jaga flash news

Sunday, 24 March 2024

இத்துனூண்டு இஞ்சி.. இத்தனை நலனா?


இத்துனூண்டு இஞ்சி.. இத்தனை நலனா? துண்டு இஞ்சிக்குள் ஓராயிரம் நன்மை.. இஞ்சியை இவங்க மட்டும் தொடாதீங்க
ஒரு துண்டு இஞ்சி, அன்றைய நாளின் ஆரோக்கியத்தை காப்பாற்றிவிடும்.. அந்த அளவுக்கு மகத்துவம் நிறைந்தது இஞ்சி.


வைட்டமின் A, C, B6, B12, கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து இப்படி ஏகப்பட்ட சத்துக்களை கொண்டது இஞ்சி.. சமீபத்தில் இந்திய மருத்துவக் கழகம் ஒரு ஆய்வு ரிப்போர்டினை வெளியிட்டிருந்தது..

Do you know the Super Health Benefits of Ginger and Who can avoid the medicinal properties of ginger

ஆய்வுகள்: அதில், தினமும் உணவில் 5 கிராம் இஞ்சியைச் சேர்த்து கொள்வதால், இதய நோயாளிகளுக்கு மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறதாம்.. அதேபோல, இஞ்சி புற்றுநோய் செல்களின் அபாயத்தை போக்குகிறதாம்.. கீமோதெரபி மருந்துகளை விட கருப்பை புற்றுநோய் செல்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொன்றுவிடுவதாக, ஆராய்ச்சியாளர்கள் அதில் தெரிவித்துள்ளர்கள்.

Sarathkumar | சரத்குமாருக்கு பாஜக ஒதுக்கும் தொகுதி எது? | BJP Annamalai | MK Stalin | Election 20024
இந்த அளவுக்கு மருத்துவ குணம் வாய்ந்த இஞ்சி உணவில் சேர்த்து கொள்வதால், பெருங்குடல் மற்றும் குடல் புற்றுநோய் ஆபத்தும் குறைவதாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.. அந்தவகையில், ஒரே ஒரு துண்டு இஞ்சி இருந்தால், நமக்கு எந்தெந்தவகையில் உதவியாக இருக்கும் தெரியுமா? ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதுடன், பசியுணர்வையும் அதிகரிக்க செய்யும்.

ஒரு துண்டு இஞ்சி: ஒரு துண்டு இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி நீங்கும். வாத நோய் இருப்பவர்கள், இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்..


இஞ்சி சாறில், உப்பு கலந்து 3 நாட்கள் சாப்பிட்டு வரும்போது, பித்தம், தலைச்சுற்று, மலச்சிக்கல் விலகும்.. வெறுமனே இஞ்சி சாறில், தேன் கலந்து தினமும் காலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்..

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு ஸ்பூன் குடித்துவந்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும். இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தால், ஆஸ்துமா பிரச்சனைக்கும் நிவாரணம் கிடைக்கும்.

உடல் எடை குறைய: உடல் இளைக்க வேண்டுமானால், இஞ்சியை கட்டாயம் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.. தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்து குடித்து வந்தாலே, இடுப்பு பகுதியிலுள்ள கொழுப்புகள் கரையுமாம்.. இனியும் கொழுப்புகளை நம்முடைய உடலில் நெருங்க விடாது. எனவே, சிறிது இஞ்சி சாறுடன் தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் குடித்து, அத்துடன் சுடுநீரை குடித்துவந்தாலே தொப்பை கரைய துவங்கும்..


இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்திருந்தாலும், இஞ்சியை அளவுடன் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதிகமாக எடுத்துக்கொண்டால், இஞ்சியின் உறைதல் எதிர்ப்பின் காரணமாக வீக்கம், வயிற்றுப் பிரச்னைகள், இதய பகுதியில் எரிச்சல் போன்றவை ஏற்படலாம்.. எனவே தினமும் 4 கிராமுக்கு மேல் சேர்க்கக்கூடாது என்கிறார்கள் டாக்டர்கள்.

யாரெல்லாம் தவிர்க்கலாம்: முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் இதை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.. ஏனென்றால், இஞ்சியிலிருக்கும் செரிமானத்துக்கு உதவும் சில சத்துகள் நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமானது கிடையாதாம்.. வயிறு சுருங்குதல் அல்லது குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்க அது வழிவகை வகுத்துவிடும்.


அதேபோல ரத்தக்கோளாறு இருப்பவர்களும் இஞ்சியை தவிர்க்கலாம். சர்க்கரைநோய், உடல்பருமன், இதயக்கோளாறு, ரத்தம் உறைதல் பிரச்சனை இருப்பவர்களும் தவிர்க்கலாம். அதேபோல, ஆபரேஷனுக்கு தயாராக இருப்பவர்களும் இஞ்சியை தவிர்க்க சொல்கிறார்கள்.. காரணம், அதிக ரத்தப்போக்கை இஞ்சி ஏற்படுத்திவிடும் என்பதற்காக இப்படி சொல்கிறார்கள்..


No comments:

Post a Comment