jaga flash news

Friday, 19 January 2024

இந்த 10 பொருட்களை மறந்தும் கூட தானமாக அளித்து விடாதீர்கள்! உங்கள் வீட்டில் வறுமை கூட‌ ஏற்படலாம் !!!


நமது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை தானமாக அளிக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதனைக் கூட எப்படி தர வேண்டும் என்றால் வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியக் கூடாதாம். அதாவது நாம் தானம் அளிப்பதைப் பற்றி பெருமையாக நினைத்து பிறரிடம் கூறிக் கொண்டு இருக்கக் கூடாது. அவ்வாறு அளிக்கும் தானத்தின் பலன் பல மடங்கு கூடும் என்றாலும் பலனை எதிர்பார்த்து தானம் அளித்தல் கூடாது.

தானம் அளிப்பது மிகவும் சிறந்த விஷயமாக இருந்தாலும் தானமாக கொடுக்கும் சில பொருட்கள் தானம் கொடுப்பவர்களின் அதிர்ஷ்டத்தை குறைத்துவிடும். எனவே தானம் கொடுப்பதற்கு முன்பு எந்த பொருட்களை எல்லாம் தானமாக வழங்கக்கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. அந்த வகையில் எந்தெந்த பொருட்களை தானமாக வழங்க கூடாது என்பதனை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.


கல் உப்பு

கல் உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட கல் உப்பினை நாமும் தானமாக பெறக்கூடாது மற்றவர்களுக்கும் தானமாக அளிக்கக்கூடாது. ஒருவேளை உப்பினை நாம் தானமாக அளித்துவிட்டோம் என்றால் நம்முடைய வீட்டில் குடியிருக்கும் மகாலட்சுமியானவள் வெளியே சென்று விடுவாள் என்று நம்பப்படுகிறது. அதனால் எக்காரணத்திற்க் கொண்டும் உப்பினை தானமாக அளிக்கக்கூடாது.

கிழிந்த ஆடைகள்
நாம் துணிகளை தானமாக கொடுப்போம். ஆனால் அந்த துணி கிழிந்த துணிகளாக இருக்க கூடாது. கிழிந்த துணிகளை மற்றவர்களுக்கு தானமாக கொடுத்தால் நம்முடைய வீட்டில் வறுமை நிலை ஏற்பட்டு விடும். அதனால் நல்ல நிலையில் உள்ள துணிகளை மட்டுமே நாம் தானமாக வழங்க வேண்டும்.

விளக்குகள்

நமது வீட்டில் பயன்படுத்தும் அகல் விளக்கு அல்லது காமாட்சி விளக்கு, அது எந்த விளக்காக இருந்தாலும் அதனை மற்றவர்களுக்கு தானமாக அளிக்க கூடாது. விளக்கில் தான் அனைத்து தெய்வங்களும் குடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட விளக்கினை நாம் தானமாக அளித்து விட்டோம் என்றால் நமது வீட்டில் உள்ள தெய்வ சக்தி குறைந்து விடும்.

கூர்மையான பொருட்கள்
நமது வீட்டில் இருக்கும் கூர்மையான பொருட்கள், அதாவது கத்தி, ஊசி, அருகாமனை போன்ற பொருட்களை நாம் தானமாக அளிக்க கூடாது. கூர்மையான பொருட்களை தனமாக வழங்கினால் வீட்டில் துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும். அதுமட்டுமல்லாமல் நாம் யாருக்கு தானமாக இந்த பொருட்களை வழங்குகிறோமோ அவர்களுக்கும் நமக்கும் இடையே பகை ஏற்பட்டு விடும். எனவே இந்த பொருட்களை நாம் எக்காரணத்திற்க் கொண்டும் தானமாக அளிக்க கூடாது.

அன்ன‌ தானம்

தானத்தில் சிறந்த தானமான அன்னதானத்தை வழங்குவதால் புண்ணியம் கிடைக்கும். உணவில் கெட்டு போன பொருட்களை தானமாக கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் செலவுகள் அதிகமாக ஏற்படும். அதுமட்டுமல்லாமல் அது நம்மையும் நமது தலைமுறையும் பாதிக்கும். எனவே பழைய உணவுகளை எப்போதும் தானமாக வழங்கக்கூடாது.

பழைய பாத்திரங்கள்

நமது வீட்டில் பயன்படுத்தாத அல்லது விரிசல் விட்ட பாத்திரங்களை மற்றவர்களுக்கு தானமாக அளிக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக நாம் பயன்படுத்தாத குடத்தை ஒருவருக்கு தானமாக அளிக்க கூடாது இப்படி செய்தோமே ஆனால் நமது வீட்டில் தரித்திரம் ஏற்பட்டு விடும்.


துடைப்பம்

துடைப்பத்தை ஒருவருக்கு தானமாக கொடுக்க கூடாது. துடைப்பம் மகாலட்சுமி தாயார் வாசம் செய்யும் பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதனால் துடைப்பத்தை மற்றவர்களுக்கு கொடுத்தால் நமது வீட்டின் செல்வத்தை அவர்களுக்கும் கொடுப்பதாம்.

மணி பர்ஸ்

ஆண்கள் பயன்படுத்தும் மணி பர்ஸாக இருந்தாலும் சரி, பெண்கள் பயன்படுத்தும் பேக்குகளாக இருந்தாலும் சரி, நாம் அதனை பயன்படுத்தவில்லை என்றால் மற்றவர்களுக்கு அதை தானமாக அளித்து விடுவோம் ஆனால் அப்படி செய்யக்கூடாது. ஏனென்றால் பணம் புழங்குவதற்கு நமது வீட்டில் பல வகையான பரிகாரத்தை நாம் மேற்கொண்டிருப்போம் அதற்கு மூல காரணமான இந்த மணி பர்ஸை நாம் யாருக்கும் தானமாக அளிக்கக்கூடாது.



படுக்கை விரிப்புகள்

படுக்கையறை பொருட்களான தலையணை, பாய், படுக்கை விரிப்பு, முதலிய பொருட்களை தானமாக அளிக்க கூடாது. ஒருவேளை இந்த பொருட்களை நாம் தானமாக அளித்தால் நமது வீட்டில் தரித்திரம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அலங்காரப் பொருட்கள்
நமது வீட்டு அலங்காரத்திற்காக பல பொருட்கள் வாங்கி வைத்திருப்போம். அதாவது குதிரை பொம்மை, பசு பொம்மை, யானை பொம்மை இது போன்ற பொம்மைகளை வாங்கி வைத்திருப்போம். பொதுவாக இந்த பொருட்கள் எல்லாம் ஐஸ்வர்யம் நிறைந்த பொருட்களாக கருதப்படுகிறது. இதனை நமது வீட்டிற்கு வருபவர்களுக்கு ஒருபோதும் தானமாக அளிக்கக் கூடாது. ஒருவேளை நாம் தானமாக அழித்து விட்டோம் என்றால் நமது வீட்டில் லட்சுமி கடாட்சம் குறைந்து விடும்.


No comments:

Post a Comment