jaga flash news

Saturday, 29 April 2017

ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!

ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!
*********************************************************************************
ஒவ்வொரு சுப நிகழ்ச்சியின் போது பிள்ளையார் பிடித்து வைப்பதை காண்கிறோம்.
ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும்.
1. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
2. குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.
3. புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்,விவசாயம் செழிக்கும்
4. வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.
5. உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.
6. வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி,சூன்னியம் விலகும்.
7. விபூதியால் பிள்ளையார் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்
8. சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
9. சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்
10. வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்
11. வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்
12. சர்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்கரை நோய்யின் வீரியம் குறையும்.

2 comments:

  1. *வெள்ளெருக்கு*

    ஒளவையார் பாட்டி பாடிய நல்வழி நூலில் 23−வது பாடல் வரிகள்.

    வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
    பாதாள மூலி படருமே − மூதேவி
    சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
    மன்றோரஞ் சொன்னார் மனை.

    Annotation : நீதீமன்றத்தில் ஒருதலை பட்சமாக நீதிவழங்கியவர் வீட்டில், *பேய் அடையும், வெள் எருக்கு மலரும், பாதாள மூலிக் கொடி படரும், மூதேவி குடிபுகுவாள், பாம்பு குடிபுகும். எவ்வளவு அருமையா பாட்டி பாடிண்டு போயிருக்கிறாள்.

    ReplyDelete
  2. நாங்கள் பொங்கல் இடும்முன், சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்தபின் தான், பொங்கலிடுவோம்.என் அத்தை (மாமியார்) கற்றுத் தந்தது.

    ReplyDelete