jaga flash news

Tuesday, 5 December 2023

ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம்?



ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம்? வரம்பு மீறினால்... ரிசர்வ் வங்கி விதி என்ன?
RBI Update: ஒருவர் தனது பெயரில் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? இதற்கான விதி ஏதாவது உள்ளதா?

ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம்? வரம்பு மீறினால்... ரிசர்வ் வங்கி விதி என்ன?
உங்கள் தேவைக்கேற்ப வங்கிக் கணக்கைத் திறக்க முடியுமா? 
யார் எத்தனை கணக்குகளை திறக்க முடியும்?
பல வங்கிக் கணக்குகள் இருப்பதன் தீமைகள் என்ன?

RBI Update: நமது நாட்டில் வங்கிக் கணக்கு என்பது இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட அனைவரிடமும் இருக்கும் ஒரு விஷயமாக உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் இது அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.  
மத்திய, மாநில அரசுகளின் பல திட்டங்களின் பலன்களைப் பெற, வங்கிக் கணக்கு இருப்பது அவசியம். வங்கிக் கணக்கு இல்லாமல் பெரிய பரிவர்த்தனைகளைச் செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கான வங்கிக் கணக்குகளையும் தொடங்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களும் உள்ளனர். இந்த வங்கிக் கணக்குகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் திறக்கப்படுகின்றன. சிலர் பல வங்கிக் கணக்குகளை திறந்து விடுகிறார்கள், ஆனால் அவர்களால் இவற்றை பராமரிக்க முடிவதில்லை. ஒருவர் தனது பெயரில் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? இதற்கான விதி ஏதாவது உள்ளதா? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

வங்கிக்கணக்குகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் ஒருவர் தனது பெயரில் எத்தனை வங்கி கணக்குகளை வைத்திருக்கலாம் என்பது பற்றி கூறப்பட்டுள்ளது.

உங்கள் தேவைக்கேற்ப வங்கிக் கணக்கைத் திறக்க முடியுமா? 

மக்கள் தங்கள் தேவைக்கேற்ப வங்கிக் கணக்கைத் தொடங்க விதிகளின் படி வசதி உள்ளது. நடப்புக் கணக்கு, சம்பளக் கணக்கு, கூட்டுக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கு ஆகியவை இதில் அடங்கும். முதன்மை வங்கிக் கணக்கைப் பற்றி பேசுகையில், சேமிப்புக் கணக்குகள் முதன்மை கணக்குகளாக கருதப்படுகின்றன. இந்த வகையான கணக்குகளை பெரும்பாலான மக்கள் திறக்கிறார்கள். ஏனெனில் இதில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டியும் கிடைக்கும். அதிக பரிவர்த்தனைகள் செய்பவர்கள் நடப்புக் கணக்கின் (Current Account) விருப்பத்தைத் தேர்வு செய்கிறார்கள். பெரும்பாலும் வணிகர்கள் இந்த கணக்கை திறக்கிறார்கள். சம்பள கணக்கு (Salary Account) என்பது சம்பளம் வாங்கும் வர்க்கத்தினருக்கானது. இதில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்க தேவையில்லை. இது ஜீரோ பேலன்ஸ் கணக்கு (Zero Balance Accunt). கணக்கு வைத்திருப்பவர் தனது மனைவி அல்லது உங்கள் குழந்தை அல்லது பெற்றோர் போன்ற உறவினருடன் சேர்ந்து  கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம்.

யார் எத்தனை கணக்குகளை திறக்க முடியும்?

இந்தியாவில் ஒரு நபர் தொடங்கக்கூடிய வங்கிக் கணக்குகளுக்கு (Bank Account) நிலையான ஒரு எண்ணிக்கை எதுவும் இல்லை. இதற்கு நிலையான வரம்பு எதுவும் இல்லை. ஒரு நபர் தனது விருப்பம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப எத்தனை வங்கிக் கணக்குகளை வேண்டுமானாலும் திறக்கலாம். ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) இதற்கு எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. ஒருவர் எவ்வளவு வங்கிக் கணக்குகளைத் திறக்கிறாரே, அவ்வளவு அதிகமாக அவற்றைக் கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் விருப்பத்தின்படி அனைத்து கணக்குகளையும் நிர்வகிக்க வேண்டும். ஒருவர் விரும்பினால், வெவ்வேறு வங்கிகளிலும் சேமிப்பு அல்லது பிற கணக்குகளைத் திறக்கலாம். ஆனால் இதற்கு அந்த நபர் அந்தந்த வங்கிகளுக்கான அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும்.

பல வங்கிக் கணக்குகள் இருப்பதன் தீமைகள்

உண்மையில், வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட தொகை, அதாவது குறைந்தபட்ச இருப்புத் தொகை வங்கிக் கணக்கில் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகையை வங்கிக் கணக்கில் வைக்கவில்லை என்றால், அதற்கு அபராதமும் விதிக்கப்படலாம். இதனுடன், வங்கிகளால் வாடிக்கையாளர்கள் மீது பல்வேறு கட்டணங்களும் விதிக்கப்படுகின்றன. மொபைலில் எஸ்எம்எஸ் வசதி, ஏடிஎம் கட்டணம் போன்றவை இதில் அடங்கும். வங்கிக் கணக்கு பயன்படுத்தப்படாவிட்டால், இந்தக் கட்டணங்கள் உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்தும், உங்களுக்கு மிகவும் தேவையான அளவு வங்கிக் கணக்குகளை மட்டும் வைத்திருப்பது நல்லது என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். 


No comments:

Post a Comment