jaga flash news

Monday, 27 November 2023

Coffee Benefits...


எப்படி குடித்தாலும் சரி நம் உடலில் அது சேரும்போது அது என்னென்ன நன்மைகளை தருகிறது என்று பார்க்கலாம். காபியின் ஆச்சரியமான நன்மைகளின் பட்டியல் இங்கே.
Coffee Benefits : காபியில் இந்த நன்மைகளா? இதுவரைக்கும் இந்த விஷயங்கள் பத்தி உங்களுக்குத் தெரியுமா?

காபி


'டயர்டா இருக்கு ஒரு காபி சாப்பிடலாம்', என்ற பதம் நம் ஊரில் அதிகம் கேட்கும் வார்த்தை. நம் ஆற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக செயல்படவைக்கும் என்பது நாம் வெளிப்படையாக அறிந்த விஷயம். பலர் காலை எழுந்ததும் காபி குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கும் ஊர் நம் ஊர். ஆனால் நமக்கே அதில் இவ்வளவு மறைமுக நன்மைகள் இருப்பது தெரியாது. காபியை பல விதமாக குடிக்கும் மக்கள் நாம், கோல்டு காபி என்ற பெயரில் குளிர்ந்தும், பாலுடன் சேர்த்து சூடாகவும், ஃபில்டர் காபி, பிளாக் காபி என்று பல வகை உண்டு. எப்படி குடித்தாலும் சரி நம் உடலில் அது சேரும்போது அது என்னென்ன நன்மைகளை தருகிறது என்று பார்க்கலாம். காபியின் ஆச்சரியமான நன்மைகளின் பட்டியல் இங்கே.



நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும்


காபி பற்றிய அறிவியல் தகவல் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, ஆக்ஸிஜனேற்ற விளைவுகள் அல்லது அழற்சி எதிர்ப்பு விளைவுகள் உள்ளிட்ட பல காரணிகள், ஒரு கப் காபி குடிக்கும் போது, டைப் 2 நீரிழிவு நோயின் ஆபத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


Coffee Benefits : காபியில் இந்த நன்மைகளா? இதுவரைக்கும் இந்த விஷயங்கள் பத்தி உங்களுக்குத் தெரியுமா?

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது


ஹார்வர்ட் ஆய்வின்படி, தினமும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கப் காபி குடிப்பது, இதய செயலிழப்பிலிருந்து பாதுகாக்கும் மற்றும் பக்கவாதம் மற்றும் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்: Erode East By Election 2023: முழு உரிமையும் உள்ளது.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம் - ஓபிஎஸ் பேச்சு


எடை குறைப்பை ஊக்குவித்தல்


நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் (என்ஐஎச்) நடத்திய ஆய்வில், காஃபின் உட்கொள்வது கொழுப்புச் சேமிப்பைக் குறைப்பதோடு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, இவை இரண்டும் எடை குறைப்பிற்கு உதவும் விஷயங்கள் ஆகும்.


மனச்சோர்வின் அபாயத்தைக் குறைக்கும்


ஒரு கப் காபி குடிப்பதால் மனச்சோர்வு அபாயம் குறையும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. NIH ஆராய்ச்சியின் படி, காபி குடிப்பது அல்லது காஃபின் உட்கொள்வது மனச்சோர்வு அபாயம் குறைவதோடு பெரும் அளவில் தொடர்பு கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.


Coffee Benefits : காபியில் இந்த நன்மைகளா? இதுவரைக்கும் இந்த விஷயங்கள் பத்தி உங்களுக்குத் தெரியுமா?

பார்கின்சன் நோய்க்கு நல்லது


காபியில் உள்ள காஃபின் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் கட்டுப்பாடற்ற இயக்கங்களை நிர்வகிக்க உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் கூற்றுப்படி, காபியை அதிகமாக உட்கொள்வது பார்கின்சனின் அபாயத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


டிமென்ஷியா/அல்சைமர் நோய் அபாயத்தைக் குறைக்கிறது


ஒரு நாளைக்கு 3 முதல் 5 கப் காபி குடிப்பதால் டிமென்ஷியா-அல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது என்றும் என்ஐஎச் ஆய்வு காட்டுகிறது. கிரெம்பில் மூளை நிறுவனத்தின் மற்றொரு ஆய்வு, காபி குடிப்பது அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய் இரண்டையும் உருவாக்காமல் உங்களைப் பாதுகாக்கும் என்று கூறுகிறது. காபி கொட்டைகளை வறுக்கும் செயல்முறை இந்த நோய்களைத் தடுக்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிக்க வேண்டும்?


Fda.gov கருத்துப்படி, ஒரு நாளைக்கு 400 மில்லிகிராம் காபி ஆரோக்கியமான நபர்களுக்கு பாதுகாப்பான அளவு என்று கூறப்படுகிறது. பல சுகாதார வல்லுநர்கள் பிளாக் காபி குடிப்பது எடை குறைப்பை மேம்படுத்துவதற்கான ஆரோக்கியமான வழிகளில் ஒன்றாகும் என்று கூறுகின்றனர்.


No comments:

Post a Comment