jaga flash news

Wednesday, 24 April 2024

காலணிகள் மற்றும் செருப்புகளை எந்த திசையில் வைக்க வேண்டாம்



தப்பி தவறி கூட இந்த திசையில் காலணிகளை விடாதீர்கள்.. பண கஷ்டம் வருமாம்!
தப்பி தவறி கூட இந்த திசையில் காலணிகளை விடாதீர்கள்.. பண கஷ்டம் வருமாம்!
Footwear Vastu Tips |
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தில், காலணிகள் கழற்றி வைப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. காலணிகள் மற்றும் செருப்புகளை தலைகீழாக வைத்திருப்பது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்குமாம்.



இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. வீடு கட்டுவது முதல் அதன் அலங்காரம் வரை அனைத்திற்கும் வாஸ்து முக்கியம். அதே போல, வீட்டில் காலணி வைப்பது முதல் ஆடை பராமரிப்பு வரை வாஸ்து முக்கியம். செருப்பு, ஷூ போன்றவற்றை தலைகீழாக வைக்கக் கூடாது என்று வீடுகளில் அடிக்கடி பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஏனென்றால் அது அபசகுனமாக கருதப்படுகிறது.


இப்படி செய்வதால் குடும்பங்களில் தகராறுகள் தலைதூக்கும் என்பது ஐதீகம். வாஸ்து சாஸ்திரத்தில் ஷூ மற்றும் செருப்புகளை வீட்டில் வைக்க சில விதிகள் கூறப்பட்டுள்ளது. வீட்டில் ஷூ மற்றும் செருப்புகளை கழற்றும் போதும், வைக்கும்போதும் என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


வடகிழக்கு திசையில் காலணிகள் மற்றும் செருப்புகளை வைக்க வேண்டாம் : நம்மில் பலர் காலணிகளை இஷ்டத்திற்கு எங்காவது கழட்டி வைப்போம். ஆனால், அது நல்லது அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா?. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் காலணிகள் மற்றும் செருப்புகளை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கக்கூடாது என கூறப்படுகிறது. ஏனென்றால், இது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்.


வடக்கு அல்லது கிழக்கு திசையில் ஷூ மற்றும் செருப்புகளை கழற்றினால் அன்னை லக்ஷ்மி கோபப்படுவார் என கூறப்படுகிறது. இது வீட்டின் பொருளாதார நிலையை பலவீனப்படுத்துகிறது. அதுமட்டும் அல்ல, வீட்டில் வறுமையை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை மோசமடையலாம்.


ஷூ மற்றும் செருப்புகளை வைக்க சரியான திசை எது? : வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஷூ மற்றும் செருப்புகளின் அலமாரி எப்போதும் வீட்டில் தெற்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும். வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும்போது, ​​தெற்கு அல்லது மேற்கு திசையில் மட்டுமே காலணிகள் மற்றும் செருப்புகளை கழற்றி வைக்கவும். வீட்டின் பிரதான வாசலில் காலணிகள் மற்றும் செருப்புகளை கழற்றக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


காலணிகளை தலைகீழாக வைக்க வேண்டாம் : வாஸ்து சாஸ்திரங்களின்படி, காலணிகள் மற்றும் செருப்புகளை வீட்டில் ஒருபோதும் தலைகீழாக வைக்கக்கூடாது. இவ்வாறு செய்வதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இது குடும்பத்தின் மகிழ்ச்சியையும் அமைதியையும் சீர்குலைக்கிறது. அதனால் தான் ஷூ, செருப்புகளை தலைகீழாக வைக்கக் கூடாது என கூறப்படுகிறது. இதனால், வீட்டில் வறுமை ஏற்படும்.


No comments:

Post a Comment