jaga flash news

Sunday, 1 October 2023

காலில் கட்டும் கறுப்பு கயிறு..மறந்தும் கூட இந்த ராசிக்காரர்கள் கட்டக்கூடாது..எச்சரிக்கும் சாஸ்திரம்


 
காலில் கறுப்பு கயிறு கட்டுவது இன்றைக்கு இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வந்தாலும் பழங்காலத்தில் இருந்தே நமது முன்னோர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. எந்த ராசிக்காரர்கள் கறுப்பு கயிறு கட்டலாம் எந்த ராசிக்காரர்கள் கறுப்பு கயிறு கட்டக்கூடாது என்று பார்க்கலாம்.


நம்முடைய வீட்டில் உள்ள பெரியவர்கள் சில அட்வைஸ்களை எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் அதில் முக்கியமானது மத்தியான நேரத்தில் தனியாக எங்காவது வெளியில் செல்ல நேர்ந்தால் கறுப்பு மை பொட்டு வைக்க வேண்டும். கறுப்பு கயிறு கட்டினால் காத்து கறுப்பு அண்டாது என்று சொல்வார்கள

கழுத்திலோ, கைகளிலோ கறுப்பு கயிறு கட்டுவதை விட கால்களில் கறுப்பு கயிறு கட்டி விடுவார்கள். சிலருக்கு இடுப்பில் அரைஞாண் கயிறு கறுப்பில் கட்டி விடுவார்கள். அதெல்லாம் சாஸ்திர சம்பிரதாயத்திற்காக செய்யப்பட்டது. பெண்கள் கொலுசு, மெட்டி அணிவதை கட்டாயமாக்கினர் நம் முன்னோர்கள்.

குழந்தைகள் பிறந்து சில நாட்களிலேயே குழந்தைக்கும், தாய்க்கும் கருப்பு கயிறு கட்டப்படும். குழந்தைகளுக்கு கண் திருஷ்டி படாமல் இருக்க, அவர்கள் கன்னத்தில் கருப்பு புள்ளி அல்லது காலில் கருப்பு கயிறு கட்டுவதை வழக்கமாக்கினர். கறுப்பசாமி கோவில், காளியம்மன் கோவிலுக்கு சென்று பூசாரி கையால் மந்திரித்து கறுப்பு கயிறு கட்டினார்கள். இந்தக் கயிறு கட்டப்பட்ட கையிலோ, காலிலோ வேறு எந்த நிறக் கயிறும் கட்டக்கூடாது என்ற விதி உள்ளது

இன்றைக்கு இளைஞர்களும் இளம் பெண்களும் கால்களில் கறுப்பு கயிறு கட்டுவதை பேஷனாக செய்து வருகின்றனர். இந்த கறுப்பு கயிறு எல்லாம் கட்டலாமா? கறுப்பு கயிறு எல்லோருக்கும் நல்ல பலன்களைத் தருமா என்று பார்க்கலாம்.

பொதுவாகவே கறுப்பு கயிறு கட்டும்போது சனிபகவானை வேண்டிக்கொண்டு காலில் கருப்பு கயிறு கட்டினால் கண்திருஷ்டி படாது. ஜோதிட சாஸ்திரத்தின்படி காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம் ராகு, கேது, சனி ஆகிய மூன்று கிரகங்களின் பலன்கள் கிடைக்கும். இந்த கிரகங்கள் வலிமை குறைந்து இருந்தால் அது வலிமையடையும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி காலங்களில் கறுப்பு கயிறு கட்டிக்கொள்வதன் மூலம் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.

சனி பகவான் சன்னதியிலோ அல்லது சிவ ஆலயங்களுக்கோ சென்று சாமி கும்பிட்டு விட்டு சாமியின் பாதத்தில் கறுப்பு கயிறு வைத்து வழிபாடு செய்து இந்த கருப்பு கயிறு கட்டுவது நல்லது. சனிக்கிழமை அன்று வேண்டிக்கொண்டு கையில் கட்டினால் சனி பகவானின் ஆசிகள் கிடைக்கும்.

சனி பகவான் முதலில் ஒருவரின் கால்களை தான் பற்றுவார் எனவும் கூறப்படுகிறது. எனவே, காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம், சனி தோஷம் நீங்கும். அத்துடன், ராகு, கேது பாதிப்புகள் ஏற்படாது என்பது நம்பிக்கை. கருப்பு கயிறு கட்டிய பிறகு சனி பகவானின் மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும்.

கருப்பு கயிறு கட்டுவதற்கு முன், அதில் 9 முடிச்சுகள் போட வேண்டும். அதன் பிறகு அவர்கள் காலில் அணியலாம்.இந்த கருப்பு கயிறு பெண்கள் இடது காலிலும், ஆண்கள் வலது காலிலும் கட்டிக்கொண்டால் நன்மைகள் நடைபெறும்.


கடன் பிரச்சனை உள்ளவர்கள் நிதி நெருக்கடியில் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை சனி பகவானை வணங்கி காலில் கருப்பு கயிறு கட்டினால், பணப் பிரச்சனைகள் நீங்கி பணம் வரும் என்பது ஐதீகம். அவர்களுக்கு மட்டுமின்றி அவர்கள் வசிக்கும் வீட்டிலும் பணப் பற்றாக்குறை இருக்காது என்று கூறப்படுகிறது.

துலாம், மகரம், கும்பம், ராசியில் பிறந்தவர்கள் கறுப்பு கயிறு அணிவது நல்லது. இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் கருப்பு நிற ஆடைகள் மற்றும் கருப்பு கயிறுகளை அணியலாம். செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களும் கறுப்பு கயிறு அணிவதையோ கறுப்பு நிற உடை அணிவதையோ தவிர்ப்பது நல்லது.


1 comment:

  1. அய்யா வெ.சாமி அவர்களுக்கு சிவ ஜான்ஸியின் 2023−ஆம் வருடத்திய சரஷ்வதி பூஜை , ஆயுத பூஜை நல்வாழ்த்துகள். அடியேன் தங்கள் ஆசிகள் வேண்டி தம் பணிகிறேன் அய்யா.

    ReplyDelete