இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

​நரம்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு
நரம்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு இது உற்ற மருந்து. இது தேவதாரு. இஞ்சி, கிலாய் ஆகியவற்றை உள்ளடக்கியது. மூட்டு வலிக்கும், மூல நோய்க்கும் இது சிறந்த மருந்து. இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் தாய்மார்கள் இதனைப் பயன்படுத்தலாம். ஆனாலும் மருத்துவரின் ஆலோசனையின்படி, இதனை உபயோகிக்கலாம்.

​கொழுப்பு குறைப்புக்கு மெடோஹர் குக்குலு :
உடல் கொழுப்பைக் குறைப்பதில் மெடோஹர் குக்குலு பயன்படுகிறது. இது இயற்கையாகவே வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் குக்குலு, உலர்ந்த இஞ்சி, கருப்பு மிளகு, நீண்ட மிளகு, இஞ்சி, நாகர் மோதா, நெல்லி, ஹரிட்டகி, ஆமணக்கு எண்ணெய் போன்றவை பொருட்கள் உள்ளன. இது முழங்கால் வலி, அதிக கொழுப்பு மற்றும் ஆற்றலின் பற்றாக்குறை ஆகியவற்றுக்கான சிகிச்சையில் உதவுகிறது. இது எடை இழப்புக்கு உதவும் ஒரு மருந்து. மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே இதை உட்கொள்ள வேண்டும்.

​மூட்டுவலிக்கு
மூட்டு வலி, மற்றும் வீக்கத்திற்கு சிகிச்சையளிப்பதில் ட்ரயோதாஷங் குக்குலு நன்கு பயன்படுகிறது. இதில், குக்குலு, அஸ்வகந்தா, சதாவரி, ஜூனிபர் பெர்ரி, இஞ்சி, கேரம் விதைகள், பெருஞ்சீரகம் போன்றவை கலந்துள்ளன. பக்க விளைவுகள் இல்லை. இருந்தாலும் அளவுக்கு அதிகமாக இருந்தால் வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படலாம்.


கூனைப்பூ...


கூனைப்பூவில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் ஒரு அலசல்…

HIGHLIGHTS
Medical benefits of artichoke
Medical benefits of artichoke




கூனைப்பூவில் சுகாதார நலன்கள் மற்றும் மருத்துவ பயன்பாடு அதிகமாக உள்ளன. நிறைய மக்கள் கூனைப்பூவின் இதய பகுதியைத்தான் அதிகமாக விரும்புகிறார்கள். கூனைப்பூவின் இலைகள் இதயத்திற்கு மிகவும் நன்மையை வழங்க கூடியதாக இருக்கிறது.

கூனைப்பூவின் மருத்துவ குணங்கள்:

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்:

மற்ற காய்கறிகளை ஒப்பிட்டு பார்க்கும் போது கூனைப்பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. ஆய்வு செய்யப்பட்டதில் கூனைப்பூ , நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த உணவில் ஏழாம் இடத்தை பிடித்திருக்கிறது. கூனைப்பூவில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளில் சில quercertin, rutin,  anthocyanins, cynarin, luteolin, மற்றும் silymarin உள்ளன.

புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சை:

கூனைப்பூ இலையின் சாறுகள் அப்போப்டொசிஸை தூண்டி செல்களை இறக்க செய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் புற்றுநோய் செல்கள் வளருவதையும் தடுக்கிறது.

புரோஸ்டேட் புற்றுநோய், லுகேமியா மற்றும் மார்பக புற்றுநோய் உட்பட புற்றுநோய்களையும் வராமல் தடுக்கிறது. கூனைப்பூவில் அதிகமாக ஃபிலேவொனாய்ட்ஸ் நிறைந்துள்ளதால் மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது என்று இத்தாலிய ஆய்வில் கண்டறியப்பட்டது.

செரிமானம்:

செரிமானம் நன்றாக நடக்க கூனைப்பூ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பித்தப்பை செயல்பாடு அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாது கல்லீரலுக்கு பெரும் நன்மை அளிக்கிறது.

