jaga flash news

Sunday, 24 March 2024

ஷஷ்டாஷ்டக தோஷம்

ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு?
பெண் ராசியிலிருந்து ஆண் ராசி வரை எண்ணினால்

பெண் ராசிக்கு ஆண் ராசி 6, 8 ஆகவோ அல்லது 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். அதாவது ஒற்றுமை இல்லாத நிலை இருக்கிறது.

இது திருமணம் முடிப்பதற்கு ஒவ்வாத நிலையாகும்.

ஷஷ்டாஷ்டக தோஷம் விதிவிலக்கு



பெண் ராசி பிள்ளை ராசி

மேஷம் கன்னி

தனுசு ரிஷபம்

துலாம் மீனம்

கும்பம் கடகம்

சிம்மம் மகரம்

மிதுனம் விருச்சிகம்

-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.



அதே வேளையில் கும்பம் - சிம்மம் என்றால் முற்றிலும் பகை.



ஷஷ்டாஷ்டக தோஷம் பாதிப்பு என்ன?


இத்தகைய தோஷ முரன்பாட்டுடன் ஆண் பெண் இனைந்தால், அந்த தம்பதிகள் மட்டும் இன்றி இரு வீட்டின் மொத்த குடும்பமும் பகை நிலையில் வாழும்.

மேலும் திடீர் விபத்துக்களால் ஆண் அல்லது பெண் பலியாகலாம்.


இந்த தோஷம் இருப்பவர்களை மனம் முடிப்பதால் மன முறிவு ஏற்படாது. ஆனால் வாழ் நாள் முழுவதும் பகை நிலை இருந்து கொண்டே இருக்கும்.

2 comments:

  1. Thu.28, Mar. 2024 at 7.19 am.

    *ஜோதிடம் :*

    சோதிடம் பற்றி அறிந்து கொள்ள முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்...

    *சுப கிரகங்கள், பாவ கிரகங்கள், கேந்திர ஸ்தானங்கள், திரிகோண ஸ்தானங்கள், ராசி நாயகர்களின் சொந்த வீடுகள், கிரகங்களின் பார்வை, சரராசிகள், ஸ்திர ராசிகள், உபய ராசிகள் என அறிந்திருக்க வேண்டும்.*

    சரி, இப்போது ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்க்கலாம்.

    * சுபக்கிரகங்கள் : குரு, சுக்கிரன், புதன், சந்திரன்.

    * பாவக் கிரகங்கள் : சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது.

    * கேந்திர ஸ்தானங்கள் : லக்னம், லக்னத்திற்கு நான்காம் இடம் மற்றும் ஏழாமிடம்.

    * திரிகோண ஸ்தானங்கள் : லக்னம், லக்னத்திற்கு ஐந்தாமிடம், மற்றும் ஒன்பதாமிடம்.

    * ராசி நாயகர்களின் சொந்த வீடுகள் :

    சூரியன் − சிம்மம்
    சந்திரன் − கடகம்
    செவ்வாய் − மேஷம்
    குரு − தனுசு, மீனம்
    சுக்கிரன் − ரிஷபம், துலாம்
    சனி − மகரம், கும்பம், விருச்சிகம்
    புதன் − மிதுனம், கன்னி.

    இராகு, கேது கிரகங்களுக்கு சொந்த வீடு இல்லாததால் *அவர்கள் எந்த இராசியில் இருக்கிறார்களோ, அந்த ராசி நாயகன் தரக்கூடிய பலன்களையும், அந்த நாயகர்களுடன் கூடி இருக்கும் கிரகங்களின் பலம் கூடியவர்கள் கொடுக்கக் கூடிய, பலன்களையும் கொடுப்பார்கள்.*

    * கிரகங்களின் பார்வை :

    * செவ்வாய் : தான் இருக்கும் இடத்தில் இருந்து *4 , 7 , 8* ஆகிய இடங்களைப் பார்ப்பார்.

    * வியாழன் : தான் இருக்கும் இடத்தில் இருந்து, *5 , 7 , 9* ஆகிய இடங்களைப் பார்ப்பார்.

    * சனி : தானிருக்கும் இடத்திலிருந்து *3 , 7, 10* ஆகிய இடங்களைப் பார்ப்பார்.

