jaga flash news

Saturday, 13 April 2024

சப்போட்டா பழம்..


சப்போட்டா பழம்.. ஒரு நோயும் அண்டவிடாது சப்போட்டாக நிற்கும் பழம்.. யாரெல்லாம் சப்போட்டா சாப்பிடலாம்?

சென்னை: சப்போட்டா பழங்களிலுள்ள சத்துக்கள் என்னென்ன? யாருக்கெல்லாம் இந்த சப்போட்டா பழங்கள் அருமருந்தாகின்றன தெரியுமா?



சப்போட்டா பழங்கள் என்றாலே நார்ச்சத்துக்களின் இருப்பிடம் என்று சொல்லலாம்.. வைட்டமின்கள் A, B, C, ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், மக்னீசியம், பொட்டாசியம், எலக்ட்ரோலைட்டுகள், கார்போ ஹைட்ரேட்டுகள் போன்ற அனைத்து வகையான சத்துக்களும் இந்த பழத்தில் நிறைந்துள்ளதால், உடலின் திசு அமைப்பின் ஆரோக்கியத்தை பேருதவி புரிகிறது.


Best Medicinal Uses of Sapota Fruits and Can Pregnant Ladies take Sapota what are the Super Benefits of Sapota
சத்துக்கள்: இந்த பழத்திலுள்ள மெக்னீசிய சத்துக்கள் ரத்த நாளங்களை சீராக இயங்க வைக்க உதவுகிறது.. ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும்.




இந்த பழத்திலிருக்கும் பொட்டாசியம் சத்துக்கள், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது... எனவே, தினமும் 2 சப்போட்டா பழங்கள் சாப்பிட்டு வந்தால், இதயம் திறன்பட செயல்படும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இது பயன்தரக்கூடியது.

இரும்பு சத்துக்கள்: இந்த பழத்திலுள்ள இரும்புச்சத்துக்கள், அனீமியா தொந்தரவை விரட்டியடிக்கிறது. இந்த பழத்திலுள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், புற்றுநோய் செல்களை வளர்ச்சியடையாமல் தடுத்து நிறுத்துவதில் துணைபுரிகிறது. அடிக்கடி இந்த சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோயும் அண்டாது

இந்த பழத்திலுள்ள நார்ச்சத்துக்கள், உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்ற தூண்டுகிறது.. இந்த பழத்திலுள்ள வைட்டமின் A உள்ளிட்ட சத்துக்கள் கர்ப்பிணிகளுக்கு புத்துணர்ச்சியையும், ஆற்றலையும் தருகிறது. அந்தவகையில், நார்ச்சத்து நிறைந்த சப்போட்டோ பழங்கள், கர்ப்பிணிகளுக்கும் , பாலூட்டும் தாய்மார்களுக்கும் நன்மை தருகிறது.


இந்த பழத்திலிருக்கும் அத்தனை சத்துக்களும், நம்முடைய உடலிலுள்ள ஃப்ரீ ரேடிகல்ஸை சமநிலைப்படுத்தி நாள்பட்ட நோய் வரும் ஆபத்தையும் மட்டுப்படுத்துகிறது..

சப்போட்டா : சப்போட்டா சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நம்மை அண்டாது. அத்துடன், சருமத்தையும் பொலிவாக்குகிறது.. சரும சுருக்கத்தையே தள்ளி போடும் கொலாஜின் உற்பத்தி இந்த பழத்தில் பொதிந்திருப்பது கூடுதல் பிளஸ் பாயிண்ட்டாகும். வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்து நிறைந்த இந்த சப்போர்ட்டா பழங்களை கொடுத்து வந்தால், அவர்களது எலும்புகள் உறுதியாகும்..

உடல் உஷ்ணத்தை தணிக்கக் கூடியது இந்த சப்போட்டா பழங்கள்.. தூக்கமின்மையால் அவதிபப்டுபவர்கள், தினமும் 1 கிளாஸ் சப்போட்டா ஜூஸ் குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.

No comments:

Post a Comment