கொழுப்பு குறைப்பு:

கூனைப்பூ இலைகளில்  தேவையான பொருட்கள் HMG-CoA ரிடக்டேஸ் தடுப்பதன் மூலம் கொழுப்பை குறைக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நல்ல கொழுப்பு (HDL) உயர்த்துகிறது.  கெட்ட கொழுப்பை (LDL) குறைக்கிறது.

நார்ச் சத்து:

ஒரு கப் கொடிமுந்திரியில்  உள்ள சத்தை விட நடுத்தர கூனைப்பூவில் நார் சத்து அதிகமாக உள்ளது.

 



Thursday, 4 April 2024

வேப்பம் பூவில் இத்தனை மருத்துவ குணங்களா?



Medicinal properties of neem flower
Medicinal properties of neem flower

வேப்பம் பூவில் இத்தனை மருத்துவ குணங்களா?

சித்திரை விஷு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்று பெரும்பாலும் வேப்பம்பூ பச்சடி செய்யாத வீடே இருக்காது. வேப்பம்பூ பச்சடி கொஞ்சம் கசக்கிறது என்று முகம் சுளித்துக்கொண்டேதான் சாப்பிடுவோம். ஆனால் அந்த வேப்பம் பூவில் எத்தனை மருத்துவ குணங்கள் இருக்கின்றன தெரியுமா?

சித்திரை மாதம் பிறக்கப் போகிறது என்றாலே வேப்பம்பூ பூத்து மணம் பரப்பிக் கொண்டிருக்கும். அந்த மணமே நமக்குக் கோடை வெயிலை குளு குளுவென ஆக்கிவிடும். கிருமி நாசினியான வேப்பம்பூவில் கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் இருக்கிறது.

வேப்ப மரத்திலிருந்து நேரடியாக பூக்களை பறித்தாலோ அல்லது தரையில் விழுந்திருக்கும் பூக்களாக இருந்தாலும் அதை உதறி சுத்தமான நீரில் கழுவி நிழலில்  உலர்த்தி காய விட வேண்டும். ஈரம் போக உலர்ந்ததும் அதை கண்ணாடி பாட்டிலில் போட்டு சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மாதம் ஒருமுறை லேசாக வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வேப்பம்பூவை சுத்தம் செய்து கல் உப்பு சேர்த்த மோரில் ஊறவிட்டு பிறகு எடுத்து வெயிலில் காயவைத்தும் எடுத்து வைத்துக்கொள்ளலாம். இந்த வற்றலை குழம்பில் சேர்த்து சாப்பிடலாம். இதை வெங்காயம் சேர்த்து நல்லெண்ணெயில் வதக்கி சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இதை பருப்பு பொடி கலந்த சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். வேப்பம்பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. எனவேதான், வேப்பம்பூ ரசம் வைத்து சாப்பிட கொடுக்கின்றனர்.

கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். வயிற்றுக் கோளாறு, வயிறு சம்பந்தமான பிரச்சனை மற்றும் வாயுக்களால் அவதிப்படுபவர்களுக்கு வேம்பு தேநீர் வைத்துக் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேப்பம்பூ கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை கட்டுப்படுத்தும். குடலில் தங்கி உள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவற்றுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.


வேப்பம்பூவை வெயிலில் காயவைத்து பொடி செய்து பருப்பு பொடியுடன் சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம், பித்தம் நீங்கும். வயிற்றுக் கோளாறு உள்ளவர்களுக்கு வேப்பம்பூ கஷாயம் கொடுத்தால் வயிறு சுத்தமாகும். வேப்பம்பூவை வதக்கி அதனுடன் புளி, சீரகம், மிளகு சேர்த்து ரசம் வைத்து சாதத்துடன் சேர்த்து அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும்.


