jaga flash news

Sunday, 21 February 2021

பஞ்ச கச்சம் வேஷ்டி கட்டுவது எப்படி?

பஞ்சகச்சம் = பஞ்ச + கச்சம்
பஞ்ச எனில் ஐந்து. கச்சம் எனில் செருகல்.
ஆடவர் வேட்டியை ஐந்து இடங்களிற் செருகிஉடுத்தும் வகை

A mode of wearing cloth by Brahmin males mostly.
பஞ்சகச்சம் எனில் ஐந்து செருகல் கொண்ட ஆடை.
வலது இடுப்பில் ஒரு செருகல், இடது இடுப்பில் ஒன்று, பின்புறத்தில் ஒன்று, தொப்புள் பகுதியில் இரண்டு என்று ஐந்து செருகுதல் முறையையே பஞ்சகச்சம் என்று பெரியோர்களால் கூறப்படுகிறது

 பாரம்பரியத்துக்கும்,  ஆச்சாரத்துக்கும் உரிய திருமணமான ஆண்கள் அணிய வேண்டிய அவசியமான பஞ்சகச்சத்தின் பெருமையையும், முக்கியத்தையும் உணர்ந்து தெய்வீக, வைதீக நிகழ்ச்சிகளில் மற்றும் கோவிலுக்கு போகும்போது  பஞ்சகச்சம் அணிந்து செல்லலாம்.
சரியாக புரிந்து கொண்டால் மிகவும் எளியது.
 சந்த்யாவந்தனம் போன்ற நித்யகர்மாக்கள் , பூஜைகள் விசேஷங்கள் , பஜனை நிகழ்ச்சிகள் என பல சந்தர்பங்களில் பஞ்ச கச்சம் அணிந்து வரலாம் . பஞ்சகச்சம் கட்டிகொள்ளும்.

பஞ்ச கச்சம் உடுத்திக்கொள்ள
பஞ்சகச்சம் கட்டிகொள்ள ஒன்பது முழம் வேஷ்டியும் .
ஐந்து முழம் துண்டும்
(அங்க வஸ்த்ரம்/ உத்தரீயம்) தேவை
எட்டு முழம் வேஷ்டி அளவு கம்மியாக இருக்கும்.

இங்கு சொல்லப்படும் அளவுகள் தோராயமானவை அவரவர்கள் உயரம், உடல்பருமனுக்கு தகுந்தபடி மாற்றிக்கொள்ளவும் .
1) 9 முழ வேஷ்டியை முழுதாகப் பிரித்து இடுப்பின் பின்புறம் தொட்டுக்கொண்டிருக்கும்படி இரு கைகளாலும் பிடித்துக்கொள்ளவும்..
2) இடது பக்கம் உள்ள பகுதியை,வயிற்றுப்பக்கம் கொண்டுவந்து, வயிற்றுக்கு வலதுபக்கம் சுமார் ஒரு சாண் ( 9 அங்குலம் ) இருக்கும்படி பிடித்துக்கொண்டு அங்கிருந்து பாதம் வரை (சுமார் 3முழம்) தொங்கும்படி பிடித்துக்கொண்டு அதன்மேல் மீதி உள்ள ஆறு முழம்பகுதியை, வயிற்றின் மையப்பகுதி வரை கொண்டுவந்து , கொஞ்சமாக ( தேவையான அளவு ) இறுக்கி, வேஷ்டி இடுப்பிலிருந்து , நழுவாதபடி மேலிருந்து கீழாக உருட்டி விட்டுக்கொள்ளவும்.
3) இடதுபுரம் உள்ளே தொங்கும் சிறிய பகுதியை எடுத்து, உள்ளங்கையில் நாலு விரல் அளவு அகலமாக மடித்து , மடிப்புகளை நீவி ஒழுங்கு படுத்திக்கொண்டு, அதைக் கால்களின் நடுவாக பின்புரம் கொண்டு சென்று, முதுகுப்பக்கம் சொருகிக்கொள்ளவும். இப்போது இடது பக்கம் பாதம் வரை வேஷ்டி இருக்கவேண்டும்.
4) முன்புரம் தொங்கும் நீளமான 5 to 6 முழம் பகுதியை எடுத்துக்கொள்ளவும். நடு வயிற்றுப்பகுதியில் தொங்கும் , வேஷ்டியின் வர்ணமான கரை.உள்ள பாகத்தில், கீழே தொங்கும் நுனியில் ஆரம்பித்து ,நாலு விரல் அளவுக்கு ( முன்பு Step No.3-ல் உள்பக்கம் தொங்கும் பாகத்தை மடித்தது போல ) மடித்து ,வயிற்றின் நடுப்பகுதியில் சொருகிக்கொள்ளவும் .
5) பாதம் வரை கீழே தொங்கும் பகுதியை எடுத்து, , அதையும் முன்பு போல நாலு விரல் அளவு மடித்துக்கொள்ளவும். அதை வயிற்றின் நடுப்பகுதியில், தேவயான உயரம் , இறுக்கம்  உள்ளபடி சொருகிக்கொண்டு, முன்புரம் தொங்கும் கரைப்பகுதியை விரல்களால் நீவி ஒழுங்கு படுத்தவும்.
6) இரு கால் பக்கங்களிலும் பாதம் வரை தொட்டுக் கொண்டிறுக்கும்படி, வெளிப்பக்கம் தெரியும் வர்ணக் கரைப் பகுதியை , லேசாக , இங்கும் அங்கும் இழுத்து சரி செய்யவும்.
7) தேவைப்பட்டால் வேஷ்டி அவிழ்ந்துவிடுமோ என்ற பயம் இருந்தால் பெல்ட் அல்லது வேறு ஒரு துண்டு, இடுப்பில் கட்டிக்கொள்ளவும்.
8) ஐந்து முழம் அங்கவஸ்த்திரத்தை, தேவையான அகலத்துக்கு ஆக மடித்துக்கொண்டு, இடது தோளின்மீது போட்டுக்கொண்டு, , பின்பக்கம் தொங்கும் பகுதியை வலதுபுறம் தோளின் கீழாக ( அக்குள் வழியாக ), இடது தோள்மேல் போட்டுக்கொள்ளவும் . இது உத்தரீயம் எனப்படும்.
9) அல்லது இடுப்பில் வட்டமாக சுற்றிக்கட்டிக்கொள்ளவும் .
அவ்வளவுதான். பஞ்சகச்சம் ரெடி ! வீடியோவிலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment