jaga flash news

Thursday, 19 March 2020

ராசிVsதிதி


Tamil News

ஒவ்வொரு ராசிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய திதிகள் தெரியுமா?
Samayam Tamil | Updated: 18 Mar 2020, 04:24:24 PM
நம் ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் நடக்கும் என்பதை தினப்பலனில் பார்க்க முடியும். நாம் சந்திரஷ்டம நாளில் எப்படி கவனமாக இருக்க வேண்டுமோ அதே போல் உங்களுக்கு ஒத்துவராத சில திதிகள் உள்ளன. அவற்றை அறிந்து நடந்து கொள்வது நல்லது.
Astrology Remedies
Astrology Remedies
   
நாம் தினமும் வாழ்வில் பல பிரச்னைகள், சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். நமக்கு இன்றைய தினம் எப்படி அமையும், எப்படி நாம் இந்த நாளை அணுகலாம் என்பதை நாம் தினமும் காலையில் இன்றைய ராசி பலன் பார்த்து நம் ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் இருக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.


பொதுவாக ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருந்தாலும், சில நாட்கள் சந்திராஷ்டமம் என குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் நாம் சற்று கவனமாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.

அப்படி சந்திரன் உங்கள் ராசிக்கு அல்லது உங்கள் நட்சத்திரத்திற்கு எட்டாவது இடத்தில் இருக்கும் போது உங்களுக்கு சந்திராஷ்டம ஏற்படுகிறது. அந்த நாட்களில் நாம் மன சஞ்சலம், இறுக்கம் இருக்கும் என்பதால் அந்த நாளில் கவனமாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.

அதைத்தாண்டி மொத்தம் உள்ள 15 திதிகள் ஒரு மாதத்தில் இரு முறை வருவதுண்டு. சில திதிகள் சில ராசியினருக்கு நற்பலன்கள் தராது அவை என்ன என்ற பட்டியலை இங்கு பார்ப்போம்.

அதிசார குருப்பெயர்ச்சி காலம், குரு வக்கிரம் அடையும் காலம் என்ன?

ராசிகளும், தித்திகளும்
மேஷ ராசி - சஷ்டி திதி

ரிஷப ராசி - சதுர்த்தி, திரயோதசி

மிதுன ராசி- பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி

கடக ராசி - சப்தமி

சிம்ம ராசி - திருதியை, அஷ்டமி, நவமி, தசமி, திரயோதசி

கன்னி ராசி- பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி

துலாம் ராசி - பிரதமை, துவாதசி

Guru Vakram 2020: குரு, சனி உள்ளிட்ட கிரகங்களின் வக்ரம், அதிசார பெயர்ச்சி என்றால் என்ன?

விருச்சிக ராசி - நவமி, தசமி

தனுசு ராசி - துவிதியை, சப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி

மகரம் ராசி - பிரதமை, திருதியை, துவாதசி

கும்பம் ராசி - சதுர்த்தி

மீனம் ராசி - துவிதியை, ஏகாதசி, சதுர்த்தசி

மீன ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்: லாப ஸ்தானத்தில் குருவும், சனியும் அமைந்து ஜாக்பாட் அடிக்குது

ஒவ்வொரு திதியும் திதிகளும் வளர்பிறை மற்றும் தேய்பிறை என மாதத்தில் இரு முறை வரக்கூடியது. அதனால் மேலே குறிப்பிட்டுள்ள ராசிகள் உங்களுக்கு நற்பலனைத் தராத இந்த திதிகளில் கவனம் தேவை. 

No comments:

Post a Comment