jaga flash news

Saturday, 3 July 2021

குரங்குகள் என்றாவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா...

குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...

 இயற்கையாக வயதாகி இறக்கும் குரங்குகளின் மரணத்தை யாரும் பார்க்க முடியாதாம்.  இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு  முன்பே அதற்குத் இறப்பு நாள் தெரிந்துவிடுமாம். அன்றிலிருந்து அந்தக்குரங்கானது ஒரு பாதுகாப்பான   இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம். அதனுடைய முடிவு காலம்  வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம். பூமி மூடிக் கொள்ளுமாம். அந்த ஒருவாரமும் அது தவம் செய்யுமாம்.    இந்த தகவலைப் எண்ணுகிற போது மற்ற எல்லா அதிசயங்களையும் விட, அது ஒரே இடத்தில் ஒருவாரமாக அமர்ந்திருக்கும் என்பது  பேரதிசயம்…
குரங்குகள் தெய்வ அம்சமல்லவா…!!

இறக்கும் தருவாயில் மிகவும் அமைதியாக எந்த விதத்திலும் மற்ற விலங்குகளுக்கு தொல்லை இன்றி காடுகளில் மரங்கள் நிறைந்த இடத்தில் இறக்கும் தருவாயில் கரையாண் புற்றின் அருகில் படுத்து விடும் தனது உடலை கரையான் உணவாக்கி அதன் மேல் குறிப்பிட்ட நேரத்துக்குள் புற்று அமைந்துவிடும் இது முற்றிலும் உண்மை.

 சாலையில் அடிபட்டு இறந்தால் கூட அவற்றின் உறவுகள் இழுத்து சென்று புற்றின் அருகில் வைத்து அதன் உடல் மறையும் வரை அவைகளும் அங்கு காத்திருக்கும்.

ஆஞ்சநேயர் இராமரிடம் கேட்டு பெற்ற வரங்களில் ஒன்று இறக்கும் நிலை அறிந்து யாருக்கும் தொல்லையின்றி புற்றில் கரையானுக்கு உணவாக வேண்டும் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்பதாகும்..

 இவ்வாறான சிறப்புகளை பெற்ற ஆஞ்சநேயருக்கு நாம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவருக்கு மிகவும் பிடித்த வாழைப்பழம் வழங்கி தரிசிக்க நாமும் நலங்கள் பலவற்றை அடைந்து நம் மரணகாலத்தில் பிறருக்கு தொல்லைகள் தராத அமைதியான இறப்பை அடைந்து இறைவனுடன் கலக்கலாம் …

ஜெய்ஸ்ரீராம்.

No comments:

Post a Comment