ஒரு கைப்பிடி அளவு வேப்பம் பூவை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு அதனுடன் இரண்டு கடுக்காயையும் தட்டி போட்டு நன்றாக கொதிக்க வைத்து பாதியாக சுண்டச் செய்ய வேண்டும். இந்த தண்ணீரை காலையும் மாலையும் முக்கால் கப் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கற்கள் கரைந்து விடும்.

வேப்பம்பூவை அரைத்து அதை பேஸ்ட் போலாக்கி சருமத்தில் தடவிக் கொண்டால் அது கொலாஜன் உற்பத்தியை தூண்டி சரும வறட்சியை குறைக்கும். ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ பொடியுடன் இரண்டு டீஸ்பூன் தயிரினை கலந்து அதை முகத்தில் தடவி கால் மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள  முகப்பருவை வேப்பம்பூவில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் எளிதில் நீக்கிவிடும்.

ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ பவுடர், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் கலந்து பேஸ்ட்டாக்கி அதை சருமத்தில் தேமல் போல் இருக்கும் இடத்தில் தடவி வர சீக்கிரம் குணமாகிவிடும். வேப்பம்பூ பொடியை தண்ணீரில் கலந்து அதை தலை முடியின் வேர்களில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை, பேன் தொல்லை அனைத்தும் நீங்கிவிடும். சித்திரை மாதத்தில் கிடைக்கும் வேப்பம்பூவை வீணாக்காமல் அதன் பயன்களை அறிந்து அதை பக்குவப்படுத்தி வைத்துக்கொண்டு பயன்படுத்தி பலன் பெறலாமே!

 

மருதாணி பூ.. வழுக்கை தலையில் முடி வளரணுமா?


மருதாணி பூ.. வழுக்கை தலையில் முடி வளரணுமா? வாத நோய் தீரணுமா? மருதாணி பூக்களே போதும்.. சூப்பர் எண்ணெய்
சரும நோய்களுக்கு மருதாணி பூக்களை போன்ற சிறந்த தீர்வு கிடைக்காது.. எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?


.


Super Health Uses of Henna Flowers and Maruthani Flower Oil is the Best Medicine for Skin disease
மருதாணி பூக்கள்: இதில், மருதாணியின் பூக்களை பொறுத்தவரை, சீசனில் மலரக்கூடியவை.. குறிப்பாக, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்த பூக்கள் அதிகமாக இருக்கும்.. தூக்கம் சரியாக வராமல் அவதிப்படுபவர்கள், மருதாணி பூக்களை தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால், நிம்மதியான தூக்கம் வரும்.


இந்த பூக்கள் தலைமுடிக்கு மிகவும் நல்லது. அதனால்தான், இந்த பூக்களில் எண்ணெய் போல தயார் செய்வார்கள்.. அதாவது, தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெய்யில், செம்பருத்தி, மருதாணி இலைகளை சேர்ப்பதுபோவே, மருதாணிப்பூக்களையும் சேர்த்து காய்ச்ச வேண்டும்.. சீசன் நேரங்களில் இந்த பூக்களை பயன்படுத்தி எண்ணெய் தயாரித்து வைத்து கொள்ளலாம்.

வறண்ட தலைமுடி மற்றும் நிறைய முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த எண்ணெய் கை கொடுத்து உதவுகிறது. அத்துடன், தலைமுடிக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கின்றன.

அதேபோல, மருதாணி பூக்களை நிழலில் 2 நாட்கள் காயவைத்து எடுத்துக் கொண்டு, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி 2 நாட்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். 3வது நாளில் இந்த எண்ணெய்யை வடிகட்டி பயன்படுத்தலாம்.


தலைமுடி: தலைமுடிக்கு மட்டுமல்லாமல், உடல் உஷ்ணத்தையும் இந்த எண்ணெய் தணிக்கிறது.. எனவே, வாரம் 2 முறை இந்த எண்ணெய்யை உடலில் தடவி மசாஜ் போல பயன்படுத்தி குளிக்கலாம். சிலர் தொப்புளில் இந்த எண்ணெய்யை வைத்து லேசாக மசாஜ் செய்வார்கள். இதனாலும், உடல் உஷ்ணம் குறையும்..

