jaga flash news

Saturday, 9 April 2016

தர்மம் என்பது எதன் மூலம் நிலைநிறுத்தப்படுகிறதோ அதுவே தர்மம்.

ஒருமுறை
அர்ஜுனனுக்கு ஒரு ஐயம் ஏற்பட்டது.உண்மையை பேசுவது தர்மம் ஆகுமா? தன் ஐயத்தை தீர்த்துக்கொள்ள பகவான் கிருஷ்ணனிடம் சென்றார்.
"கிருஷ்ணா ! ஒருவன் உண்மையை மட்டும் பேசுவானேயானால் அவன் தர்மத்தை பின்பற்றியவன் ஆவானா?? என கேட்டார்.
அதற்கு பகவான் கிருஷ்ணன் ஒரு சின்ன கதை சொன்னார். "அர்ஜுனா ! ஒரு முனிவர் காட்டில் வசித்து வந்தார். ஒரு வழிப்போக்கன் கனமான மூட்டையுடன் தலைதெறிக்க முனிவரை நோக்கி ஓடி வந்தார். அவர் தன்னை காப்பாற்றும் படி கேட்டார். என்னிடம் உள்ள பொருட்களை அபகரிக்க திருடர்கள் வருகிறார்கள் என்றான். முனிவர், அவர் மேல் இரக்கம் கொண்டு சற்று அருகில் இருந்த புதரில் மறைத்து இருக்க சொன்னார் "
சற்று நேரத்தில் திருடர்கள் நால்வர் வந்தனர். முனிவரிடம் "இந்த பக்கமாக ஒருவன் ஓடி வந்தானா? அவன் எந்த வழியில் சென்றான்?" என கேட்டனர். முனிவர், என்ன சொல்வது என யோசித்தார். உண்மை பேசுவதுதான் தர்மம் என வழிப்போக்கன் மறைத்திருந்த புதரை காட்டினார். திருடர்கள் வழிப்போக்கனை அடித்து காயப்படுத்திவிட்டு பொருட்களை அவரிடமிருந்து எடுத்துசென்றனர்.
பிறகு, அந்த வழிப்போக்கன் முனிவரிடம் வந்து "தங்களை நம்பிய என்னை கட்டிக்கொடுத்துவிட்டிரே? அவர்கள் என் பொருட்களை எல்லாம் கைப்பற்றி சென்றுவிட்டனர்" என கேட்டார். முனிவர் காட்டிக் கொடுத்ததால் தர்மம் தவறிவிட்டதாக வருத்தப்பட்டார்.
எனவே...
அர்ஜுனா! உண்மை பேசுவது மட்டும் தர்மம் ஆகாது. பொய் பேசினால் தர்மம் நிலைக்குமாயின்,,, பொய்யும் சில நேரம் தர்மம் ஆகும். தர்மம் என்பது எதன் மூலம் நிலைநிறுத்தப்படுகிறதோ அதுவே தர்மம். உண்மை,பொய் இரண்டும் தர்மம் எது என்பதை பொறுத்து மாறுபடுகின்றது.
என்றார்..

No comments:

Post a Comment