jaga flash news

Friday, 22 December 2023

வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை என்று சொல்வார்கள்.


ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீரவேண்டும். வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை என்று சொல்வார்கள். ஜோதிட சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.


வைணவ ஸ்தலங்களில் பகல் பத்து இராப்பத்து என்று சொல்லக்கூடிய பகல் பத்து முடிந்து ராப்பத்து தொடங்கும் நாளான வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது வழக்கம். அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசியான இன்று அனைத்து வைணவ ஸ்தலங்களிலும் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி அருள்பாலித்தார்.

Sorgavasal Tiruappu: Vaikunta ekadasi day death Can you go to heaven 
வைகுண்ட ஏகாதசி திதியில் சொர்க்கவாசல் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விடமுடியாது. புண்ணியம் செய்பவர்கள் மட்டுமே வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கத்திற்கு சென்று இறைவனின் பாதத்தை அடையமுடியும். ஏகாதசியில் பகவான் விஷ்ணுவின் நாமம் சொல்லி, அவன் சிந்தனையாகவே இருந்து சொர்க்கவாசல் வழியாக சென்று வணங்கினால் பிறவிப்பயனை அடையலாம்.


ஏகாதசி என்ற சொல்லுக்கு ஸ்ரீமந்நாராயணருக்குரிய பதினோராவது நாள் என்பது பொருள். இதை முப்பத்து முக்கோடி தேவர்களும் கடைபிடிப்பதால் முப்பத்து முக்கோடி ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில் மூன்று மிகவும் சிறப்புமிக்கவை. ஆனி மாத சயன ஏகாதசி, கார்த்திகை மாத கைசிக ஏகாதசி, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி. இந்த நாட்களில் பெருமாளை தரிசிப்பது சிறப்பு. இதிலும் வைகுண்ட ஏகாதசியே மிக விசேஷம்.

ஞானேந்திரியங்கள் கண், காது, மூக்கு, நாக்கு, தோல்), கர்மேந்திரியங்கள் கை, கால், வாக்கு, பிறப்புறுப்பு, கழிவு உறுப்பு மனம் என்னும் பதினொன்றையும் ஒன்றிணைத்து கடவுளைக் குறித்து செய்யும் விரத வழிபாடு ஏகாதசி விரதம். தாயை விட சிறந்த தெய்வமில்லை காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; ஏகாதசியைவிட சிறந்த விரதமில்லை என்பது ஏகாதசியின் பெருமையை நமக்கு எடுத்துச் சொல்கிறது. அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தை இவ்விரதம் அளிக்கிறது.

ஓராண்டின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்த பலனை வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் பெற முடியும் என்கிறது விஷ்ணு புராணம். சாதாரண ஏகாதசி நாட்களில் விரதமிருக்க இய லாதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருப்பது அவசியம். அன்று அதிகாலையில் கோவில்களில் நடக்கும் சொர்க்கவாசல் வைபவத்தை தரிசிக்க வேண்டும்.

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் தரிசிப்பது மிகச்சிறப்பு. பூலோகத்தில் முதன் முதலில் சொர்க்க வாசல் திறந்த திருத்தலம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர், பண்டரிபுரம் விட்டலன், குருவாயூரப்பன் துவாரகை கிருஷ்ணர் கோவில்களில் ஏகாதசிக்கு பக்தர்களின் கூட்டம் அதிகமாக கூடும்.


இதற்கான புராண நிகழ்வு என்னவென்றால், தேவர்களுக்கு இடையூறு செய்த அசுரர்களான மது, கைடபரை அழிக்க முற்பட்டார் மகா விஷ்ணு. ஆனால் அவர்கள் சரணடைந்தனர். காரணம் இருவரும் விஷ்ணுவின் காதில் இருந்து தோன்றியவர்கள். தங்களின் அருட்சக்தியால் உருவான எங்களை கொல்லாமல், என்றென்றும் வைகுண்டத்தில் தங்கியிருக்கும் பாக்கியத்தை அருள வேண்டும் என வேண்டினர்.

விஷ்ணுவும் சம்மதித்தார். மேலும் அவரிடம், சுவாமி, வைகுண்ட ஏகாதசி நன்னாளில் ஸ்ரீரங்கத்தின் வடக்கு வாசல் வழியே தாங்கள் எழுந்தருளும் போது தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும் பாவம் நீங்கி முக்தி இன்பத்தை அடைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அதன்படி, ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும் பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசி திதியில் சொர்க்கவாசல் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விடமுடியாது. புண்ணியம் செய்பவர்கள் மட்டுமே வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கத்திற்கு சென்று இறைவனின் பாதத்தை அடையமுடியும்.

ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீரவேண்டும். வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை என்று சொல்வார்கள். இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்துவிட்டார் என்று கிராமங்களில் சொல்வார்கள். வாழ்நாள் முழுவதும் இறை பக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவார்கள் என்பதால் அவர்கள் நிச்சயம் சொர்கத்திற்கு செல்வது உறுதி.


No comments:

Post a Comment