jaga flash news

Thursday, 24 December 2020

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலன்கள்

#அஸ்வினி நட்சத்திரத்தில் 
பிறந்தவர்கள் பலன்கள்


அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி 
#கேது பகவான். அஸ்வினி நட்சத்திரம் இருக்கும் ராசி மேஷம், அதன் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அவர்களுடைய சொந்த ஜாதகத்தில் கேது பகவான் மற்றும் செவ்வாய் பகவான் மற்றும் சார வாரியாக நவாம்ச நாதர்களின் நிலையைப் பொறுத்து பலன்கள் இன்னும் நுட்பமாக மாறுபடும்.

#அஸ்வினியில் பிறந்தவர்கள் தன் கடமைகளை சரியாக, முறையாக சிறப்பாக செய்ய வேண்டும் என்று கருதுவார்கள். அதுவும் காலதாமதம் இல்லாமல் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அஸ்வினியில் இருக்கும் சந்திரனை சுக்கிரன் மற்றும் ராகு ,சனி சம்பந்தப்பட்டால் பெண்கள் மீது அதிக மோகம் கொண்டவர்கள். சூரியன் ,செவ்வாய் ,குரு சம்பந்தப்பட்டால்
 பொது காரியங்களில் சேவை மனப்பான்மையுடன் செயல்படக்கூடியவர்கள் .செவ்வாய் மற்றும் சூரியன் சம்பந்தப்படும் போது
தைரியம் மற்றும் பராக்கிரமம் உடையவர்கள் . கோபமும் வரவேண்டிய நேரத்தில் வரும்.
#சுக்கிரன் சம்பந்தப்படும்போது
நவநாகரீகமான ஆடை அணிகலன்களை அணிவதில் விருப்பம் உடையவர்கள்.
  நற்பெயரை விரும்புவார்கள்.
 #செவ்வாய் பார்வையிடும்போது,
கோபம் வந்தால் கண்கள் சிவக்கும். புத்திசாலித்தனம் உடையவர்கள். 
#குரு பார்வை உள்ளவர்கள், நல்லவர்களிடம் #பரிசுத்தமான அன்பை பகிர்ந்து கொள்வார்கள். தெளிவான வாழ்க்கை பாதையை வாழ்பவர்கள் மேன்மை அடைவார்கள்.
 அமைதியை விரும்பக் கூடியவர்கள்.

#அஸ்வினி முதல் பாதத்தில் பிறப்பது மிகவும் விசேஷம் ஏனென்றால் ராசி நவாம்சம் முதல் சோடச வர்க்கம் வரை சந்திரனின் நிலை மிக சிறப்பாக இருக்கும்.அஸ்வினி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் பிறருடைய குற்றம் குறைகளை கண்டுபிடித்து பரப்ப கூடியவர்கள். இங்கே ஒன்று அங்கே ஒன்று கூறக் கூடியவர்கள்.
 #புதன் சம்பந்தப்படும் போது தூதுவர்களாக, விகடகவியாக இருப்பார்கள் .
சனி ,ராகு ,கேது சம்பந்தப்படும்போது மனநிலை தடுமாற்றம் உண்டு. அலைபாய கூடிய மனம் உண்டு.
 நல்ல உருவத் தோற்றம் இருக்காது. கெட்ட எண்ணம் மேலோங்கும்.

#லக்ன ரீதியாக நான்காம் அதிபதி மற்றும் ஏழாம் அதிபதி பலஹீனமாக இருந்தால் உறவினர்களை விட மற்றவர்கள் மீது பாசம் அதிகம் உண்டு.
அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திராதிபதி கேது பகவான் ராசி அதிபதி செவ்வாய் பகவான் நவாம்சத்தில் செவ்வாய் பகவான் வருவதால் செவ்வாய் மற்றும் கேது இவர்களின் நிலையை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

#அஸ்வினி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் பிறருடைய நன்மை தீமை நல்ல குணம் கெட்ட குணம் எதுவென்று எடைபோட்டு அறியக் கூடியவர்கள் . மீனம்,மேஷ லக்கினத்தில் பிறந்து இருந்தால், அழகான தோற்றம் உடையவர்கள் .பிறருக்கு எது மகிழ்ச்சி தரக் கூடியதோ அதை அறிந்து செயல்படக்கூடியவர்கள். 
#சாஸ்திரம், மெய்யறிவு இவற்றில் ஆர்வம் ஈடுபாடு உண்டு. மீனம் மேஷம் கடகம் தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி இரண்டாம் பாதத்தில் சந்திரன் இருந்தால்குரு பகவான் தனுசு மற்றும் சிம்மத்தில் இருந்து  சம்பந்தப்பட்டால் சாஸ்திர பண்டிதனாக விளங்குவான்.
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான் ராசி அதிபதி செவ்வாய் பகவான் நவாம்ச அதிபதி சுக்கிர பகவான் இவர்களின் நிலையை பொருத்து பலன்கள் நுட்பமாக மாறுபடும்.

#அஸ்வினி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் ஜோதிடம் கணிதம் சாஸ்திரத்தில் ஆர்வம் ஈடுபாடு அதிகம் உடையவர்கள் பிறருக்கு நல்ல அறிவுரைகளை கூறக் கூடியவர்கள் கன்னி, விருச்சிகம்,கும்பம் லக்னத்தில் பிறந்தவர்கள் சந்திரன் அஸ்வினி மூன்றாம் பாதத்தில் இருந்தால் மூலநோய் உடையவர்களாக இருப்பார்கள்.
துலாம் மகரம் லக்னக்காரர்கள் சந்திரன் அஸ்வினி மூன்றாம் பாதத்தில் இருந்தால் புண்ணிய காரியங்களை செய்யும் சிந்தனை உடையவர்கள்.
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி 
கேது பகவான், ராசி அதிபதி செவ்வாய் பகவான் மற்றும் நவாம்ச நாதர் புதன் பகவான் அவரவர் சொந்த ஜாதகத்தில் இருக்கும் நிலையைப் பொறுத்து பலன்கள் நுட்பமாக மாறுபடும்.

#அஸ்வினி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் நெளிவு சுளிவு மிகுந்த உறுதியானவர்கள். அறிவாளி.
 ஜோதிட சாஸ்திரம் அறிந்தவர்கள். சுக்கிரன், சனி, ராகு சம்பந்தப்பட்டால் பெண்ணாசை மிகுந்தவர்கள்.
சர லக்னத்தில் பிறந்தவர்கள்
 அஸ்வினி நான்காம் பாதத்தில் 
பிறந்து இருந்தால், அனைத்துவித சுகத்தையும் அனுபவிக்கக் கூடியவர்கள்.
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான் ராசி அதிபதி செவ்வாய் பகவான் நவாம்ச அதிபதி சந்திர பகவான் அவரவர் சொந்த ஜாதகத்தில் இருக்கும் நிலையைப் பொறுத்து பலன்கள் நுட்பமாக மாறுபடும்.

No comments:

Post a Comment