jaga flash news

Tuesday, 18 May 2021

இயற்கை முறையில் ரத்தம் சுத்தம் செய்யும் முறைகள்

இயற்கை முறையில் ரத்தம் சுத்தம் செய்யும் முறைகள்

இயற்கை முறையில் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்திகரிக்கவும், விருத்தியாக்கவும் கீழே சில வழிமுறைகளை நம் முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ளனர்.

👉இரும்பு சத்து நிறைந்த முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து, அத்துடன் ஒரு நாட்டு கோழி முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

👉தேனில் ஊற வைத்த பேரீச்சம்பழத்தை ஒரு வேளைக்கு 2 அல்லது 3 வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். நாவல் பழத்திற்கு இதயத்தை பலப்படுத்தும் ஆற்றல் உண்டு, எனவே இதை அடிக்கடி சாப்பிட்டு வர‌ உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும்.

👉இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தப் படுத்தி, உடலுக்கு தேவையான ஆற்றலையும் தருகிறது.

👉செம்பருத்திப் பூவிலும் இரத்தம் விருத்தியாக்கும் சக்தி உண்டு. பூவின் நடுவில் இருக்கும் மகரந்தத்தை நீக்கி விட்டு இதழ்களை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் சூடு தீர்ந்து இரத்ததை விருத்தியாகும்.

👉தூங்கும் முன்பு இரவு அரை தம்ளர் நீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் விருத்தியாகும். பீட்ரூட் சாறு அருந்தி வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

👉இஞ்சிச் சாறுடன், சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் இரத்தம் சுத்தமாகும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகளை அழித்து இரத்தத்தை எளிதில் சுத்திகரிக்கும்.

No comments:

Post a Comment