மருதாணியின் மகத்துவம்.. மூலிகையே மருந்து.. தலைக்கு மருதாணி.. தலையணைக்கு மருதாணி.. மகத்துவம் மருதாணி மருதாணியின் மகத்துவம்.. மூலிகையே மருந்து.. தலைக்கு மருதாணி.. தலையணைக்கு மருதாணி.. மகத்துவம் மருதாணி
வாய்ப்புண் இருந்தாலும் சரி, பாதங்களில் சேற்றுப்புண் இருந்தாலும் சரி, இந்த எண்ணெய்யை தடவிவந்தால் நிவாரணம் கிடைக்கும்.. தூக்கம் சரியாக வராவிட்டால், புருவங்களில் இந்த எண்ணெய்யை தேய்த்தால் போதும்.


தலைக்கு தேய்ப்பதால், நாள்பட்ட தலைவலி நீங்கும்... அத்துடன், தலைவழுக்கையும் மறையும். மருதாணிப் பூக்களில் சாறு அரைஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் காய்ச்சி ஆறவைத்த பசும்பாலில் கலந்து குடித்தால், கால், கை வலிகள் குணமாகும்..

வாத நோய்: அதேபோல, வாதநோய் இருந்தாலும், இந்த பூக்கள் மருந்தாகும்.. மருதாணி பூக்களை கால் கிலோ எடுத்து, அரை லிட்டர் வேப்பெண்ணெய்யில் காய்ச்சிவைத்து கொண்டால் போதும்.. வாத வலியுள்ள பகுதிகளில் தடவிவந்தால், பக்க வாத நோய் மெல்ல குணமடையும். தேமல், கரப்பான் புண்களுக்கு, இந்த பூக்களை அரைத்து பற்று போல போட்டு வந்தால் போதும்..


முகம் பார்க்கும் கண்ணாடியை எங்கே வைக்கலாம்



முகம் பார்க்கும் கண்ணாடியை நிலைவாசலில் வைக்கலாமா? எந்த திசையில் மாட்ட வேண்டும்     முகம் பார்க்கும் கண்ணாடியை எங்கே வைக்கலாம், எங்கெல்லாம் வைக்கக் கூடாது தெரியுமா? தவறான இடத்தில் வைத்திருந்தால் உடனே மாற்றிவிடுங்க!





பொதுவாக வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடியை பயன்படுத்துவோம். அதில் கூட எங்கே வைத்து உபயோகப்படுத்த வேண்டும் என்பது இருக்கிறது. அது போல் எங்கே வைக்கக் கூடாது என்பதும் இருக்கிறது. கண்ணாடியில் வாஸ்துவா என நீங்கள் கேட்கலாமா? கண்ணாடி எல்லாம் லட்சுமி கடாட்சம்!

ஒரு சிலர் கண்ணாடியை படுக்கை அறையில் நாம் எழுந்திருக்கும் திசைக்கு எதிரே வைத்திருப்பார்கள். இது மிகவும் தவறு. இதை மறந்தும் கூட செய்யாதீர்கள். இப்படி வைத்தால் கண்ணாடியால் நிறைய எதிர்வினைகள் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் நாம் கண்ணாடியை பார்த்துக் கொண்டு எழுவதால் நாம் எந்த செயலை செய்தாலும் அது தோல்வியில்தான் முடியும்.

ஒரு வேளை படுக்கை அறையில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கண்ணாடி இருந்தால் அதை எடுத்து திருப்பி வையுங்கள். இல்லாவிட்டால் அதன் மீது ஒரு துணியை போட்டு மூடி வையுங்கள். காலையில் உங்களுக்கு தேவையானபோது திறந்து பார்த்துக் கொள்ளலாம். அது போல் குளியல் அறையிலும் வைக்கக் கூடாது என்கிறார்கள்.

