jaga flash news

Saturday, 20 February 2021

சீரக நீரை அன்றாடம் அருந்துவதால்...

சீரக நீரை அன்றாடம் அருந்துவதால் உண்டாகும் பயன்கள் !!

தினமும் காலையில் சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் பல நன்மைகளை பெறலாம். பல காலமாகவே நம்முடைய பாரம்பரிய மருந்துகளில் சீரகம் பயன்படுத்தப்படுகிறது.

சீரகத்தை தவறாமல் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சீரகம் உங்கள் உடலில் உள்ள செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் உங்கள் செரிமானத்திற்கு உதவும்.
சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சீரகத்தை லேசாக  வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். 

 
சீரகத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஒரு டீஸ்பூன் சீரகத்தில் சுமார் 1.4 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கும். ஜீரகம் நீரிழிவு நோயை கட்டுக்குள்  வைப்பதற்கும் உதவும்.
 
சீரகம் உடலிலிருந்து கெட்ட கொழுப்பை அகற்ற பயன்படுகிறது. சீரகத்தை சாப்பிடுவது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும். சீரகம் உடலில் உள்ள  கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும், எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. உடல் எடையை குறைப்பதற்கு சீரகத்தை தாராளமாக பயன்படுத்தலாம்.
 
சீரகத்தை அப்படியே சாப்பிடுவதன் மூலமோ, அல்லது சீரகத் தண்ணீரை தினமும் குடிப்பதன் மூலமாகவோ உடலிலிருந்து கொழுப்பை குறைக்க முடியும்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. சீரகம் : மருத்துவ குணங்கள் : பித்தம் சம்பந்தமான நோய்கள், வயிற்று நோய்கள், வாய் நோய்கள், ஈரல் நோய், காச நோய், கல்அடைப்பு, தும்மல், இரைப்பு, மூக்கு நீர் பாய்தல், வெறி, வாத நோய்கள், சீதக்கழிச்சல், அஜீரணம், சுவையின்மை, கண்ணெரிச்சல், மூலம் முதலியன குணமாகும்.

    சீரகம் : வேறு பெயர்கள் : துத்த சாம்பலம், போஜனகுடோரி, அசை, மேத்தியம், உபகும்பபீசம் சீரி, நற்சீரி, பிரத்தி−விகா, பித்தநாசினி.

    தாவரவியல் பெயர் : Cuminum Cyminum.
    குடும்பப் பெயர் : Apiaceae.
    ஆங்கிலப் பெயர் : Cumin seeds.
    தெலுங்கு : Jilakara.
    சமஸ்கிருதம் : Jirakams.
    மலையாளம் : Jirakam.
    ஹிந்தி : Zira.
    கன்னடம் : Jiriga.

    வளரியல்பு : சிறு கொடி.

    தாவரத்தின் புற அமைப்பு விளக்கம் :

    இலைகள் சிறகுவடிவக் கூட்டிலைகள். வெண்மை சிவப்பு கலந்த பூக்கள் தொகுப்பாக தண்டின் கிளைகளின் நுனியில் காணப்படும். இதில்... "கிரிமோகார்ப்" என்ற "வெடிகனி" உள்ளது. இது வெடித்தபின் விதை வெளியேறும்.

    பயன்படும் பகுதி : விதை.
    சுவை : கார்ப்பு.
    தன்மை : தட்பம்.
    பிரிவு : இனிப்பு.

    தாவர வேதிப் பொருட்கள் :

    உலர்கனியில் Thymene என்ற நறுமண எண்ணெய் உள்ளது. இதில்... Cuminol, Cymene ஆகிய "டெர்பீன்கள்" உள்ளன.

    செய்கைகள் :

    பசித்தீத்தூண்டி, அகட்டுவாய்வகற்றி, துவர்ப்பி.

    நோய் தீர்க்கும் முறைகள் :

    1) சீரகத்தை நாட்டுச் சர்க்கரை கலந்து தினமும் உண்டுவர.. மேலுதடு, கீழுதடு இரண்டும் வீங்கினால் ஏற்படும் நோய் விலகும். மேலும் உடல் பலப்படும்.

    2) சீரகத்தை கையாந்தகரைச் சாற்றில் ஊறப்போட்டு எடுத்த பொடி 4 கிராமுடன்... சர்க்கரை 2 கிராம், சுக்குப் பொடி 2 கிராம் கலந்து, தினமும் 2 வேளைகள் உண்டுவர காமாலை, வாயு, உட்சுரம் தீரும்.

