jaga flash news

Friday, 27 January 2017

தவம் என்பது என்ன?

தவம் என்பது என்ன?
தன்னை அறியாது
தான் நல்லன் என்னாது இங்கு
இன்மை அறியாது 
இளையார் என்று ஓராது
வன்மையில் வந்திடும்
கூற்றம் வருமுன்னம்
தன்மையும் நல்ல தவம் செய்யும் நீரே!
திருமந்திரம்
தவம் என்பது தன் கடமையை ஒழுங்காகச்
செய்வது மட்டுமல்ல அவரவர் கடமையை ஒழுங்காகச் செய்வதுடன், வாக்காலும் பொருளாலும் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும். நான் நல்லவன், என்னால் தான் இப்படி கொடுக்க முடியும் செய்ய முடியும் என்ற எண்ணமில்லாமல் செய்ய வேண்டும். ம்ஹும்! என்கிட்ட கையில காசு இல்ல! என்கிட்ட மட்டும் இருந்துச்சுன்னா ஊருக்கே அள்ளிக் கொடுப்பேன் என்று வாய்ப்பந்தல் போடக்கூடாது. பொருள் இல்லா விட்டாலும் அடுத்தவர்களுக்கு உள்ளன்புடன் நம்பிக்கை ஊட்டும் பணியை செய்ய வேண்டும். இப்படிப் பட்ட நல்ல பழக்க வழக்கங்கள் எல்லாம் நமக்கு மட்டுமல்ல. சிறுவயதிலிருந்தே நமது குழந்தை களுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும் என்ற தகவலையும் இப்பாடலில் நம்மை உணர வைக்கிறார் திருமூலர்.

2 comments:

  1. Every charitable act is a sleeping stone 2wards heaven.

    ReplyDelete
  2. திருமூலர் பாடல் அருமை.

    ReplyDelete