    * சுக்கிரன், புதன், சூரியன், சந்திரன், இராகு, கேது : இவர்களுக்கு *ஏழாம் இடம்* பார்வை மட்டுமே உண்டு.

    * சர ராசிகள் : *மேஷம், கடகம், துலாம், மகரம்.*

    * ஸ்திர ராசிகள் : *ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்.*

    * உபய ராசிகள் : *மிதுனம், கன்னி, தனுசு, மீனம்.*

    *இவற்றை எப்போதும் நன்கு மனதில் பதிய வைத்துக் கொண்டால், ஜாதகம் கணிக்க எளிதாக இருக்கும்.

    *மீண்டும் சந்திக்கலாம் !*

    Sivajansikannan@gmail.com

    ReplyDelete
  2. Fri. 29, Mar. 2024 at 5.59 am.

    *ஜோதிடம் :*

    *சோதிடத்தில் இன்று ராகு காலம் பற்றி பார்க்கலாம். !

    *ராகு காலம் :*

    * ராகு காலம் என்பதை எவ்வாறு பிரிக்கிறார்கள் என்றால்...!

    ஒரு நாளுக்குரிய 60−நாழிகைகளை, ராகு காலத்திற்கு பிரிக்கும் பொழுது, ஒவ்வொரு நாளைக்கும் *3−நாழிகைகளாகப்* பிரிப்பார்கள்.

    * இதை *திங்கட் கிழமையிலிருந்து ஆரம்பிப்பது வழக்கம்.*

    * இப்போ *சூரியோதயம் காலை 6−மணி என்று கொண்டால், கடிகார மணிப்படி இராகு காலம் எவ்வாறு அமையும் என்றால் !*

    திங்கள் : *3 3/4 நாழிகை முதல் 7 1/2 நாழிகைகள் வரை. அதாவது, 7 1/2 மணி முதல் 9−மணி வரை.*

    சனி : *7 1/2 நாழிகை முதல் 1 1/4 நாழிகைகள் வரை. அதாவது, 9−மணியிலிருந்து 10 1/2 மணி வரை.*

    வெள்ளி : *11 1/4 நாழிகை முதல் 15−நாழிகை வரை. அதாவது, 10 1/2 மணிமுதல் 12−மணி வரை.*

    புதன் : *15 நாழிகை முதல் 18 3/4 நாழிகை வரை. அதாவது, 12−மணி முதல் 1 1/2−மணி வரை.*

    வியாழன் : *18 3/4 நாழிகை முதல் 22 1/2 நாழிகை வரை. அதாவது, 1 1/2 மணி முதல் 3− மணி வரை.*

    செவ்வாய் : *22 1/2 நாழிகை முதல் 26 1/2 நாழிகை வரை. அதாவது, 3−மணி முதல் 4 1/2− மணி வரை.*

    ஞாயிறு : *26 3/4 நாழிகை முதல், 30 1/2 நாழிகை வரை. அதாவது, 4 1/2 − மணி முதல் 6−மணி வரை.*

    * சூரியோதயம் காலை 6−மணிக்கு முன்போ அல்லது பின்போ ஏற்பட்டால், அந்த வித்தியாசத்தை கணக்கில் கொள்ள வேண்டும்.

    * இப்போ , உதாரணமாக...

    சூரியோதயம் காலை 6.20 மணிக்கு என்றால், திங்கட்கீழமை அன்று, ராகு காலம் 7 1/2 − மணி முதல் 9−மணி வரைக்கு பதிலாக , கீழ்கண்டவாறு கணக்கிட வேண்டும்.

    ராகு கால ஆரம்பம் காலை மணி 7 −30
    சூரியோதய வித்தியாசம் 0.20
    (6.20 − 6.00)

    ராகு கால ஆரம்பம் 7.50
    திங்கள் அன்று ராகு கால முடிவு 9.00
    சூரியோதய வித்தியாசம் 0.20
    ---------
    ராகு கால முடிவு 9.20
    --------
    இவ்வாறு ராகு காலம் கணக்கிடல் வேண்டும்.

    *மீண்டும் சந்திக்கலாமா !*

    Sivajansikannan@gmail.com

    ReplyDelete