jaga flash news

Monday, 30 March 2020

திருச்சி உச்சி பிள்ளையாா் கோவில்




திருச்சி உச்சி பிள்ளையாா் கோவில்
திருச்சியை என்றவுடன் கண் முன்னே தெரிவது மலைக்கோட்டையில் உள்ள உச்சி பிள்ளையாா் கோவிலும் அதன் கம்பீரமும் தான்.

 ஸ்வாமி : உச்சி பிள்ளையாா், தாயுமானஸ்வாமி, மாணிக்க விநாயகா்.

 அம்பாள் : மட்டுவாா்குழலி.

  தீர்த்தம் : காவிரி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்.

 தலவிருட்சம் : வில்வம்.

  வரலாறு :

1  தென்னிந்தியாவில் உள்ள மாநிலமான தமிழகத்தில் உள்ள திருச்சி மாநகரில் அமைந்துள்ளது உச்சிப்பிள்ளையாா் கோவில். திருச்சீராபுரம் என்ற பெயரே., திருச்சிராப்பள்ளி ஆனது என்கின்றனர்.
2  சுமார் 1800 வருக்ஷங்களுக்கு முன்பே, குணபரன் என்ற மகேந்திர பல்லவ மன்னர் காலத்தில் இதைக் கட்ட ஆரம்பித்து, மதுரை நாயக்க மன்னர்களால் விஜய மன்னர்கள் முன்னிலையில் பூா்த்தி செய்யப்பட்டது. இதைப் பூா்த்தி செய்ய 300 மனிதர்கள் தொடர்ந்து 11 வருடங்கள் உழைத்தாா்கள் என்று வரலாற்றுக் குறிப்பு கூறுகின்றது.

3  இந்த கோவிலுக்கு செல்லும் படிகள் செங்குத்தாக இருக்கிறது. இங்கிருந்து பார்த்தால், திருச்சி நகா் முழுவதும் அழகாய் காணலாம்.
மேலும் ஸ்ரீரங்கம் கோவிலும் காவேரி நதியும், கொள்ளிடமும் நன்கு தெரியும். இது, 150 அடி உயரமும், 437 படிக்கட்டுக்களும் கொண்டது.

4  இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோவில், மேலே உச்சிப்பிள்ளையாா் கோவில், மற்றும் இடையே தாயுமானவா் கோவில் ஆகியவை உள்ளன. தாயுமானஸ்வாமி  கோவிலில் நூற்றுகால் மண்டபம் உள்ளது., மேலும் தாயுமானஸ்வாமி கோவிலின் விமானம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. இதைத் தவிர பல்லவர் கால குடைவரை கோவிலும்., பாண்டியா் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.

5  மலைகோட்டையின் தெற்கு பக்கத்தில் பல்லவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட குகை கோவில்கள் உள்ளன.

6  உலகத்திலேயே மிகவும் பழமையான மலைக்கோவில் இது என்று கூறுகின்றனா். இவைகள் எல்லாம் இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.

7 துவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது., ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.


கோவிலின் சிறப்புகள் :

விநாயகர் என்றாலே வினைகளை களைப்பவா் என்பது பொருள்.
எந்த காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு வெற்றியை உறுதி செய்ய., விநாயக பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, அருகம்புல் சாற்றி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனா்.


No comments:

Post a Comment