jaga flash news

Sunday, 1 October 2023

அரைஞாண் கொடி.. இடுப்பை சுற்றி சின்ன கயிறு.. இதில் இத்தனை விசயம் இருக்கா?


அரைஞாண் கொடி அல்லது அரைஞாண் கயிரு அல்லது அரைஞாணம் என்பது சிறு குழந்தைகளின் இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் கவசம் போன்றது. குழந்தைகள் பிறந்து 5மாதம் வரைக்கும் பெற்றவர்கள் வீட்டில் இருக்கும் பெண்ணை உடல் நலமடையும் வரை வைத்திருக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் சத்தான ஆகாரங்களை கொடுப்பதோடு புகுந்த வீட்டிற்கு செல்லும் போது பிறந்த குழந்தைக்கு வெள்ளிக்கொலுசும் அரைஞாண் கொடியும் சீதனமாக போட்டு அனுப்புவார்கள்.


அந்த காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தான் கருப்பு கலரில் அரைஞாண் கயிறு கட்டுவது வழக்கம். அதிலும் சிலரோ வெள்ளி அல்லது தங்கத்தில் தங்கள் குழந்தைக்கு கட்டுவார்கள். சொல்லப்போனால் இந்த அரைஞாண் கயிறு தமிழ்நாட்டில் தான் அதிகம் கட்டுவது வழக்கம். பொதுவாகவே, பலர் அரைஞாண் கயிறை கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை காரணமாக சிலர் காட்டுவார்கள். இன்னும் சிலரோ, வீட்டில் பெரியவர்கள் சொல்லி காட்டுவார்கள்.

வயதில் பெரியவர்கள் உள்ள இல்லங்களில், அவர்கள் இன்றைக்கும் தங்களின் பேரக்குழந்தைகளுக்கும் பேத்திகளுக்கும் வெள்ளை எருக்கம் நார் - அரைஞாண் கயிறைக் கட்டி விடுவார்கள். அதற்குக் காரணம் கைக்குழந்தைகளுக்கு இதயத் துடிப்பானது கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அதன் இதயத் துடிப்பை சீராக்க உதவுவது எது தெரியுமா? குழந்தையின் இடுப்பில் கட்டப்படும் அரைஞாண் கயிறு என்கிறார்கள் முன்னோர்கள். ஒரு சிலர் சாஸ்திரப்படி குழந்தை பிறந்த ஏழாம் நாளில் இடுப்பில் அரைஞாண் கயிரை அணிவிப்பார்கள்.

இடுப்புக்குஅருகில் மட்டுமே ரத்தக் குழாய்கள் மெலிதாக இருக்கும். அதேபோல் தோலின் மிக அருகில் செல்கின்றன. எனவே ஈரம் பட்டாலும் அறுபடாத பொருளான வெள்ளை எருக்கம் பூவின் நாரினை கயிறாகத் திரித்து, அதையே குழந்தைகளின் இடுப்பில் கட்டிவிடுவார்கள்.ஆனால், நம் முன்னோர்கள், அவ்வாறு கட்டுவது பேய், பிசாசு, காத்துக்கறுப்பு அண்டாமல் இருப்பதற்காக என்று கூறினர் முன்னோர்கள். சிலரோ கறுப்பு பாசியை கோர்த்த கயிறு கட்டுவார்கள். சிலரோ சிவப்பு நிற கயிறுடன் பாசி கோர்த்து இடுப்பில் கட்டுவார்கள்

"அரைஞாண் கயிறு".. அதென்ன இடுப்புல கருப்பா..உங்க கிட்ட "இது" ஒன்னு மட்டும் போதும்.. அதிசயத்தை பாருங்க
இடுப்பைச் சுற்றி ஆடை அணிபவர்கள் அரைஞாண் கயிறு அணிய வேண்டும் என்பது விதி. பெண்கள் பாவாடை அணிய நாடாவைப் பயன்படுத்திக்கொண்டு, இந்த விதியைப் பின்பற்றுகிறார்கள். ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள், விதைப்பையிலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள் ஒன்று சேரும் இடம் உடலின் அடிவயிற்றுப்பகுதிதான். அதைச் சுற்றியே அரைஞாண் கயிற்றைக் கட்டுவார்கள். அப்போது தான் மேல்வயிற்றுப் பகுதியிலுள்ள குடல் இறங்காமல் இருக்கும்.

ஒரு குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா? இல்லையா என்பதை அரைஞாண் கயிறு வைத்துதான் பெரியவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில நேரங்களில் பாம்பு, விஷ பூச்சிகள் கடித்து விட்டால் அரைஞாண் கயிரை அறுத்து எடுத்து பாம்பு தீண்டிய இடத்தில் கட்டி விஷம் ஏறாமல் தடுப்பார்கள். தற்காப்புக்காக அரைஞாண் கயிறு பயன்படுத்தப்பட்டது.

அரைஞாண் கயிறு அணிவது பழைய காலத்து பழக்கம் என்று கருதினாலும் அதில் ஆன்மீக ரீதியாக பல நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது. சிறையில் கைதிகளுக்கு பாதுகாப்பு கருதி கைதிகளின் அரைஞாண் கயிறை இடுப்பில் இருந்து நீக்கவிடுகிறார்கள். அதே போல ஒருவர் இறந்த பிறகு இறுதிச் சடங்கின் போது அரைஞாண் கயிறு நீக்கப்படுகிறது.


No comments:

Post a Comment