jaga flash news

Sunday, 7 January 2024

தான்றிக்காய்.. தனித்துவம் நிறைந்த தான்றிக்காய்.. கருகரு தலைமுடிக்கு தான்றிக்காய் விதை பவுடர் போதுமே


தான்றிக்காய்.. தனித்துவம் நிறைந்த தான்றிக்காய்.. கருகரு தலைமுடிக்கு தான்றிக்காய் விதை பவுடர் போதுமே
எத்தனையோ சிறப்புகளை பெற்றிருப்பதால்தான், தான்றிக்காய் மருத்துவம் இன்றுவரை முக்கியத்துவம் பெற்றுவருகிறது.. தான்றிக்காய்களில் அப்படி என்ன பயன்கள் கிடைக்கிறது தெரியுமா?


துவர்ப்பும், தித்திப்பும் சுவை கொண்ட தான்றிக்காய்களுக்கு, அமுதம், அக்காத்தான், அம்பலத்தி, ஆராமம், எரிகட்பலம், கந்துகன், அக்ஷம், அக்கந்தம், கலித்துருமம், சதகம், தாபமாரி, வாந்தியம், வித்தியம், விபீதகம், கந்தகட்பலம், தானிக்காய் என்றெல்லாம் பல சிறப்பு பெயர்கள் உண்டு.


 Do you know the Excellent Health benefits in Thandrikkai and Medicinal Uses of Terminalia bellirica alice Thanrikkai Powder 

இந்த தான்றிக்காய் செடியை பொறுத்தவரை, அதன் காய்கள், பழங்கள், இலைகள், விதைகள் என அத்தனை பாகங்களுமே மருத்துவ பயன்பாடுகளை கொண்டது.. தான்றிக்காய் திரிபலா சூரணத்தில் ஒன்றாக உள்ளது.. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என்று இந்த மூன்று மூலிகையும் சேர்த்து தயாரிப்பதே திரிபலா சூரணமாகும்.


சுவாச கோளாறுகள்: இந்த தான்றிக்காய் செரிமானத்தையும், சுவாச கோளாறுகளையும் சரிசெய்ய உதவுகிறது.. தான்றிக்காய் பொடி என்றே கதான்றிக்காய் பொடியை, 2 சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தாலே மாரடைப்பு குணமாகும் என்கிறார்கள்..

இந்த காயில் வைட்டமின் F நிரம்பியிருப்பதால், கடுமையான ஆஸ்துமாவை கூட குணப்படுத்திவிடுகிறதாம்... அடிக்கடி நம்முடைய அன்றாட உணவிலும் தான்றிக்காயை சேர்த்து வந்தால் கண் கோளாறுகள் நம்மை அண்டாது என்கிறார்கள்.. பித்தங்களை தணிக்கும் தன்மை இந்த தான்றிக்காய்க்கு உண்டு.. அதேபோல, தான்றிக்காய் பொடியை, 2 சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தாலே மாரடைப்பு குணமாகும் என்கிறார்கள்..


தலைமுடி வளர்ச்சி: வெறுமனே இந்த திரிபலா சூரணத்தை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் தெம்பும், ஆரோக்கியமும் சேரும்.. இந்த காயிலிருந்து எண்ணெய் தயாரிப்பார்கள்.. தலைமுடி வளர்ச்சியை இந்த தான்றிக்காய் ஊக்குவிக்கிறது.. அதனால், பலவீனமான தலைமுடிக்கு இந்த எண்ணெய்யை தடவி வந்தால், பலம் கிடைக்கும்..

கை, கால் வலி, மூட்டு வலி, முழங்கால் வலிகளுக்கும் இந்த எண்ணெய்யை, தைலமாக பயன்படுத்தலாம். இந்த தான்றிக்காயின் பருப்பை பவுடர் செய்து, வைத்து கொண்டால், ரணங்கள், காயங்கள், கொப்புளங்கள் மீது தடவி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

வாய் ஆரோக்கியம்: இந்த தான்றிக்காயின் மீதுள்ள தோல் பகுதியை மட்டும் எடுத்து, பொடி செய்து, சம அளவு நாட்டுச்சர்க்கரை கலந்து, காலையில் வெந்நீருடன் சாப்பிட்டு வந்தால், பல் வலி நீங்கிவிடும், அத்துடன், ஈறுகளில் ரத்தம் வடிதல், ஈறு நோய்கள் போன்றவையும் நீங்கிவிடும். எனினும், இதுபோன்ற மூலிகைகளை மருந்தாக உட்கொள்ளும்போது, மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுக்கொள்வது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.


No comments:

Post a Comment