    3) சிரகத்தைத் தூள் செய்து தினமும் கொடுத்துவர... எல்லா நோய்களும் நீங்கும். இதனுடன் கற்கண்டுத் தூளைக் கலந்து சாப்பிட இருமல் விலகும்.

    4) வேண்டிய அளவு சீரகத்தை, எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு, ஆகியவற்றில்..ஒவ்வொன்றிலும் மும்மூன்று முறை ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து,
    3 கிராம் வீதம்... தினமும் 2 வேளைகள் கொடுத்துவர.. உடல் சூடு, அஜீரணம், கண்ணெரிச்சல், வயிற்றுவலி, சீதக்கழிச்சல், சுவையின்மை, மூலம், பித்த மயக்கம் முதலியன குணமாகும்.

    5) சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிமுள்ளி, இவைகளை சமஅளவு எடுத்து பொடி செய்து, அதில் பாதி அளவு சர்க்கரை சேர்த்து 2 கிராம் வீதம் கொடுத்துவர பித்தத்தினால்(சூட்டினால்) உண்டாகும் அனைத்து நோய்களும் தீரும்.

    6) சீரகம், குறுந்தொட்டி வேர் சம அளவு எடுத்து, குடிநீர் செய்து...காலை, மாலை 3−நாட்கள் பருகீவர குளிர்காய்ச்சல் நீங்கும்.

    7) 100 மி.லி. நல்லெண்ணையில்...50கிராம் சீரகத்தைக் காய்ச்சி, சீரகம் ஒடியும் பக்குவத்தில் வடித்துக் கொள்ளவும். இதை தினமும் தேய்த்து..தலை முழுகிவர... வாந்தி, மயக்கம், மாந்தம், தலைவலி, கண்நோய்கள் குணமாகும்.

    8) சீரகம் 200கிராம், உலர்ந்த கற்றாழை 170கிராம், பனைவெல்லம் 170கிராம், இவற்றுடன் தேவையான அளவு பால், நெய் கலந்து லேகியமாக்கி சாப்பிட்டுவர... நீர்ச்சுருக்கு, அஜீரணம், கண்ணெரிச்சல், கை, கால், உடல் எரிச்சல், ஆசனக் கடுப்பு, மலச்சிக்கல், வயிற்றுவலி, உடல் வெப்பம் நீங்கும்.

    9) சீரகத்தை உலர்த்தித் தூள் செய்து 2கிராம் வீதம், பால் அல்லது தேனுடன் கலந்து.. தினமும் 2 −வேளைகள் கொடுத்துவர, சீதக்கழிச்சல், பித்தம், வாயு, உதிரச் சிக்கல், அஜீரணக் கழிச்சல், கண் நோய்கள் தீரும்.

    """""""""""

    சீரகச் சூரணம் :

    தேவையான பொருள் :

    1) சீரகம் = 400கி.
    2) சர்க்கரை = 100கி.

    செய்முறை :

    சுத்தம் செய்த சீரகத்தை நன்றாக இடித்துத் தூளாக்கி வந்த எடைக்கு, கால்பங்கு சர்க்கரை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

    அளவு :

    1−2கி. காலை..மாலை− 40 நாட்கள் உட்கொள்ளவும்.

    தீரும் வியாதிகள் :

    கிறுகிறுப்பு, வாந்தி, மந்தம், உஷ்ணம், காங்கை முதலியவை தீரும்.

    """""""""""""

    சீரகத் தைலம் :

    தேவையான பொருட்கள் :

    1) சீரகம் = 1500 கி.
    2) நல்லெண்ணெய் = 1.6 லி.

    செய்முறை :

    சீரகத்தை இடித்து நீரிற்போட்டு, எட்டுக்கு ஒன்றாய் கியாழம் செய்து நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி, வடித்து வைக்கவும்.

    உபயோக முறை :

    வெளி உபயோகத்திற்கு தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும்.

    தீரும் வியாதிகள் :

    பித்த மயக்கம், கண் நோய், வாந்தி, தலைவலி, மாந்தம் தீரும்.


    ×*×*×*×*×*×*×*×*×*×*×*×*×*×*×*

    ReplyDelete