அப்படியே வைத்தாலும் வடக்கு திசையிலிருக்கும் சுவற்றில் அல்லது கிழக்கு திசை சுவற்றில்தான் வைக்க வேண்டுமாம். இது தவிர்த்து தெற்கு அல்லது மேற்கு திசையில் கண்ணாடி வைத்திருந்தால் வீட்டில் உள்ளோருக்கு நோய்கள் ஏற்படக் கூடும் என்கிறார்கள்.

அது போல் நிலை வாசலில் சிலர் கண்ணாடியை வைத்திருப்பார்கள். இது அதிர்ஷ்டத்திற்காகத்தான். ஆனால் இப்படி வைக்கப்படும் கண்ணாடியாலும் சிலருக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. நிலை வாசலில் கண்ணாடி வைப்பதால் ஒரு சிலருக்கு பணப்பிரச்சினையும் ஒரு சில குடும்பங்களில் சண்டைகளை கூட இழுத்துவிடும்.



நிலை வாசலின் மேல் கண்ணாடி இருந்தால் அதை எடுத்து சுவற்றில் ஆணி அடித்து மாட்டி விடுங்கள். அதே நேரத்தில் வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்கள் நுழைந்ததும் கண்ணாடியை பார்க்கும் படியாக இருத்தல் வேண்டும். வீட்டின் நிலைவாசலில் அஷ்டலட்சுமிகள் வாசம் கொள்வார்கள். எனவே அங்கு கண்ணாடியை வைத்தால் வீட்டிற்கு வருவோரின் எண்ணங்களை அந்த கண்ணாடி உள்வாங்கும்.

வாஸ் பேசினில் கண்ணாடி வைக்க வேண்டும் என்றால் அதை மேற்கு, தெற்கு பகுதியில் வைக்கலாம். மற்ற இரு திசைகளில் வைக்கவே கூடாது. வீட்டில் மேற்கு, தெற்கு திசையில்தான் கண்ணாடிகளை வைக்க வேண்டும். உங்கள் வீட்டில் கஷ்டங்கள் இருந்தால் உடனே கண்ணாடியை எடுத்து வைத்து சரியான இடத்தில் வையுங்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை! பாசிட்டிவ்வுடன் செய்தால் நிச்சயம் வெற்றிதான்!


Monday, 1 April 2024

தோப்புக்கரணத்தில் இத்தனை நலன்?



தினந்தோறும் போடுங்கள் தோப்புக்கரணம்.. தப்பாமல் போடும் தோப்புக்கரணத்தில் இத்தனை நலன்? ஆயுளும் கூடும்
மாணவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக தோப்புக்கரணம் போட சொல்கிறார்கள்.. யோகாசனத்தில் முக்கிய பயிற்சியே இந்த தோப்புக்கரணம்தான்.. அப்படியானால் தோப்புக்கரணம் என்பது தண்டனையா? பயிற்சியா? தோப்புக்கரணம் செய்வதற்கும் அறிவியல் மற்றும் ஆன்மீக காரணங்கள் உள்ளன.

தோப்புக்கரணம் போடுவதற்கென்றே ஒரு முறை இருக்கிறதாம்.. நம்முடைய தோள்பட்டை அகலத்துக்கு கால்களை பிரித்து வைத்து நிற்க வேண்டும்.. பிறகு, இடது கையை மடக்கி இடது கையின் பெருவிரலால் வலது காது மடலின் நுனியை பிடித்து கொள்ள வேண்டும். அப்போது, கட்டை விரல் காதின் முன்புறமும், ஆள்காட்டி விரல் காதின் பின்புறமும் இருக்க வேண்டும்.



Amazing Health Benefits of Thoppukaranam and Can Pregnant Women do this Super thoppukaranam Exercise daily
இதுதான் முறை: வலது கையானது இடது கையின் மேல் இருக்க வேண்டும். 2 கால்களையும் மடக்கி முதுகை வளைக்காமல் நேராக உட்காரும் நிலையில் தோப்பு கரணம் போட வேண்டும். உட்காரும் நிலையில், நம்மால் எவ்வளவு முடிகிறதோ அந்த அளவுக்கு செய்யலாம். எழும்போது மூச்சை வெளியே விட்டபடியே எழ வேண்டும்.

