jaga flash news

Wednesday, 4 January 2017

குட்டி கதை

"குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
"வருத்தப்படாதே,
என்ன பிரச்சனை?" என்று கேட்டார் குரு.
"என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்றான் வந்தவன்.
வந்தவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது.
அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
"அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.
பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை.
இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் இன்னொரு கார் ஒன்று குறுக்கே வந்துவிட்டது.
இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின. தவறு எதிரில் வந்தவனுடையதுதான்.
இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்சி ஓட்டுநரைத் திட்டினான்.
ஆனால் ஆச்சர்யம்!
பதிலுக்கு டாக்ஸி ஓட்டுனர் அவனை திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார்.
இதே போல் இன்னொரு சம்பவம்.
அதிலும் டாக்ஸி ஓட்டுனர்,
பொறுமை இழக்கவில்லை.
ஆத்திரப்படவில்லை. நிதானமாக இருந்தார்.
இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு.
இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுனரிடம் கேட்டார்.
"எப்படி இவ்வளவு பொறுமையாய்,
யாருடைய திட்டுக்கும் பொருட்படுத்தாமல் வண்டி ஒட்டுகிறீர்கள்?"
அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுனர்,
"என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது.
வீதியில் போவோர் அள்ளிக் கொட்டும்
குப்பைகளையெல்லாம் என் மனதில்
சேர்த்துக்கொள்ளவில்லை.
அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டு
பதில் சொல்லிக்கொண்டிருந்தால்
நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய முடியாது."
இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய
வேண்டியது என்ன என்பது வந்தவனுக்கு புரிந்தது.
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும்,கொஞ்ச நஞ்ச இடைஞ்சல்கள் அல்ல.

2 comments:

  1. ஆஹா, அருமை அருமை அய்யா. இதைப் படித்தவுடன் ஒரு கவிதை பிறந்ததைய்யா.

    பாவ சேற்றில் வீழ்ந்து கிடந்தேன்..
    சோதனைப் புயலில் சிக்கி தவித்தேன்.
    வேதனையில் மூழ்கிப் போனேன்...
    ஏளனங்களில் ஏங்கித் தவித்தேன்.
    பாதை தெரியா இருளில் திரிந்தேன்..
    வாழ்வின் விடை அறியா மெளனமா
    னேன்.
    என்னை தேடி வந்தீரையா !
    புது வாழ்வு தந்தீரையா ! பாவங்களை நீக்கி, புதிய பாதை காட்டி விடை தந்தீரையா ! என் வாழ்வின் வினை
    தீர்த்தீரைய்யா ! விண்ணில் இருந்து வந்து, மண்ணில் உதித்து, மண்ணான என்னை, விண்ணில் சேர்த்தீரையா!
    *பிறந்தது புது வாழ்வு.* என்னில் வெ.சாமி அவர்களின் இக்கதை மூலம்.

    ReplyDelete
  2. என்னைப் பற்றி குறைகூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். இதற்கு என்ன வழி. இந்த வரிகளுக்கு ஒரு வேடிக்கையான, சிந்திக்ககூடிய கதை.

    An Old Lion was lying sick in a cave.
    All the animals had been 2 pay their respects 2 the tsar, except the fox.
    The wolf seized the chance 2 say nasty things about the fox 2 the tsar.

    She doesn't think much of U he said.
    She hasn't been 1ce 2 pay her respects 2 the tsar.

    At these words up ran the fox. She heard what the wolf said & thought: "Just U wait, wolf, I'll get my revenge."

    The lion roared at the fox, but she said 2 him.

    "Let me say a word before U kill me. I did not come before, because I hadn't time. And I hadn't time, because I was running all over the place asking doctors how 2 make U better. I have 1ly just found out how & hurried 2 tell U.

    Well, said the tsar. What will make me better?

    I'll tell U. U must flay a wolf alive & put on his skin while it is still warm..

    The lion tore the wolf 2 pieces, & the fox laughed & said:

    Serves U right, bro. Rulers should be encouraged 2 do good, not bad.
    Ok...jumpsuit.

    That's all.

    ReplyDelete