jaga flash news

Monday, 7 December 2020

ஏன் ஜாதகம் பார்க்க வேண்டும்?


ஏன் ஜாதகம் பார்க்க வேண்டும்?
இரண்டே இரண்டு விடயம்தான்...
• எது நமக்கு கிடைக்கும்.. எது நமக்கு கிடைக்காது என்று அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. ஏனெனில் கிடைக்காத ஒன்றிற்காக நாம் போராட வேண்டியநிலை ஏற்படாது. எது ஜாதக பிரகாரம் கிடைக்காதோ; அது நிச்சயமாக கிடைக்காது. நான் என்னிடம் ஜாதகம் பார்ப்பவர்களிற்கு உறுதியாக கூறிவிடுவேன் அதாவது இது கிடைக்கும் அல்லது கிடைக்காது என்று.... ஏனெனில் கிடைக்காத ஒன்றிற்காக செய்யும் வீணான முயற்சிகளை விட்டுவிட்டாலே வாழ்க்கை வெற்றியில் சென்றுவிடும். கிடைக்கும் என்ற விடயத்தில் காலநேரசூட்சுமம் ஊடாக அருமையாக அடைய முடியும்... சொந்தவீட்டு யோகம் இல்லாத ஒருவருக்கு உங்களிற்கு இந்த யோகம் இல்லை என அறிவுறுத்தியும் அவர் கேளாது தனது வாழ்க்கையில் தன்னை ஒறுத்தி பணம் சேர்த்து வீடுவாங்கும் முயற்சியில் ஏமாந்து பணம் இழந்தவர்களை எனக்கு தெரியும். இதேபோலவே வெளிநாடு மற்றும் சொந்தமாக குழந்தை கிடைக்காத நிலை. இவர்களிற்கு ஜோதிடர்களாகிய நாம் சரியாக வழிகாட்டிவிட்டாலே அவர்கள் அதை ஏற்றுக்கொண்டால் அதற்கமைய தம்வாழ்வை மாற்றியமைத்து உயர முடியும்...
• இரண்டாவது விடயம் என்னவெனில்; எமக்கு என்ன நடக்க போகின்றது என அறிந்து நம்மை பக்குவப்படுத்தும் நிலை வரும். மற்றும் “எனக்கு ஏன் இப்படி நடந்தது” என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும்...
இன்னும் ஒரு விடயம் உள்ளது....
பரிகாரம் எந்தளவுக்கு வேலைசெய்கிறது என்பதனை நிர்ணயிக்க முடியாது. ஆனால் மனம் ஆன்மீக வழி சென்று; பரம்பொருளான இறையருளை பெற்று தரும். அவர் கருணை, அன்பு கிடைக்கும்.... ஜாதகம் உங்கள் நிலையறிந்து உங்களை எவ்வழியிலும் நல்வழிப்படுத்தவே ஜோதிடர்கள் வாயிலாக உங்களுக்கு உரைக்கப்படுகிறது. உங்கள் கிரகங்கள் என்ன சொல்கிறது என பார்த்து அதுசார்ந்த முற்பிறப்பு தவறால் இந்த பிறப்பில் தண்டனை அனுபவிக்கின்றீர்கள் என உணர்ந்து செய்த தவறிற்கு பரிகாரம் செய்வதும் இனி நல்ல பாதையில் செல்வது உங்கள் கையிலே... இதுவே உங்களை இனி காக்கும்... இல்லாவிட்டால் இறைவன் மீதான அதீதஅன்பினால் அவரால் உங்கள் பாவங்கள் தீர்க்கப்பட வேண்டும். அவ்வளவு தூயபக்தி இக்கலியில் ஏற்படுவது மிகமிக அரிது. ஏற்பட்டாலும் இறைவனின் சோதனைகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர் அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஆகவே இயலுமானவரை தர்மவழி சென்று அகத்தில் இறைவனை இருத்தி உத்தமர்களாக வாழ இந்த ஜோதிட கலையினை உபயோகப்படுத்துவீர்களாக...
நன்றி;
தெய்வீகஜோதிடர் ஹரிராம்.

No comments:

Post a Comment