jaga flash news

Sunday, 18 July 2021

பெருமாளில் மட்டும் எத்தனை விதம்..?

நம் ஜாதகத்தில் எந்த இடம் பலவீனமோ அதற்கேற்ற கோயில்கள் சென்றால்தான் நாம் பலமாக முடியும்.அதற்காகவும்தான் நம் முன்னோர்கள் விதவிதமான கோயில்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்..பெருமாளில் மட்டும் எத்தனை விதம்..?

 உட்கார்ந்தவாறு,படுத்தவாறு,நின்றுகொண்டு,தனியாக ,லட்சுமியுடன் என ஏன் இப்படி அமைக்க வேண்டும் ? படுத்திருக்கும் பெருமாள் நோய்களை தீர்க்கவும் நின்ற கோல பெருமாள் தொழில்ப்சிறப்படையவும்
,லட்சுமியுடன் இருக்கும் பெருமாள் திருமண தடை நீங்கவும் வழிபடுகிறோம்...

எல்லாவற்றிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது நமக்குத்தான் தெரியவில்லை.எல்லா சாமியையும் பார்த்து கும்பிட்டு போய்கிட்டே இருக்கோம்.

ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை ஒரு குடும்பத்தில் ஐந்து அண்ணன், தம்பிகள் இருந்தால் எண்ணம்,செயல்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை.வழிபாடு, பழக்க வழக்கம், குணம் ,விருப்பம் போன்றவற்றில் நிறைய மாற்றம் இருக்கும்.

 ஒருவருக்கு வினாயகர் பிடிக்கும் இன்னொருத்தர்க்கு முருகனை பிடிக்கும் ..இதை எல்லாம் உணர்ந்துதான் நம் இந்து மதத்தில் இத்தனை கடவுள்கள்,கோயில்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன..இந்து வெறும் மதம் அல்ல.வாழ்க்கை

No comments:

Post a Comment