jaga flash news

Saturday, 29 April 2017

ஞானம்

கடலை தவிர்த்து அலைகள் எவ்வாறு வேறில்லையோ, அவ்வாறே பிரம்மத்தில் இருந்தும் ஜீவன் வேறு இல்லை. 
அலை என்பது கலடலில் ஒரு தோற்ற மாத்திரமே. ஜீவன் என்பது பிரம்மத்தில் ஒரு தோற்ற மாத்திரமே.
தங்கமே வலை, கடகம் போன்ற பல பல தோற்றம் அளிப்பதை போன்று பிரம்மமே ஜீவனாக, உலகமாக தோன்றுகிறது.
வெளிச்சம் வந்தவுடன் இருள் எந்த முயற்சியும் இன்றி தானாகவே மறைவது போன்றே, ஞானம் பிறந்தவுடன் ஜீவன் வேறு பிரம்மம் வேறு என்னும் அக்ஞானம் தானாகவே மறையும்.

1 comment:

  1. ஞானம், தலைப்புக்கு ஒரு கதை.

    மாலை மயங்குகிற வேளையில் ஒரு சிறுவன், *மிதிவண்டியில்* சாலையில்
    சென்று கொண்டிருந்தான்.

    அவன் வருவதைப் பார்த்த ஒரு போலீஸ்காரர், அவனது சைக்கிளை நிறுத்தி, தம்பி..டைனமோ லைட்டை எரியச் செய்யாமல் ஏன் சைக்கிளை ஓட்டி வருகிறாய் என்று கேட்டார்.

    உடனே அவன், இந்த சாலையின் இருபுறமும் அநேக விளக்குகள் எரிகின்றன. பட்டப் பகலைப் போல, வெளிச்சமாக உள்ளது.

    என் சைக்கிளில் வெளிச்சமில்லாதது குற்றமா? என்றான். இதைக் கேட்ட போலீஸ்காரர் அவனை சாலையின் ஒரு
    ஓரமாக அழைத்துச் சென்று, *அவனது
    சைக்கிளின் பின் சக்கரத்திலிருந்த காற்றை பிடுங்கிவிட்டார்.*

    காற்று எல்லா இடத்திலும் தான் உள்ளது...ஆனால், உன் சைக்கிளில் காற்று இல்லை என்றால் உன்னால் ஓட்டிச் செல்ல முடியுமா? என்றார்.

    இந்த செயல் சிறுவனை கோபமடைய செய்தாலும், சற்று நேரத்தில் அது அவனை சிந்திக்க வைத்தது.

    ஆம். எங்கு பார்த்தாலும், பகவானின் ஆலயங்கள், உபன்யாசம் (சொற்பொழிவு), உபநிடதம் (வேத ஆராய்ச்சி ) ஆலய வழிபாடு என்றிருந்தாலும், அந்த *ஞானமாகிய ஒளி* இறைபக்தி, இறைஞானம், நம் உள்ளத்தில் இருக்க வேண்டும். மட்டுமல்ல, மற்றவர்களுக்கு பிரதிபலிக்கும் ஒளியாய் இருக்க வேண்டும்.

    ReplyDelete