அதாவது, தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களை பிடிக்கும்போது, உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது.. அதேபோல, உட்கார்ந்து எழும்போது, காலில் இருக்கக்கூடிய சோலியஸ் என்ற தசை இயங்க துவங்குகிறது. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகிறது..

உறுப்புகள்: அதுமட்டுமல்ல, காதுகளில் தான் இதயம், சிறுநீரகம், மூளை, வயிறு கண்கள் கீழ், மேல்தாடை, ஈரல், காது நரம்பு என அத்தனை உறுப்புகளின் தொடர்பு புள்ளிகளும் உள்ளதால்தான், மொத்த உடல் உறுப்புகளும் பலன் பெறுகின்றன. இடுப்பிலுள்ள ஜவ்வு, எலும்பு தசைகளும் பலம்பெறுகின்றன. இதன்காரணமாகவே, கர்ப்பிணிகளை தோப்புக்கரணம் போடச் சொல்கிறார்கள். இதனால், கருப்பை சுருங்கிவிரிந்து, சுகப்பிரசவம் எளிதாக நடக்குமாம்.


தோப்புக்கரணம் போடுவதால் உடலும், மனமும் பலம் பெறுகிறது.. ரத்த ஓட்டம் உடலில் அதிகரிக்கிறது.. இதனால், அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது.. முறையான நடைமுறைகளுடன் தோப்புக்கரணம் போடுவதால் கால்கள், இடுப்பு, முதுகு மற்றும் கைகளில் உள்ள தசைகளை வலுப்பெறுகிறது. செரிமானம் அதிகமாகிறது.. தூக்கமின்மை பிரச்சனை தீர்கிறது..



Amazing Health Benefits of Thoppukaranam and Can Pregnant Women do this Super thoppukaranam Exercise daily
ஆன்மீக காரணம்: தோப்புக்கரணம் பின்னணியில் உள்ள ஆன்மீக காரணம் என்ன தெரியுமா? கஜமுகாசுரன் என்ற ஒரு அசுரன் இருந்தானாம்.. அவன் தான் பெற்ற வரத்தின் வலிமையால், தேவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தான்.. அத்துடன் நிறைய கொடுமைகளையும் தேவர்களுக்கு தந்து வந்தானாம்.. முக்கிய தன்னை பார்க்கும்போதெல்லாம், தோப்புக்கரணம் போட வேண்டும் என்று உத்தரவு போட்டானாம்.


தேவர்களும், அந்த அசுரனுக்கு பயந்து, அதன்படியே தோப்புக்கரணம் போட்டு வந்தனர்.. ஆனாலும், இந்த தொல்லை தாங்காமல், விநாயகரிடம் சென்று முறையிட்டுள்ளார்கள்.. உடனே விநாயகரும், கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ய புறப்பட்டார்.

ஆனால், அந்த கஜமுகாசுரன் விநாயகரையும், தோப்புக்கரணம் போடுமாறு உத்தரவிட்டானாம். இதனால் கோபம் அடைந்த விநாயகர் தன்னுடைய தந்தத்தாலேயே, அந்த அசுரனை குத்திக்கொன்றுவிட்டாராம்..

விநாயகர்: இதனால் தேவர்கள், நன்றி சொல்லும்விதமாக, விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு மரியாதை செலுத்த துவங்கினார்களாம்.. அதனால்ன் இப்போதுவரை பக்தர்களும் விநாயகருக்கு தோப்புக்கரணம் செலுத்துகிறார்கள்.

தோப்புக்கரணம் செய்தாலே, மூளையிலுள்ள நரம்புகள் வலிமை பெறுமாம். அதனால்தான், குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை தோப்புக்கரணம் செய்ய சொல்கிறார்களாம்.. எப்படியோ, தோப்புக்கரணம் ஒரு எளிமையான பயிற்சி என்றாலும், இது சக்தி வாய்ந்த பயிற்சி என்பதை மறந்துவிடக்கூடாது..!!