jaga flash news

Friday, 28 May 2021

கொரோனாவும் துளசியும்

வீட்டில் வேப்பிலை கட்டி கிருமி வராமல் தடுப்பர். அது போல தான் கொரோனாவும்.ஒரு சிலர் காய்ச்சல் வந்து மறுநாள் சரியானால் கொரோனாவாக இருக்காது என மற்றவர்களோடு கலந்து பழகி பரப்பி விடுகின்றனர். இப்போதெல்லாம் கை கொடுப்பதால் கையை தொடுவதால் மட்டுமே கொரோனா பரவுவதில்லை. பாதிக்கப்பட்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும் எளிதில் பரவுகிறது. எங்கேயும் மாஸ்க் அணியாமல் செல்லக்கூடாது. வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் எல்லோரும் வீட்டுக்குள்ளும் மாஸ்க் அணிய வேண்டும். கதவை பூட்டி வைக்கக் கூடாது. சுத்தமான காற்று அவசியம். இயற்கையான காற்று நோயை குணப்படுத்தும்.

அலோபதி மருந்துகளுடன் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் குடித்தால் கிருமி பரவ விடாமல் தடுக்கும். பசி, தாகம், சுவையின்மை, வாசனையின்மை, நீர்ச்சத்து பிரச்னைகளை குணப் படுத்தும்.நிலவேம்பு குடிநீர் தினமும் ஒரு வேளை வீதம் 120 மில்லி ஒரு வாரம் சாப்பிடலாம். மாதந்தோறும் ஒரு வாரம் சாப்பிடலாம். வியாபாரிகள், வெளியில் மக்களோடு பழகுகிறவர்களாக இருந்தால் இரு வேளை சாப்பிடலாம். சளி இருந்தால் 3 நாட்கள் கபசுர குடிநீர் 60 மில்லி குடித்தால் போதும். நீர்ச்சத்து குறைவதை தடுக்க வெந்நீர் நிறைய குடிக்க வேண்டும். பழச்சாறு குடிக்கலாம். தொண்டை கரகரப்பாக இருந்தால் பழச்சாறுடன் மிளகுத்துாள் கலந்து கொள்ளலாம்.

மூக்கில் வாசனை வராதவர்கள் நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும். சிறிது ஓமம், கிராம்பு தனித்தனியாக வறுத்து காட்டன் துணியில் கொட்டை பாக்கு அளவு இரண்டையும் ஒன்றாக கட்டி அவ்வப்போது முகர்ந்து பார்க்க வேண்டும். இதன் மூலம் வாசனை நுகரும் தன்மை சீக்கிரமே திரும்பும். அதிமதுரம், ஆடாதோடை, மஞ்சள், இஞ்சி, சிற்றரத்தை, கிராம்பு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள். இவற்றை ஒன்றிரண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து சாப்பிடலாம். வேப்பம்பூ ரசம், நெல்லிக்காய் துவையல், மிளகு குழம்பும் அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கிய பின் அதில் கொஞ்சம் துளசி இலைகளை போட்டு மூடி வைத்து வெதுவெதுப்பாக குடித்து வரலாம். துாதுவளை இலைகளை பறித்து ரசம், சூப் போல செய்து சாப்பிடலாம். இதனால் தொண்டையில் வைரஸ் கிருமிகளின் வளர்ச்சியை ஆரம்பத்திலேயே தடுக்கலாம்.

No comments:

Post a Comment