jaga flash news

Tuesday, 12 April 2016

சிவபெருமானின் நினைவில் சாப்பிடும் உணவு தேவலோக உணவு…

சிவபெருமானின் நினைவில் சாப்பிடும் உணவு தேவலோக உணவு…
சாப்பிடும்பொழுது உணவைப் பார்த்து சாப்பிடு என்பார்கள்.. ஆனால்யாரையும் பார்க்காமல் நாம் சாப்பிட்டாலும்..மனதில் ஏதாவது கவலையோ.துன்பமோ..இதை நினைத்துக் கொண்டு பேசாமல் சாப்பிட்டால் அதுவும் நமக்கு பாதிப்புதான்.. சாப்பிடும் பொழுது அந்த உணவு சாத்வீகமானதா என்று பார்க்க வேண்டும்..அதாவது அந்த உணவில் எந்த ஒரு உயிரினமும் துன்பப்பட்டு அதனுடைய உடலை கொடுத்திருக்க கூடாது.. இரண்டாவது நாம் சாப்பிடும் உணவு புலன்களை தவறான வழியில் கொண்டு செல்லக்கூடாது.. மூன்றாவது நேர்மையான வழியில் சம்பாதித்த பணத்தில்உண்ணக்கூடிய உணவாக இருத்தல் வேண்டும்.. நான்காவது பிறரை துன்புறுத்தி வாங்கிய உணவாக இருக்ககூடாது.. இதையெல்லாம் விடசாப்பிடும் பொழுது தொலைக்காட்சி அல்லது திரைப் படங்களை பார்த்துகொண்டு சாப்பிடக்கூடாது.. அந்த உணவின் ஒவ்வொரு தானியமும் முதலில் இறைவனுடைய எண்ணத்தில் வந்து பிறகு பலரது உழைப்பால் உங்கள் முன்னால் உணவாக உள்ளது..அந்த உணவை சாப்பிடும் பொழுது அந்த பயிரானது உங்களுக்காக அமைதியாக அதனுடைய உயிரை கொடுத்துள்ளது என்று உணரவேண்டும்.. பலரது உழைப்பிற்கு நாம் விலை கொடுத்து விட்டாலும்.. நமக்கு சம்பாத்தியத்தை தருபவர் இறைவன்.. அந்த இறைவனின் கருணையால் தான் நமக்கு உணவு நம்முடைய தட்டில் வந்துள்ளது..எனவே அந்த உணவை படைத்த தந்தை சிவபெருமானை ஜோதியாக நினைவு செய்தவாறே சாப்பிடவேண்டும் ஆன்மாவாகிய எனக்கு உணவளித்த தந்தையே உங்களுக்கு நன்றி என்று சொல்லிக்கொண்டே அவரது அன்பில் மூழ்கி சாப்பிடவேண்டும்..இறைவன் ஜோதியாக உங்களை உங்கள் முன்னால் அமர்ந்து பார்த்துகொண்டிருக்க..அவரை நாம் மனக்கண்ணால் பார்த்துக்கொண்டே மிகுந்த மகிழ்வுடன் உணவை உண்ணவேண்டும்.. ஒவ்வொரு முறையும் உணவு உண்ணும் பொழுதும் இவ்வாறு கவனம் கொடுக்க வேண்டும்..நீர் அருந்தும் பொழுதும் அப்படியே செய்யவேண்டும்..இதனால் என்ன அதிசயம் நிகழும் தெரியுமா?நம்முடைய உடலில் உள்ள சகல வியாதிகளும் விடைபெற்றுசென்றுவிடும் அது எப்பேர்பட்ட கடுமையான வியாதிகளாக இருந்தாலும் சரி..அடுத்து நம்முடைய உடலில் உள்ள ஊட்ட சத்து குறைபாடு தன்னால் நீங்கிவிடும்.. ஏனென்றால் இறைவனின் நினைவில் சாப்பிடும்பொழுது எல்லா புரத சத்துக்களும் அந்த உணவில் வந்துவிடும்.. மனதில் கவலைகள் வராது..எப்பொழுதும் மனம் மகிழ்ச்சியால் துள்ளிக்கொண்டே இருக்கும்..யாரை பற்றியும் மனதில் வீண் சிந்தனைகள் வராது..எல்லோரை பற்றியும் நல்ல.. எண்ணங்களே ஊற்றெடுக்கும்..பிறரது பிரச்னைகளை தீர்க்கும் ஆற்றல் வளரும்.. எப்பொழுதும் திட சிந்தனை இருக்கும்.. முடிவெடுக்கும் திறமை வந்துவிடும்.. பகுத்தறிய கூடிய ஆற்றல் வளரும்..இறை சிந்தனை மேலோங்கும்..மொத்தத்தில் குடும்பத்திலும் உங்கள் சுற்றத்தாருக்கும் இனிமையானவராக மாறிவிடுவீர்கள்.. இறைவனுடைய நினைவில் சாப்பிடும் ஒவ்வொரு வேளையும்.. முன்னேற்றம் ஆகி கொண்டிருப்பதை கண்கூடாக காணலாம்.. 

1 comment: